Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree913Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1711
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வலிப்பு நோய் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

    நரம்பு செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளியிடும் போது ஏற்படும் விளைவே வலிப்பு நோய் ஆகும். இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ் (fits) மற்றும் எபிலெப்ஸி (epilepsy) என்றும் அழைக்கலாம்.

    இந்த நோய்க்கு வயது வரம்பு கிடையது. குழந்தை முதல் முதியோர் வரை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.

    வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:

    தவறாமல் மருந்து சாப்பிட்டால் வலிப்பு இல்லாமல் இருக்கலாம். பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லலாம்.

    விளையாடலாம், உடற்பயிற்சி, தியானம் மற்றும் பயணம் செய்யலாம்.

    திருமணம் செய்து கொள்ளலாம், உடலுறவு கொள்ளலாம், சாதாரணமாக குழந்தைகளைப் பெறலாம் உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாம்.

    நல்ல உணவு, உடற்பயிற்சி, தியானம் மற்றும் சிந்தனை உங்களை நல்வழிப்படுத்தும். நீங்கள் மற்றவர்களைப் போல் நன்கு வாழலாம்.

    வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்யக் கூடாதவை:

    உங்கள் மருத்துவரை கலந்து அலோசிக்காமல் மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவோ அல்லது வேறு மருந்துக்கு மாறவோ கூடாது. நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும்.

    நீர்நிலைகளில் நீராடுவது. இவ்வகையினருக்கு இது ஆபத்தான ஒன்று.

    தேவையற்ற மன உளைச்சல் கூடாது.

    மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் வலிப்பு வருவதை தூண்டலாம்.

    நகரும், அசையும் உயிருக்கு ஆபத்தான இயந்திரங்கள் கொண்டு வேலை செய்யக் கூடாது. அதிக நேரம் தொலைக்காட்சி (TV) பார்க்கக் கூடாது.


    Sponsored Links

  2. #1712
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கூர்மையான அறிவாற்றல் வேண்டுமா? இந்த எளிய டிப்ஸ்களை முயற்சி செய்யுங்கள்.

    இந்த உலகம் எப்படிப்பட்டவை என்பதையும், அதில் சிறப்பாக எப்படி வாழ முடியும் என்பதையும் கண்டுபிடிக்க உதவும் ஒரே கருவி உங்களது மூளை மட்டுமே. அதனால் அதனை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். உங்கள் அறிவாற்றல் கூர்மையாக இருந்தால், நீங்கள் கூடுதலாக சாதிக்கலாம்.

    ஒரு வேளை, சமீப காலமாக நீங்கள் சில விஷயங்களை மறந்து போகிறீர்கள் (மோசமான நினைவாற்றல்) என்றால் அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்கள் என்றால், உங்கள் மூளையின் நலனை எண்ணி நீங்கள் வருத்தப்பட வேண்டிய நேரம் இது.

    கூர்மையான அறிவாற்றலை பெறுவதற்கான டிப்ஸ் ஏதேனும் உள்ளதா? ஆம், கண்டிப்பாக இருக்கிறது. அதனைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். உங்கள் புத்தி கூர்மை வளர்வதற்கு உங்கள் மூளைக்கு சரியான காரணத்தை கொடுக்க வேண்டும். கண்டிப்பாக அது வளர ஆரம்பிக்கும். மூளைக்கு சில கடினமான வேலைகளை நீங்கள் கொடுக்க வேண்டும்.

    அது பதிலுக்கு அந்த வேலையை உங்களுக்கு முடித்து கொடுக்கும். பயன்படுத்தக்கூடிய உண்மையான சேவகனே உங்கள் மூளை. அதனை பயன்படுத்த தவறி விட்டால், அதற்கு நீங்கள் சேவகனாகி விடுவீர்கள். சரி, மூளையைத் தீட்டுவதற்கான சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம், வாங்க!

    புது மனிதர்களை சந்தியுங்கள் புதிதாக யாரையாவது சந்திக்கும் போது உள்ளீடுகளை உருவாக்குவதில், கோப்புகளை பராமரிப்பதில் மற்றும் பார்ப்பவரின் விவரத்தை பதிவதில் உங்கள் மூளை பிஸியாக இருக்கும்.

    பல்வேறு பின்னணியிலிருந்து புதிது புதிதான மனிதர்களை சந்திக்கும் போது, உங்கள் மூளைக்கு அதிகமாக வேலை கொடுப்பீர்கள். மூளையின் வளர்ச்சிக்கு இது நல்லதாகும்.

    தியானம் உதவும் தியானம் செய்வதால் மூளைக்கு சில பயன்கள் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதனால் உங்கள் மனது அமைதியாகும். தியானம் மூலம் புத்துயிர் அளிக்கும் போது, புதிய ஆற்றல்களை தேர்ந்தெடுக்கும் நிலையை மூளை அடையும்.

    புதிய ஆற்றல்களின் மூலமாக உங்கள் மூளைக்கு சவாலிடுங்கள் புதிய ஆற்றல், மொழி அல்லது கலையை கற்றுக் கொள்ளும் போது உங்கள் மூளைக்கு நீங்கள் சவால் அளிக்கிறீர்கள்.

    மூளைக்கு சவால் அளிக்கும் போது, புதிய நரம்பணுக்களையும் பாதைகளையும் உருவாக்க அது வலியுறுத்தப்படும். புதிதாக கற்பதன் மூலம், மூளையின் அறிவாற்றல் அளவிற்கு தொடர்ச்சியாக சவால் விடுவதால் உங்கள் மூளை மிக கூர்மையாக மாறும். புத்தியை கூர்மையாக்கும் டிப்ஸ்களில் இதுவும் ஒன்றாகும்.

    உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன் இருங்கள் காதல் இல்லையென்றால் வாழ்க்கை அதன் அர்த்தத்தை இழந்து விடும். உங்கள் வாழ்க்கையில் அர்த்தமுள்ள உறவுகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன் இருந்தால் உங்கள் மன அழுத்தம் நீங்கும்.

    உங்கள் வாழ்க்கை துணை அல்லது குழந்தைகளுடன் நீங்கள் செலவழிக்கும் ஒரு நொடியும் மனதில் பதிந்து கொள்ளும் அழகான தருணமாகும். ஆரோக்கியமான உணர்ச்சிகள் வாழ்க்கைக்கு முக்கியமாகும். மூளையை கூர்மையாக்கும் டிப்ஸ்களில் இதுவும் ஒன்றாகும்.

    உடற்பயிற்சிகள் உங்கள் உடல் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும் என்றால் உங்கள் மூளையும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். எப்போதும் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியமாகும். சீரான முறையில் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். மூளையை கூர்மையாக்கும் டிப்ஸ்களில் இதுவும் ஒன்றாகும்.

    மூளைக்கு தீனி போடா மறந்து விடாதீர்கள் மூளைக்கு நல்லது என கருதப்படும் உணவுகளை அதிகமாக உண்ணுங்கள். கூர்மையான மூளையை பெறுவதற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ணுங்கள். மூளைக்கு தேவையான ஆரோக்கியமான உணவுகளை சீரான முறையில் உண்ண மறந்து விடாதீர்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கூர்மையான மூளைக்கு தேவையான உணவுகளை கண்டிப்பாக உண்ண வேண்டும்.

    போதிய தூக்கம் தூக்கத்தின் போது உங்கள் மூளை பிசியாகவே இருக்கும். ஆனால் அதன் பாகங்களோ தூக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஓய்வு எடுக்க தொடங்கும். முறையற்ற தூக்க அமைப்பினால் மூளையின் ஒட்டுமொத்த செயல்பாடும் பாதிக்கப்படும். கூர்மையான மூளையை பெறுவதற்கு மேற்கூறிய டிப்ஸ்களை பின்பற்றவும்.


  3. #1713
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    குழந்தை ஆரோக்கிய டிப்ஸ்

    • குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால் மாசிக்காயை அரைத்து, தாய்ப்பால் அல்லது தண்ணீர் சேர்த்துப் பூசி வந்தால் குணமாகும்.

    குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், காய்ந்த திராட்சைப் பழத்தை பசும்பால் அல்லது தண்ணீரில் ஊறவையுங்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு பழத்தைப் பிழிந்து அதன் சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தால், மலம் தாராளமாக போக ஆரம்பிக்கும்.

    • குழந்தைகள் சிலநேரம் உணவு ஜீரணமாகாமல் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில், நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் சதக்குப்பையை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால் பிரச்சனை சரியாகும்.

    • சிறுநீர் கழிக்க குழந்தைகள் சிரமப்பட்டால்... வெள்ளரி விதைகளை நீர் விட்டு அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் அடுத்த சில நிமிடங்களில் சிரமமின்றி சிறுநீர் கழியும். மேலும் சுடுநீரை பாட்டிலில் நிரப்பி வயிற்றில் ஒத்தடம் கொடுத்தாலும் பலன் கிடைக்கும்.

    • குழந்தைகள் சிலநேரங்களில் காரணமில்லாமல் அழும். அது வயிற்று வலியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

    அந்த மாதிரி நேரங்களில் நாலைந்து புதினா இலைகளை எடுத்து வாணலியில் வெறுமனே (எண்ணெய் ஊற்றாமல்) வதக்கி, அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து, பாதியாக வற்றியதும் ஒரு பாலாடை அளவு குடிக்க கொடுத்தால் வயிறுவலியாக இருக்கும்பட்சத்தில் அது சரியாகிவிடும்.

    • மழைக்காலத்தில், குழந்தைகளுக்கு ஜலதோஷம், சளி பிரச்சனைகள் வந்து அடிக்கடி தொல்லை கொடுக்கும். மூக்கடைப்பு, ஜலதோஷம், சளி வந்தால்... நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய ஜாதிக்காயை நீர் விட்டு அரைத்து கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு இளம்சூட்டோடு மூக்கின்மேல் பற்று போட்டால் மூக்கு வடிதல் நிற்பதோடு அடைப்பு விலகும்


  4. #1714
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடல் ஆரோக்கியத்தை தரும் உலோகங்கள்

    தங்கம்

    தங்கம் உடல் சிவப்பு நிறம் பெற தங்கத்தை வசம்புடன் சேர்த்து அரைத்து உண்ணும் வழக்கம் இன்றும் காணப்படுகிறது.
    ஆயுர்வேகத்தில் “தங்கபஸ்பம்” என்னும் மருந்து தேனில் குழைத்து உண்ணத் தரப்படுகிறது. உடலை வனப்போடும் இளமையோடும் வைக்க தங்கச்சத்து பயன்படுகிறது. தங்கத் தட்டில் சூடான சாதமும் நெய்யும் இட்டு உண்பதால் உடலுக்கு எவ்வளவு தங்கம் வேண்டுமோ அவ்வளவு தங்கம் (மிகமிகச் சிறிய அளவு) உடலில் சேரும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

    வெள்ளி

    வெள்ளி உடலுக்குப் பொலிவு மற்றும் அழகைத் தருகிறது. தாது புஷ்டியைத் தருகிறது. வெள்ளித் தட்டு, வெள்ளிக் கரண்டி அகியவற்றை தினமும் உபயோகிப்பதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வெள்ளி உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கும். குடலில் தோன்றும் அயர்ச்சியை நீக்கி, குடலை நன்றாக இயங்க வைப்பதிலும் வெள்ளி முக்கியப் பங்கு வகிக்கிறது.

    தாமிரம்-செம்பு

    இந்து மத ஆலயங்களில் செம்புப் பாத்திரங்களில் வைக்கப்பட்ட நீர், பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்த நீர் மிகவும் மருத்துவச் சக்தி நிறைந்ததாகும்.

    செம்புப் பாத்திரத்திலுள்ள நீர் தேகத்தின் ஆரோக்கியத்திற்கு நலல்து. வாத நோய்கள் கண்டவர்கள் செம்பு வளையலை கைகளில் இட்டுக் கொள்வது சிறந்த பலனளிக்கும். இருப்பினும் செம்புப் பாத்திரத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் ஊற்றி வைத்த நீரைப் பருகலாகாது. செம்புப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரும் துளசியும் சிறந்த கிருமி நாசினியாகும். இது உடலிலுள்ள விஷத்தன்மையைப் போக்கடிக்கும்.

    இரும்பு

    இரும்புச் சட்டியில் வைத்த சில உணவுப் பொருட்கள் சில நோய்களைக் குணமாக்குகிறது. இரும்புக் கல் தோசை வாயுத் தொல்லைகளைப் போக்ககிறது. அது போல் இரும்பு வாணலியில் வைத்த ரசம் சளி, இருமல் போன்றவற்றைக் குணமாக்குகிறது. இரும்புச் சட்டி புளியிலுள்ள விஷப்பொருட்களை ஈர்த்துக் கொள்கிறது.

    மண்

    மண் பாத்திரத்தில் சமைப்பது மிகவும் இயற்கையும், சத்துக்களும் நிறைந்ததாகும். மண் பாத்திரத்தில் சமைத்த உணவில் உடலுக்குத் தேவையான கந்தகச் சத்து கிடைக்கும். காரீயக் குறைபாட்டால் கால்களில் உண்டாகும் வெடிப்புகள் மறையும். மண் குளிர்ச்சி பெறுவதோடு, எல்லா ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும்.


  5. #1715
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கும், உண்ணும் உணவிற்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா?

    மனிதனின் மனதிற்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அக்கால மருத்துவர்கள் முதல் இக்கால மருத்துவர்கள் வரை கூறி வருகிறார்கள். ஒருவரது மனதில் கவலை தோன்றும் போது, அவரது உடல் தளர்ந்து போவதும், கோபத்தில் இருக்கும்போது இதயம் படபடப்பதும் மன உணர்ச்சியின் அடிப்டையில் உடலில் தோன்றும் விளைவுகளாகும். அதிக அச்சம் ஏற்படுவதால் இதயத்துடிப்பு அதிகரித்தல், கைகால்கள் இழுத்துக் கொள்ளுதல், சிலருக்கு அதிர்ச்சியில் இதயமே நின்றுபோவது கூட நிகழ்கிறது. மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கும், உண்ணும் உணவிற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக அறிகிறோம். அதிக காரம், இனிப்பு உணவு உண்பவர்கள் வீரிய குணம்டி (ராட்சச) கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதிக கசப்பு, பளிப்பு உண்பவர்கள் சோம்பல் கொண்ட மனம் (தாமச) கொண்டவர்களாக இருக்கிறார்கள். எல்லா சுவைகளையும் மிதமாக உண்பவர்கள் மன அமைதியுடன் (சாத்வீக) வாழ்பவர்களாக இருக்கிறார்கள். ஆக ஒருவர் தன் மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கு ஏற்ப உணவை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் உடற்பயிற்சி, நாடிசுத்தி, பிராணாயாமம், தியானம் போன்ற பயிற்சிகளைச் செய்வதால் தீய உணர்ச்சிகள் அடங்கி மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் பெறலாம்.


  6. #1716
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சரும நோயை போக்கும் ரோஜாப்பூ மருத்துவம்!

    ரோஜாப்பூ ஒரு மருத்துவப் பொருளாகவும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது என்ற விஷயம் நம்மில் பலருக்குத் தெரியாது. சாதாரண சீதபேதிக்கு ரோஜாப்பூ நல்ல மருந்து. ரோஜா மலரின் இதழ்களை ஆய்ந்து வேளைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வந்தால் இரண்டு நாட்களில் சீதபேதி முற்றிலுமாக குணமாகிவிடும். ரோஜாப்பூவினால் தயாரிக்கப்படும் “குல்கந்து” என்ற திரவத்தையும் சீதபேதிக்கு சாப்பிடுவது உண்டு. மிகவும் இனிய சுவையுடைய குல்கந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த விருத்தியும், இரத்த சுத்தியும் ஏற்படும். மலச்சிக்கல் அடியோடு அகலும். இது உடல் போஷாக்குக்கு ஒரு டானிக்காகவும் பயன்படுகிறது. ரோஜா இதழ்களைத் தேவையான அளவு சேகரித்து சம அளவு பாசிப் பயிற்றை அத்துடன் சேர்த்து, நாலைந்து பூலாங் கிழங்கையும் உடன்வைத்து விழுதாக அரைத்து எடுத்தக் கொள்ளவேண்டும். அவ்வாறு அரைக்கப்பட்ட விழுதை உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து, பிறகு இளம் சூட்டு நிரில் தேய்த்துக் குளித்தால், உடல் கவர்ச்சிகரமான நிறம் பெறும். சரும நோய்கள் நீங்கும். அன்றாடம் குளிக்கும்போது சோப்புக்கு பதில் இதை உடலில் தேய்த்து குளித்து வந்தால், உடல் சருமம் பட்டு போன்று மிருதுவாக இருக்கும்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-rose.jpg  

  7. #1717
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வீட்டில் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய 12 பொருட்கள்!!!

    சுத்தம் என்பது எவ்வளவு முக்கியமானது என உங்களுக்கு நாங்கள் சொல்லத் தேவையில்லை. நாம் நம்மை, நம்மை சுற்றியுள்ள பொருட்களை, இடங்களை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என சிறு வயதில் நம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கற்றுக் கொடுத்திருப்பார்கள். ஆனால் எத்தனை பேர் இதனை கடைப்பிடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

    சுத்தமாக இருப்பது உங்களை மட்டும் அல்லாது உங்களை சார்ந்தவர்களையும் உங்கள் சுற்றுச்சூழலையும் கூட ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். சும்மாவா சொன்னார்கள் "சுத்தம் சோறு போடும்" என்று! சுத்தமாக இருப்பது சரி தான். ஆனால் நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைப்பது அவ்வளவு லேசான விஷயம் அல்ல.

    சுற்றுப்புறம் என இங்கே நாங்கள் குறிப்பிடுவது நம் வீட்டை தான். வீட்டில் இருந்து தானே சுற்றுப்புறம் தொடங்குகிறது. ஆனால் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது சுலபம் இல்லை. முடிவே இல்லாத வேலைகளே அவைகள்.

    பொதுவாக சமையலறை தரை, மேடை மற்றும் கழிவறைகள் போன்றவற்றை நாம் சுத்தப்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருப்போம். ஆனால் நாம் மறைந்துள்ள சில பொருட்களும் உள்ளது. அவைகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

    தலையணைகள் படுக்கையின் போர்வைகளை சீரான முறையில் நீங்கள் துடைக்கவே செய்வீர்கள். ஆனால் நம்மில் பலரும் தலையணைகளை துவைக்க மறந்து விடுவோம்.

    வாஷர் மற்றும் ட்ரையர் டிடர்ஜென்ட்டை கொண்டு நீங்கள் உங்கள் ஆடைகளை சீரான முறையில் துவைப்பதால் உங்கள் வாஷரும் ட்ரையரம் கூட சுத்தமாக இருக்கும் என நீங்கள் நினைப்பீர்கள். சரி அது ரொம்பவும் அழுக்காகாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் வாஷரும் ட்ரையரும் நல்ல நிலையில் இருக்க ஒவ்வொரு 3 மாதமும் அதை சுத்தப்படுத்தவும்.

    சமையலறை பாத்திரம் கழுவும் தொட்டி ரசாயன துடைப்பான்கள் ஒரு தேர்வாக இருந்தாலும் கூட அவை தொட்டி மற்றும் அதன் குழாய்களுக்கு நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். அதனால் அதனை சுத்தப்படுத்துவதற்கு அரை கப் பேக்கிங் சோடாவை தொட்டியில் ஊற்றவும். பின் அரை கப் வினிகர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி கழுவவும். சிறிது நேரத்திற்கு அதனை அப்படியே விட்டு விடுங்கள். பின் வெந்நீரை ஊற்றி அலசவும்.

    படுக்கையின் போர்வைகள் கண்டிப்பாக இதனை சீரான முறையில் துவைப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம். அதனை சுலபமாக்க, கூடுதலாக ஒரு செட் விரிப்பை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் துவைத்த விரிப்பு காயவில்லை என்றால் இரவு நேரத்தில் அவதிப்பட வேண்டியதில்லை பாருங்கள்.

    குளியலறை கால் மிதிகள் தினசரி அடிப்படையில் பயன்படுத்தப்படும் பொருட்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் அதனை தேவையான அளவு நாம் துவைப்பதில்லை. தினமும் அது சேகரிக்கும் கிருமிகளின் அளவை சற்று எண்ணிப் பாருங்கள். அதனை மிகவும் சூடான தண்ணீரில் போட்டு துவைக்கவும். பின் அதனை காய வையுங்கள். தேவைப்பட்டால் ப்ரஷை கொண்டும் அதனை சுத்தப்படுத்தலாம். கூடுதல் செட் கால்மிதிகள் வைத்திருப்பதும் நல்லதே.

    மேக்-அப் பிரஷ்கள் பொதுவாக உங்கள் மேக்-அப் பிரஷ்கள், மிகுதியான அழுக்குகளுடன் உங்கள் மேக்-அப் பையின் அடியில் கிடக்கும். இதனால் சருமத்தில் பிளவுகள் ஏற்படுவது ஒன்றும் ஆச்சரியமில்லை.

    இந்த ப்ரஷை பயன்படுத்துவதால் எண்ணெய், அழுக்கு மற்றும் பாக்டீரியா ஆகியவைகள் மீண்டும் உங்கள் சருமத்திற்கே செல்லும். இந்த பிரஷ்களை சுத்தப்படுத்த, அதனை வெதுவெதுப்பான நீர் மற்றும் குழந்தைகளின் ஷாம்புவில் மென்மையாக கழுவவும். எளிய வழிமுறை தான்.
    contd..



  8. #1718
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    தரை விரிப்புகள் சுத்தமில்லாத தரை விரிப்புகளை நினைத்தால் குமட்டல் தான் ஏற்படுகிறது. உங்கள் தரை விரிப்புகளில் தேங்கியிருக்கும் அனைத்து விதமான அழுக்குகளையும் யோசித்து பாருங்கள். ஷூ மற்றும் செருப்புகளில் இருந்து விழும் அழுக்கு, உன்னிகள், பாக்டீரியாக்கள், நாயின் ரோமங்கள், குழந்தைகளின் லீலைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

    முதலில் அதனை வாக்யூம் கிளீனரைக் கொண்டு தூசி தட்ட வேண்டும். அதனை கொண்டு தூசிகளையும், அழுக்குகளையும் நீக்குங்கள். அதன் பின் மிகவும் சூடான நீரில் இருந்து வரும் ஆவியில் அதனை காட்டவும். முடிந்தால் தரை விரிப்புகளை சுத்தப்படுத்தும் நபர்களை வருடத்திற்கு இரண்டு முறை அழையுங்கள்.

    மெத்தை பொதுவாக நம்மில் பலரும் மெத்தைகளை தேவையான அளவிற்கு துவைப்பதே இல்லை. கண்டிப்பாக இதனை சரியாக செய்பவர் யாருமே இருக்க முடியாது. மெத்தையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை படித்து, அதற்கேற்ப அதனை துவைக்க வேண்டும். அல்லது அதனை ஒரு ட்ரை கிளீனரிடம் கூட எடுத்துச் செல்லலாம்.

    சோஃபா சாய்விருக்கை மற்றும் அதன் மெத்தையை வாக்யூம் கிளீனரைக் கொண்டு வாரம் ஒருமுறை சுத்தப்படுத்தவும். ஏதேனும் கிளின்சரைப் பயன்படுத்த போகிறீர்கள் என்றால் தெளிவாகத் தோன்றாத ஒரு சின்ன இடத்தில் அதை பயன்படுத்தி பார்க்கவும். இதனால் மெத்தைக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை என்றால் பின் முழுவதுமாக பயன்படுத்தவும்.

    கதவு கைப்பிடிகள் இருமல், சளி மற்றும் ஃப்ளூ காலத்தின் போது கதவு கைப்பிடிகளை நீங்கள் அதிகமாக சுத்தப்படுத்துவீர்கள் என நாங்கள் நம்புகிறோம். ஆமாம் தானே? கிருமிநாசினி துடைப்பான்களை கொண்டு துடைப்பது தான் மிகவும் சிறந்த மற்றும் சுலபமான வழியாகும்.

    தொலைப்பேசிகள் வீட்டில் மற்ற சாதனங்களை விட நீங்கள் அதிகமாக பயன்படுத்துவது தொலைப்பேசியாக தான் இருக்கும். ஆனால் அதனை நம்மில் பலரும் சுத்தப்படுத்துவதே இல்லை.

    கிருமிநாசினி துடைப்பான்களை கொண்டு அதனை வேகமாகவும் சிறப்பாகவும் துடைத்து விடலாம். அதனை துடைக்க மற்றொரு வழியும் உள்ளது - பஞ்சுருண்டையை அல்கஹாலில் முக்கி, அதனை எண்கள் இருக்கும் இடம், தொலைப்பேசி கவர் ஆகிய இடங்களில் துடைக்கவும்.

    ரிமோட் கண்ட்ரோல் உங்கள் வீட்டில் நீங்கள் அதிகமாக பயன்படுத்தினாலும் கூட துடைக்காமல் போட்டு வைக்கும் சாதனங்களில் இதுவும் ஒன்றாகும்.

    பஞ்சுருண்டையை அல்கஹாலில் முக்கி எளிதாக நுழைய முடியாத இடங்களில் எல்லாம் துடையுங்கள். வீட்டில் நோய்வாய் பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி ரிமோட்டை பயன்படுத்தி வந்தால் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் தானே!

    spmeyyammaisp06 likes this.

  9. #1719
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    என்றென்றும் அழகு தேவதையாய் ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்

    பெண்கள் அனைவருக்குமே தாங்கள் அழகாய் ஜொலிக்க வேண்டும் என்று தான் ஆசை.
    அதற்காக எத்தனையோ செயற்கை முறைகளை பின்பற்றி இருப்பர், ஆனால் அன்றாடம் நம் பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகளின் மூலம் மிக எளிதாக அழகு தேவதையாய் வலம் வரலாம்.
    * தண்ணீர் இன்றியமையாத ஒன்று, உடலில் சிறிது நீர்ச்சத்து குறைந்தாலும் கூட தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கி விடும். நீங்கள் ஏ.சி அறையில் இருந்தால் கூட அரைமணி நேரத்திற்கு ஒரு முறை நிறைய தண்ணீரைக் குடித்துக் கொண்டே இருங்கள், இது உங்கள் மேனியிலும் பிரதிபலிக்கும்.
    * ஆன்டி ஆக்ஸிடன்ட் உணவுகள் உடலை நோயிலிருந்து பாதுகாத்து கொடுப்பதுடன், தோல் சுருக்கங்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும்.
    * நன்கு சத்தான காய்கறிகளை, வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    * சூரிய ஒளி நன்மை பயக்கும் என்றாலும், அதிக நேரம் வெயிலில் சுற்றித் திரிவது தோல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
    * திருமண விழாக்கள், பண்டிகை காலங்களுக்கு மேக்கப் போடும் போது இயற்கையான முறையில் உருவான பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது.
    * உணவுகளில், பானங்களில் அதிகளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டாம், ஏனெனில் அதீத சர்க்கரையால் தோல் சுருக்கங்கள் ஏற்படலாம்.
    * அவகோடா பழங்கள், ஆலிவ் ஆயில், நட்ஸ் மற்றும் மீன் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள், சரும பொலிவிற்கு நல்லது.
    * தினமும் ஒரு டம்ளர் நீருடன் எலுமிச்சை கலந்து குடியுங்கள், அடிக்கடி பழச்சாறுகள் அருந்துவதும் சிறந்தது.
    * யோகா மற்றும் தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம், கவலை ஏதும் இருந்தால் உங்களுக்கு பிடித்த நபரிடம் மனம் விட்டு பேசுங்கள்.
    * தினமும் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பது மிக அவசியம், தினமும் 7-8 மணி நேர தூங்க வேண்டும்.
    * உடற்பயிற்சி செய்வதன் மூலம் தேவையில்லாத நச்சுப் பொருட்களை வெளியேற்றலாம், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மேனி பளபளப்பாகும்.

    spmeyyammaisp06 likes this.

  10. #1720
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நீரின் குண நலன்கள்!

    நீரின் பண்புகளும் அதன் குணங்களும் மாறும் தன்மை உடையவை. அவைகள் நிறமற்றவை, சுவையற்றவை என்று வர்ணிக்கப்பட்டாலும் அவைகள் சூழலுக்கேற்றவாறு மாறும் தன்மை கொண்டவைகளாக உள்ளன. நீரின் மருத்துவ தன்மைகளைப் பார்ப்போம்.....
    மழை நீரினால் குளிர்ச்சி, நல்லறிவு முதலியன உண்டாக்கும். பனி நீரினால் வாதகோபம், வெகுமூத்திரம், சொறி சிரங்கு முதலியன போம். மேற்கூறியது போக மற்ற நீர்கள் அவையிருக்கும் நிலத்தின் குணத்தைப் பெற்றிருக்கும். அதாவது ஆற்று ஜலம் திரிதோஷத்தால் ஏறபட்ட நோய்களையும் பித்தகோபத்தையும் தாகத்தையும் தணிக்கும். குளத்து நீர், வாதம், மது மூத்திரம், சீதளம் இவைகளை உண்டாக்கும். கிணற்று ஜலம் சரீரக் கடுப்பு, அழற்சி, வீக்கம், பித்தம் சுவாசம் முதலியவை நீக்கும். ஏரிநீர் வாதத்தை விருத்திசெய்யும். சமுத்திர ஜலமானது பீலிகம், குன்மம், குஷ்டம், உதரநோய், சுரம் முதலிய நோய்களைப் போக்கும்.
    குளிர்ந்த நீர் சீதவீரியமுள்ளது இதனை வாதரோகம், கண்ட நோய், மந்தம், மலபந்தம், விக்கல் முதலிய நோய்களை உடையவர்கள் அருந்துதல் கூடாது. வெந்நீரை அருந்த, அதாவது நன்றாக காய்ச்சி அருந்துமளவு ஆற்றி அருந்த புளியேப்பம், சீதக்கட்டு, குன்மம், காசம், மந்தாக்கினி நேத்திரப்பிணிகள் முதலியவைகளை குணமாக்கும். இது உதரநோய், பாண்டு, சோபை, மேகம், விரணம், வாதம், அதிசாரம், கபநோய் முதலிய நோய்களை உடையவர்களுக்கு நல்லது. காய்ந்து ஆறிய நீரானது பித்தாதி திரிதோஷம், பைத்தியம், ரத்தபித்தம், சுரம், வாந்தி, மூர்ச்சை, அதிசாரம், சன்னிபாதம் முதலிய நோய்கட்குச் சிறந்தது.
    உணவுக்கு முன்பு நீரை அருந்த மந்தத்தையும், உணவுக்கு பின்பு அருந்த சீரணத்தையும், உணவுக்கு இடையிடையே அருந்த பல நோய்களையும் உண்டாக்கும். மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு அதிகமாக நீரை அருந்தக் கூடா

    spmeyyammaisp06 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter