Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1471
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    சுத்தமான நல்லெண்ணெய் கலந்து தாளித்துத் தயாரிக்கப்படும் சோறு வாத நோய்களைக் குணப்படுத்தும். நம் உடலுக்கு நல்ல வலுவையும், புணர்ச்சியில் விருப்பத்தையும் உண்டாக்கும். பசும்பாலைக் கொதிக்க வைத்து, அரிசியை போட்டு வேக வைத்து சிறிது பனை வெல்லம் சேர்த்து உண்டு வர மிகுந்த நன்மை உண்டாக்கும். வாயுவை உண்டாக்கும். இதை குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. புளியைக் கரைத்து வரமிளகாய், பெருங்காயம், கடுகுபோட்டுத் தாளித்துத் தயாரிக்கப்டும் சோறு பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். மேக நோயைக் குணப்படுத்தும். இருமலை உண்டு பண்ணும். உடல் வலியை உண்டாக்கும். ருசியின்மையைப் போக்கும். மிளகு கலந்துத் தயாரிக்கப்படும் சோறு. வாயுத் தொந்தரவுகளைப் போக்கும். நல்ல சீரண சக்தியை உண்டாகும்.
    பித்தம், கபம் இவற்றைப் போக்கும் துவரம் பருப்பு மசியல்.. துவரம் பருப்புக் குழம்பு அல்லது மசியலுடன் நெய் சேர்த்து உண்டு வந்தால் நாட்பட்ட மலச்சிக்கல், வாத, கப நோய்கள் குணமடையும். உடலுக்கு நல்ல வலுவையும் பார்வைத் தெளிவையும் உண்டாக்கும்.
    துவரம் பருப்பு இரசம், துவரம் பருப்பு வேக வைத்த நீரில் மிளகு பூண்டு பெருங்காயம் சேர்த்து வைக்கப்படும் இரசத்தை உண்பதால் அக்னி மாந்தம் நீங்கும். வாத நோய்களைக் குணப்படுத்தும். புளிப்புச் சுவை அதிகமாகச் சேர்த்துச் செய்யப்படும் துவையல் இரத்தத்தைச் சுண்டச் செய்துவிடும். கார சுவையுள்ள துவையல் நல்ல பசியை உண்டாக்கும் புதினாத் துவையல் பித்தக் கோளாறுகளைப் போக்கும். ருசியின்மையைப் போக்கும். கொத்துமல்லித் துவையல் உடலின் அதிக சூட்டைத் தணிக்கும் ஏப்பம் வயிற்றுப் பொருமல், நெஞ்செரிச்சலைப் போக்கும். சீரணத்தைத் தூண்டும். இஞ்சித் துவையல் வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்தும். பசியைத் தூண்டும். வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி இஞ்சி, பூண்டு, புளி சேர்த்துச் செய்யப்படும் துவையலை காக்கை வலிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து உண்டு வர குணம் கிடைக்கும். பீர்க்கங்காய்த் துவையல் ருசியின்மையைப் போக்கும். தேநீர் தயாரிக்க முன்பு கொதிக்க வைத்த நீரைப் பயன்படுத்தக்கூடாது. நீர் கொதிக்கத் துவங்கும்பொழுதுதான் தேநீர் தூளைக் கலக்க வேண்டும். இதயத்தைத் தூண்டும். நரம்புகளுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். கொலஸ்ட்ரால் அதிகமாவதைத் தடுக்கும். சீதபேதியைப் போக்கும். சிறுநீரகங்களின் செயல்பாட்டைத் தூண்டும். நஞ்சு உட்கொண்டவர்களுக்கு முதலுதவியாக தேநீரைப் பருகக் கொடுக்கலாம். பால் சேர்க்காத தேநீர் இதய நோய், புற்று நோய் வருவதைத் தடுக்கும். உடல் எடையைக் குறைக்கும். பக்கவாத நோயாளிகளுக்கு நல்லது. பக்கவாதம் வராமலும் தடுக்கும். அதிகமாக பருகக்கூடாது.
    contd..



    Sponsored Links

  2. #1472
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    தோசை : உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். பித்தக் கோளாறுகளைப் போக்கும். புளிப்புச் சுவையுள்ள பச்சடி பித்த நோயைத் தோற்றுவிக்கும். உறைப்புச் சுவையுள்ள பச்சடி வாத நோயைத் தோற்றுவிக்கும். வாழைத் தண்டு பச்சடி உடல் சூட்டைத் தணிக்கும், வாத, பித்த கபக் குற்றங்களைக் குறைக்கும். இறைச்சி கலந்து தயாரிக்கப்படும் பிரியாணி, இவ்வுணவு நம் உடலுக்கு நல்ல வலுவைத் தரும். மந்தத்தைத் தோற்றுவிக்கும்.

    புட்டு : பத்தக் கோளாறுகளைப் போக்கும். உடலுக்கு நல்ல பலம் கொடுக்கும். சர்க்கரைப் பொங்கல் உடலில் புதிய இரத்தத்தை உண்டு பண்ணும். ருசியின்மையைப் போக்கும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். பித்த, வாதத் தொடர்பான கோளாறுகளைக் குறைக்கும். மிளகு அதிகமாகப் போட்டுத் தயாரிக்கப்படும் பொங்கல் பசியின்மையைப் போக்கும். குடல், இறைச்சல், வாயுப் பொருமல், பித்தம், கபம் ஆகியவற்றைப் போக்கும். பச்சரிசி மற்றும் பாசிப் பருப்பு கலந்து தயாரிப்பது உடலுக்கு நல்ல பலம் தரும். உடல் சூட்டை அதிகப்படுத்தும்.
    சீரணமாக நேரமாகும். வயிறு உப்புசத்தைத் தோற்றுவிக்கும். வாத நோயுள்ளவர்களுக்கு சூட்டை அதிகப்படுத்தும். சீரணமாக நேரமாகும். வயிறு உப்புசத்தைத் தோற்றுவிக்கும். வாத நோயுள்ளவர்களுக்கு ஆகாது. பால் பொங்கல் உடல் சூட்டை சமப்படுத்தும். வாதத் தொடர்பான நோய்களை அதிகப்படுத்தும்.
    பொரியல் வகைகள் : நிறைய எண்ணெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் பொரியல் வகைகளில் உப்புச் சுவை அதிகமானால் கபத்தைத் தோற்றுவிக்கும். காரம் அதிகமானால் பசியின்மை. வாத நோய்கள் உண்டாகும். துவர்ப்புச் சுவை அதிகமானால் சுறுசுறுப்பு உண்டாக்கும். வயிற்றுப் பூச்சிகளைப் போக்கும்.
    contd..



  3. #1473
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    முறுக்கு : அரிசி, உளுந்து மாவு சேர்த்து செய்யப்படும் இதைச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். வாதத் தொடர்பான கோளாறுகளைப் போக்கும். பித்தத்தை உற்பத்தி செய்யும்.

    மோதகம் : புழுங்கல் அரிசி, மாவு, வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து செய்யப்படும் இதை உண்பதால் உடல் பலம் பெறும். இரத்த விருத்தி, தாது விருத்தி உண்டாகும்.

    வறுவல் : எண்ணெய் சேர்த்து வறுத்துத் தயாரிக்கப்படும் உணவு வகைகளை இளம் வறுவலாக வறுத்து உண்டால் மந்தத்தை உண்டாக்கும். நடுத்தரமாக வறுத்து உண்டால் நீர்க் கோர்வையை நீக்கும். கறுக வறுத்து உண்டால் வாத, பித்த, கபக் குற்றங்களைத் தோற்றுவிக்கும்.

    வடை : உளுந்து வடை உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்தத்தைக் குறைக்கும். வாத நோய் உள்ளவர்களுக்கு ஆகாது. தயிர்வடை உடலுக்கு பலம் கொடுக்கும். உடல் சூட்டைத் தணித்து சமன்படுத்தும். வாதத் தொடர்பான கோளாறுகளைக் குறைக்கும். நிறைய அளவு வெங்காயத்தை உளுந்து மாவில் போட்டு வெங்காய வடை செய்து சாப்பிட்டு வர, உடல் சூடு தணிந்து சமன்படும். உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.
    contd..


    kiruthividhya likes this.

  4. #1474
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    எண்ணெய் வகைகள்

    நல்லெண்ணெய் : கண், காது தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். அறிவுத் தெளிவை உண்டாக்கும். தோல் நோய்களைப் போக்கும். அடிப்பட்ட காயம், புண், ஆவி அல்லது கொதி நீரால் ஏற்பட்ட புண்ணுக்கு நல்லெண்ணெயை எலுமிச்சை சாறில் கலந்து பூசி வர குணம் கிடைக்கும்.

    கடலெண்ணெய்:
    உடலுக்கு நல்ல பலம் தரும். வாதத் தொடர்பான நோய்களைத் தணிக்கும். எலும்புக்கு பலத்தைக் கொடுக்கும். இரத்தக் கொதிப்பை சமன் செய்யும், ஊைளச்சதையைக் குறைக்கும். தோலில் ஏற்படும் தடிப்பு, அரிப்பைப் போக்கும். நீர்ச்சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பிரிக்கும். உடல் எரிச்சல், நீர் எரிவைப் போக்கும். சிறுநீர்ப்பைக் கற்களைக் கரைத்து சுத்தமாக்கும்.
    வாய்ப்புண், வாய்நாற்றத்தைப் போக்கும். மாதவிலக்குக்கு முன்னர் சாப்பிட மாதவிலக்கு வயிற்று வலியைப் போக்கும். மாதவிலக்கிற்குப் பின்னர் சாப்பிட களைப்பைப் போக்கும். வெள்ளைப் போக்கை குணமாக்கும். பித்தத்தை உண்டு பண்ணும். சுவாசகாசம், வாத நோயாளிகள் காய்ச்சல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தலைவலி உள்ளவர்கள் உண்ணாமல் இருப்பது நல்லது. மாதவிலக்கு நாட்களிலும் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.

    கடுகெண்ணெய்: உணவில் உள்ள நச்சுத்தன்மையைப் போக்கும். உடலுக்குப் பொலிவைத் தரும். தசை வலியைப் போக்கும். வயிற்றில் உள்ள கிருமிகளைப் போக்கும்.

    தேங்காய் எண்ணெய்: வாய்ப்புண், வயிற்றுப்புண், கருப்பைப் புண்ணை குணமாக்கும். புற்றுநோய் உள்ளவர்களுக்கு நல்லது.

    பனையெண்ணெய் (பாமாயில்):
    கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது
    contd..



  5. #1475
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    சமைப்பதற்கு ஏற்ற பாத்திரங்கள்:

    மண்பாண்டத்தில் சமைப்பது தான் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இரும்புப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு கண்நோய், மூல நோயைப் போக்கும். வெண்கலப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு புத்தியை வளர்க்கும். அலுமினியப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு உடலுக்குக் கெடுதலை உண்டாக்கும். நரம்பு, எலும்புத் தொடர்பான நோய்களைத் தோற்றுவிக்கும்.
    உண்கலங்கள்: பொன்னால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் உடலுக்கு வலிமையைக் கொடுக்கும்.மனத்திற்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தாது விருத்தியடையும். சீரண சக்தி உண்டாக்கும். பித்த, வாத, கப நோய்கள் உண்டாகாது. வெள்ளியால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் கண்களுக்கு நலம் தரும்.
    பித்த கப நோய்கள் குணமடையும். உடலுக்குப் பொலிவைத் தரும். மன மகிழ்ச்சியைத் தரும். வாத நோயைத் தோற்றுவிக்கும். செம்பால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் சுறுசுறுப்பு உண்டாக்கும். உடலுக்குப் பொலிவைத் தரும் மன மகிழ்ச்சியைத் தரும். எந்த நோயும் அணுகாது. இரத்தத் தொடர்பான நோய்கள் குணமாகும். பித்தநோய்கள் குணமாகும். வெண்கலத்தில் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் களைப்பு நீங்கும். அனைத்து உடல் தொந்தரவுகளும் தீரும். பித்த நோய்கள் குணமாகும். கண்கள் ஒளிபெறும். தாது வலிமையடையும், உடல் தேறும்.
    இரும்பு, கண்ணாடிப் பாத்திரத்தில் சாப்பிட்டால் வீக்கம், சோகை குணமாகும். காமாலையைப் போக்கும். உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். காமாலையைப் போக்கும். உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். கலப்பு உலோகத்தால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் வாத, பித்த, கப நோய்கள் குணமாகும். மண்ணால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் காசநோய் குணமாகும். வாழை இலையில் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் மினுமினுப்பாகும். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஒளியையும் கொடுக்கும். வாத பித்த கப நோய்கள் குணமாகும். உடலுக்கு வலிமையைத் தரும். ஆண்மையை வளர்க்கும். வயிறுமந்தத்தைப் போக்கும். பாலுள்ள வேறு மரங்களின் இலையில் உண்டு வந்தாலும் வாத, பித்த, கப நோய்கள் நீங்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். தாகத்தைத் தணிக்கும். பக்க வாதம் குணமாகும். உடல் நடுக்கம் குணமாகும். காச நோய் குணமாகும்.
    பலா இலையில் உணவு உண்பது கெடுதலையே தரும். பித்தத்தை அதிகரிக்கும் தாமரை இலையில் உண்டால்; உடல் வெப்பம் அதிகரிக்கும். வாத நோய் மந்தாக்கினியைத் தோற்றுவிக்கும். புரசம் இலையில் உண்பது வாத கபத்தைப் போக்கும். சயம், குன்ம நோயைப் போக்கும். உடலுக்கு சூட்டைத் தரும்.
    contd..


    kiruthividhya likes this.

  6. #1476
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    உணவு உட்கொள்வதற்கான காலமும், முறைகளும்,

    முன்பு உண்ட உணவு செரித்து பசி உண்டாகியிருக்க வேண்டும். ஏப்பம் சுத்தமாயிருக்க வேண்டும். மலம், சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு இருந்தால், கழித்த பிறகே உண்ண வேண்டும்.
    சூடானவையும், எளிதில் சீரணமாகக் கூடிய உணவு வகைகளும் சிறந்தவை. தூய்மையானதாகவும், அறுசுவை நிறைந்ததாகவும், உண்ண வேண்டும். மிகவும் குறைவாகவோ, மிகவும் அதிகமாகவோ உண்ணக் கூடாது. மிக மெதுவாகவோ, மிக வேகமாகவோ இல்லாமல் கூழ்போல் மென்று உண்ண வேண்டும். கோபமாகவும், துன்பப்படும் பொழுதும் உணவு உட்கொள்ளக் கூடாது. உணவு உண்டவுடன் சிறிது நடப்பது நல்லது. உட்காருவதோ, படுப்பதோ, ஓடுவதோ கூடாது. காலை உணவு உண்பது முக்கியமானது மட்டுமல்ல, அவை சத்துள்ளதாகவும் இருக்க வேண்டும். நீடித்த உடல் நலத்திற்கு அடித்தளமாக இருப்பது காலை உணவுதான்.
    உடல் சுறுசுறுப்பாக இருக்கும். கொலஸ்டிரால் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதயக்கோளாறு ஏற்படும் வாய்ப்பு குறையும். முதலில் கடினமான உணவுப் பொருட்களையும், பிறகு மிருதுவான பொருட்களையும் உண்ட பிறகு திரவப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். வேலை செய்து, நடந்து, வெயிலில் அலைந்து களைத்துள்ள பொழுது உண்பதோ, பருகுவதோ கூடாது. தாகமுள்ள பொழுது, உணவு உட்கொள்வதோ, பசியுள்ள பொழுது நீர் அருந்துவதோ கூடாது. அதனால் முறையே குன்ம நோயும் வயிற்றில் நீர்க்கோர்வையும் ஏற்படும். எண்ணெய்ப் பசையில்லாத உணவு உடல் வலுவையும், ஒளியையும் போக்கிவிடும். தோல் வறட்சி மலக்கட்டை உண்டாக்கும்.
    மிகவும் குளிர்ந்து போன உணவு, சளி, களைப்பு, ருசியின்மை, குமட்டல், அஜீரணம் ஆகியவற்றை உண்டாக்கும். மிகவும் கெட்டியான உணவு சிறுநீர் மலத்தை வெளியேற்றுவதில்லை. விரைவில் சீரணமாகாது. மிகவும் இனிப்பான உணவு பசியை அடக்கிவிடும். உப்பு அதிகமாக உள்ளஉணவு கண்களுக்குக் கெடுதலை உண்டாக்கும். காரம், புளிப்பு நிறைந்த உணவு கிழத்தன்மையை உண்டாக்கும் சாப்பிடும் பொழுது முதலில் இனிப்பான உணவையும் பிறகு புளிப்பு உப்பு கார உணவையும் உட்கொண்டு கடைசியாக துவர்ப்புச் சுவையுள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
    குளிர்ந்த பொருளுடன் சூடான பொருளையும் புதிய பொருளுடன் பழையதையும், பச்சையான பொருளுடன் வேகவைத்ததையும் கலந்து உட்கொள்ளக் கூடாது. தேன், நெய், எண்ணெய், நீர், கொழுப்பு இவற்றில் ஏதேனும் இரண்டையோ, பலவற்றையோ சம அளவில் கலந்து உட்கொள்ளக் கூடாது.
    கள், தயிர், தேன் அவற்றை உடக் கொண்ட உடனே சூடாக எதையும் உட்கொள்ளக் கூடாது. நம் முன்னோர்கள் அறுசுவைகளையும் சுவைக்காக மட்டுமன்றி நோய் நீக்கவும் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு சுவையை ஏற்றத் தாழ்வுகளுடன் உண்டு நோய் வராமலும், வந்த நோய்களைப்போக்கிக் கொள்ளவும் முடியும். இது நம் நாட்டு மருத்துவமான சித்த மருத்துவத்திற்கே உள்ள தனிச்சிறப்பு. எனவே தான் உணவே மருந்து, மருந்தே உணவு எனும் வார்த்தை பொருள் பொதிந்ததாக இருக்கின்றது.
    contd..


    kiruthividhya likes this.

  7. #1477
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    ஆம். நம் உணவு முறை நம் உடலுக்கு மருந்தாகவும் விளங்குகின்றது. இனிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு, உப்பு, புளிப்பு எனும் இந்த அறுசுவைகளும், உடலில் முறையே தசை, நரம்பு, உமிழ்நீர், இரத்தம், எலும்பு, கொழுப்பு எனும் ஆறு தாதுக்களையும் உயிர்க்கச் செய்கின்றன. இந்தத் தாதுக்கள் சரியாக இருக்கும் பொழுது இன்னொரு முக்கியமான தாதுவான மூளை சரியாக இருக்கும். நாம் உட்கொள்ளும் உணவு இரத்தமாக மாறி பிறகு மற்ற தாதுக்களாக மாறுகின்றன.
    இரத்தம் அதிகமானால் கால் குடைச்சல். தூக்கமின்மை, திமிர் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இரத்தம் குறைந்தால், உடல் வெளுத்தல், சோர்வு, காமாலை, கால் வீக்கம் போன்றவை ஏற்படும். இனிப்பு கபத்தை அதிகப்படுத்தும். காரம் கபத்தைக் குறைக்கும். துவர்ப்பு வாதத்தை அதிகப்படுத்தும், புளிப்பு வாதத்தைக் குறைக்கும். இந்த அறுசுவைகளில் ஒன்றுக்கொன்று நட்பு, பகை கொண்டவைகளாவும் உள்ளன.
    உப்பு: வலது கை பித்த நாடியில் நம் உடலிலுள்ள உப்பின் அளவை அறிந்து கொள்ளலாம். உடலை மென்மையாக்கும். எலும்பு, மஜ்ஜை மற்றும் விந்துவை வளர்க்கிறது. சிறுநீர், மலத்தை சுத்தப்படுத்தும், வாயுவைக் குறைக்கும்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg  
    kiruthividhya likes this.

  8. #1478
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம்

    மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு ரக மாதுளை பழங்களில் அதிக அளவு சக்தி உள்ளது. மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

    இப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. புளிப்பு மாதுளை வயிற்று கடுப்பை நீக்குகிறது. ரத்த வயிற்றுப்போக்கிற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது.

    பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய அனைத்து வகையான அல்சரையும் குணமாக்குகிறது. இதய நோய்கள், இதய பலகீனம் போன்றவை குணமாகும். ரத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்மையை அதிகரிக்கிறது.
    contd..


    anitprab likes this.

  9. #1479
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாக சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2 அல்லது 5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.

    மாதுளம் முத்துக்களில் சிறிதளவு மிளகுப் பொடியும் சேர்த்துச் சாப்பிட்டால் அனைத்து வகையான பித்த நோய்களும் தீரும். மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு நீங்கும். உடல் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

    மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரம் போட்டு அதில் பாதாம் எண்ணெய் 15 மில்லி அளவு ஊற்றி ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பழத்தில் கலந்துவிடும்.

    இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்கு பிறகு தினமும் சாப்பிட்டால், ஒரு மாதத்தில் உடல் ஆரோக்கியம் பெறும். புதிய ரத்தம் உற்பத்தியாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

    பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கிற்கு இதே பூவின் பொடியை மூன்று தினங்களுக்கு கொடுத்தால் பலன் கிடைக்கும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி, மயக்கம் போன்றவை தீரும்.

    மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து காலை, மாலை 15 மில்லி அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல், வயிற்றுப் பொருமல் தீரும். மாதுளம் மொட்டுக்களை காய வைத்து பொடித்துக்கொண்டு சிறிதளவு ஏலம், கசகசா ஆகியவற்றை பொடித்து கலந்து 10 கிராம் அளவில் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வயிற்றுப் போக்கும் சீத பேதியும் குணமாகும்.
    contd..



  10. #1480
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்து கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தை கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். தொண்டை வரை செல்ல வேண்டும். இவ்வாறு கொப்பளித்தால் தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும்.

    மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சர்க்கரை சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களை தலையில் வைத்து கட்டிக் கொண்டால் தலைவலி தீரும்.

    மாதுளம் பூக்களுடன் அருகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம் ஆகியவற்றை சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்து 30 மில்லி எடுத்துக்கொண்டு அதில் பசு வெண்ணெய் சேர்த்து கலக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.

    அலர்ஜியை குணமாக்கும். மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும்.

    தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் விலகும்.

    மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றை சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பம் தொடர்பான நோய்கள் குணமாகும். மாதுளம் மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும் பற்கள் கெட்டிப்படும்.

    ஈறுகளின் நோய் தீரும். பற்களின் வலி குறையும். தினமும் ஒரு கப் மாதுளம்பழச்சாறு குடித்து வர 15 நாட்களில் டெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பின் அளவு அதிகரிக்கிறது. ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கும் தசை, எலும்பு நோய்கள், உடல்வலி, அட்ரீனலின் சுரப்பு கோளாறுகள், கருப்பை பிரச்னை போன்றவை குணமாக்குகிறது.

    செக்ஸ் உணர்வு இல்லாதவர்களுக்கு மாதுளம்பழச்சாறு எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத அருமருந்து என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு எனவும், ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4 ல் 3 பெண்களுக்கு புற்று நோய் ஏற்படலாம் என ஆய்வுகள் கூறுகிறது.

    மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது. எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்பம் இது, புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

    மாதுளம் பழத்தில் உள்ள பைட்டோகெமிக்கல் ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது.

    இதனால் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-maathulai-297x160.jpg  
    anitprab likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter