Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree913Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1231
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    கொடி பாகல் இலையுடன் 500 மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் மாலைக்கண் அகலும். 2 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே சிறிது வெல்லத்தைக் கரைத்து சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப்பூச்சிகள் வெளியேறும். பாகல் சாற்றில் சிறிது குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த வயிறு சிறுத்து விடும். பாகல் இலைச் சாற்றை குடிப்பதால் பாம்பு விஷம் நீங்கும். பாகல் இலையை உலர்த்தி பீடி போல சுற்றிக் கொண்டு அதன் புகையை உறிஞ்சினால் பல் நோய்கள் பறந்தோடி விடும்.

    பாகல் இலைச் சாற்றை 1 அவுன்ஸ் எடுத்துக் கொண்டு அதில் 1_2 அவுன்ஸ் நல்லெண்ணெய் கலந்து உட் கொண்டால் காலரா உடனே நீங்கும். 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவுக்கு பெருங்காயப் பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நிரந்தரமாக குணம் ஆகும்.

    அதுபோல 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் அதே அளவு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்த முடியும்.


    Sponsored Links

  2. #1232
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடம்புக்கு மருந்தாகும் சஞ்சீவினி - வாழைப்பூ

    வாழைப்பூ, இது வியாதிகளுக்கெல்லாம் சஞ்சீவி போன்றது. சற்று துவர்ப்பாக இருக்கும். பொடி யாக நறுக்கி சிறிது சுண்ணாம்பையோ அல்லது அரிசி கழுவிய தண்ணீரையோ கலந்து சற்று வடிய வைத்தால் அதன் துவர்ப்புச் சுவையெல்லாம் நீராக இறங்கி விடும். அதன் பிறகு அதை அவித்து பருப்பு கலந்து சமைத்து உண்ணலாம். வெகு சுவையாகவே இருக்கும்.
    பேயன் வாழைப் பூவில் துவர்ப்பே இருக்காது. அதை அப்படியே (பட்டைகளை நீக்கி) சமைத்துச் சாப்பிட லாம்.

    இதைப் பதமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை நோய் நீங்கும். ரத்த மூலம் போக்கும். உதிரக் கடுப்பு இருக்காது. கை, கால் எரிச்சல் நீங்கும்.

    வாழைப் பூவை நறுக்கி சாறு எடுத்து அத்துடன் பனங் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மேற்கண்ட பிணிகள் எல்லாம் உடனே குணமாகும்.

    வாழைப்பூக் கறி பித்தம், வாதம் உடலில் ரத்தக் குறைவு, கிராணி, வயிற்றில் பூச்சி முதலிய வியாதி களுக்கு சஞ்சீவி போன்றது.

    வாழைப்பூ சாற்றில் தயிரைக் கலந்து உட்கொண்டால் ரத்தக் கிராணி, பெரும்பாடு முதலியவை நீங்கும். நால தோலா சாற்றில் இரண்டு தோலா தயிரைக் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை உட்கொண்டால் நல்ல குணம் தெரியும்.

    வாழைப்பூவை இடித்து சிற்றாமணக்கு எண்ணெய்யை விட்டு வதக்கி, கைகால் எரிச்சல் உள்ள இடத்தில் ஒற்றடமிட்டால் எரிச்சல் போகும்.

    வாழைப்பூவை வாரத்திற்கொரு முறையேனும் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.


  3. #1233
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்

    குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல் கிறாம்.
    பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். இது வீரிய புஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.

    ஆனால் பரங்கிக்காயை பொறுத்தவரை வேண்டாத சில குணங்களும் உண்டு. அதாவது உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது. இது சீரணம் ஆவதற்கு வெகு நேரம் வரை பிடிக்கும். வாத குணம் உள்ளது. ஆனாலும் இத்தகைய விபரீத குணங்களை சாரி செய்வதற்கு சுக்கும், வெந்நீரும் சாப்பிட்டால் போதும்.

    பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப் படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும். பல மற்றவர்களும், நோயுற்று இளைத்தவர்களும், நோயாளி களும் இதை சாப்பிட வேண்டாம்.

    மணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக் காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும். பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். நல்ல சுவையுடனும் இருக்கும்.

    பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்ப தற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம்


  4. #1234
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நோய் தடுப்புக்கு சோயா

    வாழ்நாள் முழுவதும் சீரான, ஆரோக்கியமான வாழ்வுக்கு, நோய் தடுப்பு முறைகளே சிறந்த ஆதாரமாகும். இதில் பெரும்பங்கு வகிப்பது ஆரோக்கியமான இயற்கை உணவுகளே. நல்ல உடல் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளில் ஒன்றாக சோயா புரோட்டீன் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
    ஊட்டச்சத்து நிறைந்த சோயா:
    ஊட்டச்சத்து நிறைந்த சோயா பீன்ஸில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஏராளமான இரும்புசத்துக்கள் நிறைந்திருக்கிறது. ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்டு மனதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. சோயா பால் தோற்றத்திலும், குணாதிசயத்திலும் பண்ணை பால் போலவே உள்ளது.
    பல்வேறு வயதில் உள்ளவர்களுக்கும் தேவையான 9 வகை அமினோ அமிலங்களை கொண்டுள்ள புரோட்டீனை வழங்கும் ஒரே தாவர வகை உணவு சோயா மட்டுமே. பால் பானங்கள் தவிர்க்க விரும்புவோருக்கு சிறந்த ஆரோக்கிய மாற்று பானமாக சோயா புரோட்டீன் உள்ளது. சோயா புரோட்டீனின் பயன்கள் இரத்தத்தில் அதிக கொழுப்புச்சத்து சேருவதே இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
    சோயா புரோட்டீனில் கொழுப்பு சத்துகள் இல்லாததால் இதயம் சம்பந்தமான ஆபத்தை பெருமளவு குறைக்கிறது. சோயாவில் உள்ள புரோட்டீனானது எலும்பு தேய்மானத்தை தாமதப்படுத்துகிறது. சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதால் ஹார்மோன் குறைபாடுகளால் மாதவிடாய் காலங்களில் மகளிருக்கு ஏற்படும் அரிப்பு, இரவில் வியர்த்தல் போன்ற துன்பங்கள் குறையும்.
    சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதன் முலம் ஹார்மோன் குறைபாடுகளால் உருவாகும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்க முடியும். மேலும் ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பிகளின் நலனுக்கும் இது உகந்தது. எடையையும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பவர்களும் சோய்விட்டா-டயாபட்டிக் சிறந்த ஒன்றாகும். ஏனெனில் சர்க்கரை, குளுடென் மற்றும் கெசின் இல்லாததால் தொல்லைகளும் இல்லை.


    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-ht2292-300x150.jpg  

  5. #1235
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உஷாரா இருக்கணும்!

    நமது இதயம் கடினமான தசை நார்களால் ஆனது. நிமிடத்திற்கு 60 முதல் 90 முறை துடிக்கின்றது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 7200 லிட்டர் ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்துகிறது. இதய தசைகளுக்கு மூன்று முக்கிய ரத்த நாளங்கள் பிராணவாயுவையும் ஊட்ட சத்துக்களையும் கொண்டு செல்கிறது. இவற்றில் அதிகப்படியான கொழுப்பு படிவதால் இதய பணிகள் தடைபடுகின்றன. இதய செயல் இழப்பு ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகிறது. இந்த அடைப்பினால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வதே பை-பாஸ் அறுவை சிகிச்சை.
    இதன்மூலம் புதியதொரு ரத்தநாளங்களை தடைப்பட்ட ரத்த குழாயின் அருகில் பொருத்தி, மாற்றுவழி ஏற்படுத்துவதன் மூலம் இதய தசைக்கு தேவையான ரத்த ஓட்டத்தை தங்கு தடையின்றி பெற செய்கின்றது. இதய பைபாஸ் அறுவை சிகிச்சை, பாதிக்கப்பட்ட இதய தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துமே தவிர கொழுப்பு படிவதை தவிர்க்க முடியாது. அறுவை சிகிச்சைக்குப்பின் மாதம் தோறும் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மருந்துகளை தாங்களாகவே நிறுத்த கூடாது.
    மருத்துவர் கூறும் நேரங்களில் ரத்தம், இசிஜி, எக்கோ, டிரட்மில் மற்றும் சிடி ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். உணவு பழக்கங்களை உண வியல் ஆலோசகர் கூறியபடி கடைப்பிடிக்க வேண்டும். தினமும் 30 நிமிடம் அல்லது வாரத்தில் 5 நாட்களாவது மருத்துவரின் ஆலோசனைபடி நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். புகை, புகையிலை மற்றும் மது அருந்தும் பழக்கங்களை தவிர்க்க வேண்டும். மேற்கூறிய அனைத்தையும் முறையாக செய்வதினால் 10 முதல் 20 சதவீதம் மீண்டும் இருதய நோய் வருவதை தவிர்க்கலாம்.
    contd..



  6. #1236
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    சர்க்கரை நோயாளிகள், சர்க்கரையின் அளவை சரியாக வைத்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் சர்க்கரையின் அளவு அதிகமாகும்போது ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது அதிகமாகும். அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகள் இவற்றை பின்பற்றவில்லையென்றால் பை-பாஸ் செய்யப்பட்ட ரத்த நாளங்களிலும் அடைப்பு ஏற்பட்டு மீண்டும் மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது. மீண்டும் ஒரு அறுவை சிகிச்சைக்கு உள்ளாக நேரிடும்.
    இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் பயிற்சி பெற்ற உணவியல் நிபுணர் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களால் அளிக்கப்படும் ஆலோசனை மற்றும் பயிற்சிகளை கடைப்பிடிக்க வேண்டும். இதன்மூலம் இதயத்திற்கு செல்லும் நல்ல ரத்த ஓட்டம் மற்றும் உடலின் செயல்பாடு அதிகரிக்கிறது. உடலின் பருமன் குறையும். மன அழுத்தம் குறைந்து இதய ரத்த குழாய் நோய் ஏற்படாமல் கட்டுப்படும். உணவு பழக்கங்களை உணவியல் ஆலோசகர் கூறியபடி கடைப்பிடிக்க வேண்டும். தினமும் 30 நிமிடம் அல்லது வாரத்தில் 5 நாட்களாவது மருத்துவரின் ஆலோசனைபடி நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.


    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-images.jpg  

  7. #1237
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கருப்பையும்… கருப்பையில் ஏற்படும் பாதிப்புகளும்….

    டாக்டர். கே.எஸ்.ஜெயராணி அவர்கள் எழுதிய கட்டுரை
    மனித உறுப்புகளில் மகத்துவம் நிறைந் தது, கருப்பை. பெண் இனத்திடம் மட்டுமே இருக்கும் ஆக்க சக் தியின் அற்புதம் இது !

    கிட்டத்தட்ட முக்கோ ண வடிவத்தில் மேல் பகுதி விரிந்தும், கீழ் பகுதி குறுகியும் காணப்படுகிறது. 8 முதல் 9 செ.மீ. நீளம் கொண் டது. கருப்பையின் வாய்ப் பகுதி பெண் உறுப்பில் இருந்து தொட ங்குகிறது. கரு தங்குவதற்கு முன்னால், கருப்பையை தொட்டுப் பார்த்தால் நமது மூக்கைத் தொட்டால் எப்படி இருக்குமோ அது போ ல் சற்று கடினமாகத் தெரி யும். கரு தங்கி வளரத் தொடங்கிய பின்பு தொட்டுப் பார்த்தால் நமது உதடுக ளைத் தொடுவது போன்று மென்மையாக உணர முடி யும்.

    கருப்பை தசைகளால் ஆன து. அதன் உள்ளே ரத்தக் குழா ய்களால் ஆன மெத்தை போல் எண்டோமெட்ரியம் உள்ளது. சினைப்பையில் இருந்து சினை முட்டை முதிர்ந்து- வெடித்து- வெளியேறி கருக்குழாயில் உயிரணுவை சந்தித்து, அங்கேயே கருவாகி, அது சில ரசா யனங்களை வெளிப்படுத் தும். அந்த ரசா யன மாற்றங் களால் கரு நகர்ந்து, 5-வது நாள் கருப்பைக்குள் சென்று, அங்கேயே ஒட்டி வளரத் தொடங்கிவிடும். கருவை வளர வைப்பது எண்டோமெ ட்ரியத்தின் வேலை. முதலி ல் சிறிதாக இருக்கும் எண் டோமெட்ரியம், பின்பு வளர் ந்து 9 மி.மீ. அளவை எட்டும்.

    வயதுக்கு வந்த எல்லா பெண்களுக்கும் மாத விலக்குக்கு முந் தைய நாள்வரை எண்டோமெட்ரியம் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். உடலுறவு நிகழ்ந்து உயிர ணு சென்று- சினை முட்டை யும் வெளியேறி வந்து- இரண்டும் சந் தித்து கருவாக்கத்திற்கான செயல் கள் நிறைவேறா விட்டால் இந்த எண்டோமெட்ரியத்திற்கு கருப்பை க்குள் வேலையில்லை. அதனால் அது வெடித்து வெளி யேறும். இதுதான் மாத விலக்கு உதிரம். (கருவாக்கம் நிகழ்ந்தால் எண்டோ மெட்ரியம் கருவை வளர்க்கத் தொட ங்கிவிடும்) மாத விலக்கு உதிரம் 200-300 மி.லி. அளவில் 2-3 நாட்களாக வெளி யேறிக் கொண்டிருக்கும்.
    contd..



  8. #1238
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    மாதவிலக்கு உதிரப்போக்கு அதிக நாட் கள் தொடர்வதும், ஒரே நாளில் வந்து நின்றுவிடுவதும் குறைபாடு தான். சிகி ச்சை மூலம் அதற்கு உடனடியாக தீர்வு கண்டிடவேண்டும்.
    கருப்பை வளரும் தன்மை கொண்ட திசு. உள்ளேதங்கும் கரு வளர வளர கருப் பையும் வளரும். இரண்டு, மூன்று குழந் தைகளை தாங்கும் சக்தியும் அதற்கு இருக்கிறது. கரு, திசுவாகி- குழந்தை யாகவளர்ந்த பின்பு கருப்பைக்குள் ஏற்ப டும் ரசாயன மாற் றங்கள், அதனை சுருங்கவைத்துகுழந்தையை வெளியே தள்ளு கின்றன. இதுவே பிரசவத்திற்கான தூண்டு தலாகும்.
    கருப்பையில் ஏற்படும் பாதிப்புகள்என்னென்ன தெரியுமா?
    *
    எண்டோமெட்ரியம்பாதித்து கருப் பையில் காச நோய் தோன் றலாம்.
    *
    தாய் வயிற்றுக்குள்இருக்கும் போதே பெண் சிசுவுக்கு கருப்பை உருவாகி விடும். முதலில் அதுமாட்டுக்கொம்பு போல் இரண்டு டியூப் ஆக உருவாகி, வளர்ந்து இணையும். அதன் உள்ளே பள்ள மான பகுதியும் தோன்றும். ஒரு பக் கம்மட்டும் மாட்டுக்கொம்பு போல் வளர்ந்திருந்தாலோ, போதுமான வளர்ச்சியின்றி இருந்தா லோ, அளவில் சுருங்கி பிறவியிலேயே குறைபாட்டுடன் இருந் தாலோ அது பாதிப்பிற்குரியஅம்சமாகும். இத்தகைய பாதிப்பு கொண்ட பெண்களுக்கு திருமணமாகி, குறைவற்ற முறையில் உடலுறவுநிகழ்ந்தாலும் தாய் மையடைய முடியாத சூழல் ஏற்ப டும்.
    *
    கருப்பையின் வாய்எப்போதும் மூடி யிருக்க வேண்டும். உயிரணு அதன் உள் ளே செல்லவும்- திரவம் வெளியேவரவும் மட்டும் வழி யிருக்க வேண்டும். அதற்கு மாறாக கருப்பை வாய் திறந்திரு ந்தால்கரு உள்ளே தங்காமல், கலைந்து வெளி யேறிவிடும்.
    *
    கருப்பையில்பைப்ராய்ட் போன்ற கட்டிகள் உருவானாலும் கரு ப்பை பாதிக்கப்பட்டு, தாய்மை தள்ளிப்போகும்.
    *
    கருப்பை புற்றுநோய்தோன்றலாம்.
    *
    கருப்பை வாயில் பாலி ப்எனப்படும் கட்டிகள்தோன்றலாம்.
    பெண்களுக்கு தாய்மை தள்ளிப்போகும்போதுகருப்பையில் பாதிப்பு ஏதாவது இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அதற்கான நவீன சிகிச்சையைமேற் கொள்ள வேண்டும்.

    பின்குறிப்பு: மாதவிலக்கு காலத்தில்பெண்களை தனிமைப் படுத்தி எந்த பொருளையும் தொடக்கூடாது என்று ஒதுக்கி வைக் கும்நிலை இப்போதும் சில இடங்களில் இருக்கிறது. மனி தன் முதலில் காட்டுக்குள்தான்வாழ்ந்தான். அப்போது மனித னைச் சுற்றி காட்டுமிருகங்கள் நிறைய இருந்தன. சிங்கம், புலி போன்ற வைகள் மனிதனின்ரத்தவாடையை 2 கி.மீ. தூரத்தில்இருந்துகூட கண்டுபிடித்து, அங்கு மனிதன்இருப்பதை உணர்ந்து, தேடி வந்து தாக்கிவிடும். அதனால் மாதவிலக்கு நாட்களில் பெண்களை தனி மைப்படுத்தி பாதுகாப்பான குகைமற்றும் உய ரமான மரங்களில் வைத்தார்கள். இப்போது பாதுகாப்பான உலகில் பெண்கள் வாழ்வதால், மாதவிலக்கு காலத்தில்அவர்களை தனி மைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-medium_hyperstim.gif  

  9. #1239
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நோய் நொடியின்றி வாழ ஊட்டச்சத்துக்கள் 10!

    உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஊட்டச்சத்து மிகமிக அவசியம். குறிப்பாகப் பெண்கள் மாதவிடாய் காலங்களிலும், கருவுற்ற நேரத்திலும ஊட்டச்சத்துக்களின் தேவை மிகவும் அதிகமாகவே இருக்கும். நோய் நொடியின்றி நலமாக வாழ்வதற்குத் தேவையான பத்து ஊட்டச்சத்துக்களின் பட்டியல் இங்கே..

    1. ஃபோலிக் ஆசிட்

    கஷ்டமில்லா சுகப் பிரசவத்துக்கு இந்த வைட்டமின் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் சத்து குறைந்தால், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படுவது மட்டுமின்றி, மூளையின் செயல்பாடும் பாதிக்கப்படும். பெண் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான சத்து இது.

    பச்சைக்காய்கறிகள் மற்றும் அவகேடோ பழத்தில் இந்த வைட்டமின் அதிகம் இருக்கிறது.

    2. இரும்புச்சத்து

    ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உதவும் பெரும் பங்கு இரும்புச்சத்துக்கு அதிகம். இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் எப்போதும் களைப்பாகவும், சோர்வாகவும் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் கவனக்குறைவு ஏற்படும்.

    மாமிசம், ப்ராக்கோலி மற்றும் பீன்ஸில் இரும்புச்சத்தை அதிகம் பெறலாம்.

    3. கால்சியம்

    உறுதியான பல்லுக்கும், எலும்புக்கும் கால்சியம் அவசியம். 35 வயதில் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டால் எலும்பு தொடர்பான நோய்கள் வரும். இளம் வயதிலேயே இந்தச் சத்தை எடுத்துக் கொண்டால் எலும்புத் தேய்மானம் பிரச்னை மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

    பால், சீஸ், பசலைக்கீரை மற்றும் பாதாம் போன்றவற்றில் இந்த ஊட்டச்சத்து கிடைக்கும்.

    4. வைட்டமின் D

    மனித உடலில் போதுமான அளவுக்குக் கிடைக்காத ஒரு முக்கியமான வைட்டமின் இது. சூரிய ஒளியிலிருந்து மட்டுமே இந்தச் சத்தைப் பெறமுடியும். இதன் மூலம், மனஅழுத்தம், நெஞ்சு வலி போன்ற பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். பல்லுக்கும் எலும்புக்கும் தேவையான கால்சியம் சத்தும் இந்த வைட்டமினிலிருந்து அதிகம் கிடைக்கிறது.

    5. மக்னீசியம்

    உடலின் பல்வேறு வேதியியல் மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கிறது இந்தச் சத்து. நரம்பு, தசை, தோல் மற்றும் எலும்பு வலுவாக வைத்திருப்பதோடு மட்டுமில்லாமல் உயர் ரத்த அழுத்தத்தைச் சமநிலையில் இருக்க உதவுகிறது.
    பூசணி விதை, பசலைக்கீரை, பாதாமில் இருந்து இந்தச் சத்தைப் பெறலாம்.
    contd..



  10. #1240
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    6. வைட்டமின் e

    கொழுப்புப்பொருட்களில் அதிகமாகக் காணப்படும் இது ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடன்ட், நோய் எதிர்ப்புச்சக்திக்கு உறுதுணையாக அமைகிறது,

    கொய்யா, நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிசை மற்றும் முருங்கை, காலிபிளவர், கீரை வகைகள், முளை தானியங்களின் மூலம் பெறலாம்.

    7.
    ஒமெகா-3

    பெண்களுக்கு மிகவும்தேவைப்படும் ஒரு சிறந்த கொழுப்பு அமிலம் இது. உயர் ரத்த அழுத்தம், வீக்கம் மற்றும் நாள்பட்ட நோய்களைச் சரி செய்வதுடன் இதயப்பாதிப்பிலிருந்தும் காக்கிறது. நாள் ஒன்றுக்கு 1.1 கிராம் அளவுக்குப் பெண்களுக்குத் தேவைப்படும்

    கடல்மீன்களிலிருந்து இதை பெறலாம்.

    8.
    பொட்டாசியம்

    பொட்டாசியத்தின்குறிப்பிடத்தக்க வேலை நரம்புகளில் ரத்தத்தைப் பிரச்னைகள் இல்லாமல் எடுத்துச் செல்லஉதவுவதுதான். மேலும், உறுதியான எலும்புக்கும், புத்துணர்ச்சிக்கும் சக்தியாக அமையும் இந்தச் சத்தை தயிர், உருளைகிழங்கு மீன் மற்றும் மாமிசத்தில் இருந்து அதிகம்பெறலாம். 19 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, நாள் ஒன்றுக்கு 4700 மி.கி அளவு இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    9.
    வைட்டமின் c

    நோய்எதிர்ப்புச்சக்திக்கு அதிகம் தேவைப்படும் இந்த வைட்டமின் ஒரு சிறந்தஆன்டிஆக்சிடன்ட். தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை வராமல் தடுக்கும் இந்த வைட்டமினை 19 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 75 மி.கி அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஆரஞ்சு. கிவி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களியிருந்து இந்த வைட்டமினைபெறலாம்.

    10.
    நார்ச்சத்து

    குடல்செரிமானத்துக்குப் பெரிதும் உதவுவது நார்ச்சத்து. 19-50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒரு நாளைக்கு 25 கிராம் அளவுக்கு மட்டுமே இதை எடுத்துக் கொள்ளவேண்டும்.சர்க்கரை நோயாளிகளுக்கு இது அவசியம் தேவைப்படுகிறது. இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள்மற்றும் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.

    கோதுமை, காய்கறி, கீரை மற்றும் பழங்கள் மற்றும் தானியங்கள் நார்ச்சத்துநிறைந்தவை.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter