Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1321
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஒரு மாதத்தில் ஈரலை சுத்தப்படுத்தி இளமையாக இருக்க

    ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். இந்த ஒருவாய் எலுமிச்சை, ஆலிவ் எண்ணெய் கலந்த பானம், ஈரல் இரத்தத்தை சுத்தப்படுத்துவது அல்லாமல் நமது ஜீரணத்தை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இரத்ததில் உள்ள அசுத்தங்களையும், நச்சுகளையும் வெளியேற்றி சுத்தப்படுத்துகின்றது.

    இதை சுலபமான கீழ்காணும் முறையில் செய்து வந்தால் ஒரு மாத்தில் எண்ணற்ற பயன்களை உடனடியாக காணலாம். இதற்க்கு என்ன செய்ய வேண்டும் ?

    தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடவேண்டும். சிறிது நேரம் இடைவெளி விட்டு காலை உணவை சாப்பிடலாம்.

    பலன்கள்:

    ஒரு மாத்திற்க்கு பிறகு உங்கள் உடலில் நிறயை மாற்றங்களை காணலாம்.

    * கண்களின் கருவளயம் மறைந்து போகும்

    * தோல் இளமையுடன் பளபளப்பாக காணப்படும்

    * முன்பை விட மிகுந்த சுறுசுறுப்புடன் நேர்மறையான திறனுடன் செயலாற்றுவீர்கள்

    * ஜீரணம் மேம்பட்டு மலச்சிக்கல் மறைந்து போகும்


    Sponsored Links

  2. #1322
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள்
    வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

    அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

    எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

    இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

    தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

    பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

    இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

    சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!
    contd..



  3. #1323
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.

    விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

    1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

    2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

    3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும்,

    வீபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
    சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.


  4. #1324
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உணவு உண்ண மருந்து வேண்டாம்!
    அளவாய் உண்டால் மருந்தே வேண்டாம்!

    உணவே மருந்தாக, ருசியாக அமைய, முறையான அளவுகளில் கலந்துண்ண வேண்டும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்வதற்கு உடற்பயிற்சியுடன் சேர்ந்த உணவுக் கட்டுப்பாடும், மூச்சுப் பயிற்சியும் முறையாக செய்து வந்தாலே போதுமானது ஆகும், என்றும் இளமையான தோற்றம் கிடைக்கும்.

    ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு:-
    உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

    உணவு உண்ணும் முறை:
    உடலில் இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.
    துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.

    இனிப்பு:
    மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும்.
    பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.

    புளிப்பு:
    உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.
    contd..



  5. #1325
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    காரம்:
    பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல்இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத்தூய்மையாக்கும்.
    மிளகாய், மிளகு, வெங்காயம், பூண்டு, இஞ்சி, கடுகுபோன்றவை காரச்சுவை கொண்டவை.

    கசப்பு:
    பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்குமிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச்சக்தியாகச் செயல்படும். தாகம், உடல்எரிச்சல், அரிப்பு, காய்ச்சல்ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.
    பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

    உவர்ப்பு:
    அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது.உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச்செரிக்க வைக்கும்.
    கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய்போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.

    துவர்ப்பு:
    உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்புவெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும்.
    வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.
    உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாகவைத்துக் கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ணவேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
    சிலர், இலையில்உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவுமுழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பு. முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத்துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.

    இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலைபெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசாயங்கள் என்னும்முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும்அகற்றப்பட்டுவிடும்.

    ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்குஉரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோகவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக்கூடாது.
    எப்போதும் உணவ உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால்அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும்.வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அதுஅழிவுக்கு வழி வகுக்கும்.

    எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப்பயன்படுத்தினால், உணவினால்உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்புகுறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது.படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக்கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப் படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.
    உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பைஅறிந்து கொண்டால், உடல்நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்குவளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாகஅமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும்.உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.
    நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின்விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போதுசாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவுவேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்குஇடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காகநேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில்ஆழ்த்திக் கொள்வதாகும்.

    '
    உண்பதுநாழி' என்று, உணவின்அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும்கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லைஇகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

    சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம்.இயலும் போது உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்


  6. #1326
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

    இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

    சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

    சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

    அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்


  7. #1327
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சுவாச பிரச்சனைகளும் துளசியின் பங்கும்

    மிகினுங் குறையினு நோய் செய்யு நூலோர்
    வளிமுதலா வெண்ணிய மூன்று.

    வாத, பித்த, கபம் மாறுபாடே நோய் உண்டாக காரணம் என்று திருவள்ளுவர் நமக்கு விளக்கியுள்ளார். செயல்கள், உணவு இவற்றின் அடிப்படையில் ( வாதம், பித்தம், கபம்) இவைமூன்றும் நிலை பிறழ்கின்றன. சோம்பலால் வாதமும், மிதமிஞ்சிய வேலையால் பித் தமும், ஓழுங்குமுறை நழுவிய செயல்களால் கபமும் கூடுகிறது.

    இயற்கையில் விளையும் உணவுப்பொருட்களில் வாதபித்தகப தன்மைகள் இயல்பாகவே அமைந்துள்ளன. சில உணவுகளில் இவை அதிகளவில் இருப்பதால் அந்த வகை உணவுகளை உண்ணும் போது அன்றே அவற்றின் விளைவுகளை நம்மால் உணரமுடிகிறது. உதாரணமாக உருளை, வாழை, இறைச்சி இவற்றால் வாதம் அதிகமாகிறது. கத்திரி, பப்பாளி, கோழி இறைச்சி ஆகியவற்றால் பித்தம் அதிகமாகிறது. வெங்காயம், தக்காளி, முட்டை ஆகியவற்றால் கபம் மிகுதியாகுகிறது.

    இந்த மூன்றும் தன்நிலையில் இருந்து பிறழ்வதால் நோய் உண்டாகிறது. இந்த மூன்றையும் சரியான அளவில் வைக்க சில மூலிகைகள் உதவுகின்றது. வாதத்தை சீர்செய்ய வில்வமும், பித்தத்தை சரிசெய்ய வேம்பும், கபத்தை சீராக்க துளசியும் பயன்படுகின்றன. இவற்றில் துளசி எவ்வாறு கப நோய்களுக்கு மருந்தாகிறது என்று பார்ப்போம்.

    ஐயம் வயிறுளைச்சல் அத்திசுரம் தாகமும்போம்
    பையசர மாந்தம் பறங்குங்கான் மெய்யாக
    வாயின் அரோசகம்போம் வன்காரஞ்சூடுள்ள
    தூயதுளசிதனைச் சொல்.

    ஐயம் என்றால் கபம் சம்பந்தப்பட்ட நோய்கள், வயிற்று, உளைச்சல், சுரம், நீர் வேட்கை, மாந்தம், நாவின் சுவையின்மை இவை அனைத்தையும் துளசி போக்கிவிடும் என்று இப்பாடல் விளக்குகிறது.

    துளகி குணமாக்கும் நோய்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம். ஆனால் துளசி, கபம் சம்பந்தமான நோய்களை குணமாக்குவதில் பெரும்பங்கு துளசிக்கு உண்டு.

    துளசியின் இத்தனை மருத்துவகுணங்களும் கபம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் என்று தற்போதைய ஆய்வாளர்கள் ஆய்வில் தகவலை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் இருமல், சளி, கோழைக்கட்டு, மூக்கில் நீர் வழிதல், தலைவலி, மூக்கடைப்பு, மூச்சுக்குழல் அழர்ஜி, நெஞ்சுச்சளி, மூச்சிவிட சிரமப்படுதல் போன்ற பல சுவாசம் சம்பந்தப்பட்ட கப நோய்களை துளசி கு ணமாக்கும் சக்தி கொண்டது. பத்து கிராம் அளவு துளசி இலையை எடுத்து கசக்கி சாறு பிழிந்து காலை, மாலை இருவேளை ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் சளி தொல்லை எளிதில் தீர்ந்துவிடும்.

    ஐந்து கிராம் துளசி இலையை இரண்டு மிளகு சேர்த்த அரைத்து காலைமாலை வேளைகளில் வெந்நீரில் குடித்து வந்தால் காய்ச்சலுடன் கூறிய சளி குறையும். சிறிது துளசி இலைகளுடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து அந்த சாறை சிறிது தேன் சேர்த்து உட்கொண்டால் ஆஸ்துமா, நெஞ்சுசளி, சளியுடன்கூடிய சுரம் குணமாகும். தொண்டை கரகரப்பு, அடைப்பு, போன்ற நேரங்களில் சிறிது துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்த பின் அந்த நீரை தொண்டையில் படும்படி கொப்பளித்தால் உடனே குணமாகும்.




    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-images-31.jpg  

  8. #1328
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இலந்தைப்பழத்தின் மருத்துவக்குறிப்புகள்...

    சாலையோரத்தில் மிக மலிவாக கிடைக்கும் இலந்தையில் பொதிந்துள்ள அதிசயம் காண்போம் வாரீர்...

    இலந்தை கனி மிக அதிகமான மருத்துவ குணம் கொண்ட ஒரு கனியாக விளங்குகிறது. 100 கிராம் இலந்தையில் 74% கலோரி,17 % மாவுப் பொருள், 0.8 % புரதம், மற்றும் தாது உப்புகள், இரும்புசத்துகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.

    * உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம்.

    * இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருந்து சக்திகள். மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம். கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

    * மயிர் புழுவெட்டு நீங்கும் இலந்தை இலைச் சாற்றினை உள்ளங்கை, உள்ளங்கால்களில்; தினம் பூசி வர அங்கு அதிக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.

    * இலந்தை மரத்தின் உள்பட்டைகளை உலர்த்திப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர ஆறாத புண் ஆறும்.

    * இலந்தை மரவேர் அரைத்து பூச மூட்டு வலி குணம் ஆகும்.

    * வேர்ப்பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றை 15 மி. அளவு குடிக்க மலச்சிக்கல் குணம் அடையும்.

    * தினம் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 இலந்தைப் பழங்களை உண்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் குணமாகும்.

    * இலந்தைப்பழம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. தொடர்ந்து சிலநாள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும். இலந்தை பழத்திற்கு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றலுண்டு


  9. #1329
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் :-

    தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.

    வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.

    தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.

    மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.

    மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.

    கவனத்தில் கொள்ள வேண்டியது:

    வாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். வேறொரு செயல் மூலம் ஏற்படுவதாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில் வாய்ப்புண் குணமாகி விட வேண்டும். அதுவல்லாமல் வாய்ப்புண் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.


  10. #1330
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடலின் உஷ்ணம் குறைய

    * இளநீர் குடிக்க வேண்டும்.
    * கார, மசாலா உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
    * பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
    * வெந்தயம் ஊற வைத்து தினம் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம்.
    * ஒரு டீஸ்பூன் வெண்ணையை பாலில் கலந்து அருந்தலாம்.
    * மோர் சூட்டை நன்கு தணிக்கும்.
    * 92 சதவீதம் நீரும், வைட்டமின் `சி' சத்தும் கொண்ட தர்பூசணி பழம் உடல் சூட்டினை நன்கு தணிக்கும்.
    * புதினா சாறு, மோருடன் கலந்து பருகுவது உடனே சூடு தணியும்.
    * குளிர்ந்த பாலில் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் அருந்த சூடு தணியும்.
    * துளசி விதைகளை நீரில் ஊறச் செய்து குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும்.
    * தினம் ஒரு நெல்லி சாற்றினை அருந்தலாம்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter