Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree913Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1631
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெந்தயத்தை இரவு மோரில் ஊறவைத்துக் காலை எழுந்ததும் (பல் துலக்கிய பின்) ஊறிய நீரைக் குடித்துப் பின் வெந்தயத்தை மென்று தின்றால் வயிற்றுவலி நீங்கும்; குடற்புண் ஆறும். தொடர்ந்து சாப்பிட இரத்த சோகை நீங்கும்; உடல் பெருக்கும்; எடை கூடும்.


    Sponsored Links

  2. #1632
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    செரியாமை நோய்

    கேழ்வரகு (ராகி) கூழ், ரவை கஞ்சி, அரிசி கஞ்சி இவற்றில் சிறிது மோர் விட்டுச் சாப்பிடவும்.
    இரவு கஞ்சியில் பாலை மட்டும் சேர்க்கவும்.
    இவ்வாறு உணவு உண்டும் நோய் நீங்கா விடில் இரவு உணவை மட்டும் சில நாட்களுக்கு நீக்கவும். சில வாரங்களுக்குப் பின், காலையும் இரவும் கஞ்சியும், மதியம் மோர்ச் சோறு சாப்பிடலாம். புளிப்பில்லாத பழங்களை உண்ணவும். காரம், புளி ஆகியவற்றை உணவில் தவிர்க்கவும். நன்கு அவித்த காய்கறிகள் ஒத்துக் கொள்ளாவிடில் அரைத்து வடிகட்டி மிளகு, சீரகம் சேர்த்து உபயோகிக்கலாம்


  3. #1633
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடல் பருமன் குறைய/ ஒல்லியாக:

    * அன்னாசிப் பழச் சாறு தொடர்ந்து 10 நாள் சாப்பிடப்பயன் தெரியும்; பிறகு தேவையென்றால் இடைவெளிவிட்டு மறுபடி 10 நாள் குடிக்கலாம்.
    * ஒவ்வொரு சாப்பாட்டுக்கு முன்னர் ஒரு குவளை வெந்நீரும் ஒரு வாழைப்பழமும் சாப்பிடுக.

    shrimathivenkat likes this.

  4. #1634
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மூட்டுவலிக்கு மருத்துவம்:

    கோதுமை ரவையை அல்லது மாவை சிறிது வறுத்துப் பனை வெல்லம் கல்ந்து உருண்டைகளாக்கி வைத்துக் கொண்டு மாலையில் உண்க.
    வாதம் (வாயு) தரும் உணவுப் பொருள்கள் நீக்குக.
    முடக்கத்தான், பூண்டு, சுக்கு அடிக்கடி சேர்க்க.
    இரவு படுக்கச் செல்லும் முன் மேலுக்கு வாதநாராயணன் எண்ணெய் இளஞ்சூட்டில் தடவுக.
    காலையில் வெந்நீர் ஒத்தடம் தருக


  5. #1635
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடல் பருமன் குறைய/ ஒல்லியாக:

    1 வெங்காயச் சாறு கொழுப்பைக் கரைக்கும், அதனால் பருமன் குறையும்.

    2 காலை வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அல்லது, முள்ளங்கிக் கீரை அல்லது வாழைத்தண்டுக் கொதி சாறும் (சூப்பும்) சாப்பிடலாம்.


    3 “இளைச்சவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு” என்பது பழமொழி. நாள்தோறும் கொள்ளு இரவில் ஊறவைத்துக் காலையில் மென்று சாப்பிட அல்லது கொதிசாறு (சூப்) செய்து, அல்லது, துவையல் அரைத்து உணவுடன் சாப்பிட உடல் பருமன் குறையும். கொள்ளுப்பொடி இடித்து வைத்துக் கொண்டு குழம்பு, சாறு (ரசம்) ஆகியவற்றில் சேர்க்கலாம்; தனியாகவும் கொள்ளுக்குழம்பு, கொள்ளுரசம் செய்து சாப்பிடலாம். கொள்ளுப்பொடி: கொள்ளு 100கிராம், காய்ந்த கறிவேப்பிலை 20 இலைகள்,காய்ந்த மிளகாய் 1 சிறிது வறுத்து, உப்பு கொஞ்சம் சேர்த்துப் பொடியாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    shrimathivenkat likes this.

  6. #1636
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வயிற்றுப்புண், அடிக்கடி அவசரமாக மலம்கழிக்கத் தூண்டுதல், வயிற்றுப் பொருமல், வயிற்றுப்புண் (அல்சர்) முதலியன காரத்தன்மை (அசிடிட்டி)யால் வருகின்றன; இதைப் போக்க நாள்தோறும் காலைச் சாப்பாட்டுக்குக் கால் மணி நேரம் முன்னர் 5 கிராம் (1 தேக்கரண்டி) புழுங்கல் அரிசியை வாயிலிட்டு மென்று விழுங்குக. முட்டைக்கோசு கொதிநீ (சூப்) நாள்தோறும் 1 வேளை குடிப்பதால் குடற்புண் ஆறும்.


  7. #1637
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வயிற்றில் வாய்வுத் தொந்தரவு நீங்க:

    கேழ்வரகு, புழுங்கல் அரிசி கஞ்சி, பால் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 வேளை கொடுக்கவும். மோர் எவ்வளவு அதிகம் சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்க்கவும். கோதுமைக் கஞ்சியும் பிறகு சப்பாத்தியும் சாப்பிடலாம். காய்கறிகள், தக்காளி, புளிப்பில்லாத திராட்சை, ஆரஞ்சு சாப்பிடலாம். வெந்த சோறு, புளி நீக்கிய பொரித்த குழம்பு, பொரித்த ரசம் சேர்க்கலாம்.


  8. #1638
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தாமதமா? ஹோமியோபதியிலா?

    "ஹோமியோபதியா......? அது ரொம்ப லேட்டாகுமே...?"

    இப்படி ஒரு மனோபாவம் நம் மக்களிடையே நிலவுகிறது.
    இது உண்மையா? இல்லை ! இல்லவே இல்லை!
    ஆம்! இது உண்மையில்லை!
    இதைச் சற்று விளக்கமாகப் பார்த்தால்தான் உண்மை நிலை என்ன என்பதை உண்ர்ந்து கொள்ள முடியும்.
    'ஹோமியோபதி ரொம்ப லேட்டாகத்தான் கேட்கும்!' என்ற முடிவுக்கு , மக்கள் வர சில காரணங்களைக் கூறலாம்.
    அ) காய்ச்சல் என்று வருகிறீர்கள்;
    ஹோமியோ மருத்துவர் உங்களை உரிய முறையில் பரிசோதித்து, மருந்தளிக்கிறார். உடனே காய்ச்சல் தணிய வேண்டும்; ஆனால், எதிர் பார்த்தது போல காய்ச்சல் தணியவில்லை.
    மீண்டும் மருந்தளிக்கிறார்; ஊகூம்! காய்ச்சல் நீங்கவில்லை; அல்லது லேசாகக் குறைந்துள்ளது; அல்லது மேலும் அதிகரித்துள்ளது. நீங்கள் நம்பிக்கை இழக்கிறீர்கள்.
    ஏனிந்த நிலை?
    இதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன.
    1.மருத்துவர் உங்களின் நோய் நிலையைப் புரிந்து கொள்வதில் ஏதோ தடை உள்ளது.
    2.நோயாளி தன் நோய் நிலையை விளக்கியதில் தடுமாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம்.
    3.தயக்கம் காரணமாகவோ அல்லது அறியாமை காரணமாகவோ நோயாளி தனது நிலை குறித்து தெளிவாக விளக்க இயலாமற் போயிருக்கலாம்.
    4.இன்னொரு முக்கியமான காரணம், ஹோமியோ சிகிச்சைக்கு வருவதற்கு முன்பாக வேறு மருந்துகள் ஏதேனும் பயன்படுத்தி இருக்கலாம். அவ்வாறான நிலையில் நோய் நிலையின் சரியான பதிவு கிடைக்க வாய்ப்பில்லை; எனவே தவறான பாதையில் போக நேரிடுகிறது.
    பல சாலைகள் சந்திக்கும் இடத்தில் நிற்கும் நமக்கு, நாம் போய்ச் சேர வேண்டிய இலக்குக்கு உரிய சரியான சாலை அவற்றுள் ஒன்றுதான். ஒரு சில அடிகள் விலகி வேறு பாதையில் பயணித்தோமெனில், நாம் போக வேண்டிய இடத்தை அடைய முடியாது.
    அது போலத்தான் நோய் நிலையைப் புரிந்து கொள்வதில் ஏற்படும் மிகச் சிறு தவறு கூட 'நலம்' என்னும் இலக்கை அடைய முடியாமல் செய்துவிடும். உடனே பழியைத் தூக்கி ஹோமியோபதியின் மீது போட்டுவிடுவோம்.
    எவ்வளவு விரைவில்?
    'உடனே relief வேண்டும்' என்று வலி நிவாரணிகளை ('pain killer' ) பயன்படுத்துவீர்களே, அதை விட விரைவில் நலமடைவீர்கள்.
    நாட்பட்ட நோய் நிலைகளில் ( Chronic diseases ) அவை நம்மை பீடித்திருந்த காலத்திற்கேற்ப அவகாசம் தேவைப்படும். பொறுமை காக்கத்தான் வேண்டும்.
    எவ்வாறாயினும், பிற மருத்துவ முறைகளில் பெறுவதைவிட சீக்கிரமே நலமடைய முடியும் ஹோமியோபதி முறையில் என்பது அழுத்தமான உண்மை! மெய்ப்பிக்கப்பட்டு வருகின்ற மாபெரும் உண்மை!
    contd..


    shrimathivenkat likes this.

  9. #1639
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    'ஹோமியோவில்தான் விரைவில் நலம்' என்பது எப்படி?
    மற்ற முறைகளில் தரப்படும் மருந்துகளானது இரைப் பைக்குச் சென்று , நின்று நிதானமாய்ச் செரித்து , அதன் பின்னரே அது தன் பணியைத் தொடங்க வேண்டும். ஆனால், ஹோமியோ மருந்து நாவிலிடப்பட்ட உடனே கரைந்து , எச்சில் சுரப்பிகளின் வழியாகவும், சுவையரும்புகளின் வழியாகவும் ரத்த ஓட்டத்தில் கலப்பதன்மூலம் விரைந்து தன் பணியைத் தொடங்கிவிடுகிறது.

    shrimathivenkat likes this.

  10. #1640
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சாப்பிடுவதற்கு அரை மணி முன்பிருந்து சாப்பிட்டு முடித்த அரை மணிபின்பு வரை, அதாவது இவ்விடைப்பட்ட நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டாம். விக்கல், கடும் உறைப்பு, தொண்டையில் ஏதேனும் அடைத்தல் /சிக்குதல் ஆகியவற்றுக்காக மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்.

    shrimathivenkat likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter