Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


 1. #1421
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய இஞ்சி ஒத்தடம்

  சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !

  இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர...்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
  இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.
  கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.
  இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.
  மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.
  மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்.
  contd..  Sponsored Links

 2. #1422
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  தொடர்ச்சி

  அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.
  எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார்,
  தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார்.
  மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.
  இஞ்சி ஒத்தடம்:
  =============
  இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
  1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.
  2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.
  4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
  துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.
  5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.
  6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.
  7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.
  8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.
  9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.
  பாதத்தின் நான்காம் விரல்:
  நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.
  contd.. 3. #1423
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  தொடர்ச்சி

  உணவு முறை
  ============
  சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
  சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.
  பொட்டாசியம், பாஸ்பரஸ்:
  =======================
  உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.
  புரதங்கள் (ப்ரோடீன்):
  =================
  புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.
  நீர்:
  ==
  நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.
  சேர்த்து கொள்ள வேண்டியவை
  ஒமம்:
  =====
  ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.
  புளி:
  ====
  புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
  மஞ்சள்:
  =======
  மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.
  காய்கறிகள்:
  ==========
  பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.
  பழங்கள்:
  =======
  ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்
  தவிர்க்க வேண்டியவை
  *********************************
  காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
  பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்
  இந்த மருத்துவத்தின் செயல்முறை காணொளியை கீழ்காணும் லிங்கில் காணலாம் ...
  http://www.youtube.com/watch?v=ymsg0kS-0pQ
  இவ்வியாதியால் பலரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள் , பணம் பிரச்சினையால் சரியாக மருத்துவமும் பார்க்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் .. எனவே இந்த தகவலை பலருக்கும் தயவு செய்து Share செய்ய தகவலாகவோ செய்து உதவுமாறு மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ..


  Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-kidney.jpg  

 4. #1424
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  மன ஒருமைப்பாடு கிடைக்க சாப்பிடும் முறை

  உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
  காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
  அளவிற்கு அதிகமாக உணவு உண்டால் நோய்வரும், ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க, மூச்சு முட்ட உண்ணக் கூடாது.
  பசிக்கும் போது தான், சாப்பிட வேண்டும்.
  உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, டி.வி பார்க்கக்கூடாது.
  இடது கையை கீழே ஊன்றக் கூடாது.
  வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.
  காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.
  சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
  உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
  இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
  சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது.
  அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.
  சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.
  இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.
  ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.
  எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.
  வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.
  புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.
  வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.
  சாப்பிட்ட தட்டுக்களை வைத்து, சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.
  இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.
  உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.
  அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அபசகாரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.
  உணவில் சேர்க்க வேண்டிய சில :
  மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.
  உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல், குளிர்ச்சியை தருகிறது.
  வெந்தயம், உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால், உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.
  கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.
  இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை  Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-gr_box.jpg   Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-10885051_819623871466407_8089560150597921628_n.jpg  
  Last edited by chan; 6th Jan 2015 at 04:29 PM.

 5. #1425
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  நீரிழிவை கட்டுக்குள் வைக்க என்ன சாப்பிடலாம்?

  இந்த மக்கள் தொகையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நோய்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது.

  மக்களை அவதியுறவைக்கும் நோய்களில் சர்க்கரை நோயும், இரத்த அழுத்த நோயும் தான் முதலிடம் வகிக்கிறது. இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக மக்களை ஆட்டிப் படைக்கின்றன.

  இன்று 63 சதவிகிதமாக உள்ள நீரிழிவு நோயாளியின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நம் உணவு முறையே.

  மேலும் நகர வாழ்க்கையின் தாக்கமும் ஒரு காரணம். போதிய உடற் பயிற்சியின்மை என பல பாதிப்புகளின் வெளிப்பாடே நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது.

  நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே.முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

  காய்கறிகள்

  கத்தரி பிஞ்சு, சுரைக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, காளி பிளவர், வெண்பூசணி, பாகற்காய், வாழைப்பூ, காராமணி, கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழை பிஞ்சு, நூல்கோல், முருங்கைக் காய், வெள்ளரிக்காய், சௌசௌ இவைகளுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து பச்சடியாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம்.

  கீரைகள்

  சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு. கறிவேப்பிலை, தூதுவளைக் கீரை, ஆரைக்கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரைக் கீரை, கொத்தமல்லிக் கீரை இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

  உகந்த பழங்கள்

  சாத்துக்குடி 1, ஆரஞ்சு 2, ஆப்பிள் (தோலுடன்) 1, கொய்யா (சிறியது) 2, பேரிக்காய் (சிறியது) 2, வெள்ளரிக்காய் 2, அன்னாசிப்பழம் 4 வளையங்கள், தர்பூசணி 1 துண்டு, மேல் சொன்ன பழங்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுள்ள அளவுகளில் தினமும் உண்ணலாம்.

  உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பசி அல்லது தாகம் எடுத்தால் வெள்ளரி, அரிசிப்பொரி, மோர் (கறிவேப்பிலை, கொத்தமல்லி சீரகம் கலந்தது), கோதுமை உப்புமா, அவித்த சுண்டல், சிறுபயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.

  எலுமிச்சை சாறு 200 மி.லி., வாழைத்தண்டு சூப் 200 மி.லி., அருகம்புல் சூப் 200 மி.லி., நெல்லிக்காய் சாறு 100 மி.லி கொத்தமல்லி சூப் 100 மி.லி. , கறிவேப்பிலை சூப் 100 மி.லி.

  இவற்றில் ஏதாவது ஒன்றை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது. எண்ணெயில் வறுக்கப்பட்ட அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

  முட்டை 1 (வெள்ளைக் கரு மட்டும்) மீன் 2 துண்டுகள் கோழிக்கறி 100 கிராம் (அவித்தது) மேற்கண்ட உணவுகளை முறையாக சாப்பிட்டும் தினமும் உடற்பயிற்சியும், நடைபயிற்சியும், செய்து வந்தால் சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்  Lakschellam likes this.

 6. #1426
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  ஒரு லிட்டர் தண்ணீரில் குணமாகும் ஓராயிரம் நோய்கள்

  மனித வாழ்கையில் நீர் ஒரு முக்கிய பங்கு. நாம் தினமும் அருந்தும் நீரில் சிறிதளவு மூலிகைகளை சேர்த்து குடித்துவந்தால் பல வகை நோய்கள் குணமடையும்.
  ஒரு லிட்டர் தண்ணீரில் கையளவு ஆவரம்பூவை போட்டு சூடாக்கி வடிகட்டி குடித்துவந்தால் கை, கால் பாதங்களில் சேற்றுப்புண், நகச்சொத்தை, உடல் அரிப்பு போன்றவை குணமாகும்.
  ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிக்கட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி, அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.
  ஒருலிட்டர் தண்ணீரில் அரைதேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு,வயிற்று உப்புசம், உடல்சூடு தணியும்.
  ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது சுக்கு,மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை,முகத்தில் ஏற்படும் கருவளையம்,தொண்டைக்கட்டு குணமாகும்.
  ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காயை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
  ஒருலிட்டர் தண்ணீரில் நாவப்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சக்கரை குறையும்.
  ஒருலிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊறவைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வுபிடிப்பு, ஏப்பம், மூட்டுவலி குணப்படும்.
  ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து வடிகட்டி அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிகதாகம் அடங்கும்.
  ஒருலிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள நாள்ப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.
  ஒருலிட்டர் என்பது ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையும் இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும் மிகவும் நல்லது. ஒருமுறை தயாரித்த நீரை அதிகப்பட்சம் 9 மணிநேரம் வரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம்
 7. #1427
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  நீண்ட நாள் தலைவலியா... மூளையில் கட்டி இருக்கலாம்

  நீண்டநாள் தலைவலிக்கு ஆளாகுபவர்கள் அதற்குரிய சிறப்பு சிகிச்சைக்குரிய டாக்டர்களை பார்ப்பது அவசியம். ஏனென்றால் சிலருக்கு மூளையில் கட்டி மெதுவாக வளரும்.

  சிலருக்கு வேகமாக வளரும். சிலருக்கு மூளையில் ரத்தம் கொஞ்சமாகவோ, அதிகமாகவோ கசியும். அதை கண்டறிந்து உரிய சிகிச்சை எடுக்க வேண்டும்.

  இல்லாவிட்டால் வாந்தி, கை கால் வலிப்பு, நன்றாக இருக்கும்போதே மாறி, மாறி பேசுவது, மயக்கம் அடைதல் ஏற்படும். இவற்றில் ஒன்றோ, சிலதோ, அனைத்துமோ ஏற்படும். அத்தகைய பாதிப்பிற்கு ஆளாகாமல் இருக்க உடனடியாக ஸ்கேன் மூலம் பரிசோதனை மேற்கொண்டு அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டும். ரத்தக்கசிவை நிறுத்த வேண்டும்.

  உடம்பின் வெளிப்பகுதியில் கட்டி ஏற்பட்டால் அதனால் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. மூளைக்குள் ஏற்படும் கட்டி வளரும்போது அது வளர்வதற்கு இடமில்லாமல் உள்நோக்கியே வளரும், அத்தகைய கட்டி மூளையை நெருக்குவதால் மூளையின் செயல்திறன் தடைபடும்.

  உடல் இயக்கத்தின் ஆதாரமான மூளை பாதிக்கும்போது, உடல் செயல்பாட்டிற்கு கேடு ஏற்படும். மூளையில் கட்டியோ, ரத்தக்கசிவோ இருப்பது கண்டறியப்பட்டால் கவனம் தேவை.

  ரத்த கொதிப்பு உள்ளவர்கள், சிகரெட் பிடிப்பவர்கள், உடம்பில் கொழுப்பு அதிகமுள்ளவர்கள் ஆகியோருக்கு ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

  ரத்தக்குழாயில் ஏற்படும் அழுத்தத்தால் ரத்தக்குழாய் பலூன் மாதிரி உப்பி வெடிக்கலாம். அதனால் கூட தலைவலியும், மயக்கமும் ஏற்படலாம். அவர்கள் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

  இது தவிர தற்போது இருசக்கரத்தில் வேகமாக செல்லும்போது விபத்திற்குள்ளாவது, ஹெல்மெட் போடாததால் தலை பாதிப்புக்குள்ளாவது, வீட்டிலோ, வெளியிலோ கீழே விழுந்து தலை காயம் ஏற்படுவது, யாராவது தாக்குவதன் மூலம் தலையில் காயம் ஏற்படுவது ஆகியவற்றாலும் சிலருக்கு தலைவலி, மயக்கம் அல்லது சில நிமிடங்கள் அவ்வப்போது மயக்கம், வாந்தி, தலை சுற்றல் ஆகியவை ஏற்படும். அதுவும் ரத்தக்கசிவு காரணமாக இருக்கலாம்.

  இத்தகைய சூழ்நிலைக்கு ஆளாகுபவர்கள் உடனடியாக ஸ்கேன் செய்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சிலருக்கு விபத்து, கீழே விழுதல், தாக்குதல் காரணமாக உடனடியாக எந்த வித பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும் 2 அல்லது 3 மாதத்திற்கு பிறகு ரத்தக்கசிவோ, கட்டியோ ஏற்படும்.

  அப்போது ஏற்படும் அறிகுறிகளை உணர்ந்து தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை பரிசோதனை மூலம் உறுதி செய்து ஆபரேஷன் மூலம் குணப்படுத்த வேண்டிய நிலை வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

  Lakschellam likes this.

 8. #1428
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  நீண்ட கால சோர்வு : இந்த நோயை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்

  ‘நீண்ட கால தொடர் சோர்வு’ என்பது எந்த வேலை செய்யாவிடினும், நல்ல ஓய்விற்குப் பின்னும் நீங்காது ஆறு மாத காலத்திற்கு மேல் தொடர்ந்து இருப்பதாகும். இதற்கு வேறு காரணங்களும் இருந்திருக்காது. இதன் அறிகுறிகள்:

  * சிறிது வேலையும் செய்ய முடியாமை

  * உடல் வலி

  * தொண்டை பாதிப்பு

  * தலைவலி

  * எதிலும் கவனம் செலுத்த முடியாமை

  * ஜீரணக் கோளாறு

  * நெறி கட்டியிருத்தல்

  * நுரையீரல், இருதய பிரச்சினைகள் பொதுவில் சோர்வு என்பது சாதாரண சளி, ஜுரத்திலிருந்து பெரிய பாதிப்பு வரை ஏற்படுவதுதான். ஆனால், தொடர் சோர்வு எந்தவித உறுப்பின் பாதிப்பு காரணமும் இல்லாமல் இருக்கும்.

  ஆரம்பத்தில் ‘ப்ளூ’ ஜுரம் போல் சில அறிகுறி இருந்தாலும், அநேகருக்கு தொடர் மன உளைச்சலும் ஒரு முக்கிய காரணம் ஆகின்றது. இவர்கள்

  * உட்காரும்போது கூட தொய்வாக உட்காருவார்கள்.

  * அடிக்கடி மயங்கி விழுவார்கள்.

  * அடிக்கடி உடல் சில்லிப்பது போல் இருக்கும்.

  * இரவு வேர்வை.

  * பார்வை கோளாறு, கண் வலி, மன உளைச்சல் போன்றவை இருக்கும்.

  சிலர் இத்தகைய பாதிப்பிலும் ஓரளவு சராசரி வாழ்க்கையினை மேற்கொள்வர். சிலர், இதில் படுத்த படுக்கையாகி விடுவர். இந்த பாதிப்பிற்கு குறிப்பிட்ட சோதனை என்பது கிடையாது.

  பொதுவில் சில அடிப்படை பரிசோதனைகளையும், மருத்துவர் நோயாளியின் நிலையை அறிந்தும் முடிவு செய்வார். மருத்துவ சிகிச்சை முறையில் இதற்கு முழு தீர்வு காண்பது கடினம்.

  உணவு முறை, யோகா, தியானம் இவற்றிலும் முன்னேற்றத்தினை காண முடியும். மருத்துவர், பயிற்சியாளர் இவர்களால் பரிந்துரைக்கப்படும் குறிப்பிட்ட உடற்பயிற்சி நல்ல முன்னேற்றத்தினை அளிக்கும்.

  மது, காபி, டீ தவிர்ப்பது மிக மிக நல்லது. பொதுவில் இத்தகு பாதிப்பு உள்ளவர்கள் தைராய்டு சுரப்பி, ரத்த சோகை, சர்க்கரை நோய் இவற்றிற்காகவும் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

  இந்த நோயை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்:

  * முழு தானிய உணவு

  * நார்ச்சத்து மிகுந்த ஓட்ஸ் உணவு

  * பச்சை காய்கறிகள்

  * காபி, டீ தவிர்த்தல்

  * கொழுப்புச்சத்து இல்லாத பால் வகை உணவு இத்தாக்குதலின் வீரியத்தினைக் கட்டுப்படுத்தும்.

  * கலர் நிறைந்த காய்கறிகள் அதாவது காரட், பீட்ரூட், கீரை போன்றவை

  * வெள்ளை சர்க்கரை சேர்த்த உணவுப் பொருட்களை அடியோடு தவிருங்கள்.

  * தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

  * பழங்கள் மிகச்சிறந்த உணவு.

  Lakschellam likes this.

 9. #1429
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  இதயத்தை பாதுகாக்கும் காய்கறிகள்

  காய்கறிகளில் உயிர்சத்துகளும், ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளதாள், நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதய நோய்கள் மற்றும் நீரழிவு போன்றவற்றை தடுக்கும் திறன் கொண்டவை ஆகும்.

  செரிபரோ வாஸ்குளார் நோயினால் ஏற்படும் இறப்பிற்கும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளும் அளவிற்கும் எதிர்மறையான தொடர்பு காணப்படுகிறது.ஒரே தாவர வேதிப்பொருளைக் காட்டிலும், பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிக் கலவையில் இருந்து கிடைக்கும் பலவகை வேதிப்பொருட்கள் உடலை நன்கு பாதுகாத்து பராமரிக்கின்றன.

  பொதுவாக நாம் காய்கறிகளை உணவில் சேர்பதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து தாராளமாய் நமக்கு கிடைக்கிறது.

  ஆனால் அதே சமயம் வேர் காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்வதால் சாதாரண காய்கறிகளில் இருந்து கிடைக்கும் சத்துகளை விட அதிகளவு சத்துக்களை நம்மால் பெற முடிகிறது. இவை ஊட்டசத்துக்கள் மட்டுமல்லாமல் நமது உடலில் ஏற்படும் பல வித பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது.

  டர்னிப் : டர்னிப் சாலட்டில் சேர்க்கக்கூடிய ஒரு சிறப்பான காய்கறி. அதிலும் முக்கியமாக இந்த டர்னிப் இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு வேர் காய்கறி. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமான அளவில் அடங்கியுள்ளதால் இதயத்தை பாதுகாக்கிறது

  உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் நிறைய உள்ளது. மேலும் இவை உடலுக்கு அதிகப்படியான ஆற்றலையும் கொடுக்கக்கூடியவை. ஆனால் உடல் எடையை குறைக்க நினைத்தால், இதனை டயட்டில் சேர்க்கக்கூடாது.

  வெங்காயம்: வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோய் எதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும். மேலும் இதில் ஜிங்கு உள்ளதால், ஆண்களின் ஹார்மோன்களின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.

  முள்ளங்கி: நீரிழிவு நோயாளிகளுக்கு முள்ளங்கி ஒரு சிறப்பான உணவுப் பொருள். ஏனென்றால் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இவற்றில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.

  சக்கரைவள்ளி கிழங்கு: சர்க்கரைவள்ளிக் கிழங்ககில் உடலுக்கு வேண்டிய ஆற்றல் அதிகம் இருப்பதோடு, சாதாரண உருளைக்கிழங்கை விட குறைவாகவே ஸ்டார்ச்சானது உள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைக்கும்.

  பூண்டு: பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்த்தால், இதயம் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பச்சையாக பூண்டை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் குணமாகிவிடும்.

  Lakschellam likes this.

 10. #1430
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து
  இயற்கை மருத்துவர் ஜான் கிறிஸ்டோபரின் 35 வருடங்கள் மருத்துவ சேவையில், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு பாதிக்கபட்டவர்கள் இந்த எளிய மருத்துவத்தால் ஒரு நபர் கூட இறந்ததில்லை என்று சொல்கிறார். ஆனால் பாதிக்கப்பட்டவரின் மூச்சு நின்றுவிடாமல் இருக்க வேண்டும். இவருடைய மிளகாய் பொடி தேநீர் 60 செகண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்து, சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட தொடங்கிவிடுவார்கள் என்கிறார். அதனால் வீட்டில் மிளகாய் பொடி தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
  எவ்வாறு செய்வது:
  ஒரு டீஸ்பூன் மிளகாய்பொடியை மிதமான சுடு தண்ணீரில் நன்றாக கலக்கி குடிக்க வைக்க வேண்டும்.
  பாதிக்கப்பட்டவர் நினைவுடன் இருந்தால் சிறிதளவு பொடியை விரல்களில் எடுத்து நாக்கின் அடியில் வைக்க வேண்டும்.
  இது ஒரு முதலுதவி மருந்து போன்றது. மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிடாமல் உதவும். இவ்வாறு செய்வதால் அவர்களை காப்பாற்றுவது உறுதி என்கிறார்.
  எவ்வாறு வேலை செய்கிறது:
  காரமான மிளகாய் பொடியில் 90,000 கார யூனிட் (H.U. heat unit) இருப்பதாகவும், இதுவே ஹாரட் அட்டாக் ஏற்பட்டவரை திரும்பவும பழை நிலைக்கு கொண்டு வருவதாக கூறுகிறார்.  Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-red-chilly.jpg  

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter