Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


 1. #1411
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  குளிப்பதில்ஏதேனும் கடைபிடிக்க வேண்டிய விஷயம்
  சிரசு (தலை)நீக்கி எப்போதும் குளிக்ககூடாது, ஏனெனில் உடலில் சேரக்கூடிய உஷ்ணம் தலைப்பகுதியில்சேமிக்கப்படுவதால் தேவையின்றி தலைவலி கண் எரிச்சல் போன்றவை ஏற்படும்.
  குளியல் அறைக்குள் சென்று'' ஷவர்க்கு ''அடியில் நின்றுநேராக தண்ணீரைத் தலைக்கு மேல் விழும்படிதான் இன்று எல்லோரும் குறிக்கிறாரகள்.அல்லது பக்கவாட்டில் இருக்கும் தண்ணீரை சிறிய டப்பாவில் அள்ளி நேராக தலையில்ஊற்றிக் கொள்கிறார்கள் .. இந்த செயல் முற்றிலும் தவறானது.
  தண்ணீரை கால் பாதங்களில் இருந்துபடிப்படியாக ஊற்றிக் கொண்டே வரவேண்டும். இறுதியில் தான் தலையை நனைக்க வேண்டும்.அப்பொழுது தான் உடலில் தங்கி இருக்கும் அதிகப்படியான அசுத்த உஷ்ணம் உடலுக்குதீங்கு தராமல் முறையாக வெளியேறும்.
  நமது முன்னோர்கள் ஆற்றில் குளிக்கும் போதுமுதலில் பாதம் மற்றும் கால்கள் என்று படிப்படியாக கழுத்து வ ரை வந்த பின்பு தான்தலை முழுகுவார்கள். இதனால் தான் ஆறில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றுசொல்லியிருக்கின்றார்கள்.
  மிக மிக குளிர்ந்த நீரோ, அல்லது அதிகசூடான நீரோ குளிப்பதற்கு பயன் படுத்தகூடாது.சூடான நீரை குளிக்கப்பயன்படுத்துபவர்கள் தண்ணீரை சூடு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்ற குழப்பத்தில்இருப்பார்கள், அவரவர்களின்சிறுநீரின் வெப்பம் எந்தளவிற்கு இருக்கின்றதோ. அந்த அளவில் தான் குளியலுக்கு பயன்படுத்தும் தண்ணீரின் சூடு இருக்க வேண்டும்.
  குளித்த பின்பு துவட்டக்கூடாது ! உடலின்வெப்பத்தினாலேய தண்ணீர் தானாக உணர வேண்டும். சளி ஜலதோஷம் போன்றவை ஏற்படாது என்றுஇயற்கை வாழ்வியல் விதி கூறுகின்றது. (பறவைகள், விலங்குகள் தண்ணீரில் விழுந்து எழுந்தவுடன்''டவலை ''வைத்து துடைத்துககொள்வதில்லை )
  தனக்கு இருக்கும்''பிஸி ஷெட் யூலில்… ''குளளளிப்பதற்கேநேரமில்லை என்கிற பொழுது, இதில் உடல் தானாககாயிர வரைக்கும் நாள் எப்படி வெயிட் பண்ணமுடியுனு ? நினைக்கிற உங்க ''மைன்ட் வாய்ஸ்''என்னால் நல்லா உணர முடிகிறது இருந்தாலும் வேறு வழியில்லைமகா ஜனங்களே!
  குளிக்கும் பொழுது நாம் பயன் படுத்தும்சோப்பும், சாம்பும் தவறுஎன்று நன்கு தெரிந்திருந்தாலும் , இயந்திர உலகில் இதையெல்லாம் கவுனிக்க நேரமின்றி ஓடிக்கொண்டேஇருக்கிறோம்.
  வியர்வையின் நாற்றத்தையும், உடலின்நாற்றத்தையும் போக்குவதற்கு தான் நாம் முயற்சி செய்கிறோமே தவிர, நாற்றம் ஏன்ஏற்படுகின்றது என்று, எவரும் அறியமுற்படுவதில்லை.
  உடலில் உட்புறம் ஆரோக்கியமாக, சுத்தமாகஇருக்குமானால் வியர்வை நாற்றம், வாய்துர்நாற் ற மோ , சிறுநீரில் நெடி மற்றும் மல நாற்றம் இருப்பதில்லை.
  குறைந்தபட்சமாக நீங்கள் வாங்கும் சோப்பின்மேல் சுற்றப்பட்டிருக்கும் உறையில், அச்சடிக்கபட்டிருக்கும் ''tfm''ன் சதவிகித அளவு, எந்தளவிற்குஅதிகமாக இருக்கின்றதோ எந்தளவிற்கு அது தரமானதாக இருக்கும் . ''tfm என்பது, அந்த சோப்பில்பயன் படுத்தப்பட்டிருக்கும் தாவர கொழுப்பின் அளவைக் குறிக்கிறது. குழந்தைகள்சோப்பில் tfm சதவீதம் அதிகஅளவில் இருப்பதை கவனியுங்கள், அந்த சோப்பில் கண் எரிச்சல் இல்லை என்பதே அதன் தரத்திற்குஉத்திரவாதமாக இருக்கின்றது.
  சீயக்காய் தூள் , பாசிப்பயறு மாவு, பலவிதமானமூலிகைகள் கலந்த குளியல் பொடி போன்றவை விற்பனைக்கு கிடைக்கத்தான் செய்கிறது அதைநாம் சரியாக பயன் படுத்துவதன் மூலம் தான் அதன் நன்்மைகளை முழுமையாக பெறமுடியும்.
  மிகமுக்கியமாக நீங்கள்கவுனிக்கவேண்டியது. சாப்பிட்ட பின்பு குளிக்ககூடாது, ஏனெனில், உடல் முழுவதும் பரவி இருந்த, இரத்த மற்றும் பிரண ஓட்டம் சாப்பிட்டவுடன் வயிற்றுப்பகுதிக்கு வந்து விடுகிறது. குளிப்பதனால் இந்த செயல் அடைபடுகிறது, இதனால் அஜீரணம்ஏற்பட்டு உண்ட உணவு விஷமாக மாறக்கூடிய வாய்ப்பை பெறுகிறது.


  Sponsored Links

 2. #1412
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  நாள் ஒன்றுக்குதண்ணீர் எவ்வளவு குடிக்க வேண்டும் ?

  நீங்கள் உண்ணும் உணவின் தன்மையை பொறுத்துதண்ணீர் குடிக்கும் அளவு மாறுபடுகிறது, அப்படியென்றால், சாதாரணமாக வெறும் கைகளை கழுவுவதற்கு சிறிதளவு தண்ணீர்போதுமானதாக இருக்கிறது.
  மசாலா, எண்ணெய் மற்றும் நெய் நிறைந்த சமையல் உணவை உண்ணும் பொழுது, கைகளில்ஒட்டியிருக்கும் பிசுபசுப்பை நீக்குவதற்கு நிறைய தண்ணீர் தேவைபடுகிறது. இதுபோலவேவயிற்றுக்குள் ஒட்டியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு உடலிற்கு அதிக அளவில்தண்ணீர் தேவைபடுகிறது.
  இதனால் தான மசாலா நிறைந்த உணவு, அல்லது…… இட்லி, தோசை (பசைபோலஒட்டும் தன்மை கொண்ட மாவச் சத்துகள் அதிகமிருக்கும் உணவுகள்) போன்ற உணவு களைபின்பு, தாக உணர்வுஏற்ப்பட்டு கொண்டே இருக்கிறது. நாமும் எனன தான் தண்ணீர் குடித்தாலும் தாகம்அடங்குவதாக இல்லை என்பதை, என்பதை நாம்அனுபவத்தில் நன்கு உணர்ந்து இருக்க முடியும்.
  தண்ணீர் அதிக அளவு அருந்துவது நல்லது எனக்கண்ட நேரத்தில் தேவை இல்லாமல் அதிக அளவு தண்ணீர் பருகி, ஜீரண சக்தியைசிலர் தடைசெய்து கொள்கிறார்கள்.
  உப்பு, பளி நிறைந்த அல்லது ஆயில் மற்றும் நெய் கலந்த உணவுகள்உடலில் அதிக அளவில் கழிவுகளை சேர்க்கிறது , அந்த கழிவுகளை வெளியேற்றுவதற்கு தண்ணீர் தான் அருமருந்தாகசெயல்படுகிறது.
  ஒரு கிராம் உப்பு நமது உடல் விட்டுவெளியேற 70 கிராம் தண்ணீர்தேவைபடுகிறது. மூன்று வேளை உணவில் ஒருவர் 40 கிராம் உப்பை எடுத்துக் கொண்டால் அவர் 2800 மிலி தண்ணீர்அதாவது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  இதனால் தான் தினசரி நாளிதழில், மூன்று லிட்டர்தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்று சொல்கிறார்கள். இதனைத் தான் நம்முன்னோர்கள் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
  இயற்கை தாதுக்கள் நிறைந்த சுவையானஆழ்குழாய் நீர், சுத்தமான ஆற்றுநீர், கிணற்று நீர்போன்றவைதான் ஆற்றலை தருவதாக இருக்கின்றது.
  அதிகாலை எழுந்தவுடன் ஒன்னறை லிட்டர்தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தம் கட்ட வேண்டாம். இயல்பாக உங்களால் முடிந்தஅளவிற்கு இரண்டு அல்லது மூன்று டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். பகல் பொழுதில் தாகஉணர்வு இருந்தால் தண்ணீர் குடிக்க தவறுதல் கூடாது.
  அவ்வாறு தாகத்திற்கு குடிக்கும் நீர்குளிர்ச்சியாகவோ, குளிர் பானமாகவோகண்டிப்பாக இருக்க கூடாது. நீங்கள் பருகும் பல வண்ணங்கள் கொண்ட குளிர்ந்த பானம், சிறுநீராக வெளியேவரும் போது நிறமின்றி சற்று சூடாகவும் வருகிறது என்பதை கவனியுங்கள். வண்ணத்தைநீக்கவும், குளிர்ந்ததிரவத்தை சூடேற்றவும் அதிக அளவு சிறுநீரகம் செயல்பட வேண்டியிருக்கிறது என்பதைஎச்சரிக்கை உணர்வுடன் நினைவில் வையுங்கள்.
  இளநீர், பழச்சாறுகள் (வெள்ளை சீனி, பால், ஐஸ் சேர்காதவை) எடுத்துக் கொள்வதன் மூலமாக தாக உணர்வை நீக்கமுடிவதோடு மட்டுமின்றி, அதிக அளவுதாதுக்கள், விட்டமீன்கள், மினரல்கள், இயல்பாகவே நமதுஉடலுக்கு கிடைக்கிறது.
  உடலின் வெளிப்புறத் தூய்மைக்கும், உட்புறத்தூய்மைக்கும் தண்ணீர் பெரிதும் உதவுகின்றது, தேவைக்கும் அதிகமாக தண்ணீர் குடிப்பதும், தேவையான போதுதண்ணீர்குடிக்காமல்இருப்பதும் உடலுக்கு தீங்கு தான் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
  நெருப்பில் சமைத்த உணவின் மூலமாக ஏற்படும்கழிவுகளை வெளியேற்ற அதிக அளவு தண்ணீர் தேவைபடுகிறது.
  சமைக்காத உணவுகளான பழங்கள், பச்சைகாய்கறிகளில் நீர்த்தன்மை இயல்பாகவே இருப்பதால், இந்த வகை உணவிற்கு அதிக தண்ணீர் தேவைபடுவதில்லை. மேலும்இவ்வகை உணவுகளில் நச்சுக் கழிவுகள் அதிகம் சேர்வதில்லை என்பதால் தண்ணீர் அதிக அளவுகுடிக்க வேண்டிய தேவையுமில்லை.


 3. #1413
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  நன்றாக பசித்தபின்பு தான் சாப்பிட வேண்டும்.

  பசி இல்லாத போது சாப்பிட வேண்டாம். பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்கவும் வேண்டாம்.ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பின்னரே அடுத்த வேளை உணவை சாப்பிட வேண்டும்.
  அவசரம் அவசரமாக சாப்பாட்டை உள்ளே தள்ளக் கூடாது. நிதானமாக, நன்றாக மென்று, ஆற, அமர உட்கார்ந்து சாப்பிட வேண்டும். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று சும்மாவா சொன்னார்கள்?
  சாப்பிடும்போது அதில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். டிவி பார்ப்பதோ, புத்தகங்கள் படிப்பதோ கூடாது. போனில் பேசுவதும் நல்லதில்லை.
  எரிச்சலோ, கோபமோ, இயலாமையோ, குழப்பமோ என உணர்ச்சிக் குவியலாக இருக்கும்போது சாப்பிட வேண்டாம். அது உணவின் ருசியை மறக்கச் செய்யும்.
  இரவு சாப்பிட்டவுடன் படுத்து விடக் கூடாது. சிறிது தூரம் உலாவி விட்டு வரலாம். சாப்பிட்டு ஒரு மணி நேரம் பின்னர் தூங்குவதுதான் நல்லது.
  நல்ல உணவு கிடைக்காமல் உலகம் முழுவதும் பல பட்டினிச் சாவுகள் இன்றளவும் நடக்கிறது. எனவே ஒருபோதும் உணவை வீணாக்காதீர்கள்


 4. #1414
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

  அருகம்புல் பவுடர் : அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
  நெல்லிக்காய் பவுடர் : பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
  கடுக்காய் பவுடர் : குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
  வில்வம் பவுடர் : அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
  அமுக்கலா பவுடர் : தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
  சிறுகுறிஞான் பவுடர்: சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
  நவால் பவுடர் : சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
  வல்லாரை பவுடர் : நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
  தூதுவளை பவுடர் : நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
  துளசி பவுடர் : மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
  ஆவரம்பூ பவுடர் : இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
  கண்டங்கத்திரி பவுடர்: மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
  ரோஜாபூ பவுடர் : இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்


 5. #1415
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  ஓரிதழ் தாமரை பவுடர்: ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல்
  நீங்கும்.
  ஜாதிக்காய் பவுடர்: நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
  திப்பிலி பவுடர்: உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
  வெந்தய பவுடர்: வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
  நிலவாகை பவுடர்: மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
  நாயுருவி பவுடர்: உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
  கறிவேப்பிலை பவுடர்:கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
  வேப்பிலை பவுடர்: குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
  திரிபலா பவுடர்: வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
  அதிமதுரம் பவுடர்: தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
  துத்தி இலை பவுடர்: உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
  செம்பருத்திபூ பவுடர்: அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
  கரிசலாங்கண்ணி பவுடர்: காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
  சிறியாநங்கை பவுடர்: அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
  கீழாநெல்லி பவுடர்: மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
  முடக்கத்தான் பவுடர்: மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
  கோரைகிழங்கு பவுடர்: தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
  குப்பைமேனி பவுடர்: சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
  பொன்னாங்கண்ணி பவுடர்: உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது


 6. #1416
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  முருஙகைவிதை பவுடர்: ஆண்மை சக்தி கூடும்.
  லவங்கபட்டை பவுடர்: கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
  வாதநாராயணன் பவுடர்: பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
  பாகற்காய் பவுட்ர்: குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்
  வாழைத்தண்டு பவுடர்: சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
  மணத்தக்காளி பவுடர்: குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
  சித்தரத்தை பவுடர்: சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
  பொடுதலை பவுடர்: பேன் உதிரும், முடி உதிர்வதை தடுக்கும்.
  சுக்கு பவுடர்: ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
  ஆடாதொடை பவுடர்: சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
  கருஞ்சீரகப்பவுடர்: சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
  வெட்டி வேர் பவுடர்: நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.


 7. #1417
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  வெள்ளருக்கு பவுடர்: இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
  நன்னாரி பவுடர்: உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு
  சிறந்தது.
  நெருஞ்சில் பவுடர்: சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
  பிரசவ சாமான் பவுடர்: பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும்,
  உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
  கஸ்தூரி மஞ்சள் பவுடர்: தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
  பூலாங்கிழங்கு பவுடர்: குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
  வசம்பு பவுடர்: பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
  சோற்று கற்றாலை பவுடர்: உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
  மருதாணி பவுடர்: கை, கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
  கருவேலம்பட்டை பவுடர்:பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்


 8. #1418
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  உணவே மருந்து!
  ஒருவரின் தோற்றம் நன்றாக இருக்க "ஆள் பாதி ஆடை பாதி" என்பார்கள். ஆடை நன்றாக இருந்தால் மட்டும் நல்ல தோற்றம் வந்துவிடாது. இந்தப் பழமொழியின் முதல் பாதியான ஆள் பாதியும் நன்றாக இருந்தால்தான் தோற்றம் நன்றாக இருக்கும். அதற்கு உடல் ஆரோக்கியம் மிக அவசியம்.
  அள்ளி உண்ண நேரமில்லாத இந்த அவசர உலகத்தில் அதீத உடல் எடை, அதிக கலோரிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவின் மூலமே அதிக உடல் எடையைக் குறைக்க முடியும். கலோரிகளின் கணக்கில் உணவே மருந்தாகும் விந்தை எப்படி எனக் காண்போமே.
  கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் உணவுப் பொருட்கள் மூலம் அதிகப்படியான கலோரிகளை உடலில் சேராமல் செய்ய முடியும். நீங்கள் குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிறைந்தாற் போல் இருக்கும். நம்பிக்கை வரவில்லையா? தொடர்ந்து படியுங்கள்.
  நம் உடலில் சுரக்கும் குளூக்கான், இன்சுலின் என்ற இரு ஹார்மோன்களே, உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளை உடல் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன.
  கல்லீரலின் சக்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்வது, இரத்தத்தில் உள்ள சக்கரையை மூளை மற்றும் உடலின் மற்ற பகுதிகள் பயன்படுத்துவது ஆகியவை உடலில் சுரக்கும் குளூக்கான் ஹார்மோனால் தீர்மானிக்கப்படுகிறது. உடல் செல்களில் உள்ள கொழுப்பை சக்தியாக மாற்றுவதும் குளூக்கான்தான். இன்சுலின் நாம் உண்ணும் உணவின் சத்துகளை செல்களில் சேமிக்கச் செய்கிறது. தேவைக்கு அதிகமான சக்கரை அளவு இருப்பின் இன்சுலின் அதை குறைக்கச் சொல்லி கல்லீரலுக்கு செய்தி அனுப்பும்.
  புரோட்டீன் நிறைந்த உணவை உண்கையில் குளூக்கான் சுரக்கப்படுகிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை உண்கையில் இன்சுலின் சுரக்கப்படுகிறது. நார்ச்சத்து இருக்கும் உணவை உண்கையில் இரண்டும் சுரக்கப்படுவதில்லை. கார்போஹைட்ரேட் மட்டும் உண்கையில் இன்சுலினுக்கும் குளூக்கானுக்கும் உள்ள விகிதம் அதிகமாகவும், புரோட்டீன் மட்டும் உண்கையில் விகிதம் குறைவாகவும் உள்ளது.
  புரோட்டீன், கார்போஹைட்ரேட், நார் சத்து ஆகியவை சமமாக உள்ள உணவை உண்பதன் மூலம் குளூக்கான், இன்சுலின் விகிதம் சமமாக இருக்கும்படி செய்து உடல் ஆரோக்கியத்தைப் பேணலாம். அனைத்து சத்துகளும் சமமாக உள்ள உணவின் மூலம் அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து, முறுக்கேறும் சதைப் பகுதிகளைப் பெறலாம்.
  contd.. 9. #1419
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  தொடர்ச்சி


  ​கீழே கொடுக்கப்பட்டிருக்கும் உணவுகளுக்கேற்ப நமது உணவுத் திட்டத்தை அமைத்துக் கொண்டால் அழகான உடல் தோற்றத்தைப் பெறலாம்.
  1. தேங்காய் எண்ணெய் - பலரும் எண்ணுவது போல் தேங்காய் எண்ணையிலுள்ள கொழுப்புச் சத்து கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுவதில்லை.
  2. சாமன் (Salmon) - இந்த வகை மீனிலுள்ள புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள், குளூக்கான் மற்றும் இன்சுலின் விகிதத்தை சமமாக வைத்துக் கொள்ள உதவும்.
  3. முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்.
  4. ஆஸ்பரகஸ் (Asparagus) - நார்ச்சத்து மிக்க இந்த உணவை நீங்கள் வெண்ணையுடன் சேர்த்து உண்ணலாம்.
  5. முட்டைகோஸ் - சூப்புகளில் பயன்படுத்தப்படும் முட்டைகோஸ் மிகச் சிறந்த கொழுப்பைக் குறைக்கும் பொருள்.
  6. கோழிக்கறி - சாலட் போன்றவற்றில் பயன்படுத்தும்போது சரிவிகிதமாகிறது.
  7. பூண்டு - முடிந்த அளவிற்கு தினமும் உணவில் பூண்டைப் பயன்படுத்துவது நலம்.
  8. பீன்ஸ் - நார்ச்சத்து மிக்க பீன்ஸால் குளூக்கானுக்கும் இன்சுலினுக்கும் உள்ள விகிதம் சரிசெய்யப்படுகிறது.
  9. மீன் எண்ணை - வைட்டமின் A மற்றும் D நிறைந்த உணவு.
  10. கீரைகள் - தினமும் ஒரு வகைக் கீரையை சாப்பிடுவது உடலுக்கு நலம் சேர்க்கும்.
  11. வெண்ணைய் - புதிதாகத் தயாரிக்கப்பட்ட வெண்ணையை அளவாக பயன்படுத்தலாம். நாட்பட்ட வெண்ணையில் கொழுப்புச் சத்து அதிகம்.
  12. முட்டை - புரோட்டீன், கார்போஹைரேட் போன்ற அனைத்துச் சத்துகளும் நிறைந்து.
  "உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்" என்ற திருமூலர் வாக்கிற்கேற்ப, சத்தான உணவை சரியான நேரத்தில் உண்டு, அதிக வாழ்நாளையும் அழகான தோற்றத்தையும் பெறுங்கள்


 10. #1420
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  நடைபயிற்ச்சியின்அவசியம் என்ன ?

  உண்மையில் உடற்பயிற்சியின் அரசன்நடைபயிற்ச்சி ஆகும். உங்களுக்கு உடல் ஆரோக்கியம் இயல்பாகவே வேண்டுமென்றால், அது மூன்று மைல்தொலைவிற்கு அப்பால் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை நீங்கள்விலைகொடுத்து வாங்க வேண்டுமென்றால் உங்களிடம் இருக்கும் பணம் அதற்கு உதவாது, கால்களால்செல்வதால் மட்டுமே முடியும். என்று மகாத்மா காந்தியடிகள் கூறியிருக்கிறார்கள்.
  உலகில் காணப்படும் உயிரினங்களில்மனிதர்களும், விலங்குகளும், பறவைகளும் தனதுசொந்த முயற்சியால் மட்டுமே, அதாவது நடப்பது, ஓடுவது, மற்றும் பறப்பதுமூலமாகத்தான் ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயரவேண்டும் என்பதுதான் இயற்கை விதித்த நியதி. விலங்குகளும், பறவைகளும் இயற்கையின் நியதிக்களுக்கு உட்பட்டு தான்இருந்தும் வாழ்ந்தும் வருகின்றன, என்றாலும்,
  மனிதன் மட்டுமே அவசரமான இந்தகாலக்கட்டத்தில் நடப்பதற்கு நேரமில்லாமல் ஆகிவிட்டது நாகரீகம் மற்றும் அறிவியல்வளர்ச்சிக்கு ஏற்ப வாகன வசதிகளையும், வாகனத்தின் வேகத்தையும் பெருக்கி ் கொண்டான் . மரணத்தைவிபத்துகள் மூலமாகவும் சந்திக்க தொடங்கினான்.
  நீரிழிவு நோய் என்ற ஒன்று தனக்கு வந்தபின்பு தான் உயிர் மேல் பயம் கொண்டு நடைபயிற்ச்சியின் அவசியத்தை மனிதன்உணர்கின்றான் . மருத்துவர் சொல்லி விட்டாரே என்ற கடமைக்காக சிலர் நடைபயிற்ச்சியைமேற்கொள்ளும் போது தனது சொந்தக்கதைகளும், சோகக்கதைகளும், டீ வி மெகா சீரியல் கதைகளும் விவதம் செய்தபடி நடந்துசெல்கிறார்கள். இசைகேட்டபடியும் நொறுக்கு தீனிகளை தின்று கொண்டும் நடந்துசெல்கிறார்கள். சிலர் வீட்டுக்குள்ளேயே ஒரு இயந்திரத்தின் மீது ஏறி நின்று, நின்ற இடத்திலேயேவேகமாக நடந்து கொண்டு இருக்கிறார்கள்.
  மொத்தத்தில் ஏதோ ஒரு கட்டாயத்திற்காகவோஅல்லது நிர்பந்தத்தின் காரணமாகவோ நடைபயிற்ச்சியை மேற்கொண்டு அன்றைய கடமை முடிந்ததுஎன்று திருப்திபட்டுக் கொள்கிறார்கள்.
  ஒருவர் சாதாரணமாக நடந்து சென்றால்கூட எதிரில்வருபவர், என்ன உங்களுக்குசுகர் வந்திடுச்சா ? என்று கேட்கும்அகல்நிலையில் தான் இன்றைய நடைபயிற்ச்சி இருந்து கொண்டு இருக்கிறது.
  நல்ல காற்றோட்டமான, போக்குவரத்துவாகனங்களின் புகை அதிகம் இல்லாத இயல்பாகவே மனதிற்குத் அமைதிதரும் அதிகாலை அல்லதுமாலை வேளைகளில், வேறு எந்தவிதமானசிந்தனையும் இன்றி கை, கால்களை நன்றாகவீசி நடக்க வேண்டும்.
  ஏனெனில், கை, மற்றும்கால்களின் அசைவு களின் மூலமாகத்தான் மூளையின் பணியும், நாளமில்லாச்சுரப்பிகளின் செயலும் புத்துணர்வு அடைகின்றது , பொதுவாக நமது உடலில் ஆரோக்கியமான வளர்ச்சி என்பதுகைகால்களின் அசைவுக்கு ஏற்ப சீராக இருக்கின்றன. உங்களால் முடிந்த அளவிற்கு அதிகசிரத்தை இல்லாமல் சீரான சுவாசத்தோடு நடைபயிற்ச்சி மேற்கொள்ள வேண்டும். என்னசெய்கின்றோம் என்ற உணர்வோடு, எந்த ஒரு செயலையும் செய்யும் போது மட்டுமே, அதற்கானமுழுப்பலனையும் திருப்தியாகவும் முழுமையாகவும் பெறமுடியும்.
  நடைபயிற்ச்சி முடிந்த பின்பும் நமது உடல்சுறுசுறுப்பாக இருப்பதை உணர வேண்டும் வேண்டும். மாறாக சோர்வாக இருப்பது போல்உணர்ந்தால், நடையின் வேகத்தைகுறைக்க வேண்டும். உடல் சோர்ந்து போகும் வண்ணம் அதிக வேகத்தில் நடந்தால்''கொழுப்பு''கரைவதற்கு பதிலாக, நமதுதசைநார்களில் உள்ள சர்க்கரை சத்து கரைந்து போவதால் உடம்பு இளைக்காமல் அசதி மட்டும்தான் மிஞ்சும் என்பதை மறக்க கூடாது.
  அதிக தூரம் நடந்தாலோ, அல்லது வேகமாகநடந்தாலோ மூட்டு தேய்ந்து விடும் என்று சிலர் நம்புகிறார்கள், குதிரைகள், மான்கள் போன்றவிலங்குகள் ஓடுகின்ற வேகமும், தூரமும் கொஞ்சமாகவா இருக்கின்றது. அதற்கெல்லாம் மூட்டுஎலும்புகள் தேய்ந்தா போகின்றது. இந்த விலங்குகளைவிட நாம் ஒன்றும் வேகமாகவோ, தூரமாகவோஓடப்போவதில்லை என்று கவனத்தில் வையுங்கள்.
  அன்றாட வாழ்க்கையில் சிறு சிறு பணிகளைசெய்வதற்கு நடத்தே செல்லுங்கள், அதற்கான வாய்ப்புகளையும், சூழலையும் நீங்கள் தான் ஏற்ப்படுத்திக் கொள்ள வேண்டும், லிப்ட்களைபயன்படுத்தாமல் படியில் ஏறியே செல்ல முயலுங்கள், இதனால் இரத்தம் ஓட்டம் சீரடைவதோடு மட்டுமின்றி, நரம்புமண்டலங்கள் மற்றும் எலும்புகளின் இணைப்பு பகுதி வலுவடைந்தது புத்துணர்ச்சிஅடைகின்றது


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter