Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1331
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இளமையும் நெல்லிக்கனியும்

    முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது.
    ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர்.
    அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.
    இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்
    மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
    மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
    கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
    யாமலக முண்ணமுறை யால்
    பொருள்
    முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர்.
    அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.
    நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை
    முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
    ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.
    நெல்லிக்கனி பித்தத்தை சமப்படுத்தும்
    பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து உடலிலும் இரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு
    contd..



    Sponsored Links

  2. #1332
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி


    நெல்லிக்கனியின் சிறப்பு
    நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.
    ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.
    ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
    நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.
    எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.
    இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.
    மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.
    வாய்ப்புண் தீர
    நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.
    பித்தம் குறைய
    15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
    இரத்த கொதிப்பு நீங்க
    நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.
    கண் நோய்கள் தீர
    நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
    நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.


  3. #1333
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பொன்னாங்கண்ணி மகத்துவம்

    தினமும் இந்த கீரையை தினந்தோறும் உண்டு வாழ்வோருக்கு உடல் பொன்போலபளபளப்பாகும் என்பர். புரதம், இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் சீயும் நிறைந்தஇந்தக் கீரை குளிர்ச்சி தரக் கூடியது. பத்தியக் கீரை இது. உடல் உஷ்ணத்தைத் தணித்துஉடலுக்கு பலம் தரவல்ல இந்தக் கீரை சொறி சிரங்குகளை போக்கி மேனியின் அழகைக்கூட்டும். கண்கள் சம்பந்தமான நோய்கள் அனைத்தையும் போக்கி நல்ல பார்வையைத்தரவல்லது இது, மூல நோய், மண்ணீரல் பாதிப்புகள் போக்கும் தன்மை இதற்கு உண்டு.
    பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி என்றும், நாட்டுப் பொன்னாங்கண்ணிஎனவும் இரு வகை உண்டு. வைட்டமின் ஏ செறிந்த இந்தக் கீரை குழந்தைகளுக்குக்கொடுத்து வந்தால் நல்ல பளிச்சென்ற பார்வை கிடைக்கும்.
    பொன்னாங்கண்ணிக் கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சிதலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கிஉடல் குளிர்ச்சிப் பெறும். சத்து மிகுந்த நாட்டுப் பொன்னாங்கண்ணிதான் மருத்துவத்திற்குப் பயன்படுவது, பலன் பல கொடுத்து,பலவித நோய்களையும் தீர்க்கும் இந்த கீரையை பகலில் உண்பதுதான் நலன் தரும்


  4. #1334
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    புரை ஏற என்ன காரணம்?

    அவசர அவசரமாக உணவை விழுங்குவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, உணவு உண்ணும்போது சிரிப்பது, தும்முவது, வேகவேகமாகத் தண்ணீர் குடிப்பது, தண்ணீர் குடித்துக்கொண்டே உணவைச் சாப்பிடுவது,

    உணவுக் குழாய்ப் புற்றுநோய், தொண்டை நரம்பு வாதம் போன்ற காரணங்களால் புரையேறும். குழந்தைகளின் உணவுக் குழாயும் சுவாசக் குழாயும் மிகவும் குறுகிய விட்டம் கொண்டதாக இருப்பதால் பட்டாணி, வேர்க்கடலை, சுண்டல் போன்ற சிறிய உணவுப் பொருள்கள் கூடச் சுவாசக் குழாயை மிக எளிதாக அடைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

    இவற்றை உடனடியாக வெளியேற்றாவிட்டால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு உயிருக்கே ஆபத்து உண்டாகலாம்.

    என்ன செய்ய வேண்டும்?

    • பாதிக்கப்பட்ட நபரை நிற்க வைத்து, முதுகை மட்டும் முன்னோக்கிக் குனியச் சொல்லுங்கள். அவரது இரண்டு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில், உங்கள் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் தொடர்ந்து நான்கைந்து முறை ஓங்கித் தட்டுங்கள். புரையேறிய பொருள் வெளியில் வந்துவிடும்.

    • இதில் அந்தப் பொருள் வெளியேறவில்லையா? அந்த நபரைக் குனியச் சொல்லுங்கள். அவரது பின்புறம் நீங்கள் நின்று கொள்ளுங்கள். உங்கள் இரு கைகளையும் அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, வயிற்றுக்கு முன்பாக இணைத்து, உள்நோக்கியும், மேல்புறமாகவும், வலுவாக அழுத்துங்கள். இப்படி முதுகில் தட்டுவதையும், வயிற்றில் அழுத்தம் கொடுப்பதையும் மாறி மாறிச் செய்யுங்கள். உணவுப் பொருள் வெளியேறிவிடும்.

    • அப்படியும் உணவுப் பொருள் வெளியேறவில்லை என்றால், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு ‘பிராங்காஸ்கோப்' கருவி மூலம் உணவுப்பொருளை மருத்துவர் வெளியே எடுத்துவிடுவார்.


  5. #1335
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.

    FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
    ______________________
    உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

    VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _____________________________
    உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

    LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?
    _______________________
    உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

    COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான். ____________________
    உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

    வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
    __________________________
    உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

    ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
    __________________________________
    உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

    PIZZA பற்றி பார்ப்போம்.
    PIZZA விற்கும் கம்பனிகள்
    "Pizza Hut, Dominos,
    KFC, McDonalds,
    Pizza Corner,
    Papa John’s Pizza,
    California Pizza Kitchen,
    Sal’s Pizza"
    இவை அமெரிக்கன் கம்பனிகள்.
    PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.

    ● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
    E 322 – எருது
    E 422 – ஆல்கஹால்
    E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
    E 471 – எருது & ஆல்கஹால்
    E 476 – ஆல்கஹால்
    E 481 – எருது & கோழி
    E 627 – ஆபத்தான கெமிக்கல்
    E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
    E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
    ● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

    ● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!

    ● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.

    ● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

    E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.


  6. #1336
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உண்ணாவிரதம் எப்படி நமக்கு உதவுகிறது?

    நாம் உண்டவுடன் உணவில் உள்ள அந்த சுகரை ப்ராசஸ் செய்ய உடலுக்கு ஆறு முதல் எட்டு மணிநேரம் பிடிக்கிறது. அதன்பின் நாம் எதையும் உண்ணவில்லை எனில் உடலில் சுகர் இல்லை. இன்சுலின் உற்பத்தி செய்யும் அவசியம் இல்லை. உடலில் இன்சுலின் இருக்கும்வரை உடல் கொழுப்பை எரிக்கும் மோடுக்கு போகாது

    இன்சுலின் சுரக்காமல் நின்றவுடன் உடல் சேமிப்பில் உள்ள (அதாவது தொப்பையில் உள்ள) கொழுப்பை எரித்து க்ளுகோனோஜென்சிஸ் புராசஸ் மூலம் சுகராக மாற்றுகிறது. உணவு இல்லாவிடினும் உடலுக்கு தேவையான எனெர்ஜி இப்படி கிடைக்கிறது.

    ஆக ஆறு அல்லது எட்டுமணிநேரத்துக்கு மேல் நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் தொடர்ந்து உங்கள் உடல் கொழுப்பை எரித்து கொண்டே இருக்கிறது. எதாவது உணவுபொருள் உங்கள் வாயில் போனால் இந்த புராசஸ் நின்று மறுபடி ஆறு- எட்டு மணிநேரம் கழித்து தொடர்கிறது

    ஆக தினம் ஆறு சிறு உணவுகள் அல்லது நாள் முழுக்க இடைவிடாது தின்றுகொண்டே இருப்பது ஆகியவை உங்களை எடையை இழக்கவிடாமல் தடுக்கிறது. பலரும் இரவு ஹெவியாக உண்டுவிட்டு நடுவே எழுந்து கூட ஒரு ஸ்னாக் சாப்பிட்டுவிட்டு காலையில் எழுந்ததும் பாயசத்துடன் (காப்பி) நாளை துவக்குவார்கள். ஆக அவர்கள் உடல் கொழுப்பை எரிக்கும் மோடுக்கு செல்வதே கிடையாது

    ஆய்வு ஒன்றில் ஒரே அளவு காலரிகள் இரு குழு எலிகளுக்கு கொடுக்கப்ட்டது. ஒரு குழு எலிகளுக்கு நாள் முழுக்க உணவு அளிக்காப்ட்டது. ஆனால் தினம் 16 மணிநேரம் விரதம் இருந்த எலிகள் மீதமிருந்த எட்டுமணிநேரத்தில் உண்ணாவிரதம் இருக்காத எலிகள் உண்ட அதே அளவு காலரிகளை உண்டபோதிலும் அவற்றை விட அதிக எடையை இழந்தன. ஆரோக்கியமாகவும்,. சுறுசுறுப்பாகவும் இருந்தன

    காலை உணவு ஒரு நாளின் முக்கிய உணவு என்ற வதந்தியை பரப்பியவை முழுக்க சீரியல் கம்பனிகள் ஸ்பான்சரில் நடந்த ஆய்வுகள்

    உண்னாவிரதம் (முழு, பகுதி) நம் எடையை குறைப்பது மட்டும் அல்ல, விரதம் இருக்கும் சமயம் மூளையின் செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பசியோடிருக்கும் சமயம் தான் இரையை எப்படி தேடுவது என்பதை மனிதன் யோசிப்பது அவசியம். அதனால் இம்மாதிரி சமயங்களில் தான் மனிதனின் மூளையில் புதிய செல்கள் தோன்றுகின்றன.

    உண்ணாவிரதம் நம் உடலின் இன்சுலின் சென்சிட்டிவிட்டையையும் அதிகரிக்கிறது. அதாவது குறைவான இன்சுலினை சுரந்தே அதிக அளவு சுகரை எரிக்கும் சக்தி என வைத்துகொள்வோம்

    மன அழுத்தத்தை தாங்கும் வலிமை, வயதாவதை தடுப்பது ஆகியவற்ரையும் உண்னாவிரதம் அளிக்கிறது
    contd..



  7. #1337
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    அதுபோக

    ஒல்லியாக இருந்து அன்ஃபிட் ஆக இருப்பதை விட குண்டாக இருந்து ஃபிட் ஆக இருப்பவர்கள் ஆரோக்கியமானவர்கள் என தெரிகிறது.

    சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் இவ்வகை ஒல்லிதன்மை மிக ஆபத்தானது. காரணம் இவர்கள் உடலில் கொழுப்பு உள்ளுறுப்புகளில் (இதயம், கிட்னி) படியும். அதே சமயம் சிலர் குண்டாக இருந்தாலும் அவர்கள் உடலில் உள்ல கொழுப்பு முழுக்க தொப்பை, தொடை முதலிய இடங்களில் இருக்கும் (சுமோ வீரர்களை நினைவில் கொள்க). இதனால் ஒபிசிட்டி வருமே ஒழிய உள்ளுறுப்புகள் பாதிக்கபடுதல் முதலான ஆபத்துக்கள் இருப்பதில்லை.

    ஆக டயட் இருந்து தொப்பையை இறக்கினாலும், உடன் உடல்பயிர்சியும் செய்வது அவசியம். உடல்பயிற்சி உங்கள் இதயத்துக்கு, டயட் உங்கள் தொப்பைக்கு என வைத்துகொள்ளுங்கள். என்னதான் பேலியோ, வாரியர் என டயட் இருந்தாலும் அதனுடன் எளிய நடைபயிற்சி போன்றவற்றை சேர்ப்பது மிக, மிக அவசியம். டயட் என்பது 80% உணவு, 20% உடல்பயிற்சி. பிசிகல் பிட்னஸ், உடல்பயிர்சி இல்லாவிடில் என்னதான் சிறப்பான டயட் ஆக இருந்தாலும் அது நம்மை காப்பாற்றாது.

    தினம் 30- 45 நிமிட நடைபயிற்சி மினிமம் வாரம் 3- 4 நாள் செய்யவேண்டும் (அல்லது அதுக்கு சமமான வீட்டுவேலை)

    தினம் குறைந்தது 12- 16 மணிநேரம் உண்ணாவிரதம் இருக்கவேண்டும்.

    உங்கள் உணவு இயற்கையை ஒட்டிய நம் ஜீன்களுக்கு நெருக்கமான பேலியோ உணவாக இருக்கவேண்டும்

    இவையே நம் ஜீன்களுக்கு நெருக்கமான ஆதிமனிதனின் வாழ்க்கைமுறையை ஒட்டிய முறை. இதுவே மருந்துகள், நோய்களில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கும்.


  8. #1338
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ரத்த அழுத்தத்தை குறைக்கும் கத்திரிக்காய்

    கத்திரிக்காய் இல்லாமல் தென்னாட்டு சமையலே இருக்காது என்னும் வகையில் சாம்பார், பொரியல், மசியல் என்று பல உணவு வகைகளில் கத்தரிக்காய் தவறாமல் இடம் பெற்றிருக்கும். உணவாகப் பயன்படும் கத்திரிக்காயின் மருத்துவ குணங்களை மிக விரிவாக நம் முன்னோர்களும் சொல்லியுள்ளனர்.

    கத்திரிக்காய் வலியைப் போக்கும் தன்மையுடையது, காய்ச்சலைப் போக்கக் கூடியது, சோர்வைப் போக்கக் கூடியது, வீக்கத்தைத் தணிக்கக் கூடியது, கொழுப்பைக் குறைக்கக் கூடியது, ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது, ரத்த வட்ட அணுக்கள் சேர்க்கையைத் தடுக்கக் கூடியது, கண்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது.

    மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவல்லது, ஒவ்வாமையால் ஏற்படும் மயக்க நிலையைத் தடுக்க வல்லது, உறுப்புகளைத் தூண்ட வல்லது. 100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உதவுவதோடு ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் இது மிகவும் உதவியாக உள்ளது.

    கத்தரிக்காயின் தோலில் உள்ள " ஆன்த்தோ சயனின்'' என்னும் வேதிப்பொருள் உடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக் கூடியது, அது மட்டுமின்றி "ஆன்தோ சையனின்'' புற்றுநோய் எனப்படும் கேன்சர் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு தடுக்க வல்லது.

    கத்திரி இலைகள் ஆஸ்த்துமா எனப்படும் இறைப்பு நோய், மூச்சுக் குழல் நோய்கள், சுவாச அறைக் கோளாறுகள், வலியுடன் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவற்றுக்கும் மருந்தாகிப் பயன் தருகின்றது. வாயில் எச்சில் சுரக்கவும் இது பயன்படுகிறது. கத்தரிச் செடியின் வேர் மூச்சிறைப்பு மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது.

    வேரின் சாறு காது வலியைப் போக்கப் பயன்படுகிறது. நோய் வாய்ப்பட்டிருக்கும் போது பத்திய உணவில் கத்தரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

    * கத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவும் ஓர் உன்னதமான மருந்தாகும்.
    contd..



  9. #1339
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    * கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து பசியை அடக்கி வைப்பதால் உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. மேலும் இதயத்துக்கு பலத்தைத் தருவதாக அமைகிறது.

    * கத்தரிக்காயை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி மேல் பூச்சாகப் பூசுவதால் ரத்தக் கசிவு குணமாகும்.

    * கத்தரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு மென்மையும், பலமும் தரவல்லது.

    * கத்தரிக்காய் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கவல்லது மட்டுமின்றி சர்க்கரை நோயையும் தடுக்க வல்லது.

    * கத்தரிக்காயை அரைத்து தீநீராக்கி வீக்கமுற்ற கால்களின் மீது தேய்த்துவர நாளடைவில் வீக்கம் குறைந்து விடும்.

    * கத்தரிக்காயைச் சாறு பிழிந்து உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தேய்த்து விட கால்களில் வியர்த்து இடையூறு உண்டாவது தடுக்கப்படும்.

    * பழத்தை வேக வைத்து உள்ளுக்குக் கொடுப்பதால் காளான் சாப்பிட்டு ஏற்பட்ட நச்சு முறிந்து விடும்.

    * கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய பெருங்காயம், பூண்டு, உப்பு, சேர்த்து சூப் செய்து சாப்பிட வயிற்றில் சேர்ந்து துன்பம் தரும் வாயு கலையும்.

    * கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய தேன் சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிட நல்ல தூக்கத்தை உண்டாக்கும் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை அகலும்.

    * கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு வேக வைத்து போதிய சர்க்கரை சேர்த்து சாப்பிட மண்ணீரல் வீக்கத்தைக் குறைக்கும். காய்ச்சலால் ஏற்பட்ட மண்ணீரல் வீக்கம் குறிப்பாக அகலும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிடுவது மிக்க நலம் தரும்.

    * கத்தரிக்காய் அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதயம் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு தவிர்க்கப்படும்.

    * கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் அதிலுள்ள குறைந்த அளவு நிகோட்டின் சத்து புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு துணை செய்யும்.

    * கத்தரிக்காயில் அடங்கியுள்ள சத்துப் பொருட்களின் அழிவைத் தடுப்பதோடு மூளைக்கு பலத்தைத் தந்து ஞாபக சக்தியைத் தூண்டி விடுகின்றது.

    * கத்தரிக்காயில் உள்ள வேதிப்பொருட்கள் உடலில் இரும்புச்சத்து உண்டாவதற்கும் அதனால் ரத்தத்தில் உள்ள முக்கிய பகுதியான ஹீமோகுளோபின் அதிகமாவதற்கும் உதவி செய்கிறது.

    * கத்தரிக்காயில் அடங்கியுள்ள நாசுமின் என்னும் வேதிப் பொருள் ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான இரும்புச் சத்தைக் குறைத்து வெளியயேற்ற உதவுகிறது. இதனால் மாரடைப்பு தவிர்க்கப்டுகிறது. ரத்தத்தில் சேர்ந்துள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதால் இத்தகு பாதுகாப்பு இதயத்துக்கு ஏற்படுகிறது.
    contd..



  10. #1340
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    * கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானத்தை அதிகப்படுத்துவதாகவும் துரிதப்படுத்துவதாகவும் அமைகிறது. இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுகிறது.

    * கத்தரிக்காய் சீரண உறுப்புகளுக்கு பலம் தருவதாலும் மலத்தை வெளியேற்றுவதாலும் மலக்குடலில் ஏற்படும் புற்று நோயைத் தடுப்பதாக அமைகிறது.

    * கத்தரிக்காய் ஓர் நுண்கிருமிகளைத் தடுக்க வல்லதாகவும் தொற்று நோய்களைத் தவிர்க்க வல்லதாகவும் விளங்குகிறது. இதில் அடங்கியுள்ள விட்டமின் சி சத்து இதற்குத் துணையாகிறது.

    * கத்தரிக்காயில் அடங்கியுள்ள விட்டமின்கள், மினரல்கள், அமினோஆசிட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுவதோடு தோல் ஆரோக்கியத்துக்கும் இது துணை செய்கிறது. தோல் மென்மையும் பளபளப்பும் பெற உதவுகிறது.

    * கத்தரிக்காயில் பொதிந்திருக்கும் ஆன்த்தோ சயானின் என்னும் வேதிப்பொருள் வயது முதிர்வைத் தடுத்து இளமைத் தோற்றத்துக்கு வகை செய்கிறது.

    * கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் தோலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுத்து தோல் ஆரோக்கியமாயிருக்க உதவுகிறது.

    * கத்தரிப்பழத்தை ஊசியினால் குத்தித் துளைகள் செய்து நல்லெண்ணெய் இட்டு வறுத்து பல்வலிக்குக் கொடுக்க பல்வலி குணமாகும்.


    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-d52cabca-1638-4d29-a5b8-f4cf1b746c37_s_secvpf.gif.jpg  

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter