Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1531
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலை தடுப்பதற்கான 10 எளிய வழிகள்!!!

    நோய்களுக்கு பஞ்சமில்லாத இன்றைய காலகட்டத்தில், பல விதமான உடல் சுகவீனங்களுக்கு நாம் ஆளாகிறோம். இதிலே பல வகைகள் இருந்தாலும், அன்றாடம் நாம் சந்திக்கும் சுகவீனங்கள் சில உள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது நம்முடைய மோசமான வாழ்க்கை முறை, மாசுப்பட்ட சுற்றுப்புறச் சூழல், சுகாதாரமற்ற உணவுகள் போன்றவைகளே.

    அப்படி நாம் அன்றாடம் சந்திக்கும் உடல் ரீதியான பிரச்சனைகளில் ஒன்று தான் நெஞ்செரிச்சலும் அசிடிட்டியும். அசிடிட்டியை மருத்துவ உலகில் காஸ்ட்ரோ-ஈசோஃபேகியல் ரிஃப்லக்ஸ் டிசீஸ் (GERD) என அழைக்கின்றனர். நெஞ்செரிச்சலும் அசிடிட்டியும் நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளே.

    ஏற்கனவே கூறியதை போல் இதற்கு காரணமாக இருப்பதும் ஆரோக்கியமற்ற உணவருந்தும் பழக்கம் மற்றும் காரசாரமான ஜங்க் உணவுகளை உண்ணுவதே. வயிற்று வலி, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று போக்கு போன்றவற்றால் அவதிப்படும் அனைவருமே உடனடி தீர்வைப் பெற சில அமில முறிவு பொருளை உட்கொண்டிருப்பார்கள்.

    இந்த அமில முறிவு பொருட்கள் (அன்டாசிட்ஸ்) ஒரு மணிநேரத்திற்குள் நிவாரணத்தை அளித்தாலும் கூட, இவைகளால் உங்கள் செரிமான அமைப்பில், நீண்ட கால அடிப்படையில், சில எதிர்மறையான தாக்கங்களும் ஏற்படும்.

    அதனால் அதற்கு பதிலாக, கீழ்கூறிய 10 மாற்றங்களை உங்கள் வாழ்க்கை முறையில் நீங்கள் கொண்டு வந்தால், மீண்டும் மீண்டும் ஏற்படும் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனைகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கலாம்.

    ஆரோக்கியமாக உண்ணுதல் நீங்கள் அடிக்கடி நெஞ்செரிச்சலால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் நீங்கள் உண்ணும் உணவுகளில் சிலவற்றை நிறுத்த வேண்டும். காரசாரமான உணவுகளான சமோசா, பர்கர், சிப்ஸ் போன்றவைகளையும் இனிப்பு வகை உணவுகளான சாக்லெட், டோனட்ஸ் மற்றும் கேக் போன்றவைகள் தான் அசிடிட்டி ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகும்.

    உங்களுக்கு மீண்டும் மீண்டும் அசிடிட்டி ஏற்பட்டால் ஆரஞ்சு, பப்ளிமாஸ் மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களையும் தவிர்க்க வேண்டும். அதிகளவிலான அமில அளவினால், இந்த பழங்கள் நிலைமையை இன்னமும் மோசமடைய தான் செய்யும்.

    உண்ணும் பழக்கத்தை மாற்றுங்கள் நீங்கள் உண்ணும் உணவுகளைத் தவிர, எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதும் முக்கியமாகும். நீங்கள் உண்ணும் உணவின் அளவு செரிமான செயல்முறையின் மீது வெகுவான தாக்கங்களை உண்டாக்கும்.

    இரண்டு வேளைகளுக்கு நடுவே அதிகமான இடைவெளி எடுத்துக் கொள்பவர்கள் அதிகமாக உண்ணுவார்கள். இப்படி அதிகமாக உண்ணுவதால் செரிமான அமைப்பின் மீதான பளு அதிகரிக்கும். இதனால் அமில சுரப்பும் அதிகரிக்கும். மாறாக, சிறிய அளவில் அதிக முறை உண்ணவும் (ஒரு நாளில் 4-5 முறை).

    மெதுவாக உண்ணவும் டைஜெஸ்டிவ் டிசீஸ் வீக் 2003 இல் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, 30 நிமிடங்கள் உண்ணுபவர்களுக்கு அமில சுரப்பு 8.5 தடவை நடந்துள்ளது; அதுவே 5 நிமிடங்களில் உண்ணுபவர்களுக்கு 12.5 தடவை அமில சுரப்பு ஏற்பட்டுள்ளது.

    அதிகமாக உட்கொண்டால் வயிற்றில் அதிகளவிலான உணவுகள் தேங்கும். இதனால் அளவுக்கு அதிகமான அமில உற்பத்தி ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

    நிறைந்த வயிறுடன் தூங்குவதை தவிர்க்கவும் நீங்கள் இரவு நேரங்களில் நீண்ட நேரம் கழித்து சாப்பிடும் போது, சோர்வின் காரணமாக, சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்குள் தூங்கி விடுவீர்கள். கண்டிப்பாக நீங்கள் மாற்ற வேண்டிய பழக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

    நீங்கள் தூங்கும் போது உங்கள் ஒட்டுமொத்த உடல் செயல்முறைகளும் மெதுவாக நடக்கும். இதன் காரணமாக அசிடிட்டி போன்ற செரிமான பிரச்சனைகள் உண்டாகும். தூங்கச் செல்வதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன்பாகவே உணவருந்த மறந்து விடாதீர்கள்.

    உடல் கட்டமைப்புடன் இருங்கள் உடல் பருமனாக இருந்தால் அதனுடன் ஏற்கனவே பல உடல் நல பிரச்சனைகள் தொடர்பில் உள்ளது. அந்த பட்டியலில் அதிகப்படியான அமில சுரப்பும் முக்கியமான ஒன்றாகும்.

    ஒல்லியாக அல்லது சரியான கட்டுக்கோப்புடன் இருக்கும் பெண்களை விட, குண்டாக இருக்கும் பெண்களுக்கு அமில சுரப்பு தொடர்ச்சியாக 2-3 முறை அதிகமாகவே ஏற்படுகிறது என நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் தன் ஆய்வில் வெளியிட்டிருந்தது.

    தண்ணீர் குடிப்பதை அதிகரியுங்கள் அமில சுரப்பிற்கு சிறந்த தீர்வாக இருப்பது தண்ணீர். இது அசிடிட்டியை நிறுத்துவதோடு மட்டுமல்லாது செரிமானத்திற்கும் உதவிடும். மேலும் பல விதமான உடல்நல பயன்களையும் கொண்டுள்ளது.

    அசிடிட்டியை போக்கும் மருந்துகளை விட தண்ணீர் சிறப்பாக செயல்படும் என ஜர்னல் டைஜெஸ்டிவ் டிசீசஸ் அண்ட் சயின்சஸ் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு கூறுகிறது.

    அதில் பங்கு பெற்றவர்களில், தண்ணீர் குடித்தவர்களுக்கு ஒரு நிமிடத்தில் காஸ்ட்ரிக் pH (4-க்கும் மேலான) அதிகமானதை காட்டியது. இதுவே அசிடிட்டியை போக்கும் மருந்துகளை உட்கொண்டவர்கள் தண்ணீர் குடித்தவர்களின் நிலையை அடைய 2 மணிநேரத்திற்கும் அதிகமானது.

    டீ மற்றும் காபியை தவிர்க்கவும் காப்ஃபைன் கலந்துள்ள பானங்களான டீ, காபி, கோலா போன்றவைகள் அசிடிட்டியை தூண்டிவிடும்.

    காபி அல்லது காப்ஃபைன் கலந்த பானங்கள் காஸ்ட்ரிக் pH அளவை மாற்றி அதிகப்படியான அமில சுரப்பை உண்டாக்கும் என்பதற்கு குறிப்பிடும் வகையிலான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும் கூட, GERD-க்கு முதல் சிகிச்சையாக நோயாளிகளை காப்ஃபைன் கலந்த பானங்களை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. அதனால் காபி குடிப்பது உங்கள் நிலையை மோசமடையச் செய்தால், அதை குடிப்பதை நிறுத்தி விடுங்கள்.

    மதுபானம் உட்கொள்ளும் அளவை குறைத்திடவும் மதுபானம் குடிப்பதற்கும் GERD-க்கும் இடையே தொடர்பு உள்ளது என பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது.

    மதுபானம் பருகும் போது காஸ்ட்ரிக் சவ்வு நேரடியாக பாதிக்கப்படும். மேலும் உணவுக்குழாய் சுருக்குத் தசையை தளர்த்தும். இதனால் உணவுக் குழாய்களுக்குள் அமிலம் நுழைந்துவிடும்.

    புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துங்கள் அசிடிட்டி உள்ளவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானால், அவர்களின் நிலை இன்னும் மோசமடையும். நீங்கள் பிடிக்கும் சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின் வயிற்றில் உள்ள உட்பூச்சில் எரிச்சலை ஏற்படுத்தும். புகைப்பிடிக்கும் போது உணவுக்குழாய் சுருக்குத்தசை தளர்ந்து, அமில உற்பத்தி தூண்டப்படும்.

    தூங்கும் நிலையை மாற்றுங்கள் தலையை உயர்த்தி தூங்கினால் இரவு நேரத்தில் அசிடிட்டிக்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். தலையை உயர்த்திய நிலையில் தூங்கினால் அமிலம் வேகமாக நீங்கும் (67%) என ஆய்வுகள் காட்டியுள்ளது. அமில நீக்கம் என்பது உணவுக்குழாயில் இருந்து வயிற்று அமிலத்தை நீக்குவது.


    Sponsored Links

  2. #1532
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கலோரிகளை எரிப்பதற்கு கீழே குறிப்பிட்டுள்ள* 4 வளர்சிதை மாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது:


    1, வாய்விட்டு சிரிக்கவும்:
    என்ன காமெடியாக இருக்க. உண்மைதாங்க, வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்னு பழமொழியே இருக்கு. உடல்பருமன் சர்வதேச இதழில் வெளியான ஒரு ஆய்வின் படி, வாய்விட்டு சிரித்தால், உடலின் அதிகரிப்பதோடு, இதய துடிப்பையும் சீராக வைக்கிறது. தினமும் ஒரு 10 முதல் 15 நிமிடம் வாய் விட்டு சிரித்தால் 40 லிருந்து 170 கலோரி வரை எரிக்க முடியும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. என்ன நாங்கள் சொல்வது கேக்குதா!

    2. படுக்கையறையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும்:
    தற்போதைய புதிய ஆய்வின் படி, நீரிழிவு நோயாளிகள் மேற்கோள் காட்டுவது குளிர் சாதன கருவியைதான், இதனால் உடலில் செங்கொழுப்பு அதிகம் சேர்கிறது – “நல்ல கொழுப்பு”, குளிர்ச்சியான சூழ்நிலையில் தூண்டப்படுகிறது, இதனால் நம் உடம்பானது மிதமான தட்பவெப்பத்தில் தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது. சோதனையாளர்கள் சிலரை வைத்து சில ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, பல பேரை ஒரு வாரம் வெவ்வேறு வகையான சீதோஷ்ண* நிலையில் தூங்க* வைத்தோம். நடுநிலையான* 75 டிகிரி, குளிரான* 66 டிகிரி மற்றும் ஒரு மென்மையான 81 டிகிரி: பங்கேற்பாளர்கள் பல்வேறு வெப்பநிலை படுக்கையறைகளில் தூங்கி ஒரு சில வாரங்கள் கழித்தார். 66 டிகிரியில் நான்கு வார தூக்கத்திற்கு பின்னர், ஆண்கள் கிட்டத்தட்ட பழுப்பு கொழுப்பு தங்கள் தொகுதிகளை இரு மடங்காகிவிட்டது என்றுள்ளனர்!
    contd..


    Last edited by chan; 10th Jan 2015 at 02:29 PM.

  3. #1533
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    3. லேசான மிளகுத்தூள் குவியல்:

    மிளகுத்தூளில் நன்றாக உமிழும் காப்சைசின் (இதில் உள்ள*து போல*: ஹாட் சாஸ், சிவப்பு மிளகாய்) உள்ளதால் வளர்சிதை மாற்றத்தினை உணர முடியும், ஆனால் நடைமுறை ஆய்வில், அனஹேம், கலிபோர்னியா பரிசோதனை உயிரியல் கூட்டத்தில் பயாலஜி செயற்கை குழு முடிவின் படி, காரம் குறைந்த மிளகு தூளை பய*ன்படுத்தியதால் டைஹைட்ரோகேப்சியேட் (DCT) அல்லாத ஒத்த உடல் எடை இழப்பு திறனை காட்டியது. DCT சாப்பிடுபவர்களின் எண்ணுக்கை மிகவும் அதிகமாகிவிட்டதால் வளர்ச்சிதை மாற்றாமான*து கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஆகி விட்டது. கீழ் வரி: பொப்லனோஸ் குவியல்! இங்கே எடை இழப்புக்கான* சிறந்த மசாலா பற்றி மேலும் அறிய பார்க்கவும்.

    4. நிறைய* தண்ணீரை குடியுங்கள்:

    எடை இழப்புக்கான சிறந்த காரணம் இதை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. ஒரு கட்டுரையில் மருத்துவ என்டோகிரைனாலஜி மற்றும் வளர்ச்சிதை மாற்ற* ஆய்வின்படி, எளிதாக வெறுமனே அதிக தண்ணீர் அருந்துவதால் ஆரோக்கியமான உடல்நிலையும், கலோரிகள் எரியும் விகிதமும் அதிகரிக்க கூடும். சுமார் 17 அவுன்ஸ் தண்ணீர் அருந்திய பிறகு (சுமார் இரண்டு உயரமான டம்ளர்கள்) , பங்கேற்பாளர்களின், வளர்சிதை மாற்ற விகிதம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் கணிப்பில் 1.5 லிட்டர் ஒரு நாள் முழுவதும் (சுமார் 6 கப்) தண்ணீர் உட்கொள்வதால், ஓராண்டில் கூடுதல் 17,400 கலோரிகள் எரிக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது – மேலும் சுமார் 5 பவுண்டுகள் எடை இழப்பு ஏற்படுகிறது! (குளிர்பானங்கள், சோடா இவற்றை தவிர்க்கவும். இதை அருந்தினால் எடை கூடுவதை தவிர்க்க முடியாது.)



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg  

  4. #1534
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்!!!


    அனேகமானோரின், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால், அனீமியா என்னும் மறதி நோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக இரத்தத்தில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதெற்கென கடைகளில் நிறைய மருந்துகள் விற்பனையாகின்றன.
    ஆனால் அவற்றை மட்டும் சாப்பிடுவதால் உடலில் இரத்தம் அதிகரிக்காது. ஒரு சில இயற்கையான வழிகளையும் தினமும் செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இரத்தம் சுத்தமாகவும், உடலும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
    உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை செறிவாக இருக்க வேண்டும். இல்லையெனில் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே அனீமியா நோய் வராது தடுத்துக் கொள்ள இரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து, உண்ணும் உணவுகளே. இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்…

    இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்…
    மாதுளை: மாதுளைச் சாறு இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை மேலேறச் செய்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலைக் குறைத்து, கட்டற்ற மூலக்கூறுகளோடு போராடி, ஆபத்து விளைவிக்கக்கூடிய இரத்த உறைவுகளில் இருந்து காத்து, அருஞ்சேவை புரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவுகளை இவை அதிகப்படுத்துகின்றன.
    நன்னாரி வேர்: மூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்தது. அதிலும் இந்த வேரில் அதிகமான ஆன்டி-செப்டிக் பொருள் இருக்கிறது. இது இரத்ததில் இருக்கும் கிருமிகளை அழித்து, சுத்தமாக வைக்கிறது.
    கற்றாழை: கற்றாழையில் இரத்தத்தில் ஏற்படும் அழற்சியை தடுக்கும் பொருள் அதிக அளவு உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிட்டாலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
    பீட்ரூட்: இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இது ஒரு சிறந்த இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள். ஆகவே இதனை டயர்ட் இருப்பவர்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் இரத்த அணுக்களும் அதிகரிக்கும். அதிலும் பீட்ரூட்டின் இலைகளில் வைட்டமின் ஏ-வும், அதன் வேர்களில் வைட்டமின் சி-யும் இருக்கின்றன.
    கீரைகள்: காய்கறிகளான பசலைக் கீரை, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிஃபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை. மேலும் இவை அனைத்தும் உடல் எடையை கட்டுபடுத்துவதுடன், உடலில் இரத்த அணுக்களையும் அதிகரிக்கும். அதிலும் கீரைகள் செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும்.
    contd..



  5. #1535
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    இரும்புச்சத்து: இது உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து. இந்த சத்து எலும்புகளை மட்டும் வலுவாக்குவதில்லை, உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால் அனீமியா நோயானது வரும். ஆகவே அந்த இரும்புச்சத்துக்கள் இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரிச்சம் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில் இருக்கும்.
    பாதாம்: இரும்புச்சத்து மற்ற உணவுப் பொருட்களை விட பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 அவுண்ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உடலுக்கு 6% இரும்புச்சத்தானது கிடைக்கும்.
    பழங்கள்: அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடச் சொல்வார்கள். இவற்றை உண்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பழங்களில் தர்பூசணி, ஆப்பிள், திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.
    கிவி பழம்: இரத்தத்தில் குருதிச் சிறுதட்டுகள் குறைவாக காணப்படுவோ கிவி பழங்களை சாப்பிட்டால் அதன் உற்பத்தி அடிகரிக்கும் என பரிந்துரைக்கப்பட்டுளது
    உடற்பயிற்சி: உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக மட்டுமில்லாமல், உடலில் உள்ள இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும். மேலும் சுத்தமான ஆக்ஸிஜன் உடற்பயிற்சி செய்யும் போது இரத்ததில் கலக்கிறது. ஆகவே இரத்தமும் சுத்தமாக, சீராக உடலில் இயங்குகிறது. அந்த உடற்பயிற்சியில் வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், குதித்தல் போன்றவற்றை செய்யலாம்.
    மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்பதால் உடலில் இரத்த அணுக்களின் அளவு அதிகரிப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமல், உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக வாழலாம். இவை யாவற்றையும் உங்கள் குடும்ப டாக்ரரின் அலோசனியுடன் மேற்கொழ்வதன் மூலம் தேவையற்ற தாக்கங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.



  6. #1536
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இதய நோய் Heart Attack வராமல் தடுக்கும் சிறந்த வழிகள் – The best ways to prevent heart disease occur in

    2020-ம் ஆண்டில், இதயநோய் ஒரு கொள்ளை நோய் போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தே உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும்.

    உணவுக் கட்டுப்பாடு:

    முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற… என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய் களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    கட்டுப்பாடான உணவும் அதன் அளவுகோலும்:

    ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான சக்தி 1800 – 2400 கிலோ காலரி. இந்த சக்தியைப் பாதுகாப்பான உணவின் மூலம்தான் பெறவேண்டும். இந்த மொத்த அளவில், 65% சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்தும், 20% சக்தியை கொழுப்பிலிருந்தும், 15% சக்தியை புரதத்தில் இருந்தும் பெறுவதுதான் ஆரோக்கியமான உணவுமுறை!

    ஆரோக்கியமான சக்திகளை எந்த மாதிரி உணவுகளில் இருந்து பெறலாம்?:

    அரிசி, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலுக்கு சக்தி தரக்கூடிய உணவுகள். ஆனால், அதிக அரிசி உணவு, உடல் எடையைக் கூட்டும். அதிக சர்க்கரையும் உடலுக்கு நல்லதல்ல. அதனால், அரிசியையும் சர்க்கரையையும் குறைத்துக் கொண்டு, காய்கறி மற்றும் கீரை வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியன பாதுகாப்பான உணவுகள்! பருப்பு வகைகள், பால், மாமிசம் ஆகியவை உடல் வளர்ச்சிக்கு தேவையான உணவுகள். இவற்றில், புரதம் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோயாளிகள் மட்டும் இவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும்.
    contd..



  7. #1537
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    கொழுப்புச் சத்து பற்றி?:

    அதைப் பற்றி விரிவாகவே கூற வேண்டும். கொழுப்புச் சத்தில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) என்று இரண்டு வகை உண்டு. ஆடு, மாடுகளின் மாமிசம், முட்டை, பால், நெய், வெண்ணெய், வனஸ்பதி, தேங்காய், எண்ணெய் ஆகியவை கெட்ட கொழுப்பைத் தரும். தாவர உணவுகள், தாவர எண்ணெய், மீன், கொழுப்பு நீக்கிய பால், சோயா, பருப்பு, தானியங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைப்பது நல்ல கொழுப்பு. இவற்றிலிருந்து கொழுப்புச் சக்தியை பெறுவதுதான் ஆரோக்கியம்! மார்க்கெட்டில் ஏராளமான எண்ணெய் வகைகள் உள்ளன.

    எண்ணெயைப் பற்றி:

    ‘சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும் எண்ணெய்கள் (தேங்காய் எண்ணெய், நெய், வனஸ்பதி ஆகியன) இதயத்துக்கு எதிரானவை. அவற்றை தவிர்த்துவிட வேண்டும். ‘அன் சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும் எண்ணெய்கள் இதயத்துக்கு நண்பர்கள். இவற்றிலும்கூட, சூரியகாந்தி, சோயா எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற ‘பாலி அன் சாச்சுரேட்டட்’ வகை எண்ணெய்களைத் தான் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது கடலை எண்ணெய் போன்ற ‘மோனோ அன்சாச்சுரேட்டட்’ வகை எண்ணெயிலுள்ள சத்தும் உடலுக்கு தேவை என்பதால், இவற்றையும் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.
    இவற்றைவிட ‘ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்’ வகைதான் இதயத்துக்கு மிக நல்ல தோழன். இந்தச் சத்தை கம்பு, கேழ்வரகு, பட்டாணி, வெந்தயம், கடுகு, கோதுமை போன்ற உணவுகள் மூலம் அபரிமிதமாகப் பெறலாம். எப்போதுமே ஒரே வகை எண்ணெயை உபயோகிப்பது நல்லதல்ல. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஆனால், இந்த நல்ல வகை எண்ணெய்களிலும்கூட வறுக்க, பொரிக்கக் கூடாது. ஒரு முறை உபயோகித்த எண்ணெயை பல முறை உபயோகிக்கக் கூடாது.
    contd..



  8. #1538
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    பயமில்லாமல் சாப்பிடக் கூடிய உணவு வகை:

    இயற்கை கொடுக்கும் காய்கறிகள் உள்ளனவே! அவை இதயத்தின் நண்பர்கள். அதிக சத்து, குறைந்த கொழுப்பு, தேவையான தாதுப் பொருட்கள், வைட்டமின் சத்துக்கள் அடங்கியவை. குறைந்த கலோரியில் அதிக சத்து கொடுப்பவை. நாம் அதிகம் சாப்பிட்டாலும் எடையும் போடாதவை. எப்போதும் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். தொட்டுக்க வைப்பதை சாதமாகவும், சாதத்தைத் தொட்டுக்கவும் உபயோகப்படுத்துங்கள். ஆரோக்கியம் தேடி வரும்!

    சில காய்கறியின் பயன்கள்:

    கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகியவை நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் ஆகியவற்றைக் கொடுக்கின்றன. காலிஃப்ளவர், கோஸ், முருங்கைக்காய் ஆகியவை ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் சத்தையும், வாழைக்காய் இரும்புச் சத்தையும், சௌசௌ கால்சியம் சத்தையும் தருகின்றன. அவரைக்காயிலிருந்து புரதம், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து கிடைக்கிறது. சுண்டைக்காயிலும் நார்ச் சத்துதான். வெள்ளரிக்காயில் எல்லாச் சத்துக்களுமே உள்ளன.
    வெங்காயம், பூண்டு இரண்டுமே நல்லது. கீரைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சத்துக்களின் தொழிற்சாலைகள் அவை. இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து, தாது உப்புக்கள் எல்லாமே கீரைகளிலிருந்து கிடைக்கின்றன. அவற்றில் கெட்ட கொழுப்பும் கலோரி யும் குறைவு. பழங்களிலும் அபரிதமான சத்துக்கள் கிடைக்கின்றன. நார்ச்சத்தை அள்ளி வழங்குபவை பழங்கள். இதயத் துக்கு நார்ச்சத்து மிகவும் நல்லது. எல்லோருமே நினைவில் கொள்ள வேண்டியது நாம் உயிர் வாழத்தான் உண்ண வேண்டுமெ அன்றி; உண்ணுவதற்காகவே உயிர் வாழக் கூடாது!
    உடல் எடை என்பது பேங்க் பாலன்ஸ் மாதிரி. சாப்பிடச் சாப்பிட, ஏறிக்கொண்டேதான் போகும். பணத்தை எடுத்து செலவழித்தால்தானே பாலன்ஸ் குறையும்? அதுபோல, உடலின் சக்தியை செலவழித்தால்தான் எடை குறையும்!’’. அதற்காகத்தான் உடற் பயிற்சி அவசியமாகின்றது.

    ஹெல்த் டிப்ஸ்…:

    எடை அதிகம் இருப்பவர்களுக்கு, கழுத்து குட்டை யாக இருக்கும். அவர்கள் தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். குறட்டை விடுபவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பு அதிகம். அதனால், எடையைக் கட்டாயம் குறைக்க வேண்டும்.
    எல்லோருமே காலையில் அதிகம் சாப்பிட்டு, இரவில் குறைவாக சாப்பிடுவது நல்லது. காலையில் ஒரு மகாராஜா போலவும் (விருந்து) இரவில் ஒரு பிச்சைக்காரர் போலவும் (குறைவான உணவு) சாப்பிட வேண்டும் என்பார்கள். மெனோபாஸ் வரைக்கும் பெண்களுக்கு இதய நோய் ஆபத்து குறைவு. ஆனால், அதன் பிறகு பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால், இதயம் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை! ‘‘டயட்டினால் எடையைக் குறைக்கலாம். ஆனால், உடற்பயிற்சியால்தான் அதை அப்படியே பராமரிக்க முடியும்’’.
    இன்றைய காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடாக அமெரிக்கா விளங்குகின்றது அங்கு பெரும்பாலானோர் இறப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால், அது இதய நோயாகத் தான் இருக்கும்.
    ஏனெனில் அங்குள்ளவர்கள் உண்ணும் உணவு முறைப் பார்த்தால், நிச்சயம் இதய நோய் வராமல் என்ன வரும். எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளான பிட்சா, பர்க்கர் போன்றவற்றை சாப்பிடுவது, மதுபானத்தை அளவுக்கு அதிகமாக அருந்துவது, புகைப்பிடிப்பது என்றெல்லாம் இருந்தால், இதயம் பாதிப்படையாமல் ஆரோக்கியமாக இருக்குமா என்ன? அதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமான வேலைப்பளு இருந்தாலும், இதயம் பெரிதும் பாதிக்கப்படும்.
    ஏனெனில் இந்த நேரம், மனமானது பெரிதும் பாதிக்கப்பட்டு, இதயத்தில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. எனவே இத்தகைய பாதிப்பு இதயத்தில் ஏற்படாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டுள்ள இதயம் குணமாகவும் ஒருசிலவற்றை மனதில் கொண்டு, அதனை பின்பற்றி வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, உடலையே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
    contd..



  9. #1539
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    புகைப்பிடிப்பது:

    இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் புகைப்பிடிப்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் புகையிலையானது, இதயத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பொருட்களில் ஒன்று. எனவே புகைப்பிடிப்பதை தவிர்த்தால், இதய நோய் வராமல் தடுக்கலாம்.

    கொலஸ்ட்ரால்:

    கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், அவை கரோனரி இதய நோயை உண்டாக்கும். எப்படியெனில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும் போது, அதில் உள்ள கொலஸ்ட்ரால், தமனிகளின் சுவர்களில் அதிகமாக தங்கி, தமனிகளின் அளவை குறைந்து, இரத்த ஓட்டத்தை தடுக்கும். எனவே எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிலும் கொலஸ்ட்ரால் அளவானது 200 mg/dL-க்கு குறைவாக இருக்க வேண்டும்.


    உடல் எடை:

    இதய ஆரோக்கியத்தை கெடுப்பதில் அதிக உடல் எடையும் முக்கிய பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், தற்போது மாரடைப்பு வருபவர்களின் உடலைப் பார்த்தால், அவர்களது உடல் எடையானது, அளவுக்கு அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும்.

    உடற்பயிற்சி:

    தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்று. ஏனெனில் தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-heart-attack-300x248.jpg  

  10. #1540
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில ஊட்டச்சத்துக்கள்

    * காலை 5 .30 மணிக்கு : தேன் கலந்து ஒரு தம்ளர் எலுமிச்சை ஜூஸ் பருகுங்கள். இதனால், அன்று முழுவதும், வயிறு லேசாக இருக்கும். எந்தப் பிரச்சனையும் சீக்கிரத்தில் அண்டாது.

    * காலை 7.30 மணிக்கு வெரைட்டியான மூன்று வகை பழத்துண்டுகள், ஒரு தம்ளர் பால் அருந்துங்கள். மூளை புத்துணர்ச்சி பெறும்.

    * காலை 9.30 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் கண்ணை பிரகாசமாக வைத்திருக்கும்.

    * காலை 11.30 மணிக்கு ஒரு கிண்ணம் வேகவைத்த காய்கறிகள், முளைவிட்ட பயிறு கலந்து தயிர் சாலட். இது சருமத்தை பளபளவென வைத்திருக்கும்.

    * மதியம் 2.30 மணிக்கு ஒரு டம்ளர் மோர். மாலை 4.30 மணிக்கு ஜூஸ், பழங்கள். 6 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ். இப்படி நீர்சத்து நிறைந்த மோர், ஜூஸ், வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும்.

    * இரவு 7.40 மணிக்கு இரண்டு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி, பழங்கள், தயிர்சாலட். சிறிது தால். வயிறை மிதமாக வைத்திருக்கும்.

    இப்படி, ஒரு மாத உணவை பட்டியலிட்டு சாப்பிடும்போது, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும். உடலில் எடை கூடாது. சருமத்தில் நிறமும் பொலிவும் கூடும்.

    உடலும் உள்ளமும் உற்சாகத்தில் மிதக்கும். தெரப்பியே தேவையில்லை என்பதுபோல், உணவிலும் உற்சாகமாக வைத்திருக்க... இந்த உணவைப் பின்பற்றுங்கள்...


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter