Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1431
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வைட்டமின் பி 3
    வைட்டமின் பி 3
    நாம் தினசரி உட்கொள்ள வேண்டிய அத்தியாவசியமான வைட்டமின்களில் ஒன்று வைட்டமின் பி 3. நீரில் கரையும் 'பி' காம்ப்ளெக்ஸ் வைட்டமின் குடும்பத்தை சேர்ந்தது. இதில் இருவகைகள் உண்டு. அவை

    நிக்கோடினிக் அமிலம் (Nicotinie acid) (அ) நியாசின் (Niacin)
    நியாசினமைட் (Niacinamide) (அ) நிகோடினமைட் (Nicotinamide)
    வைட்டமின் பி 3 யின் பணிகளும், பயன்களும்
    பல வளர்சிதை மாற்றங்களுடன் இணைந்தது. நாம் உண்ணும் உணவிலிருந்து உடலுக்கு தேவையான சக்திகளை உடல் பெற உதவுகிறது. கார்போஹைடிரேட், புரதம், கொழுப்பு இவற்றின் ஜீரணத்திற்கு உதவும் என்சைம்களை உருவாக்குகிறது.
    நரம்பு மண்டல ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ஞாபக சக்தியை பாதுகாக்கிறது. தூக்கமின்மையை வராமல் தடுக்கும். மனச்சோர்வை கட்டுப்படுத்துகிறது.
    ஆரோக்கியமான சர்மத்திற்கு தேவையான வைட்டமின்.
    ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
    வைட்டமின் பி 3 யின் தேவை
    எல்லாவித உணவு புரதங்களில் 'ட்ரைடோஃபான்' (Tryptophan) என்ற அமினோ அமிலம் உள்ளது. இந்த அமிலத்தின் ஒரு பகுதியிலிருந்து, நம் உடல், வைட்டமின் பி 3 ஐ (நியாசினாக) உண்டாக்குகிறது. 60 மி.கி. "ட்ரைடோஃபான்" 1 மி.கி. வைட்டமின் பி 3 ஐ தருகிறது. மீதித் தேவையை உணவின் புரதம் தவிர இதர ஊட்டச்சத்துகளிலிருந்து எடுத்துக் கொள்கிறது.
    வைட்டமின் பி 3 உள்ள உணவுகள்
    சோளம், முழுத்தானியங்கள், பருப்புகள், பயறுகள்.
    நிலக்கடலையில் வைட்டமின் பி 3 அபரிமிதமாக உள்ளது. 100 கிராம் நிலக்கடலையில் (வறுக்காதது) 19.9 மி.கிராமும் வறுத்த நிலக்கடலையில் 22.1 மி.கிராமும் உள்ளது.
    பீன்ஸ், சோயா பீன்ஸ், பட்டாணி, தக்காளி, உருளைக்கிழங்கு.
    கடுகு
    கோழி, மாடு, வான்கோழி, பன்றி, முயல் இறைச்சிகளில்
    முட்டை
    வைட்டமின் பி 3 குறைந்தால்
    ஒரு காலத்தில் ஐரோப்பியாவை உலுக்கிய நோய் "பெல்லகிரா" (Pellagra) வைட்டமின் பி 3 குறைவினால் ஏற்படுவது. வாய்ப்புண், தோல் நோய்கள், வயிற்றுப்போக்கு, டிமென்ஷியா எனும் மன குறைபாடுகள் பெல்லக்ராவின் அறிகுறிகள் - தற்போது பெல்லக்ரா ஏற்படுவது மிகவும் குறைவு. இதில் அதிசயம் என்னவென்றால் சோளம் (ஜோவார், Sorghum Vulgare) மற்றும் மக்காச்சோளம் (Maize (Zea Mays) - இவற்றை முக்கிய உணவாக உண்ணும் தேசங்களில் பெல்லக்ரா தோன்றுகிறது. தென்னிந்தியாவில் சோளத்தை அதிகம் உண்ணும் ஏழை மக்களிடையே பெல்லக்ரா காணப்படுகிறது.
    காரணம் சோளத்தை நேரடியாக சமைத்து சாப்பிட்டால் அதில் நிறைந்து உள்ள 'நியாசின்' உடலில் சேராது. அதனால் வைட்டமின் பி 3 யின் குறைவு ஏற்பட்டு 'பெல்லக்ரா' ஏற்படும். எலுமிச்சைப்பழ சாற்றில் ஊற வைத்தால் அதில் உள்ள நியாசின் (வைட்டமின் பி3) வெளிபட்டு ஜீரணமாகி உடலில் கிரகிக்கப்படுகிறது.
    மத்திய நரம்பு மண்டல பாதிப்புகள் உண்டாகலாம். மன அழுத்தம், சோர்வு, உற்சாகமின்மை, சித்தப்பிரமை ஏற்படலாம்.
    ஜீரண மண்டல பாதிப்புகள், வாய்ப்புண்கள், வாய்துர்நாற்றம் ஏற்படலாம்.
    எடை குறைவு, தூக்கமின்மை, பலவீனம்.
    வைட்டமின் பி 3 அதிகமானால்
    கல்லீரல் பாதிக்கப்படலாம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகலாம். வயிற்று வலி, தோல் சிவந்து அரிப்பு ஏற்படலாம்.
    எதனால் வைட்டமின் பி 3 இழப்பு ஏற்படுகிறது?
    இந்த வைட்டமின் உள்ள உணவுப் பொருட்களை அதிக நேரம் கொதிக்க வைத்து சமைத்தால், நியாசின் அழிந்து விடும்



    Sponsored Links

  2. #1432
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    புகை பிடித்தல், குடி பழக்கம், தவறான உணவு பழக்கங்களே
    கேன்சருக்கு காரணம்
    புற்றுநோய் எவ்வாறு உண்டாகின்றது : ஆய்வின் மூலம் வெளியிடப்பட்ட தகவல்
    மனிதர்களுக்கு வரும் புற்றுநோய்களில் மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோய்கள் அவர்களின் உடலில் இயற்கையாக நடக்கும் மரபணு மாற்றம் காரணமாக நடப்பதாகவும், இந்த வகை புற்றுநோய்களுக்கும், ஒருவரின் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளிட்ட மோசமான பழக்க வழக்கங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். அதேசமயம், மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்கள் ஒருவரின் பழக்க வழக்கங்களால் தூண்டப்படுகின்றன என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். எனவே புற்றுநோயை தோற்றுவிக்கும் அல்லது ஊக்குவிக்கும் மனிதர்களின் தவறான பழக்கவழக்கங்களுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    அத்தோடு கூட மரபணுக்களில் ஏற்படும் விபரீத மாற்றங்களால் மட்டுமே உருவாகும் மூன்றில் இரண்டுபங்கு புற்றுநோய்களை அவற்றின் தோற்றத்தின் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனை முயற்சிகளையும் மிகப்பெரிய அளவில் முன்னெடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறார்கள். மனிதர்களுக்கு புற்றுநோய் வருதற்கு அடிப்படை காரணம் அவர்களின் உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் விபரீத மாற்றம். நம் உடலில் இருக்கும் எல்லா அங்கங்களிலும் வயதான மற்றும் சேதமடைந்த செல்கள் மடிந்து மறைவதும் அவற்றின் இடத்தை புதிய செல்கள் வளர்ந்து நிரப்புவதும் இயல்பாக தொடர்ந்து நடக்கும் அன்றாட செயல்.
    நம் உடலில் இருக்கும் குருத்தணுக்களில் இருந்து இப்படி புதிய செல்கள் தோன்றி வளரும் சமயத்தில் சில செல்களில் மட்டும் ஏற்படும் விபரீதமான மரபணு மாற்றமானது, அவற்றை புற்றுநோய் தோற்றுவிக்கும் செல்களாக மாற்றிவிடுகிறது. இப்படியாக குறிப்பிட்ட சில செல்கள் மட்டும் திடீரென புற்றுநோய்க்கான செல்களாக மாறுவது ஏன் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள். உடலில் தோன்றும் எத்தனையோ கோடி செல்களில் குறிப்பிட்ட சில செல்கள் மட்டும் ஏன் இப்படி நடந்துகொள்கின்றன என்ற
    ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் மூன்றில் இரண்டு மடங்கு புற்றுநோய்கள் இப்படி செல்களுக்குள் நடக்கும் விபரீத மரபணு மாற்றம் காரணமாகவே உருவாவதாகவும் அதற்கும் ஒருவரின் பழக்க வழகங்களுக்கும் நேரடி தொடர்புகள் இல்லை என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
    அதேசமயம், மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்கள் ஒருவர் உண்ணும் தவறான உணவுகள், அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற தவறான பழக்கங்களால் ஊக்குவிக்கப்படுவதையும் இவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.எனவே ஒருவருக்கு புற்றுநோய் வருவது என்பது அடிப்படையில் அவரது உடலில் இருக்கும் செல்கள் தம்மை புதுப்பித்துக்கொள்ளும் நடைமுறையில் இருந்து ஆரம்பிப்பதாக இந்த ஆய்வை மெற்கொண்ட ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளி மற்றும் பொது சுகாதாரத்திற்கான புளூம்பெர்க் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
    contd..



  3. #1433
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    இந்த ஆய்வின் அடிப்படையில் புற்றுநோய்களை இரண்டு வகையானவைகளாக பிரிக்கலாம். அதாவது, ஒருவரின் செல்களில் நடக்கும் விபரீத மரபணு மாற்றத்தால் உருவாகும் புற்றுநோய்கள் மற்றவை ஒருவரின் பழக்கவழங்களால் தூண்டப்படும் புற்றுநோய்கள். இதில் ஒருவரின் மரபணுவில் ஏற்படும் மாற்றம் காரணமாக உருவாகும் முக்கியமான புற்றுநோய்கள் என்பவை மூளையில் தோன்றும் ஒரு புற்றுநோய், வயிற்றின் சிறுகுடலில் தோன்றும் புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோய் ஆகியவை என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
    இப்படிப்பட்ட புற்றுநோய்கள் தோன்றாமலே தடுப்பது என்பது இன்றைய நிலையில் இயலாது என்னும்போது அவை தோன்றுவதை ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிப்பது அவற்றை குணப்படுத்த உதவும் என்கிறார் இந்த ஆய்வாளர்களில் ஒருவரான கிறிஸ்டியன் டோமசெட்டி. அதேசமயம் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்த ஒருவரின் பழக்க வழக்கங்களால் தூண்டப்படும் புற்றுநோய்கள் என்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பனவற்றில் ஒருவகை தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், குதப்புற்றுநோய் ஆகியவை முக்கியமானவையாகும்.
    இதில் குறிப்பிட்ட ஒருவகை தோல் புற்றுநோய் சூரிய ஒளியில் அளவுக்கு அதிகமாக இருப்பதால் தூண்டப்படுகிறது. புகைப்பழக்கம் நுரையீரல் புற்றுநோயை தூண்டுகிறது, மோசமான உணவுப்பழக்கம் மற்றும் குடும்ப மரபணுக்களால் குதப்புற்றுநோய் தூண்டப்படுகிறது என்பதும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே சிலவகையான புற்றுநோய்கள் வேண்டுமானால் விபரீத மரபணு மாற்றங்கள் காரணமாக உருவாகலாம்.
    ஆனால் மற்றவகை புற்றுநோய்களை ஒருவரின் பழக்கவழக்கங்கள் தூண்டுகின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்கிறார் ஐக்கிய ராஜ்ஜியத்தின் புற்றுநோய்க்கான ஆய்வு மையத்தின் மருத்துவர் எம்மா ஸ்மித். இவை தவிர பரவலாக மனிதர்களை பாதிக்கும் மார்பக புற்றுநோய் மற்றும் புராஸ்டேட் சுரப்பிகளில் தோன்றும் புற்றுநோய்கள் இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
    எனவே புற்றுநோயை ஊக்குவிக்கும் பழக்கவழக்கங்களை தவிர்ப்பது, மற்றும் புற்றுநோய்களை அவற்றின் ஆரம்பகட்டங்களிலேயே கண்டுபிடித்து உடனடி சிகிச்சை அளிப்பது ஆகிய இரண்டு வகையான அணுகுமுறைகளும் சம அளவில் கைக்கொள்வதே உலக அளவில் உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக பார்க்கப்படும் புற்றுநோயை கையாள்வதற்கான மருத்துவ வழிமுறைகள் என்பது இந்த ஆய்வாளர்களின் பரிந்துரையாக இருக்கிறது.


  4. #1434
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நீங்கள் வாங்கும் நெய் தரமானதா? ஷாக் ரிப்போர்ட்

    மணல் மணலான நெய், மணமணக்கும் நெய் என்றெல்லாம் நெய் விளம்பரங்களில் சொல்வது நமக்குத் தெரியும். ஆனால் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள மேற்கொள்ளும் ஆய்வு குறித்தும், நெய் தொடர்பாக நுகர்வோர்கள் சொன்ன கருத்துக்களையும் இங்கே பார்க்கலாம்.
    ஒப்பீட்டு ஆய்வு!
    ஒப்பீட்டு ஆய்வு என்பது நுகர்வோர் பயன்படுத்தும் பல பொருட்களை அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் உள்ளதா என சோதித்து அதில் கண்ட உண்மைகளை வெளியிடுவதாகவும். இதில் அப்பொருள் பற்றிய பயன்பாடு, தரம், பயன்படும் நாட்கள், பயன்படுத்துவதில் நுகர்வோர்க்கு ஆலோசனைகள், தயாரிப்பாளருக்கு ஆலோசனைகள் என பல வகையிலும் இந்த அறிக்கை அமைந்திருக்கும். கான்சர்ட் இந்திய நுகர்வோர் நலத்துறையின் அனுமதியுடன் இது போன்ற ஒப்பாய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு இவ்வகையில் எடுத்துக் கொண்ட உணவுப் பொருட்களில் நெய்யும் ஒன்று.
    தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தலா ஐந்து நிறுவனங்களின் நெய் மாதிரிகள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
    contd..



  5. #1435
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    ஆய்வுக்கு எடுத்துக் கொண்டநெய்யின் குணங்களூம் கீழ்க்கண்ட அளவீடுகளில் முக்கிய தன்மைகளின் அடிபடையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    1. பாக்கெட் செய்தல் மற்றும் விவரச்சீட்டிடுதல்
    2. பாதுகாப்பு மற்றும் உடல் நலம்
    3. தரம்
    நுகர்வோர் கருத்துக்கள்!
    நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டது போல, நெய் நுகர்வோர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டது. நுகர்வோர் நெய் வாங்கும் போது என்ன முறைகளை கையாளுகிறார்கள், எப்படி தேர்வு செய்கிறார்கள், வாங்கிய பின் குறையிருந்தால் அவர்கள் அணுகுமுறை என்ன என்பது அறிய 32 நுகர்வோரின் கருத்துக்கள் இங்கே...
    1. 41% பேர் பயன்பாட்டு நாளையும், 29% பேர் தயாரிப்பு தேதியையும் பார்த்து நெய் வாங்குகின்றனர்.
    2. 74% பேர் நல்ல கம்பெனி நெய் தயாரிப்புகளையும் 24% பேர் மற்ற தயாரிப்புகளை வாங்குகின்றனர்.
    3. 39% பேர் 200 கிராம் பாக்கெட் தேர்வு செய்கையில் 18% பேர் 100 கிராம் பாக்கெட் வாங்குகின்றர்கள்.
    4. 84% பேர் வீட்டுத்தயாரிப்புகளை விரும்புவதில்லை ஆனாலும் 13% பேர் வீட்டுத்தயாரிப்புகள் வாங்குகின்றனர்.
    5. 76% பேர் வனஸ்பதி ஒரு கலப்படப் பொருளாக நெய்யில் கலப்பது அறிந்துள்ளனர்.
    6. 55% பேர் வனஸ்பதியால் ஏற்படும் உடல் பாதிப்புகளை அறிந்துள்ளனர்.
    7. 52% பேர் சுத்தமான வனஸ்பதியை வெஜ்டபிள் நெய் என விற்பதை அறியாமல் உள்ளன.
    8. 77% பேர் அக்மார்க் முத்திரையுள்ள நெய்யும் 3% பேர் ஐ.எஸ்.ஓ முத்திரையுள்ள நெய்யை யும் தேடி வாங்குகின்றனர்.
    9. 47% பேர் நெய்யின் தரத்தை அதன் மணத்தை வைத்தும், 16% பேர் சுவையை வைத்தும் தீர்மானிக்கின்றனர்.
    10.45% பேர் நெய்யில் குறையிருந்தால் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும், 39% பேர் கடைக்காரருக்கு தெரிவிக்கவும் அறிந்துள்ளனர்.
    contd..



  6. #1436
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    நுகர்வோர் கவனிக்க!

    1. நாட்டில் சில பகுதிகளில் உதாரணமாக ஆந்திர மாநிலத்தில் வனஸ்பதி வெஜிடபிள் நெய் (Vegetable Ghee) என விற்கப்படுகிறது. நெய் எனபது ஒரு பால் பொருட்கள் வகையைச் சேர்ந்தது “எனவே நெய் என்னும் பெயரை தாவர வகை பொருட்களோடு இணைத்து “வெஜிடபிள் நெய்” என விற்பது ஒரு தவறான செயலாகும். நுகர்வோர் இது குறித்து விழிப்புடன் இருக்கும் நிலை உள்ளது.
    2. இந்திய உணவு விடுதிகளில் நெய்யிற்கு பதிலாக வனஸ்பதி (டால்டா, வெஜிடபிள் நெய் மற்றும் ஹைடிரஜினேட்டட் வெஜிடபிள் எண்ணெய்) விலை குறைவு என்பதால் பயன்படுத்தப்படுகிறது. “வெஜிட்டபிள் நெய்” என விற்கப்படும் வனஸ்பதியில் டிரான்ஸ் கொழுப்பு என்ற பொருள் உள்ளது. இது இதய இரத்தத் குழாய்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வழி வகுக்கும். எனவே வெஜிடபிள் நெய்யை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
    3. நீங்கள் இதய இரத்தக்குழாய்கள் சம்பந்தமான நோய்கள் அல்லது உடல் பருமன் இல்லாதவர் என்றால் சுத்தமான நெய்யை உட்கொள்ளலாம்.
    4. ஒரு தனிமனிதன் ஒரு நாளில் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்ட கொழுப்பின் அளவு என்பது 10 முதல் 15 கிராம் ஆகும்.
    5. நீங்கள் பருமனானவர் என்றால் நெய்யை தவிர்க்கவும்.
    6. நீர் மற்றும் சூரிய ஒளி இரண்டுமே நெய்யின் தன்மையை பாதிக்க கூடியவையாகும்.
    contd..



  7. #1437
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பாதுகாப்பு டிப்ஸ்

    1. எப்போதும் நெய்யினை நன்கு மூடி சூரிய ஒளி இல்லாத இடத்தில் வைக்கவும்.
    2. நெய்யை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துவதாயிருந்தால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காதீர்கள்
    3. வெப்பமான காற்றில் திறந்தீர்கள் என்றால்,நீரானது நெய்யுடன் சேர்ந்து கெட்டுவிட வாய்ப்புள்ளது.
    4. நெய் சுத்தமான கண்டெயினரில் காற்று புகாதபடி அடைத்து வைத்தால் 2 முதல் 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
    5. திறக்காமல் நெய் கண்டெயினரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் 1 வருடம் வரை கெடாமல் இருக்கும்.
    6. நல்ல முறையில் தயாரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட நெய் பல மாதங்கள் அறை வெப்ப நிலையில் கெடாமல் இருக்கும்.
    7. நீண்ட நாள் பயன்பாட்டிற்கு நெய்யினை ஒளியே புகாத, கண்டெயினரில் காற்று புகாதபடி இறுக்கமாக மூடி இருட்டான பகுதியில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும்.
    8. நல்ல நெய் என்பது ஈரப்பதம் நீக்கப்பட்டும், பால் திடப்பொருட்கள் 2500 f உஷ்ண நிலையில் எரிக்கப்பட்டும், பின்னர் அந்த திடப்பொருட்கள் அகற்றப்பட்டும் தயாரிக்கப்படுவதாகும்.
    9. எனவே ஒரு நல்ல நெய் என்பது பால்திடப் பொருள் மற்றும் ஈரப்பதம் இல்லாத ஒரு வெண்ணெயின் கொழுப்பாகும்



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-ghee.jpg  

  8. #1438
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நல்ல உணவும்,நல்ல கொழுப்பும் !!!

    உள்ளத்தால் சிறப்பாக வாழ நினைக்கும் குண்டுடம்புக்காரர்களே! நீங்கள் உடலாலும் சுகமாக வாழச் செய்ய வேண்டியதெல்லாம் சரியான உணவுத் தெரிவே ஆகும். அந்த உணவுத் தெரிவும் சரியாக இருக்க ஒல்லி உடம்புகாரர்களை காப்பி அடித்தால் நல்லது. உடலை சரியான அளவுகளில் வைத்திருக்கும் கலை இவர்களுக்குத்தான் கைவந்த கலையாக இருக்கும், காரணம், இவர்கள்தான் சரியான உணவு எடுத்துக்கொள்ளும் போது உடல் சுகமாக இருப்பதையும், அல்லாத உணவை எடுத்துக்கொள்ளும் போது உடல் சங்கடப்படுவதையும் உணரும் தன்மையில் இருக்கிறார்கள். சரி இனி தரும் உணவுகள் பற்றி பார்ப்போம்.
    நல்ல கொழுப்பு உணவுகள்:

    1. ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை:
    ஆறு மணி நேரம் நீரில் ஊறிய நிலக்கடலையானது நச்சுத் தன்மை நீக்கப்பட்டு, உயிர்ப்புத் தன்மை அதிகரிக்கப்பட்டு முழுமைத் தன்மை அடைகிறது. இதை அப்படியே பச்சையாக எடுத்துக் கொள்ளும் போது இதில் உள்ள கொழுப்பு செரிக்கத் தேவையான உயிர்ச் சத்துக்களும் (Vitamins), நொதிகள் (Enzymes) உருவாகத் தேவையான புரதமும் (Protein) கொண்டுள்ளது. நிலக்கடலையை வறுத்து அல்லது சமைத்து உண்டால் கண்டிப்பாக கெட்டக் கொழுப்புச் சேரும்.
    contd..



  9. #1439
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    2. இயற்கை இனிப்பு உணவுகள்:
    இயற்கை இனிப்புகளான தேன், கரும்புச் சாறு, இயற்கை வெல்லம், உளர் திராட்சை, பேரீச்சை, மற்றும் இனிக்கும் பழச்சாறுகள் யாவும் கொழுப்புச் செரிமானத்தை திறம்பட நடத்த உதவியாக இருக்கும். இதில் பி-உயிர்ச் சத்துகள் மாவுச் சத்துடன் முழுமையாக இருப்பதால் இவை உடனடிச் சக்தியாக மாறி கொழுப்புச் சத்தை செரிக்க மிகவும் உதவியாக இருக்கிறது. சான்றாக கடலை மிட்டாய் செரிக்க அதனுடன் கலக்கப்பட்ட வெல்லம் உதவுகின்றது.

    3. மிளகு:
    எந்த ஒரு அசைவ உணவோடும் மிளகுத் தூளை கனிசமாகச் சேர்த்துக் கொள்ளும் போது மிகச் சுலபமாகக் கொழுப்பு செரித்து விடுகிறது. மிளகில் இருக்கும் பி-உயிர்ச் சத்துக்களும் தாதுச் (Minerals) சத்துக்களும் கொழுப்புச் செரிமானத்திற்கு வழி செய்கின்றன. மிளகில் உள்ள தாவரச் சத்துக்கள் (Phytofactors) அசைவ உணவின் விஷத்தன்மையை வெளியேற்ற உதவுகின்றன. பச்சை மிளகாய் உள்ளிட்ட மசாலா அதிகம் சேர்த்த அசைவ உணவுகள் செரிக்கச் சற்று கடினமாக இருக்கும்.
    contd..



  10. #1440
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    4. மீன்கள்:
    குளத்து மீன்களைவிட கடல் மீன்கள் நல்லவை. கடல் மீன்களில் சிறிய அளவு உள்ளவையும் தோல் மென்மையாகவும் உள்ளவையும் சிறந்தவையாகும். வாலை மீன் உள்ளிட்ட மீன் வகைகளில் பாதரசம் உள்ளிட்ட உயர் அடர்த்தி உலோகங்கள் (Heavy metals) தோலில் படிந்துள்ளதால் அவைகளை தவிர்ப்பது நல்லது. மீன் கொழுப்பு சுலபமாக செரிக்கக்கூடியதாகவும் மூளைக்கு உணவாகவும் திகழ்கிறது.
    5. மாமிசம்:
    பொதுவாக மாமிச உணவுகள் செரிக்க குறைந்தபட்சம் 12 மணி நேரமும், அவை செரித்தபின் அதன் கழிவுகள் வெளியேர மூன்று நாட்களும் ஆகும். அன்றாடம் மாமிச உணவு எடுத்துக் கொள்பவர்கள் தினமும் மலம் கழித்தாலும், உண்மையில் அது மூன்று நாட்களுக்கு முந்தய மலமேயாகும். அதே போல், மாமிச உணவில் 1/3 பங்கு மட்டுமே சக்தியும் 2/3 பங்கு கழிவையும் கொண்டுள்ளது. மாமிசம் மூலம் கிடைக்கும் சக்தியானது அதன் கழிவை வெளியேற்றவே போதாது ஆகையால், மாமிச உணவை தவிர்ப்பது நல்லதுதான். அதே சமயம், மாமிச புரதத்தில் சில அத்தியாவசிய அமினோஅமிலங்களைக் கொண்டுள்ளன. அவைகள் தாவர உணவுகளில் கிடைக்காது. அந்த விதத்தில் மாமிச உணவு தேவைதான். ஆக, மாமிச உணவு தேவையென்றால், குறைவான அளவுகளில், அதுவும் மிளகு சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாமிசக் கொழுப்புகளில் சதை தனி கொழுப்பு தனி என்று இருக்கும் பறவை இறைச்சி நல்லது. அதுவே சதையும் கொழுப்பும் இரண்டரக்கலந்து இருக்கும் பாலூட்டிகள் (ஆடு, மாடு மற்றும் பன்றி) மாமிசம் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். அதே போல் இரசாயனங்கள் மற்றும் ஹார்மோன்கள் அதிகம் கொடுத்து வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் நம்மை குண்டாக்கும் தன்மை கொண்டது. இவைகள் வேகமாக வளரக் கொடுக்கப்படும் எஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆண்களுக்கு பெண்தன்மையையும், பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் மற்றும் உடல் பருமனாவது அதிகரிக்கின்றது. பிராய்லர் கோழிகளை அதிகம் எடுத்துக்கொண்டால் ஹார்மோன் சமன்பாடு குலைந்து மன உளைச்சல் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்குப் பதிலாக நாட்டுக்கோழி சாப்பிடலாம்.
    contd..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter