Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1291
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்

    பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.

    பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.

    மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

    எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

    நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

    ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

    ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

    தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.

    இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
    கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.

    தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.




    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-10362586_796690520426409_1379855555155378545_n.jpg  

  2. #1292
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    முதுமையில் தனிமை ஏற்படுத்தும் மனச்சோர்வு

    முதுமையில் உடல் நலமும், மனநலமும் முக்கியம். முதுமையில் உடல் நலத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, மனநலத்துக்கு கொடுப்பதில்லை. இதனால் மனச்சோர்வு, பதற்றம், தூக்கமின்மை, பசிக்குறைவு, எடைக்குறைவு ஏற்படுகிறது.

    இதை முதுமையின் விளைவு என முதியவர்கள் நினைக்கின்றனர். மனநலம் சார்ந்த பிரச்சினையால் மனச்சோர்வு, பதற்றம் மட்டுமின்றி மறதி நோயும் ஏற்படும். புற்றுநோய், மூட்டு வலி, ஆஸ்துமா, இதய நோய், பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உதவிக்கு மற்றவர்களை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.

    இதனால், அவர்கள் நாம் மற்றவர்களை சார்ந்து வாழ வேண்டியுள்ளதே என்ற மனச்சோர்வு இருக்கும். குடும்பத்தில் நிதி சார்ந்த பிரச்சினைகள், பிள்ளைகள் தனிக்குடித்தனம் செல்வது, கையில் பணம் இல்லாமை மற்றும் வீட்டில் தனியாக இருப்பது போன்றவையும் முதியவர்களின் மனச்சோர்வுக்கு காரணமாக இருக்கிறது.

    நாட்டில் 3-ல் ஒரு முதியவர் இளைஞர்களால் அவமதிக்கப்படுகிறார்கள். முதலில் மகனாலும், அதற்கு அடுத்தபடியாக மருமகளாலும் அதிகமாக முதியவர்கள் அவமதிக்கப்படுகின்றனர். நோய், பணம், அவமதிப்பு போன்றவைகளால்தான் முதியவர்களின் மனநலம் அதிகம் பாதிக்கிறது. முதுமையின் எதிரி தனிமை.

    அதனால்,முதுமையில் தனிமையை தவிர்க்க வேண்டும். 50 வயது ஆன உடனேயே ஓய்வுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும். அதன்படி ஓய்வு காலத்தை கழிக்க வேண்டும்.

    தினமும் காலையில் கட்டாயமாக தியானம் செய்ய வேண்டும். மூளையில் உறங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான நியூரான் செல்களை எழும்பும் சக்தி தியானத்துக்கு உள்ளது. அதே போல ஐம்புலன்களையும் அடக்கும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்.

    இந்த பயிற்சி முதுமையிலும் இளமையான தோற்றத்தை உண்டாக்கும். நம்முடைய கஷ்டங்கள் மற்றும் குறைகளை மறந்துவிட்டு, மற்றவர்களின் கஷ்டங்கள் தீருவதற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனால் நம்முடைய கவலைகளும், குறைகளும் கொஞ்சம் கொஞ்சமாக போய்விடும்.


  3. #1293
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள்

    வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ”அலைல் புரோப்பைல் டை சல்பைடு” என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

    அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

    *முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

    *வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

    *குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

    *சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும்.

    *இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

    *யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

    *முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.
    contd..



  4. #1294
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    *செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

    *சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

    *புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

    *நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

    *வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

    *வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

    *வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
    contd..



  5. #1295
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    *அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-10847963_796692023759592_130407701021930273_n.jpg  

  6. #1296
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இஞ்சி ஒரு இயற்கை மருந்தாக கருதப்படுகிறது

    இஞ்சி உலகம் முழுவதும் ஒவ்வொருவரின் சமையலறையிலும் காணப்படும் ஒரு சிறப்பு சமையல் பொருளாக இருக்கிறது. நம் அன்றாடம் உண்ணும் உணவை காரத்தன்மையுடன் உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் இஞ்சியை தினமும் இரண்டு ஸ்பூன் சாறாக சாப்பிடுவது அவசியம்.இஞ்சி

    இஞ்சி சமையலுக்கு மட்டுமே பிரபலமானது அல்ல, இஞ்சியை ஒரு நாளில் ஒரு எண்ணிக்கை என தினமும் சாப்பிடக்கூடிய இயற்கை மருந்தாக கருதப்படுகிறது?

    காலை நோய் மற்றும் எரிச்சல்

    இஞ்சி டீ குடிப்பது காலை நோயை சமாளிக்க சிறந்த வழி. குறிப்பாக கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிகள் இஞ்சி டீ குடிப்பது அவசியம். ஏனெனில் காலை வேளையில் ஏற்படும் மசக்கையை தடுக்க இஞ்சி டீ ஒரு மிக சிறந்த இயற்கை வழியாகும். மாறாக வெறுமனே காலை நோயை போக்க சாதாரண டீ உடன் இஞ்சி பிஸ்கட் சேர்த்து சாப்பிடலாம்.

    நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் பெற, இஞ்சியை ஒரு சிறிய துண்டுகளாக மென்று சாப்பிடலாம். இஞ்சி டீ குடிக்க விரும்பாதவர்கள் மாற்றுவழியாக காலை நோயை சமாளிக்க சாதாரண டீ உடன் இஞ்சி பிஸ்கட் சாப்பிடலாம். நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்திலிருந்து விடுதலை பெற ஒரு சிறிய இஞ்சி துண்டுகளை வெறுமனே சாப்பிடலாம்.

    மூட்டுவலிகள் மற்றும் வீக்கம்

    மூட்டுவலிகள் மற்றும் வீக்கங்களை நீக்கும் பண்புகளை கொண்ட ஒரு சிறந்த இயற்கை வலி கொல்லி இஞ்சி. இது ஆர்த்ரிடிஸ் வலியினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மிகவும் பயன்படுவது. உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்படுவர்கள் உடனடி மருந்தாக இஞ்சி டீ சாப்பிடலாம். இஞ்சி மாதவிடாய் பிடிப்புகளுக்கு ஒரு சக்திவாய்ந்த நிவாரணியாக கருதப்படுகிறது.

    தொண்டை புண், குளிர் மற்றும் காய்ச்சல்

    குளிர், காய்ச்சல், தொண்டை புண், தலைவலி ஆகியவற்றிக்கு இஞ்சி ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும்.. ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுடு தண்ணீரில் ஆவி பிடிக்கும் போது இஞ்சி துண்டு அல்லது இஞ்சியின் சாறு இரண்டு டீஸ்பூன் விட்டு கொதிநிலையை அடைந்ததும் ஆவி பிடித்தால் ஜலதோஷத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும்.

    வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா

    வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா போக்க ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, பூண்டு சாறு ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா நிவாரணம் பெறும்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-10857864_796693613759433_6105081202038967668_n.jpg  

  7. #1297
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தினமும் நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதற்கான 10 காரணங்கள்!

    ஃபில்லாந்தேசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த நெல்லிக்காயில் வைட்டமின்-சி அதிகம் இருப்பதால், தினமும் அதை நாம் நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. இந்த நெல்லிக்காயை நாம் அப்படியே சாப்பிடலாம். குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லோருக்குமே இது பிடிக்கும்.

    இது நம் மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது; நுரையீரல்களை சரியான முறையில் இயங்கச் செய்கிறது; உடலிலுள்ள நச்சுப் பொருள்களையும், கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது.

    ஆயுர்வேத மருத்துவத்திலும் ஒரு முக்கிய மருந்துப் பொருளாக விளங்கும் இந்த நெல்லிக்காயைத் தினமும் நாம் நம் உணவில் சேர்த்துக் கொள்வதற்கான காரணங்கள் இதோ...

    கொழுப்பைக் குறைக்கிறது உடல் பருமன் நோயினால் அவதிப்படுபவர்கள் நம் நாட்டில் மிக அதிகம். நீரிழிவு மற்றும் இதய நோய்களையும் இந்த உடல் பருமன் ஏற்படுத்துகிறது. நெல்லிக்காயில் உள்ள அதிக அளவிலான புரதச்சத்துக்கள் நம் உடலிலுள்ள கொழுப்பைக் கரைத்து அகற்றுகிறது.

    கண் பார்வையை அதிகரிக்கிறது கண் புரை என்னும் பார்வை நோயைத் தவிர்ப்பதில் நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது. மேலும், கண் சிவப்பாதல், கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல், மாலைக் கண் உள்ளிட்ட பலவிதமான பிரச்சனைகளைப் போக்குவதற்கும் நெல்லிக்காய் உதவுகிறது. கண்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
    contd..



  8. #1298
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    இதய நோய்களை கட்டுப்படுத்துகிறது நம் இதயத்திற்கும் பலவிதமான பலன்களை நெல்லிக்காய் அளிக்கிறது. கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, அதன் விளைவாக இதயத்தைப் பாதுகாக்கிறது. இருதயத்திற்குள் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

    தலைமுடியை வலுவாக்குகிறது நம் தலைமுடியை வலுவாக்குவதில் கால்சியத்தின் பங்கு அதிகம் உள்ளது. இந்தக் கால்சியம் நம் உடலுக்குள் எளிதாக ஊடுருவுவதற்கு நெல்லிக்காய் உதவுகிறது. நாம் உபயோகப்படுத்தும் ஷாம்புக்களில் நெல்லிக்காய் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    விந்தணு உற்பத்திக்கு... ஆண்களில் சிலருக்கு விந்தணுக்கள் குறைவாக இருக்கும். அவர்கள் தொடர்ந்து நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.

    நச்சுப் பொருட்களைக் குறைக்க... நெல்லிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் நாம் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமாகும். நச்சுப் பொருட்கள் விரைவில் வெளியேறும். சிறுநீரகங்களையும் இது சீராக இயங்க வைக்கிறது.

    மாதவிடாய் வலிகளைக் குறைக்கிறது மாதவிடாய் நாட்களில் பெண்கள் நெல்லிக்காயை எடுத்துக் கொள்வதால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகள் குறையும்.

    எலும்பு வளர்ச்சிக்கு... ஏற்கனவே கூறியது போல், கால்சியம் எளிதாக உடம்பில் உறிஞ்சப்படுவதற்கு நெல்லிக்காய் மிகவும் உதவுகிறது. உடலில் கால்சியம் சேரச் சேர எலும்புகளின் வளர்ச்சி அதிகரிக்கும்.

    வாய் நாற்றத்திற்கு... நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளும் விலகி ஓடும். மேலும், பற்களை வலுவாக்கும், ஈறுகளில் ஏற்படும் தொற்றுக்களையும் ஆற்றுகிறது.

    மலச்சிக்கலுக்கு விடுதலை நாம் சாப்பிடும் உணவுகளை எளிதாகச் செரிமானம் செய்து, மலச்சிக்கலே இல்லாமல் செய்வதற்கு நெல்லிக்காய் மிகவும் உதவுகிறது. அதிலுள்ள நார்ச்சத்துக்கள் தான் இந்த மாயத்தைச் செய்கின்றன.




    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-13-1418452266-x11-1418303911-amlacover.jpg  

  9. #1299
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில் கிடைக்கும் உதவும் இந்திய உணவுகள்!!!

    சிறுதானியங்கள் சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.

    இத்தகைய தானியங்களை நம் முன்னோர்கள் அதிகம் எடுத்து வந்ததால் தான், அவர்கள் உடல் பருமன் பிரச்சனையால் அவஸ்தைப்படாமல் இருந்தார்கள். எனவே இவற்றை முடிந்தால் அன்றாட உணவில் சேர்த்து உடல் எடையை குறையுங்கள்.

    பாசிப்பருப்பு பாசிப்பருப்பில் கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தினமும் உணவில் இதனை சேர்த்து வருவது நல்லது. மேலும் இதனால் உடலுக்கு வேண்டிய வைட்டமின்களான ஏ, ஈ மற்றும் சி அதிகம் கிடைக்கும்.

    மஞ்சள் அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு பொருள் தான் மஞ்சள். இந்த மஞ்சள் கூட உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும். அதற்கு தினடும் ஒரு டம்ளர் பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பருக வேண்டும்.

    மோர் மோரில் 2.2 கிராம் கொழுப்புக்களும், 99 கலோரிகளும் தான் உள்ளது. எனவே இவற்றை அன்றாடம் பருகி வந்தால், உடலில் கொழுப்புக்கள் சேர்வது குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

    தேன் உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்களுக்கு ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள் தான் தேன். இத்தகைய தேனை சர்க்கரைக்கு பதிலாக சேர்த்து வந்தால் தொப்பை குறைவதோடு, சருமமும் பொலிவோடு இருக்கும்.
    contd..



  10. #1300
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    முட்டைக்கோஸ் முட்டைக்கோஸில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை உடல் பருமன் உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால், தொப்பை வளர்வது குறையும். அதுமட்டுமின்றி, அன்றாட உணவில் சேர்த்து வர தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

    கடுகு எண்ணெய் சமைக்கும் போது உணவில் வெஜிடேபிள் ஆயிலை சேர்ப்பதற்கு பதிலாக, கடுகு எண்ணெயை சேர்த்து வந்தால், உடலில் செரிமான மண்டலம் சுத்தமாகி கொழுப்புக்கள் வெளியேற ஆரம்பிக்கும். இதனால் உடல் எடையும் குறையும்.

    தக்காளி விலைக் குறைவில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் தக்காளி. இத்தகைய தக்காளியில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.

    முட்டையின் வெள்ளைக் கரு முட்டையின் வெள்ளைக் கருவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே இதனை உட்கொண்டு வந்தால், அவை தொப்பையைக் குறைக்கும். ஆகவே எடையைக் குறைக்க விரும்பும் முட்டை பிரியர்கள், முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

    காளான் காளான் கூட ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த, தொப்பையைக் குறைக்க உதவும் சிறப்பான ஒரு இந்திய உணவுப் பொருள். அதிலும் பட்டன் காளான் தான் கொழுப்புக்களை கரைப்பதில் சிறந்தது.

    பாதாம் ஆய்வு ஒன்றில் பாதாமை மிதமான அளவில் உட்கொண்டு வந்தால், உடல் எடை குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதாமையும் உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    கீரைகள் கீரைகள் கூட உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும் அற்புதமான உணவுப் பொருட்களில் ஒன்று. ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது.
    contd..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter