Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


 1. #1641
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  பூண்டு, இஞ்சி, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், பனைவெல்லம் அரைத்து சிறு உருண்டைகளாக்கி வைத்துக் கொண்டு அடிக்கடி ஓர் உருண்டை சாப்பிட்டு விழாக்கால (தீப ஒளி நாள்) உணவு மிகுதியைச் செரிக்கச் செய்யலாம்


  Sponsored Links

 2. #1642
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  பனங்கல்கண்டு, புழுங்கல் அரிசி, மிளகு ஆகியவற்றைக் கலந்து வாயில் அடக்கிக் கொண்டால் இருமல் குறையும்; சித்தரத்தை அல்லது பிஞ்சுக் கடுக்காய் சிறு துண்டு வாயில் அடக்கிக் கொள்வதாலும், பாலில் இட்டுக் காய்ச்சிக் குடிப்பதாலும் உடனே இருமல் நீங்கும். இரவு படுக்கும் முன் வால்மிளகுத் தூளைப் பாலில் கலந்து காய்ச்சிப் பனங்கல்கண்டு இட்டுக் குடிக்க இருமல் போகும். வெகுநாள் இருமலை குறிப்பாக க்க்குவான் இருமலை நிறுத்த வாழை மரத்தின் அடிக் கிழங்குச் சாறு 2 தேக்கரண்டி குடிக்கலாம்.


 3. #1643
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  செம்பருத்திப்பூக்களில் 2, 3 எண்ணிக்கை, கொஞ்சம் இஞ்சி, கொஞ்சம் கறிவேப்பிலை, நெல்லிக்காய் ஒன்று எடுத்துக்கொண்டு அரைத்து சாறு பிழிந்து அதனுடன் எலுமிச்சைச்சாறு பிழிந்து சர்க்கரை கலந்து குடித்தேன். அடுத்த அரை மணி நேரத்தில் ஏதோ புதிய ரத்தம் பாய்ச்சியது போன்ற ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது.
  இதை தொடர்ந்து செய்து வருவதால் தள்ளாட்டம் இல்லை. பிரஷர், பி.பி.ன்னு புலம்பிக்கிட்டு இருக்குறதோட இதுமாதிரி எளிய வைத்தியத்தை செஞ்சா கைமேல் பலன் கிடைக்கும்


 4. #1644
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  `ரெடிமேட்' உணவுகள் சரியா... தவறா? பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம்...

  இன்றைய அவசர உலகில் சென்னை, மும்பை, டெல்லி போன்ற மெட்ரோபாலிட்டன் நகரங்கள் முதல், அடுத் தடுத்த இடங்களில் இருக்கும் நகராட்சிகள் வரை வேர் ஊன்றி உள்ளது 'ரெடி டு ஈட்’ உணவுகளின் வியாபாரம். 'பெரு நகரங்களில் 82% குடும்பங்கள் ரெடிமேட் உணவுகளிடம் சரணடைந் துள்ளன' என்கிறது சமீபத்தில் வெளியான ஒரு புள்ளிவிவரம். பல மணி நேர சமையலறைச் சுமையை, சில நிமிடங்கள் ஆக்கியிருப்பதாலே பலராலும் விரும்பப்படும் இந்த ரெடிமேட் உணவுகளில் கலக்கப்படும் ரசாயனங்களும், அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளும் நிறைய நிறைய! அதைப் பற்றியதே இந்தக் கட்டுரை!
  உங்கள் உணவில் எத்தனை கெமிக்கல்கள்?!
  ''காஸ்மெடிக் பொருட்கள் வாங்கும்போதுகூட நார்மல் சருமத்துக்கானதா, வறண்ட சருமத்துக்கானதா, காலாவதி தேதி என்ன என்பதை எல்லாம் பார்த்து வாங்கும் நம் மக்கள், உண்ணும் உணவு விஷயத்தில் அந்த அக்கறையைக் காட்டாதது வேதனைக்குரிய விந்தை!'' என்று நொந்து போய் சொல்லும், சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் பவானி, விரிவாகவே பேசினார்.
  ''சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம், பனீர் மசாலா, மீன் கிரேவி என வகை வகையாக வந்திருக்கும் ரெடிமேட் உணவுகளை வாங்கும்போது, அதில் கலந்துள்ள பொருட்கள் என்னென்ன, அந்தப் பொருட்கள் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன, அந்நிறுவனம் அரசு அனுமதி பெற்றதா போன்றவற்றைப் பார்க்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வுகூட இங்கு பலருக்கும் இல்லை. 'ரெண்டு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கினால், சமையல் முடிந்தது' என்கிற எளிமையை மட்டுமே பார்த்து வாங்கிச் சாப்பிடும் அந்த உணவுகளில் பலவும்... 15 வயதில் கேன்சரையும், 25 வயதில் சர்க்கரை நோயையும் தரவல்லது என்பதை அறிவீர்களா?
  காலையில் சமைக்கும் உணவு, இரவுக்குள் கெட்டுவிடும் என்பதே இயல்பு. கெடவேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. ஆனால், ஓர் உணவுப் பொருளை, நாள் கணக்கில்... மாதக்கணக்கில் எல்லாம் கெடாமல் வைக்க வேண்டும் என்றால், அதில் எந்தளவுக்கு செயற்கைப் பொருட்களைச் சேர்க்க வேண்டும்? அப்படிச் சேர்க்கப்படும் பதனப்பொருட்கள் (preservative) மற்றும் ரசாயனங்கள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கி சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை பாதிக்கும்தானே!
  contd.. 5. #1645
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  தொடர்ச்சி

  உணவுப்பொருட்கள் நீண்ட நாள் கெடாமல் பதப்படுத்து வதற்காகச் சேர்க்கப்படும் சல்ஃபைடு, ஆஸ்துமா மற்றும் மனநலன் சார்ந்தபிரச்னையை விளைவிக்கக்கூடும். ரெடிமேட் உணவுகள் பெரும்பாலும் குளிர்விக்கப்பட்ட அல்லது உறைந்த நிலையில் இருப்பதால், அந்த உணவின் சுவை குறைவது இயல்பு. இதைத் தவிர்க்கும் பொருட்டு, ரெடிமேட் உணவு வகைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், சுவையைத் தக்கவைக்க சர்க்கரை, உப்பு, கொழுப்பு, நறுமணம், வண்ணங்கள் போன்றவற்றை அளவுக்கதிகமாகச் சேர்க்கிறார்கள். ரெடிமேட் உணவுகளில் உள்ள அதிக கொழுப்பு, இதயத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். சரும நோய்கள், உடல் பருமன், நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்ற பிரச்னைகளையும் தரவல்லது இந்த ரெடிமேட் உணவுகள். அசைவ உணவுகளைப் பதப்படுத்த சேர்க்கப்படும் சோடியம்... அலர்ஜி, வாந்தியில் தொடங்கி, புற்றுநோய் வரை பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
  வீட்டில் தயாராகும் உணவுகளைவிட, ரெடிமேட் உணவுகள் வழங்கும் ஊட்டச் சத்துகள் குறைவு. அவை கெட்டுப் போகாமல் இருக்க பல வேதியியல் முறைகளுக்கு உட்செலுத்தப்படும்போது, அதிலுள்ள சத்துகள் அழிந்துபோகும். எனவே, ஒருவர் தொடர்ந்து ரெடிமேட் உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போவதோடு, அது அவரின் உடல் வளர்ச்சியைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் கரைக்கும்.

  உணவு அரசியல்!

  ரெடிமேட் உணவுகள், ஓர் உலக அரசியல் காரணி. சந்தையில் தங்களின் பொருளை நிலைநிறுத்த பெரும்பாலான நிறுவனங்களும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மக்களின் ஆரோக்கியம் பற்றிய அக்கறையை புறந்தள்ளுகின்றன. தேவை லாபம். அதைப் பெற, மணம், வண்ணம், கெட்டுப்போகாமல் நீடிக்கும் தன்மை என இவற்றுக்காக எதையும் சேர்க்கலாம் என்பது இவர்களின் கொள்கை. அவற்றை வாங்கிச் சாப்பிடும் நமக்கு என்ன நேரும் என்று கவலைப்பட, அவர்கள் நம் அம்மாவோ, பாட்டியோ இல்லையே!
  2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, 2015-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 'பேக்' செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களின் விற்பனை 30 பில்லியன் டாலரைத் தொடக்கூடும் என்கிறது. இதில் உங்களுடைய பணமும் சேரத்தான் போகிறதா?!'' என்று கேட்டு முடித்தார், ஊட்டச்சத்து நிபுணர் பவானி
  contd.. 6. #1646
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  தொடர்ச்சி

  கெமிக்கல் விருந்து!

  மக்களிடையே உணவுப் பொருட்கள் குறித்த விழிப்பு உணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருபவர், சென்னையைச் சேர்ந்த 'கான்சர்ட்' எனும் தன்னார்வ நிறுவனத்தின் இயக்குநர் சந்தானராஜன். அவர் பேசும்போது, ''ரெடிமேட் உணவுகளில் பல வகையான கெமிக்கல்கள், குறைந்த விலையில் கிடைக்கும் தடைசெய்யப்பட்ட வண்ணங்கள், பாதிப்புகளை ஏற்படுத்தும் கலவைகள் என பலவற்றையும் கேட்பாரற்றுக் கலந்து வருகின்றன பல நிறுவனங்கள். மேலும், பேக் செய்யப்படும் பிளாஸ்டிக்குகள் ஏற்படுத்தும் பாதிப்புகளும் பல. அப்படியான பிளாஸ்டிக் மெட்டீரியலில் பேக் செய்யப்பட்ட உணவுகளை நாங்கள் 'கெமிக்கல் விருந்து’ என்று குறிப்பிடுவோம்.
  சாதாரணமாகவே பிளாஸ்டிக் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. இதில் மாதக்கணக்கில் உணவு பதப்படுத்தப்படும்போது ஏற்படும் மாற்றங்களும், விளைவிக்கும் கேடுகளும் நிறைய. எங்கள் 'கான்சர்ட்’ அமைப்பும், இன்னும் பல நுகர்வோர் அமைப்புகளும் 'உணவுப் பொருட்களின் பயன்பாட்டுக்குத் தகுதியான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பிரத்யேக முத்திரை ஒதுக்குங்கள்’ என்று பல முறை அரசிடம் வலியுறுத்தி ஓய்ந்துவிட்டோம்!
  வண்ணமும், குறியீடும்!
  பொதுவாக, உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய வண்ணங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று இயற்கை வண்ணம் (natural),மற்றொன்று செயற்கை வண்ணம் (synthetic).கறிவேப்பிலையில் உள்ள பச்சை நிறம், கேரட்டில் உள்ள ஆரஞ்சு நிறம் போன்றவை இயற்கை வண்ணங்கள். செயற்கை நிறங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 நிறங்களைத் தவிர மற்ற நிறங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் மிகக்குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்பதற்காக தடைசெய்யப்பட்டுள்ள வண்ணங்களை ரெடிமேட் உணவுகளில் பயன்படுத்தி வருகிறார்கள்.
  விளம்பரங்களை நம்ப வேண்டாம்!
  விளம்பரங்களில், 'இதில் இந்தச் சத்து உள்ளது’, 'ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும்’, 'ரெண்டே நிமிஷத்தில் சமையல் ரெடி’ என்றெல்லாம் கூவுபவர்கள், தங்களுக்கு தரப்பட்ட தொகைக்காக கேமரா முன் பேசியவர்களே! எனவே, விளம்பர யுக்திகளுக்கும், விளம்பரங்களில் தோன்றுபவர்களின் வார்த்தைகளுக்கும் ஏமாறாதீர்கள்.
  கொதிக்காத ரசம், முக்கால் பதம் வெந்த கத்திரிக்காய், மசித்த கருணைக்கிழங்கு என்று ஒவ்வொரு உணவையும் பதம் பார்த்துச் சமைத்தவர்கள் நம் பாட்டிகளும், அம்மாக்களும். சமைப்பதற்கு சோம்பேறித்தனப்பட்டு ரெடி டு ஈட்' உணவுகளை வாங்கிச் சாப்பிடும்போது, அதன் விலைக்கு தோல் அலர்ஜியில் இருந்து புற்றுநோய் வரை நமக்கு இலவசமாகத் தரப்படுகிறது என்பதை நொடிப்பொழுது மனதில் நிறுத்துங்கள்!''
  அக்கறையுடன் அழுத்தமாகச் சொன்னார், சந்தானராஜன்!
  சமைப்போம்!
  ''வேண்டவே வேண்டாம்!''
  ரெடிமேட் உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் நண்பர் ஒருவர், தன் பெயர் தவிர்த்துப் பேசினார்.
  ''நான் கண்கூடாகப் பார்க்கும் அனுபவத்தில், ரெடிமேட் உணவுகளை விஷம்னுதான் சொல்வேன். 99% ரெடிமேட் உணவு நிறுவனங்களுக்கு லாபம் மட்டுமே இலக்கு. யார் குறைந்த விலைக்கு உணவைக் கொடுத்து, அதிக வாடிக்கையாளர்களைப் பிடிக்கிறாங்கனு அந்த நிறுவனங்களுக்கு இடையில நடக்குற போட்டியில, உணவுப் பொருள்ல கலக்கப்படும் கெமிக்கல்ஸ், அதோட தரம் பத்தி எல்லாம் அவங்களுக்கு கவலையே இல்ல. ரெடிமேட் உணவு தயாரிக்கும் நிறுவனங்கள்ல வேலை செய்யும் பணியாட்களில் இருந்து, உரிமையாளர்கள் வரை அந்த உணவுகளை யாரும் சாப்பிட மாட்டாங்க. ஏன்னா, அந்தளவுக்கு அதில் அட்டூழியம் நடக்குது. மனசாட்சி உறுத்தலோடதான் இந்த வேலையைப் பார்க்குறேன். வேற வேலை தேடிட்டு இருக்கேன். முடிந்தவரை யாரும் ரெடிமேட் உணவுகள் சாப்பிடாதீங்க!'' என்றார் வருத்தத்தோடு.
  கிராமங்களிலும் ரெடிமேட்!
  இந்தியாவில் ரெடிமேட் உணவைப் பயன்படுத்து கிறவர்களில் 78% பேர் நகரங்களைச் சேர்ந்தவர்கள், 22% பேர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஓர் ஆய்வு சொல்லும் அதிர்ச்சித் தகவல்.
  கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 21% பேர், வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 38% பேர், தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 28% பேர், மேற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 36% பேர் ரெடிமேட் உணவைப் பயன்படுத்துகிறார்கள்.
  அடுத்த ஐந்து ஆண்டுகளில், இது 40% 60% அதிகரிக்கும் என்பது கணிப்பு.
  contd.. 7. #1647
  shrimathivenkat's Avatar
  shrimathivenkat is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  chennai
  Posts
  8,456

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  neengal kodukum ella thagavalgalum arumai.


 8. #1648
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  தொடர்ச்சி

  மிளகாய்த்தூளையும் விட்டுவைக்கவில்லை!
  'கான்சர்ட்’ நிறுவனம், இந்திய நுகர்வோர் துறையின் அனுமதியின் பெயரில் மிளகாய்த்தூள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 'மிளகாய்த்தூள் விலையுயர்ந்த பொருளாக இருப்பதால், அதனுடன் மிளகாய் காம்பு, இதழ்கள் முதலியன சேர்க்கப்பட்டு அரைக்கப்படுகின்றன. இதனால் அதன் வண்ணம் குறையும் என்பதால், அதில் சூடான் வண்ணம் எனும் பெட்ரோலியப் பொருளுக்கு போடப்படும் வண்ணம் சேர்க்கப்படுகிறது. இதைச் சாப்பிடுவதால் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
  மேலும், மிளகாய்த்தூளில் இயற்கை வண்ணம் மற்றும் காரத்தன்மை நீடிக்க 2% தாவர எண்ணெய் சேர்க்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அதிகமான நிறுவனங்கள் தாவர எண்ணெய்க்குப் பதிலாக மினரல் எண்ணெய் சேர்ப்பதுடன், அதனை லேபிளில் சரிவர தெரியப்படுத்துவது கிடையாது. இதுவும் புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும் அபாயப் பொருளே!’ என்கிறது அந்த ஆய்வு.
  மொத்த நுகர்வோரில், 75% பேர் நிறுவனத்தின் பெயரை மட்டுமே பார்த்துவிட்டு, அதிலுள்ள தகவல்களை கவனிக்காமல் வாங்குகிறார்கள். மீதமுள்ள 25% பேரில் 39% நுகர்வோர் பயன்பாட்டு நாளையும், 27% நுகர்வோர் தயாரிப்பு தேதியையும் பார்த்து வாங்குகிறார்கள்.
  குழந்தைகளைக் கண்காணியுங்கள்!
  'ரெடி டு ஈட்' உணவு சாப்பிட்ட நாளைத் தொடர்ந்த நாட்களில் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள். கூடவே, தொடர்ந்து ரெடிமேட் உணவுகளைச் சாப்பிட்டு வரும் குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணியுங்கள். ஒன்று, அது அதிக துறுதுறு என்று மாறும். அல்லது மந்தமாக மாறும். குழந்தைகளின் இந்த நடவடிக்கை மாற்றங்களுக்கும், அவர்கள் சாப்பிடும் ரெடிமேட் உணவுகளுக்கும் சம்பந்தம் உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை!  Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-ready-eat.jpg  

 9. #1649
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  குடல் இறக்கம்

  உடல் எடை அதிகரிப்பு பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. நமது உணவு முறைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் மேற்கத்திய உணவு முறைக்கு அடிமையாகி பலர் தங்கள் உடலை பெருக்க வைக்கிறார்கள். உடல் உழைப்பு, உடற்பயிற்சி பழக்கம் பலருக்கு இருப்பதில்லை. இதனாலும் உடல் எடை அதிகரிக்கிறது. இதை கண்டு கொள்ளாமல் விடும் போது மலச்சிக்கலில் ஆரம்பித்து பலநோய்களை கொண்டு வந்து விடுகிறது. அதிக எடை குடலிறக்கம் ஏற்படவும் முக்கிய காரணமாகிறது. குடல் இறக்கம் பிரச்சினையை தீர்க்க மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
  குடல்இறக்கம் என்பது வயிற்றில் உள்ள குடல் சவ்வுப்படலம் சிறிய துவாரங்கள் வழியே வெளிவருதல் ஆகும். பொதுவாக நமது வயிற்றுப்பகுதியில் இயற்கையாகச் சில துவாரங்கள் உண்டு. அவை தொப்புள், அடி வயிற்றிலிருந்து தொடைக்கு செல்லும் நரம்பு மற்றும் ரத்தக்குழாய்க்கான இங்குனல் பகுதி போன்றவை. இந்த துவாரங்கள் வயிற்றின் உள்பகுதியில் இருந்து மேல்வரை இணைக்கும் இந்த துவாரங்களின் வாய்ப்பகுதியில் எலாஸ்டிக் போன்று இருக்கும். இந்த எலாஸ்டிக் விரிவடைவதால் வயிற்றில் உள்ள குடல் மற்றும் குடல் சவ்வுப்படலம் போன்றவை வெளியில் வந்துவிடுகிறது.
  துவக்கத்தில் அழுத்தம் வரும் போது மட்டும் வெளியில் வந்து அழுத்தம் குறைந்த உடன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடும் தன்மை கொண்டதாக இருக்கும். அவ்வப்போது இந்தப்பிரச்சனை தோன்றும். பிறகு குடல் பகுதிகள் நிரந்தரமாக தங்கி தொல்லை தர ஆரம்பிக்கும்.அதுமட்டுமல்லாமல் வயிறு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு தையல் விலகி ஓட்டைகள் ஏற்படலாம். இந்த துவாரங்களின் வழியே குடல் வெளியில் வந்து அப்படியே தங்கிவிடும். இதனையே குடல் இறக்கம் என்கிறோம்.
  contd.. 10. #1650
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  தொடர்ச்சி

  உடல் எடை அதிகம் உள்ளவர்கள் குறிப்பாக தொப்பை உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சினை வர வாய்ப்புகள் அதிகம். பெண்களில் கர்ப்பகாலம், தொடர்ச்சியான மலச்சிக்கல், தொடர் இருமல் மற்றும் தும்மலால் அவதிப்படுபவர்கள், அதிக பாரம் தூக்குபவர்கள், வயிற்றில் அதிக அழுத்தம் கொடுப்பவர்கள், வயிறு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் முறையான ஓய்வு எடுக்காதவர்கள், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்கள் போன்றவர்களுக்கு குடல் இறக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே இவர்கள் குடல் இறக்கம் ஏற்படாமல் இருக்க கவனமாக இருப்பதுடன் பிரச்சனையின் துவக்கத்திலேயே டாக்டரின் ஆலோசனையுடன் சிகிச்சை பெறலாம். குடல் இறக்கத்திற்கான அறிகுறிகளை உணர்ந்து உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் சரிசெய்து கொள்ள முடியும்.
  பாதுகாப்பு முறை............
  குடல் இறக்கப்பிரச்சினை வராமல் இருப்பதற்கு முதலில் செய்ய வேண்டியது உடல் எடையைக் குறைப்பது தான். அவரவர் உயரத்துக்கு ஏற்ற எடை உள்ளதா என்பதைத் தெரிந்து கொண்டு உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். அதிக கலோரி உள்ள உணவுகளை தவிர்ப்பது முக்கியம். மாமிச உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. நார்ச்சத்து உள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதுடன் சரியான உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் நோயை விரட்ட முடியும். இருமல் மற்றும் தும்மலுக்கு முறையான சிகிச்சை எடுத்து சரி செய்து கொள்ள வேண்டும்.
  குடல் இறக்க பிரச்சினையை சிலஅறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அடி வயிற்றில் அல்லது தொப்புள் பகுதியில் லேசான அழுத்தத்துடன் கூடிய வலி இருக்கும். திடீரென வீக்கம் ஏற்படும். அடுத்த நாள் அல்லது படுத்தால் வீக்கம் காணாமல் போய்விடும். வயிற்றுப் பகுதியில் மந்தமான வலி தொடர்ந்து தொல்லை தரும். இது போன்ற அறிகுறிகள் தென்பட உடனே வைத்தியரை அணுக வேண்டும்.
  அப்போது உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். உணவு முறை மாற்றம் மற்றும் எளிய பயிற்சிகள் போதுமானது. பிரச்சினை முற்றிய பின்னர் மருத்துவரை அணுகினால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். குடல் இறக்க பிரச்சினை வந்த பின்னர் வீக்கம் உண்டான இடத்தில் அழுத்தம் இருக்கும்படி பட்டையான பெல்ட் அணிய வேண்டும். கீழே உள்ள பொருட்களை நேரடியாக குனியாமல் உட்கார்ந்தபடி எடுக்க வேண்டும்.
  ஸ்கிப்பிங் மற்றும் வெயிட் லிப்டிங் உள்ளிட்ட பயிற்சிகள் செய்யக் கூடாது. அதிக வெயிட் உள்ள பொருட்களை தூக்குவதைத் தவிர்க்கவும். வந்த பின்னர் நொந்து கொள்வதை விட குடல் இறக்கம் பிரச்சினை வராமல் காக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.  Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg  

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter