Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1601
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஜூஸ்கள் மூலம் எடையைக் குறைப்பது எப்படி

    உலகில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனைகளிலேயே மிகவும் தொல்லை தரும் பிரச்சனை என்றால் அது உடல் பருமன் தான். உடல் எடை அதிகம் இருந்தால், எந்த ஒரு வேலையையும் சரியாகவும், நிம்மதியாகவும் செய்ய முடியாது.
    எதை செய்தாலும் சிறிது நேரத்திலேயே மூச்சு வாங்கி, உடல் சோர்ந்துவிடும். எனவே பலர் இந்த உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமென்று, தினமும் ஜிம் செல்வது, டயட் மேற்கொள்வது என்று இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன.
    அவற்றில் ஒன்று தான் ஜூஸ்கள் மூலம் எடையைக் குறைப்பது. அது எப்படி ஜூஸ் குடிப்பதன் மூலம் குறைக்க முடியும் என்று கேட்பீர்கள். உண்மையிலேயே ஜூஸ்களைக் குடித்தால், ஜூஸ்கள் அடிக்கடி பசி ஏற்படுவதைக் குறைத்து, நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடமாட்டோம். குறிப்பாக உடல் எடை குறைய வேண்டுமானால், முதலில் அனைவரும் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் செயலின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
    இதனால் நிச்சயம் விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். அதிலும் ஒரு வாரத்தில் உடல் எடையில் ஒரு குறிப்பிட்ட அளவில் மாற்றத்தைக் காணலாம். சரி, இப்போது உடல் எடையை குறைக்க உதவும் ஜூஸ்கள் சிலவற்றைப் பார்ப்போமா!
    தர்பூசணி ஜூஸ்;
    உடல் எடை குறைப்பில் தர்பூசணி ஜூஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் இதனை தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

    அன்னாசி ஜூஸ் அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியான ஜூஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால், பசியானது உடனே அடங்கும்.

    அவகேடோ ஜூஸ்;

    நிறைய பேர் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவகேடோ சாப்பிடக்கூடாது என்று தவறான கருத்தைக் கொண்டுள்ளார்கள். ஆனால் உண்மையில் இது மிகவும் நல்லது. அதிலும் அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இது உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.

    தக்காளி ஜூஸ்;
    ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து, அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து, தினமும் மூன்று வேளை குடித்து வர வேண்டும்.

    எலுமிச்சை ஜூஸ்;
    பொதுவாக எலுமிச்சை உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை ஜூஸில் 1 சிட்டிகை உப்பு மற்றும் தேன் சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

    கிரேப் புரூட் ஜூஸ்;
    கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இதனைக் கொண்டு ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

    ஆரஞ்சு ஜூஸ்;

    ஆரஞ்சு பழ ஜூஸை குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜூஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.

    திராட்சை;
    தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்னர், ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், திராட்சை உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, விரைவில் உடல் எடையைக் குறைக்கும்.

    கொய்யாப் பழ ஜூஸ்;
    கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதனை ஜூஸ் போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்.

    பெர்ரிப் பழ ஜூஸ்;
    பெர்ரிப் பழங்களைக் கொண்டு ஜூஸ் போட்டு குடித்து வந்தாலும், உடல் எடை குறையும். அதிலும் உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன், இந்த ஜூஸை குடிக்க வேண்டும். இதனால் அதிகளவு உணவு உண்பதைத் தவிர்க்கலாம்.
    இயற்கையை நம்புங்கள் இயற்கையோடு இணைந்து நலமுடன் வளமுடன் வாழ்வோம்..




    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-10926367_823267741102020_4370252474970073989_n.jpg  
    Last edited by chan; 13th Jan 2015 at 07:51 PM.

  2. #1602
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    புரோட்டினும் முக்கியத்துவமும்

    புரோட்டின் எனும் சொல்லுக்கு முதன்மையானது, அடிப்படையானது என்பது பொருள். எதற்கு முதன்மையானது? எதற்கு அடிப்படையானது? என்றால் உடம்பின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது, முதன்மையானது.

    புரோட்டினைப் புரதம் என்று கூறுவர். புரோட்டின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். மேலும் அன்றாடம் உடலில் ஏற்படுகிற தேய்வுக் கழிவுகளை நிரப்பி, உடலை நல்ல நிலையில் வைக்கிறது.

    இதுதவிர, சில நோய்கள் வராதபடி புரோட்டின் தடுக்கிறது. உம்புக்குச் சக்தி தருகிறது. தோல், சதை, ஜவ்வு முதலியவைகளின் அணுக்களை வளர்த்து அவைகளை உறுதிப்படுத்துகிறது.

    குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குப் புரோட்டின் மிகவும் அவசியமானதாக உள்ளது. ஆதலால் உணவில் புரோட்டின் முதன்மைப் பொருளாக அமைகிறது. ஆகவே, புரோட்டின் சத்து என்பது உடம்பிற்கு தினமும் தேவைப்படும் ஒரு இன்றியமையாத சத்தாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், இறைச்சி முதலியவற்றில் புரோட்டின் சத்து உள்ளது. ஆனால், தாவரப் பொருட்களில் இருந்து கிடைக்கும் புரோட்டினை விட இறைச்சிகளில் இருந்து கிடைக்கும் புரோட்டின் சிறந்தது. அதனால், தாவரப் புரோட்டின் தேவையில்லை என்று கருதக்கூடாது. இரண்டுமே உடலிற்கு அவசியமானதுதான்.

    தாவர வகைகளில் சோயா பீன்ஸில்தான் அதிக அளவில் புரோட்டின் இருக்கிறது. 100 கிராம் சோயா பீன்ஸில் 43 கிராம் புரோட்டின் கிடைக்கிறது. இறைச்சியில் இருந்து கிடைக்கக்கூடிய புரோட்டின் சத்துவிற்கு இணையாக சோயா பீன்ஸில் மட்டும்தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பால், தயிர், மோர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன் முதலியவைகளில் இருக்கும் புரோட்டின் சிறந்ததாகும். வளரும் குழந்தைகளுக்கு பாலும், முட்டையும் சிறந்த உணவாக இருக்கும்.

    கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு, அரிசி முதலிய தானியங்களில் புரோட்டின் சத்து உண்டு. மேலும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைப்பருப்பு, துவரம் பருப்பு, பட்டாணி, அவரைக்கொட்டை, பீன்ஸ் கொட்டை, மொச்சைக்கெட்டை முதலிய பருப்பு வகைகளிலும் புரோட்டின் உண்டு.

    இதுதவிர, முந்திரிப் பருப்பு, வாதுமைப் பருப்பு, நிலக்கடலை, அக்ரூட் பருப்பு முதலியவைகளிலும் புரோட்டின் சத்து உள்ளது.

    கிழங்கு வகைகளில் உருளைக்கிழங்கு, கேரட் கிழங்கு, பீட்ரூட் முதலியவைகளிலும் புரோட்டின் சிறிதளவு உள்ளது.


  3. #1603
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நோயெதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள சில சத்து உணவுகள்
    • சத்துள்ள உணவு அதோடு vitamin A, the vitamin B complex (vitamins B-1, B-2, B-5, B-6, folic acid) , vitamin C, சரியான அளவு எடுத்துக்கொள்வது நோயெதிர்ப்பு neutrophil களை உருவாக்கி நோய்க்கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கும்.
    • காப்பர் சத்து: நம் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள்தான் தொற்றுநோய்க் கிருமிகளை முழுவேகத்துடன் எதிர்க்கக்கூடியவை.காப்பர் சத்தானது வெள்ளை அணுக்களுக்கு அந்த சக்தியை அளிக்கக்கூடியதாக உள்ளது. பனிவரகு, சாமை உள்ளிட்ட தினைவகைகள், பீன்ஸ், சன்னா, பட்டாணி, தாமரைத்தண்டு, செல்மீன்கள், சாக்லெட் ஆகியவற்றில் காப்பர் சத்து அதிகம் உள்ளது.
    • வைட்டமின் E: இளமையிலிருந்தே வைட்டமின் ணி சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, வயதானபின்னும் ஃப்ளு காய்ச்சல் போன்ற தொந்தரவு வராது. காரணம், வைட்டமின் E யானது அதிகமாக உடலுக்குள் செல்லச் செல்ல... நோயெதிர்ப்பு உயிரணுக்களின் அளவானது இரண்டு மடங்காக உற்பத்தியாகியிருக்கும். இதனால் அவை காய்ச்சலைத் தரும் வைரஸ்களை எளிதில் கொன்றுவிடும்.சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், பட்டாணி, கோதுமை, தானிய வகைகள், காய்கறி எண்ணெய்கள், மீன், மீன் எண்ணெய், முட்டை, கோழி ஆகியவற்றில் வைட்டமின் E அதிகம் .
    • வைட்டமின் B12: B12ன் தலையீட்டால்தான் காய்ச்சலைத் தரும் கிருமிகள் உடலுக்குள் வரும்போதெல்லாம் நோயெதிர்ப்புச் சக்தியை உற்பத்தி செய்யும் செல்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. வெள்ளை ரத்த அணுக்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்ய B12தான் காரணம்.ஈரல், முட்டை, பால் போன்ற அசைவ உணவுகளில் B12 மிக அதிகமாக உள்ளன. பீன்ஸ், ஆரஞ்சு, கீரைவகைகள், பட்டாணி, சூரியகாந்திவிதைகள், முழுதானிய விதைகள் ஆகியவற்றிலும் இச்சத்து போதியளவு உள்ளன.
    • துத்தம் (ZINC): உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை மேலும் மேலும் வளர்க்க துத்தச்சத்து அவசியமாக உள்ளது. தானிய வகைகள், அனைத்துத் தினைவகைகள், பீப், போர்க் போன்றவற்றில் துத்தச்சத்து அதிகமாக உள்ளன.
    • தாவர வேதிப்பொருள்: உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை வலுவாக்கி, நோய்க்கிருமிகளை அழித்து நிர்மூலமாக்க தாவர வேதிப் பொருட்கள் அவசியம்தேவை.வெங்காயம், ஆப்பிள் (குறிப்பாக தோல்கள்), கறுப்பு டீ, பூண்டு, மிளகு, பெர்ரி, திராட்சை, தக்காளி ஆகியவற்றில் வேண்டிய மட்டும் தாவர வேதிப் பொருட்கள் உள்ளன. இவை காய்ச்சலை (Flu) உருவாக்கும் கிருமிகளை அண்டவிடுவதில்லை.
    • சந்தோஷமான சூழல்:குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக இருக்கும் சூழலை உருவாக்கிக்கொள்வது என்பது காய்ச்சலை வரவிடாமல் தடுக்கும் ஓர் உத்தியாகும். அன்பான பேச்சு, ஆதரவான நடவடிக்கைகள், சுற்றுலா, இசை.... இவையாவும் மனதை சந்தோஷப்படுத்துவதால், நம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நாளுக்கு நாள் கூடுகிறதாம்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-302.jpg  
    shrimathivenkat likes this.

  4. #1604
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வீட்டுக்குள்ளேயே ஒரு மெடிக்கல் ஷாப்!

    மூலிகை சூப், மூலிகை ரசம், மூலிகை ஜூஸ் இவையெல்லாம், பலவிதமான நோய்கள் மற்றும் உடல் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வுகளைத் தரும் அருமருந்துகள்! மூலிகை என்று சொன்னதுமே... ஏதோ அமேசான் காட்டிலிருந்து பறித்து வரப்பட்டு, பலவிதமான பக்குவம் செய்யப்பட்டு... என்று பதறி ஒதுங்க வேண்டாம். உங்கள் வீட்டில் அன்றாடம் உணவில் பயன்படுத்தக்கூடிய இஞ்சியும், பூண்டும்கூட அருமையான மூலிகைகள்தான். இதைச் சொன்னதும், ப்பூ... இவ்வளவுதானா? என்று மிகச்சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். அவற்றின் பலனை அனுபவித்துப் பார்த்தால்தான் அருமை தெரியும், புரியும்!

    இஞ்சியை இடித்துச் சாறு
    எடுத்து, தேன் கலந்து குடித்தால் ரத்த அழுத்தம் சரியாகும். இதை இஞ்சி ஜூஸ் என்றுகூட சொல்லலாம். இதே இஞ்சிச்சாறுடன் நெல்லிக்காய், கறிவேப்பிலை, எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து குடித்தால், ரத்த அழுத்தம்
    சரியாவதோடு பித்த மயக்கம், கிறுகிறுப்பு, சோர்வு நீங்கும், நரை தள்ளிப்போவது, முதுமை விலகி இளமையை தக்க வைத்துக்கொள்வது போன்ற செயல்கள் நிகழும்.
    காலைவேளையில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் காய்ச்சி, 2 ஏலக்காய் சேர்த்து வடிகட்டி, சூடு கொஞ்சம் ஆறியதும் பசும்பால், சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் காலை நேர பித்தம் விலகும். ஜீரணக்கோளாறு விலகி நெஞ்சுக்கரிச்சல், வாயுத்தொல்லை விலகும். அன்றாட ஆரோக்கியத்துக்குத் தேவையான சுண்ணாம்புச்சத்தும் உடம்பில் சேரும்.

    தனியா என்று சொல்லக்கூடிய கொத்தமல்லி விதையை லேசாக வறுத்துப் பொடித்து, அதில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு 2 ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து பாலுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வாந்தி, மயக்கம், கிறுகிறுப்பு நிற்கும். குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் 3 மாதம் தொடர்ந்து இந்த மல்லி சுவைநீரை குடித்து வந்தால் காலப்போக்கில் போதைப்பழக்கத்தில் இருந்து மீள வாய்ப்பு உள்ளது.
    contd..


    shrimathivenkat likes this.

  5. #1605
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    வயிற்றுவலி யாருக்கு வந்தாலும், என்ன காரணத்தால் வந்தாலும் 5, 6 புதினா இலைகளை வெறுமனே சட்டியில் (வாணலி) போட்டு வதக்கி, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு பாதியாக வற்றியதும் குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

    மிளகை வெறும் சட்டியில் போட்டு தீப்பொறி பறக்கும் அளவுக்கு வறுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதன் கஷாயத்தை (கொதித்து வடிகட்டிய நீர்) குடித்து வந்தால் காய்ச்சல் விலகும்.

    டீ போடும்போது அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்னதாக 5, 6 துளசி இலைகளைப்போட்டு வடிகட்டி குடித்து வந்தால், மழைக்காலங்களில் வரக்கூடிய ஜலதோஷம், சளி தொந்தரவுகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

    மழைக்காலங்களில் தாராளமாக கிடைக்கக்கூடிய முடக்கத்தான் இலைகளை மிளகு, பூண்டு, சீரகம், சின்னவெங்காயம், தக்காளி சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து வடிகட்டி ’சூப்’ ஆக குடித்தால் மூட்டுவலி, வீக்கங்களில் இருந்து விடுதலை பெறலாம். வாதக்கோளாறு, பிடிப்பு, வாய்வுக்கோளாறு உள்ளவர்களும் இந்த சூப்பை அருந்துவதன்மூலம் நிவாரணம் பெறலாம். இதே முடக்கத்தானை ரசமாகவும் செய்து அருந்தலாம். முடக்கத்தான் ரசம் செய்வதுபோல, வாதநாராயணன் இலையையும் ரசமாக்கி குடித்தால், முடக்கத்தான் கொடுக்கும் அதே பலன்களை பெறலாம்.
    கேரட்டை துருவிப்போட்டு கூட்டு, பொரியல் செய்து சாப்பிடுவோம். அதே கேரட்டை ஜூஸாக்கியும் அருந்தலாம். இது கண் கோளாறுகளை சரி செய்யும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம்.
    மணத்தக்காளி கீரையை சூப் ஆக அருந்தி வந்தால் ஜலதோஷம் நிற்பதோடு... சளி, தொண்டை வலி பிரச்னைகள் விலகும். அகத்திக்கீரையை சூப் ஆக்கி குடித்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விலகுவதோடு வீரிய மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளையும் சரி செய்யும்.

    தக்காளியை பிழிந்துவிட்டு, அதனுடன் நான்கைந்து பூண்டுப் பற்களை நசுக்கிப்போட்டு கொதிக்க வைத்து உப்பு சேர்த்து குடித்தால் ஜலதோஷம், இருமல் நிற்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியது இந்த தக்காளி சூப்.
    வயிற்றுவலி யாருக்கு வந்தாலும், என்ன காரணத்தால் வந்தாலும் 5, 6 புதினா இலைகளை வெறுமனே சட்டியில் (வாணலி) போட்டு வதக்கி, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு பாதியாக வற்றியதும் குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
    contd..


    shrimathivenkat likes this.

  6. #1606
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    மிளகை வெறும் சட்டியில் போட்டு தீப்பொறி பறக்கும் அளவுக்கு வறுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதன் கஷாயத்தை (கொதித்து வடிகட்டிய நீர்) குடித்து வந்தால் காய்ச்சல் விலகும்.
    டீ போடும்போது அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்னதாக 5, 6 துளசி இலைகளைப்போட்டு வடிகட்டி குடித்து வந்தால், மழைக்காலங்களில் வரக்கூடிய ஜலதோஷம், சளி தொந்தரவுகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
    மழைக்காலங்களில் தாராளமாக கிடைக்கக்கூடிய முடக்கத்தான் இலைகளை மிளகு, பூண்டு, சீரகம், சின்னவெங்காயம், தக்காளி சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து வடிகட்டி ’சூப்’ ஆக குடித்தால் மூட்டுவலி, வீக்கங்களில் இருந்து விடுதலை பெறலாம். வாதக்கோளாறு, பிடிப்பு, வாய்வுக்கோளாறு உள்ளவர்களும் இந்த சூப்பை அருந்துவதன்மூலம் நிவாரணம் பெறலாம். இதே முடக்கத்தானை ரசமாகவும் செய்து அருந்தலாம். முடக்கத்தான் ரசம் செய்வதுபோல, வாதநாராயணன் இலையையும் ரசமாக்கி குடித்தால், முடக்கத்தான் கொடுக்கும் அதே பலன்களை பெறலாம்.
    கேரட்டை துருவிப்போட்டு கூட்டு, பொரியல் செய்து சாப்பிடுவோம். அதே கேரட்டை ஜூஸாக்கியும் அருந்தலாம். இது கண் கோளாறுகளை சரி செய்யும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம்.
    மணத்தக்காளி கீரையை சூப் ஆக அருந்தி வந்தால் ஜலதோஷம் நிற்பதோடு... சளி, தொண்டை வலி பிரச்னைகள் விலகும். அகத்திக்கீரையை சூப் ஆக்கி குடித்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விலகுவதோடு வீரிய மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளையும் சரி செய்யும்.
    தக்காளியை பிழிந்துவிட்டு, அதனுடன் நான்கைந்து பூண்டுப் பற்களை நசுக்கிப்போட்டு கொதிக்க வைத்து உப்பு சேர்த்து குடித்தால் ஜலதோஷம், இருமல் நிற்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியது இந்த தக்காளி சூப்.
    பாகற்காயை சூப் ஆக்கி குடித்து வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு நிவாரணம் தரும்.
    இப்படியாக நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் உணவுப்பொருட்களையே சூப், ரசம், ஜூஸ், கஷாயம் என பல்வேறு வடிவங்களில் சாப்பிட்டு வந்தாலே நோய்கள் நீங்கி நலம் பெறலாம்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-301.jpg  

  7. #1607
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    nalla thagaval koduthatharku nandri.

    chan likes this.

  8. #1608
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அதிக இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் ஆபத்தான தாக்கங்கள்!!!

    கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்!!! அப்படிப்பட்ட நோய்களில் மிகவும் முக்கியமான ஒரு நோயாக கருதப்படுவது இரத்த அழுத்தம். உயிரையே கூட எடுத்து விடும் நோயாகும் இது. சரி இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் தாக்கங்கள் தான் என்னென்ன? உங்கள் உடலில் உள்ள பல உறுப்புகளை மெல்ல பாதிக்கும்.

    அதன் அறிகுறிகளை காண்பதற்கு முன்பாகவே, சீராக செயல்பட்டு கொண்டிருக்கும் உங்கள் உடலை அது தாக்க தொடங்கி விடும். திடீரென உயிருக்கே ஆபத்தாய் போய் முடியும். அதனால் தான் இரத்த கொதிப்பு அதிகரிக்கும் போது அதனை சிறப்பாக கையாளுவது முக்கியமாகும்.

    உயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்!!! சொல்லப்போனால், வாழ்வு முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் இரத்த கொதிப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதனை கவனிக்காமல் விட்டு விட்டால், நெஞ்சு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து விடும்.

    சுருங்க சொல்ல வேண்டுமானால், கூடுதல் இரத்த கொதிப்பு உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் தாக்கும். உங்கள் நரம்பியல் அமைப்பு பாதிக்கப்படும், உங்கள் சிறிநீரகம் பாதிக்கப்படும், உங்கள் மூளை பாதிக்கப்படும், உங்கள் இதயம் பாதிக்கப்படும், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். சரி, கூடுதல் இரத்த கொதிப்பினால் ஏற்படும் தாக்கங்களைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாமா?

    இதய தமனிகள் கூடுதல் இரத்த கொதிப்பு உங்கள் இதய தமனிகளின் உட்பூச்சை தாக்கும். தமனிகள் இறுகும் போது தமனித் தடிப்பு ஏற்படும்.

    உங்கள் தமனிகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மூளை, சிறுநீரகம் மற்றும் இதயம் போன்ற உங்கள் உடலின் சில பாகங்களுக்கு செல்லக்கூடும் இரத்த ஓட்டம் அடைக்கபப்டும். மெதுவாக சில முக்கிய பிரச்சனைகளும் எழும். சிறுநீரக செயலிழப்பு, நெஞ்சு வலி, கண் பாதிப்பு போன்ற பல இதில் அடங்கும்.

    இதய செயலிழப்பு சில நேரங்களில் உங்கள் இதயத்தின் இடது பக்கம் வீக்கமாகும். கூடுதல் இரத்த கொதிப்பு இருந்தால், இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய திணறும். இதனால் உங்கள் இதயம் மெதுவாக செயலிழக்க தொடங்கும்.

    அறிவுத்திறன் பிரச்சனைகள் வயதாவதால் அறிவுத்திறன் பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் பாதிப்படைந்த தமனிகளாலும் கூட இது நடக்கலாம். கூடுதல் இரத்த அழுத்தம் ஏற்படும் போது உங்கள் தமனிகள் வெகுவாக பாதிக்கப்படும்.
    contd..



  9. #1609
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    இரத்தத் தமனி விரிவடைதல் அதிக இரத்த அழுத்தம் இரத்தத் தமனியை விரிவடைய செய்யும். இது மிகவும் ஆபத்தான நிலையாகும். இரத்தக் கொதிப்பால் வலுவிழந்த தமனிகள் வீங்கும் போது இது ஏற்படும். உட்புற இரத்த கசிவு ஏற்பட்டாலும் இந்த நிலை ஏற்படும்.

    கண் பார்வை தடை செய்யப்பட்ட இரத்த ஓட்டத்தால் கண் பார்வைக்கான நரம்பு பாதிக்கப்படும் போது, இரத்த கசிவு ஏற்படும். இதனால் உங்கள் கண் பார்வை பாதிக்கப்படும். இது மிகவும் ஆபத்தானது.

    எலும்புகள் கூடுதல் இரத்த கொதிப்பால் உங்கள் எலும்பு அமைப்பும் கூட பாதிக்கப்படும். சிறுநீரகத்தின் செயற்பாடுகள் மோசமாக இருக்கும் போது உங்கள் உடலில் இருந்து கால்சியம் நீக்கப்படும். இதனால் எலும்புகளின் நெருக்கம் பாதிப்படையும். உயர் இரத்த கொதிப்பால் உங்கள் எலும்புகள் பாதிப்படைவது இப்படி தான்.

    தூக்கத்தில் மூச்சுத் திணறல் அதிக இரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் பரிந்துரைக்கிறது. அதிக இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும். கூடுதல் இரத்த கொதிப்பு இருப்பதால், உங்கள் தூக்கமும் கெட்டுப்போகும்.

    கரோனரி - தமனி நோய் இது கரோனரி என்ற தமனி நோயை ஏற்படுத்தும். இந்த நோய் இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டத்தை தடை செய்யும். இதனால் நெஞ்சு வலியும், மாரடைப்பும் ஏற்படலாம்.

    இதயத்தின் மீது அழுத்தம் அதிக இரத்த கொதிப்பால் இதயத்திற்கு அழுத்தம் ஏற்படும் போது, அது தன் திறனை இழக்கும். மெதுவாக இதயம் தேய்ந்து இதனால் உயிருக்கே ஆபத்தாய் விளையும்.

    tia எனப்படும் சிறிய வாதம் அதிக இரத்த கொதிப்பால் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதற்கு எச்சரிக்கை அறிகுறியாக இருப்பது சிறிய வாதமாகும். அப்படியானால் அதற்கு பிறகு மிகப்பெரிய வாதம் ஏற்படலாம். இது உயிருக்கே ஆபத்தாய் முடியும்.

    மூளை மூளைக்கு அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் ஆக்சிஜனும் போய் சேர வேண்டும். இது ஒழுங்காக போய் சேரவில்லை என்றால் என்னவாகும்? உங்கள் மூளை அணுக்கள் செத்துவிடும்.

    அதிக இரத்த அழுத்தத்தால் உங்கள் மூளையில் உள்ள இரத்த குழாய்கள் பாதிக்கப்படும். இரத்த ஓட்டம் தடுக்கப்படும் போது, வாதம் ஏற்படும். அதிக இரத்த கொதிப்பால் மூளையில் ஏற்படும் தாக்கமே இவை.

    மூளை தேய்வு மூளைத்தேய்வால் உங்கள் யோசிக்கும் திறன், காரண திறன், பார்வை திறன் மற்றும் நடமாடும் திறன்கள் பாதிக்கப்படும். இந்த நிலைக்கு பின்னணியாக பல காரணங்கள் இருந்தாலும் கூட, திறனற்ற தமனிகளும் கூட ஒரு காரணமாக உள்ளது. இரத்த ஓட்டம் சரியாக இல்லாத போது, உடலில் அனைத்தும் சீர்குலைந்து விடும்.

    சிறுநீரக செயலிழப்பு அதிக இரத்த கொதிப்பு இருக்கும் போது சிறுநீரக செயலிழப்பும் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? சிறுநீரகங்களைச் சுற்றியுள்ள தமனிகள் பாதிக்கப்படும் போது அது உங்கள் சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல.

    உங்கள் சிறுநீரகம் கழிவுகளை வடிகட்டவில்லை என்றால் சிறுநீரகங்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அதிக இரத்த கொதிப்பால் சிறுநீரகங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

    கண்கள் அதிக இரத்த கொதிப்பால் கண்களுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் இரத்த குழாய்கள் பாதிக்கப்படும். அப்படி நடந்தால், உங்கள் பார்வை சற்று பாதிக்கப்படும். அதிக இரத்த கொதிப்பால் ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.


  10. #1610
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ரத்தத்தை சுத்திகரிக்கும் தக்காளி

    இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இது பயிராகிறது. தக்காளி மலச்சிக்கலைப் போக்க கூடியது, ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது, பித்த நீரைச் சுரக்க செய்வது, செரிமானத்தைத் தூண்டக்கூடியது, ஓமியோ மருத்துவத்தில் தக்காளியை மூட்டுவலிக்கான மருவத்துவமாக சேர்க்கப்படுகிறது.

    சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. உடல் பருமனைக் குறைக்கக் கூடியது, வெள்ளைப் போக்கை குணப்படுத்த வல்லது, இது மாதவிலக்கின் இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்தக் கூடியது, ஜலதோஷத்தை தணிக்கக் கூடியது, குளிர்ந்த நிலையை மாற்றவல்லது. தக்காளி உடலில் பரவி இருக்கும் நாளங்களில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்கி சுரப்பிகள் நல்ல வண்ணம் செயல்படத் தூண்டுவது, தக்காளி பித்த நீரைச் சுரக்கச் செய்து செரிமானத்தைத் தூண்டக்கூடியது.

    மென்மையான மல மிளக்கியாகவும் தக்காளி செயலாற்றுகிறது. தக்காளியை பச்சையாக வேக வைக்காமல் சாப்பிடும்போது மலத்தை இளக்கி வெளியேற்ற வல்லது. இதனால் மலச்சிக்கல் தணிகிறது. செயல்தன்மையில் மங்கிப்போன அல்லது கெட்டுப்போன ஈரலையும், சிறுநீரகத்தையும் நன்கு செயல்பட வைத்து ரத்தத்தில் கலந்திருக்கும் தேவையற்ற நச்சுக்களைக் கழுவி வெளியேற்ற உதவுகிறது.

    சர்க்கரை நோயாளிகளுக்குத் தக்காளி மருத்துவர்களாலும், ஆராய்ச்சியாளர்களாலும் பரிந்துரைக்கப்படுகிறது. “கரோட்டினாய்ட் லைகோபீன்” என்னும் மிக உன்னதமான மருத்துவ வேதிப்பொருள் செரிந்துள்ள முதல்தரமான கனி தக்காளி என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. மேற்கண்ட வேதிப்பொருள் உணவு மூலமாக நமக்குக் கிடைக்கிறது என்றால் அது தக்காளிக்கே முதலிடத்தைத் தருகிறது.
    contd..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter