Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree913Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1541
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அன்றாடம் நாம் உண்ணும் உணவில் ரசம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

    தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் தான் ரசம். இத்தகைய ரசம் தென்னிந்தியாவில் வடை பாயாசத்துடன் கொடுக்கப்படும் ஒவ்வொரு விருந்திலும் அவசியம் இருக்கும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு வீட்டிலும் மதிய வேளையில் ரசம் அவசியம் சமைத்து சாப்பிடப்படுகிறது.

    சரி, மதிய வேளையில் உண்ணும் உணவில் ரசம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? ஆம், சாப்பிடும் போது சிறிது ரசம் சேர்த்துக் கொள்வதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. இதற்கு காரணம் அதில் சேர்க்கப்பட்டுள்ள மசாலாப் பொருட்கள் தான்.

    மேலும் ரசத்திலேயே நிறைய வெரைட்டிகள் உள்ளன. பலருக்கு மதிய வேளையில் ரசம் இல்லாவிட்டால் சாப்பாடே வயிற்றில் இறங்காது. இங்கு அத்தகைய ரசத்தை அன்றாடம் சிறிது உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

    வயிற்றுப்போக்கை சரிசெய்யும் ரசமானது வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வாயுத் தொல்லை, செரிமான பிரச்சனை போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் வழங்கக்கூடியவை.

    மேலும் இது மிகவும் விலை குறைவில் வேகமாக செய்து சாப்பிடக்கூடிய சமையலாதலால், தவறாமல் சிறிது உணவில் சேர்த்து வாருங்கள்.

    புற்றுநோய் தாக்கத்தைக் குறைக்கும் அற்புதமான மற்றொரு நன்மை என்னவெனில், ரசம் உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கம் குறையும். இதற்கு முக்கிய காரணம், ரசத்தில் சேர்க்கப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் மிளகு தான். இவையே புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

    மலச்சிக்கலைத் தடுக்கும் பெரும்பாலானோருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், உண்மையில் ரசத்தை அன்றாடம் சேர்த்து வந்தால், குடலியக்கம் சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    அதிலும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படும் போது, சூடாக ஒரு கப் ரசம் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இதற்கு முக்கிய காரணம் ரசத்தில் சேர்க்கப்பட்டுள்ள புளி தான்.

    நோயாளிகளுக்கு நல்லது நோயாளிகள் ரசத்தை எடுத்துக் கொள்வது நல்லது. உதாரணமாக, காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், அத்தகையவர்கள் காய்கறிகள் சேர்க்கப்பட்ட ரசம் சாதத்தை உட்கொண்டு வந்தால், அதில் சேர்க்கப்பட்டள்ள பொருட்கள், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோட்டீனை அதிகரித்து, உடலை விரைவில் குணமாக்கும்.

    ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் நிறைந்தது ரசத்தில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. பலருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ரசத்தில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் நிறைந்த புளி இருப்பதால், அது சருமத்திற்கு மிகவும் நல்லது.
    contd..



    Sponsored Links

  2. #1542
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    பிரசவ காலத்தில் நல்லது கர்ப்பிணிகள் கூட ரசத்தை உட்கொள்ளலாம். ஏனெனில் அதில் புரோட்டீன், வைட்டமின், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

    மேலும் ரசம் குடலியக்கத்தை சீராக இயக்கும். இதனால் கர்ப்ப காலத்தில் சந்திக்கும் பல பிரச்சனைகள் குறையும்.

    வைட்டமின்கள் நிறைந்ததுசத்தில் முக்கியமான வைட்டமின்களான ரிபோப்ளேவின், நியாசின், வைட்டமின் ஏ மற்றும் சி, ஃபோலிக் ஆசிட் மற்றும் தியாமின் போன்றவைகள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் தான் இது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

    கனிமச்சத்துக்கள் நிறைந்தது ரசத்தில் கனிமச்சத்துக்களான மக்னீசியம், காப்பர், செலினியம், ஜிங்க், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. ஆகவே அன்றாடம் இதனை சிறிது உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஒருசில குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    குழந்தைகளுக்கும் நல்லது ரசம் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய திட உணவுகளில் முக்கியமானது. குழந்தைகளுக்கு ரசம் சாதம் கொடுப்பதால், அவர்களின் செரிமானம் சீராக நடைபெற்று, அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும். மேலும் பெரும்பாலான குழந்தைக்கு முதன்முதலில் கொடுக்கும் திட உணவுகளில் முதன்மையானது ரசம் எனலாம்.

    எடையைக் குறைக்க உதவும் அன்றாடம் ரசத்தை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம். எப்படியெனில் ரசம் சேர்ப்பதால், உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேறும். அதிலும் அந்த டாக்ஸின்களானது வியர்வையின் மூலமாகவும், சிறுநீரின் வழியாகவும் வெளியேறும்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-08-1420709651-1-pepper-rasam.jpg  

  3. #1543
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நன்மைகள் நிறைந்த நாவல்பழம்

    பழங்கள் சாப்பிடுவது நம் அரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் உதவுகிறது.

    அதில் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நாவல் பழம் ஒரு நல்ல தீர்வாக உள்ளது.

    நாவல் மரத்தின் பட்டை, நாவற்பழம், விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது ஆகும்.

    இதில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. மேலும் சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது.

    நாவல் பழத்தின் மகத்துவங்கள்

    நீரிழிவு நோய்

    நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம்.

    மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.

    மூலநோய்

    மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

    நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

    கருப்பை பாதிப்பு

    நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் குணமடையும்.

    சரும நோய்

    நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். மேலும் சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும்.

    மாரடைப்பு

    நாவல் பழத்தினை அளவாக சாப்பிட்டு வந்தால், இவை தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.

    வயிற்றுபோக்கு

    வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.




    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-naaval_palam_002-300x226.jpg  

  4. #1544
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வாழ வைக்கும் வாழைக்கு ஜே!

    டாக்டர் பத்மபிரியா
    வாழைக்கும் தமிழர்களுக்குமான உறவு, வாழையடி வாழையாகத் தொடர்வது. இலை, தண்டு, பூ, காய், பழம் என ஒவ்வொரு பாகத்திலும் மருத்துவப் பலன்களைப் பொதித்து வைத்திருக்கும் அற்புதமான தாவரம் வாழை. இவை ஒவ்வொன்றின் சத்துக்கள் பற்றியும் யார் யார் சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் சென்னை சித்த மருத்துவர் பத்மபிரியா விளக்குகிறார்.

    வாழைப்பூ

    வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் தடுக்கலாம். வாரம் இரு முறையாவது வாழைப்பூவை அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டும். ஆனால் செரிமானக் கோளாறு இருக்கும் போது, வாழைப்பூ உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

    வாழைக்காய்

    உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். இதில், மாவுச்சத்து அதிகம் இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். வாழைக்காயை மசித்து சிறிதளவு உப்பு போட்டு வேகவைத்து சூப்பாகவும் அருந்தலாம். வாழைக்காய் வறுவல், வாழைக்காய் சிப்ஸ் போன்றவற்றை மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். இல்லையெனில் வயிறு மந்தமாகிவிடும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள், மூட்டு வலி இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள் வாழைக்காயைத் தவிர்க்க வேண்டும்.

    வாழைப்பழம்

    அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் கொண்டது. உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கி, உடல் சோர்ந்து போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது. குடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது. தினமும் காலை எழுந்தவுடன் ஒரு வாழைப்பழம், இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும். சிலர் வாழைப் பழத்தை பால், தயிருடன் சேர்த்து மில்க்*ஷேக் ஆக குடிக்கிறார்கள். இது தவறு. வாழைப்பழத்தை எந்தப் பொருளுடனும் கலந்து உண்ணக் கூடாது. ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோயாளிகள் தவிர அனைவருமே வாழைப்பழத்தை தினமும் உண்ணலாம்.

    வாழைத்தண்டு

    உடலில் தேவையற்ற உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்று தில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை. சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்கவும், அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது. வாரத்துக்கு நான்கு முறையாவது வாழைத்தண்டைக் கட்டாயம் சாறாகவோ, பொரியலாகவோ அல்லது அவியலாகவோ சமைத்து உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். வாழைத்
    தண்டு சூப்பை கடைகளில் வாங்கிக் குடிப்பதை முடிந்த வரையில் தவிர்ப்பது நல்லது. உப்பு குறைவாக சேர்த்துக் கொண்டு மிளகு அல்லது சீரகத்தூள் சேர்த்து, வீட்டிலேயே வாழைத்தண்டு சூப் வைத்து அருந்தலாம். உடல் மெலிய விரும்புபவர்கள் நார்ச்சத்து மிக்க வாழைத் தண்டைச் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பு சேர்க்காமல் வாழைத் தண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    வாழை இலை

    வாழை இலை பச்சையம் நிறைந்தது. இரும்பு, மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இதனால் வாழை இலையில் உணவை வைத்து உண்ணுமாறு பரிந்துரைக்கிறது சித்த மருத்துவம். வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும்போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடம்பில் சேர்கின்றன. மேலும், இதில் பாலிபீனால் இருப்பதால் நமது உணவுக்கு இயற்கையாகவே கூடுதல் சுவை கிடைக்கிறது. எவர்சில்வர் தட்டுகளைத் தவிர்த்து, தினமும் வாழை இலையில் உண்ணுவது சிறந்தது.

    நன்றி டாக்டர் விகடன்



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-p24.jpg  

  5. #1545
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-cal-flower.jpg  

  6. #1546
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-pongal.jpg  

  7. #1547
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-ginger_honey.jpg  

  8. #1548
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-garlic.jpg  

  9. #1549
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-tomotto-jucie.jpg  

  10. #1550
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஆன்டிபயாடிக் ஆபத்துக்கு அணைபோடும் பப்பாளி!

    ங்கெங்கும் எளிதில் கிடைக்கக் கூடிய பழமான பப்பாளி, அள்ளி அள்ளித் தரும் பலன்கள் எண்ணிலடங்காதது!

    *பொதுவாக, மலம் சிக்கல் இன்றி வெளியேறினாலே, பெரும்பாலான நோய்களைத் தள்ளி வைக்க முடியும். இதற்கு கைகொடுக்கிறது... பப்பாளி. இது மிகச்சிறந்த மலமிளக்கி. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், அடிக்கடி பப்பாளி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளி மிகச்சிறந்த மருந்தாகிறது. வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்றவற்றுக்கும் பப்பாளி நிவாரணம் தரும்.


    * பப்பாளி, பித்தத்தைப் போக்குவதோடு... உடலுக்கும் தெம்பூட்டக் கூடியது. கல்லீரல் கோளாறுகளையும் பப்பாளி சரிசெய்ய வல்லது. சீரற்ற மாதவிலக்கு உள்ள பெண்களுக்கு இப்பழம் அருமருந்து. பப்பாளியில் உள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்ற மூலப்பொருள் உள்ளது. அது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவும். மேலும், ‘கார்பின்’ இருதயத்துக்கும் ‘ஃபைப்ரின்’ ரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றன.

    * இளமைப் பொலிவைக்கூட்டி வயோதிகத்தை கட்டுப்படுத்தும் பப்பாளி, உடம்பிலுள்ள நச்சுக்கள் முழுவதையும் சுத்திகரிக்கக் கூடியது. தினமும் காலையில் பப்பாளிப்பழத்தை

    துண்டுகளாகவோ அல்லது ஒரு டம்ளர் ஜூஸாகவோ சாப்பிட்டு வந்தால், உடம்பில் கழிவுகளே இருக்காது. இயற்கை மருத்துவ சிகிச்சையில் பட்டினி சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது பப்பாளிச்சாறு, வெள்ளரிச்சாறு என மாறிமாறி குடித்து வந்தால், உடல் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றிவிடலாம்.
    உடல் எடை குறைக்க விரும்புவோர், அதற்கான டயட்டுடன், தினமும் காலை உணவாக பப்பாளிப்பழத்தை எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். பப்பாளிக்காயை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டு வந்தாலும், எடை குறையும்.
    பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதி துண்டுகளை முகப்பரு உள்ளவர்கள் தங்களது முகத்தில் மென்மையாக தேய்த்து வந்தால், பருக்களை போக்குவதோடு முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி பொலிவு கிடைக்கும்.

    * உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை எடுத்து முடித்ததும் பப்பாளிப் பழத்தை உண்டால், உடம்புக்கு தெம்பு கொடுக்கும். முக்கியமாக ஆன்டிபயாடிக் மருந்து எடுத்துக்கொண்டவர்கள், சிகிச்சைக்குப் பின் நிறைய பப்பாளிப் பழம் சாப்பிட வேண்டும். காரணம், குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.
    இன்று அலோபதி மருத்துவர்கள், பெரும்பாலும் ஆன்டிபயாடிக் மருந்துகளையே பரிந்துரை செய்வதால் குடல் தசைகள் மிக மோசமான பாதிப்புகளுக்கு ஆளாவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. இத்தகைய நிலையில் உள்ளோருக்கு பப்பாளி வைத்தியம் நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-papali_3.jpg   Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-papali_1.jpg  

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter