Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1181
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சர்க்கரை நோய் வராமல் இருக்க 7 கட்டளைகள் !

    சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும்.

    2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.

    3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.

    4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.

    5.அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும் எல்லா பொருள்களும் சர்க்கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.

    6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.

    7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட், பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.


    Sponsored Links

  2. #1182
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இயற்கை உணவுகளுக்கு 'ஹாய்... ஹாய்' ; மருத்துவ செலவுக்கு 'குட் பை' !

    சூரிய ஒளியில் சமைக்கும் உணவுகளும், வேகவைக்காமல் பச்சையாக உண்ணக்கூடியதும் இயற்கை உணவுகள் ஆகும் . நோயைப் போக்க, மருந்தைவிடவும் உணவே முதன்மை பெறுகிறது. மனித உணவில் மிக முக்கியப் பகுதி கீரைகள். இறைச்சி மற்றும் பால் பொருள்கள் செரிமானம் ஆகும்போது, சில அமிலப் பொருள்கள் உண்டாகும். அவற்றை நடுநிலைப்படுத்துவதற்கு கீரைகள் உதவுகின்றன.

    கீரைகள், மூளை வளர்ச்சிக்கும், கண்களை ஒளியூட்டுவதற்கும், நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக்கவும் உதவுகின்றன. சில கீரைகள் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. நன்றாகச் செரிமானம் ஆவதற்கு நார்ப் பொருள்கள் வேண்டும். இது, மலச்சிக்கலைப் போக்கும். வேகவைத்த பொருள்கள் விரைவில் செரிமானமாகும். ஆனால், கலோரிகள் குறையும்.

    பீட்ரூட், கேரட்போன்ற காய்களை பச்சையாக உண்பதால், அதில் உள்ள வைட்டமின் சத்துக்கள் நூறு சதவீதம் கிடைத்துவிடும். வைட்டமின்கள், மினரல்கள், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் கிடைக் கின்றன. காய்களில் நீர்ச் சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால், உடல் வெப்பத்தைக் குறைக்கும். இவற்றில் உள்ள கரோட்டின், முடிக்கு கருமை நிறத்தைக் கொடுக்கும். குளிர் காலத்தில் திராட்சை, முந்திரி போன்ற உணவுகளை உண்ணலாம்.

    பழங்களைச் சாறாக்கிக் குடிப்பதைவிட மென்று, சுவைத்துச் சாப்பிடுவதே நிறைந்த பயன் தரும். காரணம், உணவை மெல்லுவதால், உமிழ்நீர் தொடங்கி செரிமான நீர் சுரப்பது வரையான செயல்பாடுகள் சரியாக நடைபெறும். பழச் சாறுகள் உமிழ்நீர் கலக்காமல் நேராக வயிற்றுக்குள் செல்வதால், என்ஸைம்கள் சுரப்பதின் இயல்பு பாதிக்கப்படும்.
    contd..



  3. #1183
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    முட்டைக்கோஸ், மணத்தக்காளி போன்றவை வாய்ப் புண், வயிற்றுப் புண்களைப் போக்கும். நிலக்கடலையில் உள்ள ஈ வைட்டமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதயத்துக்கு நல்லது. குழந்தைகளுக்கு ஒரு பொருள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், அதோடு விட்டுவிடாமல், அதை மறுமுறை வேறொரு பொருளோடு சேர்த்துக் கொடுக்கலாம். பிறகு, நிச்சயமாய் ஏற்றுக்கொள்ளும்.

    தூதுவளை, முசுமுசுக்கை, முடக்கத்தான் பொன்ற கீரைகளை தோசை மாவில் கலந்து தோசை ஊற்றிக்கொடுக்கலாம். ஆஸ்துமா,சளி நீங்கும்.

    ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை,அன்னாசி ஆகியவற்றில் சி வைட்டமின் உள்ளது. இது, பல், ஈறு நோய்களைக் குணமாக்கும். மாம்பழத்தில் உள்ள ஏ வைட்டமின், தோலுக்கு நிறத்தைக்கொடுக்கும். பழங்கள் காய்கறிகளை தண்ணீரில் நன்கு கழுவிய பின்பே உண்ண வேண்டும் அல்லது நன்றாகக் கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து உண்ண வேண்டும்.

    இரும்புச் சத்து, உடல் இயல்பாக இயங்குவதற்கு உதவுகிறது. இது, முருங்கைக் கீரை, பேரீச்சம் பழம், சூப், கேழ்வரகு, சிறு பயறு, அவல், கடலைப் பருப்பு ஆகியவற்றில் உள்ளது. போதிய இரும்புச்சத்து இல்லை என்றால், ரத்த சோகை உண்டாகும். இதனால் கோபம் வரும். தலை வலி, எதிலும் அலட்சியம், விளையாட்டில், படிப்பில் ஆர்வம் குறையும்.

    மனிதனுக்குத் தேவையான உப்புச் சத்து ஒரு சதவீதமே, அது நாம் உண்ணும் பச்சைக் காய்களில் உள்ளது. உப்பு அதிகமானால், உடலில் அமிலம் அதிகமாகிவிடும். வேறு நோயை உண்டாக்கும்.

    இயற்கை உணவுகள் சத்தானது என்பதற்காக அதிகமாக சாப்பிடவும் கூடாது. நாம், நமக்கு வரும் நோய்களை வேறு எங்கிருந்தும் பெறுவதில்லை. நம்ம வீட்டு அடுப்படியில் இருந்தே பெறுகிறோம். எனவே, உணவை கூடுமானவரை மென்று சாப்பிட வேண்டும். பச்சைக் காய்கள், பழங்களை உட்கொள்ள நம்மைத் தயார்படுத்திக்கொண்டால், மருத்துவ செலவுகள் இல்லாமல் குழந்தைகள் ஆரோக்கியமாய் வாழ்வார்கள்.


  4. #1184
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வயிற்றையும் கொஞ்சம் கவனிப்போம்

    தற்காலத்தில் உணவுப் பழக்கவழக்கம் தலைகீழாக மாறிவிட்டது. இதன் காரணமாக உணவுக் குழாய், சிறுகுடல், பெருங்குடல், வயிறு, மலக் குடல் ஆகிய இடங்களில் வரும் புற்றுநோய், சிறிய வயதிலேயே பலரையும் பாதிக்கிறது.
    வயிறு தொடர்பான உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயைக் கண்டறிவது பற்றி டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.ராஜ்குமார் கூறியதாவது:
    “மலத்தில் வெளிப்படும் ரத்தத்தின் மூலம் இந்நோயை அறியலாம். மலத்தில் ரத்தம் கலந்து வருவதற்கு மூன்று காரணங்கள் உண்டு. அவை பைல்ஸ், ஆசன வாயில் உள்ள கிழிசல், புற்றுநோய். ரத்தம் மலத்தில் கலந்து வருவதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எதையும் அலட்சியமாகக் கவனிக்காமல் விட்டுவிட்டால், நோய் முற்றிச் சிகிச்சை அளிப்பதும் குணப்படுத்துவதும் கடினமாகிவிடக்கூடும்.
    மலத்தில் ரத்தம் கலந்து வருவது இரண்டு வகைப்படும். ஒன்று கண்ணுக்கே தெரியாது. மற்றொன்று சிவப்பாக நன்கு தெரியும். சிறிய புண் அல்லது கட்டியில் இருந்து ரத்தம் கசிந்து வருவதால் இது ஏற்படும். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும். அக்கல்ட் பிளட் என்ற பரிசோதனை மூலம் இதைக் கண்டுபிடிக்கலாம்.
    மலத்தில் கண்ணுக்குத் தெரியும் வகையில் இருக்கும் ரத்தத்தின் நிறம், புற்றுநோய் இருக்கும் இடத்தைப் பொறுத்து மாறும். வயிற்றின் மேல்புறத்தில் கட்டி இருந்தால் மலம் கறுப்பாக இருக்கும். சிவப்பும் பழுப்புமாக இருந்தால் வயிற்றின் வலப் பகுதியில் கட்டி இருக்க வாய்ப்புள்ளது. இடப் புறத்தில் கட்டி என்றால் சிவப்பு நிறத்தில் இருக்கும். மலத்தில் ரத்தம் கலந்தது போலக் காணப்படும். இது எந்த வயதிலும் வரலாம்.
    contd..



  5. #1185
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    கொலனோஸ்கோபியைப் பயன்படுத்தி இதை அறியலாம். பொதுவாக ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொலனோஸ்கோபி பரிசோதனை தேவை. ஒருவருடைய ரத்த உறவினர்களுக்குப் புற்றுநோய் வந்திருந்தால், ஒருவருக்குப் புற்றுநோய் வர அதிக வாய்ப்பு உண்டு" என்றார்.
    வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வயிறு தொடர்பான உறுப்புகளில் புற்றுநோய் வருவதை முன்கூட்டியே தடுக்கலாம். பச்சைக் காய்கறி, பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். வெளி உணவைக் கூடியமட்டும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்தில் உண்ணும் பழக்கம் இருக்க வேண்டும். நடைப்பயிற்சி அவசியம். எடை கூடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். தினந்தோறும் மலம் கழிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    வயிறு என்பது உணவு சேமிப்புக் கிடங்குதான். சிறுகுடலில்தான் செரிமானம் நடைபெறுகிறது. பெருங்குடலோ, உணவுப் பையோ இல்லாமல் வாழ முடியும். ஆனால், சிறுகுடல் இல்லாமல் வாழ முடியாது. உணவுப் பையில் புற்றுநோய் வந்தால் அதை முழுமையாக நீக்கிவிட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியும் என்கிறார் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குமார கிருஷ்ணன்.
    “ரத்த வாந்தி அல்லது மலத்தில் ரத்தம் வெளியேறும் நிலையில் குடல் தொடர்பான அவசரச் சிகிச்சை செய்யப்படும். வாந்தி எடுக்கும்போது சில நேரம் வயிற்றில் இருக்கும் வாயுவால் ரத்தத்தின் நிறம் மாறிக் காபி நிறத்தில் வரும்போது, அப்போது சாப்பிட்ட உணவுதான் வருகிறது என்று தவறாக நினைத்துச் சாதாரணமாகக் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள்.
    உணவுக் குழாய் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களே இத்தகைய வாந்தி, மலத்தில் காணப்படும் நிற மாறுதலுக்குக் காரணம். வயிற்றில் அல்சர் அல்லது புற்றுநோய் இருந்தால் கொஞ்சம் சாப்பிட்ட உடன் வயிறு நிரம்பிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். சில நேரங்களில் எரிமலை போலக் குடலுக்குள் எரியும். உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களையும் உடனுக்குடன் கவனித்து, சிகிச்சை பெற்றால் சாதாரண வாழ்க்கை வாழலாம்” என்கிறார் குடல் நோய், கல்லீரல் மருத்துவச் சிகிச்சை நிபுணர் டாக்டர் கே. மகாதேவன்.


  6. #1186
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பதுங்கிப் பாயும் ‘ஸ்ட்ரோக்’

    இதயநோய், புற்று நோயைப் போலவே ஆபத்தான இன்னொரு நோயும் இருக்கிறது. உடலில் எந்த ஊனமும் இல்லாமலேயே படுத்த படுக்கையாக்கிவிடும் கொடிய நோய் இது. ஆண்டுக்கு சுமார் ஆறு கோடி பேரை இது முடக்கிப் போடுகிறது.
    ஓர் ஆண்டில் சராசரியாக ஒன்றரை கோடிப் பேர் இந்த நோய்க்குப் பலியாகிவிடுகிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அது என்ன நோய் எனத் தெரியுமா? ‘ஸ்ட்ரோக்’ எனப்படும் பக்கவாதம் (Stroke - மூளைத் தாக்கு).
    அதிகரிக்கும் வாதம்
    மூளைக்குள் ரத்தம் உறைவது அல்லது ரத்தம் செல்வது தடைபடுவதால் ஏற்படும் நோய் இது. இதை மூளைத் தாக்கு அல்லது ரத்த நாளச் சேதம் என்றும் அழைக்கிறார்கள். முன் அறிகுறிகள் எதுவுமின்றித் திடீரென வருவதால் ஆங்கிலத்தில் இதை ஸ்ட்ரோக் என்கிறார்கள்.
    ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் சுமார் 6 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் சுமார் 1.40 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.
    இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே போகிறது. முதியவர்களுக்கு மட்டுமே வரும் நோய் என்றிருந்த நிலை மாறி, இன்றைக்கு இளம் வயதினரைக்கூட இந்நோய் தாக்குகிறது.
    எப்படி வருகிறது?
    பக்கவாத நோய் ஏற்பட இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, ரத்த ஓட்டத் தடை. இரண்டாவது ரத்தக் கசிவு. இதில் ரத்த ஓட்டத் தடையின் மூலம் ஏற்படும் பக்கவாதத்துக்கு முக்கியக் காரணம் கொழுப்புப் படிவுகள்தான்.
    அதாவது, ரத்த நாளங்களின் உட்சுவர்களில் கொழுப்பு மற்றும் கொழுப்புப் படிவுகள் படியும்போது நாளங்கள் கடினத் தன்மையை அடைகின்றன. இப்படி ரத்த நாளங்கள் கடினமாவதால் அதன் உட்புறக் கூட்டின் அளவு குறைகிறது. இதனால் ரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு, ரத்தம் உறையலாம். எனவே, பக்கவாதம் ஏற்படலாம்
    contd..



  7. #1187
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    ரத்தக் கசிவு வாதம்
    ரத்தக் கசிவு மூலம் ஏற்படும் பக்கவாதத்துக்கு அதிக ரத்த அழுத்தமே முக்கியக் காரணம். ரத்த நாளங்களில் இருந்து ரத்தம் கசிந்து வெளியேறி மூளைத் திசுக்களுக்குள் பரவும்போது, திசுக்கள் பாதிக்கப்படும். மூளை நாளங்களில் கசிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகே உள்ள மூளைத் திசுக்களும் ரத்த ஓட்டத்தை இழந்து பாதிக்கப்படலாம்.
    உயர் ரத்த அழுத்தம் தவிர, நாளச் சுவர்கள் மாறுபாடு நோய், ரத்த நாளங்களில் ஏற்படும் தளர்வு போன்றவை காரணமாகவும் ரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படலாம். ஆனால், ரத்தக் கசிவுகளால் ஏற்படும் பக்கவாதத்தைவிட ரத்த ஓட்டத் தடையால் ஏற்படும் பக்கவாதங்களே அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
    அறிகுறிகள்
    காரணமில்லாமல் ஏற்படும் கடும் தலைவலி, திடீரெனப் பார்வை மங்குதல், பார்வையிழப்பு, தெளிவற்ற பார்வை (ஒரு கண்ணில் மட்டும் ஏற்படுவது), இந்த அறிகுறிகளுடன் காரணம் இல்லாத கிறுகிறுப்பு, நிலையில்லாமல் தள்ளாடுதல், தடுமாறிச் சாய்தல், திடீரென உடலின் ஒரு பகுதி, முகம், கை, கால்களில் தளர்வு, தொடு உணர்ச்சிக் குறைவு, பேச்சிழப்பு, பேசுவதில் சிரமம், பேச்சுத் தடுமாற்றம் ஆகியவை பக்கவாதத்துக்கான அறிகுறிகள்.
    இவற்றில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்த நோய் ஏற்பட்டுச் சிலர் சுயநினைவை இழக்கலாம். உயிர் பிழைத்தாலும் பேச்சு, பார்வை, சிந்திக்கும் திறன் ஆகியவை பாதிக்கப்படலாம். முகம் அல்லது உடலின் ஒரு பகுதி செயலிழந்து போகலாம்.
    குடும்ப வரலாறு
    குடும்பத்தில் யாராவது இந்த நோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தால், கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்பப் பாரம்பரியம் காரணமாகவோ அல்லது மரபுரீதியாகவோ இது ஏற்படுகிறது. வயது அதிகரிக்கும்போது, பக்கவாதத்தால் ஏற்படும் பாதிப்பும் அதிகரிக்கிறது. பெண்களைவிட ஆண்களை ஒரு மடங்கு அதிகமாகத் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், பெண்கள்தான் அதிகம் இறந்து போகிறார்கள்.
    பாதிப்புகள்
    பக்கவாதம் ஏற்படும்போது உடனடியாக சிகிச்சை செய்து கொள்வதன் மூலம், மூளைத் திசுக்கள் பாதிப்படைவது குறைகிறது. இதனால் ஏற்படும் ஊனமும் குறையக்கூடும். பக்கவாதம் ஏற்பட்டவர்களில் 50 முதல் 70 சதவீதம் பேர் தாங்களாகவே தங்கள் தேவைகளைக் கவனித்துக் கொள்ளும் நிலைக்குத் திரும்ப முடியும். ஆனால், 15 முதல் 30 சதவீதம் பேர் படுத்த படுக்கையாகி நிரந்தரமாக நடக்க முடியாமலும், கை செயல்படாமலும் ஊன நிலையை அடையலாம்.
    contd..



  8. #1188
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    தடுப்பு முறைகள்
    பக்கவாதம் ஏற்படுவதற்கான சில காரணங்களை நம்மால் மாற்ற முடியாது. அதாவது குடும்ப வரலாறு, மரபியல் காரணங்கள் போன்றவற்றை மாற்ற முடியாது. என்றாலும் மருந்துகள், வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதன் மூலம் சில காரணங்களைச் சரி செய்ய முடியும். இந்த நோய்க்கான அறிகுறிகளைப் பெரும்பாலும் உடனடியாக அறிய முடிவதில்லை.
    முதலில் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அறியப்பட்டவர்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். இது வாதம் ஏற்படாமல் ஓரளவு தடுக்கும். சில பழக்கவழக்கங்கள் மற்றும் சீராகப் பராமரிக்கப்படும் உடல்நிலை மூலம் இந்நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மற்றவர்களைவிட 4 முதல் 6 மடங்கு பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் அதிகம்.
    ரத்த அழுத்தத்தை 120/80 என்ற அளவில் சீராகப் பராமரிக்க வேண்டும். புகைபிடிப்பதால் ரத்தக் கசிவு ஏற்படும் வாய்ப்பு 4 சதவீதம் அதிகரிக்கிறது. அதனால், புகை பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதய நாள நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட மூன்று மடங்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.
    குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதங்கள் ரத்தத்தில் அதிகரிக்கும்போது, ரத்த நாளங்கள் கடினமாகும் வாய்ப்பு உண்டு. மாறாக உயர் அடர்த்திக் கொழுப்புப் புரதங்கள் அதிகரிக்கும்போது, அவை நாளம் கடினமாதலைத் தடுக்கின்றன.



  9. #1189
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்! ! ! !


    வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போதே இன்றைக்கு சாப்பாடு கார குழம்போ அல்லது சாம்பாரோ என நினைத்துக்கொண்டே வீட்டிற்கு வருபவர்கள் வீட்டில் சிக்கனோ மட்டனோ இருந்தால் ஒரு பிடி பிடித்து விட்டு அஜீரணக்கோளாறால்அவதிபடுவது வழக்கம். இவ்வாறு தீடீர் அஜீரணக்கோளாறால்அவதி படுபவர்களுக்காகவே வீட்டில் இருக்கின்றது மருந்து. வெளியில் சென்று வாங்கவும் வேண்டாம், அடுப்பன்கறை பொருட்களை வைத்து எப்படி அஜீரணத்தை போக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.


    எலுமிச்சை மற்றும் இஞ்சி


    எலுமிச்சை மற்றும் இஞ்சி அனைவரின் வீடுகளிலும் கிடைக்கும் ஒரு சமையலறை பொருளாகும். அஜீரணக்கோளாறை போக்க இஞ்சி பெரிதும் பயன்படுகிறது. அதிகமாக சாப்பிட்டு அஜீரணக்கோளாறால்அவதிபடுபவர்கள் சாப்பிட்ட பின்னர் தேவையான அளவு தண்ணீரை ஒரு தம்ளரில் எடுத்துக்கொண்டுஅதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் தேன் எடுத்துக்கொண்டால் அஜீரணக்கோளாறுக்கு குட்பை சொல்லிவிடலாம்.



    ஆரஞ்சு சாறு


    வீட்டு மருந்துகளில் அஜீரணக்கோளாறுகளுக்கு சிறந்த ஒன்று ஆரஞ்சு சாறு. சாப்பிட்டு முடித்த பின்னர் ஒரு தம்ளர் ஆரஞ்சு சாறு சாப்பிட்டால் உணவு செரிமானம் அடைந்து உடல் உறுப்புகளுக்கும் ஓய்வை கொடுத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும்வழங்குகிறது.
    contd..



  10. #1190
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    மோர், பால்


    தினமும் மூன்று வேளை பசும்பாலில் தேனும் நான்கு பூண்டுப் பற்களும் சேர்த்துப் பருகினால் தாய்பால் நன்கு சுரக்கும். இதனால் குழந்தைகளுக்கும் அஜீரணம், ஜலதோஷம் போன்றவை வராமல் தடுக்கப்படும். நீர்த்த மோரில் கால் டீஸ்பூன் மிளகுத் தூளும் சீரகத் தூளும் கலக்கிக் குடித்தால், அஜீரணக் கோளாறு உடனே சரியாகும்.



    திராட்சை


    வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்தது திராட்சைபழம்.. இந்தப்பழத்தை தோலுடன் சாப்பிட்டாலோ அல்லது ஜீஸ் செய்து சாப்பிட்டாலும் வயிறு பிரச்சனைகளுக்குசிறந்த நிவாரணமாக செயல்படும்.

    எலுமிச்சை

    சூடான எலுமிச்சை தண்ணீர் அஜீரணத்தை குணப்படுத்த சிறந்தது. உணவு எடுத்துக்கொள்வதற்கு முன்பு ஒரு கப் தண்ணீருடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறை எடுத்துக்கொண்டால் அமிலத்தை தடுத்து பாக்டீரியாவுடன்போராடி செரிமான பிரச்சனைகளை தீர்க்கிறது.

    பூண்டு மருத்துவம்

    வீட்டு மருத்துவத்தில் இஞ்சிக்கும் பூண்டுக்கும் தனி இடமே உண்டு. அனைத்து மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு சிறந்த அடுப்பங்கறை மருந்து பூண்டு. நீங்கள் வயிற்று வலியால் அவதிபடுகிறீர்கள் என்றால் சமஅளவு பூண்டு சாறு , சோயா எண்ணெய் எடுத்து வயிற்று பகுதியில் மசாஜ் செய்யவேண்டும். வயிற்றில் தடவிய எண்ணெய் தோல் மூலமாக உறிஞ்சப்படும். இது அஜீரணத்தை உடனடியாக நீக்கிவிடும்.



    சமையல் சோடா


    செரிமான பிரச்சனையால் வயிற்று வலி ஏற்பட்டு விட்டதா! ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சமையல் சோடாவை போட்டு கலந்து குடித்தால் செரிமான பிரச்சனையை குறைக்கலாம்.



    கொத்துமல்லி இலை


    ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு சீரகம், கொத்துமல்லி சாறு, உப்பு ஒரு சிட்டிகை ஆகியவற்றை கலந்து குடிக்கலாம். வயிற்று வலி ற்படின் இதை பருகலாம். மேலும் கொத்தமல்லி இலை இரண்டு தேக்கரண்டி, இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி மூன்று ஏலக்காய், கிராம்பு கலந்து குடிக்கலாம். இது வாயு தொந்தரவை நீங்கிவிடும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter