Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


 1. #1591
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  புகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை

  பத்தியம் இருப்பவர்கள் உண்ணகூடாத கீரை என்று அகத்தி கீரையை குறிப்பிடுவர். ஏனெனில் தன்னுள் இருக்கும் அதீதமான சக்திகளால் இது மருந்தின் வீரியத்தை குறைத்து விடுகிறதாம். இக்கீரை 63 சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது.

  சுண்ணாம்பு சத்தை அதிகமாக கொண்டது. கண்பார்வை, நினைவாற்றலை பேணுவதற்கு அகத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. அகத்தி கீரையை தொவரன் வைக்கும்போது புழுங்கலரிசியை வறுத்து பொடிசெய்து கலந்தால் கீரையின் கசப்புதன்மை விலகும்.

  சத்துகள்

  ஈரப்பதம் - 73 சதம், புரதச்சத்து - 83 சதம். தாதுஉப்புக்கள் - 3.1 சதம், நார்ச்சத்து - 2.2 சதம், மாவுச்சத்து - 12 சதம், கொழுப்புச்சத்து - 1.4 சதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன. தாதுஉப்புக்களில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன.

  வைட்டமின் - ஏ, தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் - சி போன்றவை அடங்கியுள்ளன.

  அகத்திக்கீரை கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும்.

  கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும், மலச்சிக்கல், காபி, டீ, இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும். அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் (அகத்திப்பட்டைக் குடிநீர்) குடித்துவர, சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச்சுரம் ஆகியவை தீரும்.

  குழம்பு வைக்கும் போது தாளிதத்துடன் கறிவேப்பிலைக்கு பதிலாக அகத்தியை சிறிது வதக்கி சேர்த்தால் உடல்சூடு, வாய்ப்புண், வயிற்று புண் அகலும். மலேசியாவை தாயகமாக கொண்ட அகத்தி இந்தியாவில் ஈரப்பசை அதிகமுள்ள நிலங்களிலும், களிமண் நிலத்திலும் செழித்து வளரும்.

  நான்கு வகைகள் கொண்ட அகத்தியில் வெள்ளை பூ பூக்கும் அகத்தியே மனிதன் உண்ண தகுந்தது. மற்ற வகைகள் அபூர்வம் என்றாலும் அவை கால்நடைகளுக்கே உணவாக பயன்படுகின்றது.

  புகையிலை உபயோகிப்போர் நிகோடின் நச்சுவால் பாதிக்கப்பட்டால் அதனை களையும் சக்தி அகத்திக்கு உண்டு. நீராகாரம் பருகும் பழக்கமுடையவர்கள் அகத்தி கீரை சமையலாகும் நாட்களில் கீரை, ரசம், நீராகாரம் மூன்றையும் கலந்து பருகுவர்.

  இவ்வாறு பருகுவதால் மலச்சிக்கல், நீரடைப்பு நிவாரணமடைவதுடன் உடலின் நச்சு நீர்கள் முறிவடைகின்றன. எனினும் மாதத்துக்கு இருமுறை மட்டுமே உண்ணவல்லது அகத்தி.

  இலைச்சாறும் நல்லெண்ணெயும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமுறக் காய்ச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக் கிழுங்கு விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி (அகத்தித் தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.  Sponsored Links
  Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-ht3189.jpg  
  Last edited by chan; 12th Jan 2015 at 08:27 PM.
  Dangu likes this.

 2. #1592
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  பச்சை பயிறை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

  பொதுவாக பருப்பு வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அன்றாட உணவில் சிறிது பருப்புக்களை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.

  அதிலும் பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.

  மேலும் ஒரு பௌல் வேக வைத்த பச்சை பயிறில் 100 கலோரிகளுக்கு மேல் இருக்காது. மேலும் பச்சை பயறு உடலில் நோய்கள் தாக்குவதைத் தடுப்பதோடு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது.

  சரி, இப்போது பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றிப் பார்ப்போமா!!!

  எடையைக் குறைக்கும் பெரும்பாலானோர் அவஸ்தைப்படும் ஒரு விஷயம் தான் உடல் பருமன். இத்தகைய உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு காரணம் பச்சை பயறு நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருப்பது தான்.

  எனவே உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

  இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.

  இரும்புச்சத்து வளமாக உள்ளது நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.

  சரும புற்றுநோய் பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் என்பது தெரியுமா? ஆம், அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை உணவில் சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

  பொதுவாக பருப்பு வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அன்றாட உணவில் சிறிது பருப்புக்களை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.

  அதிலும் பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.

  மேலும் ஒரு பௌல் வேக வைத்த பச்சை பயிறில் 100 கலோரிகளுக்கு மேல் இருக்காது. மேலும் பச்சை பயறு உடலில் நோய்கள் தாக்குவதைத் தடுப்பதோடு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது.

  சரி, இப்போது பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றிப் பார்ப்போமா!!!
  contd..


  Dangu likes this.

 3. #1593
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  தொடர்ச்சி
  எடையைக் குறைக்கும் பெரும்பாலானோர் அவஸ்தைப்படும் ஒரு விஷயம் தான் உடல் பருமன். இத்தகைய உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு காரணம் பச்சை பயறு நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருப்பது தான்.

  எனவே உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

  இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.

  இரும்புச்சத்து வளமாக உள்ளது நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.

  சரும புற்றுநோய் பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் என்பது தெரியுமா? ஆம், அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை உணவில் சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.


  sasee777 and Dangu like this.

 4. #1594
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  ஆவாரை செடியின் மருத்துவ குணங்கள்

  ஆவாரை என்பது செடிவகையைச் சார்ந்தது. ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர், பிசின் ஆகியன அனைத்துமே நமக்கு பயன்படுபவை ஆகும். ஆவாரை இலை வற்றச்செய்தல் குணத்தை உடையது. குளிர்ச்சியூட்ட கூடியது. ஆவாரைப்பூ உடற்சூட்டையும் எரிச்சலையும் போக்கக்கூடியது.

  ஆவாரம்பட்டை வற்றச் செய்வது மற்றும் ஒரு ஊட்டச்சத்துள்ள மருந்துப் பொருளாகும் ஆவாரைவேர் ஆஸ்துமா மற்றும் தோல் நோய்களுக்கு மருந்தாகும்.

  ஆவாரையைப் பொதுவாக சர்க்கரை நோய்க்குத் துணை மருந்தாகவும், கண்ணோய்களுக்கும், பொருத்துகள் மற்றும் தசைகளின் வலியைப் போக்குதற்கும், மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்கும், மஞ்சள்காமாலையை குணப்படுத்துவதற்கும், ஈரல் நோய்களைப் போக்குவதற்கும், சிறுநீர்த் தாரையில் ஏற்படும் துன்பங்களைத் துடைப்பதற்கும் மருத்துவர்கள் பயன்படுத்துவர்.

  ' ஆவாரை தசை நரம்பை சுருக்கும் தன்மையுடையது. விதைகள் காம உணர்வைத் தூண்டக் கூடியது. தோலின் துர்நாற்றத்தைப் போக்கி நல்ல பொற்சாயலையும் தரவல்லது. ஆவாரம் பூக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதமாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு சர்க்கரை நோய்க்கே உரித்தான மலச்சிக்கலையும் மாற்றும் குணம் ஆவாரம் பூவுக்கு உண்டு.

  வயிற்றுப் பூச்சிகளை வேரறுக்க வல்லது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. எவ்வித வீக்கத்தையும் கரைக்கக் கூடியது. நுண்கிருமிகளைப் போக்க வல்லது. சோர்வைப் போக்கி புத்துணர்வைத் தரக் கூடியது. சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரோடு விந்து வெளியாவது குணமாகும். ஆவாரையில் "சென்னா பிக்ரின்'' எனப்படும் "கார்டியாக் குளூகோசைட் மற்றும் "ஆன்த்ரா குனைன்ஸ்'', "டேனின்ஸ்'' ஆகிய வேதிப் பொருள்களை உள்ளடங்கி உள்ளது.

  பல்வேறு நோய்களுக்கும் காரணமான "ஸ்டேப்பிலோகக்கஸ் ஆரியஸ்'', "என்டரோ காக்கஸ் "பீக்காலிஸ்'', "பேச்சிலஸ் சப்டிலிஸ்''. என்டரோ சாக்கஸ் "பீக்காலிஸ்'', "பேச்சிலஸ் சப்டிலிஸ்'', "சால்மோனில்லா டைப்பி'', "சால்மோனில்லா டைபி'', "சால் மோனில்லா பேரா டைப்பி'', "விப்ரியோ காலரே'', "சைஜில்லா டிசன்ட்ரோ'' போன்ற நோய்க் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் மருத்துவ வேதிப் பொருள்கள் உள்ளன.

  இன்றைய நவநாகரீக உலகில் மகப்பேறு இன்மை என்கிற பிரச்சினை பரவலாக உள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது. இதனால் மிக்க பொருட் செலவு, உடல் துன்பமும், ஏமாற்றமும் கூட ஏற்படுகிறது. மகப்பேறு இன்மைக்கு முக்கிய காரணங்கள் இரண்டு எனச் சொல்லலாம். ஒன்று விந்தணுக்கள் குறைபாடு மற்றும் அணுக்களின் பயணத்தன்மையில் குறைபாடு (ஸ்பெர்ம் கவுண்ட் மற்றும் ஸ்பெர்ம் மோடிலிடி) இரண்டாவது இயலாமை (இம்பொட்டன்ஸி), ஆண் அல்லது பெண்களின் உணர்வின்மை ஆகியவையே இந்த குறைகளை போக்கும் வல்லமை ஆவாரையில் உள்ளது.
  contd..


  Dangu likes this.

 5. #1595
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  தொடர்ச்சி

  • ஆவாரம்பட்டையை எடுத்து உலர்த்திப் பொடித்து 20கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீரிலிட்டு 200மி.லியாகக் காய்ச்சி அந்தி சந்தி என இருவேளை குடித்துவர மதுமேகம் சிறுநீருடன் ரத்தம் கலந்து போதல் பெரும்பாடு ஆகியன தீரும்.

  • ஆவாரைப் பஞ்சகம் சூரணம் வெந்நீருடன் சேர்த்து தினம் இருவேளை சாப்பிட மதுமேகம் என்கிற நீரிழிவு உடல் மெலிவு, உடலில் ஏற்படும் எரிச்சல், மூச்சுத் திணறல் ஆகின குணமாகும்.

  • ஆவாரம் பூக்களை புதிதாகக் கொண்டு வந்து கூட்டாக செய்து உணவுக்கு பயன்படுத்துவதாலோ அல்லது உலர்த்தி சூரணித்து தேநீர் போலக் காய்ச்சி சாப்பிடுவதாலோ உடலின் சூடு, உடலின் துர்நாற்றம் ஆகியவற்றைப் போக்குவதோடு உடலுக்கு பலத்தை தரும். நோய்களைத் தணிக்கும் உடலுக்கு பொன்னிறத்தை தரும்.

  • ஆவாரம் பூ, இலை இவை இரண்டையும் சேர்த்து உலர்த்தி பொடியாக்கி அத்துடன் மஞ்சள் சேர்த்து அரைத்து உடலுக்கு தேய்த்துக் குளிக்க உடல் துர்நாற்றம் போகும். தோலும் மென்மையும் பளபளப்பும் பெறும்.

  • ஆவாரம் பூவை இரவு நேரத்தில் ஒரு டம்ளர் நீரில் போட்டு வைத்திருந்து காலை வெறும் வயிற்றில் அதன் தெளிவைக் குடித்து வருவதால் தோலுக்கு ஏற்பட்ட சொறி, சிரங்கு, தேமல் போன்ற துன்பங்கள் போகும்.

  • ஆவாரைப் பிசின் (இது நேரடியாக கிடைக்கப் பெறாவிடில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்). கால் ஸ்பூன் அளவு எடுத்து 1 டம்ளர் நீரில் இட்டு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து தினமும் இருவேளை சில நாட்கள் குடித்து வர பெண்களின் வெள்ளைப் போக்கு குணமாகும். வயிற்று வலி, இடுப்பு வலி ஆகியவை குணமாகும்.

  • ஆவாரை இலையை நெய்யில் விட்டு வதக்கி ஆறவிட்டு கண்களை மூடியபடி இமைகளின் மீது ஆறவிட்டு கண்களை மூடியபடி இமைகளின் மீது பத்து நிமிடங்கள் போட்டு வைக்க கண் நோய்கள் குணமாகும் கண்களில் அழுக்கு வெளிப்பட்டு புளிச்சவாடை வருதல், கண்சிவப்பு, கண் எரிச்சல் ஆகியனவும் குணமாகும்.

  • தோல் வறட்சி ஏற்பட்ட போது ஆவாரைப்பட்டை, மஞ்சள் சிறிது கற்பூரம் ஆகியவற்றை நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு உடல் முழுவதும் தேய்த்து வைத்திருந்து பின்னர் குளிக்க தோல் வறட்சி நீங்கி மென்மையும் நல்ல நிறமும் பெறும்.

  • ஆவாரைப் பஞ்சகத்தை இலை, பூ, பட்டை காய், வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து காய வைத்து பொடித்து வைத்துக் கொண்டு அரை தேக்கரண்டி அளவு தினம் 3 வேளை உள்ளுக்கு சாப்பிட சோர்வு, மந்தநிலை மறைந்து சுறுசுறுப்பும் வீரியமும் உண்டாகும்.

  எங்கு பார்த்தாலும் கிடைக்கும் ஆவாரை இலையோடு உளுந்த மாவை சேர்த்து அரைத்து மூட்டு வீக்கம், வலி ஆகியவற்றுக்குப் பற்றாகப் போட வீக்கம் தணிந்து வலியும் போகும்.


  Dangu likes this.

 6. #1596
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  ரத்தக்கொதிப்பை குறைக்கும் வழிகள்

  ரத்த அழுத்தம் என்பது உடலில் ஓடும் ரத்தம், ரத்தக்குழாய்களின் சுவற்றில் ஏற்படுத்தும் அழுத்தம் ஆகும். பொதுவாக 120/80 mm Hg என்பது ஒரு மனிதனுக்கு சரியான அளவுகோலாக கொள்ளப்படுகின்றது. இந்த ரத்த அழுத்தம் சூழ்நிலை, உழைப்பு, நோய் இவற்றிற்கேற்ப மாறுபடும்.

  இந்த ரத்த அழுத்தமானது நரம்பு மண்டலத்தினாலும், நாளமில்லா சுரப்பிகளினாலும் சீராக இயக்கப்படுகின்றது. 120/80 mm Hg கீழுள்ள ரத்த அழுத்தத்தினை குறைவான ரத்த அழுத்தம் என்றும், அதற்குமேல் உள்ள ரத்த அழுத்தத்தினை உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்தக்கொதிப்பு என்று கூறுகின்றோம். இவை இரண்டிற்குமே பல காரணங்கள் உண்டு. சிலருக்கு திடீரென ஏற்படலாம்.

  சிலருக்கு பல காலமாக தொடர்ந்து இருக்கலாம். தொடர் உயர் ரத்த அழுத்தம் இருதய பாதிப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளுக்கு காரணமாகின்றது. இன்றைய நாகரிக வாழ்க்கையும் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாகின்றது.

  இன்னமும் 40 வயதிற்கு மேல் உள்ளோர் மாதம் ஒருமுறையாவது ரத்த அழுத்தத்தினை சோதனை செய்துக் கொள்வதில்லை என்பதால் அநேகருக்கு ரத்த அழுத்த பாதிப்பு ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகின்றது.

  முறையான ரத்த அழுத்த அளவு 120/80 mm Hg (அ) இதற்கு சற்று குறைவாக இருக்கலாம்
  உயர் ரத்த அழுத்த அறிகுறி 120-139 / 80-89 mm Hg
  உயர் ரத்த அழுத்த முதல்நிலை 140-159/ 90-99 mm Hg
  உயர் ரத்த அழுத்த 2-ம் நிலை 160/100 mm Hg,

  முறையான ரத்த அழுத்தம் இல்லையெனில் உடனடி மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். பொதுவில் 90/60 அல்லது அதற்கும் சற்று கீழே உள்ள ரத்த அழுத்தத்தினை குறைவான ரத்த அழுத்தம் என்றும், 90/60 - 130/80 வரை அளவான ரத்த அழுத்தம் என்றும் 140/90 (அ) இதற்கு மேல் உள்ளதினை உயர் ரத்த அழுத்தம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  ஒருவரது ரத்த அழுத்தம் நிமிடத்திற்கு நிமிடம் மாறுபடும். பகலில் கூடியும், இரவில் குறைந்தும் காணப்படும். இரவில் அதிகம் குறையும். ரத்த அழுத்தம் இருதய நோயோடு சம்பந்தப்பட்டது. வயது, ஆண், பெண் இவைகளும் ரத்த அழுத்த மாறுபாடுகளுக்கு காரணம் வகிக்கின்றது. குழந்தைகளுக்கு பெரியோரை விட சற்று குறைவாக இருக்கும்.

  வயது கூடும்பொழுதும், முதியோருக்கும் ரத்த அழுத்தம் மாறுபடும். ரத்த நாளங்களின் முதிர்வே இதற்குக் காரணமாகின்றது. ஒருவரின் உடற்பயிற்சி, தூக்கம், ஜீரணசக்தி, மனநிலை இவையும் ரத்த அழுத்த மாறுபாடுகளுக்கு காரணம் ஆகின்றது.
  contd..


  Dangu likes this.

 7. #1597
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  தொடர்ச்சி

  உயர் ரத்த அழுத்தம்:

  உயர் ரத்த அழுத்தம் உடலிலுள்ள சில பாதிப்புகளை குறித்தும் இருக்கலாம். சில நேரங்களில் உயர் ரத்த அழுத்தம் அவசர சிகிச்சையில் கொண்டும் விடலாம். தொடர் உயர் ரத்த அழுத்தம் ரத்தக் குழாய்களில் அதிக அழுத்தத்தினை அளிப்பதால் இருதயத்திற்கு அதிக வேலை ஆகின்றது. இருதய ரத்தக் குழாய்களில் தேவையற்ற உள் திசு வளர்ச்சி ஏற்பட்டு ரத்த ஓட்டம் சுருங்குகின்றது.

  இதனால் இருதய தசைகள் தடித்து பலவீனம் அடைகின்றன. இதுவே இருதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, ரத்த குழாய்கள் பாதிப்பு என ஏற்படுத்துகின்றன. முறையான சிகிச்சை, உயர் ரத்த அழுத்தத்திற்கு அளிக்காவிடில் ஆபத்திலேயே கொண்டு விடுகின்றது.

  * சிலருக்கு கர்ப்ப காலத்தில் குறைந்த ரத்த அழுத்தம், தலைச்சுற்றல், மயக்கம், அதிர்ச்சி நிலை போன்றவற்றினை ஏற்படுத்தக்கூடும். அதிக ரத்தப்போக்கு, நச்சு (மருந்தினால் கூட இருக்கலாம்) ஹார்மோன் சரியின்மை, மிகக் குறைவான உணவு இவற்றினாலும் மேலும் சில மருத்துவ காரணங்களினாலும் ஏற்படுகின்றது.

  ரத்த அழுத்தத்தினை பரிசோதிக்கும் பொழுது அதற்கு முன் சுமார் 20 நிமிடங்களுக்கு முன்பு காபி அருந்தியோ, புகை பிடித்தோ இருக்கக்கூடாது. சிறுநீர் செல்லவேண்டிய அவசரம் இருக்கக்கூடாது. பரிசோதனைக்கு 5 நிமிடம் முன்பு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து இரு கால்களும் தரையில் பட இருக்கவேண்டும்.

  ரத்த அழுத்தம் அவ்வப்போது மாறுபடும் என்பதால் நம் ரத்த அழுத்த அளவினை உறுதி செய்ய காலை தூங்கி எழுந்தவுடன் (அதாவது எந்த வேலையும் ஆரம்பிக்கும் முன்) எடுக்க வேண்டும்.

  * வேலைகள் முடிந்த பிறகும் எடுக்கலாம். சிலருக்கு ரத்த அழுத்த பரிசோதனையே சற்று டென்ஷன் கொடுப்பதால் லேசான உயர் அழுத்தத்தினைக் காட்டலாம்.

  உயர் ரத்த அழுத்தத்தினைக் கூட்டும் மற்ற காரணங்கள்:

  * அதிக மது

  Dangu likes this.

 8. #1598
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  வாழைப்பழத்தின் மகிமை தெரியுமா?

  வாரம் ஒரு நாள் முழுவதும் வாழைப்பழங்களாகவே உண்டு வேறு எந்த உணவுகளையும் பானங்களும் அருந்தாமல் உபவாசம் போல் இருக்கலாம். நம் உடலில் சேர்ந்துவிடும் அமிலங்களை அழித்து வெளியேற்றுவதில் வாழைப்பழம் ஈடு இணைஇல்லாமல் செயல் புரிகிறது, இதர உணவுகளுடன் உண்ணப்படும் வாழைப்பழம் முழுமையாக செயல்பட இயலுவதில்லை. ஒருநாள் முழுவதும் வாழைப்பழம் மட்டும் உண்டால், மிக விரைவில் ரத்தம் சுத்த மடையும் இதேபோல், சாத்துக்குடி மட்டும் ஒருநாள் முழுவதும், ஆரஞ்சுப் பழம் மட்டுமே உண்டாலும் இதே பலன் கிடைக்கும். பழங்கள் எதுவானாலும் பழங்களுடன் தண்ணீர் அல்லது வேறு உணவுகளை உண்ணுதல் கூடாது. பழம் சாப்பிடுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னாலும், 30 நிமிடங்களுக்குப் பின்னாலும் தண்ணீர் போன்றவை அருந்தலாம். எந்த வகை பழமானாலும் அதனுடன் வேறு பானங்களோ தண்ணீரோ சேர்ப்பதினால் பழங்களின் தன்மை கெட்டு விடுகிறது. அதனால் பழங்களின் பயன்களை நாம் அடைய முடியாது. தனியாக பழங்களை மட்டுமே உண்டால் முழுப்பயனும் கிடைக்கும்.


 9. #1599
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  மரங்களும் அதன் பயன்களும்

  மரங்கள் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப, பலப்பல சூழ்நிலைகளுக்கேற்ப, அவரவருக்குத் தேவையான மரங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த மரங்கள் நமது சூழ்நிலைக்கேற்ப மற்றும் நாம் தேவைக்கு ஏற்ப வளர்க்கலாம் என்பதை பார்ப்போம்.
  கோடை நிழலுக்கு:
  வேம்பு, தூங்குமூஞ்சி, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம்.
  பசுந்தழை உரத்திற்கு:
  புங்கம், வாகை இனங்கள், கிளைரிசிடியா, வாதநாராயணன், ஒதியன், கல்யாண முருங்கை, காயா, சூபாபுல், பூவரசு.
  கால்நடைத் தீவனத்திற்கு:
  ஆச்சா, சூபாபுல், வாகை, ஒதியன், தூங்குமூஞ்சி, கருவேல், வெள்வேல்.
  விறகிற்கு சீமைக்கருவேல், வேலமரம், யூகலிப்டஸ், சவுக்கு, குருத்தி, நங்கு, பூவரசு, சூபாபுல்.
  கட்டுமான பொருட்களுக்கு:
  கருவேல், பனை, தேக்கு, தோதகத்தி, கருமருது, உசில், மூங்கில், விருட்சம், வேம்பு, சந்தனவேங்கை, கரும்பூவரசு, வாகை, பிள்ளமருது, வேங்கை, விடத்தி.
  மருந்து பொருட்களுக்கு:
  கடுக்காய், தானிக்காய், எட்டிக்காய்
  எண்ணெய்க்காக:
  வேம்பு, பின்னை, புங்கம், இலுப்பை, இலுவம்
  காகிதம் தயாரிக்க:
  ஆனைப்புளி, மூங்கில், யூகலிப்டஸ், சூபாபுல்
  பஞ்சிற்கு:
  காட்டிலவு, முள்ளிலவு, சிங்கப்பூர் இலவு
  தீப்பெட்டித் தொழிலுக்கு:
  பீமரம், பெருமரம், எழிலைப்பாலை, முள்ளிலவு.
  தோல்பதனிட, மை தயாரிக்க:
  வாட்டில், கடுக்காய், திவி – திவி, தானிக்காய்
  நார் எடுக்க:
  பனை, ஆனைப்புளி
  பூச்சி மருந்துகளாகப் பயன்படுத்த:
  வேம்பு, புங்கம், ராம்சீதா, தங்க அரளி
  கோயில்களில் நட:
  வேம்பு, வில்வம், நாகலிங்கம், தங்க அரளி, மஞ்சளரளி, நொச்சி, அரசு
  குளக்கரையில் நட:
  மருது, புளி, ஆல், அரசு, நாவல், அத்தி, ஆவி, இலுப்பை.
  பள்ளிகளில் வளர்க்க:
  நெல்லி, அருநெல்லி, களா, விருசம், விளா, வாதம், கொடுக்காப்புளி, நாவல்.
  மேய்ச்சல் நிலங்களில் நட:
  கருவேல், வெள்வேல், ஓடைவேல், சீமைக்கருவேல், தூங்குமூஞ்சி
  சாலை ஓரங்களில் நட:
  புளி, வாகை, செம்மரம், ஆல், அத்தி, அரசு, மாவிலங்கு.
  அரக்கு தயாரிக்க:
  குசும், புரசு மற்றும் ஆல்
  நீர்ப்பரப்பில் (கண்மாய்) பயிரிட:
  கருவேல், நீர்மருது, நீர்க்கடம்பு, மூங்கில், நாவல், தைல மரம், ராஜஸ்தான் தேக்கு, புங்கன், இலுப்பை மற்றும் இலவமரம்.
  இயற்கையை நம்புங்கள் இயற்கையோடு இணைந்து நலமுடன் வளமுடன் வாழ்வோம்.  Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-10519768_823892494372878_1330875837092858939_n.jpg  

 10. #1600
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  நாம் உண்ணும் உணவு சரியானதுதானா

  அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். .
  ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டுபோகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும்.
  விளையாடும்போதும் ஓடும்போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.
  அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள். அதன்காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம்.
  உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாதபோதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது. அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே!
  அடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டுபண்ணும். அதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள்.
  எண்ணைகொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டுபண்ணும்.
  ஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும். காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால்தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.
  இந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் அப்படித் தாகத்தை உண்டுபண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும்.
  அதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப்படுவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன.
  இயற்கை உணவுகள் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை
  பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை.
  இனியாவது இவற்றை அதிகம் எடுத்துக்கொள்வோம்.
  ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம் !  Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-10427242_821650794597048_8360170116333543623_n.jpg  

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter