Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree913Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1441
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    6. எண்ணெய்கள்:

    அசைவ உணவைவிட எண்ணெய் தான் அதிக ஆபத்தானது. அசைவ உணவை எண்ணெயில் பொறித்து சாப்பிடும் போது மிகக் கெட்ட கொழுப்பாகிவிடுகிறது. அதே போல் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் சுடவைத்து பயன்படுத்தும் போது அது மிகக் கெட்டக் கொழுப்பாக மாறி விடுகிறது. எண்ணெய்களில் மிகவும் சிறந்தது ஆலிவ் எண்ணெயாகும். இதை இரண்டு அல்லது மூன்று முறைசுடவைத்தாலும் கெட்ட கொழுப்பாக மாறுவதில்லை. ஆலிவ் எண்ணெயில் உள்ள ஒமேகா-9 வகைக் கொழுப்பானது நோய் எதிர்ப்பு சக்தியையும் தோல் ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. இந்த எண்ணெயானது மற்ற எண்ணெய்களைவிட மூன்று மடங்கு அடர்த்தியானது. இதன் விலை அதிகம் தான், ஆனால் உங்கள் இதயம் அதைவிட அதிகம்தானே. ஆலிவ் எண்ணெய்க்கு அடுத்து சிறந்த எண்ணெய் தேங்காய் எண்ணெயாகும். இதுவும் ஓரிரு முறைசுட வைத்தாலும் கெட்டுப் போவதில்லை. மூன்றாவது சிறந்த எண்ணெய் நல்லெண்ணையாகும். ஆலிவ் எண்ணெயும் தேங்காய் எண்ணெயும் பித்தத்தையும் கபத்தையும் போக்கும் தன்மையுடையன. நல்லெண்ணை வாய்வையும் உடல் உஷ்ணத்தையும் நீக்க வல்லது. நல்லெண்ணை சமையல் ஆரோக்கியத்திற்கு நல்லது எனபதால்தான் அதற்கு நல்லெண்ணை என்று பெயர் வைத்துள்ளனர். இந்த மூன்று எண்ணெய்களைத் தவிர மற்ற எண்ணெய்களெல்லாம் ஆரோக்கியத்திற்கு சுமார்தான். இதயத்திற்கு நல்லது என்று மற்ற எண்ணெய்களைக் குறிப்பிடுவதெல்லாம் டூப்பு. உண்மையில் சூரியகாந்தி, நிலக்கடலை மற்றும் சோயா எண்ணெயெல்லாம் மித வெப்ப நாடுகளுக்கு (Temperate countries) ஏற்றதாகும். நம்மைப்போல் வெப்ப நாடுகளுக்கு மிகவும் ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய்யே ஆகும்.

    7. தேங்காய்:

    தேங்காய் என்பது ஒரு முழுமைப் பொருள். இதில் எல்லாவித அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் உயர் கொழுப்புகளையும், இவைகளைச் செரிக்கத் தேவையான உயிர்ச் சத்துக்கள், மற்றும் தாதுச் சத்துக்களை உள்ளடக்கிய ஒரு அற்புத உணவாகும். தேங்காயை சமையலில் பயன்படுத்தும் விதத்தில்தான் நல்லதாகவும் கெட்டதாகவும் மாறி விடுகிறது. தேங்காயை அதிகம் வேகவிடாமல் மேலோட்டமாக வதக்கிய நிலையில் எடுத்துக் கொண்டால் சுலபமாகச் செரித்துவிடும், இல்லையேல் செரிப்பதற்கு சற்று கடினமாக இருக்கும். கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் தேங்காய் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பரிந்துரை அளிக்கப்படுகிறது. இவர்களின் செரிமானத்தை அதிகரிக்க வழி தெரியாததால் இப்படி பரிந்துரை செய்கின்றனர். இவர்களின் பரிந்துரையால் இப்போதெல்லாம் அதிகமாக வெங்காயச் சட்னி அல்லது தக்காளிச் சட்னியே அதிகமாக சாப்பிடுகிறார்கள். வெங்காயத்தை அரைப்பதால் நரம்பு பாழ்பட்டுப்போகிறது. தக்காளியை அரைப்பதால் சிறுநீரக கற்கள் உருவாக வழியாகி விடுகிறது. ஐய்யோ! பாவம், நல்லதை விட்டு கெட்டதற்கு மாறுகிறார்கள். தேங்காயோடு மிளகு அல்லது இயற்கை வெல்லம் சேர்த்து எடுத்துக் கொண்டால் தேங்காய் சுலபமாக செரித்துவிடும். தேங்காய் ஆரோக்கியத்திற்கு கேடு என்பவர்கள் மலையாளிகளைப் பார்த்தாவது திருந்த வேண்டும்.
    contd..



    Sponsored Links

  2. #1442
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    8. முட்டை:
    முட்டையும் ஒரு முழுமை உணவேயாகும். முட்டையை அவித்து சாப்பிட்டால் அத்தனையும் வாய்வாகிவிடும். அதே முட்டையை சிறிதளவு எண்ணையில் மிளகு சேர்த்த ஆம்லெட் செய்து சாப்பிட்டால் அத்தனையும் செரித்தும் கெட்டக் கொழுப்பு ஒட்டாமலும் பார்த்துக் கொள்ளும். கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். முழுமையற்றதை எடுத்துக்கொள்ளும் போது செரிமானச் சிக்கல்தான் ஏற்படுகிறது. முட்டையின் வெள்ளைக் கருவில் உயிர்ச் சத்துக்களும், தாதுக்களும் உள்ளன. மஞ்சள் கருவில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்புகளும் கொண்டுள்ளன. இவையிரண்டும் சேர்ந்தால் தான் நல்லது நடக்கும்.

    9. பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகள்:

    பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளில் ஒமேகா-3 வகை கொழுப்பு ஓரளவுக்கு இருக்கிறது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. இவ்வகைப் பருப்புகள் செரிக்கச் சற்று கடினமாக இருக்கும் ஆதலால் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம். இவைகளைத் தேனுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும் போது சுலபமாக செரிக்கும்.

    10. வெண்ணைப்பழம்:

    ஆல்பகடா பழம் என்று அழைக்கப்படும் வெண்ணைப் பழம் ஒமேகா-3 வகை கொழுப்பை ஓரளவுக்கு கொண்டு இருக்கிறது. நோய்வாய்படும் நேரத்திலும் இப்பழம் சுலபமாக செரித்து சக்தி அளிக்கவல்லது.
    நண்பர்களே! நல்ல கொழுப்பைக் கொடுக்கும் உணவுகளைத் தெரிவு செய்து உடல் பருமனைத் தவிர்த்து, இலகுவான இரத்தக் குழாய், மென்மையான நரம்பு மற்றும் பலபலப்பான தோல் ஆகியவற்றை பெற்று ஆரோக்கியமாய் வாழுங்கள்.

    sumee likes this.

  3. #1443
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    காஸ்ரையிடிஸ் – அமில அபாயம்

    இன்று இளம் வயதினர் மற்றும் நடு வயதினரையும் பாதிக்கும் பிரதான ஒரு நோயாக வயிற்றில் அமிலம் சுரத்தல் நோய் (Gastritis) காணப்படுகிறது.
    தொண்டைக் களம் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் கீறல்கள் மற்றும் புண் என்பனவும், முன் சிறுகுடல் என்பன இதற்கு காரணமாக அமைகின்றன. இந்தப் புண் பெப்டிக் அமில புண் (Pepiteutine Diseases) என்று அழைக்கப்படுகிறது.
    இந்நோய் இரண்டு வகைகளைக் கொண்டது. ஒன்று பாக்டீரியா தாக்கத்தால் ஏற்படுவது. மற்றொன்று புகைப்பிடித்தல, மதுபானம் அருந்துதல், சில வலி நிவாரண மருந்துவகைகளை அதிகளவில் உட்கொள்ளல், மிளகாய் மற்றும் சரக்குப் பொருட்களை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளல், மன அழுத்தம், மன நோய், நீண்ட நாட்களாக இருக்கும் புண், சிறுநீரகத்தின் செயற்பாடு குறைவடைதல் போன்ற காரணங்களால் வயிற்றில் மற்றும் சிறுகுடல் சுவர்களில் புண் ஏற்படலாம்.

    காஸ்ரையிடிஸ் நோயின் அறிகுறிகள்:
    ~வயிற்றின் மேற்பகுதி அல்லது மார்பின் மத்தியில் ஏற்படும் எரிச்சல் அதனால் ஏற்படும் வலி.
    ~மார்பு அடைப்பது போன்ற வலி.
    ~ஒருநாளும் இல்லாதவகையில் வயிறு பொதும்பி உப்புதல்.
    ~உணவு ஜீரணிக்க முடியாமல் இருத்தல்.
    ~உணவு தொண்டைக்கு திரும்பவும் வருவது போன்ற உணர்வு.
    ~புளிப்பு, கசப்பு சுவைக் கொண்ட பதார்த்தம் தொண்டைக்கு வரல்.
    ~உணவு உட்கொள்ள முடியாமல் வாந்தி எடுத்தல்.
    என்பனவும் வயிற்றில் பெருமளவு புண் காணப்படுமிடத்து இரத்த வாந்தி எடுத்தல் என்பனவும் நிகழ வாய்ப்புண்டு. சில நேரங்களில் மலம் கழிக்கும் போது கடும் நிறத்தில் மலம் வெளியேறக் கூடும்.
    இந்நோயை அறிந்துகொள்ள “என்டொஸ்கோப்பி” பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். இந்தப் பரிசோதனை மூலம் அநேகமான சந்தர்ப்பங்களில் நோயிற்கான காரணத்தைக் கண்டு பிடித்து சிகிச்சை செய்வதன் மூலம் இலகுவாகக் குணமாக்க முடியும்.

    சிலவேளைகளில் புண்களிலிருந்து அதிக இரத்தம் வெளியேறல் காரணமாக புண்ணுடன் கூடிய வயிற்றின் மற்றும் சிறு குடல் சுவர்கள் வெடித்தல் மற்றும் புண் காரணமாக உணவு செல்லும் பாதை மெல்லியதாக மாறும் சந்தர்ப்பங்களில் சத்திரசிகிச்சை மூலம் சிகிச்சை செய்ய வேண்டி ஏற்படும்.
    ஆகவே சரியான உணவு பழக்க வழக்கங்கள், சுத்தத்தைப் பேணுதல், மன அழுத்தங்களைக் குறைத்தல் போன்றவை இந்நோய் வருவதைத் தடுக்கும்.
    எனினும் நோய் ஏற்படுமிடத்து ஆரம்பத்திலேயே கண்டறிந்து தக்க சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகிறது.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-gastritis02.png  

  4. #1444
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஊளைச்சதைக் கோளாறு

    சிலர் உடல் பருத்து சதைகள் தொங்கி நடக்கக் கூட சிரமப்படுவதைப் பார்க்கிறோம். இதே போல் உடல் எடை அளவிற்கு அதிகமாக அதிகரிப்பதை தான் ஊளைச்சதை (Obesity) என்கிறோம்.

    மேலை நாடுகளில் இது ஒரு சமூக நோயாகக் காணப்படுகிறது. இந்நோயால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவதால் இது ஓர் சமூக நோயாகக் கருதப்படுகிறது. ஆனால், கீழை நாடுகளில் இது போன்ற பாதிப்புகள் பெரும்பாலானவர்களிடம் காணப்படாததால் இதை ஒரு சமூக நோயாகப் பார்ப்பதில்லை. எனினும் இந்நோய் அதிகரிக்காமல் காக்க வேண்டும். எனவே மக்கள் இதைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
    உடலில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு படிவதாலேயே ஊளைச்சதை ஏற்படுகிறது.
    பொதுவாகவே பல்வேறு காரணங்களை இதற்கு குறிப்பிடலாம். உடல் பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு உணவு வகைகளை உண்ணுதல் ஒரு முக்கிய காரணமாகும். இவ்வாறு அதிகமாக உண்ணப்படும் உணவால் கலோரிகள் கொழுப்புத் திசுவாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படுகின்றன. ஊளைச்சதையானது பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் ஊளைச்சதையுடன் இருக்கும் குழந்தைகள் வளர்ந்த பின்னரும் ஊளைச்சதையுடனயே இருக்கும். குழந்தைப் பருவத்தில் அளவிற்கு அதிகமாக உணவூட்டப்படும் ஒருவருடைய உடலில் வளர்ந்த பின்னரும் அதிகப்படியான கொழுப்பு செல்கள் உருவாகும்.
    தற்போது ஆண்களை விட பெண்கள் தான் ஊளைச்சதையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இயல்பாகவே ஆண்களை விட பெண்களின் உடலில்தான் அதிக கொழுப்புத் திசுக்கள் இருக்கும். ஊளைச்சதை ஏற்படுவதற்கு காரணம் அவர்களுடைய உணவுப் பழக்கமும் வேறு சுற்றுப்புற காரணிகளும் தானே தவிர மரபுப் பண்பு அல்லது ஹார்மோன் கோளாறு அல்ல என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
    ஊளைச்சதையால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய இதயத்தின் வேலைப்பாடு அதிகரிக்கப்பதே ஊளைச்சதையினால் ஏற்படும் கோளாறுகளுக்கான முக்கிய காரணம். உடலில் அதிகப்படியாக சேரும் ஒவ்வொரு கிலோ (1kg) கொழுப்பு திசுவுக்கும் மூன்று மீட்டர் நீள இரத்தக் குழாய்கள் வளர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஊளைச்சதை பொதுவாக ஒருவருடைய உடல் அழகை மட்டும் பாதிப்பதில்லை.

    பல்வேறு நோய்கள் உருவாகவும் காரணமாக இருக்கின்றது. இருதய நீரிழிவு, பித்தப்பை நோய், கருப்பை புற்றநோய் மற்றும் மன அழுத்தம் என்பவற்றால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் தாங்கள் சமூகத்தினால் அல்லது கேலிக்கு உள்ளாகிறோம் என நினைத்து மனமுடைந்து தற்கொலை முயற்சிக்கும் போய் விடுகிறார்கள் என மருத்துவ ஆராய்ச்சியாளர்க்ள கூறுகின்றார்கள். பிறந்த குழந்தைகளுக்கு தாய் பால் அளித்து வந்தாலே ஊளைச்சதை ஏற்படும் வாய்ப்புகள் பின்னாளில் அக்குழந்தைக்கு கம்மி ஆகிறது எனவும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
    எனவே குழந்தைப் பருவத்தில் இருந்தே உடற்பயிற்சி, சரியான உணவுப் பழக்கம்போன்றவற்றில் கவனமாக இருந்து ஊளைச்சதை எனும் சமூக நோயை விரட்டி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ்வோம்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-ob2.png  

  5. #1445
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஈரல் சாப்பிடலாமா..? கூடாதா..? - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..

    ஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசி என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். வீட்டில் கோழி அறுத்தால் ஒரு துண்டு ஈரல் கிடைக்கும். சிலர் சுட்டு தின்பார்கள். குழம்பில் போட்டால் தனியாக மிதக்கும். கறி வெந்த பிறகு கொஞ்ச நேரம் கழித்து போட வேண்டும்.
    ஆட்டு ஈரல் கடைகளில் சாதாரணமாக கிடைக்கும். இப்போது சிக்கன் கடைகள் முளைத்தபின்பு கோழி ஈரலும் எங்கும் கிடைக்கிறது. நண்பர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்,'' கோழி ஈரல் சாப்பிடக்கூடாது பாஸ் " ஆட்டு ஈரல் சாப்பிடலாம் என்றார். ஆனால் அவரால் காரணத்தைச் சொல்லி விளக்க முடியவில்லை.
    வீதிதோறும் அசைவக் கடைகள் பரவிவிட்ட நிலையில் இப்போது ஈரல் கிடைப்பது சுலபம். ஆனால் நண்பர் சொன்னது போல பலருக்கு குழப்பம் இருப்பதை கவனித்திருக்கிறேன். உயிர்ச்சத்துக்களை சேமித்து வைத்து தேவையானபோது வழங்குவது ஈரலின் முக்கிய பணி. முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது ஈரல்.
    அனைத்து உயிர்ச்சத்துக்களும் இதில் உண்டு..குறைந்த அளவில் முழுமையான சத்துக்களை கொடுக்கும் வேறு உணவைக் குறிப்பிட முடியாது. இரும்பு, செலினியம், துத்தநாகம் என்று பயனுள்ளவை அதிகம் இருக்கிறது. ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல உணவு. போலிக் அமிலமும்,பி 12 உயிர்ச்சத்தும் இதன் சிறப்பு.
    அதிக ஏ வைட்டமின் காரணமாக கர்ப்பிணிகள் தவிர்க்கவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் ஊட்டச் சத்து பற்றாக்குறை உள்ள நம் நாட்டில் மிகு விட்டமின் காரணமாக பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஈரல் சாப்பிடும் அன்று ஏதேனும் காரணங்களுக்காக விட்டமின் மாத்திரை எடுப்பவர்கள் அன்று தவிர்த்துவிடலாம்.
    எதிரான விஷயம் என்று பார்த்தால் கொலஸ்ட்ராலை குறிப்பிடலாம். ஆட்டு ஈரலில் கொஞ்சம் அதிகம். கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். மற்றவர்களும் ஒரு முழு பூண்டை தட்டி உடன் சேர்த்துக்கொள்ளலாம். பூண்டு கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
    பொதுவாக கலர் பவுடர் தூவப்பட்ட சிக்கன் கடைகளில் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல! சாலையோரக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது. உணவகங்களில் பதப்படுத்தப்பட்ட ஈரல் இருக்க வாய்ப்புண்டு. ஈரல் மட்டுமல்ல, அசைவ உணவுகளை வீட்டில் தயாரிப்பதே மிகச் சரி.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-liver.jpg   Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-liver-1.jpg   Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-liver-chart.jpg  

  6. #1446
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நிரந்தரமாக கால், இடுப்பு, முதுகுத்தண்டு வலி மாற இயற்கை உணவு மருந்து !!!

    முதுகுத்தண்டு பிரச்சனைகள், முதுகு வலி, கால் வலி போன்றவை தொடர்ந்து அமர்ந்து கொண்டு இருப்பதாலும், உடற்பயிற்சிகள் இல்லாததனாலும் தோன்றி மிகுந்த வேதனையும், சிரமத்தையும் தருகின்றன. இந்த வலியால் அவதிப்படுபவர்கள் நிரந்தரமாக இரண்டு மாதத்திற்க்குள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு விடுதலை பெற கீழே உள்ள பழங்களை சாப்பிட்டு வரவேண்டும். தினமும் இரவு படுக்கபோகும் முன்பு தவறாமல் சாப்பிட வேண்டும்.
    1 உலர்ந்த அப்ரிகாட்
    1 உலர்ந்த அத்திப்பழம்
    5 உலர்ந்த பிளம்ஸ்
    ஒவ்வொரு உலர்நத பழமும் தனித்தனியான ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டிருந்தாலும், மூன்றும் ஒன்றாக கலந்து சாப்பிடும்போது ஒரு அரிய மருந்தாக எண்ணற்ற குணங்களுடன் ஆண்களுக்கும், பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் மேற்சொன்ன பிரச்சனைகளிலிருந்து தீர்வு தருகிறது. முதுகெலும்புகளுக்கு நல்ல வலுவையும், தேய்ந்துபோன ஜவ்வுகளை திரும்பவும் பழைய நிலைக்கு வளர்த்து உறுதியாக்குகின்றன.
    இந்த இனிய இயற்கையான பழங்களை சாப்பிட்டு ஆச்சர்யத்தக்க வகையில் குணமடையலாம். செலவில்லாத இந்த எளிய மருந்தை முயற்ச்சித்துப்பார்கலாமே !!!!



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-apri.jpg  
    Lakschellam likes this.

  7. #1447
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கொழுப்பு உடலில் செய்யும் மாற்றங்கள் - தெரிந்திருக்க வேண்டியவை

    நன்றி: ஆசிரியர் நியான்ட்டர் செல்வன்
    ஆரோக்கியம் & நல்வாழ்வு குரூப்
    வெண்ணெய் அல்லது எதாவது கொழுப்பை எடுத்து காற்றுபடும்படி வெளியே வையுங்கள். விரைவில் கருப்பு நிறம் படிய துவங்கும். அதன்பின் கொழுப்பு கெட்டுபோய்விடும். இதன் பெயர் ஆக்சிடைசேஷன். காற்றில் உள்ள ஆக்ஸிஜன் கொழுப்புக்கு எதிரி. விரைவில் கொழுப்பை கெட்டு போக வைத்துவிடும்.
    இதை நினைவில் கொள்ளவும். அடுத்து நம் லிவருக்கு செல்வோம்.
    உணவில் உள்ள சர்க்கரை இங்கேதான் ட்ரைகிளிசரடு கொழுப்பாக மாற்றபடும். அதை ரத்தத்தில் சுமந்து செல்ல வி.எல்.டி.எல் எனும் வாகனம் தயார் ஆகும். ஏராளமா சர்க்கரை உணவில் இருந்தால் ஏராளமா ட்ரைகிளிசரைடு இருக்கும். அந்த சூழலில் நிறைய சின்ன, சின்ன வி.எல்.டி.எல்லை லிவர் உற்பத்தி செய்யும். எவ்ளோ சீக்கிரம் ட்ரைகிளிசரைடை லிவரில் இருந்து அனுப்பறமோ, அவ்ளோ சீக்கிரம் லிவருக்கு நல்லது. காரணம் அத்தனை சர்க்கரையை அது புராசஸ் செய்யணும்.
    இப்ப சின்ன சைஸ் வி.எல்.டி.எல்லில் ஏறி ஜம் என ட்ரைகிளிசரடு நம் ரத்தகுழாய் வழியா தொப்பைக்கு செல்லும். அங்கே நம் தொப்பை சைஸை இன்னும் ஓரிரு இஞ்சு பெரிதாக்கும்
    ட்ரைகிள்சர்டை சுமந்து செல்லும் பணியை செய்து முடித்த வி.எல்.டி.எல் இப்ப எல்.டி.எல் என அழைக்கபடும். எல்.டி.எல்லுக்கு அடுத்த பணி ஒன்று உண்டு. குப்பை உணவை உண்டதால் இதயகுழாயின் இன்ஃப்ளமேஷன் எனும் புண் உருவாகி இருக்கும். அதை குணப்படுத்த எல்.டி.எல் மேலே பூசப்படும்.
    மீதம் இருக்கும் எல்.டி.எல் என்ன ஆகும்? இது சின்ன சைஸ் எல்.டி.எல் என்பதால் நம் ரத்தகுழாயில் உள்ள ஓட்டைகளில் உள்லே நுழைந்து மாட்டிகொள்ளும்.
    இப்ப முன்பு சொன்ன ஆக்ஸிடைஸேஷன் (கொழுப்பு/ஆக்ஸிஜன்) நினைவுக்கு வருதா?
    குட்....நம் ரத்தத்தில் இருக்கும் ஏராளமான ஆக்ஸிஜன் ரத்தகுழாயில் இருக்கும் சின்ன சைஸ் எல்.டி.எல்லை தாக்கும். ஆக்ஸிடைசேஷன் நிகழும். கொழுப்பு கெட்டு புண் உண்டாகி மாரடைப்பு நிகழும். இதை தடுக்கும் சக்திவாய்ந்த மினரல்களை ஆண்டிஆக்சிடண்டுகள் என்கிறோம். ஆனால் அவையும் ஒரு எல்லை வரை தான் நம்மை காப்பாற்றும்.
    இப்ப கொழுப்பு உணவு நம்மை எப்படி காப்பாற்றும் என்பதை பார்ப்போம்.
    வெண்ணெய்/முட்டை போன்றவை நம் லிவருக்கு பெரிய சைஸ் எல்.டி.எல்லை உற்பத்தி செய்ய உதவும். கொழுப்பு உணவில் ட்ரைகிளிசரைடு எண்ணிக்கையும் குறையும். ஆக லிவர் பெரிய சைஸ் டைப் ஏ எல்.டி.எல் உருவாக்கும்.
    இந்த பெரிய சைஸ் எல்.டி.எல் நம் ரத்தகுழாயில் உள்ல ஓட்டைகளை விட அளவில் பெரியவை என்பதால் அவை நம் ரத்தகுழாயில் ஒட்டாது. ஆக்சிடைசேஷன் நிகழாது.
    ஆனால் பெரிய சைஸ் எல்.டி.எல் எடை அதிகம். நார்மல் கொலஸ்டிரால் டெஸ்டால் நம் உடலில் உள்ள எல்.டி.எல் என்ன வகை என்பதை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை. எடை அதிகம் உள்ள பெரிய சைஸ் எல்.டி.எல் நம் எல்.டி.எல் கணக்கை அதிகம் காட்டும். உடனே "எல்டிஎல் அதிகம் ஆயிடுச்சு, பட்டரை குறை, முட்டையை நிறுத்து என சொல்லி" அரிசியை விழுங்க வைத்து சின்ன சைஸ் எல்.டி.எல்லை உருவாக்கி நம் எல்.டி.எல் அளவை குறைந்து நம் உயிருக்கு உலைவைத்துவிடுவார்கள் மருத்துவர்கள்.




    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-h-l-dl-chart.jpg   Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-h-l-chart-1.jpg   Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-hdl-ldl.jpg  

  8. #1448
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    விந்தைகள் செய்யும் விதைகள்!

    விருட்சத்தையே தன்னுள் அடைகாத்துவைத்திருக்கும் விதைகளின் அருமையை நாம் அறிவது இல்லை. பூ, காய், கனிகளின் பலனை மட்டுமே பெற்று, விதைகளைத் தூர எறிந்துவிடுகிறோம். இப்படி, அன்றாடம் பயன்படுத்தத் தவறி குப்பையில் கொட்டும் விதைகளே, நம் உடல் ஆரோக்கியத்துக்கு வித்திடுபவை... விதைகளின் மருத்துவப் பயன்களையும், அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் தெளிவாக விளக்குகிறார் சித்த மருத்துவர் நந்தினி சுப்பிரமணியம்.

    தர்பூசணி விதை

    பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி, புரதச் சத்து போன்ற பல சத்துகளை உள்ளடக்கியது. இந்த விதை, உணவு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிப்பதுடன், நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். இதன் மேல் தோலை நீக்கி, காயவைத்து நெய்யில் வறுத்து, உப்பு, மிளகு சேர்த்து உணவோடு சேர்த்து சாப்பிடலாம்.

    முள்ளங்கி விதை

    ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டும் தன்மை இதற்கு உண்டு. ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு, கால் வீக்கம், மது அருந்துவதால் வரும் தலை சுற்றல், தொண்டைப்புண் போன்ற பல உபாதைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. அரை ஸ்பூன் அளவுக்கு நீரில் கொதிக்கவைத்து, காலை, மாலை என மூன்று நாளைக்கு தொடர்ந்து அருந்தி வந்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற வாயுக்கள் நீங்கும். நெய்யில் வறுத்த முள்ளங்கி விதைகளைப் பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து அருந்தி வந்தால், ஆண்மை அதிகரிக்கும்.
    contd..



  9. #1449
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    பூசணி விதை

    ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையும், இதயத்துக்கு வலு சேர்க்கக்கூடியதுமான பூசணி விதையில் அதிக அளவு மக்னீஷியம் சத்து உள்ளது. பூசணியில் உள்ள துத்தநாகச் சத்து, உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தைப் பலப்படுத்தும். பூசணி விதைகளும், இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயும் ஆண்களுக்கு ஏற்படும் விரைவீக்கம் போன்ற பாதிப்புகளைச் சரிசெய்யப் பயன்படுத்தப்படுகின்றன. பெண்கள், பூசணி விதையை நெய்யில் வறுத்து சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்படுதல் குறையும். ஆண்கள் பூசணி விதையைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் விந்தின் கெட்டித்தன்மை அதிகரிக்கும். பூசணி விதையை நசுக்கி கஷாயமாக்கிப் பருகினால், வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும்.

    வெண்டைக்காய் விதை

    புரதச் சத்து, கொழுப்புச் சத்து, வைட்டமின் பி போன்ற பல்வேறு சத்துக்கள் இதில் உள்ளன. குறிப்பாக, இதன் மேல் தோலில் நார்ச் சத்து அதிகம் உள்ளது. இந்த விதைகளை நீரில் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி இளஞ்சிவப்பாக வறுத்து சமையலில் பயன்படுத்தலாம். நன்கு காயவைத்த வெண்டை விதையுடன், காபி கொட்டையை சேர்த்து அரைத்துப் பருகினால் புத்துணர்ச்சி கிடைப்பதுடன் தீராத தலைவலியும் நீங்கும்.
    முருங்கை விதை
    கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் முருங்கை விதைக்கு உண்டு. முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடல் சோர்வு குறையும். ரத்த சோகை நீங்கும். எலும்புகள் பலப்படும். பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும். விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும், நரம்புகள் பலப்படும்.
    contd..



  10. #1450
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,261

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    சுரைக்காய் விதை

    சிறுநீரை அதிகப்படுத்துதல், பித்தத்தைக் குறைத்தல், உடல் வெப்பத்தைக் குறைத்து உடலுக்கு சக்தியை அளித்தல் போன்ற பல பயன்களை தரக்கூடியது சுரைக்காய் விதை. வெயிலில் காயவைத்து மேல் தோலை நீக்கிய பிறகு கிடைக்கும் பருப்பு போன்ற விதைகளை உணவில் பொடி செய்து சேர்த்துச் சாப்பிடலாம். இனிப்புப் பண்டங்களில், முந்திரிப் பருப்புக்குப் பதிலாகவும் இதனை சேர்த்துக்கொள்ளலாம்.

    நாவல் கொட்டை

    சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து, நாவல் பழத்தின் கொட்டை. இதில் உள்ள ஜம்போலின் என்ற வேதிப் பொருள், மாவுச் சத்து சர்க்கரையாக மாறுவதைக் கட்டுப்படுத்துகிறது. நாவல் கொட்டையை, நிழலில் உலர்த்தி லேசாக வறுத்து, வெந்தயத்துடன் சேர்த்து அரைத்து நீர் அல்லது மோருடன் கலந்து பருகலாம். மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். சிறுநீரில் வெளியேறும் சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் அடங்கும். நா வறட்சியும் நீங்கும். அதிகமாக உட்கொண்டாலும் மலச்சிக்கல் ஏற்படும் என்பதை நினைவில் நிறுத்தவும்.
    contd..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter