Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1461
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    அறிகுறிகள் :
    இவ்விரு மூட்டு நோய்களையும் சாதாரணமாக வரும் வலியை வைத்து கண்டறியலாம். காலையில் விழிக்கும்போது அதிக வலியுடன் வெதுவெதுப்பு தன்மை உடலிலிருந்தால் அதை ரியூ மேட்டாய்டு நோய் அறிகுறி என அறியலாம். முக்கியமாக குளிர்காலங்களில் உடற்பயிற்சி மற்றும் நடக்கும்போது அதிக வலி ஏற்பட்டால் அது ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோய் அறிகுறியாகும்.

    ரியூமேட்டாய்டு ஆர்த்தரடிஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் வழிகள்:

    1-வேகமாக நடத்தல், ஒத்தடம் கொடுத்தல், பசியை தூண்டுதல் மற்றும் கசப்பு தன்மை கொண்ட உணவுகளைச் சாப்பிடுதல், லேசாக பேதி உண்டாக்குதல் மற்றும் உட்புறமாக எண்ணெய் எடுத்துக் கொள்தல் ஆகியவற்றின் மூலமாக வாதத்தை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
    2-இலகுவான உணவினை உட்கொண்டபின் வேகமாக நடப்பதன் மூலம் எளிதில் ஜீரணமடைந்து ‘ஆமா’ உருவாவதை தவிர்க்கலாம்.
    3-சூடான சோறு அல்லது சூடான நீரை ஒரு பையில் நிரப்பி வெதுவெதுப்பான சூடு மூலமாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒத்தடம் கொடுப்பது வாதத்தைக் குறைக்கிறது. மேலும் வெதுவெதுப்பான சூடு ஆமாவை கரைக்க உதவுகிறது.
    4-பசி உணர்வை தூண்டுதல் மற்றும் கசப்புடன் கூடிய கார உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் செரிமான சக்தியை அதிகரிக்கலாம்.
    5-உட்புறமாக எண்ணெய் எடுத்து கொள்வதன் மூலம் அதிக வாதம் குறைக்கப்படுகிறது. உயவுத்தன்மை மூலம் உணவு வழிப்பாதையில் வாயு தொல்லையை நீக்குகிறது. மேலும் வாதத்தை கீழ்நிலைக்குக் கொண்டு வருகிறது.
    contd..



    Sponsored Links

  2. #1462
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    வலியைக் குறைக்க உதவும் வழிகள்:

    1-தினமும் காலையில் ஆமணக்கு எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட ரோஸ்ட் 50 கராடி மீது கல் உப்பை தூவி ஒன்று மட்டும் சாப்பிட வேண்டும். கராடி பசி உணர்வைத் தூண்டுவதோடு ஆமாவை செரிக்க உதவுகிறது. ஆமணக்கு எண்ணெய் உயவு தன்மைக் கொண்டிருப்பதால் உணவு மண்டலத்திலுள்ள அசுத்தப் பொருள்களை நீக்குகிறது.
    2-அஜ்வெய்ன் மற்றும் உலர்ந்த இஞ்சி பவுடர் (ஒரு மேசை கரண்டி) சமமாக சேர்த்து தயாரிக்கப்பட்ட கராடியுடன் மோர் சேர்த்துக் சாப்பிடுதல் அல்லது அதிகமாக சுடு தண்ணீரை குடித்தல் ஆகியவை செரிமான சக்தியை அதிகரிப்பதோடு, மூட்டு இணைப்புகளிலுள்ள வீக்கத்தைக் குறைக்கிறது.
    சுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை கலந்து குடித்தல் மற்றும் மோர் உட்கொள்ளுதல் கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கும். இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது.
    3-தண்ணீர் பாதியளவு குறையும்வரை சூடுபடுத்தி வெதுவெதுப்பாக குடிப்பதால் ‘ஆமாவை’ செரிக்க வைக்க உதவுகிறது.
    4-சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள், வாடாமல்லிகை இலைகள், வேப்பிலைகள், பாகற்காய், கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் பார்லி சேர்த்த உணவு பொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அரிசி சோறு, கொள்ளு, மூங், பியஸ் ஆகியவை உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    5-பால், தயிர், பன்னீர், பாலாடையுடன் கூடிய கரும்புச் சாறு குறிப்பாக வெல்லம், சர்க்கரை, பருப்பு, மீன் மற்றும் நறுமணப் பொருள் கொண்ட பொருள்களை உட்கொள்ள வேண்டும்.
    6-தினமும் உடற்பயிற்சி (வாரத்தில் 4 நாள்களுக்கு 30_லிருந்து 40 நிமிடம் வரை நடக்க வேண்டும்) செய்தல் அவசியம்.
    7-தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும்.
    contd..



  3. #1463
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் (சாந்திவாதா) கட்டுப்பாட்டில் வைத்தல் :

    1-உயவு தன்மை கொண்ட எண்ணெய்ப் பொருள்களை உட்கொள்ளுதல், ஒத்தடம் கொடுத்தல் மற்றும் வாதத்தைக் குறைக்கும் உணவுப் பொருள்களை உட்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமாக ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
    2-எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உயவுத் தன்மையை ஏற்படுத்தலாம். எள் எண்ணெய், விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது மகாநாராயண தைலா போன்ற மருத்துவ எண்ணெய் ஆகியவைகளைக் கொண்டு மசாஜ் செய்யலாம். எலும்பு மூட்டு இணைப்பு பகுதியில் வீக்கமடைந்த பகுதியை குளிர்காற்று நேரிடையாக படாதவாறு துணி அல்லது பான்டேஜ் மூலமாக மறைக்க வேண்டும்.
    3-எண்ணெய் உபயோகித்த பிறகு நீராவியுடன் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
    4-தீவிர உணவு கட்டுப்பாட்டின் மூலம் வாதத்தை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
    5-ஒரு மேசை கரண்டி டில் ஆயில், ஒரு மேசை கரண்டி மாட்டு நெய், அரை மேசை கரண்டி இஞ்சி சாறு, அரை மேசை கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கரும்பு சாறு ஆகியவை சேர்ந்த கலவை வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது.
    6-இதற்கு மாற்றாக வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் அதிக செரிமானத்தையும், வாதத்தை குறைக்கலாம்.
    7-5 கிராம் இஞ்சி கூழுடன் கூடிய ரோஸ்ட், சீரகம், கல் உப்பு, கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி பவுடர் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து உட்கொள்வதால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
    8-போதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து உணவு சமைக்கப்படவேண்டும். பால், சோறு, மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும்.
    உடலில் எவ்வித வலியும் இல்லாமல் நிம்மதியாக ஆரோக்கியத்துடன் வாழ ஆயுர்வேத சிகிச்சை உங்களுக்கு உதவியாக இருக்கிறது. இச்சிறிய குறிப்புகளை மேற்கொண்டு வாழ்க்கை முறையை மாற்றி நலமாக வாழலாம்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-2.jpg  

  4. #1464
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஒன்பது துளைகளின் உன்னதம்...

    நம் உடலுக்கு வாய் துளை ஒன்று, மூக்குத் துளைகள் இரண்டு, கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, பிறப்புறுப்புத் துளை ஒன்று மற்றும் ஆசனவாய்த் துளை ஒன்று ஆகிய ஒன்பது துளைகளை இறைநிலை அமைத்துத் தந்திருக்கிறது.
    இந்தத் துளைகளுக்கென்று தனிப்பட்ட பயன்பாடுகள் இருந்தாலும் எல்லாத் துளைகளும் உடற்கழிவு வெளியேற்றத்தில் உன்னத பங்கு வகிக்கின்றன. உடற் கழிவேற்றத்தில் இந்தத் துளைகளின் அற்புதம பங்களிப்பை ஒவ்வொன்றாக இனிப் பார்ப்போம்.

    * வாய்: நம் உணவான திடப்பொருள் விஷத் தன்மையால் (அதீத நெருப்பால்) கெடும்போது வாந்தியாகவும், ஆகாச சக்தியால் கெடும்போது செரிமானம் குறைபட்டு நாக்கில் மஞ்சள் படலமும் புளியேப்பமும், காற்று கெடும்போது கொட்டாவி மற்றும் இருமளாகவும், நீர்த்தன்மை கெடும்போது நாக்கில் வெண் படலமும் வாயில் நீர் கோழையும், வெளிப்படுகின்றன. ஆக, நம் வாயானது நாம் உண்ட உணவின் கழிவுத் தன்மைக்கு ஏற்பவே வேளிப்பாடு காட்டுகிறது.

    * மூக்கு: நம் நெஞ்சுக் குழிக்குள் காற்றானது நீர்க்கழிவால் கெடும்பட்சத்தில் அது மூக்கு மற்றும் வாய் வழி சளியாக வெளிப்படுகிறது. அதுவே நம் காற்றானது வெளிப்புற திடப்பொருளால் (தூசு மற்றும் துகள்களால்) கெடும்போது நமக்கு அலர்ஜி மற்றும் ஆஸ்துமாவாக வெளிப்படுகின்றன. இவ்வித கழிவுகளை வெளியேற்றவே மூக்கு மற்றும் நுரையீரலின் உட்புறச் சுவற்றில் உள்ள சவ்வூடு பூச்சானது (Epithellial linning) கிருமியின் உதவியைக் கொண்டு காற்று கழிவுகளை சளிக் கோழையாக மாற்றி வெளியேற்றம் செய்கிறது.

    3* கண்கள்: நம் உடலின் நெருப்பு சக்தி ஆகாச சக்தி குறைவால் கெடும்போது (சோகம் மற்றும் வருத்தம் அடையும் போது) நம் கண்களில் கண்ணீர் வருகிறது. அதே போல ஆனந்தத்தால் ஆகாச சக்தி மிக அதிகமாகும் போதும் நம் கண்களில் கண்ணீர் வரும். அப்படி கண்ணீர் வெளிப்படும் போதெல்லாம் நம் கல்லீரலின் அசுத்தம் நீக்கப்பட்டு புத்துணர்வு பெறுகிறோம். துன்பத்திலும் அதீத ஆனந்தத்திலும் அழாதவர்களுக்குத்தான் கண் அழுத்த நோய் (Glucoma) மற்றும் கண் வரட்சி நோய்கள் ஏற்படுகின்றன.

    * காதுகள்: நம் உடலில் ஆகாச சக்தியானது நீரால் கெடும்போது சீழாகவும், நெருப்பால் கெடும்போது குரும்பியாகவும், காது வழி வெளிப்படுகிறது. அதே ஆகாச சக்தியானது காற்றால் கெடும்போது சைனஸ் (Sinus) அடைப்பாக வெளிப்படுகிறது.

    * ஆசனவாய்: நம் செரித்த உணவின் இரசமானது, மண்ணீரல் (நீர்) சக்தியிழப்பால் வயிற்றுப் போக்காகவும் (Diarrhoea), கல்லீரல் (ஆகாச) சக்தியிழப்பால் சீதபேதியாகவும் (Dysentery), நுரையீரல் (காற்று) சக்தியிழப்பால் வாய்வு பிரிதலாகவும், இருதய (நெருப்பு) சக்தியிழப்பால் வறண்ட கருத்த வலியுடன் கூடிய இருக்கமான மலமாகவும் ஆசனவாய் வழியே வெளிப்படுகின்றன.

    * பிறப்புறுப்பு: நம் உடலின் நீர்ப் பொருளானது நெருப்பால் கெடும்போது சிறுநீர் தொற்றாகவும், காற்றால் கெடும்போது வியர்வையாகவும், ஆகாசத்தால் கெடும்போது கண்ணீராகவும், திடப்பொருளால் கெடும்போது சிறுநீரக கற்களாக சிறுநீர்ப் பாதையில் வெளிப்படுகின்றன. அடுத்து, உடலின் திடப்பொருளான விந்து (ஆண்களில்) நீர்ச் சக்தியை இழக்கும்போது நீந்தும் தன்மையை இழந்தும் (Immotile), நெருப்புத் தன்மையை இழக்கும்போது வீரியம் குறைந்தும் (Reduced vitality), காற்று சக்தியை இழக்கும்போது வேகம் குறைந்தும் (Reduced agility), ஆகாச சக்தியிழக்கும்போது உயிரற்றும் (Aspermocytes) விந்துக்கழிவாக பிறப்புறுப்பு வழியே தன்னிச்சையாக வெளிப்படுகிறது. இதுவே பெண்களிடத்தில் திடப்பொருளான நாதம் (கருமுட்டை) நீரால் கெடும்போது வெள்ளைப்பட்டும், நெருப்பால் கெடும்போது அதிக இரத்தப்பட்டும், காற்றால் கெடும்போது வலி அதிகப்பட்டும், ஆகாச சக்தி கெடும்போது மாதப்போக்கு அற்றும் மாதவிடாய் சுழற்சியில் நாதக் கழிவாக வெளிப்படுகிறது.
    உடற் கழிவுகளே நோய் வளர்க்கும் களமாகும்!
    உளம் உணர்ந்து, கழிவகற்றி வாழ்வோம் வளமாக!



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-29.jpg  

  5. #1465
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது?

    மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது.
    வீட்டில் காய்ச்சி ஆறிய தண்ணீரைக் குடித்துவிட்டு வேறு இடங்களுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லும்போது அங்குள்ள தண்ணீரைக் குடித்தால், அடுத்த நாளே சளிபிடித்துவிடுகிறது.
    மினரல் வாட்டர் என்று பாட்டில்களில், கேன்களில் கிடைக்கும் தண்ணீரைக் குடித்துப் பழகிவிட்டோம். உண்மையில் அதில் ஊட்டச் சத்துக்கள் உள்ளனவா, சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் தண்ணீரில் உள்ள சத்துக்கள் நீக்கப்பட்டு வெறும் சக்கையான நீரைத்தான் பருகுகிறோமா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. நீரின் தன்மை பற்றி சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் எழிலனிடம் கேட்டோம்.
    'நம் உடலில் 50 முதல் 60 சதவிகிதம் வரை நீர்தான். ஒரு மனிதனுக்கு சராசரியாகத் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்பது அவனுடைய உடல், வாழும் இடத்தின் சுற்றுச்சூழல், வேலை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும். ஒருவருடைய உடல் எடையை வைத்து, அவருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவைக் கணக்கிடலாம். அந்தக் காலத்தில் இயற்கையிலேயே மூலிகைகள் கலந்த, சூரிய ஒளிபட்ட, கிருமிகளை மீன் தின்று சுத்தம் செய்த நீரைத்தான் குடித்து வந்தோம். அப்படிப்பட்ட சுத்தமான தண்ணீர், இன்று மனிதர்
    களால் மாசுபட்டுள்ளது. நம் நாட்டில், சுத்தமான குடிநீர் என்பது வெறும் 33 சதவிகிதம் மட்டுமே. இதனால்தான் கிருமியால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது'' என்றார் டாக்டர் எழிலன்.
    நாம் பருகும் நீர் எப்படி சுத்திகரிக்கப்படுகிறது என்பது பற்றி அக்வா டெக் சிஸ்டம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மூர்த்தியிடம் கேட்டோம்... 'வீட்டில் பொருத்தப்படும் வாட்டர் பியூரிஃபையரிலும், தண்ணீர் கேன் நிரப்பும் தொழிற் கூடங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்படுகிறது. முதலில் கேண்டில் பில்டர் என்று சொல்லப்படும் தொழில்நுட்ப முறையில், இயற்கை மாசு வெளியேற்றப்பட்டு தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. எதிர்சவ்வூடு பரவல் தொழில் நுட்பத்தின்படி மைக்ரான் அளவிலான சவ்வு வழியாக சுத்திகரிக்கப்பட்ட நீர் செலுத்தப்படுகிறது. அதையடுத்து கார்பன் ஃபில்டர் செய்யப்படுகிறது. பின்னர் ஒரு மைக்ரான் சவ்வு வழியாகவும், அதனையடுத்து 0.0001 மைக்ரான் அளவிலான சவ்வு வழியாகவும் அனுப்பப்பட்டு, தண்ணீரில் இருக்கும் மாசுக்கள் அகற்றப்படுகின்றன. இப்படிக் கிடைக்கும் தண்ணீர் மிகவும் சுத்தமானது.
    வீட்டில் பயன்படுத்தும் சில சுத்திகரிப்பான்களிலும், தொழிற்கூடங்களிலும் அல்ட்ராவயலட் கதிர்களால் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் கிருமிகள் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. இந்த முறையில் இருந்து பெறப்படும் நீரின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.
    கேன் நிறுவனங்களில் தண்ணீர் சுத்திகரிக்கப்படும் முறை
    இந்தியத் தர நிர்ணய விதிகளை, சில நிறுவனங்கள் முறையாகக் கடைப்பிடிக்கின்றன. ஆனால், சில நிறுவனங்கள், தரமற்ற கேன்களை உபயோகப்படுத்துவதும் நடக்கிறது. சுத்திகரித்த தண்ணீர் சுகாதாரமற்ற கேன்களில் சேரும்போது, மீண்டும் தண்ணீரின் தரம் கெட்டுவிடுகிறது.
    contd..



  6. #1466
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    மினரல் வாட்டர் என்றால் என்ன?

    காசு கொடுத்து வாங்கும் பாட்டில்களில் உள்ள தண்ணீர்தான் மினரல் வாட்டர் என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மை இல்லை. நாம் வாங்கும் பாட்டில்களில் இருக்கும் தண்ணீர் 'சுத்திகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட குடிநீர்’ (packaged Drinking water) அவ்வளவு தான். மினரல் வாட்டர் என்பது கனிமங்கள் சரியான அளவில் கலக்கப்பட்ட சத்தான குடிநீர். ஒரு லிட்டர் தண்ணீரைத் தயாரிக்கவே 100 ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும்' என்றார்.
    'தண்ணீரைச் சுத்தம் செய்ய, பல நவீன வசதிகள் வந்து விட்டாலும், அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் தண்ணீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படுத்திய முறைகள், அவற்றுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல' என்கிறார் சித்த மருத்துவர் திருநாராயணன்.
    மேலும் அவர் கூறுகையில் 'தண்ணீரின் கடினத்தன்மையை மாற்றுவதற்கு, அந்தக் காலத்தில் நெல்லிமரக் கட்டையையும் தேற்றாங் கொட்டையையும் (தேத்தா விதை) பயன்படுத்தினார்கள். அதில் இருக்கும் பாலிபீனால் என்னும் பொருள், தண்ணீரில் இருக்கும் தாதுக்களை மென்மையாக்குவதால், நீரின் கடினத்தன்மை குறைந்துவிடுகிறது.முன்பெல்லாம் வீட்டுக் கொல்லையில் இருக்கும் கிணற்றில், நெல்லிமரக் கட்டையைப் போட்டுவைப்பது வழக்கம். அல்லது, தேற்றாங் கொட்டைகளைப் பொடித்து, ஒரு துணியில் கட்டி இறக்கிவிடுவார்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றுவார்கள். கிணற்றில் மட்டுமல்ல, பானையில் கூட தேத்தா விதைகளைப் பொடித்து, துணியில் கட்டிப் போட்டுவைக்கலாம்.இப்போதும் நம் வீடுகளில் வரும் நீர் கடின நீராக இருந்தால், சம்ப் மற்றும் மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகளில் நெல்லிக் கட்டை அல்லது தேத்தாங் கொட்டையைப் போட்டுவைக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.
    contd..



  7. #1467
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி


    நீரைக் குடிக்கும் முறை

    மோர் பெருக்கி, நீர் சுருக்கி, நெய் உருக்கி உண்பவர்தம் பேர் சொல்லப்போகுமே பிணி’ என்பது தேரையர் பாடல்.
    நீர் சுருக்கி’ என்பது நீரைக் காய்ச்சி (அதாவது வற்ற வைத்து) குடிக்க வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. எனவே, காய்ச்சிய தண்ணீரைக் குடிக்கும் பழக்கமும் பாரம்பரியமாக இருந்துவந்ததுதான். அதிலும், செம்புப் பாத்திரத்தில் காய்ச்சிக் குடித்தால், உடலில் இருக்கும் நிறமிகள் மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது.

    தண்ணீர் சில மருத்துவப் பலன்கள்

    மருதம்பட்டையை, வெதுவெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, காலையில் அருந்தினால், இதயம் பலப்படும். ரத்தம் உறையாமைப் பிரச்னையைத் தடுக்கும் நல்ல மருந்து இது.
    சுத்தமான சந்தனத்தை உரைத்து, அதை மிளகு அளவு எடுத்து, 60 மி.லி. தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும்.
    பெருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மறுநாள் முழுக்கக் குடிப்பதற்கு அந்த நீரையே பயன்படுத்தி வந்தால், போதைப் பொருட்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். மேலும், செரிமானத்தையும் சீராக்கும்.
    ஓமம் ஊறவைத்த தண்ணீரை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், செரிமானக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்போக்கு இருந்தாலும் கட்டுப்படுத்தும். நம் வீடுகளில் முன்பெல்லாம் 'ஓமவாட்டர்’ கண்டிப்பாக இருக்கும். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்பட்டால், நல்ல மருந்து அது.
    நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் சதகுப்பையை, கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அருந்தினால் செரிமானத்தைச் சீராக்குவதுடன், வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பதற்கும் நல்ல மருந்தாகும். அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் 'கிரைப் வாட்டர்’ போன்று செயல்படும்.
    கொதிக்கும் தண்ணீரில் புதினா இலையைப் போட்டு வைத்திருந்து, அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், கிருமிகள் வராமல் தடுக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய மவுத்வாஷ் இது.
    வில்வ நீர், துளசி நீர் இரண்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த உதவும்.

    காய்ச்சிய தண்ணீர்

    தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள்’ என்கிறார்கள். தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, 99.9 சதவிகிதம் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் அழிகின்றன. ஆனால், பலருக்கு முறையான கொதிக்கவைத்தல்’ பற்றிச் சரியான புரிதலோ வழிகாட்டுதலோ இல்லை. தண்ணீரை அடுப்பில் வைத்து, லேசாகச் சூடு வந்ததுமே அடுப்பை அணைத்துவிடுகின்றனர். நீரை நன்றாகக் கொதிக்கவைத்து, குமிழ்கள் வரும்போது, அந்தக் கொதிநிலையிலேயே 10 நிமிடங்கள்் இருக்கவேண்டும். இந்த நீரை ஆறவைத்து, வடிகட்டி அன்றே குடித்துவிட வேண்டும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் பருகுவதால், எந்த நன்மையும் இல்லை. மேலும், பானையில் வைத்திருக்கும் நீராக இருந்து, ஒவ்வொரு முறையும் கையை விட்டு்த் தண்ணீரை எடுக்கும்போது, நம் கை மூலம் சில கிருமிகளை உள்ளேவிடுகிறோம். எனவே, தண்ணீரை முகந்து குடிக்காமல், ஊற்றிக் குடிப்பதுதான் நல்லது' என்கிறார் டாக்டர் எழிலன்.

    நன்றி: விகடன்


  8. #1468
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உணவே மருந்து

    பலமுறை படியுங்கள், மற்றவர்களுடன் share செய்யுங்கள்.

    நோய் வந்துவிட்டால் மருந்து சாப்பிட்டுத்தான் அதைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. அவரவர் உண்ணும் உணவு மூலமாகவே அதைச் சரி செய்து கொள்ளலாம். கேட்கும்போதே ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா! ஆனால் உண்மை அதுதான். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன. அதை நாம் சரிவரப் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம் என்பதை உணர வேண்டும்.
    உணவில் சேர்க்க வேண்டியதைச் சேர்த்துக் குறைக்க வேண்டியதைக் குறைத்தால் நோய் தானாகவே சரியாகிவிடும். ஒழுங்கான உணவுப் பழக்கத்தினால், எந்தப் பிணியும் வராமல் தடுத்துக் கொள்ளலாம். நமது உடல் எப்போதும் தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருக்கிறது. தூக்கத்தில் நாம் சுவாசிக்கும்போது, நுரையீரல் சுருங்கி காற்றை உள்வாங்கியும், பிறகு வெளிவிடவும் செய்கிறது. இதன் மூலம் இதயம் சுருங்கி விரிந்து இரத்தத்தைச் சீராக உடல் முழுவதும் பரப்புகிறது.

    நாம் தினமும் வேலை செய்வதால், உடல் மெலிந்து போக வேண்டுமல்லவா! ஏன் அப்படி நடப்பதில்லை? கடினமான உழைப்பில் உடலில் தேய்த்து போகும் பாகங்கள் உடனுக்குடன் புதுப்பிக்கப்படுகின்றன. அப்படிப் புதுப்பிக்கும் பணியினைத் தொடர்ந்து செய்வது இரத்தமாகும். இரத்தம் உடலெங்கும் ஓடி, ஒவ்வொரு பாகத்திற்கும் வேண்டிய சத்துப் பொருளைக் கொடுத்துக் காப்பாற்றுகிறது. இப்படி நாம் உயிர்த்திருப்பதற்குரிய சரும பணியைச் செய்து வரும் இரத்தம், அவரவர் உண்ணும் உணவிலிருந்தே ஏற்படுகிறது. அவரவர் உண்ணும் உணவு, அவர்களுக்கு வேலை செய்யும் சக்தியை அளிக்கிறது.
    சிறுவர்களாக இருக்கும்போது தேகத்தின் பல உறுப்புகளை நன்கு வளர்க்கிறது. நாம் உண்ணும் உணவு, உடல் நன்கு வளர்ச்சியடைவதற்கும், உடலின் உறுப்புக்கள் நன்கு வேலை செய்தவற்கும் உதவும்படியாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயமாகும் மற்றும் உடலை எந்த நோயும் அண்டாமல் பாதுகாத்து ஆரோக்கியம் அளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். நாம் உண்ணும் உணவில் உடல் வளர்ச்சிக்கு அவசியம் வேண்டிய ஐந்துவித சத்துப் பொருள்கள் அடங்கியுள்ளன. அவை, கார்போஹைட்டிரேட், புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின், கனிச்சத்து ஆகியவை ஆகும். அரிசி போன்ற உணவுகளில் வேண்டிய மாவுச் சத்து கிடைக்கிறது.

    பருப்பு வகைகளில் புரோட்டீன் சத்து அதிகமாகக் கிடைக்கிறது. சமையல் எண்ணெயில் கொழுப்புச் சத்தும் அதிகம். பால்போன்ற உணவு வகைகளிலும் காய்கறியிலும் பலவிதச் சத்துக்கள் உள்ளன. இவற்றுள் மாவுச் சத்தும், புரோட்டீனும், கொழுப்புச்சத்தும், உடலுக்கு வேண்டிய சக்தியை வாங்கி அதைத் தொடர்ந்து இயங்கச் செய்வதால், உடலின் வளர்ச்சி சற்று அதிகமாகவே தேவைப்படுகிறது. வைட்டமினும், கனிச்சத்தும் உடலுக்கு அதிக அளவில் சக்தியைத் தருவதில்லை என்றாலும், உடலில் நிகழும் ஆயிரக்கணக்கான இயக்கங்கள் சீராகவும், செம்மையாகவும் நிகழ்வதற்குச் சிறிது அடிப்படை சக்தி எப்போதும் தேவைப்படுகிறது.
    இதற்கும் மேலாக அவரவர் தொழிலுக்கும், உழைப்புக்கும் தக்கவாறு சக்தி தேவைப்படுகிறது. உடலுழைப்பு அதிகமாக அதிகமாக சக்தியும் அதிகமாகத் தேவைப்படுகிறது. அதனால் சோற்றில் இந்தக் கஞ்சியை ஊற்றி ஊற வைத்து காலையில் உண்டு வர உடல் பலம் பெறும். இதில் மோர் கலந்து பருகினால் அதிக சூதகப் போக்கைக் கட்டுப்படுத்தும். உளுந்துப் பருப்பும் அரிசியும் கலந்து தயாரிக்கும் கஞ்சி உடலுக்கு நல்ல வலுவைத் தரும். வாயுவை உண்டு பண்ணும். வாத நோயாளிகள் இதை உண்ணாமல் இருப்பது நல்லது. வயதானவர்கள் கொள்ளும் அரிசியும் கலந்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் உடல் பலம் பெறும். கோதுமையைக் காய வைத்து இடித்து உமியை நீக்கிவிட்டு உடைத்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்தால் வாத சுரம், கபநோய்கள், சன்னி முதலியவை குணம் பெறும். அடிக்கடி குடித்து வர அதிகமாகப் போகும் சூதகம் கட்டுப்படும். இதில் பால் சேர்த்து உண்பது உடல் ஊட்டத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.
    contd..



  9. #1469
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    சோளக் கஞ்சியை, மோர் அல்லது தயிர் சேர்த்து உண்பது நன்மை பயக்கும். மலக்கட்டு நீங்கும். குழந்தைப் பேறில்லாத ஆண் பெண்கள் நாற்பத்தெட்டு நாட்களுக்கு இரவில் தினைக்கஞ்சியுடன் தேன் கலந்து உண்டு வர குழந்தைப் பேறு உண்டாகும். நெல் பொரியைக் கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் பித்தம் நீங்கும். பைத்தியம் பிடித்தவர்களுக்கு தினமும் ஒரு வேளையாவது இதைக் குடிக்கக் கொடுத்து வருவது நன்மை பயக்கும். பச்சரியும், சிறுபயறும் கலந்து வைக்கப்படும் கஞ்சி உடலுக்கு நல்ல வலுவைத் தரும்: பித்தத்தையும் குணப்படுத்தும். பார்லிக் கஞ்சியை பகலில் மட்டுமின்றி இரவிலும் சாப்பிடலாம்.
    அனைத்து வித நோயாளிகளுக்கும் பார்லிக் கஞ்சியே சிறந்தது. 200 கிராம் பார்லியுடன் 100 கிராம் ஜவ்வரிசி சேர்த்து இளம் கறுப்பாக வறுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு தேக்கரண்டித்தூளில் 250 மி.லி. நீர் விட்டு கஞ்சி காய்ச்சி சிறிது உப்பு சேர்த்து இரவு உணவுக்குப் பின் அருந்த மலக்கட்டு நீங்கும். குழந்தைகளுக்குக் காலை உணவாக இதையே கொடுக்க மலச்சிக்கல் தீரும். வெந்தயக் கஞ்சி, பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு நல்லது. காபி காய்ச்சலின் வேகத்தைக் குறைக்கும்.
    சளியை முறிக்கும். தினமும் காபி குடிப்பவர்களுக்கு சுவாசகாசம் வரும் வாய்ப்பு மூன்றில் இரண்டு பங்கு குறைவாக இருக்கும். அதிகமாக தேநீர், காபி குடித்தால் தாது மற்றும் உயிர்ச்சத்து இழப்பு ஏற்படும். சிறுநீரை அதிகளவு வெளியேற்றிவிடும். பித்தத்தை உற்பத்தி செய்யும் இதய நோயாளிகள் பருகக்கூடாது. அதிக காரச் சுவை உள்ள குழம்பு வாதத்தை அதிகப்படுத்தும். புளிப்புச் சுவை குறைத்துத் தயாரிக்கப்படும் குழம்புகள் வாத, பித்த கப நோய்களைப் போக்கும். உப்புச் சுவையையும் குறைத்துத் தயாரிக்கப்படும் குழம்புகள் வாத, பித்த, கப நோய்களைப் போக்கும்.
    உப்புச் சுவையையும் குறைத்துக் கொள்வது நன்மை பயக்கும். கேழ்வரகுக் கூழ் களி, உடலுக்கு நல்ல பலம் கொடுக்கும். உடல் சூட்டைத் தணித்து சமன்படுத்தும். பித்த நோய்களைப் போக்கும். வாத நோயைத் தோற்றுவிக்கும். கொழுக்கட்டை, இது உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். தாதுவை விருத்தி செய்யும். உடல் சூட்டைத் தணித்து சமன்படுத்தும். பித்தத்தையும் வாதத்தையும் அதிகப்படுத்தும்.
    contd..



  10. #1470
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    கோதுமை அடை : உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். தாதுவை விருத்தி செய்யும். கோதுமை ரொட்டி உட்கொள்வதால் உடலில் இரத்தம் உண்டாகும். உடல் பலம் பெறும். உடல் சூட்டை சிறிது அதிகரிக்கும். சவ்வரிசி நோயாளிகளின் பலவீனத்தைப் போக்கும். வெண்குட்டம், வெள்ளைப் போக்கை குணப்படுத்தும் அதிகமாக உட்கொண்டால் சளிப்பிடிக்கும். அதிக சூடான கெடுதலை விளைவிக்கும். சூடாக உண்டால் மனநோய், பித்த நோய் ஏற்படும். இரத்த பித்தம், தலை, சுற்றல், மயக்கம், எரிச்சல், பலக்குறைவு அதிக தாகத்தை ஏற்படுத்தும். உணவுப் பொருட்களை சூடாக உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். இளஞ்சூடான சோற்றை உண்பதே நம் உடலுக்கு நன்மை பயக்கும். வாத, பித்த கப நோய்கள் குணமடையும். நம் உடலுக்கு நல்ல வலிமையைத் தரும் மிகவும் குழைந்துவிட்ட சோறு உடலின் வெப்ப சமனிலையைக் கெடுக்கும்.
    உலர்ந்துள்ள சோறு அஜீரணத்தை உண்டாக்கும். காந்தலான சோறு சீரண உறுப்புகளைப் பாதிக்கும். நன்றாக வேகாத சோறு மந்தத்தை உண்டாக்கும். உணவு உண்ணும்பொழுது கடைசியில் தயிர்விட்டு சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டால் வாத, பித்த, கபக் குற்றங்களை நீக்கும்.
    கபக் குற்றங்களைச் சமன் செய்யும். சோறில் மோர் கலந்து சாப்பிடுவதால் நல்ல சீரணசக்தி உண்டாகும். பித்தம், மேகம், மூலமுளை குணமாகும். பாண்டு கிராணி நோய்களும் குணமாகும். உளுந்துச் சோறு உடலுக்கு நல்ல வலிமை தரும். பித்தநோய்களைப் போக்கும். வாதத்தை அதிகரிக்கும். எலுமிச்சம் சாதம் பித்தத்தைப் போக்கும். கண்பார்வையைத் தெளிவடையச் செய்யும். உடல் சூட்டைத் தணித்து சம நிலையில் வைக்கும். எள் கலந்து தயாரிக்கப்படும் சோறும், உடலுக்கு நல்ல வலிமை தரும். வாத பித்தக் குற்றகங்ளை நீங்கும். கபத்தைத் தோற்றுவிக்கும். ஓரளவு நெய் சேர்த்து சோற்றைத் தாளித்து உண்டு வந்தால் பித்த நோய்கள் குணமடையும். கண்களுக்கு ஒளியைக் கொடுக்கும். உடலுக்குப் பல நன்மைகளை உண்டாக்கும். கடுகு போட்டு, சிறிது புளியும் சேர்த்துத் தயாரிக்கப்படும் சோறு வாத, கப நோய்களைப் போக்கும். கம்புச் சோறு இரத்தத்தைச் சுண்டச் செய்துவிடும். புண்கள் விரைவில் ஆறாது. இருமல், இரைப்பு இவைகளைத் தோற்றுவிக்கும். சாமை அரிசியைக் குத்தி சோறாகவோ, கஞ்சியாகவோ செய்து உட்கொண்டு வந்தால் தாது விருத்தியடையும். வாத, கபநோய்களைப் போக்கும்.
    contd..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter