Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1301
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    கறிவேப்பிலை அனைவரும் தூக்கி எறியும் கறிவேப்பிலையை பச்சையாக தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும்.

    ஏலக்காய் மசாலா பொருட்களில் ஒன்றான ஏலக்காய் செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் ஏலக்காய் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும்.

    பீன்ஸ் வீட்டில் அடிக்கடி செய்யும் பீன்ஸ் பொரியலை உட்கொண்டு வந்தாலே உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா? ஆம், ஏனெனில் பீன்ஸில் உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது.

    புதினா புதினா உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களை சுத்தம் செய்ய உதவுவதோடு, உடலை அமைதிப்படுத்தும். அதுமட்டுமின்றி, புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

    மாட்டுப் பால் கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலை குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, தொப்பையும் வருகிறது. எனவே அதற்கு பதிலாக மாட்டுப் பாலை குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பிட்டாகவும் இருக்கும்.

    மீன் இறைச்சிகளை உட்கொள்வதற்கு பதிலாக, மீனை உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைப்பதுடன், அதில் கொழுப்புக்களும் குறைவாக உள்ளது


    Sponsored Links

  2. #1302
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

    பல உடல்நல பயன்களை கொண்டுள்ள எளிய மூலப்பொருளான பூண்டு இல்லாமல், இந்தியா உணவுகள் முழுமை அடையாது. மிகவும் திடமானதாகவும், கசுப்புத்தன்மையுடனும் இருந்தாலும் கூட, அது சேர்க்கப்படும் உணவில் அதீத சுவை மணம் கூடும்.

    அதேப்போல் அதன் மருத்துவ குணங்களைப் பற்றி குறிப்பிடாமல், பூண்டை பற்றிய விளக்கம் நிறைவு பெறாது. நினைவிற்கு எட்டாத காலம் முதல், பல வித நோய்கள் மற்றும் மருத்துவ நிலைகளை தடுக்கவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும், இந்த அதிசய மூலிகை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

    இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது.

    அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது.

    பச்சை மிளகாயை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்!!! பூண்டை நன்றாக நறுக்கினாலோ அல்லது துண்டு துண்டாக வெட்டினாலோ அல்லது மசித்தாலோ அல்லிசினால் கிடைக்கும் உடல்நல பயன்களை திரட்டிடலாம். பூண்டில் செலினியமும் அதிகமாக உள்ளது.

    அஜோன், அல்லின், அல்லிசின் போன்ற மூலப்பொருட்களுடன் கூடிய பூண்டினால் நம் உடலின் சுற்றோட்ட, செரிமான மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் அமைப்புகளின் மீது சிறந்த தாக்கம் இருக்கும்.

    மேலும் இரத்தக் கொதிப்பை குறைக்கவும், நச்சுத்தன்மையை நீக்கவும், உட்காயங்களை குணப்படுத்தவும் கூட பூண்டு பயன்படுகிறது. இதோ, பூண்டினால் ஏற்படும் 15 உடல்நல பயன்கள், உங்களுக்காக!
    contd..



  3. #1303
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி குணங்களுக்காக நன்கு அறியப்படுவது தான் பூண்டு. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவிடும்.

    ஈ.கோலி, சால்மோனெல்லா எண்டெரிடிடிஸ் போன்ற பாக்டீரியாக்களை கொல்வதன் மூலமாக உணவு நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது நற்பதமான பூண்டு.

    சரும தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க.. பூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும தொற்றுக்களை குணப்படுத்த பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் பெரிதும் உதவுகிறது.

    இரத்தத்தை சன்னமாக்குதல் பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்தத்தை உறைதல் எதிர்ப்பி குணங்கள் இருப்பதால், உடலில் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். இதனால் அறுவை சிகிச்சைக்கு பின், இரத்த கசிவு அதிகரிப்பதற்கான இடர்பாடுகள் அதிகம்.

    இரத்த கொதிப்பை குறைக்கும் ஏஞ்சியோடென்சின் II என்ற புரதம் நம் இரத்த குழாய்களை சுருங்க வைக்கும். இதனால் இரத்த கொதிப்பு அதிகரிக்கும். பூண்டில் உள்ள அல்லிசின், ஏஞ்சியோடென்சின் II-வின் நடவடிக்கைகளை தடுக்கும்.

    இதனால் இரத்த கொதிப்பை குறைக்கும். பூண்டில் உள்ள பாலிசல்ஃபைட்ஸ், சிவப்பு இரத்த அணுக்களால் ஹைட்ரஜன் சல்பைடு என்ற வாயுவாக மாற்றப்படும். நம் இரத்த குழாய்களை ஹைட்ரஜென் சல்பேட் விரிவாக்குவதால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க அது உதவிடும்.

    இதயத்தை பாதுகாக்கும் நெஞ்சு வலி மற்றும் தமனித் தடிப்பு போன்ற இதயகுழலிய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும். இதிலுள்ள இதய பாதுகாப்பு குணத்திற்கு பல காரணங்கள் அடங்கியுள்ளது. வயது ஏற ஏற, விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்கும்.
    contd..



  4. #1304
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    இதனை குறைக்க பூண்டு உதவும். மேலும் ஆக்சிஜன் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் இதயத்தை காக்கும். பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

    மேலும் தமனித் தடிப்பு வளர்ச்சியையும் மெதுவாக்கும். அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பி குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.

    கொலஸ்ட்ராலை குறைக்கும் நம் இரத்த ட்ரைகிளிசரைடுகள் மற்றும் மொத்த கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும், தமனி பிளேக் உருவாக்கத்தை குறைக்கும் தன்மையும், பூண்டில் அதிகமாக உள்ளது.

    அலர்ஜிகளை எதிர்க்கும் பூண்டில் அழற்சி எதிர்ப்பி குணங்களும் அடங்கியுள்ளது. இதனால் நம் உடல் அழற்சிகளை எதிர்த்து போராட இது உதவிடும். டையாலில் சல்பைடு மற்றும் தியாக்ரெமோனோன் ஆகியவை பூண்டில் இருப்பதால் இதற்கு கீல்வாத எதிர்ப்பி குணங்களும் உள்ளது.

    அலர்ஜியால் ஏற்படும் அழற்சியை (ஒவ்வாமை நாசியழற்சி போன்றவைகள்) குணப்படுத்த பூண்டு உதவுகிறது. பச்சையாக பூண்டை ஜூஸாக்கி பருகினால், படை மற்றும் மூட்டப்பூச்சி கடியினால் ஏற்படும் அரிப்பை உடனடியாக நின்றுவிடும்.

    சுவாச பிரச்சனைகளுக்கான தீர்வு பூண்டை தினசரி பயன்படுத்தி வந்தால், சளி ஏற்படும் எண்ணிக்கைகள் குறைந்துவிடும். அதிலுள்ள பக்டீரியா எதிர்ப்பி குணங்கள் தொண்டை எரிச்சல்களை குணப்படுத்த உதவும்.

    மேற்பகுதி சுவாச பாதை தொற்றுக்களின் தீவிரத்தை குறைக்க பூண்டு உதவிடும். ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் கோளாறுகளுக்கும் இது பயனளிக்கும். அதனால் கண்டிப்பாக இது ஒரு விலை மதிப்பற்ற மருந்தே. இதன் சளிநீக்கம் திறனால் தீவிர மூச்சுக்குழாய் அழற்சியும் குறையத் தொடங்கும்.

    சர்க்கரை நோய் பூண்டால் இன்சுலின் சுரத்தல் அதிகரிக்கும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உதவிடும்.

    மருக்கள் மற்றும் காலாணிகள் எதிராக சிறப்பாக செயல்படும் கொழுப்பை கரைக்கும் பூண்டு சாற்றை காலாணிகள் மற்றும் கையில் இருக்கும் மருக்களின் மீது தடவினால் நல்ல பலனை அளிக்கும்.

    புற்றுநோயைத் தடுக்கும் தினமும் பூண்டை உட்கொண்டு வந்தால், பல வகையான புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறையும். பூண்டில் அல்லில் சல்பைடு என்ற பொருள் இருப்பதால் தான் புற்றுநோய் எதிர்ப்பியாக இது செயல்படுகிறது.

    பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணமாக இருப்பது PhIP என்ற ஒரு வகை ஹெட்ரோசைக்ளிக் அமைன் (HCA). பூண்டில் உள்ள டையாலில் சல்பைடு தான் PhIP-யை கார்சினோஜென்ஸாக மாற்றுகிறது.
    contd..



  5. #1305
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இரும்பு மெட்டபாலிசத்தை மேம்படுத்துதல் இரும்புச்சத்தை உறிஞ்சவும், வெளியற்றவும் உதவுவது ஃபெர்ரோபோர்டின் என்ற புரதம் தான். பூண்டில் உள்ள டையாலில் சல்பைடு, ஃபெர்ரோபோர்டின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். இதனால் இரும்பு மெட்டபாலிசம் மேம்படும்.

    உணர்வுகளை கிளறி விடும் இரத்தத்தின் சுற்றோட்டத்தை அதிகரிக்கும் திறன் பூண்டில் உள்ளதால், அதில் பாலுணர்வைத் தூண்டும் குணம் அடங்கியுள்ளது.

    பல் வலிகள் நசுக்கிய பூண்டு மற்றும் கிராம்பை நேரடியாக பாதிக்கப்பட்ட பற்களில் போடுங்கள்.

    இதில் பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் வலி நிவாரணி குணங்கள் அடங்கியுள்ளதால், பல் வலிக்கு நிவாரணம் அளிக்க இது உதவும். ஆனால் இது ஈறுகளில் எரிச்சலை உண்டாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

    உடல் எடையை குறைத்தல் உடல் பருமன் என்பது நீண்ட-கால குறைந்த-தர அழற்சி என பல ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றின் படி, பூண்டு உடலில் உள்ள கொழுப்பு அணுக்களின் உருவாக்கத்தை சீர்படுத்த உதவுகிறது.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-10-5-garlic2.jpg  

  6. #1306
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இரைப்பை குடல் அழற்சிக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள்!!!


    உப்பு உப்பில் சோடியம் உள்ளது. இது உடலில் நீர்வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் உப்பு கிருமிகளை எதிர்த்துப் போராடுவதோடு, செரிமான பாதையில் pH அளவையும் சீராக பராமரிக்கும்.

    ஆகவே ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை 1 லிட்டர் நீரில் கலந்து, அதனை நாள் முழுவதும் சீரான இடைவெளியில் குடிக்க வேண்டும்.

    இஞ்சி இரைப்பை குடல் அழற்சியை சரிசெய்வதில், ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளைக் கொண்ட இஞ்சியும் ஒன்று. இது வயிற்றில் ஏற்பட்டுள்ள தொற்றுகளை தடுப்பதோடு, வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று வலி ஆகியவற்றையும் குறைக்கும்.

    எனவே அதற்கு 1 கப் நீரை நன்கு கொதிக்க விட்டு, அதில் 1 டீஸ்பூன் இஞ்சியை போட்டு 10-15 நிமிடம் மூடி வைத்து, பின் அதனை வடிகட்டி, அதில் தேன் சேர்த்து ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால், சற்று விரைவில் குணமாவதைக் உணரலாம். குறிப்பு: உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இஞ்சி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    பெருங்காயத் தூள் பெருங்காயத்திலும் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் தன்மை இருப்பதால், இது இரைப்பை குடல் அழற்சியை உண்டாக்கிய கிருமிகளை அழித்து, விரைவில் நிவாரணம் தரும். மேலும் இது செரிமானத்தை அதிகப்படுத்துவதோடு, செரிமான பாதையையும் வலுவாக்கும்.

    அதற்கு 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூளை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும். மேலும் சமைக்கும் போது உணவில் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்வது நல்லது.

    ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரும் மிகவும் சிறப்பான ஒரு நிவாரணப் பொருள். அதற்கு 1 டீஸ்பூன் வடிகட்டாத ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடிக்க வேண்டும்.

    இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். இல்லாவிட்டால், தினமும் இரண்டு முறை திராட்சை ஜூஸில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்தும் குடிக்கலாம்.
    contd..



  7. #1307
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    புதினா
    புதினாவில் ஆன்டி-மைக்ரோபியல் அதிகம் இருப்பதால், இவை வாய்வு தொல்லை, உப்புசம், குமட்டல், வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களில் இருந்து நிவாரணம் தரும்.

    அதற்கு 1 கப் கொதிக்கும் நீரில் 1 டீஸ்பூன் உலர்ந்த புதினாவை சேர்த்து, 10 நிமிடம் மூடி வைத்து, பின் அதனை வடிகட்டி, தேன் சேர்த்து தினமும் மூன்று முறை குடிக்க வேண்டும். இதனால் வயிறு குளிர்ச்சி அடையும்.

    வாழைப்பழம் வாழைப்பழத்தில் உள்ள அமைலேஸ் என்னும் ஸ்டார்ச் இரைப்பை குடல் அழற்சியை சரிசெய்யும். அதிலும் இதில் பொட்டாசியம், மக்னீசியம் இருப்பதால், இவை செரிமான மண்டலத்தை சீராக செயல்பட உதவும். அதிலும் வாழைப்பழத்தை தயிருடன் சேர்த்து தினமும் 2-3 முறை உட்கொள்வது நல்லது.

    தயிர் தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதால், இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், வயிற்றில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுகள் அழிந்து, வயிற்றுப் பிரச்சனைகள் நீங்கும்



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-09-gastroenteritis1.jpg  

  8. #1308
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    புற்றுநோய் வராமல் தடுக்கும் சீத்தாப்பழம்

    சீத்தாப்பழத்தை உண்டால், செரிமானம் ஏற்படும். சீத்தாப் பழ
    த்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். சீத்தாப்பழச் சதையோடு உப்பைக் கலந்து தடவி வர பருக்கள் மறையும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வந்தால், அவர்களின் எலும்புகள் உறுதியாகும்.

    சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து, எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டு வந்தால் புண்கள் ஆறும்.

    ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், சீத்தாப்பழம் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, உடலில் அனாவசியமாக சேரும் கொழுப்பை குறைக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    முள்ளு சீத்தாப் பழம் புற்றுநோய்க்கு, ஓர் அற்புதமான மருந்து. கீமோதெரபி எனப்படும் சிகிச்சையை விட 10,000 மடங்கு அதிகம் பலன் தரக்கூடியதாம் முள்ளு சீத்தாப்பழம். புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டதால் இந்தோனேஷியா, மலேஷியா ஆகிய நாடுகளில் முன்னெச்சரிக்கையுடன் அன்றாட பயன்பாட்டு உணவில் சேர்த்துள்ளனர்.

    உதாரணமாக இப்பழத்தில் இருந்து குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்கள் செய்து சாப்பிடுகின்றனர். சீத்தாப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து, வைட்டமின்சி, கார்போ ஹைட்ரேட் போன்றவையும் அடங்கியுள்ளன.

    சீத்தாப் பழத்துக்கு ஆங்கிலத்தில் 'கஸ்டர்ட் ஆப்பிள்' என்று பெயர். ஆப்பிள் போலவே குளிர்ந்த சீதோஷ்ண சூழலில் வளரக்கூடிய சீத்தாப்பழம், உண்மையில் ஆப்பிளுக்கு இணையான மருத்துவ குணங்களும், இணையற்ற சுவையும் கொண்டது.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-d30cfd54-5d98-4c9a-8419-0915dc58796d_s_secvpf.gif.jpg  

  9. #1309
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நெல்லிக்காய் பற்றிய தகவல்..!!

    அன்றாடம் உட்கொள்ளும் நெல்லிக்காயனது அருமருந்தாகும். இது வாதம், பித்தம், கபம், என்னும் திரிகரண தோஷங்களையும் போக்கவல்லது. இதனாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.

    நமது முன்னோர்கள் இதனை ரசாயனம் என்றே அழைத்துள்ளனர். தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.

    பெண்களோ நெல்லிக்காயினை சௌபாக்கியம் என்று கருதி கார்த்திகை மாதத்தில் உத்தரண துவாதசி அன்று துளசிச் செடியுடன் இணைந்து பூஜிக்கின்றனர். இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகையுண்டு பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை கடைகளில் கிடைக்கும்.

    ஐந்து சுவை கொண்டது

    ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்னும் ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இதில் உள்ள இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு, கைப்பு, கபம் ஆகியவற்றையும் போக்க வல்லது.

    உயிர்சத்துக்கள்

    உயிர்ச்சத்துக்களான ஏ,பி,சி என்ற மூன்றும் அடங்கியுள்ளன. சாத்துக்குடிச் சாற்றில் உள்ள வைட்டமின் சத்து 20 மடங்கு இதில் உள்ளது. நெல்லிக்காய் வாடிய போதிலும் சிறிதளவும் குறைவதில்லை. நோயற்றவராக மனிதர் வாழ தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து தேவை. இதற்கு 4 சாத்துக்குடி சாறோ, 8 அவுன்ஸ் தக்காளிச்சாறோ சாப்பிடவேண்டும். ஆனால் இந்த 50 மில்லிகிராம் வைட்டமின் சி அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது.

    பித்தம் தணிக்கும்

    ஜீரணக்கோளாறு, பித்த மயக்கம், ஆரோடசிகம், காமாலை, கண்நோய், இரத்தசோகை போன்றவைகளுக்கு நெல்லிக்காய் மருந்தாகும் இதனை ஊறுகாயாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இதனால் பித்தம் தணியும் உணவு எளிதில் ஜீரணமாகும்.

    உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டி விடுகிறது. கல்லீரல் குறைபாட்டை நீக்குகிறது. இரைப்பை அழற்சியை போக்கி அல்சர் வராமல் பாதுகாக்கிறது. மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.
    contd..



  10. #1310
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    நீண்ட நாட்களாகியும் ஆறாமல் இருக்கும் புண்கள் ஆறிவிடும். கட்டிகள் பழுக்கும். அப்போது அதனை அரைத்து விழுதாக்கி உருட்டி உலரவைத்து அதனை சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும். புழுபூச்சிகளை அகற்றிவிடும் சக்தி உள்ளது நெல்லிக்கனி.

    கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

    நெல்லிக்காய் இரும்புச்சத்து உள்ளது இரத்தத்தைச் சுத்தஞ்செய்து இருதயத்தை வலுப்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் முதல் மாதம் தொட்டு 9 மாதங்கள் வரை காலை, மாலை, ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி முள்ளி உட்கொண்டால் அடிக்கடி வரும் வாந்தி நிற்கும். நல்ல பசியும் எடுக்கும்.

    நெல்லிக்காயில் உள்ள இரும்பு சத்தும், சுண்ணாம்பு சத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், ரத்த விருத்தியையும், கர்ப்பிணிகளிடையே ஏற்படுத்துகிறது. மேலும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் புஷ்டிகரமான ஆகாரம் கிடைக்கிறது.

    பெண் இனப்பெருக்க உறுப்பிற்கு பாதுகாப்பையும், உறுதியையும் தருகிறது.

    நினைவாற்றல் கூடும்

    பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை பலம்பெறவும், ஐம்புலன்கள் சீராக இயங்கவும் உறுதுணை புரிகிறது. மனஇறுக்கத்தைப் போக்கி, நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது.

    குழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது. பல்லில் ஏற்படும் பயோரியா என்னும் வியாதிக்கு இது அருமருந்து. நெல்லியிலைச் சாற்றை கொப்பளித்து காயை உட்கொண்டால் உடன் வியாதி நீங்கும்.

    சீரான ரத்த ஓட்டம் நடைபெறவும், இதயம் பலம் பெறவும் உதவுகிறது. ரத்த ஓட்டத்தின் போது நச்சுக்கிருமிகள் பரவாமல் பாதுகாக்கிறது. ரத்த நாளங்கள் சீராக இயங்கவும் உதவுகிறது. கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

    சளியை வெளியேற்றி, சுவாசமண்டலத்தை சீராக இயக்குகிறது. நீண்ட நாள் இருந்து வரும் இருமல், ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக உதவுகிறது.

    பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

    சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter