Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1341
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்பும் அதற்க்கான தீர்வும்.


    இன்றைக்கு உள்ள இளைய தலைமுறயினர் பத்தில் ஒருவருக்கு ஹைபர் டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. இந்த உயர் ரத்த அழுத்த நோயானது மெள*னமாக இருந்து ஆளை கொள்ளும் ஆபத்தான நோய் என்று மருத்துவ உலகினர் எச்சரிக்கின்றனர். உயர் ரத்த அழுத்தத்தினால் பக்கவாதம், இதயபாதிப்பு, சிறுநீராக கோளாறுகளும் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    உயர் ரத்த அழுத்தம்.

    இன்றைக்கு பெரும்பாலோனோர் சத்தான உணவுகளைத் தவிர்த்து அதிக கொழுப்பு, பல்வேறு ரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் வகைகளை உட்கொள்வதால் உடலில் அதிக கொழுப்பு கூடுகிறது. இதனால் உடல் பருமன் நோய்க்கு ஆளாகின்றனர். மேலும் பெண்களுக்கு ஹார்மோன்கள் மாற்றத்தினால் சோர்வு, நினைவாற்றல் குறைவு, படபடப்பு ஏற்படுகிறது. அதிகமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்பட்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே உடலானது நோய்களின் கூடாரமாக மாறுவதோடு இளம்வயதில் ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட பல நோய்கள் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைகின்றன.

    பாரம்பரிய உணவுகள்.

    உடலில் பிரச்சனைகள் இருக்கும் போது அது மனதையும் பாதித்து ஹார்மோன்களையும் பாதிக்க செய்கிறது. இதனால் டென்ஷன் அதிகரித்து மன அழுத்தத்தில் கொண்டுபோய் விடுகிறது. சிறு வயது முதல் நமது பாரம்பரிய உணவுகளுக்கு முதலிடம் தர வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகள் மற்றும் பருப்பு வகைகள், தானியங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். பச்சைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகளை கலவையாக முளைக் கட்டி சாலட்டாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கிறது. சத்தான உணவுகள் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும். இட்லி, கம்பு, ராகிக் களி, சோள மாவு தோசை, கீரை கலந்து செய்யப்படும் அடை வகைகள் என மூன்று வேளை உணவிலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

    குழந்தைகள் பர்கர், பீட்ஸா மற்றும் ஜங்க் புட் வகைகள் அடிக்கடி சாப்பிடுவதற்கு தடை விதிக்கவும். அதே கார்பனேட் அடங்கிய குளிர்பான வகைகளை தொடர்ந்து குடிக்க கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக இளநீர், பழரசங்கள் சாப்பிட பழக்கப் படுத்தலாம்.
    contd..



    Sponsored Links

  2. #1342
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    நெல்லிக்கனி ஜூஸ்.

    ஹைபர் டென்சன் ஏற்பட்டவர்களுக்கு பூண்டு சிறந்த மருந்தாக உள்ளது. வெறும் வயிற்றில் பூண்டு ஜூஸ் பருகலாம். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கிறது. இதன் மூலம் உயர்ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. தினசரி காலையில் நெல்லிக்கனி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து ஜூஸாக கலந்து பருகலாம். இதனால் உயர்ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

    உயர் ரத்த அழுத்த நோய்க்கு தர்பூசணி சிறந்த மருந்தாக உள்ளது. தினசரி தர்பூசணி பழத்தை சாப்பிடலாம் அல்லது தர்பூசணி பழச் சாறுடன் கசகசா சேர்த்து அரைத்து தினசரி வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

    துளசி, வேப்பிலை.

    துளசி 5 இலைகள் வேப்பிலை 5 சேர்த்து அரைத்து தண்ணீரில் கலந்து பருகவேண்டும். ஒருவாரத்திற்கு தொடர்ந்து இதனை குடித்து வர உயர்ரத்த அழுத்தம் குணமாகும்.


  3. #1343
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சூரிய ஒளியின் பங்கு


    சூரிய ஒளி புகாத வீட்டில் வைத்தியர் அடிக்கடி நுழைய நேரிடும்’ என்ற அனுபவ மொழியே சூரியனுக்கும் மனித ஆரோக்கியத்துக்குமான நெருக்கத்தைப் பளிச் எனப் புரியவைக்கும். உண்மைதான்... பைசா செலவு இல்லாமல், நம் உடல் நலனைப் பாதுகாக்கவும் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் சூரிய ஒளியின் பங்கு முக்கியம்.
    ஆரோக்கிய வாழ்க்கைக்கு சூரிய ஒளியின் பங்கு எவ்வளவு முக்கியம் என்று ஆயுர்வேத மருத்துவர் முருகப்பன் மற்றும் சித்த மருத்துவர் சிவராமன் இருவரும் ஒருமித்துப் பேசினார்கள்.
    ஆயுள் பெருகும்: ஆயுளை அதிகரிக்கச் செய்யும் சத்துக்களில் முதன்மையானது வைட்டமின் டி. நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சத்தில் 90 சதவிகிதம் வரை சூரிய ஒளியில் இருந்தே கிடைக்கிறது. பால், மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களிலும் இந்தச் சத்து அதிக அளவில் உள்ளது. பொதுவாக ரத்தத்தில் ஒரு மி.லி-க்கு 30 நானோ கிராம் வைட்டமின் டி இருக்க வேண்டும். இந்த அளவு குறையும்பட்சத்தில் தசைகள் வலு இழந்து, எலும்புகளும் பாதிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியும் உடல் பலமும் குறைகிறது.

    சூரிய ஒளியில் உள்ள புற ஊதா பி கதிர்கள் உடலின் மீது படும்போது, தோலில் உள்ள கொழுப்பு உருகி ரசாயன மாற்றம் ஏற்பட்டு வைட்டமின் டி ஆக மாறி உடலுக்குள் செல்லும். சித்த மருத்துவத்தில் 'காந்தி சுட்டிகை’ என அழைக்கப்படும் சூரியக் குளியலால் உடலின் ரத்த வெள்ளை அணுக்கள் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும், உணவு செரிமானத் தன்மையை அதிகரித்து வளர்சிதை மாற்றத்துக்கும் துணை புரியும்.
    contd..



  4. #1344
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    டெஸ்டோஸ்டிரான் அதிகரிக்கும்: ஆண் தன்மையைத் தூண்டும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அளவு அதிகரிக்கவும் வைட்டமின் டி தேவைப்படுகிறது. காலை, மாலை இரு வேளைகளும் குறைந்தது அரை மணி நேரம் சூரிய ஒளியில் நின்றாலே, உடலுக்குத் தேவையான 69 சதவிகித டெஸ்டோஸ்டிரான் இயற்கையாகவே கிடைத்துவிடும்.
    விழிப்பு உணர்வு கூடும்: சூரிய உதயத்துக்குப் பிறகு பெரும்பாலான ஹார்மோன் சுரப்புகள் அதிகரிப்பதும் சூரிய அஸ்தமனத்துக்குப் பின் ஹார்மோன் சுரப்புகள் குறைவதும் இயல்பு. இந்தச்சுழற்சிமுறையைத்தான் 'சிர்காடியன் ரிதம்’ என்கிறோம். பெரும்பாலான சித்த மருந்துகளை அந்திசந்திகளில் சாப்பிட சொல்வது இந்தச் சுழற்சியை ஒட்டித்தான். சூரிய உதயத்துக்குப் பிறகு அதிகம் சுரக்கும் 'செரோடனின்’ என்கிற ஹார்மோன்தான் நம்மை எப்போதும் விழிப்பு நிலையில் இருக்கச் செய்கிறது. உடல்மீது வெயில்படுவதால் செரோடனின் அதிகம் சுரந்து, நமது நரம்பு மண்டலம் விழிப்புடன் இருக்கவும் துணை செய்கிறது.
    புற்றுநோயைத் தடுக்கும்: சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் சருமத்தில் உள்ள மெலனின் என்ற நிறமியுடன் இணைந்து புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுகின்றன. எனவே, தினமும் பத்து நிமிடம் உடலில் சூரிய ஒளி படும்படி நின்றாலே, சருமப் புற்றுநோயைத் தவிர்த்துவிட முடியும். மேலும் நுண்ணுயிர்க் கிருமிகள் மற்றும் ஒட்டுண்ணிகளையும் சூரிய ஒளிக்கதிர்கள் அழித்துவிடுகின்றன.
    எலும்புகள் உறுதியாகும்: குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும் பெரியவர்களின் எலும்பு வலுவடைவதற்கும் கால்சியம் தேவை. நாம் சாப்பிடும் உணவில் உள்ள கால்சியத்தைக் கிரகித்து எலும்புக்கு அளிக்கவல்லது வைட்டமின் டி3. இதனால்தான், 'பச்சிளம் குழந்தைகள் மீது காலை வெயில்பட வேண்டும்’ என்று நம் பாட்டிமார்கள் வலியுறுத்துவார்கள். இதனால், எலும்புகளை வலு இழக்கச் செய்யும் ரிக்கட்ஸ் பாதிப்பில் இருந்தும் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும்.
    கழிவுப் பொருட்கள் வெளியேறும்: உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதில் சூரியக் குளியல் சிறந்த முறை. சூரியக் குளியலின்போது பத்து நிமிடங்களிலேயே நன்றாக வியர்க்க ஆரம்பிக்கும். இதனால் தோலின் வழியாக உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறும்.
    காலை வெயில், மாலை வெயில் இரண்டுமே உடலுக்கு ஏற்றதுதான். அதனால், தாராளமாக வெயிலோடு விளையாடுங்கள்!
    சூரிய நமஸ்காரம்!
    பண்டைய காலம் தொட்டே நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வரும் யோகப் பயிற்சி முறைகளில் ஒன்று சூரிய நமஸ்காரம். இதில் கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல் என அனைத்து உள் உறுப்புகளும் மசாஜ் செய்யப்படுகிறது. சூரிய நமஸ்காரம் செய்தால், மலச்சிக்கல் தொந்தரவு அண்டாது. மேலும் வயிற்று உறுப்புகளில் ரத்தம் தேங்குவதும் தவிர்க்கப்படுகிறது. உடல் அசைவும் மூச்சு ஓட்டமும் இணக்கமாக நடைபெறும். நுரையீரலுக்குக் காற்றோட்டமும் தாராளமாகக் கிடைக்கிறது. உடலில் உள்ள எல்லா மூட்டுகளுக்கும் அசைவுகள் கிடைப்பதால் அவை வலுவடையும். மூளை மற்றும் வயிற்றில் உள்ள சுரப்பிகளையும் இது தூண்டும். கழுத்தை முன் பின்னாக வளைப்பதால் தைராய்டு, பாரா தைராய்டு சுரப்பிகளுக்கும் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கும். சருமமும் புத்துணர்வு பெறும்.


  5. #1345
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சமையல் அறையில் மருத்துவ பொருட்கள்

    சுக்கு :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அற்றுஞ் செய்கையும், பசித்தீயை தூண்டும் செய்கையும் உண்டு. இதனால் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், அசீரணம், பேதி, குன்மம், சூலை, வாய்வ முதலியன குணமாகும். சுக்குத்தூளில் திரிகடிப்பிரமாணம் எடுத்து சமன் கற்கண்டு சேர்த்து பாலில் அருந்திவர வாய்வு நீங்கும். சுக்கிற்க்கு உப்பை அரைத்து கவசஞ் செய்து நெருப்பணலில் வாட்டவும். இப்படி 10முறை செய்து இடித்து சூரணித்து வைத்துக்கொண்டு இதில் வேளைக்கு 1/4முதல் 1/2 வராகனெடை வீதம் அருந்தி வர, வயிற்றுவலி, வயிற்றுப்பிசம், அசீரணம், உஷ்ணபேதி, குன்மம், சூலை முதலியன குணமாகும்.


  6. #1346
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மிளகு:- இதற்கு முறைசுர மகற்றி, வாதமகற்றிசெய்கையும் உண்டு. இதனால் குளிர்சுரம், வாய்வு, சுரம், அசீரணம், முதலியன குணமாகும். மிளகை இளம் வறுப்பாக வறுத்திடித்துச் சூரணத்தில் நாலைந்து குன்றினெடை வீதம் சமன் கற்கண்டு தூள் கூட்டிப்பாலில் கொடுத்து வர இருமல், தொண்டை, ரணம், வாய்வு, வயிற்றுவலி, முதலியனகுணமாகும். மிளகைத் தனியாகவாவது அல்லது தும்பைப்பூவுடன் சேர்த்தாவது முறைப்படிகுடிநீரிட்டு கொடுத்து வர குளிர்சுரம், முறைச்சுரம்முதலியன குணமாகும்.




  7. #1347
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    திப்பிலி:- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அற்றல், கபத்தைசமணப்படுத்துதல் சீரணசக்தியை உண்டாக்கல் முதலிய செய்கையு முண்டு. இதனால் இருமல், தொண்டை, கபக்கட்டு, இரைப்பு நோய், அசீரணம், பேதி, முதலியனகுணமாகும். திப்பிலி யை இளம் வறுப்பாக வறுத்தி டித்தச் சூரணத்தில்திரிகடிப்பிரமாணம் தேனுடன் சேர்த்து அருந்திவர இருமல், தொண்டைக்கட்டு, கபம்முதலியன குணமாகும். திப்பிலியுடன் இரண்டு பங்கு சீரகம் சேர்த்து இளம் வறுப்பாகவறுத்தி டித்தச் சூரணத்து தேனில் கொடுத்து வர விக்கல், வாந்தி, அரோசகம், அசீரணபேதி, பசியின்மைமுதலியன குணமாகும்


  8. #1348
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கடுக்காய்:- இது துவர்ப்புச்சுவை யுடையதாக இருப்பினும் மலத்தைப் போக்கும் செய்கையுடையது.இதனால் வாதகப நோய்கள் காமாலை, பெருவயிறு, குன்மம், விரணம்முதலியன குணமாகும். கடுக்காய்த்தோலை குடிநீரிட்டு விரணம், இரத்தமூலம், பெரும்பாடு, வாய், ரணம்முதலிய நோய்களில் அவ்வவ்விடங்களைக் கழுவிவர நல்ல பலனைத் தரும். கடுக்காய்ச் சூரணம்1/2 வராகனெடை அருந்த மலங்கழியும். கடுக்காய் சூரணத்தில்வேளைக்கு 5முதல் 10 குன்றிவீதம் காலைதோறும் தினம் 1 வேளைசாப்பிட்டு வர உந்திரணம், வயிற்றுவலி, மூலம், குன்மம், வாதகப நோய்கள் முதலியன குணமாகும். கற்பமாகவும் பயன்படும்.


  9. #1349
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நெல்லிக்காய்:- பச்சை நெல்லிக் காய்க்கு குளீச்சி யுண்டாக் கும் செய்கையும்உண்டு. இதுவும்மலத்தைப் போக்கும். பச்சை நெல்லிக்காய்ச்சாறுடன் சமன் சர்க்கரை சேர்த்து மணப்பாகுசெய்து 2முதல் 4 தேக்கரண்டிவீதம் அருந்தி வர வாந்தி, அரோசகம், இரத்தபித்தம், நீர்சுருக்குமுதலியன குணமாகும். ஒரு தோலா நெல்லிவற்றலை ஒர் இரவு வெந்நீரில் ஊறவைத்து மறு நாள்காய்ச்சி வடித்து பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டுவர பித்தாதிக்கம், உட்சூடு, முதலியனகுணமாகும்


  10. #1350
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தான்றிக்காய்:- இதற்கு துவர்ப்புச்செய்கையும், கோழைஅகற்றுஞ் செய்கையும்உண்டு. இதுவும் மலத்தைப் போக்கும். இதனால் சுவாசம், காசம், இரத்தபித்தம், கீழ்மேகம், முதலியனகுணமாகும். தான்றிக் காய்த்தோல் 1/4 பலம்எடுத்து சூரணித்துச் சமன் சர்க்கரை சேர்த்து நீரிலாவது அல்லது தேனுடனாவது அருந்திவர உஷ்ண இருமல்,கபக்கட்டு, ரணம், தொண்டை, நீர்சுருக்குபிரமேகம் முதலியன குணமாகும். தான்றிக் காய்த்தோலைக் குடிநீரிட்டு வாய்கொப்பளித்துவர வாய் ரணம், பல்வலி முதலியன குணமாகும். விரணங்களை கழுவிவர விரைவில் ஆறும்.





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter