Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1391
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மணத்தக்காளி கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

    கீரைகளை கடவுள் நமக்கு தந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் கீரைகளில் சத்துக்களானது அதிகம் இருப்பதால் தான், நம் வீட்டில் உள்ள பாட்டிகள் அடிக்கடி வீட்டில் கீரையை சமைக்கச் சொல்வார்கள்.

    மேலும் அக்காலத்தில் நம் முன்னோர்கள் கீரைகளை அதிகம் உட்கொண்டு வந்ததால் தான், அவர்களின் உடல் இன்று வரை மிகவும் வலிமையுடன் உள்ளது.

    அதுமட்டுமின்றி, அவர்களின் உடலை எந்த ஒரு நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை.


    இத்தகைய கீரைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் மணத்தக்காளி கீரை. இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது.

    மேலும் 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரோட்டீன் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புக்கள் 2.1% உள்ளது. இப்போது அந்த மணத்தக்காளி கீரையின் முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றிப் பார்ப்போமா!!!


    வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். ஏனெனில் வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றுப்புண்ணும் இருக்கும்.

    மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

    தொண்டை கரகரப்பு உள்ளவர்களுக்கு இந்த கீரை விரைவில் நிவாரணம் அளிக்கும். எனவே வாரம் இரண்டு முறை இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால், தொண்டை கரகரப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    செரிமான பிரச்சனை உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், செரிமான பிரச்சனையும் நீங்கிவிடும்.

    உடல் வெப்பம் அதிகம் இருந்தால், மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வர, உடல் வெப்பம் தணியும்.
    காசநோய் உள்ளவர்கள் இந்த கீரையின் பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது.

    காய்ச்சல் வந்தால், கை கால் போன்றவை வலி எடுக்கும். இத்தகைய வலியையும், காய்ச்சலையும் போக்க இந்த கீரையை சாப்பிடுவது சிறந்தது.

    சருமத்தில் அலர்ஜி, வெயில் கட்டி போன்றவை இருந்தால், அப்போது மணத்தக்காளியின் சாற்றினை பிரச்சனை உள்ள இடத்தில் தடவினால், விரைவில் குணமாகும்.




    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-solanum-nigrum.jpg  

  2. #1392
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஏலக்காயின் மருத்துவ பயன்கள்!

    ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.

    ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப் பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும், ஜீரணம் அதிகரிக்கும்.

    ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும்.

    ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.

    நான்கு ஏலத்தை கைப்பிடியளவு நாவல் இலைக் கொழுந்துடன் சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் செரியாமை, சீதக்காதி தீரும்.

    ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விலகும்.

    புகைப்பதை நிறுத்த உதவும் ஏலக்காய்

    ஏலக்காய் மணத்திற்கு மட்டுமல்ல மருந்துக்கும் உதவுகிறது. சிகரெட் எரியும்போது கசியும் “நிக்கோட்டின்” நஞ்சு தொண்டை, ஈறு, நாக்குகளில் படியும்போது கறை உண்டாவதுடன், அங்கிருக்கும் பூந்தசைகளை அரித்துப் புண்களை உண்டாக்கும். “ஏலக்காய்” இந்தப் புண்களை ஆற்றுவிப்பதுடன், நிக்கோட்டின் கறைகளையும் படியாமல் அப்புறப்படுத்துகிறது.

    இன்னொரு அரிய பயனும் உள்ளது. சிகரெட் பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம், ஒரு ஏலக்காயினை வாயிலிட்டுச் சுவைக்க, புகைக்கும் எண்ணம் விலகும். இதனைப் பல அன்பர்கள் பின்பற்றி சிலர் புகைப்பதையே விட்டுவிட்டனர்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-elakkai.jpg  

  3. #1393
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தினமும் சிறிது பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

    பாகற்காய் என்றாலே பாதி பேருக்கு முகம் அஷ்ட கோணத்தில் செல்லும்; குறிப்பாக குழந்தைகளுக்கு. அதற்கு காரணம் அதிலுள்ள கசப்புத் தன்மை தான். ஆம், கசப்பு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பாகற்காய் தானே.

    ஆனாலும் கூட அதில் பல மருத்துவ குணங்கள் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்? நம் வயிற்றில் உள்ள புழு பூச்சிகள் சாவதற்கு பாகற்காயை உண்ணச் சொல்லி நம் வீட்டில் பெரியவர்கள் நம்மை வலியுறுத்துவார்கள். நம்மில் பல பேருக்கு அதன் நன்மை அது வரைக்கும் மட்டுமே தெரிந்திருக்கும்.

    சோத்துக் கற்றாழை சாற்றினால் கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள்!!! பாகற்காயில் மருத்துவ குணங்கள் பல உள்ளது, அதனால் தான் என்னவோ அதனை பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர்.

    கசப்பான சுவையை கொண்டு, பார்க்க அசிங்கமாக இருந்தாலும் கூட, ஆரோக்கியமான இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், அது உங்களை பல வகையான நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

    அவை என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? தினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் குடிப்பதற்கான முதன்மையான 8 காரணங்களைப் பற்றி இப்போது பார்க்கலாமா!
    contd..



  4. #1394
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

    இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை, காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்தால் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

    பாகற்காயில் உள்ள மோர்மோர்சிடின் மற்றும் சரடின் என இரண்டு ஆன்டி-ஹைபர் க்ளைசீமிக் பொருட்கள், தசைகளுக்கு இரத்த சர்க்கரையை கொண்டு செல்லும் முக்கிய வேலையை செய்கிறது.

    பாகற்காயின் விதைகளில் பாளிபெப்டைட்-P இண்டுளின் போன்ற ஒன்றை சுரக்க உதவும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்திடும்.

    பசியை அதிகரிக்கும் சரியாக பசிக்கவில்லை என்றால் சரியான ஊட்டமளிப்பு இருக்காது. இதனால் பல விதமான உடல் ரீதியான பிரச்சனைகள் அதிகரிக்கும். அதனால் சீரான முறையில் பாகற்காய் ஜூஸை குடியுங்கள். இதனால் செரிமான அமிலம் சுரப்பதை மேம்படுத்த இது உதவிடும். இதனால் உங்கள் பசியும் அதிகரிக்கும்.

    கணைய புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிடும் தினமும் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், கணைய புற்றுநோய் அணுக்கள் திறம்பட அழியும்.

    அதற்கு காரணம் அதிலுள்ள புற்றுநோய் எதிர்ப்பி பொருட்கள், கணைய புற்றுநோய் அணுக்கள் க்ளுகோசை மெட்டபாலைஸ் செய்வதை தடுக்க செய்யும். இதனால் அணுக்களுக்கு வர வேண்டிய ஆற்றல் திறன்கள் வராமல் அவை அழிந்து விடும்.

    தோல் அழற்சி அறிகுறிகளில் இருந்து நிவாரணம் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் உடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை ஜூஸை கலந்து கொள்ளவும். இந்த பானத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

    இதனை 3-6 மாதம் வரை தொடரவும். அப்படி செய்கையில் அது உங்கள் சரும அழற்சிக்கு எதிராக போராடும். மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து, தோல் அழற்சி இயற்கையாகவே குணமடைய உதவும்.

    கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்தால், கல்லீரல் வலுவடைந்து மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்கும். மேலும் உங்கள் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி புத்துணர்வை பெறும். இதனால் ஈரலின் செயல்பாடு மேம்பட்டு, கல்லீரல் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

    செரிமானத்தை மேம்படுத்தும் பாகற்காய் ஜூஸ் மந்தமான செரிமான அமைப்பை ஊக்குவித்து, செரிமானமின்மைக்கு சிகிச்சை அளிக்கும். அதற்கு முக்கிய காரணமே செரிமானத்திற்கு தேவையான அமிலத்தை சுரக்க அது உதவிடும்.

    இதனால் செரிமானமும் மேம்படும். அதனால் செரிமானம் திறம்பட நடக்க, வாரம் ஒரு முறை, காலையில் பாகற்காய் ஜூஸை குடியுங்கள்.

    கண் பார்வையை மேம்படுத்தும் சீரான முறையில் பாகற்காய் ஜூஸை குடித்து வந்தால், கண் பார்வை சம்பந்தமான பிரச்சனைகள் அண்டாமல் இருக்கும். பாகற்காயில் பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ வளமையாக உள்ளது.

    கண் பார்வை திறம்பட செயல்பட இவைகள் முக்கிய பங்கை வகிக்கிறது. இதுப்போக, பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், விஷத்தன்மையுள்ள அழுத்தத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

    இரத்தத்தை சுத்தப்படுத்தும் பாகற்காய் ஜூஸ் இயற்கையான இரத்தத்தை சுத்திகரிப்பானாக செயல்படுவதால், நச்சுகளை வெளியேற்றி, உடலில் உள்ள இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும். அதனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸை குடியுங்கள். இதனால் இரத்தம் சுத்தமாகி, பருக்கள் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படாது.




    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-02-1420174277-8-bitter-gourd-juice.jpg  

  5. #1395
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பிரட்டில் எது மிகவும் ஆரோக்கியமானது? பல தானிய பிரட்டா அல்லது கோதுமை பிரட்டா

    பசியை உடனடியாக ஆற்றுவதற்கு பல உணவுகள் உள்ளது. அப்படி கிடைக்கும் உடனடி உணவுகளில் முக்கியமான ஒன்று தான் பிரட். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பொருளாக விளங்குகிறது.

    உடல் சுகவீனம் போன்றவைகளுக்கு கூட இதையே மிதமான உணவாக பயன்படுத்தலாம். இப்படி வசதிகளை மட்டும் தான் கொண்டுள்ளதா என்று நீங்கள் கேட்டால் அது தான் இல்லை.

    இதில் பல வித உடல்நல பயன்களும் உள்ளது. இருப்பினும் எதை வைத்து செய்யப்படுகிறதோ அதை பொறுத்து தான் பிரட்டின் ஆரோக்கியம் விளங்கும்.

    மேலும் சந்தையில் இன்று பல்வகையான பிரட்கள் கிடைப்பதால் எது நல்லது, எது கெட்டது என்பதை கண்டுபிடித்து தேர்வு செய்வதே கடினமான ஒன்றாக உள்ளது.

    முழு கோதுமையால் செய்யப்படும் பிரட் மிகவும் ஆரோக்கியமானது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதையும் மீறி பல வித தானியங்களால் செய்யப்பட்ட பிரட்டில் அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் இன்னும் அதிகமாக கிடைக்கிறது. பல வித தானிய பிரட் மற்றும் முழு கோதுமை பிரட் என இரண்டிற்குமே செயற்பாடு குறைவே.

    ஆனால் இரண்டிலுமே இயற்கையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. பல தானிய பிரட் மற்றும் முழு கோதுமை பிரட்டில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பற்றி இப்போது விரிவாக பார்க்கலாமா?

    முழு தானியம் உங்கள் உணவில் முழு தானியங்களை சேர்த்துக் கொள்ள அருமையான வழியாக விளங்குகிறது முழு தானிய பிரட். கம்பு, வாற் கோதுமை, பாப்பரை மற்றும் ஓட்ஸ் போன்ற முழு தானியங்களை பல தானிய பிரட்டில் பொதுவாக காணலாம். முழு தானியங்களை உண்ணுபவர்கள் குறைவான எடையுடன், குறைந்த BMI மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை கொண்டிருப்பார்கள்.

    தானியங்கள் வளமையாக உள்ள உணவை உட்கொள்வதால், இதய குழலிய நோய்கள், சர்க்கரை நோய்கள் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் இடர்பாடுகள் குறையும். மறுபுறம், முழு கோதுமை பிரட் என்றால், மொத்தமே ஒன்று அல்லது இரண்டு முழு தானியங்களால் மட்டுமே செய்யப்பட்டதாகும்.

    நார்ச்சத்து முழு கோதுமை பிரட் மற்றும் பல தானிய பிரட் என இரண்டுமே உங்கள் உணவில் அதிக நார்ச்சத்தை கொண்டு சேர்க்கும். அதற்கு காரணம் கோதுமை தவிடு அல்லது ஓட்ஸ் தவிடு வடிவில் இவையிரண்டுமே கூடுதல் நார்ச்சத்தால் நிறைந்திருக்கிறது.

    ஒரு துண்டு பல தானிய பிரட்டில் 4 கிராம் அளவிலான நார்ச்சத்து உள்ளது. உணவில் நார்ச்சத்து வளமையாக இருந்தால், உங்கள் இரத்த கொதிப்பும் சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்திடவும் நார்ச்சத்து உதவிடும். கூடுதல் நார்ச்சத்திற்கு கம்பு மற்றும் திணை அடங்கிய பிரட்டை உண்ணலாம்.
    contd..



  6. #1396
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி


    க்ளைசீமிக் இன்டெக்ஸ் பல தானிய பிரட்டில் தவிடு உள்ளது. மேலும் அதிலுள்ள நோய் நுண்மம் க்ளைசீமிக் இன்டெக்ஸ் அளவை குறைவாக வைத்திருக்கும். குறைந்த அளவிலான க்ளைசீமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுகள் என்றால் சர்க்கரை நோய், புற்றுநோய் மற்றும் வாதம் ஏற்படுவதற்கான இடர்பாடுகளும் குறைவாக இருக்கும்.

    பல தானிய பிரட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஃபைட்டோ நியூட்ரியன்ட்களும் இருப்பதால் இயக்க உறுப்புகள் பாதிப்பில் இருந்து அணுக்களை பாதுகாக்கும். மறுபுறம் முழு கோதுமை பிரெட்டில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் சற்று அதிகமாகவே இருக்கும். அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது சரிப்பட்டு வராது.

    கலோரி எண்ணிக்கை கலோரி எண்ணிக்கை என வரும் போது பல தானிய பிரட்டிற்கும், முழு கோதுமை பிரட்டிற்கும் ஒன்றும் பெரிய வேறுபாடு இருக்க போவதில்லை. பல தானிய பிரட்டில் உள்ள முக்கால்வாசி கலோரிகள் அதிலுள்ள கார்போஹைட்ரேட் பொருட்களில் இருந்து தான் வருகிறது.

    முழு கோதுமை பிரட்டில் கொலஸ்ட்ரால் கிடையாது. ஆனால் அதிலுள்ள நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்ஸ் கலோரிகளுக்கு வழிவகுக்கும். ஒரு துண்டு பல தானிய பிரட்டில் 69 கலோரிகள் உள்ளது. அதுவே ஒரு துண்டு முழு கோதுமை பிரட்டில் 66 கலோரிகள் உள்ளது.

    டிப்ஸ்

    * பிரட் வாங்கும் போது அதிலுள்ள சேர்வையுறுப்புக்கள் சோதித்து, அதன் லேபிளையும் நன்றாக படியுங்கள். இந்த சேர்வையுறுப்புக்களில் முழு தானியங்கள் பட்டியளிடப்பட்டுள்ளதா என்பதையும் பாருங்கள்.

    * நீங்கள் வாங்கும் பிரட்டில் குறைந்தது 3 கிராம் அளவிலாவது நார்ச்சத்து உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதற்கு காரணம் சந்தையில் கிடைக்கும் பல பிரட்களில் நார்ச்சத்து 1 கிராமிற்கும் குறைவாகவே உள்ளது.

    * நீங்கள் வாங்கும் பிரட்டில் குறைந்த அளவிலாவது முழு தானியங்கள் உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-03-1420260458-5-wheat-bread.jpg  

  7. #1397
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மலட்டுத்தன்மைக்கு ஒரு எளிய வீட்டு மருந்து

    உடலை அழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வசதியுள்ளவர்களும், இல்லாதவர்களும் எவ்வளவோ செலவு செய்து, எங்கெல்லாமோ சென்று, எதையெல்லாமோ செய்கிறார்கள். அதனால் நாளடைவில் உடல் அழகு குறைவதோடு ஆரோக்கியமும் கெட்டுவிடும். ஆனால் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று அரபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
    அத்திப் பழத்தைத் சாப்பிடுவதால் கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது. 2 அத்திப்பழத்தை தினசரி சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும்.
    தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைந்தவர்கள் இரவு நேரத்தில் பால் அருந்தும் போது மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டுவிட்டு படுத்தால் பாலுணர்வு அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்கள் அத்திப்பழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள பொட்டாசியம் உயர்ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
    சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரண்டு வகை உண்டு. அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும், இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
    அத்திப் பழத்தை ஆலிவ் எண்ணெயில் ஊறவைத்து சாப்பிடுவதால் ஏராளமான நோய்களுக்கு மருந்தாகின்றது.
    குணமாகும் நோய்கள்:
    மலட்டுத்தன்மை
    மூலம்
    வயிற்றில் தோன்றும் நோய்கள்
    இரத்தசோகை
    மலச்சிக்கல்
    இரத்தத்தில் மிகுந்த கொழுப்பு
    மூச்சுக்குழாய்/நுரையீரல் அழற்சி
    ஆஸ்த்துமா
    இத்துடன் வயிற்றிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கவும், வயிற்றில் தோன்றும் அல்சருக்கும் நல்ல மருந்தாக திகழ்கிறது.
    contd..


    kiruthividhya likes this.

  8. #1398
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    இப்பொழுது ஆலிவ் எண்ணையுடன் அத்திப்பழ மருந்தை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
    தேவையானவை:
    40 உலர்ந்த அத்திப்பழங்கள்
    1 லிட்டர் ஆலிவ் எண்ணெய்
    செய்முறை:
    ஒரு கண்ணாடி ஜாடியில் அத்திப்பழங்களை இடவும். மேலாக ஆலிவ் எண்ணையை ஊற்றவும். இந்தக் கலவை 40 நாட்கள் ஊறவிட வேண்டும். 40 நாட்கள் ஊறியவுடன் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கு முன் ஒன்று வீதமாக குறைந்தது மூன்று அத்திப்பழங்களை சாப்பிட வேண்டும். இது தீருவதற்க்கு முன்பாக அடுத்த செட்டை தயாராக்கிக் கொள்ளவும். மறக்காமல் கண்ணாடி ஜாடியை வெளிச்சம் இல்லாத குளிர்ந்த இடத்தில் வைக்கவும்
    உலர்ந்த அத்திப்பழங்களில் கால்சியம், செம்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற மினரல்கள் நிறைந்து உள்ளன். பழுத்த அத்திப்பழங்களைக் காட்டிலும் உலர்நத பழங்களில் புரதம், சரக்கரை, மினரல்கள் அதிகமாக உள்ளது.
    புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் அத்திப்பழத்தில் அடங்கியுள்ளன.
    உடல் பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க அத்திப்பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுகிறது.
    அத்திப்பழம் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. தினசரி 2 பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து உடலும் வளர்ச்சி அடையும். கால்சியம் அதிகம் காணப்படுவதால் எலும்புகளை பலப்படுத்துகிறது.
    நீரிழிவு நோயாளிகள் அதிகமாக சிறுநீர் கழிப்பதன் மூலம் ஏற்படும் கால்சியம் இழப்பினை ஈடுசெய்கிறது. கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும். தினமும் இரவு நேரத்தில் 5 அத்திப்பழம் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கலை குணமாகும்.
    வயதானவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்தாகும். தொண்டை எரிச்சலை போக்கும். இருமல், ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது.
    செரிமான கோளாறினால் ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்துகிறது. பித்தத்தைத் தணித்துச் சமப்படுத்துவதில் அத்திப்பழம் தனிச்சிறப்பு வாய்ந்தது
    பதப்படுத்தப்பட்ட அத்திப்பழம் சீமை அத்திப்பழம் எனப்படும். இது வெண்குஷ்டத்தை குணமாக்கும். அரைகிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டால் வெண்புள்ளிகள், வெண்குஷ்டம், தோலின் நிறமாற்றம் போன்றவை குணமடையும்.
    சீமை அத்திப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டு வந்தால் ஒருவருடைய உடல் பலமேறும்



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-10906521_373067976204402_4762257207191033706_n.jpg  
    kiruthividhya likes this.

  9. #1399
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கீரை மருத்துவம்

    விலை மலிவான சாதாரணப் பொருட்களிலும், நிறைய பலன்களைப் பெற முடியும் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு கீரைகள். கீரைகள் தினமும் எடுத்து கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள் முதியோர்கள். சில முக்கிய கீரைகளின் பயன்கள் உங்களுக்காக:
    அரைக்கீரை:
    தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும். பிரசவமான மகளிர்க்கு உடனடி ஊட்டம் அளிக்கும்.
    மணத்தக்காளி:
    வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்குக் கண்கண்ட சஞ்சீவி. மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல் வளம் பெருக்கும். அல்சருக்கு அற்புத மருந்து. வாரம் 2 முறை உண்ணத்தக்கது.
    பசளைக்கீரை:
    மலச்சிக்கலை விரட்டும். ஆண்மையைப் பலப்படுத்தும். குளிர்ச்சி தரும். இக்கீரையை ஆஸ்துமா போன்ற நோயுடையவர்கள் கோடை காலத்தில் மட்டுமே உண்ணவும்.
    வெந்தியக்கீரை:
    வாயுவைக் கண்டிக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பக்கும். புரதம், தாதுக்கள், வைட்டமின் சி இதில் ஏராளம். வாரம் 1 முறை உண்டு வர மூட்டுவலி, இடுப்புப் பிடிப்பு போன்றவை நீங்கும். சிறுநீர் கோளாறு அண்டாது.
    முளைக்கீரை:
    எவ்வயதினரும், தினமும் உண்ணக்கூடியது. நல்ல பசியைத் தூண்டும். காச நோயின் போது வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
    அகத்திக்கீரை:
    வைட்டமின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. விஷங்களை முறிக்கும். கண்பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டும். கிருமிகளைக் கொல்லும். ஆனால், இதனை வயிற்றுக் கோளாறுடையோர், வயோதிகர் உண்ணலாகாது. மாதம் ஒரு முறையே இது உண்ணத்தக்கது.
    கரிசலாங்கண்ணி கீரை:
    வள்ளலாரால் கல்பத்திற்கு இணையாக இது பேசப்படுகிறது. கபம், பித்தவாயுவையும் கண்டிக்கும். மூலநோய், நாட்பட்ட கிராணி இவற்றிற்கு மாமருந்து.


  10. #1400
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வேப்பம் பூ - மருத்துவ பயன்கள்..!
    வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும். வேப்பங்காயை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை வெந்நீரில் கலந்து கொடுக்க மலேரியாக் காய்ச்சல் குணமாகும். வேப்பம்பழ சர்பத்தை குடித்து வந்தால் படிப்படியாக சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
    வேப்பம் பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும். வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.
    3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் சேர்த்து அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும். வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter