Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree913Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1731
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    டென்ஷனில் இருந்து விடுதலை பெற என்ன சாப்பிடலாம்!

    *டென்ஷனில் இருந்து விடுதலை பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர்கள். சிறு வயது முதல் உணவில் கவனம் செலுத்தாமல் விடுவது, தவறான உணவு முறை இவை இரண்டும் டென்ஷனுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
    *சத்தான உணவுகளைத் தவிர்த்து அதிக கொழுப்பு, பல்வேறு ரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் வகைகளை உட்கொள்வதால் சோர்வு, நினைவாற்றல் குறைவு, படபடப்பு, உடல் எடை கூடுவது மற்றும் ரத்த கொதிப்பு, இளம்வயதில் ஹார்ட் அட்டாக் என பல நோய்களின் கூடாரமாக உடல் மாறுகிறது.
    *உடலில் பிரச்னைகள் இருக்கும் போது அது மனதையும் பாதித்து ஹார்மோன்களையும் பாதிக்க செய்கிறது. இதனால் டென்ஷன் அதிகரித்து மன அழுத்தத்தில் கொண்டுபோய் விடுகிறது. சிறு வயது முதல் சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். நமது பாரம்பரிய உணவுகளுக்கு முதலிடம் தர வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகள் மற்றும் பருப்பு வகைகள், தானியங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    *பச்சைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகளை கலவையாக முளைக் கட்டி சாலடாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கிறது. சத்தான உணவுகள் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும். குளிர்பான வகைகளை தொடர்ந்து குடிப்பதற்கு தடா போடவும்.
    *பர்கர், பீசா மற்றும் ஜங்க் புட் வகைகளை தவிர்க்கவும். இட்லி, கம்பு, ராகிக் களி, சோள மாவு தோசை, கீரை கலந்து செய்யப்படும் அடை வகைகள் என மூன்று வேளை உணவிலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.



    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-10885197_826811164081011_3799381680641137716_n.jpg  

  2. #1732
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மருத்துவ குணம் மிக்க `தவுண்’

    பனம் பழத்தின் கொட்டையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப்பொருளான தவுண், தென்காசி பகுதியில் மும்முரமாக விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டில் ஒருசில மாதங்களில் மட்டுமே உண்ணக் கிடைக்கும் தவுண், மிகுந்த மருத்துவ குணமிக்கது.
    கர்ப்பகதருகு
    மரங்களில் கர்ப்பகதருகு என அழைக்கப்படும் பனைமரம், தமிழரின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனை மரத்தின் வேர் முதல் மரத்தின் உச்சி வரை அனைத்து பொருட்களும் மக்களுக்கு பயன் தரும். வறட்சியான பகுதியில் தானாக வளரக்கூடிய பனையின் ஆயுள் 100 ஆண்டுகள். 90 அடி உயரம் வளரக்கூடியது.
    பனங்கருக்கு என்று சொல்லப்படும், சிறு மரங்களை உடைக்கும் போது, அதில் கிடைக்கும் பச்சைக் குருத்து உண்ண சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். வீடுகள் வேயவும், படுக்கவும், உட்காரவும், பண்டங்கள் கட்டுவதற்கும் தேவையான பாய்கள் செய்ய பனை ஓலை பயன்படுகிறது.
    கடுமையான வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக பனை ஒலைகள் கொடுக்கப்பட்டு வந்தது. பனை ஓலையில் செய்யப்பட்ட விசிறிகள் குளுமையான காற்று தருபவை.
    இயற்கை கள்
    பனைமர பாளையிலிருந்து பதநீர் கிடைக்கிறது. அதில் சுண்ணாம்பு கலக்காமல் விட்டால், அது சுவையானதாகவும், இயற்கையான, ‘கள்’ என்ற பானம் கிடைக்கும். பனங்காய்களில் இருந்து குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும். காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும், முற்றிய பனங்காயிலிருந்து சதைப் பகுதியை வேகவைத்து உண்ணலாம்.
    பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும். பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும். கொட்டைக்குள் உருவாகும் சீப்பை (தவுண்) குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். கொஞ்சநாள் விட்டால், பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
    contd..



  3. #1733
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    அளவில்லா மருத்துவ குணங்கள்


    பனைமரத்தின் பயன்பாட்டை சித்த மருத்துவர்கள் பட்டியலிடுகிறார்கள்.
    மனிதரின் உணவுத் தேவைக்கு மட்டுமில்லாமல் வீடுகள் கட்டுவதற்கும் இம்மரங்கள் துணையாக இருந்தன. பனை மரத்திலிருந்து அறுத்து எடுக்கப்படும் பனம்பட்டையை வெயிலில் உலர்த்தி, உரித்து எடுக்கப்படும் நார் கயிறாக பயன்பட்டது.
    வீடுகளில் விறகு அடுப்பில் சமையல் செய்த காலங்களில், அடுப்பில் நெருப்பு பற்ற வைக்க, பெண்களுக்கு பனை மரத்தின் பன்னாடையும், காய்ந்த ஓலைகளும் தேவைப்பட்டன. காய்ந்து போன பனம்பட்டைகள், காய்ந்து போன நொங்கு காய்களும் அடுப்பு எரிக்க சிறந்த விறகாகப் பயன்பட்டது. இப்போது நிலைமை மாறிவிட்டது.
    பனைமரங்கள் வெட்டி அழிக்கப்படு வதுடன் பனைத்தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருகாலத்தில் பிரதான தொழிலாக இருந்த பனைத்தொழில் இப்போது மெல்லமெல்ல தேய்ந் து கொண்டிருக்கிறது. பனைமரத்தி லிருந்து வெட்டி எடுக்கப்படும் நுங்கு, பதநீர் ஆகியவை சாலையோரங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
    60 நாள் மட்டும்
    ஆனால், பனங்கொட்டையிலிருந்து கிடைக்கும் தவுண் பெரும்பாலும் விற்பனைக்கு வருவதில்லை. குறிப்பிட்ட பருவத்துக்கு (60 நாள்கள்) கொட்டைகளை மண்ணில் புதைத்து, பின்னர் அவற்றை வெட்டி எடுத்து பெறப்படும் தவுணை, 25 ஆண்டுகளுக்குமுன்புவரை பலரும் ருசித்து சாப்பிட்டிருப்பார்கள். இப்போதைய தலைமுறையினருக்கு தவுணை குறித்து பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
    மருத்துவ குணமிக்க இந்த தவுண் திருநெல்வேலி- தென்காசி பிரதான சாலையில் ராமச்சந்திரப்பட்டினம் பகுதியில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. பனைஓலையால் உருவாக்கப்பட்ட பட்டையில், 20 துண்டுகள் வரையிலான தவுண் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    மத்தளம்பாறை கிராமத்தில் பெரும்பாலானவர்கள் பனைத் தொழிலாளிகள். ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இப்பகுதியில் தவுண் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல், ஜூன், ஜூலை மாதங்களில் குற்றால சீசன் நேரங்களிலும் பழைய குற்றாலம் பகுதியில் ஒரு பட்டை தவுணை ரூ.60-க்கு விற்க்பப்படுகிறது.
    டாக்டர்கள் பலரும் இதை விரும்பி வாங்கி உண்கிறார்கள். மலச்சிக்கல் பிரச்னைக்கு இது அருமருந்தாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். உடல் சூட்டை தணிக்கவும், வயிற்று கோளாறுகளுக்கும் தீர்வாக இது இருக்கிறது. நுங்கு விற்பனை செய்யும்போது தவுணையும் கூடவே விற்பனை செய்கிறார்கள்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-2.jpg  

  4. #1734
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பைபிராய்டு கட்டிக்காக கர்ப்பப்பை அகற்ற தேவையில்லை

    தாய்மை... இதற்கு நிகர் வேறு எதுவுமில்லை. தாய்மைக்கு முன்பும், தாய்மைக்கு பின்பும் பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எவ்வளவோ வலிகளை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் முக்கிய பிரச்னை கர்ப்பப்பையில் ஏற்படும் பைபிராய்டு எனப்படும் கட்டிகள்தான். தற்போதைய காலகட்டத்தில், பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பப்பையில் கட்டி வளர்கிறது. இதனால், கர்ப்பப்பையையே இழக்கும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    ஆனால், மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் கர்ப்பப்பையை அகற்றாமலேயே பைபிராய்டு கட்டிகளை மிக எளிதாக அகற்றி விடலாம் என்கிறார் பாரத் ஸ்கேன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் டாக்டர் இம்மானுவேல். இதைப் பற்றி டாக்டர் இம்மானுவேல் சொல்கிறார்...

    கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டிகள், கேன்சர் கட்டிகள் என நினைத்து பெண்கள் அச்சப்படுகிறார்கள். இந்த அச்சம் தேவையில்லை. சுரப்பிகள் மாற்றத்தால் இத்தகைய கட்டிகள் ஏற்படுகின்றன. தவிர, இவை கேன்சர் கட்டிகள் கிடையாது. பொதுவாக 25 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பைபிராய்டு கட்டிகள் ஏற்படும். 4 பெண்களில் ஒருவருக்கு இத்தகைய கட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இந்த கட்டிகள் ஆண்டுக்கு ஒரு செ.மீ. அளவுக்கு வளரும் தன்மை கொண்டவை.

    கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்பட்டால், அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் நேரத்தில் அதிக நேரம் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, மூச்சு திணறல், மயக்கம் வருதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மேலும், முதுகு வலி, கால் உளைச்சல், அடி வயிறு வலி போன்றவையும் ஏற்படும். கட்டி பெரிதாக, பெரிதாக பெண்கள் இன்னும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது.

    கட்டிகளின் அழுத்தம் காரணமாக அடிக்கடி சிறுநீர் வரும். சிறுநீரை தாங்கிக் கொள்ள முடியாது. அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஒரு சிலருக்கு நீண்ட நேர இடைவெளிக்கு பிறகே சிறுநீர் வரும். அதே போல, மலச்சிக்கலும் ஏற்படும். மலக்குழாயை கட்டிகள் அடைப்பதால், வயிறு உப்புதல், முதுகு வலி போன்றவை ஏற்படும். மாதவிடாய் நேரத்தில் அதிக வலி ஏற்படும். உடலுறவின் போதும் அதிக வலி இருக்கும்.

    இந்த வலிகளை எல்லாம் பெரும்பாலான பெண்கள் தாங்கிக் கொண்டுதான் வாழ்க்கை நடத்துகிறார்கள். காரணம்... தாய்மை என்கிற ஒரே காரணத்துக்காகதான். இந்த வலியிலிருந்து விடுபட வேண்டுமென்றால் ஆபரேஷன் செய்து கர்ப்பப்பையை அகற்றுவதுதான் தீர்வாக இருந்து வந்தது.
    அவ்வாறு ஆபரேஷன் செய்தால் அதன் பிறகும் சிறுநீர் பிரச்னை, வயிற்று வலி போன்ற பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும்.

    அதைவிட, தாய்மை அடையும் பாக்கியத்தை இழந்துவிட்டோமே என நினைத்து மனரீதியாக பெண்கள் உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியை இழக்கிறார்கள். மேலும் ஆபரேஷனுக்கு பிறகு 4 மாதம் ஓய்வில் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் யார் குழந்தைகளையும், கணவரையும் கவனித்துக் கொள்வது, ஆபரேஷன், மருத்துவமனையில் தங்குவது என நிறைய செலவாகுமே என்று நினைத்து பல பெண்களும் ஆபரேஷன் செய்து கொள்ளாமல் வலியுடனே வாழ்கிறார்கள்.

    இப்போது அந்த கவலை எல்லாம் தேவையில்லை. கர்ப்பப்பை கட்டியால் அவதிப்படும் பெண்களுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ளது லேட்டஸ்ட் மெஷின் எம்ஆர்ஜிஎஃப்யுஎஸ் (விணீரீஸீமீtவீநீ ஸிமீsஷீஸீணீஸீநீமீ நிuவீபீமீபீ திஷீநீusமீபீ ஹிறீtக்ஷீணீ ஷிஷீuஸீபீ). இந்த தொழில்நுட்பத்தில் ஆபரேஷன் கிடையாது. மயக்க மருந்து கிடையாது. தழும்பு கிடையாது. ரத்த இழப்பு இல்லை. கதிரியக்கம் இல்லை. முக்கியமாக கர்ப்பப்பை பாதிக்கப்படுவதில்லை, பாதுகாக்கப்படுகிறது.

    2 அல்லது 3 மணி நேரத்தில் பைபிராய்டு செல்களை அழித்து விடலாம். சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமும் இல்லை. மறுநாளே வேலைக்கு போகலாம். சிகிச்சை முடிந்த 6 மாதத்துக்குள் பைபிராய்டு கட்டிகள் முழுமையாக தானாகவே கரைந்து விடும். அதுவரை எந்த தொந்தரவும் இருக்காது. இந்த சிகிச்சை முறை மிகவும் பாதுகாப்பானதும் கூட. வெளிநாடுகளில் கடந்த 2000ம் ஆண்டில் இருந்தே இந்த சிகிச்சை முறை இருந்து வருகிறது.

    சிகிச்சை எப்படி?

    எம்ஆர்ஐ ஸ்கேன் மெஷினுடன் ஃபோகஸ்ட் அல்ட்ரா சவுண்ட் உபகரணம் பொருத்தப்பட்டிருக்கும். இதில், சிகிச்சை க்கு வருபவர் படுத்துக் கொள்ள வேண்டும். ஃபோகஸ்ட் அல்ட்ரா சவுண்ட் உபகரணம், வயிற்றுப் பகுதியில் பைபிராய்டு கட்டிகள் எங்கிருக்கின்றன என்பதை ஆராய்ந்து தெளிவுபடுத்தும்.

    அதனை மருத்துவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் மானிட்டர் கவனித்து, ஃபோகஸ்ட் அல்ட்ரா சவுண்ட் உபகரணம் மூலம் வெப்பத்தை உண்டாக்குவர். இந்த வெப்பத்தின் மூலம் பைபிராய்டு செல்கள் அழிக்கப்படும். சிகிச்சையின் போது, எந்த வலியும் இருக்காது.


  5. #1735
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஆரம்ப நிலை காச நோய் குணமாக்கும் புளிச்சக் கீரை

    இக்கீரையின் பெயரைக் கேட்டதும் புளியேப்பம் வருகிறதா? பெயர்தான் புளிக்கிறதே தவிர, நமது உடல் ஆரோக்கியத்திற்கு பெருமளவு உதவுகிற கீரை இது.

    இக்கீரை உணவுக்காக மட்டுமின்றி நார் எடுக்கவும் பயன்படுகிறது. வேறெந்தக் கீரையிலும் அத்தன்மை கிடையாது.


    தமிழகத்தில் இக்கீரையின் தன்தை அறிந்து எண்பவர்கள் சிலரே. ஏனெனில் இதன் பெயரே அவர்களை, அதனிடமிருந்து அந்நியமாக்கிவிட்டது.

    இதன் சுபாவம் குளிர்ச்சி இக்கீரை ஆவணி, புரட்டாசி மாதங்களில் அதிகமாக விளைந்து விற்பனைக்கு வரும் மற்ற காலங்களிலும் கிடைக்கும்.

    சித்தர் பாடல்:

    தேகசித்தி யாகுஞ் சிறுகாசம மந்தமறும்;
    போகமுறும் விந்துவுநற் புஷ்டியுண்டாம் - வாகாம்
    வேளிச்சிறுமான் நோக்குவிழி மென்பொடியே! நாளும்
    புளிச்சிறு கீரையுண்ணும் போது. – அகத்தியர் குணபாடம்

    ஆரம்ப நிலை காச நோய் குணமாகும். உடலின் மந்தத்தன்மை விலகும்.காம உணர்வைத் தூண்டும். விந்து உற்பத்தி அதிகரிக்கும். தேக ஆரோக்கியத்துக்க உதவும்.

    புளிச்சக் கீரையை கோங்குரா என்று தெலுங்கில் சொல்வார்கள். அரைக் கீரையை கடையம்போது தக்காளிக்குப் பதில் இந்தக் கீரையைப் பக்குவப்படுத்தி சமைத்துச் சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும். கோடை வெப்பத்தைத் தணிப்பதில் சிறந்தது. நரம்புத் தளர்ச்சியைப் போக்கக்கூடியது.
    இக்கீரை ரத்த அழுத்தம், வாத நோய், சிறுநீரகக் கோளாறு, மலச்சிக்கல், இதய நோய், குடற்புண், ஜீரணக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

    100 கிராம் புளிச்சக் கீரையில் உள்ள சத்துகள்:




    நீர்ச்சத்து - 86.4 கிராம்
    புரதம் - 1.7 கிராம்
    கொழுப்பு - 1.1 கிராம்
    தாது உப்புகள் - 0.9 கிராம்
    நார்ச்சத்து - 9.9 கிராம்
    சர்க்கரைச்சத்து - 9.9 கிராம்
    சுண்ணாம்புச்சத்து - 172 மி.கி
    பாஸ்பரஸ் - 40 மி.கி
    இரும்பு - 5.0 மி.கி
    மாவுப்பொருள் - 296 யு.ஜி
    தையாமின் - 0.07 மி.கி
    ரிபோஃபழளேவின் - 0.39 மி.கி
    நியாசின் - 1.1 மி.கி
    வைட்டனிக் -சி - 20 மி.கி
    கலோரித்திறன் - 56 கலோரி

    contd..



  6. #1736
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    புளிச்சக் கீரை உடல்நல நன்மைகள்:-


    பசலை கீரை வகையை போன்றே இருப்பதுதான் தான் புளிச்சக் கீரை, இதில் இருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் ஒரு சிறந்த சேர்வையுறுப்புக்கள். இதுதான் அமிலத்தன்மை மற்றும் முக்கிய சுவை தரக்கூடியாது. இதில் கலோரிகள் குறைவாகவும் மற்றும் நீர் உள்ளடக்கத்தை அதிகமாகவும் கொண்டுள்ளது.

    இது சுகாதார உணர்வுடைய தனிநபர்கள் மற்றும் ஒரு ஆரோக்கியமான உணவு தேர்வு செய்வதற்கும் புளிச்சக் கீரை சிறந்து விளங்குகிறது. இது சுகாதார உணர்வுடைய தனிநபர்களுக்கு, ஒரு ஆரோக்கியமான உணவு தேர்வு ஆகும்.

    • இதில் வைட்டமின் A, B9, மற்றும் C. ஒரு உயர்தர மூலமாகும்.

    • இதில் அதிக அளவில் பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற முக்கிய தாதுக்கள் உள்ளது.

    • ஆக்ஸாலிக் அமிலம் அதிகமாக இருப்பதால், வாத நோய், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

    • இது சக்திவாய்ந்த மலமிளக்கி பண்புகளை கொண்டுள்ளது, இதை அதிக அளவில் ஊட்கொள்வதால் வயிற்றுப்போக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    • இது ஆற்றல் உள்ளடக்கத்தில் குறைவாக காணப்படுகிறது ஆனால் போதுமான உணவு நார்கள் வழங்குகிறது.

    புளிச்சக் கீரை வழக்கமான பயன்பாடுகள் தவிர சுகாதார நலன்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதில் ஊட்டச்சத்து மருந்துகள் அதிகமாக உள்ளன, எனவே இது பலதரப்பட்ட நோய்கலுக்கு சிகிச்சை அளிக்கவும் மற்றும் தடுக்கவும் உதவுகிறது.

    உயர் இரத்த அழுத்தம்:

    புளிச்சக் கீரை டீ 2-3 கோப்பை தினமும் பருகினால் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதில் காணப்படும் அந்தோசியனின்கள் தான் உயர் இரத்த அழுத்தம் குறைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிக்கப்பத்டுலதது.

    புற்றுநோய்:

    ஃபிளாவனாய்டுகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் இது சிலவகை புற்றுநோய் செல்களை அழிக்க மற்றும் பரவாமல் இருக்கவும் உதவும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. எனவே, அடிக்கடி இக்கீரையை சாப்புடுவதால் புற்றுநோயை தடுக்க உதவும்.

    contd..



  7. #1737
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    முடி:

    இதன் இலைகள், உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடிகளுக்கு நல்ல இயற்கை சிகிச்சையாக கருதப்படுகிறது. வழுக்கை வரமால் தவிர்ககவும் மற்றும் கட்டுப்படுத்தவும் இந்த இலைகளை அரைத்து தினமும் தடவுங்கள்.

    ஜில்லிட்ட உடம்புக்கு:

    சிலருக்க அடிக்கடி உடம்பு pஜல் லிட்டுவிடும் அதாவது உடம்பு குளிர்ச்சியாகிவிடும். இப்படி ஆவதால் தனக்கு ஜன்னி கண்டுவிடுமோ என்று பயந்து நடுங்குவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு புளிச்சகீரை நன்கு உதவி செய்கிறது.

    புளிச்ச கீரை வாரத்திற்கு இரண்டு நாட்கள் சமையல் செய்து சாப்பிட்டுவந்தால் உடலில் உஷ்ணம் ஏறி, இயற்கையான அளவுக்கு வந்துவிடும்

    மலச்சிக்கில் போக:

    மலச்சிக்கலால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், இக்கீரைரய மூன்று நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

    புளிச்சக் கீரை மற்ற நன்மைகள்:

    கோனோரியா, சிறுநீர் பாதை நோய் தொற்று, ஸ்கர்வி, நாள்பட்ட நீர்க்கோப்பு, இரத்தப்போக்கு, முன்கூட்டிய முதுர்ச்சி, படை, நமைச்சல், பருவகால காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், புண்கள், கொப்புளங்கள், வீரியம் மிக்க கட்டிகள், மற்றும் அழற்சி நோய்கள்.

    புளிச்சக் கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் இருமல் குணமாகும்
    புளிச்சக் கீரையை சிறிது ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் மந்தம் குணமாகும்
    புளிச்சக் கீரையை குடை மிளகாய், கசகசா சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் உடலுறவு இச்சை உண்டாகும் போகத்தில் அளவில்லா திருப்தி உண்டாகும்.
    புளிச்சக் கீரைச் சாற்றில் சோம்பை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டால் ருசியின்மை பிரச்னை தீரும்.
    புளிச்சக் கீரைச் சாறில் மிளகை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தேனில் அரை கிராம் அளவில் சாப்பிட்டால் சீதள நோய்கள் குணமாகும்
    புளிச்சக் கீரையுடன் பார்லி சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் கால் வீக்கம் குணமாகும்.
    புளிச்சக் கீரை, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் எலும்பு ஜீரம் தணியும்.
    புளிச்சக் கீரையை அரைத்து கட்டிகள் மீது கட்டினால் அவை உடைந்து போகும்.
    புளிச்சக் கீரைச் சாறுடன் உளுந்தை ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்.
    contd..



  8. #1738
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    புளிச்சக் கீரை பெண்களுக்கு மிகவும் நல்லது:

    • இதன் ஊட்டச்சத்து உள்ளடக்கம் காரணத்தால் இது பெண்களுக்கு மிகவும் நல்லது. இதில் உயர்தர கால்சியம் இருப்பதால் பெண்களின் எலும்புகளை பாதிக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க பயன்படுகிறது.

    • அறிவியல் ஆதாரம் இல்லாததால், நிபுணர்கள் கர்ப்ப காலத்தில் இக்கீரையை பரிந்துறைபபதில்லை.

    • இது பாலுத்டும் பெண்களின் பாலை குறைத்துவிடும், எனவே பாலுத்டும் பெண்மணிகள் இக்கீரையை சாப்பிடக்கூடாது.

    • மார்பக புற்றுநோயை தடுக்கும், உடலில் கட்டிகள் குறைக்க மற்றும் உடைக்க உதவுகிறது. வைட்டமின்கள், தாதுக்கள், கரோட்டினாய்டுகள், மற்றும் பச்சையம் என்று பல நன்மைகள் இருப்பதால் மார்பக புற்றுநோயை தடுக்க உதவுகிறது.

    • பச்சையம் உடலில் ஆக்சிஜன் சப்ளை அதிகரிக்கிறது, நிபுணர்கள் புற்றுநோய் செல்கள் ஆக்சிஜன் அதிகம் உள்ள சூழலில் வாழ முடியாது என்று நம்புகிறார்கள்.

    பக்க விளைவுகள்:

    புளிச்சக் கீரை மிக பெரிய ஆபத்துக்களையும் கொண்டுள்ளது. உயர் ஆக்ஸாலிக் அமிலம் உள்ளடக்கம் காரணத்தால் இதை அதிக அளவில் உண்ணும் போது மரணம் ஏற்படும் ஆபாயம் உள்ளது.

    அதிக அளவுள் சாப்பிடும் போது ஏற்படும் மற்ற பிரச்னைகள்:

    சிறுநீரக கற்கள்
    வயிற்று வலி
    வயிற்றுப்போக்கு
    குமட்டல் மற்றும் வாந்தி
    தோல் வெடிப்பு
    தோல் எரிச்சல்
    தசை பிடிப்பு
    மயக்க உணர்வு
    ஈரல் நோய்

    நாம் மிகச் சாதாரணமாகக் கருதும் இக்கீரையில் எவ்வளவு சத்துக்கள் இருக்கின்றன பாருங்கள் கிடைக்கும்போதெல்லாம் இக்கீரையை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-download-13-.jpg  

  9. #1739
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கும், பைபாஸ் சர்ஜரிக்கும் என்ன வித்தியாசம்?

    டாக்டர். சு.ரகுபதி எம்.எஸ்., எம்.சி எச்.,

    ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம்
    இல்லையென்றால், உடனே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்தனை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரிந்து மனிதன் இறந்து போக நேரிடும். 1928வது வருடம் வரை இதய அறுவைச் சிகிச்சை என்பது ஒரு முடியாத காரியமாகவே இருந்தது. 1928ம் வருடம் கட்லர் என்ற சர்ஜன் எந்தவிதக் கருவியுமில்லாமல் மார்பின் இடதுபுறத்தைத் திறந்து கைவிரலால் இதயம் துடிக்கும்போதே இதய ஈரிதழ் வால்வு சுருக்கத்தை மூடிய முறை இதய அறுவைச் சிகிச்சை மூலம் விரிவடையச் செய்தார். அதன் பிறகு 1956 வரை சாதாரண இதய அறுவைச் சிகிச்சைகளை மேற்கூறிய மூடிய முறை அறுவைச் சிகிச்சைகளே உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்தன.

    1956ம் வருடம் அமெரிக்க பேராசிரியர் கிப்பன் என்ற இதய அறுவைச் சிகிச்சை நிபுணர். நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, இதய துடிப்பை (இயக்கத்தை) நிறுத்தி 5 மணி நேரம்கூட இதயத் துடிப்பில்லாமல் ஓபன் ஹார்ட் அறுவைச் சிகிச்சை முறையை முதலில் செய்து காண்பித்தார். இந்தியாவில், 1970ல் சென்னை பொது மருத்துவமனையில் இந்தியாவின் முதல் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் செய்யப்பட்டது.

    ஓபன் ஹார்ட் ஆபரேஷன்:
    இதயத் துடிப்பை நிறுத்தி இதய ஆபரேஷன் செய்வதால் மட்டும் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் என்று கூறிவிட முடியாது. சாதாரணமாக 5 நிமிடங்களுக்கு மேல் இதயத்துடிப்பு நின்றாலே நாம் இறந்து விடுவோம். ஆனால், ஓபன் ஹார்ட் ஆபரேஷனில் 5 மணி நேரத்திற்கும் மேல் இதயத்துடிப்பை நிறுத்தி, மறுபடியும் இதய இயக்கத்தை உண்டாக்கி நோயாளியைப் பிழைக்க வைக்க முடியும்.
    இந்த, 'ஓபன் ஹார்ட்' (திறந்த முறை) இதய அறுவைச் சிகிச்சை முறையில் செயற்கை இதய, நுரையீரல் இயக்கி வைக்க முடிகிறது. இந்த சிறந்த முறை அறுவைச் சிகிச்சை முறையில் உடம்பிலுள்ள பிராண வாயு குறைந்த (அசுத்த) ரத்தம் முழுவதும் இரண்டு பெரிய பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு உடம்பிலிருந்து உறியப்பட்டு, அந்த அசுத்த ரத்தம் செயற்கை நுரையீரல் மிஷினில் செலுத்தப்படுகிறது.
    செயற்கை நுரையீரல் மிஷின் உடம்பின் வெளியே கொண்டு வரப்பட்ட அசுத்த ரத்தத்தை முழுவதும் சுத்தம் செய்து 100 சதவீதம் பிராணவாயு கலந்து சுத்த ரத்தமாக மாற்றுகிறது.
    இதயத்தை திறந்து ஆபரேஷன் முழுவதும் முடிந்தவுடன் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவான ரத்த வெப்பத்தை, ஹைபோதெர்மியா மிஷின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி, 37 டிகிரி செல்சியஸ் அளவு வந்தவுடன், இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது. அதே சமயம், மகாதமனியை கிளாம்ப் செய்த உபகரணத்தை எடுத்து விட வேண்டும். அந்த சமயத்தில் ஆபரேஷன் பண்ணப்பட்ட நோயாளியின் ரத்தத்தின் அமிலம், காரத்தன்மை மற்றும் ரத்த பொட்டாசியம், சோடியம் போன்ற உப்புச்சத்துக்களைச் சரி செய்து, உடம்பின் ரத்தம் கசியும் தன்மையையும் சரி செய்தவுடன், இதயத்துடன் இணைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் ஒவ்வொன்றாக எடுத்து, கசியும் ரத்தத்தை உடம்பிலிருந்து வெளியேற்ற இதயத்தின் மேலும், வலது மார்புகூட்டிலும், பிளாஸ்டிக் குழாய்களை இணைத்து, உடம்பில் வீணாகும் ரத்தத்தை உடம்பின் வெளியே ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலில் இணைத்துவிடலாம்.
    ஆபரேஷன் செய்த பிறகு இதயம் சரிவர துடிப்பதற்கும், மூளை, நுரையீரல் போன்ற மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்வதற்கும் ஆபரேஷன் செய்த புண் ஆறுவதற்கும் சரியான மருந்துகளைக் கொடுத்து இதய ஆபரேஷன் செய்த நோயாளியை முற்றிலும் குணப்படுத்தி விடலாம்.
    contd..



  10. #1740
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    பைபாஸ் சர்ஜரி:

    பைபாஸ் சர்ஜரி என்பது இதய ரத்தக்குழாய் முழுவதும் அடைபடுவதால் உண்டாகக்கூடிய மாரடைப்பு நோய்க்கு செய்யக்கூடிய இதய ஆபரேஷன்.
    இந்த ஆபரேஷனை திறந்த முறை இதய ஆபரேஷன் மூலம், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகப்படுத்தி இதய துடிப்பை நிறுத்தியும் ஆபரேஷன் செய்யலாம்.
    இதயத்துடிப்பை நிறுத்தாமலும், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகிக்காமலும் ஆபரேஷன் செய்யலாம்.
    பைபாஸ் சர்ஜரி செய்வதற்கு காலில் உள்ள அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் செபனஸ் ரத்தக்குழாய் மற்றும் மார்புக்கூட்டின் உட்புறமுள்ள இடது மற்றும் வலது உள்மார்பு ரத்தக்குழாய்கள் மற்றும் முன் கையில் உள்ள ரேடியல் ரத்தக்குழாய்கள் போன்றவற்றை உபயோகித்து மேற்கூறிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரத்தக்குழாய்களின் அடைப்பின் தன்மையைப் பொறுத்து மகாதமனியின் ஆரம்பத்திலும், இதய ரத்தக் குழாய் அடைப்பின் கீழும் இணைத்து பைபாஸ் சர்ஜரி செய்யப்படுகிறது.
    பைபாஸ் சர்ஜரி என்பது ஓபன் ஹார்ட் சர்ஜரியின் மூலமும் செய்யக்கூடிய ஒரு தனிப்பட்ட இதய அறுவைச் சிகிச்சை முறை. பொதுவாக பொதுமக்களுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரியும், பைபாஸ் சர்ஜரியும் ஒன்று என்ற குழப்பத்திற்கு மேற்கூறிய விளக்கம் பொருத்தமானதாக இருக்கும்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg  

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter