Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


 1. #161
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  நாய்கடி:-

  வெறி நாய் எச்சலில் ``ரேபிஸ்'' என்ற மிகச் சிறிய கிருமிகள் மனித நரம்பு மண்டலத்தையும் மூளையினையும் தாக்கி உயிரை போக்கக் கூடிய சக்தி கொண்டது.

  சிகிச்சை:-

  கடித்த இடத்தையும் அதனை சுற்றிலும் சோப்பு போட்டு நன்றாக கழுவவும். ரத்த காயங்கள் இருந்தால் அதன் மீது பற்றுத்துணி வைத்து கட்டு போட்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்று தடுப்பு ஊசி மருந்து போட்டுக் கொள்ளவும்.

  நாயை கால் நடை மருத்துவமனையில் ஒப்படைத்தால் அவை அங்கு கவனிக்கப்பட்டு அவை இறந்தவுடன் மூளையை சோதித்து ``ரேபிஸ்'' தாக்கம் ஏற்பட்டிருந்தால் அதனால் கடிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் அதிக அளவு கொண்ட தடுப்பு ஊசி மருத்துவரால் கொடுக்கப்படும்


  Sponsored Links

 2. #162
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  நாசியிலிருந்து ரத்த ஒழுகல்:-

  வேகமாக மூக்கை சிந்துதல், தும்மல் உண்டாகுதல், அதிக ரத்த அழுத்தம் `ப்ளு' போன்ற காய்ச்சல், அதிக வெப்பமான சூழ்நிலை போன்ற காரணங்களினால் மூக்கின் முன் பக்கத்திலிருந்து விசந்த ரத்தம் ஒழுகும்.

  சிகிச்சை:-

  உடனே உட்கார வைத்து தலையை முன்பக்கமாக குனிந்தவாறு வைக்கவும். வாய் வழியாக சுவாசிக்க சொல்லவும். பேசுவது, விழுங்குவது, இருமல் உண்டாகுவது போன்ற காரியங்களை செய்யக்கூடாது. மூக்கெலும்பின் கீழ்பாகத்தை கீழ்நோக்கி அழுத்தச் சொல்லவும். 10 நிமிடம் பிறகு விட்டு விட்டவும். அடுத்த 2 மணி நேரத்துக்குள் நாசித்துவாரங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்ய வேண்டும். மீண்டு ஒழுகல் ஏற்பட்டால் மருத்துவரை நாடவும்.


 3. #163
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  நீரிழிவு வியாதி :-

  சர்ச்கரை ரத்தத்தில் அதிகமானால்: உலர்ந்த சருமம், வேகமான நாடி, கடின சுவாசம், தாகம், சிறுநீர் கழிக்க அடிக்கடி தோன்றும், குமட்டல், சுவாசம் வார்னிஷ் வாசனை வரும். வயிற்றில் வலி.

  சிகிச்சை:-

  மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். சுயநினைவு இழந்து விட்டால், மீட்பு நிலையில் படுக்க வைக்கவும்.

  சர்க்கரை குறைந்து விட்டால்:-

  வலுவிழந்த, மயக்கமான நிலை, குழப்பம், தோல் வெளுத்து குளிர்ந்து பிசு பிசுப்பாக காணப்படும். வலுவான வேகமான நாடி, மேல் மூச்சு, பசி, நெற்றி, மூக்கின் மேல் முத்து முத்தாக வேர்வைத் துளிகள்- வாசனை அற்ற சுவாசம்.

  சிகிச்சை:-

  உடனே இனிக்கும் திரவம் - ஒரு டம்ளர் தண்ணீரில் 2 தேக்கரண்டி சர்க்கரை அல்லது "ஜாம்'' கரைத்து குடிக்கச் சொல்லவும். அல்லது தேனீரில் அதிக சர்க்கரை கலந்து, ஆரஞ்சு பழச்சாறு போன்றவற்றை சிறிது சிறிதாக விழுங்கச் சொல்லி கொடுக்கவும். கோ கோ கோலா, போன்ற வாயு நிறைந்த பானங்கள் கொடுக்க வேண்டாம்.

  தகவல்:-சி.எஸ்.குமரகுரு முதல் உதவி- விரிவுரையாளர்/பயிற்சியாளர். தமிழ்நாடு செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ்.


 4. #164
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  'இன்னிக்கு... பாவக்கா பொரியலா?... வாழைத்தண்டுக் கூட்டா...? அய்யே... எனக்கு சாப்பாடே வேண்டாம்...'' என்று முகம் சுளிப்பது இன்றைய தலைமுறைக்கு வழக்கமாகிவிட்டது. இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, என வித்தியாசமான சுவைகளையும், சத்துக்களையும் அள்ளித்தருகிற அனைத்துக் காய்கறிகளையும் குழந்தையிலேயே பழக்க மறந்துவிட்டதன் விளைவுதான், இந்த சுளிப்பு.
  வாய்க்கு ருசியான பதார்த்தம் என்றாலே, குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மட்டும்தான் ஞாபகத்தில் இருக்கும். அந்த அளவுக்கு, 'செய்வது சுலபம்’ என்பதால், குக்கரில் சாதத்துடன் உருளைக்கிழங்கை வேகவைத்து, காரம் போட்டுச் செய்து கொடுத்துவிடுகின்றனர். இப்படி, தினமும் ஒரே காய்கறியை மட்டும் உணவில் சேர்ப்பதால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது.
  இயற்கையில் இல்லாதது எதுவுமே இல்லை. தினமும் ஒரு கீரை, மூன்று வகைக் காய்கறிகள், மூன்று விதமான பழங்களைச் சேர்த்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடும்.
  குழந்தைக்கு உணவை ஊட்டத் தொடங்கும் காலத்திலேயே, அறுசுவை உணவைப் பழக்கப்படுத்தி, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு அடித்தளம் அமைத்துவிடலாம்.

  Last edited by chan; 29th Sep 2014 at 01:26 PM.

 5. #165
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  காய்கறிகள்
  பீன்ஸ்

  சத்துக்கள்: வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளன. பொட்டாசியம், துத்தநாகம் ஓரளவும், மிகக்குறைந்த அளவு கலோரியும் இருக்கின்றன.
  பலன்கள்: ரத்தவிருத்திக்கு நல்லது. கர்ப்பிணிகள் பொரியலாகச் செய்து சாப்பிடலாம். மிதமாக அரைவேக்காட்டில் வேகவைத்தால் போதும். மலச்சிக்கல் பிரச்னை தீரும். ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. சிறுநீரகக்கல் அடைப்பு இருப்பவர்கள் சேர்க்க வேண்டாம்.


 6. #166
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  பீர்க்கங்காய்
  சத்துக்கள்: நீர்ச் சத்தும், தாது உப்புகளும் உள்ளன. கலோரி அளவும் குறைவு. மிதமான அளவு புரதம், நார்ச் சத்து உள்ளன.
  பலன்கள்: உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். வெயில் காலத்துக்கு ஏற்றது. மலச்சிக்கல் வராது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இந்தக் காயை லேசாக வேகவைத்து, வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சிறிது புளி, உப்பு சேர்த்துத் தொக்காகச் செய்து சாப்பிடலாம்.

  Last edited by chan; 29th Sep 2014 at 01:28 PM.

 7. #167
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  கேரட்
  சத்துக்கள்: பீட்டாகரோட்டின், நார்ச் சத்து, பாஸ்பரஸ் அதிகம் உள்ளன. பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், கொலின், கால்சியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி சத்துக்கள் ஓரளவும், இரும்புச் சத்து மிகக் குறைந்த அளவும் இருக்கின்றன.
  பலன்கள்: கண், தோல், எலும்பு உறுதிக்கும், ரத்தவிருத்திக்கும் நல்லது. கர்ப்பிணிகள், தாய்மார்கள், குழந்தைகள் என அனைவரும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். துருவி, வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்தும் சாப்பிடலாம். கண் பார்வைக்கு மிகவும் நல்லது. உடல் பருமனாகாமல் காக்கும். கேரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்துச் சாப்பிட்டுவர, உடல் கழிவுகள் வெளியேறும்.


 8. #168
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  வெள்ளரிக்காய்
  சத்துக்கள்: நீர்ச் சத்து நிறைந்தது. மிகக் குறைந்த அளவு கலோரி, ஓரளவு பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம் இருக்கின்றன. சிறிதளவு கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து உள்ளன.
  பலன்கள்: தாகத்தைத் தணிக்கும். சருமப் பிரச்னை நீங்கும். குளுமை தரும்.
  பிஞ்சு வெள்ளரிக்காய் வெயில் காலத்தில் கிடைக்கக்கூடியது. அப்படியே சாப்பிடலாம். தடிமனான வெள்ளரியை சாலட், கூட்டு செய்து சாப்பிடலாம். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள், சர்க்கரை நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.


 9. #169
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  வெண்டைக்காய்
  சத்துக்கள்: அதிக அளவு ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி சத்துக்களும், ஓரளவு புரதமும், குறைந்த அளவு பீட்டாகரோட்டின் மாவுச் சத்தும், பொட்டாசியமும் இருக்கின்றன.
  பலன்கள்: உடல் மற்றும் மூளை செயல்பாட்டுக்கும், ரத்த விருத்திக்கும் மிகவும் நல்லது. எல்லோருக்கும் ஏற்றது. அரைவேக்காட்டில் வேகவைத்துச் சாப்பிடலாம்.


 10. #170
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

  பாகற்காய்
  சத்துக்கள்: 'பாலிபெப்டு டைட்’ எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப் பொருள் நிறைந்துள்ளது. நார்ச் சத்து நிறைந்தது. குறைந்த அளவு பாஸ்பரஸ், புரதம், இரும்பு, கலோரி கால்சியம் உள்ளன.
  பலன்கள்: உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நோய்கள் வராது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப்பூச்சித் தொல்லை நீங்கும். எல்லோருக்கும் ஏற்றது. தேங்காய் சேர்த்துக் கூட்டாகச் செய்து சாப்பிடலாம்.
  வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது, இதனைச் சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடித்துவிடும். மலச்சிக்கல் வராது. அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter