Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1661
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அடிக்கடி கரும்பை கடி கடி!’

    என்னது கரும்பா? அதை கடிச்சு மென்னு துப்புறதுக்குள்ள வாய் வலிக்குமே''
    எனப் புலம்புபவரா நீங்கள்? உங்க எண்ணத்தை மாத்திக்கோங்க. கரும்பால என்னென்ன பலன்கள் இருக்குனு என தெரிஞ்சிக்க, டயட்டீஷியன் பூங்கோதை சொல்லும் இன்ட்ரஸ்டிங் பிட்ஸ் இங்கே...
    1. கால்சியம், குரோமியம், புரோட்டீன், விட்டமின்ஸ், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்துனு கரும்பில் இருக் குற சத்துக்களை எண்ணிட்டே போகலாம்.
    2. கரும்பில் இருக்கும் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்ஸ், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக் கும். மஞ்சள்காமாலை நோய் இருப்பவர்கள் அடிக்கடி கரும் பைக் கடிக்கலாம்.

    3. செரிமானம், சருமப் பொலிவு இதுக்கெல்லாம் உதவியா இருக்குறதோட, உங்க உடம்புல இருக்குற கெட்ட கொலஸ்ட்ரால் டக்’குன்னு குறையவும் கரும்பு சாப்பிடணும்
    4.ரும்புச் சாற்றில் இருக்கும் புரோட்டீன், கிட்னி செயல்பாட்டுக்கும், கிட்னியில் கற்கள் வராமல் தடுக்கவும் பயன்படுறதோட யூரினரி இன்ஃபெக்*ஷன் வராமலும் தடுக்கும்.
    5. தாகத்தை சட்டுனு தணிக்கும் நேச்சுரல் எனர்ஜி டிரிங்க்ஸ், நம்ம கரும்புதான்.
    6. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளாபின் அளவை மேம்படுத்துற பவர், கரும்புக்கு இருக்கு. அதனால ஜூஸா சாப்பிடுறதோட, கடிச்சு மென்னு சாப்பிட் டோம்னா, சத்துக்கள் எதுவும் வீணாகாம, மொத்தமா கிடைச்சுடும்.
    7.ஆலும் வேலும் போலத்தான் க ரும்பு் பல்லுக்கு உறுதி சேர்க்கும். அதனால வலுவான பல்லுக்கு உத்தரவாதம் வேணும்னா, அடிக்கடி கரும் பைக் கடிக்கலாம்
    நன்றி விகடன்




    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-index.jpg  

  2. #1662
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மனிதன் விடும் மூச்சை வைத்து வாழ்நாள் கணக்கிடலாம்

    ஒரு மனிதன் நிமிடத்திற்கு விடும் மூச்சை வைத்து அவனது ஆயுள் காலங்கள் கணக்கிடப்படுகின்றது. அதன் சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
    ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?


    ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

    ( 21,600 / 1440 ஸ்ரீ 15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24ஸ்=1400)
    ஒரு மனிதன் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்



    · ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விட்டால் 100 ஆண்டுகள் வாழலாம்.
    · ஒரு நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விட்டால் 93 ஆண்டுகள் வாழலாம்.
    · ஒரு நிமிடத்திற்கு 17 முறை மூச்சு விட்டால் 87 ஆண்டுகள் வாழலாம்.
    · ஒரு நிமிடத்திற்கு 18 முறை மூச்சு விட்டால் 80 ஆண்டுகள் வாழலாம்.
    · ஒரு நிமிடத்திற்கு 19 முறை மூச்சு விட்டால் 73 ஆண்டுகள் வாழலாம்.
    · ஒரு நிமிடத்திற்கு 20 முறை மூச்சு விட்டால் 66 ஆண்டுகள் வாழலாம்.

    இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்Nபுhதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம். என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.


    2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
    1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
    0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை


  3. #1663
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அருகம்புல்


    ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க”
    புதுமணை புகுவிழாக்களில் திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதை பார்த்திருப்பீர்கள்.

    அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்

    அருகம்புல் முழுத்தாவரமும் இனிப்புசுவையும்,குளிர்ச்சித் தன்மையும்
    உடையது.உடல் வெப்பத்தை அகற்றும்,சிறுநீர் பெருக்கும்,குடல் புண்களை ஆற்றும்,
    இரத்தை தூய்மையாக்கும்,உடலை பலப்படுத்தும்,

    கண் பார்வை தெளிவுபெறும்.அருகம்புல் பச்சையத்தில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் என்ற வேதி பொருள் உள்ளன.

    அருகம்புல் வாதபித்த ஐயமோடீளை
    சிறுக அறுக்கும் இன்னுஞ்செப்ப அறிவுதறும்
    கண்ணோ யோடு தலைநோய் கண்புகையிரத்தபித்தம்உண்ணோ யொழிக்கு முரை இது அகத்தியர் பாடல்.

    அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள்.

    ஆன்மீகத்துடன் மருத்துவத்தைக் கலந்தே நம் முன்னோர்கள் சொல்லிவந்தனர்.
    பிள்ளையாருக்கே சுவாலாசூரன் எனும் அசுரனை அழிக்க அவனை அப்படியே விழுங்கியபோது வெப்பம் தாளாமல் பிறகு தவித்தாராம் .ஏதுசெய்தும் வெப்பம் குறையவில்லை ,பிறகு ஒரு ரிஷியின் ஆலோசனைப்படி அருகம்புல் அவர் மேல்போட்டபோதுதான் .வெப்பம் குறைந்ததாம் .இது புராணக்கதை மூலம் நம் முனோர் நமக்கு கட்டிய வெப்பம் குறைக்கும் வழி .

    அருகம்புல்லை சித்தர்கள் ஆரோக்கியப் புல் என்றும் காகாமூலி என்றும் அழைக்கின்றனர்.

    அருகு, பதம், மூதண்டம், தூர்வை, மேகாரி என்று வேறு பெயர்களிலும் இது அழைக்கப் படுகிறது.

    போகாத தோஷவினை போகப் பிணியகன்று
    தேகாதி யெல்லாஞ் செழிக்கவே ஸ்ரீ வாகாய்
    அடர்தந்தை பிள்ளைக் கணியா தலாலத்
    திடமாங் கணபதிபத்ரம்நரம்புத் தளர்ச்சி நீங்க
    அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அருகம்புல் சாறு எடுத்து தினமும் உணவுக்குப் பின் அருந்தி வந்தால் கை கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.கண் நோய் அகல
    கண் பார்வை தெளிவடையவும், கண்ணின் சிவப்புத் தன்மை மாறவும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகும்.

    பொதுவாக அருகம்புல் அசுத்தமான பகுதிகளில் வளராது. இதனை சித்தர்கள் விஷ்ணு மூலி என்று அழைக்கின்றனர்.

    சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற இந்த அருகின் மருத்துவக் குணங்களை அகத்தியர் பாலவாகடத்திலும், வர்ம நூல்களிலும் தெளிவாக விளக்கியுள்ளார்.
    குழந்தைகளுக்குக் கொடுக்கும் மருந்தாக உள்ளதால் இதை குருமருந்து என்றும் கூறுகின்றனர்.

    ஞாபக மறதியைப் போக்கினால் மனிதனின் அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். ஞாபக சத்தியைத் தூண்ட அருகு சிறந்த மருந்தாகும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
    மெலிந்த உடல் தேறவும், புத்துணர்வு பெறவும் இது சிறந்த மருந்தாகும்.

    அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் உண்டான சொரி, சிரங்கு, ஆறாத புண்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.

    நீர் கடுப்பு, நீர்ச் சுருக்கைக் குணப்படுத்தும்.

    அருகம்புல்லை தயிர்விட்டு அரைத்து குடித்துவந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

    நோய்கள் அனைத்தையும் அழிக்கும் குணமுள்ளதால் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் இது முதலிடம் வகிக்கிறது.

    உடல் இளைக்க தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம். சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.

    அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.


  4. #1664
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நம் உடலை அறிவோம்

    பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.
    ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.
    மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.
    மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.
    ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.
    நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.
    நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.
    நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.
    மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.
    உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.
    ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.
    கைரேகையைப்போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
    மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.
    கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.
    900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.
    மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும்.
    மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-3.jpg  

  5. #1665
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பேப்பர் கப்... உஷார்!

    'என் நண்பர் ஒருவர் வயிற்று வலியால் ரொம்பவே சிரமப்பட்டார். பல பரிசோதனைகளுக்குப் பிறகு நண்பரின் வயிற்றில் மெழுகு படிந்து இருந்ததை டாக்டர் கண்டுபிடித்தார். வயிற்றில் எப்படி மெழுகு? சிற்றுண்டிச் சாலைகளில் பயன்படுத்தும் பேப்பர் கப்களில் அடிக்கடி டீ, காபி குடிப்பது நண்பரின் வழக்கம். அந்த கப்களில் இருந்த மெழுகுதான் நண்பர் வயிற்றுக்கு இடம் மாறி வயிற்று வலிக்குக் காரணமாகி இருக்கிறது. சூடான டீ, காபி ஊற்றும்போது, கப் கரைந்துவிடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில் ஒருவித மெழுகு பூசப்படுகிறது. இப்படி மெழுகு பூசப்பட்ட பேப்பர் கப்களில் சூடான டீ அல்லது காபி நிரப்பப்படும்போது, அந்த வெப்பம் காரணமாக, பேப்பர் கப்களில் இருக்கும் மெழுகும் கூடவே கொஞ்சம் உருகி, டீ - காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள்ளும் சென்றுவிடுகிறது. அது நாளடைவில் வயிற்றில் பல உபாதைகளைத் தோற்றுவிக்கிறது. டீ, காபி அருந்துவதற்குக் கண்ணாடிக் குவளைகளே சிறந்தவை. சில்வர் டம்ளர்களையும் உபயோகிக்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அனைவரும் இதைப் பின்பற்ற வேண்டும். தயவுசெய்து இந்தச் செய்தியை அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!''
    . பிளாஸ்டிக் தட்டுகள், டப்பாக்கள், டம்ளர்கள் ஆகியவற்றின் மூலம் உணவு உட்கொள்வதால், நம் உடலில், என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்? மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம்.
    ''பேப்பர் கப், டம்ளர் போன்றவற்றில் தண்ணீர் ஊற்றும்போது கரைந்துவிடாமல் இருக்க மெழுகு தடவப்படுவது உண்மைதான். மரப்பிசினில் இருந்து எடுக்கப்படும் மெழுகை மட்டுமே பேப்பர் கப் செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை அமெரிக்காவின் 'எஃப்.டி.ஏ’ ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இன்று பெரும்பாலும் நம் நாட்டில் 'பெட்ரோ-கெமிக்கல்’ மெழுகுதான் பயன்படுத்தப்படுகிறது. அது பல பின்விளைவுகளை உண்டாக்கும்.
    பேப்பர் கப்பால் மட்டும் அல்ல. இன்று அதிக அளவில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேப்பர் பிளேட், பாத்திரம், டம்ளர் போன்ற பொருட்களால்கூட நிறைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. உணவு வகைகளில், காரத்தன்மை அதிகமாக இருந்தால், அது பிளாஸ்டிக்குடன் சேர்ந்து நச்சுத்தன்மை உடையதாக மாறும். பிளாஸ்டிக் டப்பா அல்லது தட்டுகளில் வைத்து ஏதோ ஒரு நாளோ, இரண்டு நாளோ உணவு சாப்பிட நேரும்தான். ஆனால், அதுவே வழக்கமாக மாறும்போது ஒவ்வாமை முதல் புற்றுநோய் வரைக்கும் நம்மைக் கொண்டுபோய் நிறுத்திவிடும்!'' என்று எச்சரிக்கிறார் சித்த மருத்துவரான சிவராமன்.
    contd..



  6. #1666
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    ''இதுபோன்ற மலிவான பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைக்கும்போது உணவில் இருக்கும் நுண் சத்துக்கள் அதாவது மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் சிதைந்துவிடும். ஆகையால் இவை தவிர்க்கப்பட வேண்டியவை'' என்பது கேஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்டான சந்திரமோகனின் கருத்து.
    சென்னைப் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் மற்றும் சுற்றுச்சூழல் நச்சு இயல் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் கார்த்திகேயனும் இதே கோணத்தில்தான் பேசுகிறார். ''பிளாஸ்டிக் நெகிழும் தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்பதற்காக சில கூட்டுப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இந்தக் கூட்டுச் சேர்க்கையை 'பிளாஸ்டிசைஸர்’ என்பார்கள். சுமார் 100 விதமான பிளாஸ்டிசைஸர்கள் இன்றைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உணவுப் பொருட்களைச் சேமிப்பதற்கு என்றே 'ஃபுட் கிரேட் பிளாஸ்டிக்ஸ்’ (திஷீஷீபீ நிக்ஷீணீபீமீ றிறீணீstவீநீs) என்ற தனி ரகம் உள்ளது. அதிலும் 'உணவுத் தரக் கட்டுப்பாடு’ முறையின் கீழ் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
    பிளாஸ்டிக் பேப்பர் கப்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், ஹோட்டல்களில் சாம்பார், ரசம், சட்னி போன்றவற்றைக் கட்டப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்கள் போன்ற அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டியவை. பிளாஸ்டிக் பொருளில் சில வேதிப் பொருட்கள் இருக்கின்றன. அதேபோல உணவுப் பொருட்களிலும் சில வேதிப் பொருட்கள் இருக்கின்றன. பிளாஸ்டிக்கில் இருக்கிற வேதிப் பொருள் உணவில் இருக்கும் வேதிப் பொருளுடன் கலப்பதை 'மைக்ரேஷன்’ என்போம். உணவு நச்சுத்தன்மை கொண்டதாக மாறுவதற்கு இதுதான் காரணம். உணவு வகைகளை பிளாஸ்டிக் பொருட்களில் சேமித்துவைப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது!'' என்கிறார் கார்த்திகேயன்.
    ''பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால், புற்றுநோய் ஏற்படுமா?'' என புற்றுநோய் நிபுணர் ராஜாவிடம் கேட்டோம். நம் பதற்றத்தை உணர்ந்துகொண்ட அவர், ''பிளாஸ்டிக் தட்டுகள், கப்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி உணவைச் சாப்பிடுவதால், புற்றுநோய் ஏற்படும் என்பதற்கான நேரடியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை என்றாலும், மினரல் வாட்டர் மற்றும் குளிர்பானங்களை அடைத்து விற்பனை செய்யப் பயன்படுத்தும் பெட் பாட்டில்களைத் தொடர்ச்சியாக மாதக்கணக்கில் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கூடும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன'' என்கிறார்.
    ''40 மைக்ரான் அடர்த்திக்குக் கீழே உள்ள பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால், இன்னும் பல ஹோட்டல்களில் அந்தச் சட்டத்தை மதிக்காமல், சாம்பார், ரசம், சட்னி போன்ற உணவு வகைகளை மிக மெல்லிய பிளாஸ்டிக் பைகளில்தான் கட்டித் தருகிறார்கள். இது மிகவும் தவறு. இதற்காக அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடியும்.
    உணவு வகைகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டிக் கொடுப்பதைவிட, வாழை இலை, தேக்கு இலை போன்ற இயற்கையான பொருட்களில் கட்டிக் கொடுக்க நுகர்வோர் கட்டாயப்படுத்தலாம். பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தாமல் இருப்பது நுகர்வோரின் கைகளில்தான் இருக்கிறது!'' என்பது 'நுகர்வோர் ஆலோசனைக் குழு’ அமைப்பைச் சேர்ந்த சரோஜாவின் கருத்து.
    நம் வசதிக்காகப் பயன்படுத்தும் பொருள்தான் பிளாஸ்டிக். ஆனால், அந்த வசதியே நம் உடல் நலத்துக்கு எதிராகத் திரும்புகிறது என்றால், நாம் விழித்துக்கொள்ள வேண்டாமா?
    contd..



  7. #1667
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    மண் பானை மகத்துவம்!
    குடிநீரை பிளாஸ்டிக் கேன்களில் நிரப்புவதற்குப் பதிலாக, சில்வர் ஃபில்டர்களில் நிரப்பிவைத்துப் பயன்படுத்தலாம். தண்ணீரைக் காய்ச்சி, ஆறவைத்து அதை மண் பானைகளில் நிரப்பிக் குடித்தால்... குளிர்ச்சிக்குக் குளிர்ச்சி, ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!
    கொழுப்புச் சத்து அதிகம் உள்ள அசைவ உணவுகளில் பிளாஸ்டிக் மிக வேகமாக 'மைக்ரேஷன்’ நடத்தும். அப்போது பிளாஸ்டிக்கின் வேதிப் பொருட்கள் அசைவப் பொருட்களுடன் கலந்து நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறிவிடும்.
    பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்படும் உணவுப் பொருட்கள், குளிர்பானம் போன்றவற்றை முடிந்த வரை தவிர்த்துவிடுங்கள். அவற்றில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், 'மைக்ரேஷன்’ மிக வேகமாக நடக்கும்.

    நன்றி டாக்டர் விகடன்


  8. #1668
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உங்கள் உணவில் விஷம்

    /விகடனின் பார்வையில்/

    இந்தப் பூமியை ஒரு நஞ்சுப்படலம்போல சூழ்ந்திருக்கின்றன பூச்சிக்கொல்லி மருந்துகள். பெயர்தான் 'பூச்சிக்கொல்லி...’, அவை உண்மையில் அழிப்பது சுற்றுச்சூழலைத்தான். இதில் சமீபத்திய வரவு ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள். பூச்சிகளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தத்தில், பூச்சிகளின் தொடர் வெற்றியைச் சகித்துக்கொள்ள முடியாத மனிதன் கண்டுபிடித்த கொடிய நஞ்சு இது.
    தற்போது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் வீரியம் குறைந்தது எண்டோசல்பான். இந்தப் பூச்சிக்கொல்லி ஏற்படுத்திய பேரழிவுக்கு உதாரணம், கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதி. ஒரு காலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருந்த காசர்கோட்டில் மாநில அரசுக்கு சொந்தமான முந்திரித் தோப்புகளில், 1978-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்பான் தெளிக்கப்பட்டது. அதன் பலன், இன்றைக்கும் அந்தப் பகுதியில் மனிதர்களும் கால்நடைகளும் நரம்பு மண்டலப் பாதிப்பு, மனநலப் பாதிப்புகளுடன் நடைபிணங்களாகத் திரிகிறார்கள். வீரியம் குறைந்த எண்டோசல்பானுக்கே இப்படி என்றால், தற்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் அதைவிட பல மடங்கு வீரியமானவை. பசுமைப் புரட்சியின் விளைவாக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, நாடு முழுவதும் அபரிமிதமாக அதிகரித்துவிட்ட ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, பல்வேறு நோய்களாக விகார விஸ்வரூபம் எடுக்கின்றன!
    கோவில்பட்டியில் உள்ள மண்வளப் பரிசோதனை நிலையத்தின் வேளாண் அலுவலரும் பூச்சியியல் வல்லுநருமான நீ.செல்வம் இது தொடர்பாக விவரிப்பவை அனைத்தும் அதிரவைக்கும் உண்மைகள்...
    ''மனித இனம் இன்றைக்கு சந்திக்கும் பெரும்பாலான நோய்களுக்கு பூச்சிக்கொல்லிகளும் ஒரு காரணம். பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி நஞ்சுகள் காற்று, மண், நீரில் எஞ்சிவிடுகின்றன. இந்த எஞ்சிய நஞ்சு, பயிர்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வழியாக நம் உடலுக்குள் சென்று தங்கி மெள்ள மெள்ளக் கொல்லும் விஷமாக மாறுகின்றன. 100 மில்லி பூச்சிக்கொல்லியைக் குடித்தால், உடனே மரணம். அதே பூச்சிக்கொல்லி பல்வேறு காரணிகள் வழியாக, மனித உடலில் கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து 10, 15 ஆண்டுகளில் 100 மில்லி அளவை எட்டும்போது, உடனடி மரணம் நிகழாவிட்டாலும் உள்உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும். சிறுநீரகம், மூளை, எலும்புகள், ரத்தம் எனப் பல இடங்களிலும் இந்த நஞ்சு பரவும்போது, ரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு, ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு என நோய்கள் உருவாகத் தொடங்குகின்றன. இதையெல்லாம்விட தற்போது சந்தையில் கிடைக்கும் ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகளால், மனித இனம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கப்போகிறது!'' என்கிறார்.
    contd..



  9. #1669
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    அது என்ன ஐந்தாம் தலைமுறை?

    தலைமுறை 1:

    ''இரண்டாம் உலகப் போரின் முடிவில், எஞ்சிய குண்டுகளில் இருந்த ரசாயனங்களைக்கொண்டு, உலகின் முதல் பூச்சிக்கொல்லி தயாரிக்கப்பட்டது. டி.டி.டீ (DDT- Dichloro Diphenyl Trichloro ethane) என்ற அந்த மருந்தைக் கண்டுபிடித்தவர் பால் முல்லர். அதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. கொசுவை அழிப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட இதுதான், முதல் தலைமுறை பூச்சிக்கொல்லி. அதாவது அதற்கு முன்பு இந்தப் பூமியில் பூச்சிகளைக் கொல்வதற்கு என செயற்கை வேதி மருந்துகள் எதுவும் இல்லை. இந்த டி.டி.டீ, 'ஆர்கனோ குளோரைட்’ (organo chloride) என்ற வகையைச் சேர்ந்தது. இது பூச்சிகளின் மீது தொடு நஞ்சாகவும், ஊடுருவிப் பாயும் நஞ்சாகவும் செயல்படும். நம்மைப்போல பூச்சிகள் மூக்கின் வழியே சுவாசிக்காது. உடல் முழுக்க இருக்கும் நுண்துளைகள் மூலமாகவே சுவாசிக்கும். அப்படி சுவாசிக்கும்போது, இந்தப் பூச்சிக்கொல்லி விஷம், துளைகள் வழியாக அதன் உடலுக்குள் சென்று பூச்சியை அழிக்கும். இதைத்தான் 'தொடு நஞ்சு’ என்கிறோம். பயிர்களை உண்பதன் மூலம் பூச்சிகளின் உடலுக்குள் நஞ்சு செல்வதை 'ஊடுருவும் நஞ்சு’ என்கிறோம். இந்த இரண்டுவிதமான தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை, பூச்சிகள் சில ஆண்டுகளிலேயே பெற்றுவிட்டன.

    தலைமுறை 2:

    முதல் தலைமுறை பூச்சிக்கொல்லியான டி.டி.டீ-க்கு பூச்சிகள் பெப்பே காட்டியதைத் தொடர்ந்து, அதைவிட வீரியமான புதிய பூச்சிமருந்தைக் கண்டுபிடித்தார்கள். அப்படி அறிமுகமான 'ஆர்கனோ பாஸ்பரஸ்’ (organo phosphorus) வகையைச் சேர்ந்ததுதான் இரண்டாம் தலைமுறை பூச்சிக்கொல்லி. இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அழிக்கும். மனிதனுக்கு இருப்பதுபோல மூளை என்ற அமைப்பு பூச்சிகளுக்குக் கிடையாது. முதுகுத் தண்டுவடத்தில் இருந்துதான் நரம்புகள் உடல் முழுக்கப் பரவும். அதனால் தண்டுவடத்தைத் தாக்கும் வகையில் இந்த இரண்டாம் தலைமுறை நஞ்சுகள் அறிமுகம் ஆயின. இதை எதிர்த்து உயிர் வாழும் ஆற்றலையும், ஒருசில ஆண்டுகளிலேயே பூச்சிகள் பெற்றுவிட்டன!
    contd..



  10. #1670
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    தலைமுறை 3:

    'கார்பமேட்’ (carbamate) என்பது மூன்றாம் தலைமுறை பூச்சிக்கொல்லி வகை. இந்த நஞ்சு பயிர்களில் தெளிக்கப்பட்ட பிறகு, பூச்சிகள் பயிரை உண்ணும்போது, இது பூச்சியின் குடலுக்குள் சென்றுவிடும். அங்கேயே தங்கியிருந்து பூச்சியை சாகடிக்கும். சில வருடங்களில் இதையும் சமாளிக்கும் எதிர்ப்புச் சக்தியை ஏகமாகப் பெற்றுவிட்ட பூச்சிகள், மனிதனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தன!

    தலைமுறை 4:

    பூச்சிகளுக்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்ற மனநிலையில் அறிமுகம் ஆனதுதான் 'சிந்தடிக் பைரித்ராய்ட்ஸ்’ (synthetic pyrethroid) என்ற வகையைச் சேர்ந்த நான்காம் தலைமுறை நஞ்சு. புகை நஞ்சாகச் செயல்படும் இதன் வருகையும் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. நாம் வீடுகளில் உபயோகிக்கும் ஆல் அவுட், குட்நைட் போன்ற கொசு விரட்டிகள் இந்த வகையைச் சேர்ந்தவைதான். உண்மையில் கொசுவத்திகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் மயக்கம் அடையும் கொசுக்களைப் பிடித்து அழிக்க வேண்டும் என்பதுதான் கொசு விரட்டிகளின் அடிப்படைக் கோட்பாடு. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? கொசு விரட்டிகளை எரியவிட்டு, அறைக் கதவுகளை அடைத்துவிட்டு, உள்ளே படுத்து உறங்குகிறோம். இதனால், கொசுக்கள் மயக்கம் அடைகிறதோ இல்லையோ மனிதர்களுக்குள் செல்லும் புகை ஆஸ்துமா, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளை உருவாக்குகிறது. அதிலும் கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் புகையை சுவாசிக்கும்போது, வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கிறது. 1985-ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ஆதிக்கம் செலுத்தின இந்த நான்காம் தலைமுறை நஞ்சுகள். 'நாங்க எதையும் எதிர்த்து நிற்போம்’ என்ற ரீதியில் இதையும் தாண்டி தங்களது ஆதிக்கத்தைத் தொடர்ந்தன பூச்சிகள்!
    contd..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter