Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1281
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    தலையில் அடிபட்டால்

    சாதாரணமாக தலையில் இடித்துக் கொள்வதில் இருந்து, ரோட்டில் ஏற்படும் விபத்து வரை என பல காரணங்களால் தலையில் அடிபடக் கூடும். மண்டையில் சற்று அமுங்கினால் போல் இருந்தாலோ, மண்டை ஓட்டில் லேசாக விரிசல் தெரிந்தாலோ பாதிப்பு அதிகம் என்றே கொள்ள வேண்டும். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்...

    * நினைவின்றி விழுந்தாலோ

    * சற்று சாதாரணமாக எழுந்து விட்டு பின் நினைவின்றி விழுந்தாலோ

    * கண் கருவிழிகள் இருபுறமும் சமமாக அசையாமல் விட்டாலோ, கருவிழி விரிந்தாற் போல் தெரிந்தாலோ

    * கை, கால் அசைவுகள் மிகவும் குறைந்தாலோ, அசைவின்றி இருந்தாலோ இவருக்கு மிக அவசர சிகிச்சை தேவை என்பதனை உணருங்கள். சிலர் அடிபட்ட சில மணி நேரங்கள், சில நாட்கள், சில வாரங்கள் கூட கழித்து மயங்கி விழுவர். இவர்களுக்கு,

    * தலைவலி

    * குழம்பிய பேச்சு

    * வாந்தி

    * மூக்கிலும், காதிலும் இருந்து ரத்தக் கசிவோ அல்லது திரவ கசிவோ இருக்கும்.

    ஆகவே தலையில் அடிபட்டு ஒன்றுமில்லை என்றாலும், மருத்துவர்கள் சில வாரங்கள் வரை அவரை கண்காணிப்பில் இருக்கச் சொல்வர். மண்டையில் அடிபட்டு ரத்தப்போக்கு சற்று அதிகமாக தெரிந்தால் மிகவும் அதிர்ச்சி கொள்ள வேண்டாம். முகம், தலை இவற்றுக்கு ரத்த ஓட்டம் அதிகம் என்பதால், சிறு காயம் கூட அதிக ரத்தப்போக்கினைத் தரும்.

    இருப்பினும், காயம் சிறியதா, பெரியதா என்பதை மருத்துவரே முடிவு செய்யவேண்டும். இம்மாதிரி அடிபடும் ஒருவருக்கு சுத்தமான கட்டை விரல் கொண்டு லேசாக அந்த இடத்தை அழுத்த, சிறிய காயங்கள் கட்டுப்படும். மருத்துவமனை செல்லும்வரை சுத்தமான பேண்டேஜ் துணி கொண்டு, காயம்பட்ட இடத்தில் லேசான அழுத்தம் கொடுக்கலாம்.

    காயம் அடைந்தவரை உட்கார வைத்து, அவர் தலையையும், தோள்பட்டையையும் நாம் பின்னால் பிடித்துக் கொள்ளவேண்டும். மருத்துவர் மூலம் நரம்பு பிரச்சினைகளை அறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சைகள் பெறுங்கள். நலம் பெற்று வாழுங்கள்.





    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-73c006d3-0527-470f-bc24-309b57de7782_s_secvpf.gif.jpg  

  2. #1282
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எந்த உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்?


    ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த உணவு களைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்?
    சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்டசிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன்.

    ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுக ளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்? பதில் சொல்கிறார் டய ட்டீஷியன் புவனேஸ்வரி

    இந்த உணவுகளைச் சாப்பிட்டதா ல்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்கடலையோ, பிரியாணியில் இருந்த சிக்கன் பீஸோ கெட்டுப் போயிருக்க லாம்.

    இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டதால்தான் இறந்து போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன் றைக்கு ஃபுட் பாய்சன் அதிகம் நடக்கிற து.

    புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப் போகும் தன்மை கொண்டவை. வேர்க் கடலை, பால், அசைவஉணவு வகைகள், எண்ணெய் எல்லா ம் சீக்கிரமே கெட்டுப்போகும்.எண்ணெயில்பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்துவரும்.

    மழை, பனி க் காலத்தில் உணவுகள் கெட்டுப்போகக் காரணமா க இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்ற கிச்ச னுக்குள் இருக்கும் பொருட் களுக்குள்வந்து உட்கார்ந்துகொள்ளும் இப்பூஞ்சைகள் பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்து விட்டுப்போகும்.

    மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல் லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஃப்ரிட்ஜுக்குள்தானே இருக்கிறது என் கிற நினைப்பு வேண்டாம். ஃப்ரிட்ஜில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற் ற உணவுப் பொருட்களுக்கும் பரவி விடும்.

    கிச்சன்பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள்இருப்பது தெரிந்தால் அதை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன் படுத்து வார்கள். வெயிலில் காயவைப்பதால் பூஞ்சை கள் மறைந்து விடாது.

    அவற்றை உடனடியாக கொட்டி விடுவது நல்லது. எக்ஸ்பயரி ஆன பொருள்களைப் பயன்படுத்தினா லும் ஃபுட் பாய்சன் ஏற்படும். சிப்ஸ் வகைகளை வாங்கும் போது கவன மாக இருங்கள்.

    எண்ணெயில் இரு ந்து கெட்டுப்போன வாசனை வந் தால் அதைச்சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப்போன பழங் களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களை ஃப்ரெஷ்ஷாகவாங்கி பயன்படுத்த வேண் டும்.

    ஃப்ரிட்ஜில் உணவுகளை அடைத்து வைக் காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிட ப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள் ளைகளுக்கு முடிந்தவரை ஸ்நாக்ஸை நீ ங்களே தயாரித்தனுப்புங்கள்.

    கடையில் வாங்கிச் சாப் பிடுவதற்கு முன் பல முறை யோசியுங்கள். மீன் சாப்பிட்ட பிறகு த யிர் சாப்பிடக் கூடா து, சிக்கன் சாப்பிட்டதும் பால் சாப்பிடக் கூடாது போன்ற கட்டுக்கதை களைத் தூக்கி ஓரமாக வைத்து விட்டு, ரிலாக்ஸ் ஆகுங்கள்.


  3. #1283
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஆரோக்கியத்தைப் பாதிக்கும் மனஅழுத்தம்

    இன்று பணப் பிரச்சினையால் அவதிப்படுபவர்களை விட, மனப் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் அதிகமாகிவிட்டனர். உறவு சுருங்கி, ஓடிக்கொண்டே இருக்கும் நவீன வாழ்க்கை முறையின் பரிசு இது.

    கவலையையும், மனவேதனையையும் அனுபவிக்கும் போதெல்லாம் மனம் தளர்வதும், சோர்வடைவதும் எல்லோருக்குமே இயல்பான ஒன்றுதான்.

    ஆனால் மனஅழுத்தம் அடையும்போது இந்தச் சோர்வும், கவலையும் தொடர்ந்து நீடிக்கின்றன, அன்றாட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி குழப்பத்தை அதிகரிக்கின்றன.

    தூக்க குழப்பம், கடும் களைப்பு, சோர்வு, காலையில் எழுந்திருக்க முடியாமை, பசியின்மை, தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை போன்றவை மன அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கின்றன.

    ஆனால் இதில் நீங்கள் முக்கியமாக நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால், இதுபோன்ற மனநிலையுடன் ஒருவர் தொடர்ந்து இருக்கபோவதில்லை.

    அவரைச் சுற்றி இருக்கும் சூழ்நிலை மாறிவிட்டால், இந்த மன அழுத்தம் மாறிவிடும். அல்லது அவர் நினைத்தது நடந்துவிட்டால் மனஅழுத்தம் நீங்கிவிடும்.

    தாங்கள் ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்ற விரக்தியில் சிலருக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. மனஅழுத்தம் பொதுவாகவே சமூகத்தில் காணப்படக்கூடிய சாதாரண பாதிப்புதான்.

    இளம் வயதில், குறிப்பாக ரத்த அழுத்தம் அதிகமாகும்போது மனஅழுத்தம் ஏற்படுகிறது. நம்மில் ஐந்தில் ஒருவருக்கும் மனஅழுத்தம் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    எனவே இதுபற்றி அச்சப்படவோ, வெட்கப்படவோ, சங்கடப்படவோ தேவையில்லை. அதேநேரம், மனஅழுத்தத்தைப் புறக்கணிக்காமல் அதற்கு உரிய நிவாரணம் தேடுவது நல்லது.

    தொடர்ச்சியாக மனஅழுத்தப் பிரச்சினை ஏற்பட்டால், மனநல ஆலோசகர்களை நாடலாம். தொடர் மனஅழுத்தமானது ஒருவரது ஆரோக்கியத்தையும், குடும்ப வாழ்க்கையையும் பெருமளவில் பாதிக்கும்.

    எப்போதும் சுறுசுறுப்பாக, தங்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் ஈடுபட்டிருப்பவர்களை மனஅழுத்தம் நெருங்காது.

    விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவையும் மன அழுத்தத்தை விரட்டியடிக்கும். மனஅழுத்தத்தை முளையிலேயே கிள்ளியெறிந்துவிட்டால், நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியான நபராக நடமாடலாம்!


  4. #1284
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உப்பைக் குறைத்தால் வயிற்று புற்றுநோயை தடுக்கலாம்!

    உணவு வகைகளில் உப்பை குறைத்தால் வயிற்று புற்றுநோயை தடுக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. வேல்ட்கான்ஸர் ரிசர்ச்ஃபண்டின்(டபிள்யூ.சி.ஆர்.எஃப்) அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உப்பு நிறைய கலந்த உணவுகள் வயிற்று புற்றுநோய்க்கு காரணமாவதுடன், இரத்த அழுத்தம், இதயநோய் ஆகியவற்றை தோற்றுவிப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது.

    உப்பின் உபயோகம் தினமும் 6 கிராமுக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

    பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் வயிற்றுல் புற்றுநோய் பாதித்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவுச் செய்கின்றனர். இவர்களில் 15 சதவீதம் பேராவது உப்பை கட்டுப்படுத்தியிருந்தால் புற்றுநோய் வராமல் தடுத்திருக்கலாம் என டபிள்யூ.சி.ஆர்.எஃப் கூறுகிறது.

    உப்பின் அளவை உணவுப் பொருட்களின் கவரில் குறிப்பிட வேண்டும் என கூறுவது இதன் அடிப்படையிலாகும் என கேன்ஸர் ரிசர்ச் சென்டர் உறுப்பினர் லூஸி போய்ட் கூறுகிறார்.


  5. #1285
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்!

    வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்கள்? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்ற…த்தை விரட்டி அடித்துவிடலாம்.

    ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை.. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும்.

    வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

    வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர்(ulcer) நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இது வாய்துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணங்கள்.

    மற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.

    மருத்துவ ரீதியான காரணங்கள்:

    தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் infection ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

    உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும் இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள்.

    அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவுமண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.
    contd..



  6. #1286
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:

    1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப்பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

    2. mouth washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக்கொள்ளலாம்.

    3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவதுபோல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.

    4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர் நாற்றம் நீங்கும்.

    5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

    6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

    7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.

    8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும்.

    எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.

    9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

    10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.
    contd..


    indiragandhi28 likes this.

  7. #1287
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மூலிகை

    வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம்.

    சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித்துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும்.

    மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.

    கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது.(Mouth odor is caused by germs) அதேபோல ஒவ்வொரு முறையும் பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும்.

    பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.

    இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். குளோசப் டூத்பேஸ்ட் விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.

    குறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துற்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

    மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும். இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.

    இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி.. !


  8. #1288
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தீராத இருமலைப் போக்கும் கைமருந்துவம்


    இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்களுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட நல்ல குணம் தெரியும்.

    பலாச்சுளையை தேனில் நனைத்துச் சாப்பிட்டால், இருமல் போய்விடும். இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன் நெய், மூன்றையும் குழைத்துச் சாப்பிட, வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது. வெந்நீரில் தேன் கலந்து குடித்தால், ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் உள்ள சளி நீங்கி விடும்.
    வால்மிளகு-10, அதிமதுரம் 2 செ.மீ, சித்தரத்தை 2 செமீ, திப்பிலி, துளசி இலை 15 போட்டு அவித்து சாறு எடுத்துக் கொண்டு பனங்கற்கண்டுடன் ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் அருந்தவும். இருமலுக்கு மிகவும் நல்லது. மூன்று சொட்டு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சிறு குழந்தைகளுக்குப் புகட்டினால் கக்குவான் இருமல் நிற்கும்.

    தாங்க முடியாத அடுக்கு இருமலுக்கு முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து உள்ளங் கையில் கசக்கவும். சிறிது சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் தடவினால் இருமல் குறையும். அரிசித்திப்பிலியை கடாயில் போட்டு வறுத்துப் பொடி செய்து வைக்கவும். சதா இருமும் குழந்தைகள், பெரியவர்கள் யாரும் இதை உட்கொள்ளலாம். ஒரு டீ ஸ்பூன் பொடியில் சிறிது தேன் விட்டுக் குழைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
    இதை, காம்பு நீக்கிய வெற்றிலையின் நடுவில் அரை ஸ்பூன் வைத்து, வாயில் போட்டு வெற்றிலைச் சாறுடன் சேர்த்து சிறிது சிறிதாக சிறிது நேரம் வாயில் அடக்கிக் கொண்டு சாப்பிட்டால் இருமல் குறையும்.

    துளசிச் சாறையும் கல்கண்டையும் கலந்து சர்பத் போலக் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். வயதுக்குத் தகுந்தபடி இத் துளசிசர்ப்பத்தை சிறிதளவு எடுத்து 2 அல்லது 3 தடவைகள் சாப்பிட இருமல் குணமாகும்.
    வறட்டு இருமலால் அவதிப்படுவோர் அதிமதுர வேரினை அவ்வப்போது 1 துண்டு வாயிலிட்டு சுவைத்து வருவது நல்லது. கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதொடை, துளசி இவைகளின் இலை வகைக்கு 1 படி, சித்தரத்தை 1 துண்டு, இஞ்சி 1 துண்டு சேர்த்து இடித்துப் பிழிந்த சாறு 10 முதல் 20 துளி வரையில் வெண்ணையில் கலந்து காலை, மாலை கொடுத்து வர ஓயாத இருமல் நீங்கும். கபக்கட்டு, சிறுபிள்ளைகளுக்குக் காணும் கணைச்சூடு விலகும்.


  9. #1289
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்

    காய்கறி வகைகளில் ஒன்றான பூசணியை தொடர்ந்து சமைத்துச் சாப்பிட்டால், நரம்பு தொடர்பான நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண், மேகவெட்டை, பிரமேக நோய் போன்றவை உள்ளவர்களுக்கு அவற்றின் தீவிரம் குறையும்.

    பூசணி, உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீக்கும். எப்போதும் உடல் வலி இருப்பவர்கள், பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல் வலி நீங்கும். மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது தினசரி பூசணி சேர்த்து சமைத்த உணவைக் கொடுத்தால் நல்ல பலன் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

    மருத்துவத்தில் பூசணிக்காயின் சதைப் பகுதி, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைச்சுற்றலை நீக்கவும் பயன்படுகிறது. மருத்துவம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுகிறது.

    வெண் பூசணிக்காயின் சாறு 30 மில்லி அளவு எடுத்து, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதயத்துக்குப் பலம் கொடுக்கும். ரத்தம் சுத்தப்படும். பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லி அளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச் சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும்.

    உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் அதை நிறுத்திவிடும். ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப் புழுக்கள் வெளியேறவும், சிறுநீரக நோய்கள், ரத்தம் சுத்தப்படும்.

    பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லி அளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச் சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் அதை நிறுத்திவிடும்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-10846066_796133153815479_4911528263953272803_n.jpg  

  10. #1290
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இயற்கையான முறையில் கொசுத் தொல்லையில் இருந்து விடுபெற வேண்டுமா?


    மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றி நீர் தேங்கியிருப்பதால், வீட்டில் கொசுக்களானது அழையா விருந்தாளியாக வந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கும். ஏனெனில் கொசுக்களானது நீர் தேங்கும் பகுதியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே வீட்டில் கொசுக்களின் தொல்லையில் இருந்து விடுதலைப் பெற, அவற்றிற்கு பிடிக்காத வாசனை கொண்ட பொருட்களை அவை நுழையும் இடத்தில் வைத்தால், கொசுக்கள் வீட்டினுள் நுழைவதைத் தடுக்கலாம்.

    இங்கு கொசுக்களை அழிக்கும் மற்றும் கொசுக்கள் வராமல் தடுக்கும் சில இயற்கையான பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வீட்டில் பயன்படுத்தினால், வீடு கமகமவென்று மணப்பதுடன், கொசுக்களின்றி சுத்தமாகவும் இருக்கும். சரி, இப்போது கொசுத் தொல்லையில் இருந்து விடுதலை தரும் பொருட்களைப் பார்ப்போமா?

    எலுமிச்சை மற்றும் கிராம்பு;

    எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதன் மேல் கிராம்பை சொருகி, கொசுக்கள் நுழையும் இடத்தில் வைத்தால், அதன் வாசனையினால் கொசுக்கள் வருவதைத் தடுக்கலாம்.

    லாவெண்டர் எண்ணெய்;

    நறுமணமிக்க லாவெண்டர் எண்ணெயை ஒரு துணியில் நனைத்து, கொசுக்கள் வரும் இடத்தில் தொங்கவிட்டால், கொசுக்களுக்கு அதன் நறுமணமானது பிடிக்காததால், வீட்டில் கொசுக்களின் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும். இல்லாவிட்டால், லாவெண்டர் எண்ணெயை சருமத்தில் தடவிக் கொண்டாலும், கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.

    யூகலிப்டஸ் ஆயில்;

    யூகலிப்டஸ் ஆயிலை சருமத்தில் தடவிக் கொண்டாலும் கொசுக்கடியில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.

    வேப்ப எண்ணெய்;

    வேப்ப எண்ணெயும் கொசுக்களை அண்ட விடாமல் தடுக்கும். ஏனெனில் இதில் நிறைந்துள்ள கெமிக்கலானது கொசுக்களுக்கு அழிவை ஏற்படுத்தும். ஆகவே இதனை சருமத்தில் தடவிக் கொள்வதும் நல்ல பலனைக் கொடுக்கும்.

    காபித் தூள்;

    காபித் தூளின் நறுமணமும் கொசுக்களுக்கு பிடிக்காது. ஆகவே நீங்கள் உட்காரும் இடத்தின் அருகில் ஒரு பௌலில் காபித் தூளை வைத்துக் கொண்டு உட்காருங்கள். பின் பாருங்கள் கொசுக்கள் உங்களை நெருங்கவே நெருங்காது.

    சூடம்/கற்பூரம்;

    ஒரு பௌலில் தண்ணீர் ஊற்றி, அதில் சில துண்டுகள் கற்பூரத்தைப் போட்டு, கொசுக்கள் நுழையும் இடத்தில் வைத்தாலும், கொசுக்கள் வருவதைத் தடுக்கலாம்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-10403505_796526280442833_3039528408434818299_n%25u00252b-1-.jpg  
    Lakschellam likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter