Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree913Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1701
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    31. வேனல் கட்டி
    வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

    32. வேர்க்குரு
    தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

    33. உடல் தளர்ச்சி
    முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

    34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
    நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

    35. தாய்ப்பால் சுரக்க
    அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

    36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
    கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
    37. எரிச்சல் கொப்பளம்

    நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

    38. பித்த நோய்கள்
    கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

    39. கபக்கட்டு
    நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

    40. நெற்றிப்புண்
    நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.


    Sponsored Links

  2. #1702
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    41. மூக்கடைப்பு
    இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

    42. ஞாபக சக்தி
    வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

    43. மாரடைப்பு

    சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

    44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்


    வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

    45. கை சுளுக்கு

    கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

    46. நீரிழிவு
    அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

    47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
    உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

    48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்

    புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

    49. உடல் வலுவலுப்பு
    ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

    50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
    கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
    எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
    நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
    கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
    இயற்கை முறைக்கு மாறுவோம்
    ஆரோக்கியமாக வாழ்வோம் .....!


  3. #1703
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தண்ணீர் அதிகம் குடிப்பதற்கான அறிகுறிகள்!!!

    நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாததாகும்.
    எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்வதோடு மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு உறுப்புகள் பாதுகாப்பட்டு நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடலின் வெப்பமும் சீராக இருக்கும்.
    மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீராக உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது.
    எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆகவே தான், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைத்து மருத்துவர்களும் தண்ணீரை அதிகம் பருக வேண்டும் என்று சொல்கின்றனர்.
    அதுமட்டுமின்றி, பல ஆய்வுகளும், உடலின் செயல்பாடுகள் தங்கு தடையின்றி நடைபெற வேண்டுமெனில் ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரை பருக வேண்டும் என்றும் சொல்கிறது.
    சரி, இப்போது உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைப் பார்ப்போம்.
    * உடலில் தண்ணீர் குறைந்த அளவில் இருந்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். தாகம் என்பது உடலில் தண்ணீர் குறைபாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று.
    * வாயானது அடிக்கடி வறட்சியடைந்தால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.
    * சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வந்தால் உடலில் சரியான அளவில் தண்ணீர் உள்ளது என்று அர்த்தம். அதுவே சிறுநீரானது நல்ல அடர் நிறத்தில் கடுமையான துர்நாற்றத்துடன் வெளிவந்தால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
    * அழும் போது, கண்களில் இருந்து போதிய தண்ணீர் வராவிட்டால் உடல் தண்ணீரின்றி வறட்சியுடன் உள்ளது என்றும் அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம்.
    * உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் உடலானது நன்கு செயல்படுவதற்கு தேவையான சக்தியானது இல்லாமல் சோர்வுடன் இருக்கும். இவ்வாறு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது அதிகம் குடிக்க வேண்டும் என்று பொருள்.
    * சிலருக்கு உடல் வறட்சி அதிகமாகி, தாகத்தையும் தாண்டி அதிகப்படியான பசியானது ஏற்படும். இவ்வாறு அடிக்கடி பசி உணர்வு ஏற்பட்டால் அது உணவு உண்பதற்கான அறிகுறி அல்ல.
    மாறாக அது உடலில் வறட்சி உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆகவே இந்நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.
    * உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு தான் சருமம். இந்த சருமத்திற்கு அதிகப்படியான தண்ணீரானது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், அது சருமத்தில் வறட்சி அல்லது செதில் செதிலான சருமத்தை ஏற்படுத்தி தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று சொல்லும்.
    * உடலின் வியர்வையானது தண்ணீரால் உருவானது. ஆனால் உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் வியர்வையானது வற்றிவிடும். இதனால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படுவது தடைபட்டு சருமத்தை மட்டுமின்றி உடலையும் ஆரோக்கியமற்றதாக்கிவிடும்.
    * உடலில் வறட்சி இருந்தால் தலைவலியுடன் மயக்கமும் உருவாகும். எனவே தேவையில்லாமல் இத்தகைய உணர்வுகள் ஏற்பட்டால் தண்ணீரை அதிகம் பருக ஆரம்பியுங்கள்.
    * 70 சதவிகிதம் தண்ணீரால் ஆன தசைகளில் தண்ணீர் குறைவாக இருந்தால் தசைப்பிடிப்பு, தசை வலிகள் போன்றவை உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது செய்த பின்னரோ ஏற்படும்.
    * இதயம் கூட தண்ணீரால் ஆனது தான். இத்தகைய இதயத்திற்கு போதிய நீரானது இரத்த ஓட்டத்தின் மூலம் கிடைக்கும்.
    * ஆனால் இரத்தத்திற்கே போதிய தண்ணீரானது கிடைக்காவிட்டால், இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவும் குறைந்து அடிக்கடி படபடப்பை ஏற்படுத்திவிடும். எனவே அடிக்கடி இதய படபடப்பு ஏற்படுமாயின் உடலில் போதிய நீர் இல்லை என்று அர்த்தம்.
    * உடலில் நீர் வறட்சி இருந்தால் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையானது குறைந்துவிடும். மேலும் இதனால் சருமம் முதுமை தோற்றத்தை அடைந்தவாறு வெளிப்படுத்தும். ஆகவே இந்த மாதிரியான நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.
    * மலச்சிக்கல் ஏற்படுவதும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே. ஏனெனில் உடலில் போதிய நீர் இல்லாவிட்டால் குடலானது செரிமானமடைந்த உணவை எளிதாக வெளியேற்ற முடியாமல் மலத்தை இறுக்கமடையச் செய்துவிடும்.
    * உடலின் வெப்பநிலையானது போதிய அளவில் இல்லாமல் அதிகப்படியான வெப்பத்துடன் இருந்தால் அது உடலில் போதிய தண்ணீர் இல்லாததற்கான அறிகுறிகளில் ஒன்றாகும். ஆகவே உடலானது அதிகப்படியான வெப்பத்தில் இருந்தால் தண்ணீர் அதிகம் பருகினால் சரியாகிவிடும்.
    * உடலில் நீர் வறட்சி இருந்தால் ஒற்றை தலைவலி ஏற்படும். எனவே அடிக்கடி ஒற்றை தலைவலி வந்தால் தண்ணீர் அதிகம் பருகுங்கள்.


  4. #1704
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....!

    நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.
    இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
    இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.
    1999-ல் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.
    வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட (ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
    இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.
    சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.
    விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.
    பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது.


    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-29.jpg  
    sarjana ul likes this.

  5. #1705
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இலைகளே மருந்தாக

    யூகலிப்டஸின் இலைகள் தலைவலி, உடம்புவலிக்கும், மற்றும் சிறந்த பூச்சிக் கொல்லி மருந்தாகவும், சரும நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
    வில்வம் இலை செரிமானத்திறன் தருகிறது. வாயுவை வெளியேற்றுவதில் உதவக்கூடியது. இதனால் வயிற்று மந்தம் தணித்து விடுகிறது. இது இதயத்திற்கும் மூளைக்கும் நிம்மதி அளிக்கிறது.
    நாவல் பழம் பசி எடுக்க வைக்கும். இரைப்பை, மற்றும் கல்லீரலுக்கு பலம் தரக்கூடியது. வயிற்றுப்போக்குகளை நிறுத்துவதற்கும் பயன் படுகிறது. இதன் விதைகள் சர்க்கரை நோயைக்கட்டுப்படுத்த வல்லவை. இலைகளின் பொடி பற்களுக்குப் பயன் தரக்கூடியது. நாவல் இலையின் தூளை மூன்றிலிருந்து 5 கிராம் வரையிலான அளவில் பயன்படுத்த வேண்டும்.
    கண்வலி நீங்க புதிதாக பறித்த புளியம்பூவை சுத்தமான நீரில் கழுவி மை போல் அரைத்து அதை கண்ணின் மீது வைத்து துணியால் கட்டிக் கொண்டு இரவு படுத்து காலையில் கட்டை அவிழ்த்தால் கண்வலி உடனே குறையும்.

    sarjana ul likes this.

  6. #1706
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    புண்கள் குணமாக

    1. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
    2. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
    3. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
    4. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
    5. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்

    sarjana ul likes this.

  7. #1707
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இரத்த விருத்திக்கு வெந்தயக்கீரை

    வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு தொல்லை போகும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்
    வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.


    வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து லேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

    வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் வைட்டமின் ஏ சக்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும். வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது.


    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg  
    sarjana ul likes this.

  8. #1708
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வயிற்றுக் கோளாறுகளுக்கு கை கண்ட மருந்து கறிவேப்பிலை

    கறிவேப்பிலை மரத்தின் அத்தனை பாகங்களும் மருத்துவப் பயனும் மணமும் வாய்ந்தவை ஆகும். இதன் பாகங்கள் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருவதாக அமைந்துள்ளன. இதன் இலை வயிற்றுக் கோளாறுகளுக்கு கை கண்ட மருந்தாகிறது.
    புரோட்டோசோவா என்னும் கிருமிகளை கொள்வதில் (ஆன்டி புரோட்டோசோவல்) முதலிடம் வகிக்கின்றது. இக்கிருமிகள் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் நுண்கிருமிகள் ஆகும். மேலும் வயிற்றுக்கடுப்பை போக்கக்கூடிய ஒரு மருந்தாக (ஆன்டி ஸ்பேஸ்மோலிடிக்) கறிவேப்பிலை பயன்படுகிறது.


    கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பதால் பசியைத் தூண்டுவதோடு சீரான செரிமானத்துக்கும் துணையாகின்றது. நோய்க்கிருமிகள் எதுவாய் இருப்பினும் கறிவேப்பிலை எதிர்த்து நிற்க வல்லது. சீதபேதியைக் குணப்படுத்துவதில் (ஆன்டி டிசென்டரிக்) சிறந்தது. கறிவேப்பிலை மேற்பூச்சாகப் பயன்படுத்தும் போது வேர்க்குரு, கொப்புளங்கள் போன்ற பல தோல் நோய்களையும் போக்கும் திறன் வாய்ந்தது.

    மலத்தை இளக்கக் கூடியது (லேக்ஸ்சேட்டிவ்), குளுமை தன்மை வாய்ந்தது (ரெப்ரிஜரண்ட்), வலிமை ஊட்டக் கூடியது (டானிக்), பித்தம், கபம், வீக்கம் ரத்த பித்தம் இவற்றை போக்கக்கூடியது. மூளைக்கு பலத்தை தருவதோடு ஞாபக சக்தியையும் வளர்க்கும் குணமுடையது.

    கறிவேப்பிலை விஷக்கடிகளுக்கும், மருந்தாகும் என்பதால் வண்டுக்கடி, தேள்கடி, பாம்புக்கடி மற்றும் விலங்குகள் கடித்ததால் வந்த விஷத்துக்கு இதை மேற் பூச்சாகவும் உள்ளுக்கும் பயன்படுத்தலாம்.

    இலையை உள்ளுக்கு சாப்பிட வாந்தியை நிறுத்தும் (ஆன்டி எமட்டிக்) கறிவேப்பிலையின் பட்டையும் வேர்ப்பகுதியும் உடலின் உள்ளுறுப்புகளைத் தூண்டும்படியாக (ஸ்டிமுலண்ட்) மருத்துவர்கள் பயன்படுத்துவர். கறிவேப்பிலையின் குச்சிகள் ஆலங்குச்சி, கருவேலங்குச்சி போல பல் துலக்கப் பயன்படுகின்றது.

    சோர்வு, திசுக்களின் அழிவு இவற்றை போக்குவதில் கறிவேப்பிலையின் அனைத்து பாகங்களும் சிறந்து விளங்குகின்றன. குறிப்பாக திசுக்களின் மாற்றம் (அத்திரோ செலிரோஸிஸ்), சர்க்கரை நோய் (டையாபெட்டிஸ்), வாதசுரம் (ருமாட்டாய்ட் ஆர்த்ரிட்டிஸ்) போன்ற நோய்களால் ஏற்படும் தீங்குகளை எதிர்த்து நிற்கக்கூடியது.

    இதிலுள்ள `முராயாசினின்' என்னும் வேதிப்பொருள் நோய் நீக்கும் மருந்தாகவும் (ஆன்டிபயாடிக்), நோய்க்கிருமி நாசினியாக (ஆன்டி பேக்டீரியல்), பூஞ்சக்காளான் கொல்லியாக (ஆன்டிஃபங்கல்) பயன்படுகிறது. கறிவேப்பிலையின் இலைகளில் மிகுதியாக "கார்பஸோல் ஆல்கலாய்ட்ஸ்'' உள்ளது. மேலும் கௌமாரின் குளூகோசைட்ஸ், "ஸ்கோப்போலின்'' ஆகிய மருத்துவப் பொருள்களும் அடங்கியுள்ளன.

    இலையில் "பீட்டா கரோட்டின்'' என்னும் சத்துப் பொருள் செரிந்துள்ளது. இதை வேகவைக்காமலோ, பொரிக்காமலோ சாப்பிடும் போது நமக்கு "பீட்டர் கரோட்டின்'' சத்து முழுமையாக கிடைக்கிறது. "பீட்டா கரோட்டின்'' தான் விட்டமின் `ஏ' சத்து கண்கள், பற்கள், எலும்புகள், தோல் ஆகியவற்றுக்கு ஊட்டச்சத்தாக அமைகிறது.
    contd..


    sarjana ul likes this.

  9. #1709
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி


    கறிவேம்பின் பட்டையினின்று எடுக்கப்படும் சத்தானது வீக்கத்தைக் கரைக்கும் (ஆன்டி இன்ஃப்ளமேட்டர்) தன்மை உடையது. கறிவேம்பின் பழங்கள் உணவாக உண்ணக்கூடியவை, சுவையுள்ளவையும் கூட பழங்களும் விட்டமின் `ஏ' மற்றும் சுண்ணாம்பு (கால்சியம்) சத்துக்களை உள்ளடக்கியது.

    பழங்களின் சதைப் பகுதி 64.9% ஈரப்பதம் உடையது. 9.76% சர்க்கரை சத்து உள்ளடக்கியது. 13.35 மி.கி. அளவு விட்டமின் `சி' சத்தைப் பெற்றுள்ளது. 100 கிராம் பழச்சதையுள்ள 1.97 கிராம் புரதமும், 082 கிராம் பாஸ்பரஸ்ஸூம், 0.811 கிராம் பொட்டாசியமும், 0.166 கிராம் கால்சியமும் 0.216 கிராம் மெக்னீஷியமும் 007 கிராம் இரும்புச் சத்தும் அடங்கியுள்ளன.

    கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி இத்துடன் போதிய மிளகு, உப்பு, சீரகம், சுக்கு போன்றவற்றையும் சேர்த்துக் பொடித்து வைத்துக் கொண்டு குழம்பு, ரசம் ஆகியவற்றுக்கு முன்பாக சுடுசோற்றோடு சேர்த்து சிறிது நல்லெண்ணெய்யோ, நெய்யோ கலந்து உண்ண வயிற்று மந்தம், மந்தபேதி, மலக்கட்டு, நீரிழிவு ஆகியன விலகும்.


    20 கிராம் கறிவேப்பிலையுடன் 3 கிராம் சீரகம், 1 கிராம் வெந்தயம் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் மோரில் கலந்து சிலநாட்கள் குடித்துவர உஷ்ணபித்தம், கருப்பைச் சூடு குணமாகும். கருவேம்பிலுள்ள "கார்பஸோல் ஆல்களலாய்குகள்'' கருமுட்டை உற்பத்தியைத் தூண்டி பிள்ளைப்பேற்றுக்கும் துணை நிற்கின்றன.


    ஐந்தாறு கறிவேப்பிலை இலையோடு வயதுக்குத் தக்கபடி 1 முதல் 3 மிளகு வரை சேர்த்து அரைத்து வெதுவெதுப்பான நீரில் கரைத்து குழந்தைகளை நீராட்டிய பின் உள்ளுக்குக் கொடுக்க குழந்தைகளுக்கு மந்தம் நீங்கி பசியுண்டாகும்.


    கறிவேப்பிலை ஈர்க்கோடு சிறிது முலைப்பால் சேர்த்து நசுக்கிப் பிழிந்து சிறிது இலவங்கமும் திப்பிலியும் சேர்த்துக் கொடுக்க வாந்தி நிற்கும். பசி உண்டாகும்.


    கறிவேப்பிலையோடு தேங்காய், உப்பு, புளி, பருப்பு சேர்த்து துவையலாக அரைத்து உணவோடு சேர்த்து உண்ண வயிற்றிலுள்ள வாயு வெளியேறும், பித்தம் போகும் பசி மிகும்.


    கறிவேப்பிலையோடு நீர் சேர்த்து சங்கு கொண்டு இழைத்து முகப்பருக்கள் மீது பூசிவர பருக்கள் நாளடைவில் மறையும். இதையே சிறிது மோரில் கலந்து குடிக்க வயிற்றுக்கடுப்பு குணமாவதுடன் சீதபேதியும் குணமாகும்.


    ஒருபங்கு கறிவேப்பிலையுடன் கால் பங்கு அரிசி திப்பிலி சேர்த்து பொடித்து வைத்துக் கொண்டு வேலைக்கு இரண்டு வெருகடி அளவு (சுமார் 5 கிராம்) என சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குணமாகும். சர்க்கரை நோய்க்கு இது ஒரு துணை மருந்தாக அமையும்


    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-images-16-.jpg  
    sarjana ul likes this.

  10. #1710
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,225

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கேன்சரை கட்டு படுத்தும் கடு அத்தா பழம் பற்றிய தகவல் !!!


    இந்த பழம் பெரும் அளவு நமது அண்டை நாடான ஸ்ரீ லங்காவில் கிடைகிறது !!! (Sour sop fruit )


    நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்' என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்ட*த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள*து. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.

    பல* வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது பெரும்பாலான உறுப்புகளை தாக்குவதாக உள்ள*து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட* நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.

    புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் இயற்கையான உணவுப் பொருட்களிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் கொடுத்துள்ளான். அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்த புற்றுநோய் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக* உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக் காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.

    சகோதர நாடான இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான* பழமாக பயன்படுத்தப்படுகிறது. ஏன், நம் நாட்டில் கேரளாவிலும் "ஆத்தச்சக்கா" (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை.

    இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது. அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.



    இதன் பலனை அனைவரும் அடைந்துக் கொள்ளவேண்டும் என்ப*தற்காக, இந்தப் பழம் எந்த நாடுகளில்/மொழிகளில், என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது என்ற விபரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    இலங்கை: "காட்டு ஆத்தா" (சில வட்டாரங்களில் "அன்னமுன்னா பழம்" அல்லது "அண்ணவண்ணா பழம்" என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்)
    ஆங்கிலம்: "Soursop", "Prickly Custard Apple", "Soursapi"
    மலையாளம்: "Aatha Chakka"
    பிரெஞ்ச்: "Corossol", "Cachiman Epineux"
    அரபி: "سورسوب"
    ஸ்பானிஷ்: "Guanábana ", "Anona"
    ஜெர்மன்: "Sauersack", "Stachelannone", "Flashendaum"
    இந்தோனேஷியா: "Sirsak" & "nangka landak"
    பிரேசில்: "Graviola"
    மலேஷியா: "Durian Belanda"
    கிழக்கு மலேஷியா: "Lampun"
    தென் வியட்நாம்: "Mãng cầu Xiêm"
    வட வியட்நாம்: "Quả Na"
    கம்போடியா: "Tearb Barung" ("Western Custard-apple fruit")
    போர்த்துகல்: "Curassol", "Graviola



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg   Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg  
    Last edited by chan; 18th Jan 2015 at 05:10 PM.
    sarjana ul likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter