Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1371
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொண்டைச் சளிக்கு ஓமம் !

    ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் சுமார் 2 - 2 1/2 மணி நேரத்திற்கு மூக்கிலிருந்து நீராக வடிகிறது. தொண்டையில் கபம் கட்டிக் கொள்கிறது. சீரணமும் தாமதமாகிறது. தும்மலுடன் கபம் வெளியேறுகிறது. இது எதனால்? இது மாற என்ன சாப்பிடலாம்?

    சீரகம், பெருஞ்சீரகம், ஓமம், கிராம்பு, ஏலக்காய் விதை இந்த ஐந்தையும், ஒரு தளிர் வெற்றிலையின் நடுநரம்பும், கீழ்ப்பகுதியையும் நீக்கிவிட்டு, அதில் சுருட்டி, ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் வாயில் அடக்கி நன்றாக மென்று சாப்பிடவும்.

    சாப்பாட்டுக்குப் பிறகு, கபம் உற்பத்தியாவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழகொழப்பு, நிலைத்ததன்மை போன்ற குணங்கள் நிறைந்த கபம் எனும் தோஷமானது, உணவிற்குப் பிறகு உங்களுக்குக் கூடுவதால், மூக்கிலிருந்து நீராகவும், தொண்டைக் கபம், தும்மல் போன்ற உபாதைகளைத் தோற்றுவிக்கிறது. மேற்குறிப்பிட்ட ஐந்தும், வெற்றிலையுடன் சேர, இந்தக் குணங்களுக்கு நேர் எதிராகச் செயல்பட்டு, கபத்தைக் குறைக்கின்றன.

    மேலும் இவை அனைத்தும் பசியைத் தூண்டிவிடுவதால் உங்களுடைய செரிமானத்தின் தாமதம் விரைவில் குணமாகிவிடும். இவை மூலம் உட்கொண்ட உணவு செரித்துவிடுவதால் அகம் மலர்கிறது. செரிப்பைத் துண்டுவதாலேயே சீரகத்திற்கு, சீர்அகம் என்று பெயர். சாப்பாட்டுக்குப் பிறகு சீரகம் சாப்பிட்டால் வெகுட்டல், உமட்டல், வயிற்று உப்புசம், உளைச்சல், வயிற்று கனம் முதலிய ஜீரண உபாதைகள் நீங்கும்.

    உண்ட களைப்பு நீங்க, வாயில் நீரூற்று நிற்க 5, 6 சோம்பு விதைகளை மென்று சாப்பிடுவது வழக்கம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நுரைத்த கபத்துடன் காணும் இருமல் முதலியவற்றில் இது நன்கு உதவும். வாசனையுடன் கூடிய கார்ப்பும் இனிப்பும் உள்ள விதை.
    contd..



    Sponsored Links

  2. #1372
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    ஓமம் கபத்தைப் பிரித்து நாட்பட்ட இருமல், மூச்சிரைப்பு, கபம் வெளிவருவதற்காகக் கடுமையாக இருமுவது, இருமி இருமிக் கடைசியில் மிகக் கஷ்டப்பட்டுச் சிறிது கபம் வெளியாவது போன்ற கஷ்டங்களை நீக்கிவிடும். ருசியின்மை, பசி மந்தம், ஜீரண சக்திக் குறைவு, வயிற்று உப்புசம், வயிறு இறுகி கட்டிக் கொள்ளுதல், வயிற்று வலி, கிருமியால் வேதனை போன்றவற்றிற்கு ஓமமும் உப்பும் சேர்த்த சூரணத்தைச் சாப்பிடும் வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் கிராமங்களில் பழக்கத்திலுள்ளது.

    பாவபிராகர் எனும் முனிவர் கிராம்பைப் பற்றி வெகுவாகப் புகழ்கிறார். காரமும் சிறிது கசப்பும் நிறைந்த அது, எளிதில் செரிப்பது. கண்களுக்கு நல்லது, குளிர்ச்சியானதாக இருந்தாலும் ருசி, பசியைத் தூண்டிவிட்டு கப பித்த ரத்த உபாதைகளை அகற்றக் கூடியது; மூச்சிரைப்பு, இருமல், விக்கல், க்ஷயரோகங்களை நீக்கக் கூடியது என்று தெரிவிக்கிறார். தன்வந்தரி நிகண்டுவில் இதயத்திற்கு நல்லதும், பித்தத்தைக் குறைப்பதும், விஷத்தை முறிக்கக்கூடியதும், விந்துவை வளர்ப்பதும், மங்களகரமானதும், தலையைச் சார்ந்த உபாதைகளை நீக்கக் கூடியது என்றும் கிராம்புவைப் பற்றி மேலும் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    ஏலக்காய் ருசி, பசி, ஜீரணச் சக்தி தரும். உடற்சூட்டைப் பாதுகாக்கும். வாயில் நீர் ஊறுதல், நாவறட்சி, வியர்வையுடன் கூடிய தலைவலி, வயிற்றில் கொதிப்பு, மலத்தடை, காற்றுத்தடை, வாந்தி, உமட்டல், சிறுநீர்ச் சுருக்கு, உஷ்ணபேதி, நெஞ்சில் கபக்கட்டு உள்ள போது ஏலத்தின் விதையைச் சுவைக்கலாம்.

    வெற்றிலை, உணவிற்குப் பின் வாயின் சுத்தத்திற்கும் ஜீரணத்திற்கும் உதவும், உமிழ்நீர் சுரப்பைக் கட்டுப்படுத்தும். காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி முன்னும் பின்னும் துடைத்துச் சுத்தமாக்கிப் பின் உபயோகிப்பர்.

    அதனால் இவற்றை உபயோகித்து நீங்கள் விரைவில் கபத்தின் உபாதையிலிருந்தும், மந்தமான பசியிலிருந்தும் விடுபடலாம்


  3. #1373
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஆரோக்கியத்துக்கு அவகேடோ!

    ஆரோக்கியமான உணவு பட்டியலில் அவகேடோவும் ஒன்று. 25க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அவகேடோவில் அடங்கியுள்ளன. இதில் உள்ள சத்துக்கள் நோயின் பிடியிலிருந்து நம்மைக் காக்கின்றன.

    ஹெல்தி ஹார்ட்

    வைட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் ஒலியிக் அமிலம் (oleic acid) ஆகியவை இதயத் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன. மேலும், இந்தச் சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

    குறையும் கொழுப்பின் அளவு

    பீட்டா சிடோஸ்டெரால் (beta sitosterol) அதிகளவில் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இந்தப் பழம் வெகுவாகக் குறைக்கும். ஹைபர்கொலஸ்ட்ரொலெமியா (Hypercholesterolemia) என்ற நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஒருவர், 7 நாட்கள் தொடர்ந்து அவகேடோவை சாப்பிட்டு வந்தால், அந்த நோயின் தாக்கம் 17 சதவிகிதம் வரை குறையும். 22 சதவிகிதம் கெட்டக் கொழுப்பு குறைந்து, 11 சதவிகிதம் நல்ல கொழுப்பு உடலில் சேரும். நல்ல கொழுப்பு நிறைந்திருப்பதால் இன்சுலின் குறைப்பாடும் சரியாகும்.

    ரத்தக் கொதிப்புக்குப் பை பை

    வாழைப் பழத்தில் இருக்கும் பொட்டாஷியத்தை விட அவகேடோவில் 35 சதவிகிதம் அதிகமாகவே உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். மேலும், வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளதால் செரிமானத்துக்கு ஏற்றது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையைச் சமன் செய்கிறது.

    அதிகரிக்கும் பார்வை திறன்

    லுடீன் (lutein) என்ற ஆண்டி ஆக்சிடன்ட், வயதாகிய பிறகும், பார்வை திறன் குறையாமல் தடுக்கிறது. மேலும், கண்களில் ஏற்படும் புரையை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல் அவகேடோவில் உள்ளது.

    கர்ப்பிணிகளுக்கு அருமருந்து

    ஃபோலேட், வைட்டமின் பி6 ஆகிய ஃபோலிக் அமிலங்கள் அவகேடோ பழத்தில் 23 சதவிகிதம் உள்ளது. கர்ப்பிணிகள் இதைச் சாப்பிட்டு வந்தால், பிறக்க போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். வயதானவர்களுக்குப் பக்கவாதம் வராமல் தடுக்கும்.

    புற்றுநோயை தடுக்கும் ஆன்டிஆக்சிடன்ட்

    ஆன்டிஆக்சிடன்ட் இதில் நிறைந்திருப்பதால் ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் புற்றுநோயையும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயையும் தடுக்கிறது. மூப்படைதலை தடுத்து இளமையைத் தக்க வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். செல்களைச் சேதமடையாமல் பாதுகாக்கும்.

    நேசர் மவுத் வாஷ்

    இயற்கையான முறையில் வாயை சுத்தம் செய்வதால் இதனை ‘நேசர் மவுத் வாஷ்’ எனச் சொல்லலாம். குடலை சுத்தம் செய்யும் அதோடு நாக்கின் மேல் உள்ள கிருமிகளை நீக்கி, வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
    contd..



  4. #1374
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    உடல் எடையைக் கூட்டும்

    100 கிராம் பழத்தில் 200 கலோரிகள் உள்ளன. இதனால், உடல் எடையைக் கூட்ட வேண்டும் என நினைப்போருக்கு அவகேடோ ஒரு சிறந்த உணவு. நல்ல கொழுப்பும், சர்க்கரையும் இதில் அதிக அளவில் உள்ளன.

    அழகுக்கும் அவகேடோ

    தொடர்ந்து அவகேடோ சாப்பிட்டு வர, சருமம் பளபளப்பாகும். கூந்தலின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும். முடி உதிர்தல் நிற்கும். கூந்தல் வறட்சி நீங்கும். எரிச்சல், சிவந்து போகுதல், சோரியாசிஸ் போன்ற சரும நோய்கள் குணமாகும்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-avocados.jpg  

  5. #1375
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மூளையை பாதிக்கும் நொறுக்கு தீணிகள்…!

    நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில், நொறுக்கு தீணிகள் அதிகம் சாப்பிடுவதால், மனிதர்களின் மூளை செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் வெறும் 6 நாட்களில் அதிகம் நொறுக்கு தீணிகள் சாப்பிட்ட எலிகளின் மூளை செயல்பாடுகளில் மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எலிகளுக்கு நொறுக்கு தீணிகளும் அதே எண்ணிக்கையிலான எலிகளுக்கு சத்தான உணவும் கொடுக்கப்படு வந்துள்ளது.

    6 நாட்களில் நொறுக்கு தீணி சாப்பிடும் எலிகளின் மூளை செயல்பாடுகள் தாமதமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆராய்ச்சி குழுவினர் கூறுகையில், “ எலிகளின் மூளை செயல்பாடுகளில் வெறும் 6 நாட்களில் தெரிந்த மாறுதல் மனிதர்களின் மூளையிலும் வேகமாக தெரியும் என்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவே என்றாலும், மனிதர்களிம் மூளையும் பாதிக்கப்படும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்” என்றார்.

    அடுத்த கட்டமாக, மனிதர்களின் மூளை செயல்பாடுகளில், நொறுக்கு தீணிகள் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்ற ஆராய்ச்சி நடக்கவுள்ளது.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-img_20131222_162936.jpg  
    kiruthividhya likes this.

  6. #1376
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஹார்ட் அட்டாக் வராமல் தடுத்து, அடைந்த இதய தமனிகளை திறக்க ஒரு எளிய வீட்டு மருந்து


    இரத்தக் குழாய்களை சுத்தம் செய்யும் இந்த சுலப மருந்துக்கு தேவையானவை:
    1 -15 எலுமிச்சை பழங்கள்
    2 -12 முழு பூண்டு
    3 -1kg இயற்கையான தேன்
    4- 400gr வால்நட்/அக்ரூட்
    5 -400gr முளைத்த கோதுமை (மருந்தடிக்கப்படாத (ஆர்கானிக்) கோதுமை )
    எவ்வாறு செய்வது ?
    1 கோதுமையை நன்றாக கழுவி ஒரு கண்ணாடி ஜாடியில் இட்டு சுடு தண்ணீரை ஊற்றவும். பிறகு ஒரு சல்லடை துணியால் மூடி 12 மணி நேரம் வைக்கவும்.
    2 அதற்கு பிறகு, கோதுமையை கழுவி தண்ணீரை வடிக்கவும். ஒரு நாள் கழித்து கோதுமை 1-2mm நீளத்தில் முளைத்திருக்கும்.
    3 பூண்டை தோலுரித்து கொள்ளவும். ஒரு பொடி செய்யும் மிக்ஸியில் (mincing machine) சுத்தம் செய்த பூண்டு, வால்நட், முளைத்த கோதுமை எல்லாம் சேர்த்து அரைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் இடவும்.
    4 5 எலுமிச்சை பழங்களை பேக்கிங் சோடா கலந்த தண்ணீரில் நன்றாக கழுவி, துடைத்து அரைத்து கண்ணாடி பாட்டிலில் இடவும்.
    5 மீதியுள்ள 10 எலுமிச்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து விதைகளை நீக்கி கண்ணாடி பாட்டிலில் சேர்க்கவும்.
    6 மேலே சேர்த்த பொருட்களுடன் தேனையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
    இந்த கலவை உள்ள கண்ணாடி பாட்டிலை மூடியிட்டு பிரிட்ஜில் வைக்கவும். மூன்று நாட்களுக்கு பிறகு இதை எடுத்து உபயோகப்படுத்தலாம்.
    எவ்வாறு சாப்பிடுவது ?
    சாப்பிடுவதற்க்கு 1அரை மணி நேரம் முன்பு 1-2 டேபிள்ஸ்பூன் சாப்பிடவும்.
    இதனால் என்ன நன்மைகள் ?
    நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகின்றது
    இரத்த நாளங்களை சுத்தம் செய்கிறது
    ஹார்ட் அட்டாக்கிலிருந்து பாதுகாப்பு தருகின்றது
    இதய நோய்கள் வராமல் தடுக்கின்றது
    லிவரை சுத்தம் செய்கின்றது
    மூளையின் ஆற்றலை மேம்படுத்துகின்றது.

    Last edited by chan; 3rd Jan 2015 at 03:42 PM.
    kiruthividhya likes this.

  7. #1377
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ரோஜா

    அனைவரும் விரும்பும் ஒரு மலர் ரோஜா. ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் பிரச்சனைகளை நிறுத்தும். மலமிளக்கியாக செயல்படும்.

    ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகையளவு இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும். நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும்.

    ரோஜா மொக்குகளில் ஒரு கைப்பிடியளவு ஆய்ந்து வந்து , அம்மியில் வைத்தோ அல்லது மிக்ஸியில் போட்டோ மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும். இந்த விதமாக மூன்றே நாட்கள் சாப்பிட்டால் சீத பேதி குணமாகும். தேவையானால் மேலும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பூரணமாகக் குணமாகும்.

    பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து தண்ணீலை வடிகட்டி, காலையில் ஒரு டம்ளரும், மாலையில் ஒரு டம்ளரும், குடிக்கவேண்டும் ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும்.




  8. #1378
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பணத்திற்காக நம் பாமரமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.

    ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல
    செயல்படுகிறது. குழந்தைகளின் பிரியா பிஸ்கெட்
    ஆகிவிட்டது ஓரியோ. கடைக்குப் போனால் முதலில் கண்
    தேடுவதும் ஓரியோ பிஸ்கட் ஆகத்தான் இருக்கிறது. அதே பாணியை பயன்படுத்தி பல பிஸ்கெட் நிறுவனங்கள் புதிதாக கிரீம் பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
    ஆனால் ஓரியோ பிஸ்கெட்களை சாப்பிடும்குழந்தைகளின் மூளை கோகைன் போதைப் பொருளை உண்ட உற்சாகத்தை அடைவதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
    கண்டறிந்துள்ளனர்.

    இது தொடர்பாக கனெக்டிகட் கல்லூரியைச் சேர்ந்த
    அறிவியல் ஆய்வாளர்கள் ஓரியோ பிஸ்கெட்டை எலிகளுக்கு சாப்பிடக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.
    அப்போது மூளைச் செல்களில் கோகைன் உட்கொண்டது போன்ற மாற்றம் ஏற்பட்டது. மேலும் ஓரியோ பிஸ்கட்டில் அதிக சர்க்கரையும், அதிக கொழுப்பும் அடங்கியிருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், இது போதைப் பொருளை ஒத்துள்ளது என்று கூறியுள்ளார்.




  9. #1379
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகலையா? கவலைய விடுங்க


    நாம் உட்கொள்ளும் உணவு எப்போதும் நமக்கு ஜீரணமாகும் என கூற முடியாது.

    சில நேரங்களில் அது நமக்கு வயிற்றில் தொல்லைகளையும் ஏற்படுத்தலாம், அதுபோன்ற இன்னல்களை எளிதாக குணப்படுத்தகூடியது தான் குப்பைமேனி.

    இதை யாரும் வளர்ப்பதில்லை என்றாலும் காடுமேட்டில் தானே வளரும் தன்மை உடையது.

    சிறு செடியாக வளரும், இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும்.

    இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும்.

    வசீகரப்படுத்தும் இயல்புடைய இந்த குப்பைமேனி ஒரு மாந்திரீக மூலிகையாகும்.

    குப்பைமேனியின் மகத்துவங்கள்

    இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலைவலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.

    வயற்றில் இருக்கும் குடற்பூச்சிகளை போக்கவல்லது. இதன் வேரை கிராம் 200 மி.லி நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.

    குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.

    குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
    contd..


    kiruthividhya likes this.

  10. #1380
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.

    குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து, அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.

    குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் காணாமல் போகும்.

    குப்பைமேனி இலையை அரைத்து முகத்தில் பூசினால் முகம் அழகு கொடுக்கும்.

    குப்பைமேனி துவையல்

    முதலில் குப்பைமேனி இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

    பிறகு வாணலியில் எண்ணைய் விட்டு கொஞ்சம் கடுகு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    பின்பு நறுக்கிய இலைகளை வாணலியில் போட்டு நன்கு தாளித்து பின்பு சிறிது நீருடன் மிக்சியில் அடித்தால் குப்பைமேனி துவையல் ரெடி.

    பயன்கள்

    இதை சாப்பிட்டு வந்தால் தீராத தலைவலியும், பக்கவாத நோய்களும் பறந்துவிடும்.

    மூல நோயிற்கு இந்த துவையல் ஒரு சிறந்த மருந்து. மேலும் நாளடைவில் மூலம் குறைய வாய்ப்பு உண்டு.

    குப்பைமேனி கஷாயம்

    வாணலியில் குப்பைமேனி இலைச்சாற்றுடன் சம அளவு உப்பைக் கரைத்து வைத்து, சுண்டக் காய்ச்ச வேண்டும்.

    இதில் உப்பு 'பூர்த்து' மிகுந்து விடும். இந்த உப்பை தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.

    இதன் பிறகு குப்பைமேனியில் இருந்து வடிந்த நீருடன் சிறிது மிளகு சேர்த்து கொதிக்க விட்டால் குப்பை மேனி கஷாயம் தயார்.

    பயன்கள்

    இந்த கஷாயத்தை தினசரி இரு வேளை சாப்பிட்டு வந்தால், வாயு மற்றும் அஜீரண கோளாறுகள் நீங்கும்.

    நெஞ்சுக்கோழையை நீக்கும், இருமலைக் கட்டுப்படுத்தும், மேலும் விஷக்கடி போன்ற நோய்களை குணப்படுத்தும்



    kiruthividhya likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter