Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1241
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

    தூக்கமின்மை நம்மில் நிறைய பேருக்குஅன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும் தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒருவிஷயமாகவும் இருக்கிறது. அதை எப்படியாவது சரி செய்துவிடணும் என்று பாதிக்கப்பட்டஎல்லோருமே முயற்சி செய்திருப்பார்கள். இரவு நன்றாகதூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும் உறக்கம் வரகாரணமாக அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக அறியலாம்.

    செர்ரி பழங்கள்

    நம் உடலுக்குள்இருக்கும், உடலியக்கங்களை கட்டுபடுத்தும் ஒரு வகையானஉயிரியல் கடிகாரமானது நமது தூக்கத்தையும் கட்டுபடுத்துகிறது-. இந்த கடிகாரமானதுதூக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் என்கிற வேதியியல் பொருளின்இயற்கை உறைவிடம் தான் செர்ரி பழங்கள். அதனால் இரவு தூங்க செல்வதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.

    வாழைப்பழம்

    வாழை பழத்தில்பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைய இருக்கு. அது மட்டுமில்லாமல்எல்ட்ரிப்டோபன் எனும் அமினோ அமிலமும் வாழைப்பழத்தில் இருக்கிறது. இந்தஎல்ட்ரிப்டோபன் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5htp என்னும் ஒரு ரசாயனமாக மாறிவிடும். அதன் பிறகு இந்த 5htp யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

    டோஸ்ட்

    பொதுவாக காலைஉணவாக அதிகம் சாப்பிடுகிற டோஸ்ட்க்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னுசொல்றாங்க விஞ்ஞானிகள். மாவுசத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன்உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். இன்சுலின் ஹார்மோனானது மூளையிலிருந்து ட்ரிப்டோன்மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யும் சமிக்ஞைகளைஉருவாக்கிறதாம். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு இரசாயனங்களும் உறக்கத்தைதூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும்.

    ஓட் மீல்

    ஓட்ஸ் கஞ்சியும்இரத்ததில் இருக்கிற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன்சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டப்படுகிறது. மூளை இரசாயனங்கள்சுரந்து கடைசியாக நாம தூங்கிவிடலாம்.

    கதகதப்பான பால்

    உறக்கம் தரும்இயற்கை உணவுகளை தரவரிசையில் நாம் மேலே பார்த்த நான்கு உணவுகளுமே புதுசுதான். ஆனாபால் மட்டும் பழசுதான். வாழைப்பழத்துல இருக்கிற எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலம்பாலிலும் இருக்கிறது. அது தான் செரடோனின் உற்பத்தி மூலமாக உறக்கம் வரவைக்கும்.அதுமட்டுமில்லாமல் பாலில் அதிக கால்சியம் இருப்பது உறக்கத்தை தூண்டும் என்றுவிஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    தூக்கம்வரவேண்டும் என்பதற்காக இனி யாரும் தூக்கமாத்திரை சாப்பிட வேண்டாம். அதுக்கு பதிலாமேலே பார்த்த உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமான தூக்கத்திற்கு அழைப்பு விடுங்கள்


    Sponsored Links
    jv_66 likes this.

  2. #1242
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    யூரிக் ஆசிட் மற்றும் அசிடிட்டியை குறைக்கும் பச்சை பப்பாளி & கீரீன் டீ

    யூரிக் ஆசிட் மற்றும் ஹைபர்யூரிசேமியாஎன்றால் என்ன ?

    யூரிக் ஆசிட் என்றால் என்ன?

    *
    யூரிக் ஆசிட் என்பது உடலில் உற்பத்தியாகும் ஒரு இயற்கையானபொருள் ஆகும்.

    *
    உங்கள் உடல் புரோடீன்களை கூறுபடுத்தி இதனை ஏற்படுத்துகிறது.

    *
    உடலில் எப்போதும் உள்ள யூரிக் ஆசிட் உடலில் இருந்துவெளியேறும் முன்பாக அதனை கூறுபடுத்த கூடிய என்சைம்களை மனித உடல் உற்பத்திசெய்வதில்லை

    *
    மனிதர்களில் ரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் முதலில்சிறுநீரகத்தால் கூறுபடுத்தப்படுகிறது.

    *
    மற்ற அசுத்தங்களை நீக்கிய பிறகு, சிறுநீரகங்கள் சிறிதளவு யூரிக் ஆசிட்டை ரத்தத்திற்குதிருப்பி அனுப்புகிறது

    *
    கூடுதலாக உள்ள ஏதாவது யூரிக் ஆசிட் சிறுநீரில்கடத்தபடுகிறது

    ஹைபர்யூரிசேமியாஎன்றால் என்ன?

    *
    ஹைபர்யூரிசேமியா என்பது ரத்தத்தில் அதிகப்படியான யூரிக்ஆசிட் இருப்பதாகும்.

    *
    யூரிக் ஆசிட் கல்லீரல் வழியாக கடந்து சென்று ரத்தஓட்டத்தில் கலக்கிறது.

    * "
    வழக்கமான" அளவுகளை நிர்வகிப்பதற்காக இவற்றில்பெரும்பாலானவை உங்களது சிறுநீரில் (உங்களது உடலிலிருந்து நீக்கபடுகிறது)வெளியேறிவிடும் அல்லது உங்களது குடல்களின் வழியாக வெளியேறிவிடும்.

    ஹைபர்யூரிசேமியாவின்அறிகுறிகள் என்ன?
    காய்ச்சல்
    குளிர்காய்ச்சல்
    களைப்பு
    மூட்டுவலி மற்றும் அலர்ஜி
    சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள்
    சிறுநீரகத்தில்கற்கள்

    யூரிக் ஆசிட் பிரச்சனைஉள்ளவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் பச்சை பப்பாளி உணவில் சேரத்துக்கொண்டால்தொந்தரவு குறையும்.

    கீரீன் டீயும்நல்ல பலனைத் தரும்

    jv_66 likes this.

  3. #1243
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    விளாம்பழம்

    விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

    jv_66 likes this.

  4. #1244
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அன்னாசி

    அன்னாசி பழத்தில் வைட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

    jv_66 likes this.

  5. #1245
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மாதுளம் பழம்

    மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

    jv_66 likes this.

  6. #1246
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பப்பாளி

    வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும்,ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

    மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை

    jv_66 likes this.

  7. #1247
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இன்றைய சூழலில் நடைமுறையில் இருக்கும் சமையல் உணவுகளில், மிகவும் தீமை தரும் உணவுகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை எவை????

    1.அசைவ உணவுகள், கடைகளில் அல்லது தெருவோரங்களில் எண்ணெயில் பொறித்து தரப்படும், பொருட்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் வகைகள், காபி, டீ, பால், சீன உணவுகள் அஜினா மோட்டா கலந்த எண்ணெயில் வறுத்த உணவுகள், வெள்ளை சீனியில் செய்த இனிப்பு பண்டங்கள், உப்பு, புளி, மசாலா நிறைந்த வெளிநாட்டு சிப்ஸ் வகைகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள்,, பதப்படுத்தப்பட்ட பழரசங்கள் மிக மிக கெடுதல்கள் மனிதனுக்கு செய்து வந்தாலும் அதன் ருசியை மனிதன் விட்டு விட தயாராக இல்லை. ருசியானது என்னவெல்லாம் தண்டனை தருகிறது என்று பாருங்கள்.

    2அசைவ உணவு உண்பவர்களுக்கு அதிக அளவு நச்சுத்தன்மை கொண்ட யூரிக் அமிலம உடலில் ் உடலில் உண்டாகிறது. இந்த அமிலம் நரம்பு மண்டலங்களை வெகுவாக தாக்குவதால், வாத சம்பந்தமான நோய்களும், மூட்டு சம்மந்தமான வலியையும், வீக்கத்தையும் உண்டாக்குகின்றன.

    3.அசைவ உணவில் மட்டரகமான நார்ச்சத்துகள் இருக்கிறது. இவை பெரும்பாலும் குடல் பகுதியிலே தங்கி விடுகிறது. நாளடைவில் பல வைரஸ்கள் மற்றும் கிருமிகள் அதிகப்படியாக வளர்ச்சியடைந்து , குடல் பகுதியை பாதிப்படைய செய்கிறது. இதனால் குடல் சம்மந்தமான புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

    4.அசைவ உணவில் காணப்படும் கொழுப்பும், புரதமும் கலோரிகள் அளவை அதிகபடுத்தி விடுகின்றன. இதனால் சிறுநீரக கோளாறுகள், அதிகப்படியான உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்களை உண்டாக்கிவிடுகிறது
    5.மிருகங்களின் திசுக்களில் நச்சுத்தன்மை கொண்ட கழிவுகள் தங்கி விடுவதால் மேலும், மனிதனுக்கு பல கேடுகளை விளைவிக்கின்றது.

    6.இயற்கை பொருட்களை செயற்கையாக கசக்கி பிழிந்து எண்ணெய் எடுப்பதே முதல் தவறு, அதில் எண்ணையை கொதிக்க வைத்து பொருள்களை பொறித்து உண ்பது இரண்டாவது தவறு, முதல் நான் பொறித்த எண்ணையை மறுநாள புது ் எண்ணயோடு கலந்து மீண்டும் அதனைக் கொதிக்க வைத்து உணவை பொறித்து தருகிறார்கள் இது மண்ணிக்கவே முடியாத கெடுதியை தருகிறது உடலுக்கு...

    7.பலமுறை எண்ணயை கொதிக்க வைத்து அதிலிருந்து பெறப்படும் உணவுகள் அதிகப்படியான கழிவுகளையுங், நச்சுத்தன்மைகளையும் இரத்தத்தில் கலக்க செய்கிறது

    8. ஜீரணமாவதற்கு உதவியாக இருக்கட்டுமே என்று,… நாமக ஒரு கற்பனை செய்து கொண்டு, குளிர்பானத்தை குடித்து வருகிறோம், உண்மையில் இந்த குளிர்பானங்கள் ஜீரண வேலையை மந்தப்படுத்துகிறது , ஜீரண வ வேகத்தை குறைப்பதோடு மட்டுமின்றி ஜீரண மண்டலத்தில் குழப்பங்களை விளைவிக்கின்றது.
    contd..


    jv_66 likes this.

  8. #1248
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி


    9.குளிர்பானங்களில்உபயோகப்படுத்தும் ''கார்போலிக் ''அமிலம் எலும்புகளில் உள்ள கால்சியத்தை குறைப்பதில்முக்கிய பங்கு வகிக்கிறது.

    10.
    குளிர்பானங்களில்பயன்படுத்தும் மற்றொரு பொருள் கார் பன் டை ஆக்ஸைடு என்னும் வாயு வின் காரணமாககுளிர்பானமானது, மேலும் அமிலத்தன்மை வாய்ந்தாகமாறி விடுகிறது . நமதுஉடலுக்கு பல்வேறு நன்மைகளையும், ஆற்றலையும்தரக்கூடிய நுண்ணுயிரிகளை இந்த அமிலத்தன்மை அழித்து விடுகிறது

    11.
    செயற்கையானவாசனை தரக்கூடிய இரசாயனங்கள் அதிக அளவில் ஐஸ்கிரீம் தயாரிப்பதில் பயன் படுத்தபடுகின்றன அன்னாசி பழ வாடையை செயற்கையாக உண்டு பண்ணுவதற்கு ''எத்தில் அஸிடேட் ''என்ற வேதிப்பொருளைகலப்படம் செய்கிறார்கள். இந்த வகை இரசாயனம் தோல் பதனிடும் தொழிலிலும், ஆடைகளுக்கு சாயமிடும் தொழிலிலும் பயன்படுகிறது. இந்தவேதிப்பொருள் நுரையீரலையும் , கல்லீரலையும், மற்றும் பித்தப்பையையும் பாதிப்படைய செய்கிறது.

    12.
    தலைப்பேன்களைஒழிக்க பயன்படுத்தபடும் கடுமையான விசப்பொருளான ''பைப்பர்கோஸ்''என்ற வெனிலா, சுவைமற்றும் நறுமனத்திற்காக பயன்படுத்தபடுகிறது.
    13.
    பொதுவாகஐஸ்கிரீம் வாசனையை உண்டு பண்ண பயன் படுத்த படும்''பெப்ரோனல்''… என்ற இரசாயனம் பூச்சி கொல்லி மருந்தாகவும் பயன்படுத்த படுகின்றன.
    14.
    வாழைப்பழவாசனைக்கு பயன் படுத்ததும் ''அமைல்பட்டிரேட்''… என்ற இரசாயனம் ஆனது பெயிண்டிற்கு நிறம் உண்டாக்கவும்பயன் படுத்த படுகின்றன.
    15.…
    செர்ரிபழவாசனைக்கு ''அல்டிஹைடெக்'17'என்றவேதிப்பொருள் பயன் படுத்தபடுகிறது. இது எளிதில் தீப்பற்ற ி எரியும் ஒரு அபாயகரமானதிரவம், இந்த திரவம் அதிக அளவில் பிளாஸ்டிக் மற்றும் இரப்பர்தொழிற்சாலையில் பயன் படுத்த பட்டு வருகிறது.

    contd..


    jv_66 likes this.

  9. #1249
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    16.டீ, காபி இல்லாத சமுதாயத்தை கனவில் கூட காண முடியாதஅளவிற்கு அதன் ஆக்கிரமிப்பு வியப்பை தருகிறது. உணவு கூட இல்லாமை இருந்து விடுவேன்காபி, டீ, இல்லாமல்என்னால் இருக்க முடியாது என்று சொல்பவர்கள் நிறைய உண்டு.

    17.
    உண்மையில்காபிஎன்பது என்னவென்றால் நியாஸின், கேபின் டிரைோ நெல்லின், டேனிக்அமிலம் என்ற பலபொருட்களின் சிக்கலான ஆபத்தான தைகுப்பாஙும்.…… இது ஒட்டு மொத்த நரம்பு மண்டலங்களை தூண்டு செய்துசுறுசுறுப்பு ஆக்குதல் போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தினாலும், ஜீரண மண்டலத்தை தாக்குவதில் குறை வைப்பது இல்லை.

    18.
    ஒருகப் காபியின் விளைவுகளை நீக்குவதற்கு உடலானது தொடர்ந்து 26 மணிநேரம் போராட வேண்டி உள்ளது என்று அமெரிக்கமருத்துவர்கள் ஆய்வு தெரிவிக்கிறது.

    19.
    காபி, டீ, குடிக்கும்பழக்கம்உடலின் அரசுத்த உஷ்ணத்தை அதிகப்படுத்தி, மலச்சிக்கல்உண்டு செய்கிறது மலச்சிக்கல் தான் எல்லா நோய்களு்க் காரணமாக உள்ளது.

    20.
    ஒருதாய் தன் குழந்தைக்கு மட்டுமே தாய்ப்பால் கொடுப்பது போன்று, மாடுகளும் தனது கன்று களுக்குத் தான் பால்சுரக்கிரது. மேலும் மாட்டின் இரைப்பை வேறு மனிதனின் இரைப்பை வேறு என்கிற அடிப்படைஉண்மையை முதலில் புரிந்து கொள்ளுங்கள். தாய்ப்பால் குடித்தால் தாய்க்கு ணம் வரும். மாட்டுப்பால் குடித்தால் மாட்டின் குணம் தான் வரும். சிலர் கழுதை பாலை கூடவிட்டு விட தயாராக இல்லை என்கிற போது அவர்களுக்கு எவருடைய புத்தி அதிகமாகஇருக்கும் என நான் சொல்லத் தேவையில்லை.

    21.
    நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கால்நடைகளுக்கு உணவாகபச்சை தாவரங்கள் மட்டும்தான் இருந்தன. ஆனால் இன்று வியாபாரநோச்கத்திற்காகவும், பால் அதிகம் சுரப்பதற்காகவும் , இரசாயன மருந்துகளையும், மற்றும்உணவுகளையும் கால்நடைக்கு கொடுக்கிறார்கள். இதனால் ம ாடுகளும் நோயால்பாதிக்கப்படுகின்றன , வீடுகளில்வளர்க்கும் மாடுகளுக்கு நூற்றில் நாற்பது சதவீதம் சர்க்கரைநோயும், பதற்று நோயும் இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன


    contd..


    jv_66 likes this.

  10. #1250
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    22.நகரத்தெருக்களில் மேய விடும் மாடுகள் பெரும்பாலும் சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களைதின்கிறது, குப்பையில் உள்ள அலுமினியம் சார்ந்த பொருட்களையும், கெட்ட உணவுகளையும் தின்கிறது என்றாலும், அந்த மாட்டின் பாலையும் கூட கரந்து வியாபாரம்செய்யப்படுகிறது.

    23.
    கடைகளில்கிடைக்க கூடிய பாக்கெட் பாலிலும் கூட ஒரு வகையான இரசாயனம், வெண்மையும், நுரையும், தருவதற்காக சாம்பு, அதிகஅளவு திடத்திற்கு கிழங்கு மாவு, மற்றும்டிஸ்யூப் பேப்பர்கள் போன்ற பல பொருட்கள் கலப்படம் செய்கிறார்கள்.

    24.
    இன்றையசூழலில் எந்த வகையிலும், ஒருமிரூகத்தின் பால் மனித ஆரோக்கியத்துக்கு உதவாது.

    25.
    உப்பு, புளிப்பு, காரம்மற்றும் இனிப்பு கலந்த சிப்ஸ் உணவுகள் உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலமான நிணநீர்ச்ஓட்டத்தை கட்டுபடுத்துகிறது. இரத்தத்தை நீர்க்க செய்து மாசுபடுத்துகின்றத, அசுத்த உஷ்ணத்தை ஏற்ப்படுத்தி , நரம்பு மண்டலத்தையும், ஜீரணமண்டலத்தையும் பாதிப்படைய செய்கிறது.
    மனிதன் ருசியினால் பெறக்கூடிய தண்டனையை இவ்வாறுகூறிக்கொண்டே போகலாம். ருசியினால் தண்டிப்பதை காட்டிலும். ருசியை தண்டிப்பதுமேலானது என்ற எண்ணம் தான் நம்மை சீர்படுத்த வேண்டும்

    jv_66 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter