Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1621
    anumagesh is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    112

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    Thanks for the useful informations

    Anu Magesh


    Sponsored Links

  2. #1622
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துப் பாலுடன் சாப்பிடுவதால் தாது பெருகும். அரசம் பழம் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். வெள்ளரி, தர்பூசணி, முலாம் பழ விதைகளை அரைத்துக் குடித்து வர விந்து அணுக்கள் பெருகும்; சிறுநீரகக் கல் கரையும்.
    இனிப்புக் கமலாப் பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகும். தர்பூசணி, வெண்பூசணி தொடர்ந்து சாப்பிடலாம்.
    அரசவிதைத் தூள் அரைத்துக் குடிக்கலாம். ஆலம்பழம் ஆலவிழுதுக் கொழுந்து சம அளவு அரைத்து 100 கிராம் அளவுக்கு காலை மாலை வெறும் வயிற்றில் 120 நாள் சாப்பிடுக.


  3. #1623
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சிறப்பு உணவு / விருந்து சாப்பிட்டதும்

    வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நல்லது. புகையிலை சேர்த்துப் போடுவதும் சுண்ணாம்பைக் கண்ட இடங்களில் தடவுவதும் துப்புவதும் செய்து இதை அருவெறுப்பாக்கிவிட்டனர். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அளவாகச் சேர்த்து கால் மணி நேரம் நன்றாக மென்று உமிழ்நீருடன் விழுங்க வேண்டும் ; துப்பக் கூடாது. பின்னர் நல்ல தண்ணீரில் வாயை நன்றாகக் கொப்புளித்துவிட வேண்டும்; அப்போதுதான் பற்களில் காறை படியாது.வெற்றிலை சளி போக்கும்; செரிமானம் தரும். சுண்ணாம்பு கால்சியம் சத்து தரும்; கொழுப்பு உணவுகளைச் செரிக்கச் செய்யும், எலும்பும் வலிமை பெறும், பல்லும் தூய்மையாகும். பாக்கு மெல்லுவதால் இரத்தம் அதிகரிக்கும்; கொழுப்பு கரைக்கப் படுவதால் இரத்தம் தடிமானாகாது, அதனால் இரத்த அழுத்தம் இதய அடைப்பு வருவதில்லை.
    மூட்டுவலி, முதுகு வலி, குருதி அழுத்தம், மாரடைப்பு முதலிய பல நோய்களுக்கு மூல காரணம் எடை அதிகமாதல் அல்லது உடல் பருமனாதல்.


  4. #1624
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடல் பருமன் குறைய:

    * . சாறு அல்லது, முள்ளங்கிக் கீரை அல்லது வாழைத்தண்டுக் கொதி சாறும் (வெங்காயச் சாறு கொழுப்பைக் கரைக்கும், அதனால் பருமன் குறையும்.
    * காலை வெறும் வயிற்றில் அருகம்புல் சூப்பும்) சாப்பிடலாம்.
    * அன்னாசிப் பழச் சாறு தொடர்ந்து 10 நாள் சாப்பிடப்பயன் தெரியும்; பிறகு தேவையென்றால் இடைவெளிவிட்டு மறுபடி 10 நாள் குடிக்கலாம்.


  5. #1625
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இரத்த அழுத்தம்/ குருதி அழுத்தம் (b.p.) நீங்க:

    நாள்தோறும் (சிறிது வெங்காயம் இட்டு) முருங்கைக் கீரை அல்லது வாழைத்தண்டு கொதிநீர்(சூப்) குடித்தால் இரத்த அழுத்தம் குறைக்கும். நாள்தோறும் 2 வாழைப்பழம் சாப்பிடுக


  6. #1626
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தேமல் நீங்க

    கருஞ்சீரகத்தை அரைத்துத் தேய்த்து கால் மணி நேரம் கழித்துக் குளிக்கவும். புடலங்காய் (ஒரு சாண் துண்டு) உள்ளே விதிகளை நீக்கிச் சீயக்காய்த்தூளைத் திணித்து மறு நாள் அரைத்துத்தேய்த்துக் குளிக்கவும்


  7. #1627
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மிக அதிகமாக வறுத்து, பொரித்துச் சாப்பிடுவதும், கருகவைத்து

    (முருவல் பேப்பர்தோசை, வறுத்த / ஃப்ரைடு சோறு என)ச் சாப்பிடுவதும் கெட்ட கொழுப்பு அதிகமாக்கும். ஒருமுறை பயன்படுத்திய வறுத்த எண்ணெயை மறுபடி/ பலமுறை பயன்படுத்துவதால் உடல்நலக்கேடு ஏற்படும்.


  8. #1628
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மலை வாழைப்பழத்தை சிறு வில்லைகளாக்கி விளக்கெண்ணெயில் ஊறவைத்து நாளும் ஒரு வில்லை சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். நறுவிலிப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் போகும்.
    நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சூரத்துக் கடுக்காயைத் துவையல் அரைத்துச் சாப்பிடலாம். கடுக்காய் இளகியம் (இலேகியம்) மருந்துக்கடையில் வாங்கி இரவில் ஒரு சுண்டைக்காய் அளவு உட்கொள்ளலாம். காய வைத்து இடித்த அகத்திக்கீரை அல்லது செம்பருத்தி இலைத் தூள் மலச்சிக்கல் போக்கும். உணவு முறையில் மாவுப் பொருள் குறைத்து, நார்ப்பொருள் மிக்கனவாகிய அவரைக்காய் முதலிய காய்கறிகள், முளைக்கீரை முதலிய கீரைகள், பழங்கள் சேர்க்கவேண்டும்.


  9. #1629
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நல்லெண்ணெயில் காலையில் எழுந்தவுடனும் இரவு படுக்கச்செல்லும் முன்னும் வாய் கொப்புளிக்க வேண்டும். நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி வாயில்ஊற்றி 10 மணித்துளிகொப்புளித்துத் துப்பிவிட வேண்டும்; விழுங்கக்கூடாது; பின்வெந்நீரில் வாயைக் கழுவவேண்டும். இவாறு செய்வதால் வாய் நாற்றம், பல்வலி, பல்சொத்தைநீங்குவதுடன் வாய்வழியே குடலுக்கு உடலுக்குச்-சேரும் நோய்க் கிருமிகள் தவிர்க்கப் பெறுவதால் பிற நோய்கள் பலவும்தாக்குவதில்லை.தலைவலி, மூக்கடைப்பு, இழுப்பு(ஆசுமா), நுரையீரல்கல்லீரல் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள், குறிப்பாகவாதவலிகள் மூட்டு வலிகள் நீங்குகின்றன


  10. #1630
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தூதுவேளை

    தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். பழத்தைத் தேனில் ஊறவைத்து இருமலுக்குச் சாப்பிடலாம்.
    தூதுவேளை இளகியம் (இலேகியம்) சளி, இருமல் போக்கும். தூதுளம் (தூதுவேளை) இலைகளைப் பறித்து அலசிக் கியாழம் வைத்தும் குடிக்கலாம்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter