Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1401
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நரம்புத் தளர்ச்சி:
    நரம்புத் தளர்ச்சி நோய் சர்வசாதாரணமாக எல்லோருக்கும் ஏற்பட்டு வருகின்றது. மலச்சிக்கல், உறக்கமின்மை, நீரழிவுநோய், பெருந்தீனி, ரத்த அழுத்தம், தவறான வழியில் சக்தியை வீணாக்குதல், குடும்பப்பளு, சத்தான உணவை உட்கொள்ளாமை போன்ற காரணங்களால் நரம்புத் தளர்ச்சி நோய் ஏற்படுகின்றது.
    இதிலிருந்து தப்பிக்க நன்றாக உறங்க வேண்டும். மன அளவிலும் உடல் அளவிலும் உடலைப் பேணிக் காக்க வேண்டும். உறங்குவதற்குமுன் அதிக நீரைப் பருக வேண்டும்.தூங்கும்முன் சூடான பானம் எதுவும் அருந்தக்கூடாது.


    Sponsored Links

  2. #1402
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மறதி தொல்லையா?
    ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.
    சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.



    Last edited by chan; 4th Jan 2015 at 08:00 PM.

  3. #1403
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்!
    நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம். மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம். இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்....
    அருகம்புல் - ரத்த சுத்தி
    இளநீர் - இளமை
    வாழைத்தண்டு - வயிற்றுக்கல், மலச்சிக்கல்
    வெண் பூசணி - அல்சர்
    வல்லாரை - மூளை, நரம்பு வலுபடும்
    வில்வம் - வேர்வையை வெளியேற்றும்
    கொத்தமல்லி - ஜீரண சக்தி
    புதினா - விக்கல், அஜீரணம்
    நெல்லிக்காய் - முடி வளர்ச்சி, அழகு
    துளசி - தொண்டை சளி, சோர்வு
    முடக்கத்தான் - மூட்டு வலி, வாதம்
    தூதுவளை - தும்மல், இருமல்
    கரிசிலாங்கண்ணி - பார்வை திறன் மேம்படும். கல்லீரல் நோய்
    கடுக்காய் - புண்களை ஆற்றும்
    அகத்தி இலை - உடல் உஷ்ணம்
    ஆடாதொடா - ஆஸ்துமா, குரல் வளம்



  4. #1404
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் மந்தாரை இலை..!

    'மந்தாரை உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது' என்று ஒரு சித்தமருத்துவப் பழமொழியே உண்டு. அந்தஅளவுக்கு மருத்துவகுணங்களை கொண்டுள்ளது மந்தாரை. சென்னை போன்ற பெரு நகரங்களில் மந்தாரை இலைகளைச் சேர்த்து ஈக்குகளால் தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள்.
    உணவு சாப்பிடப் பயன்படும் இந்த இரண்டாகப் பிரிந்த இலைகளையும், பலநிற மலர்களையும் உடைய சிறுசெடி வகையாகும். இதில் செந்நிற மலருடையது பெரிதாய் காணப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.
    இலை, பூ, வேர், பட்டை ஆகிய அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. மந்தாரையானது திருக்கானப்பேர் (காளையார்கோயில்), திருத்திலதைப்பதியிலும் தலமரமாக விளங்கிறது.
    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
    இலைகளில் குவார் செட்டின், அஸ்ட்ரா காஸின், ஐசோகுவர்சிட்ரின், காம்ப்ஃபெரால் க்னூக்கோசைடு, அமினோ அமிலங்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் விதைகளில் உள்ளன. ஆந்தோசையனின், நட்டின், அப்பிஜெனின், போன்ற வேதிப்பொருட்களும் தாவரத்தில் உள்ளன.
    ரத்தக்கட்டிகளை குணமாக்கும்
    மலர்கள், மிதமான பேதி மருந்து, உலர்ந்த மொட்டுக்கள், பூச்சிகளை நீக்கும். சீதபேதி மற்றும் மூலவியாதியை குணப்படுத்தும். பட்டை வயிற்றுப்போக்கில் பயன்படும். வேர்ப்பட்டை தயிர் உடன் கலந்து இரத்தக்கட்டிகளை குணப்படுத்த உதவும். அரைத்த வேர்ப்பட்டை சுக்குடன்
    கலந்து குரல்வளை சுரப்பி வீக்கத்துக்கு தடவப்படுகிறது. வேர் அஜீரணத்தைப் போக்கும்.
    மந்தாரைப் பட்டை சதை, நரம்புகளைச் சுருக்கி ரத்தம், சீழ்க்கசிவுகளைக்
    கட்டுப்படுத்தக்கூடியவை, நோய் நீக்கி உடல் தேற்றும் மருந்தாகப் பயன்படுகிறது; உடல் பலம் மிகுக்கும். முடியின் வேர்க்கால்களை உறுதிப்படுத்தி, உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியது மந்தாரை.
    தைராய்டு நோய்க்கு தீர்வு
    தைராக்ஸின் குறைந்தால் உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்த போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத்தன்மை குறைவு, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல்வலி, மனஅழுத்தம், போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதிகமான தைராய்டு சுரந்தால் இதயத்துடிப்பு அதிகமாகும், எடை குறையும். கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்று போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும். காஞ்சனாரம் என்று அழைக்கப்படும் மந்தாரைத் தாவரம் தைராய்டு நோய்களுக்கு மருந்தாகப்பயன்படுகிறது. இதனை மருந்தாக உட்கொள்வதன் மூலம்
    தைராய்டு சுரப்பினை சீராக்குவதோடு, உடல் நலனை சீராக்கும்..
    இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச்
    சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக்
    காய்ச்ச வேண்டும்.
    இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும்.
    சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன்கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும்.
    மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரணத்தால் வரும் பேதி நின்று உடல் நலம் பெறும். முக்கியமாக மந்தாரை கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள்,ஆகியவற்றிக்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரித்து பயன்படுத்தலாம்.
    மந்தாரை இலைகள் வாதநோய், கால்வலி, தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இதயநோய், படபடப்பு, ஆகியவற்றை
    குணப்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது. மேலும் வயிற்றுபோக்கு படுக்கையில் சிறுநீர்கழித்தல், அதிக பித்த நீரால் ஏற்படும் மலேரியா காய்ச்சல், பொடுகு, முடி உதிர்வதை குறைத்தல், மூலநோய் போன்ற அனைத்திற்கும் ஊமத்தையின் இலை பெரிதும் பயன்படுகிறது.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-10891497_757443060990131_5174760264658771348_n.jpg  

  5. #1405
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தலைவலி, வாந்தி பிரச்சனைகளுக்கு மருந்தாகும் ஏலக்காய்

    வாசனைத் திரவியங்களில் அரசி என்று இதைச் சொல்வார்கள். டீயில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனி! உணவின் ருசியை அதிகமாக்கும். செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டும். ஏலக்காயை நசுக்கி, சும்மாவே வாயில் போட்டு மெல்வது சிலருக்குப் பழக்கம்.

    நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து, ஏலக்காயை சும்மா மெல்லுவதாலேயே நிவாரணம் பெறமுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லதல்ல.

    ஏலக்காய்க்கும் மூக்கடைப்பு சிகிச்சைக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஆமாம்! ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏலக்காய் நிவாரணம் தருகிறது.

    நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே திறக்கும். வெயிலில் அதிகம் அலைவதால் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம் உண்டாகும்.

    நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, நன்கு கஷாயமாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால், இந்த மயக்கம், தலைசுற்றல் உடனே நீங்கும். விக்கலை உடனே நிறுத்தும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு.

    இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி, வடிகட்ட வேண்டும்.
    contd..



  6. #1406
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தால், விக்கல் உடனே நின்றுவிடும். மன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், “ஏலக்காய் டீ” குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள்.

    டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து (ஒரு கப் டீக்கு இரண்டு ஏலக்காய் போதுமானது!) டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சீக்கிரமே குறைகிறதாம்!

    வாயுத் தொல்லையால் பொது இடங்களில் அவமானத்தைச் சந்திக்கிறவர்கள், கூச்சமின்றி நாடவேண்டிய மருந்து ஏலக்காய். ஏலக்காயை நன்கு காயவைத்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும்.

    உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாயுத்தொல்லை எப்போதும் இருக்காது. குழந்தைகளுக்கு வாந்தி பிரச்சினை இருந்தால் பயப்படாமல் ஏலக்காயை மருந்தாகத் தரலாம்.

    இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப்பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் தடவுங்கள். இப்படி மூன்று வேளை செய்தால், வாந்தி உடனே நிற்கும்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-17620809-db6d-42a9-80db-7c4741a50909_s_secvpf.gif.jpg  

  7. #1407
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எப்படியெல்லாம் புற்றுநோய் தாக்கும்

    புற்றுநோயைப் பற்றிய முழு விழிப்புணர்வானது அனைவருக்கும் இருப்பது என்பது மிகவும் அவசியம். ஏனெனில் புற்றுநோயை உண்டாக்கும் பல பொருட்கள் மற்றும் செயல்களை தினந்தோறும் மேற்கொள்கிறோம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அவற்றால் கூட புற்றுநோய் ஏற்படும் என்ற அறிவு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    • கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. ஏனெனில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதால், அவை வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

    வேண்டுமெனில், மாத்திரைகளுக்கு பதிலாக வேறு கருத்தடைப் பொருட்களை பயன்படுத்தினால், புற்றுநோய வருவதற்கான வாய்ப்பை தவிர்க்கலாம்.

    • வீட்டில் இருக்கும் பெண்களை விட, நைட் ஷிப்ட் செல்லும் பெண்களுக்கு புற்றுநோய் அதிகம் வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பெண்கள் நைட் ஷிப்ட் செல்வதை தவிர்ப்பது நல்லது.

    • மௌத் வாஷில் எத்தனால் அதிகம் இருப்பதால், அதனைப் பயன்படுத்தினால், அது வாய் புற்றநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்கிறது. ஏனெனில் எத்தனாலானது வாயில் உள்ள திசுக்களை உடைத்து, புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜென்களை வாயில் எளிதில் ஊடுருவ வைக்கும்.

    • பிரா அணிவதாலும் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளதாக, ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகிறார். அதிலும் நாள் முழுவதும் பிரா அணிபவர்களுக்கு தான், மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்.

    ஆகவே தினமும் இரவில் படுக்கும் போது, பிராக்களை அணியாமல் இருந்தால், மார்பக புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.

    • டியோடரண்ட்டில் அலுமினியம் அதிகம் இருப்பதால், அது மார்பக புற்றுநோயுடன் தொடர்புடையதாக புதிய ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

    • வைட்டமின் ஈ அளவுக்கு அதிகமாக உடலினுள் சென்றால், நுரையீரல் புற்றோய் வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் 77,000 மக்களைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், வைட்டமின் ஈ அதிகம் உள்ளோருக்கு புற்றுநோய்த் தாக்கம் அதிகம் இருப்பதாகவும் சொல்கிறது.


  8. #1408
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மாதவிடாய் நிறுத்தத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

    பெண்கள் வெறுப்பது எது என்று கேட்டால் உடனே வரும் மாதவிடாய் காலமே. உடல் ரீதியாக மட்டுமல்லாது, மன ரீதியாகவும் அவர்கள் இந்நேரத்தில் அவதிப்படுகிறார்கள். அதுவும் கடைசி மாதவிடாயான, அது நிற்கும் நேரத்தில் அவர்களுக்கு உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும். கண்டிப்பாக பல பெண்களும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

    இது தவிர்க்க முடியாத இயற்கை செயல்முறை தான் என்றாலும், அதனால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மன உளைச்சலை குறைக்க சில வழிகளை கையாளலாம் அல்லவா? அது எப்படி என்று தானே கேட்கிறீர்கள்? அதற்கு பல வழிகள் உள்ளது. அதில் ஒன்று, மாதவிடாய் நிற்கப் போகும் காலத்தில் நீங்கள் சில வகையான உணவுகளை தவிர்க்க வேண்டியது.

    மாதவிடாய் நிற்கப் போகும் போது சோர்வு, எடை அதிகரிப்பு, மன உளைச்சல், அமைதியின்மை போன்றவைகள் ஏற்படும். இப்படிப்பட்ட நேரத்தில் கேக் அல்லது மதுபானம் போன்றவற்றை உண்ணவோ பருகவோ தோன்றும். ஆனால் அது உங்கள் மாதவிடாய் நிறுத்தத்தை இன்னமும் மோசமடையத் தான் செய்யும்.

    ஏற்கனவே கூறியதைப் போல் மாதவிடாய் நிறுத்தத்தின் போது ஏற்பட போகும் தாக்கத்தை குறைக்க நல்ல உணவு உட்கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடலாம். சர்க்கரை நிறைந்த டெசர்ட் உணவுகளுக்கு பதில் பழங்களை உண்ணுங்கள். கண்டிப்பாக இதனால் உங்கள் மனநிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
    contd..



  9. #1409
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    கொழுப்பு நிறைந்த இறைச்சி மாதவிடாய் நிறுத்தத்தின் போது, பெண்கள் கவனமாக இல்லையென்றால் முதல் இரண்டு வருடங்களில் 3.5 - 5 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். உங்களின் மாதவிடாய் நிறுத்தம் உணவில் கொழுப்பின் அளவு 20%-க்கும் குறைவாகவே இருக்க வேண்டும்.

    உங்களது தினசரி கலோரிகளில் கொழுப்பின் பங்கு 25-35% மட்டுமே இருக்க வேண்டும். மேலும் தினசரி கலோரிகளில் கரைகின்ற கொழுப்புகளின் அளவை 7%-க்கும் குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

    கரைகின்ற கொழுப்பு உங்கள் கொலஸ்ட்ராலை அதிகரித்து, இதய நோய்களுக்கான இடர்பாட்டை அதிகரிக்கும். உங்களுக்கு கொஞ்சம் பரிசோதனை கண்டிப்பாக அவசியம். உதாரணத்திற்கு, மாட்டிறைச்சிக்கு பதில் கிரில் செய்யப்பட்ட கோழி நெஞ்சுக்கறியை உண்ணுங்கள்.

    சர்க்கரை மாதவிடாய் முடிவு காலத்தினால் ஏற்படும் சோர்வு மற்றும் உடல் எடை அதிகரிப்பை எதிர்த்து போராட இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கவும்.

    தினமும் 10 கிராமிற்கு குறைவான அளவிலேயே சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். சின்னதாக ஒரு பிஸ்கட் போன்றவற்றை எல்லாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் பெர்ரி வகையிலான பழங்கள் மற்றும் காய்கறிகளே மாதவிடாய் முடிவு காலத்தின் போது பரிந்துரைகக்ப்படுகிறது.

    சோடியம் உங்கள் உணவில் அளவுக்கு அதிகமாக சோடியம் சேரும் போது இரத்த கொதிப்பு அதிகரிக்கும். அதனால் உப்பு குறைவான, வாட்டிய உணவுகளை உண்ணுங்கள். இவ்வகை உணவுகளில் நைட்ரேட்ஸ் அளவு அதிகமாக இருக்கும். இது புற்று நோயுடன் சம்பந்தப்பட்டதாகும்.

    சுத்தரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்ஸ் வெண்ணிற ரொட்டி, பாஸ்தா, அரிசி சாதம், உருளைக்கிழங்கு, சோளம் போன்ற கார்போஹைட்ரேட்ஸ் அதிகமாக உள்ள உணவினால் கூட மாதவிடாய் முடிவு காலத்தின் பொதுவான அறிகுறிகளான சோர்வும் மன அமைதியின்மையும் ஏற்படும்.

    முழு தானியங்கள் அல்லது உணவின் அளவை குறைத்து கொள்ளுதல் அல்லது கார்போஹைட்ரேட்ஸ் அளவை குறைத்துக் கொள்ளுதல் ஆகியவைகளே இதற்கு மாற்றாகும்.

    காப்ஃபைன் காப்ஃபைன் உங்களை மந்தமாக வைப்பதுடன் சோர்வடையவும் செய்யும். அதற்கு காரணம் உங்களின் தூக்கத்தை காப்ஃபைன் கெடுக்கும்; முக்கியமாக அதனை மதிய நேரத்தில் பருகினால் தான். இதனால் ஏற்படும் மற்றொரு பிரச்சனை - காப்ஃபைனை நாம் தனியாக குடிப்பதில்லை.

    அதனுடன் சேர்த்து சர்க்கரை, நுரை போன்றவற்றை சேர்த்து குடிப்போம். இதனால் உங்கள் ஆரோக்கியம் இன்னும் பாதிக்கப்படும். அதனால் இந்த மாதிரியான நேரத்தில் மூலிகை கலந்த புதினா தேநீர் அல்லது காப்ஃபைன் கலக்காத தேநீரை முயற்சி செய்து பாருங்களேன்.
    contd..


  10. #1410
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    காரசாரமான உணவுகள் காரசாரமான உணவுகளை உட்கொண்டால், ஹாட் ஃப்ளாஷ் இன்னும் மோசமடையத் தான் செய்யும். இல்லையென்றால் உங்களை சுகவீனம் அடையச் செய்யும். காரமான உணவுகளை உண்ணும் போது, உங்கள் உடலின் வெப்பநிலை அதிகரித்து உங்களுக்கு வியர்க்க தொடங்கும்.

    ஹாட் ஃப்ளாஷின் போதும் இதே தான் நடக்கிறது. இருப்பினும் உங்களுக்கு காரமான உணவுகளின் மீது விருப்பம் இருந்தால், அதனை கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் உடலின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை மறந்து விடாதீர்கள்.

    சூடான உணவுகள் நீங்கள் உண்மையிலேயே ஹாட் ஃப்ளாஷால் அவதிப்பட்டு வந்தால், சூடான சூப் போன்ற சூடான உணவு வகைகளை தொடர்ச்சியாக சாப்பிடாதீர்கள்.

    அதனால் உணவருந்தும் முன் சூப்பிற்கு பதிலாக சாலட் போன்றவற்றை உண்ணுங்கள். குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் அல்லது குளிர்ந்த நீரை குடிப்பதால் ஹாட் ஃப்ளாஷ் சற்று குறையும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter