Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1571
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஆரோகியமாக இருக்க எப்படி நடக்க வேண்டும்

    நடைப்பயிற்சி இன்றைய காலக்கட்டத்தில் சிறந்த பயிற்சியாகும். இது இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச் சத்தின் (Low-density lipoprotein - LDL)அளவைக் குறைத்து, நரம்புகளுக்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்குகிறது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும், உடலுக்கு வலுவான கட்டமைப்பு அளித்து ஆரோக்கியமானதாக இருக்க விரும்புபவர்களுக்கும் நடைப் பயிற்சி ஓர் எளிய உடற்பயிற்சியாக உள்ளது.

    வேகமாக நடத்தல் எனும் பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதர இதயநோய்களின் தாக்குதல்கள் இப்பயிற்சியை மேற்கொள்ளாதவர்களோடு ஒப்பிடுகையில் பாதிக்கும் மேலாக குறைவாக உள்ளது என்று சமீபத்திய ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
    நீங்கள் வேலைக்கு செல்லும் பயணத்தில் அதிகமாக நடக்க முனையுங்கள், ரயிலுக்கோ, பேருந்துக்கோ நடந்து செல்லுங்கள் , கடைகளுக்கு நடந்து செல்லுங்கள்., நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தூய்மையான காற்று வீசும் பகுதிகளில் நீண்ட நடை பயணம் சென்று நல்ல நேரத்தை செலவழித்து மகிழுங்கள்.

    நடக்கும் முறைகள் :

    1. நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்தவராக (தரையை பார்க்காமல்) இருபது அடி முன்னோக்கியவாறு நடங்கள்.

    2. நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதாரணமாகவும் கைகளைத் தளர்வாகவும் வைத்திருங்கள்.

    3. கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு (பக்கவாட்டில் ஆட்டாமல்), அதேவேளை நெஞ்சுப் பகுதியை விட உயர்த்திவிடாமல் நடந்து செல்லுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் கால்களும் பின் தொடரும்..

    4. உங்கள் அடிவயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன்புறம் சாய்த்தவாறு நடங்கள்.

    5. ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் நினைத்து கொண்டு, அடிகளை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட்டுப்படுத்துங்கள். வேகமாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.

    6. இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து ஆக்ஸிஜனை அதிகமான அளவில் உட்செலுத்திக்கொள்ளுங்கள். நடக்கும் போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.


    Sponsored Links
    babyarasu22 and saidevi like this.

  2. #1572
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடல்: உங்களுக்குத் தெரியுமா? - சுவையான தகவல்கள்!

    செல்களுக்குத் தேவை உணவு,பிராணவாயு, நீராதாரப் புறச்சூழ்நிலை. இவை இருந்தால்தான் செல்கள் இருக்க முடியும். உணவு, மற்றும் தண்ணீரை உடலில் உள்ள ரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் வழங்குகின்றன, இவைதான் கழிவுகளையும் வெளியேற்றுகிறது. செல்களுக்குத் தேவையான ரசாயங்கள் மற்றும் உணவுப்பொருட்களை தாங்கியுள்ளது ரத்தமாகும்.

    ஈக்கள் ஒரு வினாடியில் 200 பிம்பங்களைப் பார்க்க முடியும். அதனால் ஒரு சினிமா அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் ஆனால் எல்லாம் நகராத பிம்பங்களாகவே தெரியும். இதனால்தான் ஈக்கள் தொலைக்காட்சியை பார்ப்பதில்லையோ?

    நீருக்குள் வாழும் உயிரினங்கள் உதாரணமாக மீன் போன்ற உயிரினங்களுக்கு மனிதர்களுக்கு இருப்பது போல் நுரையீரல்கள் கிடையாது. மூச்சு உறுப்பாக அவர்ற்றிற்கு இருப்பதன் பெயர் 'கில்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. தண்ணீரிலிருந்து ஆக்சிஜனை இவை எடுக்க முடியும்.

    நமது ஜீரண அமைப்பு என்பது ஒரு நீளமான டியூப் போன்ற அமைப்பாகும். வாயின் உட்பகுதியிலிருந்து துவங்கி ஆசனாவாய் வரை நீண்ட டீயூப் ஆகும். பெரியவர்களுக்கு இது நீளமானது இதனால்தான் உணவுப்பொருட்கள் இதன் வழியாகச் செல்ல 10 முதல் 20 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும்.

    நாம் தினமும் 3 லிட்டர் தண்ணீரை உடலிலிருந்து இழக்கிறோம், அதாவது சிறுநீர், வேர்வை, நமது மூச்சின் மூலமும் இழக்கிறோம். மேலும் வேர்வையில் கூடுதல் உப்பையும் இழக்கிறோம். அதே போல் நாம் மூச்சை வெளியே விடும்போது கரியமிலவாயுவின் வேஸ்ட்டை வெளியேற்றுகிறோம்.

    குளிரெடுக்கும்போது நம் உடல் நடுங்குகிறதன் காரணம் தெரியுமா? மூளைக்கு அடியில் இருக்கும் 'ஹைபோதலாமஸ்' என்ற ஒன்று உஷ்ணம் குறைவாக இருப்பதை உணர்கிறது. உடனே தைராய்டு சுரப்பிற்கு செய்தி அனுப்புகிறது. உடனே தைராய்டு சுரப்பி மெடபாலிக் விகிதத்தை அதிக்ரிக்கிறது. உடனே உடற்தசைகள் சுருங்கி விரிகிறது. இதன் மூலம் உஷ்ணம் உருவாக்கப்படுகிறது. நரம்புகள் உடனே சருமத்திற்கு செய்தி அனுப்புகிறது. உடனே சருமத்தின் துளைகள் சுருங்குகிறது, இதன் மூலம் உஷ்ணத்தை உடலுக்குள் பாதுகாக்கிறது.

    கணினிகள் சில வினாடிகளில் மில்லியன் கணக்கில் வித்தியாசமான பலவேலைகளை ஒரே நேரத்தில் செய்து விடுவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். ஆனால் நம் மூளை கம்ப்யூட்டரைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வேகம் கொண்டது. ஒவ்வொரு வினாடியும் உடலுக்கு மூளை பில்லியன் கணக்கில் சிறுசிறு சிக்னல்களை அனுப்பிக் கொண்டேயிருக்கிறது. இதன் மூலம் உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-img1120505033_1_1.jpg  
    babyarasu22 and saidevi like this.

  3. #1573
    babyarasu22 is offline Friends's of Penmai
    Real Name
    baby nagalakshmi
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    trichy
    Posts
    205

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    Thanks Chan for the infos


  4. #1574
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மலட்டுத்தன்மை போக்கும் ஆவாரை

    திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத பெ*ண்க*ளு*க்கு ஆவாரை பயன்படுகிறது.

    அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரைப் பூவை சேர்த்து உண்டு வந்தால், பெண்களுக்கு மலட்டுத் தன்மை நீங்கும்.

    விரைவில் கர்ப்பம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.

    மேலும், ஆவாரைப் பூவை வாயில் அடக்கி வைத்திருக்க கண்ணில் ஏற்படும் படலம் தீரும்.

    ஆவாரை பிஞ்சை அரைத்து வெந்நீரில் கலந்து உட்கொள்ள நீர்க்கட்டு குணமாகும்.

    ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்படை இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட வெள்ளை நோய், நீரிழிவு தீரும்.,



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-img1130820046_1_1.jpg  
    Last edited by chan; 12th Jan 2015 at 10:55 AM.
    saidevi likes this.

  5. #1575
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நிச்சயம் தவிர்க்க வேண்டிய அதிக கலோரிகள் கொண்ட 20 இந்திய உணவுகள்!

    உணவு என்பது நாம் வாழ்வதற்கு தேவைப்படும் ஒரு முக்கிய பொருளாகும். அது மருந்தை போலத் தான். அதிலும் ஆரோக்கியமான உணவை தேவையான அளவு உட்கொண்டால், உடல் ஆரோக்கியமாக விளங்கும். அதுவே ஆரோக்கியமில்லாத உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உடலில் பல வியாதிகள் வந்து சேரும்.

    சில இந்திய உணவு வகைகளில் காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் அவரைகள் போன்ற சத்துள்ள பொருட்களை சேர்ப்பதால், அவைகள் ஆரோக்கியமான உணவுகளாக விளங்கும்.

    இருப்பினும் நம் வட்டார வழக்கப்படி சமைக்கும் போது, அந்த உணவை எப்படி சமைக்கிறோமோ, அதனை பொறுத்து கலோரிகள் கூடிவிடும். சில நேரங்களில் உணவுகளில் க்ரீம், நெய், வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்ப்பதாலும் கூட கலோரிகள் அளவுக்கு அதிகமாக கூடிவிடும்.

    ஆரோக்கியமான இதயத்தை பெறுவதற்கும், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் வேண்டுமானால், கூடுதல் கலோரிகளை கொண்ட சில இந்திய உணவுகளை தவிர்க்க வேண்டும். அப்படிப்பட்ட உணவுகள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? இதோ அந்த உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

    கோழி குருமா

    மிதமான க்ரீமி வகை உணவான கோழி குருமா பல இந்திய வீடுகளில் தயார் செய்யப்படும் உணவாகும். கோழி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி செய்யப்படுவது தான் இந்த உணவு.

    சமோசா

    சமோசாவானது உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பட்டாணிகள் சேர்த்து செய்யப்படும். மிகவும் புகழ் பெற்ற நொறுக்குத் தீனியாக விளங்கும் சமோசா, மாலை நேரங்களில் உண்ணப்படும்.

    இதனை தயாரிக்க உருளைக்கிழங்கு மசாலா, கோழி (அரிதாக), காய்கறி, எண்ணெய் மற்றும் உப்பு தேவைப்படும். இதனால் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: 2 சைவ சமோசாவில் தோராயமாக 260 கிலோ கலோரிகள். அதுவே 2 அசைவ சமோசாவில் 320 கிலோ கலோரிகள் இருக்கும்.

    தந்தூரி சிக்கன்


    தந்தூரி சிக்கன் என்பது மிகவும் புகழ் பெற்ற இந்திய உணவாகும். வறுத்த கோழி, தயிர் மற்றும் மசாலாக்களை கொண்டு தயார் செய்யப்படும் உணவு இது. இதன் மூலம் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு கோழியின் காலில் தோராயமாக 264-300 கிலோ கலோரிகள் இருக்கும்.

    மெட்ராஸ் சிக்கன்

    சிக்கன், பன்றிக்கறி, மாட்டிறைச்சி, ஆட்டுக் கறி மற்றும் கொத்துக்கறி போன்றவைகளை வைத்து இந்த காரமான குழம்பை தயாரிக்கலாம். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: 100-200 கிராமில் தோராயமாக 450-500 கிலோ கலோரிகள் இருக்கும்.

    புலாவ்

    சாதத்தில் சுவையை சேர்க்க மசாலாக்கள் சேர்த்து, அதில் கோழி, காய்கறி அல்லது மீனின் ஸ்டாக் போன்றவற்றை சேர்த்து சமைக்கும் உணவு தான் புலாவ். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை உட்கொள்ளும் அளவில் தோராயமாக 449 கிலோ கலோரிகள் இருக்கும்.

    வெங்காய பஜ்ஜி

    இந்த காரசாரமான இந்திய நொறுக்குத் தீனி உருளைக்கிழங்கு பஜ்ஜியை போன்றது தான். பல வடிவங்களில் செய்யப்படும் பஜ்ஜியை பல இந்திய உணவுகளை உண்ணும் போது அதனுடன் சேர்த்து உண்ணலாம்.

    தனியாகவும் உண்ணக்கூடிய இந்த உணவு மிகவும் புகழ் பெற்ற உணவாக விளங்குகிறது. உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: 2-3 பஜ்ஜிகளில் 190 கிலோ கலோரிகள் இருக்கும்.
    contd..


    saidevi likes this.

  6. #1576
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    சிக்கன் டிக்கா


    மசாலா வறுத்த கோழி கறி துண்டுகளை காரசாரமான கிரேவியில் போட்டு தயார் செய்வது தான் சிக்கன் டிக்கா மசாலா. காரசாரமான ஆரஞ்சு நிறமுடைய க்ரீமி உணவு இது.

    இது நம் இந்திய பாரம்பரிய உணவே அல்ல. சிக்கன் டிக்காவை போல் உள்ளதால், முகலாய உணவு வகையான இது இப்பெயரை பெற்றது. இருப்பினும், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் புகழ் பெற்ற உணவாக விளங்குகிறது இது.

    கோழி குழம்பு

    கோழி குழம்பு என்பது ஒரு பொதுவான சுவைமிக்க இந்திய உணவாகும். கோழி மற்றும் குழம்பு கலந்து செய்யப்படுவது தான் இந்த உணவு. இதில் சேர்க்கப்படும் மசாலா பொடிகளில் போக குங்குமப்பூ, இஞ்சி மற்றும் இதர பொருட்களையும் சேர்க்கலாம். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 583 கிலோ கலோரிகள் இருக்கும்.

    மட்டன் ரோகன்


    ஜோஷ் ரோகன் ஜோஷ் என்ற வாசனையான மட்டன் உணவு புகழ் பெற்ற காஷ்மீரி உணவாகும். இதனை அதிகபட்ச வெப்பத்தில் சமைக்க வேண்டும். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 589 கிலோ கலோரிகள் இருக்கும்.

    மட்டன் கீமா

    குறும்பாட்டு கறியை காரசாரமான மசாலாக்கள் மற்றும் பச்சை பட்டாணியுடன் சேர்த்து சமைக்கப்படும் உணவு இது. உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 502-562 கிலோ கலோரிகள் இருக்கும்.

    நாண் ரொட்டி

    நாண் ரொட்டி என்பது ஓவனில் வாட்டி தட்டையாக சமைக்கப்படும் ரொட்டி வகை உணவாகும். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு நான் ரொட்டியில் 317 கிலோ கலோரிகள் இருக்கும்.

    பர்பி

    இந்திய இனிப்பு வகையில் ஒன்றான பர்பி செவ்வக வடிவில் இருக்கும். சர்க்கரை கலந்த பாலில் உலர்ந்த பழங்கள் மற்றும் மிதமான மசாலாக்கள் சேர்த்து, பாலை சுண்ட காய்ச்சி தயாரிக்கப்படுவது தான் பர்பி.

    பின் அதனை ஒரு தட்டையான தட்டில் ஊற்றி, அதனை சின்ன துண்டுகளாக வெட்ட வேண்டும். இந்த துண்டுகளை உண்ணக்கூடிய சில்வர் தகடு மூலம் அலங்கரிக்கலாம்.

    அல்வா

    அல்வா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அடர்த்தியான இனிப்பு வகையை சேர்ந்த அல்வா இந்தியாவின் புகழ் பெற்ற இனிப்பு வகையாகும். அல்வாவில் பல பொருட்களும் சேர்க்கப்படலாம்.

    அதில் சூரியகாந்தி விதைகள், நட்ஸ், பீன்ஸ், பருப்புகள், கேரட், பூசணி, சேனைக்கிழங்கு போன்றவைகள் சில உதாரணங்கள். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 570 கிலோ கலோரிகள் இருக்கும்.

    ஜிலேபி

    ஜிலேபி என்பது மற்றொரு புகழ் பெற்ற இந்திய இனிப்பு வகையாகும். கோதுமை மாவை வட்ட வடிவில் நன்றாக பொறித்து, பின் சர்க்கரை சிரப்பில் ஊற வைத்து செய்யப்படுவது தான் ஜிலேபி.

    இந்த பலகாரத்தை வெதுவெதுப்பாகவோ அல்லது ஆற வைத்தோ உண்ணலாம். மெல்லக்கூடிய வகையில் இருக்கும் இந்த பலகாரத்தின் வெளிப்புறம் சர்க்கரை கற்களால் சூழப்பட்டிருக்கும்.
    contd..



  7. #1577
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    ரசமலாய்

    ரசமலாய் என்பது மற்றொரு புகழ் பெற்ற இந்திய இனிப்பு வகையாகும். ரச என்றால் ஜூஸ் என்றும், மலாய் என்றால் க்ரீம் என்றும் பொருள். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 250 கிலோ கலோரிகள் இருக்கும்.

    சோலே படூரே

    சனா பூரி என்றும் அழைக்கப்படும் இந்த உணவு கொண்டைக்கடலை மற்றும் பூரியுடன் சேர்த்து உண்ண வேண்டும். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 450 கிலோ கலோரிகள் இருக்கும்.

    பட்டர் சிக்கன்

    அடிப்படையில் வடஇந்திய உணவான பட்டர் சிக்கன் ஒரு புகழ் பெற்ற உணவு வகையாகும். இது கிடைக்காத இந்திய உணவகங்களே இல்லை என்று கூட கூறலாம்.

    முந்திரி, பாதாம், தக்காளி மற்றும் வெண்ணெயை கொண்டு தயாரித்த க்ரீமி சாஸில் சமைத்த சிக்கனை போட்டு செய்யப்படுவது தான் பட்டர் சிக்கன். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 490 கிலோ கலோரிகள் இருக்கும்.

    ஃபலூடா

    ஃபலூடா என்பது குளிர்ந்த இனிப்பு வகையை சேர்ந்த ஒரு பானமாகும். ரோஸ் சிரப், சேமியா, ஜெல்லி மற்றும் மரவள்ளிக்கிழங்கு பால், தண்ணீர் அல்லது ஐஸ் க்ரீமுடன் சேர்த்து இதனை தயாரிக்கலாம். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு பெரிய டம்ளரில் தோராயமாக 300 கிலோ கலோரிகள் இருக்கும்.

    பன்னீர் புர்ஜி

    பன்னீர் புர்ஜி ஒரு சிறந்த காலை உணவாகவும் விளங்கும். சப்பாத்தி அல்லது பரோட்டாவுடன் சேர்த்து இதனை இரவும் உண்ணலாம். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு மீடியம் அளவு கிண்ணத்தில் தோராயமாக 412 கிலோ கலோரிகள் இருக்கும்.

    பாவ் பாஜி

    பாவ் பாஜி என்பது மராத்திய வகை துரித உணவாகும். பாவ் பாஜியில் மல்லிச்செடி, வெங்காயம், எலுமிச்சை சாறு கலந்த பாஜி (அடர்த்தியான உருளைக்கிழங்கு க்ரேவி) மற்றும் வாட்டிய பாவ்வும் (பன்) இருக்கும்.

    இந்த பாவ்வின் அனைத்து பக்கங்களிலும் வெண்ணெய் தடவப்படும். உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு தட்டில் தோராயமாக 600 கிலோ கலோரிகள் இருக்கும்.



    saidevi likes this.

  8. #1578
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அரைஞாண் கயிற்றின் மருத்துவ ரகசியம்!.

    அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க. உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?
    நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்.
    ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண் கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய்
    வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது.
    இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண் கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன. இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.
    இப்போது வெள்ளி, தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விசயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-30.jpg  
    arunaprakash, saidevi and Dangu like this.

  9. #1579
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    Nice Information.


  10. #1580
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கொலஸ்ட்ராலுக்கு டாட்டா காட்டும் பார்லி

    மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் பார்லி கஞ்சியும் ஒன்று.

    இது ஒரு அற்புதமான சத்துப்பொருளாக இருக்கிறது. இதற்கு வாற்கோதுமை என்று மற்றொரு பெயரும் உண்டு.

    ஒர் அவுன்ஸ் அளவுள்ள பார்லி அரிசியில் 3.3 கிராம் அளவு புரோட்டீன் சத்து அடங்கியிருக்கிறது. மற்றும் 0.4 சதவீதம் கொழுப்பு சத்தும்.

    19.7 சதவீதம் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளது. பாஸ்பரசும் இரும்பு சத்தும் தாராளமான அளவிலேயே உள்ளன.

    குழந்தைகளுக்கு காப்பி – டீ போன்ற பானங்களை கொடுப்பதை விட பார்லி கஞ்சியை தொடர்ந்து கொடுக்கலாம்.

    பார்லி கஞ்சி

    பார்லியை வெறும் வானொலியில் வறுத்து அதிலேயே நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

    பின் உப்பு சேர்த்து கொஞ்சம் கஞ்சி போல கொதித்து வரும் வரை சமைத்து பின் வடிகட்டி பருகவும்.

    பயன்கள்

    கர்ப்பகாலத்தில் உள்ள தாய்மார்களுக்கு காலில் சுரம் ஏற்பட்டால் நீர் நன்கு போவதற்காக தருவார்கள்.

    கொலஸ்ட்ராலை அழிப்பதற்கு இந்த கஞ்சி ஒரு சிறந்த மருந்து.

    இதை அடிக்கடி சாப்பிடுவது மூலம் நரம்புகள் வலுப்படும்.

    பார்லி சப்பாத்தி

    பார்லி மாவு, கோதுமை மாவு, உப்பு போட்டு தேவையான அளவு சூடான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    பின்னர் இந்த மாவை சப்பாத்திகளாக உருட்டி தோசை கல்லில் போட்டு சுட்டால் சத்தான பார்லி சப்பாத்தி ரெடி.

    பயன்கள்

    இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து சாப்பிட்டால் உடல் பருமனிலிருந்து விடுபடலாம்.

    உடலில் உள்ள நச்சுப்பொருட்களை அழிப்பதற்கு இந்த சப்பாத்தி சிறந்த மருந்தாகும்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-barly_002-300x104.jpg  

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter