Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1251
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை



    இரத்த கொதிப்புள்ளவர்கள் முதலில் அமைதியாகவும், மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ அதிக அளவு உணர்சிகளை காட்டக்கூடாது. இவை நம்மை அதிகளவு பாதிக்கும். வேலை நேரம் போக அதிகளவு ஓய்வெடுக்கவேண்டும்.

    முடிந்தளவு மன அழுத்தம் குறைக்கும் தியான முறைகளை பின்பற்றலாம். இந்த இரத்த கொதிப்பிற்கு மலச்சிக்கலும் முக்கிய காரணமாகும். சரியான நேரத்தில் எப்படி உணவு உட்கொள்கிறோமோ அதுபோன்று மலம்கழித்தலும் குறித்த காலத்தில் முடிக்கவேண்டும்.

    மலச்சிக்கல் இல்லாமல் கவனித்து கொள்ளவேண்டும். அதிக அளவு பழம், சுத்த பசும் பால் மற்றும் நிறைய தண்ணீர் அருந்திவந்தால் இந்த மலச்சிக்கல் வராது.

    செய்யக்கூடாதவை :

    இரத்த கொதிபுள்ளவர்கள் அதிகநேரம் ஓய்வின்றி கண்விழித்தல் கூடாது. உணர்சிகளை தூண்டக்கூடிய சினிமா அல்லது செயல்களை தவிர்க்க வேண்டும். மிதமிஞ்சிய உடலுறவு கூடாது. அதிகளவு கோபத்தினை காட்டக்கூடாது.

    காபி, டீ ,கோகோ பானங்களை தவிர்க்கவேண்டும். புகையிலை சம்மந்தமான எதையும் பயன்படுத்த கூடாது மற்றும் மது அருந்தகூடாது


    Sponsored Links
    sumee likes this.

  2. #1252
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கணைய புற்றுநோயை குணமாக்கும் பாகற்காய் ஜூஸ்

    வீட்டில் சுலபமாக செய்யக்கூடிய பாகற்ககாய் ஜூஸ் கேன்சர் செல்களை அழிக்கின்றது என்று விஞ்ஞானிகளால நிருபிக்கப்பட்டுள்ளது.

    பாகற்காய் உலகம் முழுவதும் பயிரட்டப்படு வந்தாலும், ஜப்பானில் மிகவும் பிரபலமா உள்ளது. ஓக்கினாவா எனும் தீவில் வாழும் மக்களின் நீண்ட ஆயுளுக்கு பாகற்காய் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    நமது இந்தியாவில் இதன் மருத்துவ குணங்களுக்காக காலம்காலமாக உபயோகிக்கப்பட்டு வந்தாலும் மேலைய நாடுகளில் இப்பொழுதுதான் பிரபலம் அடைந்து வருகிறது. பாகற்காய் வைரஸ்களுக்கு எதிராக போராடி நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸ்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

    பாகற்காயின் சர்க்கரையை குறைக்கும் குணம் கணைய புற்றுநோய் செல்களை அழிக்கின்றது. குளுக்கோஸ் உற்பத்தியாதைக் குறைத்து கேன்சர் செல்களுக்கு உணவாக அமையும் சரக்கரை இல்லாதவாறு செய்கிறது. இதனால் கேன்சர் செல்கள் பட்டினியால் அழிகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    பாகற்காய் ஜீஸிலுள்ள கேன்சரை அழிக்கும் தன்மை மார்பகங்களிலும், குடலிலும், புரோஸ்ட்ரேடிலும், ஈரலிலும் அல்லாது பிற கேன்சர் தாக்கங்களிலும், இரத்தபுற்று நோயிலும் செயல்பட்டாலும் இது மிகுந்த சக்தியுடன் கணையபுற்று நோயில் செயலாற்றுகிறது.

    கொலராடோ பல்கலை கழகத்திலுள்ள விஞ்ஞானிகளில் பாகற்காயை உள்ளூர் சந்தையில் வாங்கி விதைகள நீக்கி ஜூஸாக பிழிந்து இரண்டு விதங்களில் சோதனை செய்தனர். நேரடியாக செல்கள் மூலம் செலுத்தியும், உறைக்கப் பட்ட பவுடராக எலிகளுக்கு உணவாக கொடுத்தும் இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதில் கிடைத்த பலன்கள் மிகுந்த ஆச்சர்யத்தை தந்தன.

    புதிதாக பிழிந்த ஜூஸில் தண்ணீருடன் கலந்து கொடுக்கப்பட்ட சாறு 5 சதவீகிதம் மட்டுமே வீரியத்துடன் காணப்பட்டு கணையபுற்று செல்களான கார்சினிமோவை அழித்தது. 72 மணிநேர சோதனையில் AsPC – 1 மற்றும் Capan-2 கேன்சர் செல்கள் 90 சதவிகிதமும், BxPC-3 and MiaPaCa-2 கேன்சர் செல்கள் 98 சதவிகிதமும் குறைந்து காணப்பட்டது. இதற்க்கு காரணம் பாகற்காய் ஜூஸ் என்று அறியப்பட்டுள்ளது.

    மற்றொரு சோதனையில் உறைத்து வைக்கப்பட்ட பாகற்காய் பவுடர் 64 சதவிகிதம் கேன்சர் செல்களை அழித்தது. இந்த செயலாற்றம் புரோஸ்ட்டேட் கான்சர் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் கீமோதெரப்பிக்கு சமமானது என்றும் ஆனால் எந்த விதமான பின்விளவுகள் இல்லாமல் பாதுகாப்பனது என்று கண்டுபிடித்துள்ளனர்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-10846504_361982887312911_8960071318134277525_n.jpg  
    sumee likes this.

  3. #1253
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தேன் மற்றும் லவங்கப்பட்டையில் நிறைந்துள்ள ஆச்சரியப்பட வைக்கும் குணங்கள்!!!

    லவங்கப்பட்டை மற்றும் தேன் சாப்பிடும் முறை உங்களுக்கு தேவையானது எல்லாம் லவங்கப்பட்டை, தேன் மற்றும் தண்ணீர் மட்டுமே! 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டையை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். இதன் செய்முறை மிகவும் சுலபமானது.

    இந்த கலவை சமமாகும் வரை லேசான வெப்பத்தில் கொதிக்க வைக்கவும். அதன் பின் அதை ஆற வைத்து, வெதுவெதுப்பாக குடிக்கவும். பதனிடப்படாத தேனையும், நற்பதமான லவங்கப்பட்டை பொடிக்கு லவங்கப்பட்டை குச்சிகளை அரைக்கவும் பரிந்துரைக்கிறோம்.

    கீல்வாதம் தினமும் காலையிலும் இரவிலும், இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு சின்ன டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி சேர்க்கப்பட்ட ஒரு கப் வெந்நீரை குடிக்கவும். இதனை தொடர்ச்சியாக குடித்து வந்தால், தீவிரமான கீல்வாதத்தை குணப்படுத்தலாம்.

    சிறுநீர்ப்பை தொற்றுக்கள் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் இரண்டு டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி சேர்க்கப்பட்ட ஒரு கப் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். இது சிறுநீர்ப்பையில் உள்ள கிருமிகளை அழித்து விடும்.
    contd..



  4. #1254
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    கொலஸ்ட்ரால் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் மூன்று டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியை 1 கப் தேநீரில் கலந்து குடித்தால், இரண்டு மணிநேரத்திற்குள், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு 10 சதவீதம் குறையும்.

    சளி ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான தேனை, 1/4 டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியுடன் கலந்து மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக குடித்து வந்தால் தீவிரமான இருமல், சளி போன்றவற்றை குணப்படுத்தி, சைனஸை நீக்கும்.

    இதய நோய்கள் தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை கலந்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். இதனை கோதுமையால் செய்யப்பட ரொட்டியின் மீது தடவி தினமும் காலையில் உட்கொண்டால், தமனிகளில் உள்ள கொலஸ்ட்ரால் குறையும். இதனால் நெஞ்சு வலி ஏற்படாமல் தடுக்கும்.

    வயிற்று கோளாறு வயிற்று வலியை குணப்படுத்தும். மேலும் வயிற்று அல்சரை அதன் வேரிலிருந்து நீக்கி விடும்.

    வாய்வு லவங்கப்பட்டை பொடியுடன் தேனை எடுத்துக் கொண்டால், வாய்வு தொல்லையில் இருந்து உங்கள் வயிறு நிவாரணம் பெறும்.

    நோய் எதிர்ப்பு அமைப்பு தேனையும் லவங்கப்பட்டை பொடியையும் தினசரி உட்கொண்டு வந்தால், உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவடைந்து, பாக்டீரியா மற்றும் நச்சுயிர்களில் இருந்து உங்கள் உடல் பாதுகாக்கப்படும்.

    செரிமானமின்மை 2 டீஸ்பூன் தேனில் தூவப்பட்ட லவங்கப்பட்டை பொடியை தினமும் உணவிற்கு முன் உட்கொண்டால், அசிடிட்டியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் மிக அதிகமான உணவையும் கூட செரிக்க வைக்கும்.

    இன்ஃபுளுவென்சா - ஃப்ளூ இன்ஃபுளுவென்சா கிருமிகளை கொல்லும் இயற்கையான பொருட்கள் தேனில் உள்ளது. இது நோயாளிகளை ஃப்ளூ தாக்காமல் பாதுகாக்கும்.

    முதுமை பிரச்சனைகள் 4 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை போடி மற்றும் 3 கப் தண்ணீரை ஒன்றாக கலந்து, அதனை கொதிக்க வைத்து, தேநீர் போல் தயார் செய்து கொள்ளவும். இதனை தினமும் பருகி வந்தால் வயதான காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.
    contd..


    sumee likes this.

  5. #1255
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    பருக்கள் 3 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியை தூங்க செல்வதற்கு முன் பருக்களின் மீது தடவவும். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதனை தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால் வேரிலிருந்தே பருக்கள் நீங்கும்.

    உடல் எடை குறைப்பு ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்த தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை தினமும் காலை உணவை சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் வெறும் வயிற்றிலும், இரவு தூங்க செலவற்கு முன்பும் குடித்து வந்தால், உடலில் கொழுப்பு குவியாமல் தடுக்கப்படும்.

    சரும தொற்றுக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியைத் தடவி வந்தால் சிரங்கு, படர்தாமரை மற்றும் அனைத்து விதமான சரும தொற்றுக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

    சோர்வு தேனில் உள்ள சர்க்கரை உடல் வலுவடைவதற்கு இடைஞ்சலாக இல்லாமல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரை டீஸ்பூன் தேனை ஒரு டம்ளர் தண்ணீருடன் கலந்து, அதன் மீது கொஞ்சம் லவங்கப்பட்டை பொடியை தூவி, காலையில் பல் துலக்கிய பின்னும், மதியமும் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் உடலின் உற்சாகம் அதிகரிக்கும்.

    புற்றுநோய் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியை ஒரு மாத காலத்திற்கு, தினமும் 3 வேளை எடுத்துக் கொண்டால், வயிறு மற்றும் எலும்பில் முற்றிய புற்றுநோய் சரியாகும்.

    காது கேளாமை தினமும் காலையிலும் இரவிலும் தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை சரிசமமான அளவில் எடுத்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் காது கேட்க உதவிடும்.

    sumee likes this.

  6. #1256
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நம் உடலுக்கு100 மருத்துவம்

    1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

    2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

    3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

    4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

    5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.
    contd..


    Last edited by chan; 15th Dec 2014 at 03:30 PM.
    sumee likes this.

  7. #1257
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.எலும்புகள்

    7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

    8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

    9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

    10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
    contd..



  8. #1258
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.பெண்

    12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

    13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

    14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…!

    15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
    contd..



  9. #1259
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.கர்ப்பம்

    17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

    18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

    19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

    20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
    contd..



  10. #1260
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

    22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

    23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

    24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

    25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.
    contd..


    vishnusree likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter