Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1611
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    தக்காளிச் சாறு வயிற்றில் ஏற்படும் புண்ணை ஏற்படுத்தக் கூடிய காரணியைத் தடுத்து நிறுத்தி குடலில் சாதாரண புண் முதல் புற்று நோய் வரையிலான தொல்லைகளிலிருந்து குடலைக் காக்கிறது. தக்காளிச்சாறு அருந்துவதால் ரத்தத்தில் உள்ள “சீரம் லைக்கோ பீன்” என்னும் வேதிப் பொருளை அதிகரிக்கச் செய்கிறது.

    இதனால் வயிற்றுப் புண்களோ, புற்றோ தவிர்க்கப் பெறுகிறது. ரத்தத்தில் உள்ள “சீரம் லைக்கோபீன்” அளவு குறையும் போது தான் ஆண்களின் வயது முதிர்வின் போது ஏற்படும் துன்பமான “புரோஸ்டேட்கேன்சர்” ஏற்படுவதற்கு ஏதுவாகிறது. மேலும் தக்காளியில் மத்திய நரம்பு மண்டலத்தை நன்னிலையில் வைக்க உதவுவதோடு வலியை குறைக்க கூடியதாகவும் பயன் தருகிறது. தக்காளியில் அபரிமிதமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

    * தக்காளியில் நல்ல ஊட்ட சத்துக்களும் உற்சாகம் தரும் வேதிப் பொருட்களும் அதிக அளவில் விட்டமின் ‘ஏ’‘சி’ மற்றும் “போலிக் அமிலங்களையும்” பெற்றுள்ளன.

    * தக்காளியில் உள்ள ஆல்பாலிப்போயகிக் அமிலம் சர்க்கரையை சத்துப் பொருளாக மாற்ற உடலுக்கு உதவி செய்கிறது. மேலும் ரத்த நாளங்களை சுத்திகரித்து சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் கண் விழிக்கோளாறு வராது காக்கிறது. மூளை மற்றும் நரம்புத் திசுக்களை பாதுகாக்க உதவுகிறது.

    * தக்காளியில் உள்ள “லைக்கோபீன்” சத்து தக்காளிக்கு சிகப்பு வண்ணத்தை தருவதாக அமைகிறது. அதுமட்டுமின்றி புத்துணர்வு தரும் வேலையையும் செய்கிறது.

    * தக்காளியில் உள்ள “காலின்” என்னும் சத்து தூக்கத்தைத் தூண்டுவதற்கும், தசைகளின் அசைவிற்கும், படிப்பதற்கும் படித்ததை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கும் பயன்படுகிறது. இந்த “கோலின்” சத்து செல்களின் கட்டமைப்புக்கு உதவுவதோடு நரம்பு வழி மின் கடத்தலுக்கும் உணவிலிருந்து கொழுப்புச் சத்தை உறிஞ்சுவதற்கும், நீண்டகால வீக்கத்தைக் கரைப்பதற்கும் உதவுகிறது.

    * தக்காளியை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான தலை முடியும், தோலும் அமைவதோடு சக்தியை அதிகரித்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

    * தக்காளியில் அடங்கி இருக்கும் அபரிமிதமான விட்டமின் ‘சி’ சத்துக்களும் “ஆன்டி ஆக்ஸிடென்ட்” களும் உடலில் தன்னிச்சையாக செயல்பட்டு புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளை எதிர்த்து போராட உதவுகின்றன.

    * தக்காளியில் உள்ள “லைக்கோபீன்” என்னும் சத்து “புரோஸ்டேட்” புற்றுநோயை வரவிடாது தடுக்கிறது. இளைஞர்கள் தக்காளியை தாராளமாகச் சேர்த்துக் கொள்வதால் அதிலுள்ள “பீட்டர் கேரோட்டின்” என்னும் சத்து ஆரம்ப நிலையிலேயே புரோஸ்டேட் புற்று நோயை தடுத்து நிறுத்துகிறது.

    * தக்காளியிலுள்ள “பீட்டாகேரோட்டின்” மற்றும் உயர்ரக நார்ச்சத்து ஆகியவை மலக்குடலில் ஏற்படும் புற்று நோயைத் தடுக்க வல்லவை ஆகும். மலச்சிக்கலையும் போக்க உதவுகின்றன.

    * ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கக் குறைவான உப்புச்சத்து உள்ள உணவு தேவைப்படுகிறது. அதே நேரத்தில் பொட்டாசியம்” சத்து அதிகமாக எடுத்துக் கொள்வது இதய நாளங்களை விரிவடையச் செய்து ரத்த ஓட்டம் செம்மையாக நடைபெற உதவுகிறது.

    தக்காளியில் உள்ள பொட்டாசியம் சத்து, நார்ச்சத்து, விட்டமின் ‘சி’ மற்றும் “கோலின்” சத்துக்கள் இதயத்துக்கு பலம் தருவதாகவும் இதய ஓட்டம் சீர்பெற நடப்பதற்கும் உதவுகின்றன.

    இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு இதில் அடைப்பு போன்ற ஆபத்தான நோய்கள் வராத வண்ணம் பாதுகாக்கப்படுகின்றது.

    * தக்காளியில் அடங்கியிருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் சத்து மாரடைப்பை தடுப்பதோடு, தசை அழிவை தடுப்பதோடு எலும்புகளின் பலத்தை அதிகப்படுத்துகிறது. சிறுநீரகக் கற்கள் ஏற்படாவண்ணம் காக்கிறது.

    * முதல் நிலை சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு அதிக நார்ச்த்துள்ள தக்காளியை பயன்படுத்துவதால் சர்க்கரை நோய் தணிகிறது. 2ம் நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உயர்த்தவும், கொழுப்புசத்து மற்றும் இன்சுலின் சத்து மிகுதிப்படவும் உதவுகிறது. ஒரு கப் தக்காளியில் 2 கிராம் அளவுக்கு நார்ச்த்து இருப்பதாக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.

    * தக்காளியில் உள்ள போலிக் அமில சத்து கருவுற்ற மாதர்களுக்கு நல்ல சத்தூட்டமாகவும் குழந்தையின் நரம்பு மண்டலத்துக்கு மிக்க பலம் தருவவதாகவும் அமைகிறது. போலிக் அமிலம் மன உளைச்சலையும் போக்க உதவுகிறது. நல்ல மனோ நிலை, தூக்கம், பசி ஆகியவையும் உண்டாகின்றன.
    contd..



    Sponsored Links
    jv_66 likes this.

  2. #1612
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    * நவீன ஆய்வுகள் தக்காளியை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் மாதர் தம் மார்பகப் புற்று நோய் வராமல் பாதுகாக்கப்படுகிறது எனத் தெரிவிக்கிறது.

    * இரண்டொரு தக்காளியை மிக்ஸியில் இட்டு நன்றாக அரைத்து சாறாக்கி வடிகட்டி சர்க்கரை சிறிது சேர்த்துக் குடிப்பதால் மேக நோய்கள், சிறுநீர் எரிச்சலோடு வெளியேறுதல், வீக்கம் முதலிய துன்பங்கள் தொலைந்து போகும். நாவறட்சியும் தணியும். உடன் மென்மையும் வனப்பும் அடையும்.

    * தொடர்ந்து ஓரிரு மாதங்களுக்கு 2 தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் கொழுத்துப் பருத்த உடல் எடை குறையும்.

    * தக்காளிப் பழத்தின் பசை ஓர் சிறந்த முகப் பூச்சுக்கான அழகு சாதனப் பொருட்களாகவும் பயன்தருகிறது.

    * அன்றாடம் ஒரு டம்ளர் தக்காளி சாறு சாப்பிடுவதால் ஆரோக்கிய வாழ்வுக்கு அதிலுள்ள லைக்கோபின் சத்து அடிகோலுகிறது.

    * தக்காளிச்சாறு சிறிது எடுத்து முகத்தில் பரவலாகப் பூசி வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விட முகத்தின் சருமம் பொலிவு அடையும். மென்மையும் நல்ல வண்ணமும் பெறுவதோடு முகச்சுருக்கங்கள் பறந்து போகும்.

    * தக்காளிச்சாறு அன்றாடம் பருகுவதால் கணையப் புற்று ஏற்படும் அபாயத்திலிருந்து நம்மைக் காக்கிறது என்று மான்ட்ரியால் பல்கலைக் கழக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.

    * பாலர்கட்குப் பாலூட்டும் தாய்மார்கள் தக்காளியை எவ்வகையிலேனும் உணவுடன் சேர்த்துக் கொள்ள தாம் குழந்தைகளுக்குக் கொடுக்கும் தாய்ப்பாலில் லைக்கோபின் என்னும் சத்து அதிக அளவில் குழந்தைகளுக்குக் கிடைக்க செய்கின்றனர்.

    இதனால் தாய்ப்பால் குடிக்கும். பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் புற்று நோய் வருவதற்கான ஆபத்துக்கள் குறைகின்றன.

    * தக்காளி தாராளமாகப் பயன்படுத்தும் போது எலும்புகளுக்கு பலமும் கிடைக்கிறது. ஏனெனில் தக்காளியில் விட்டமின் கே மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன.

    * தக்காளி ஓர் சாதாரணமான ஏழைக்கும் எட்டக் கூடிய ஓர் உணவுக்கான பொருளாகிறது. ஒப்பற்ற மருத்துவ குணங்களை உள்ளடக்கியது என்றாலும் சிறுநீரகம் பழுதுபட்டவர்கள் மட்டும் அதிலுள்ள அதிகப்படியான பொட்டாசியம் சத்தை மனதில் கொண்டு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம்



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-488ddcf2-1f55-4019-9b99-ff37d6ae39ea_s_secvpf.gif.jpg  
    jv_66 likes this.

  3. #1613
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடல் பருமனை சுலபமாக கட்டுக்குள் கொண்டுவரளம்

    நமது வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு உடல் பருமனை சுலபமாக கட்டுக்குள் கொண்டுவரும் முறைகளை பற்றி பார்போமா..
    உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட இதோ சில முக்கியமான குறிப்புகள்...
    இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு.

    இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

    பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.

    இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

    சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த*ண்*ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.
    சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.
    பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும்.
    அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்.
    மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.
    இது எ*ல்லாவ*ற்*றி*ற்கு*ம் மேலாக காலை*யி*ல் அரை ம*ணி நேர*ம் நடைப*யி*ற்*சி மே*ற்கொ*ண்டா*ல் கொழு*ப்பு*ம் கரையு*ம், உட**ல் எடையு*ம் குறையு*ம், பு*த்துண*ர்வாகவு*ம் இரு*க்கு*ம்.

    1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.
    தினமும் காலையில் ஒரு டம்ளர் (சுடுநீர்) தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.
    காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.
    contd..


    jv_66 likes this.

  4. #1614
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களில்
    உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

    சேலை, சுடிதாருக்கு டாட்டா காட்டிவிட்டு டைட் ஜீன்ஸ், குட்டி டாப், குர்தி, லெகின்ஸ் என நவநாகரிக உடைகளை அணிவதே இளம்பெண்களின் விருப்பமாக உள்ளது. இந்த ஆடைகளுக்கு உடல்வாகும் ஒத்துழைக்க வேண்டும். மாறி வரும் உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், வயதுக்கு மீறிய உடல்பருமனோடு இருக்கும் இளம்பெண்கள் இந்த உடைகளை நினைத்து பார்க்கவே முடியாது. இவர்களுக்கு டிரெண்டி டிரஸ்ஸிங் மிகப்பெரிய கனவு. உடற்பயிற்சி மற்றும் உணவில் கவனம் செலுத்தினால் கனவு நனவாகும்.
    உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்கள், ஆசைப்பட்டாலும் இன்றைய டிரெண்டி உடைகளை அணிய முடியாது. தவறான உணவு பழக்கத்தால், பல பெண்களுக்கு சிறு வயதிலேயே தொப்பை மற்றும் தொடைப் பகுதிகளில் சதை போட்டு விடுகிறது. இவர்கள் ஜீன்ஸ் அணியவே முடியாது. அப்படியே போட்டுக் கொண்டாலும், தர்ம சங்கடமாகவே இருக்கும். கையில் கொழுப்பு சேர்ந்தால் ஸ்லீவ்லெஸ், குட்டைக் கை டாப்ஸ் போடுவது முடியாமல் போகும். இது போன்ற அவஸ்தை வயது வித்தியாசம் இன்றி பெண்களை பாடாய்படுத்துகிறது. கட்டுடலோடு இருக்க வேண்டும் என்றே பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள்.
    உங்களது நார்மலான எடையை கண்டுபிடிக்க சிறிய கணக்கு இருக்கிறது. உங்கள் உயரத்தை அளவிடுங்கள். அதிலிருந்து 100 செ.மீட்டரை கழித்தால் அதுதான் நார்மலான எடை. உதாரணமாக உயரம் 150 செ.மீட்டர் உயரம் இருப்பவரின் நார்மல் எடை 50 கிலோ. இதற்கு மேல் பருமனாக இருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். இதே போல் உயரத்துக்கு தகுந்த இடுப்பு அளவையும் வைத்து கொள்ள வேண்டும். தற்பொழுது உடலின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அதிகபட்ச கொழுப்பை கண்டறிந்து அதனை சரி செய்து கொள்ள பிசியோதெரபி முறையில் வாய்ப்புகள் உள்ளன. கொழுப்பின் அளவைக் கண்டறியும் மெஷின் உள்ளது. உடலில் கை, மார்பு, வயிறு, இடுப்பு, தொடை மற்றும் கால் என எந்தப் பகுதியில் அதிக கொழுப்பு உள்ளது என்பதைக் கண்டறியலாம்.
    உடலின் எடுப்பான தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்புபவர்கள், இந்த ஆய்வு அடிப்படையில் உடற்பயிற்சி செய்து உடல் பாகங்களில் சேரும் கெட்ட கொழுப்பை குறைத்துக் கொள்ளலாம். அந்தந்த பகுதிக்கு என தனித்தனி பயிற்சிகள் மூலம் எந்த உடைக்கும் பொருந்தும் உடல் வாகைப் பெற முடியும். பெண்கள் வயது வித்தியாசம் இன்றி மருத்துவரின் ஆலோசனைப்படி பயிற்சி மற்றும் உணவு எடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சம் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரையிலான பயிற்சி மூலம் உடல் அழகைத் திரும்பப் பெறலாம். அதை தக்க வைத்துக் கொள்ள நடை பயிற்சி அவசியம். உணவில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். உடல் அழகுக்காக இப்பயிற்சிகளை எடுத்துக் கொண்டாலும் ஆரோக்கியத்துக்கும் துணைபுரிகிறது. கெட்ட கொழுப்பு சேருவதைத் தவிர்ப்பதன் மூலம் இதயநோய்களில் இருந்தும் காத்துக் கொள்ளலாம்.
    contd..


    jv_66 likes this.

  5. #1615
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    ரெசிபி

    வெந்தயக் கீரை சப்பாத்தி:

    வெந்தயக்கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கி நல்லெண்ணெயில் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து சப்பாத்தி பதத்தில் பிசையவும். இறுதியாக வதக்கி வைத்திருக்கும் வெந்தயக் கீரையை சேர்த்துப் பிசையவும். இதனை வழக்கமான சப்பாத்தி போல போட்டு எடுக்கலாம் வித்தியாசமான நிறத்தில் இருக்கும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.

    வாழைப்பூ குழம்பு:

    வாழைப்பூவை நன்றாக ஆய்ந்து பொடியாக நறுக்கி வைக்கவும். அத்துடன் உப்பு தண்ணீர் சேர்த்து தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குழம்புக்குத் தேவையான அளவு புளிக்கரைசல் தயாரிக்கவும். சீரகத்தை தனியாக நல்லெண்ணெயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பூண்டு, வறமிளகாய் ஆகியவற்றையும் நசுக்கி வைத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களை புளிக் கரைசலில் போட்டு வாழைப்பூ, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

    அன்னாசி பழ பச்சடி:

    அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதில் அன்னாசிப் பழ துண்டுகளையும் சேர்த்து லேசாக வதக்கி கொத்தமல்லித் தழை, கருவேப்பிலை சேர்த்து பச்சடி செய்யலாம். இதுவும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவும்.

    பாட்டி வைத்தியம்

    வேளைக்கீரை, குடை மிளகாய், பூண்டு மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிக கொழுப்பு குறையும்.
    பூண்டு இரண்டு பல், ஓமம் கால் ஸ்பூன், மிளகு 3 மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கொழுப்பு கரையும்.


    லெட்டூஸ் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் தொப்பையைக் குறைக்கலாம்.
    லவங்கப் பட்டையுடன் வேப்பிலை, மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.
    உலர்ந்த ரோஜா இதழ், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் காலை, மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு கரையும்.

    முள்ளிக் கீரை சாறு எடுத்து அதில் நெல்லிக்காயை ஊற வைக்கவும். அதை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் தொப்பை குறையும்.
    மகிழம் பூவை பெண்கள் மார்பகங்கள் மீது வைத்துக் கட்டிக் கொண்டால் மார்புகள் இறுகி எடுப்பாகத் தோன்றும்.
    பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகு, துவரம்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடல் இளைக்கும்.
    பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல் சேர்த்து அவித்து கடைந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும்.
    நன்னாரி வேரை நெல்லிக்காய் சாற்றில் ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் உடல் கொழுப்பு கரையும்.
    டயட்
    உடையில் கவனம் செலுத்துவதைப் போலவே உடலை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் வேண்டும். அதன் இளமை, வடிவம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதும் அவசியம். உடல் புத்துணர்ச்சிக்கு டீ, காபிக்கு பதிலாக நேரம் கிடைக்கும் போது, ஒரு நாளில் ஒரு முறையாவது பிரஷ் ஜூஸ் குடிக்கலாம். பச்சை காய்கறிகளை உணவில் கட்டாயம் சேர்ப்பது முக்கியம். பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட சாலட், சூப் ஆகியவையும் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியம். உடலின் தேவையற்ற கொழுப்பை குறைத்துக் கொள்ள நீர்க்காய்கள் அதிகம் சாப்பிட வேண்டும். புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய், பூசணி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவில் எண்ணெய், உப்பு அளவைக் குறைப்பது மிகவும் அவசியம்.
    கடலை எண்ணெய் அல்லது ரீபைண்டு ஆயில் ஆகியவற்றில் ஒன்றை மட்டும் பயன்படுத்துவதற்கு பதிலாக நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ரீபைண்டு ஆயில் ஆகிய மூன்றையும் 1:1:1 என்ற விகிதத்தில் கலந்து உணவில் பயன்படுத்தலாம். வெந்தயத்தை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ளும் போது கெட்ட கொழுப்பு உடலில் சேர்வது தடுக்கப்படும். பீட்சா, பர்கர், காபி, சாக்லெட் உள்ளிட்ட உணவு வகைகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும். மீண்டும் மீண்டும் ஒரே எண்ணெயில் தயாரிக்கப்படும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
    இவற்றை சாப்பிடும் போது கெட்ட கொழுப்பு உடலில் படியும். நார்ச்சத்து உள்ள அவரை, வெண்டை, வாழைப்பூ, வாழைத்தண்டு, புதினா, வெந்தயக்கீரை ஆகியவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளவும். இதன் மூலம் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வதை தடுத்து வடிவழகை தக்கவைத்துக்கொள்ள முடியும்.


    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-10931485_823265287768932_3401024001461036104_n.jpg  
    jv_66 likes this.

  6. #1616
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எடையைக் குறைக்க நீங்கள் தவறான டயட்டை பின்பற்றுகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

    சோர்வாக இருக்கும் உங்கள் உடல் வலுவிழக்கும் போது, உங்களால் உடல் ரீதியாகவும் சரி, மன ரீதியாகவும் சரி மேலும் அழுத்தங்களை எடுத்துக் கொள்ள முடியாது. இதுவே உணவை பழக்கத்தை மாற்றுவதற்கான முதல் அறிகுறியாகும்.

    அலர்ஜிகள் உருவாக ஆரம்பிக்கும் உங்களை அலர்ஜிகள் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டதா? அது நீங்கள் பின்பற்றும் டயட்டினாலும் கூட இருக்கலாம். நீங்கள் தவறான டயட்டை பின்பற்றுகிறீர்கள் என்பதை சொல்லும் முக்கியமான அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும்.

    அதிகமாக பசி எடுக்கும் டயட்டை தொடங்கிய உடனேயே, உங்களை அது பசியில் ஆழ்த்தி விடக்கூடாது. அப்படி செய்தால், நீங்கள் தவறான டயட்டை பின்பற்றுகிறீர்கள்.

    தொடர்ச்சியான உடல் வலி டயட்டை மாற்ற வேண்டும் என உங்களுக்கு குறிக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்றாக இருப்பது உடல் வலி. உங்கள் உணவு தட்டில் உள்ள ஏதோ ஒன்று தான் உங்கள் உடல் வலிக்கு காரணமாக இருக்கும்.

    மன அழுத்தம் அடியெடுத்து வைக்கும் உங்கள் டயட் திட்டத்தினால் மன அழுத்தம் அடியெடுத்து வைத்தால், உங்கள் டயட்டை நீங்கள் உடனடியாக மாற்ற வேண்டும். உணவினால் கண்டிப்பாக மன அழுத்தம் ஏற்பட கூடாது.

    உங்கள் டயட்டின் மீது வெறுப்பு ஏற்படுவது உங்கள் டயட்டின் மீது உங்களுக்கு வெறுப்பு ஏற்பட தொடங்கி விட்டால், அதை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. டயட்டின் மீது வெறுப்பு ஏற்படும் போது அதனால் எந்த பிரயோஜனமும் கிடைக்காது. குறிப்பாக உங்கள் உடல் எடை திட்டத்தின் மீது.

    எடையில் எந்த முன்னேற்றமும் இருப்பதில்லை ஒரு மாத டயட்டிற்கு பிறகு, எடை குறைவில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றால் நீங்கள் உங்கள் டயட்டை கண்டிப்பாக மாற்ற வேண்டிய நேரமிது. அதற்கு காரணம் நீங்கள் பின்பற்றியது உங்களுக்கு ஆரோக்கியமற்றதாய் அமைந்துள்ளது.

    பிறருடன் சேர்ந்து உணவருந்த முடியாமல் போவது குடும்பம் மற்றும் நண்பர்களுடம் சேர்ந்து உணவருந்தும் போது தேர்ந்தெடுப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்க கூடாது. நீங்கள் டயட்டில் இருந்தும் இயல்பற்ற முறையில் உண்ண ஆரம்பித்தால், உடல் எடை குறைப்பதற்கு அது தவறான முறையாகும்.

    பட்டினியே முன்னுரிமையை பெறும் உடல் எடையை குறைக்க பட்டினி இருப்பது வழியல்ல. நீங்கள் பட்டினி இருந்தால் உங்கள் உடல்நலத்தை தான் கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் உடலில் இருந்து கொழுப்பு அகலவே அகலாது.

    மனநிலை ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுக்கும் மனநிலை ஏற்ற இறக்கத்திற்கு உங்கள் டயட் முக்கிய பங்கை வகித்தால், உங்கள் டயட் உங்களுக்கு ஆரோக்கியமற்றதாக உள்ளதற்கான அறிகுறி இதுவாகும். நீங்கள் உண்ணும் உணவு உங்களை சந்தோஷப்படுத்த வேண்டும்.

    அதிக உடல் சுகவீனங்கள் தலை தூக்கும் டயட்டில் இருக்கும் போது, நீங்கள் உண்ணும் உணவு உங்கள் உடலை சமநிலைப்படுத்த வேண்டும். அதனால் நல்ல ஆரோக்கியம் வந்து சேரும். இருப்பினும், உடல் சுகவீனங்களை ஏற்படுத்தும் உணவுகளை நீங்கள் உட்கொண்டால், அதனை உடனே நிறுத்த வேண்டும்.

    வெகு விரைவில் முதிர்ச்சி எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிடும் நீங்கள் பார்ப்பதற்கு பொலிவிழந்து, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு, பருக்கள் அதிகரித்து காணப்பட்டால், கண்டிப்பாக உங்கள் உணவில் ஏதாவது பிரச்சனை இருக்க வேண்டும். இந்த அறிகுறியை லேசாக எடுத்துக் கொள்ளாமல் உடனே டயட்டை மாற்றுங்கள்.

    உங்கள் மூட்டுக்கள் வலியெடுக்க தொடங்கும் உங்கள் உடல் வலி மோசமடைந்து, மூட்டுக்களில் வலியெடுக்க ஆரம்பித்தால், உங்கள் டயட்டில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம். உடனே அதனை கவனிக்கவும்.

    உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியின் வாயிலாக பிரதிபலிக்கும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, மெட்டபாலிச அளவுகள் குறையத் தொடங்கினால் ஆரோக்கியமற்ற உங்கள் டயட்டை மாற்ற வேண்டிய நேரமிது. உங்கள் ஆற்றல் திறனை உறிஞ்சும் உணவிற்கு பதிலாக ஆற்றல் திறனை அதிகரிக்கும் உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    செரிமான தொந்தரவுகள் உங்கள் உடலுக்கு தவறான உணவுகளை அளித்து வந்தீர்கள் என்றால், உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் உடல் எடை குறைப்பிற்கான சரியான டயட்டை பின்பற்றவில்லை என்பதற்கான முக்கிய அறிகுறி இதுவாகும்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-10-1420894180-6diet.jpg  
    jv_66 likes this.

  7. #1617
    bharathi saravanan's Avatar
    bharathi saravanan is offline Commander's of Penmai
    Real Name
    Dhivya Bharathi
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Chennai
    Posts
    1,612

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    useful info...thanks for sharing...

    chan likes this.
    Very little is needed to make a happy life; it is all within yourself, in your way of thinking.


    எனது வரிகள்

  8. #1618
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-pongal_greetings_18.jpg  

  9. #1619
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ரத்த ஓட்டத்தை சீராக்கும் வாழைப்பூ

    வெட்ட வெட்ட மீண்டும் துளிர்விடும் வாழை மரத்தின் பயன்பாடுகள் எண்ணிலடங்காதவை. இதில் வாழைப்பூவும் முக்கிய அங்கம் வகிக்கின்றது. வாழைப்பூவை உணவாக இருவாரம் உட்கொண்டால் இரத்தத்தில் கொழுப்புத்தன்மை, பசைத்தன்மைகள் குறைந்து இரத்த ஓட்டம் சீரடையும்.

    இரத்த ஓட்டம் சீரடையும் பட்சத்தில் ஆக்ஸிஜன், இரும்புசத்து அதிகப்படியாக உட்கிரகிக்கப்படுவதால் ரத்த சோகை என்பது தலை தூக்காது. துவர்ப்பு தன்மையை தன்னகத்தே அடக்கியுள்ள வாழைப்பூ இரத்தத்தில் கலக்கும் அதிக அளவு சர்க்கரையை கூட மட்டுப்படுத்தும்.

    இன்றைய மாறுபாடான உணவு முறை பழக்கம் மன உளைச்சலால் ஏற்படும் செரியாமை இவைகளால் வாயு சீற்றம் அதிகமாகி வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

    இப்புண்கள் ஆற வாழைப்பூவை குறைந்தது மாதத்துக்கு 5 நாட்கள் சமைத்து உண்ணலாம். மூல நோய்கள், ரத்தம் வெளியேறுதல், உள் மூல – வெளி மூல புண்கள், கடுப்பு, மலச்சிக்கல், சீதபேதி, வாய்ப்புண், வாய்துர்நாற்றம் இவைகள் எல்லாம் நிவாரணமாக்கும் தன்மையை தன்னகத்தே கொண்டது வாழைப்பூ.

    பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு, மாதவிடாய் பிரச்னைகளை களைந்தெறியும் தன்மை கொண்டது.

    நம் மாவட்டத்தில் விதவிதமான வாழைகள் பயிரிடப்படுகின்றன. இவற்றில் மொந்தன், பாளையங்கோட்டை வகைகளின் வாழைப்பூ உண்பது சால சிறந்ததாகும்



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-index.jpg  

  10. #1620
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    விளாம்பழம் (wood apple)

    பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.
    பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.
    விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg  

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter