Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1741
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனிக்க


    குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
    தற்போது உடல் எடை உயர்வு ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், வீட்டு வேலைகளை செய்ய இயந்திரங்கள் வந்ததும், உணவுப் பழக்கமும் காரணங்களாக இருந்தாலும், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் முக்கியக் காரணம் என்கிறது மருத்துவம்.

    குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்படுகிறது. அடைப்பு காரணமாக இந்த ஹார்மோன் சரியாக சுரக்காது. இதுதான் உடலில் அதிக கொழுப்பு சேராமல் தடுக்கின்ற ஹார்மோன். மருத்துவர்கள் இதை `புரொடக்டிவ் ஹார்மோன்' என்று அழைக்கிறார்கள். குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை காரணமாக இந்த ஹார்மோன் சுரப்பு தடைபட்டு, அதிகப்படியான கலோரிகள் தேங்கி, கொழுப்புச்சத்து சேர்ந்து உடல் குண்டாகி விடுகிறது.

    குடும்பப் பெண்கள் பலரும், குழந்தையும், கணவரும் மீதம் வைத்த உணவையும், வீணாகி விடுமே என்று அதிகமான உணவுகளை உண்பதும், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும், வீட்டு வேலைகளை செய்ய இயந்திரங்கள் இருப்பதும், டிவி பார்த்துக் கொண்டு நொறுக்குத் தீனி சாப்பிடுவதும், மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் என்று சொல்லி 2 அல்லது 3 மணி நேரங்கள் தூங்குவதும் உடல் பருமன் ஏற்படுவதற்கானக் காரணிகளாகப் பட்டியலிடுகின்றனர் மருத்துவர்கள்.

    எனவே, குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் உணவு விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும். கலோரிகள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் குறைவான அளவு எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்துகள் நிறைந்த உணவுப்பொருட்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரமாவது நடக்கலாம். முடிந்தால் நீச்சல் பயிற்சிக்குச் செல்லலாம். தொடர்ந்து யோகா, தியானம் செய்வது நல்ல பலனைத் தரும்.

    சிலர் கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்காகக் கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுவர். இந்த மாத்திரைகளால் கர்ப்பத்திற்கான ஹார்மோன் சுரப்பில் தடை ஏற்பட்டு, கரு உருவாவது தடுக்கப்படும். இந்த மாத்திரைகளை அனைவரும் எடுத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக கால் வீக்கம், பித்தப்பையில் கல், ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் பின் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

    சில பெண்கள் பரிசோதனை செய்து கொள்ளாமலேயே காப்பர்-டி பொருத்திக் கொள்கிறார்கள். பின்னர் ரத்தப்போக்கு அதிகமாகி அவதிப்படுகின்றனர். எனவே, முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு, எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால் மட்டுமே காப்பர்-டி பொருத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக ரத்தம் எளிதில் உறைதல், வெள்ளைப்படுதல், அதிக ரத்தப்போக்கு போன்ற பிரச்சினைகள் உள்ள பெண்கள் கண்டிப்பாக காப்பர்-டி பொருத்திக் கொள்ளக் கூடாது. அதேபோல் அதிகபட்சமாக 5 வருடங்கள் மட்டுமே காப்பர்-டியைப் பயன்படுத்தலாம். அதற்குமேல் பயன்படுத்தினால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

    நாம் சாப்பிடும் கொழுப்பை உடலில் சேராமல் தடுக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ச*ரியாக சுரக்காமல் போவதைக் கவனத்தில் கொண்டு, அதற்கு முன்பு சாப்பிட்டு வந்த அதிகப்படியான கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது உடல் எடையை பராமரிக்க உதவும்.


    Sponsored Links
    Last edited by chan; 21st Jan 2015 at 08:47 AM.
    malbha likes this.

  2. #1742
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பமா' அப்படினா என்ன?

    * முதலில் ஒரேயொரு முழு ‘செல்’லாக இருக்கும் கரு, நாள்தோறும் வளர்ந்து, இரண்டு இரண்டாக பிரியும். அதேநேரம், ஃபெலோப்பியன் குழாய் வழியாக அவை மெல்ல மெல்ல கருப்பையை நோக்கி நகரும்.

    * கடைசியில் கருப்பையில் போய் அது உட்காரும்போது கிட்டத்தட்ட நூறு செல்களாக பிரிந்திருக்கும்! ஆரோக்கியமான கர்ப்பம் இப்படியிருக்கும்.

    * ஆனால் சில சமயங்களில், கரு கருப்பையை நோக்கி நகராமல், ஃபெலோப்பியன் குழாயிலேயே வளர ஆரம்பிக்கும். இதைத் தான் ‘ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பம்’ என்கிறார்கள்.

    * ஃபெலோப்பியன் குழாயில் நோய் தொற்று இருந்தால்தான் இப்படி ஆகும். பொதுவாக கரு தானாக நகராது. ஃபெலோப்பியன் குழாயின் தசைகள் சுருங்கி விரிந்து, அதன் மூலம்தான் கரு நகர்த்தப்படுகிறது. நோய் தொற்று காரணமாக சேதமடைந்த ஃபெலோப்பியன் குழாய் என்றால் சுருங்கி விரியாது.

    * அல்லது ஃபெலோப்பியன் குழாய் சுருங்கி கருவின் இயக்கத்தை தடுக்கலாம். சில பெண்களுக்கு ஃபெலோப்பியன் குழாயின் அமைப்பே வளைந்து நெளிந்து இருக்கும். இப்படிப்பட்ட குழாய்களால் ‘கரு’வின் இயக்கம் நிச்சயம் தடைபடும்.

    * அதுமட்டுமல்ல, இதனால் உயிருக்கே ஆபத்து வரலாம். ஊசி நுழையும் அளவுள்ள மெல்லிய ஃபெலோப்பியன் குழாயில் கரு வளர ஆரம்பித்தால் என்னாகும்? முடிந்த வரை தாங்கி, முடியாத நிலை வரும்போது வெடித்துவிடும்.

    * உடனே கடுமையான வயிற்றுவலியும், ரத்தப்போக்கும் ஏற்படும். உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டிய விஷயமிது.

    கர்ப்பம் என்று உறுதியானதுமே டாக்டரிடம் அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துக்களை சந்திக்காமலே தவிர்க்கலாம்.


  3. #1743
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மகப்பேறு காலத்திற்கான உணவுகள்:

    * மகப்பேறு காலத்தின் போதும் மற்றும் தாய்பால் கொடுக்கும் காலங்களில் அதிகளவு உணவு உட்கொள்ள வேண்டும்.

    * ஒரு நாளைக்கு 3 வேளைக்கு உணவு உண்பது என்பது இல்லை. கூடுதலாக ஒரு வேளை உணவு உட்கொள்ளலாம்.

    * முழு பருப்பு வகைகள், முளை கட்டின பருப்பு வகைகள் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

    * பால் /இறைச்சி/முட்டை போன்ற உணவுகளை எடுத்தும் கொள்ளலாம்.

    * பழங்கள் மற்றும் காய்கறிகளை மிக அதிகளவில் உட்கொள்ளலாம்.

    * மதுவகைகள் மற்றும் புகையிலை போன்றவை உட்கொள்ளக்கூடாது.

    * பரிந்துரை செய்யப்பட்டபோது மாத்திரம் மருந்தினை எடுத்துக் கொள்ளலாம்.

    * கர்ப்ப காலத்தில் 14 அல்லது -16 வாரங்கள் தொடங்கி தாய்பால் கொடுப்பதை நிறுத்தும் காலம் வரை இரும்புச் சத்து, போலேட் மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்த உணவுகளை கூடுதலாக தொடர்ந்து அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * உணவுக்கு முன்னும் மற்றும் பின்னும் தேனீர் (டி) மற்றும் குழம்பு (காப்பி) போன்ற பானங்கள் உட்கொள்வதினால் உணவில் உள்ள இரும்புச் சத்தானது கிடைப்பது இல்லை. எனவே, மேற்கூறிய பானங்களை உணவிற்கு முன்னும் பின்னும் தவிர்ப்பது மிக அவசியம்.

    * கர்ப்பிணி பெண்களுக்கு நடைபயிற்ச்சி மற்றும் பிற தேவையான உடல்பயிற்ச்சி தேவை। அதிக வேலைகள் செய்வதை அவசியம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் கடைசி மாதத்தில் தவிர்க்க வேண்டும்.


  4. #1744
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கர்ப்பிணிகளை மிரட்டும் நீரிழிவு நோய்

    சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிற நீரிழிவுநோய் ஜனத்தொகை அதிகம் கொண்ட நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதேபோல், வளர்ந்த நாடுகளைக் காட்டிலும், ஜனத்தொகை அதிகமுள்ள வளர்ந்து வருகின்ற மற்றும் பின்தங்கிய நாடுகளில்தான் இந்த நோய் பாதிப்புகள் அதிகம் காணப்படுகின்றன.
    நீரிழிவு நோய் ஒருவருக்கு ஏற்பட, அவரது உணவு பழக்கவழக்கம் மட்டுமின்றி, மரபுவழிக் காரணிகளும் காரணமாக இருக்கிறது. இந்நிலையில், கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவுநோய் பாதிப்பு, அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தை மூலம் மரபுவழியாக பரவலாம் என்பது பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அதாவது, கருவுற்ற தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் இயற்கையிலேயே சுரக்கும் சில ஹார்மோன்கள் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்திவிடுகிறது. அதற்கு ஈடுகொடுக் கும் விதமாக, கருவுற்ற தாய்மார்களின் கணையமும் கூடுதலாக இன்சுலினை சுரந்து இந்த அதிகப்படியான சர்க்கரையை ரத்தத்தில் கரைத்து விடுகிறது. இது இயற்கையான ஒன்று.

    ஆனால், ஒருசில பெண்களுக்கு, அவர்களின் கணையம் இந்த கூடுதலாக தேவைப்படும் சர்க்கரையை சுரப்பதில்லை. இதனால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய்உண்டாகிறது. இதுவே கர்ப்பகால நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பெண்களோடு ஒப்பிடும்போது, இந்திய பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் 11 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    மரபணுக்கூறுகள் மற்றும் குறைந்து வரும் உடல் உழைப்பு ஆகிய இரண்டு காரணிகள் இந்தியப் பெண்கள் மத்தியில் கர்ப்பகால நீரிழிவை தூண்டுவதாகவும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.ஒரு பெண்ணுக்கு கர்ப்பக்காலத்தில் ஏற்பட்ட இந்த நோய், அவளது வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்குமா? என்று கேட்டால், அதற்கும் ஆம் என்று பதிலளிக்கிறார்கள் ஆய்வாளர்கள். அதுபற்றி அவர்கள் மேலும் கூறியதாவது:-

    இந்த கர்ப்பகால நீரிழிவுநோய் காரணமாக, தாயின் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை கருவில் இருக்கும் குழந்தைக்கு தொப்புள்கொடி வழியாக சென்று குழந்தையின் கணையத்தையும் தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்கிறது


  5. #1745
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்?

    அதிக காரம் மசாலா சேர்த்த உணவுகள், எண்ணெயில் பெறித்த உணவுகள், மற்றும் செயற்கை நிறரங்கள் மற்றும் ரசாயனக் கலவை கொண்ட உணவுகளை தவிர்க்கவும்.

    அதிக குளிர் செய்த ஐஸ் கீரீம், குளிர் பானங்களையும் தவிர்க்கவும்.

    தெருவில் விற்றுக்கும் எண்ணெய் உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும்.

    அதிகமாக குளிர்ச்சி தரும் பொருட்களையும் சாப்பிட வேண்டாம்.


    யாரெல்லாம் குழந்தைக்கு பாலூட்டக் கூடாது:

    மார்பகப் புற்று நோய் உள்ளவர்கள்

    எய்ட்ஸ் ,

    எச்.ஐ.வி பாஸிட்டிவ் ஹெபடைட்டிஸ் ஏ, மற்றும் பி

    தொழுநோய் உள்ளவர்கள்

    காலரா

    வெறி நாய் கடியால் ரோபிஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள்

    அதிகபடியாக காய்ச்சலில் அவதிப்படுபவர்கள் ஆகியோர்கள் குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க கூடாது.


  6. #1746
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மைகள்!

    டாக்டர் கே.எஸ்.ஜெயராணி
    பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவனிப்பிற்குரிய உறுப்பாக இருப்பவை, மார்பகங்கள். இவை, பலருக்கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என்றால், 'சிறிதாக இருக்கிறது என்றும், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும்' நினைக்கிறார்கள். திருமணமான பெண்கள் என்றால், 'சரிந்து, தொங்கி காணப்படுகிறது' என்று கவலைப்படுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் அவர்கள் மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
    மார்பகங்கள் என்பவை கொழுப்பு திசுக்களால் சூழப்பட்ட பால் சுரப்பு நாளங்களை உள்ளடக்கியவை. செடியைப் பிடுங்கிப் பார்த்தால், அதன் அடியில் எவ்வாறு பல கிளைகளாக வேர்கள் பரவிச் செல்லுமோ அதைப் போன்றுதான் மார்பகக் காம்பின் அடிப்பகுதியில் பெரிதும், சிறிதுமாக எண்ணற்ற பல கிளை நாளங்கள் உள்ளன. இவற்றை சூழ்ந்துதான் மார்பகத் தசை பெருகும்.
    மார்பகங்களில் இருக்கும் கொழுப்பை பொறுத்துதான் அதன் அளவும், வடிவமும் அமைகிறது. மார்பகம் பெரிதாக இருந்தால் அதில் அவரது குழந்தைக்காக நிறைய பால் சுரக்கும் என்பதும், மார்பகம் சிறியதாக இருந்தால் குறைந்த அளவே பால் சுரக்கும் என்பதும் தவறானது. மார்பக அளவிற்கும், சுரக்கும் பாலின் அளவிற்கும் சம்பந்தம் இல்லை.
    டீன்ஏஜ் பெண்களில் பலர் தங்களது மார்பகங்களில் ஒன்று சிறியதாகவும், இன்னொன்று பெரியதாகவும் இருப்பதாக கருதுகிறார்கள். அது உண்மைதான். நமது கைகளோ, கால்களோ, கண் புருவங்களோகூட இரண்டும் ஒரே அளவில் இருப்பதில்லை. அதுபோலவே மார்பகங்களிலும் லேசான அளவு வித்தியாசம் இருக்கவே செய்யும். அதற்கு காரணம், இரண்டு மார்பகங்களும் ஒரே நேரத்தில் சமமாக வளர்வதில்லை. ஒரு மார்பகம் வளரத் தொடங்கும் காலகட்டத்தில் இன்னொரு மார்பகம் வளர்ச்சியை நிறைவு செய்திருக்கும். அதனால்தான் இந்த சிறிய வித்தியாசம். இதற்கு போய் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அளவு, வடிவத்தில் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தால் மட்டும் டாக்டரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.
    பொதுவாக இரண்டு மார்பகங்களும் சிறிதாக இருந்தால், அதை பெரிதாக்க ஏதேனும் வழி முறை இருக்கிறதா என்று பல பெண்கள் கேட்கிறார்கள். மார்பகங்கள் கொழுப்பு தசைகளால் ஆனவை என்பதால், நிறைய சத்துணவு சாப்பிட்டால் இயற்கையாகவே அவை பெரிதாக வாய்ப்பிருக்கிறது. விசேஷ பயிற்சிகள் செய்து மார்பகங்களை பெரிதாக்க முடியாது. ஏனென்றால் அதற்கான தனி தசைகள் எதுவும் மார்பகத்தில் இல்லை.
    ஹார்மோன் மருந்து மாத்திரைகளால் மார்பகங்களை பெரிதாக்க முடியும். ஆனால் அவை அளவுக்கு மீறி பெருத்து விடும். வலி வரக்கூடும். சீரான அளவில் மார்பகங்கள் இருப்பதுதான் அழகு. சில பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சையின்போது மார்பகத்தின் அடிப்பகுதியில் திறப்பை உருவாக்கி, அதன் வழியாக சிலிக்கான் பையை செலுத்தி உள்ளே வைத்து தைத்து விடுவார்கள். அதனால் மார்பகங்கள் தொய்வின்றியும், பெரிதாகவும் காணப்படும். ஆனால் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாது.
    இயற்கையாகவே மார்பகங்கள் பெரிதாக அமையப்பெற்ற பெண்கள், அதனால் பெரும் அவஸ்தைப்படுவதுண்டு. சிறிதாக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சிறிதாக்கும் அறுவை சிகிச்சைகள் உள்ளன. முதுகுவலியை உருவாக்கும் அளவிற்கு மார்பகங்கள் பெரிதாக இருந்தால், சிறிதாக்கும் முயற்சியில் ஈடுபடலாம். இல்லாவிட்டால் பொருத்தமான பிராக்களை அணிந்து, அவஸ்தைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.
    இளம் பெண்களில் பலரும் மார்பகங்கள் விரைத்த நிலையிலே இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவை கீழ் நோக்கி சரிந்து விடுகின்றன. கொழுப்பு அடிப்பகுதியில் சேருவதால்தான் மார்பகங்கள் கீழ்நோக்கி இழுக்கப்பட்டு சரிகின்றன. காம்புகள் மேல் நோக்கி நிற்கும் அளவிற்கு தோன்றினால், அது சரியாத விரைப்பு மார்பகமாய் காட்சியளிக்கும். மாடலிங் தொழில் செய்யும் பெண்கள் பொதுவாக தங்கள் கைகளை தூக்கியவாறும், தோள்பட்டையை பின்னோக்கி இழுத்த நிலையிலும் காட்சி தருவார்கள். அதற்கு காரணம், அவர்கள் மார்பகங்கள் விரைத்த நிலையில் சரியாமல் காட்சி தரவேண்டும் என்பதுதான்!
    'சில மாடல் அழகிகளின் போட்டோக்களை பார்க்கும்போது அவர்களது மார்பக காம்புகள் விரைப்பாக இருக்கிறதே, எங்களுக்கு அப்படியில்லையே' என்று சில பெண்கள் கேட்கிறார்கள். அந்த போட்டோக்கள் எடுக்கப்படுவதற்கு முன்பு மாடல் அழகிகள் காம்புகளில் ஐஸ் துண்டுகளை வைத்து விடுவார்கள். குளிரில் அது சுருங்கி, விரைத்து நிற்கும். அந்த விரைப்பு அதிக நேரம் நிலைக்காது. மார்பகங்கள் தாய்மையின் சின்னங்கள். அதனால் அவை ஆரோக்கியமாய் பராமரிக்கத் தகுந்தவை.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-women-breast-anatomy-746.jpg  

  7. #1747
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உணவு வழிகாட்டி கூர்நுனிக்கோபுரம் (Food Guide Pyramid)

    நமது அன்றாட உணவு, ஆரோக்கியமான உணவாய் அமைய எந்த மாதிரியான உணவு பழக்கத்தை கடைபிடிக்கவேண்டும் என்ற உதவிக்குறிப்பினைத் தரும் கூர்நுனிக்கோபுர வடிவ விளக்கப்படத்தினை உணவு வழிகாட்டி கூர்நுனிக்கோபுரம் என்றழைக்கின்றோம். இதில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுவகைகள் கூர்நுனிக்கோபுரத்தின் அகன்ற அடிபாகத்தில் குறிபிடப்பட்டுள்ளது. கூர்மையான மேல்புறத்தில் மிகவும் குறைத்து உண்ணவேண்டிய உணவுவகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நமது அன்றாட உணவில் ஒரே மாதிரியான உணவு வகைகளைக் கொள்ளாமல், மாறுபட்ட வகைகளைச் சேர்த்து அதன்மூலம் நமக்கு தேவையான ஊட்டங்களையும், சக்தியையும் பெற இந்த உதவிப்படம் வழிகாட்டுகின்றது
    இந்த கூர்நுனிக்கோபுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகள் ஆறு முக்கிய உணவு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

    1. தானிய உணவுகள்
    2. காய்கறி உணவுகள்
    3. பழ உணவுகள்
    4. பால் உணவுகள்
    5. இறைச்சி உணவுகள்
    6. இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள்
    இந்த ஆறு வகை உணவுகளுமே மனிதனுக்கு மிகவும் அத்யாவசியமானதுதான் என்றாலும், தினசரி உணவில் எவை, எத்தனை பரிமாறும் அளவுகள் (Servings) சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதனை விளக்குவதுதான் இந்த படத்தின் நோக்கம்.
    குறுகிய முதல் நிலையில், மிகவும் குறைவாய் சாப்பிட வேண்டிய இனிப்பு, கொழுப்பு மற்றும் எண்ணெய் வகை உணவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சர்க்கரை, வெண்ணெய், இனிப்பு வகைகள் மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள் முதலியன இதில் அடங்கும். இவற்றில் சக்திகள் (Calories) அதிகம் உள்ளன மற்றபடி முக்கிய ஊட்டங்கள் மிகக் குறைந்த அளவே காணப்படுகின்றன.
    அடுத்த நிலையில் பொதுவாய் விலங்குகளிடம் இருந்து பெறக்கூடிய உணவுகள் இடம்பெற்றுள்ளன. பால் மற்றும் பாலில் இருந்து பெறப்படும் பொருட்கள் ஒரு பிரிவிலும், முட்டை, இறைச்சி மற்றும் கடல் உணவுகள் மற்றுமொரு பிரிவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகை உணவுகளில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் மிகுதியாய் உள்ளன. இவை இரண்டு முதல் மூன்று பரிமாறும் அளவுகள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது.
    மூன்றாம் நிலையில் பொதுவாய் தாவரங்களில் இருந்து கிடைக்கப் பெறும் உணவுகள் இடம்பெற்றுள்ளன. நமக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிக அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தே கிடைக்கின்றது. இவை மூன்று முதல் நான்கு பரிமாறும் அளவுகள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது
    இறுதி நிலையான அகன்ற அடிப்பாகத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டிய தானிய உணவு வகைகள் உள்ளன. அரிசி, கோதுமை மற்றும் ப்ரெட்(bread) போன்ற தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் இவற்றில் அடங்கும். ஐந்து முதல் 12 பரிமாறும் அளவுகள் பரிந்துரைக்கப்படுகின்றது.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-food_guide_pyramid.jpg  

  8. #1748
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பிரசவத்திற்கு பிறகு சாப்பிடக்கூடாத உணவுகள்

    குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிக மிக முக்கியம். தாய் பாலை மட்டுமே உணவாக அருந்தும் குழந்தைக்கு அந்த பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும். பல நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக தாய்ப்பால் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மருத்துவத் தன்மைக் கொண்ட தாய்ப்பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும்.

    இந்த பாலின் தன்மை வெளி உணவுகளால் கெடாமல் பார்த்து கொள்வது தாயின் கடமையாகும். அலர்ஜி ஏற்படுத்தும் சில உண வுகளை தாய் உட்கொள்வதால், அது குழந்தையின் பாலில் கலந்து குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆக வே அந்த உணவுகள் எது என்று ஆராய்ந்து அதை தவிர்க்க வேண்டும். இந்த கடமையை செய்தாலே ஆரோக்கியமான உடலையும், வலிமையையும் குழந்தைக்கு கொடுக்க முடியும். பெற்றோர்களுக்கு இருக்கும் அலர்ஜி குழந்தைகளுக்கும் வர வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    குழந்தைக்கு உணவில் அலர்ஜி அதாவது ஒவ்வாமை இருக்குமெனில் அலர்ஜி தரும் உணவுகளை தவிர்த்து விடுங்கள். இதில் பால் உணவு, சோயா, முட்டையின் வெள்ளை கரு, வேர்க்கடலை, கோதுமை போன்றவை அடங்கும். உணவில் பூண்டு சேர்த்து கொள்வதால் குழந்தையின் பாலில் அதன் வாசம் வரக்கூடும். அதுவும் உணவு எடுத்த அடுத்த இரண்டு மணிநேரத்தில் இந்த வாசனையை பாலில் காண முடியும். சில குழந்தைகளுக்கு இந்த வாசனை ஒற்றுக் கொள்ளாமல் போகும் என்பதால் தவிர்த்து விடுங்கள்.

    எச்சில் வழிதல், டயப்பரால் வரும் எரிச்சல் போன்றவை சிட்ரஸ் பழங்களை எடுத்து கொள்வதால் வருகின்றது. ஆகவே ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை தவிர்த்து, பப்பாளி மற்றும் மாங்காய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பாலாடைக் கட்டி, தயிர், ஐஸ் க்ரீம் போன்றவையை உட்கொண்டால் சில நேரங்களில் அவை பாலுடன் கலந்து குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வாந்தி, தூக்கமின்மை, வரட்டு இருமல் போன்றவை வரலாம். காபி அருந்துவதால் குழந்தைக்கு சில நேரங்களில் சோர்வும், தூக்கமின்மையும் வர நேரிடும். ஆகவே காபி அருந்தி குழந்தைக்கு கஷ்டம் ஏற்படுத்த வேண்டாம்.

    முக்கியமாக ஆரம்பக் காலத்தில் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. மது அருந்துவதால் குழந்தைக்கு அதிக தூக்கம், மயக்கம், தளர்வு, அதிக உடல் எடை போன்றவை நேரலாம். மேலும் மது தாய் பால் சுரப்பதிலும் பாதிப்பு ஏற்படுத்தலாம். ஆகவே குழந்தையை நல்ல முறையில் வளர்க்க மது அருந்துவது வேண்டாம். குறிப்பாக வாந்தி, தூக்கமின்மை, வரட்டு இருமல் போன்றவை வரலாம். காபி அருந்துவதால் குழந்தைக்கு சில நேரங்களில் சோர்வும், தூக்கமின்மையும் வர நேரிடும். ஆகவே காபி அருந்தி குழந்தைக்கு கஷ்டம் ஏற்படுத்த வேண்டாம்.

    முக்கியமாக ஆரம்பக் காலத்தில் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. மது அருந்துவதால் குழந்தைக்கு அதிக தூக்கம், மயக்கம், தளர்வு, அதிக உடல் எடை போன்றவை நேரலாம். மேலும் மது தாய் பால் சுரப்பதிலும் பாதிப்பு ஏற்படுத்தலாம். ஆகவே குழந்தையை நல்ல முறையில் வளர்க்க மது அருந்துவது வேண்டாம். உணவில் அதிக அளவில் மசாலா மற்றும் காரத்தைக் குறைத்து கொள்ள வேண்டும். அதிக மசாலா மற்றும் காரம் குழந்தைக்கு அலர்ஜி, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே காரம் அதிகம் உள்ள மிளகு, இஞ்சி, எலுமிச்சை சாறு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.


  9. #1749
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    குழந்தையின்மைக்குக் காரணம் வைட்டமின் டி குறைபாடா?

    எலும்புகளுக்கும், பற்களுக்கும் அவசியத் தேவை கால்சியம் என்பதை எல்லோரும் அறிவோம். அந்த கால்சியம் உடலில் கிரகிக்கப்பட வைட்டமின் டி சத்து மிக மிக அவசியம். ‘‘எலும்புகளின் ஆரோக்கியத்தைக் காப்பது என்பதைக் கடந்து, இந்த வைட்டமினுக்கு வேறு சில முக்கிய குணங்களும் உண்டு. நீரிழிவு வராமல் தடுப்பதில் தொடங்கி, குழந்தையின்மையைத் தவிர்ப்பது வரை அதில் பலதும் அடக்கம்...’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா.

    ‘‘வைட்டமின் டி சத்தை இந்த நூற்றாண்டின் அற்புதக் கண்டுபிடிப்பு என்றே சொல்லலாம். புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக உண்டாகும் பல்வேறு நோய்கள், ஹார்மோன் பிரச்னைகள் எனப் பலதுக்கும் இந்த வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எலும்புகளில் மட்டுமின்றி, உடல் திசுக்கள் பலவற்றிலும் இந்த வைட்டமின் இருப்பதும், கர்ப்பப் பை, சினைப்பை, மூளையின் பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி, கணையம் போன்றவற்றிலும்கூட இருப்பதும் 1966ல்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

    வைட்டமின் டி குறைபாடு, கணையத்தில் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை குறைத்து, அதன் காரணமாக நீரிழிவுக்கு வழி வகுக்கிறது. வைட்டமின் டி சப்ளிமென்ட் எடுத்துக் கொள்வோருக்கு நீரிழிவு கட்டுப்பாட்டில் வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதிக ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்ற பயங்கர பிரச்னைகளைக் கூட இதன் மூலம் கட்டுக்குள் கொண்டு வர முடியும். சினைப்பை மற்றும் கர்ப்பப் பையிலும் இந்த வைட்டமின் டி சத்து இருப்பதால்தான், புரொஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் போதுமான அளவு சுரக்கின்றன.

    வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிற போது, அது பிசிஓடி எனப் படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னைக்குக் கூட காரணமாவது கண்டறியப்பட்டுள்ளது. வைட்டமின் டி குறைபாடு உள்ள பெண்களுக்கு, அதைத் தெரிந்து கொண்டு, சப்ளிமென்ட் கொடுக்கும் போது, முறையற்ற மாதவிடாய் முறைப்படுவதும், குழந்தையின்மைப் பிரச்னை சரியாவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு உயிரணு உற்பத்திக் குறை பாட்டுக்கும், அந்த அணுக்களின் தரக் குறைவுக்கும்கூட வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்பது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு.

    அசாதாரணமான செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், செக்ஸில் நாட்டம் குறைவதற்கும்கூட இந்தக் குறைபாடு அதீதமாக இருப்பதே காரணமாகலாம் என்றும் தெரிய வந்திருக்கிறது. குறைபாடு உள்ளவர்களுக்கு வைட்டமின் டி சப்ளிமென்ட் கொடுத்த பிறகு இந்த எல்லா பிரச்னைகளும் சரியாவதும் தெரிய வந்திருக்கிறது. இத்தனை அவசியமான இந்த வைட்டமினை நம் உடலே உற்பத்தி செய்கிறது. சூரிய வெளிச்சத்தில் உள்ள யுவி கதிர்கள், ஒரு வித ஹார்மோனின் தூண்டுதலின் உதவியுடன், டீஹைட்ரோ கொலஸ்ட்ரால் என்பதை சில வேதியல் மாற்றங்கள் செய்து, வைட்டமின் டியாக மாற்றித் தருகின்றன.

    ஈரல், மீன், சில வகை கடல் உணவுகள், காளான் போன்றவற்றில் இந்தச் சத்து அதிகமிருப்பதால், இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கை, கால் வலி, எலும்பு வலி, உடல் வலி போன்றவை இருந்தால், வைட்டமின் டி சத்துக் குறைபாடு இருக்கிறதா என்பதை ரத்தப் பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அப்படிக் குறைபாடு இருப்பது தெரிந்தால், ஊசி அல்லது சப்ளிமென்ட்டுகளின்உதவியுடன், 8 முதல் 10 வாரங்களில் சரி செய்ய முடியும். இவை தவிர தினம் 10 நிமிடங்களாவது சூரிய வெளிச்சம் படும்படி இருப்பது அவசியம். காலை வெயிலும், மாலை வெயிலும் உடலுக்கு நல்லது. வெயிலே படாமல் சன் ஸ்கிரீன் உபயோகிப்பதும், முகமூடி போட்டுச் செல்வதும் வைட்டமின் டி குறைபாட்டுக்கு காரணமாகி, பல பயங்கர பிரச்னைகளைத் தரலாம். ஜாக்கிரதை...’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா.


  10. #1750
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தாய்மையை தள்ளி போடாதீர்கள்!

    இளவயது பெண்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்காக தன்னுடைய திருமண வயதை தள்ளிப்போடுகிறார்கள். அப்படியே 24-26 வயதிற்குள் திருமணம் முடிந்தாலும் பிள்ளை பேறை தள்ளிப் போட நினைக்கிறார்கள். நாம் நல்ல நிலைக்கு வந்த பின்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்து பெரும்பாலானவர்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்து கின்றனர். “பருவத்தே பயிர் செய்” என்பது பயிர்களுக்கு மட்டுமல்ல. மகளிருக்கும் இது பொருந்தும்.

    சில பெண்கள், திருமணத்திற்கு பிறகு உடனடியாக குழந்தை பெற விரும்பாமல், கருத்தடை சாதனங்களை உபயோகித்து, பல ஆண்டுகள் கழித்து குழந்தை பெற விரும்பும் காலத்தில் அவற்றை நீக்கிக் கொண்டால் உடனடியாக கருத்தரிக்கலாம் என திட்டம் தீட்டுகின்றனர். அது அவ்வளவு சுலபம் அல்ல. தங்கள் தேவைகள் பூர்த்தியாகி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கும் போது அவ்வளவு சுலபமாக கருத்தரிக்க இயலாது.

    உங்கள் மனதில் ஏன் அவ்வாறு என்ற வினா தொடுக்கலாம்:

    உடலில் மற்ற உறுப்புகளை விட பெண் இனப்பெருக்க உறுப்புகள் வேகமாக முதிர்ச்சியடைந்து விடுகின்றன. பெண்ணின் நடுத்தர வயதிலேயே மாதவிலக்கு முற்றுப் பெறுதல் வந்து கருத்தரிப்பதற்கான வாய்ப்பு இல்லாமலேயே போய்விடுகிறது. பொதுவாக பெண்களுக்கு முப்பது வயதிலிருந்தே கருத்தரிப்பதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைகிறது. நாற்பது வயதுக்கு மேல், மேலும் அதிக சதவிகிதத்தில் வாய்ப்புகள் குறைந்து விடுகிறது.

    பெண்ணின் வயதைப் பொறுத்து அவளது கரு முட்டைகளும் பாதிக்கப்படுகின்றன. உடல்ரீதியாகக் கருப்பை முதிர்ந்துவிடும் நிலைகருத்தரிப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. முப்பது வயதுக்கு மேற்பட்ட நிலையில் செயற்கை முறையில் கருத்தரிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் பெண்களின் கர்ப்பம் நிலைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அதில் முட்டை உருவாவது முக்கிய இடத்தை வகிக்கிறது. முட்டை வெளிப்படுவது, வயது முதிர்ந்த நிலையில் தன் கணவர் வெளிப் படுத்தும் குறைபாடுள்ள விந்தணுவோடு அது சேர முடியாமல் சிதைவது என பல பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகிறது.

    30 முதல் 35 வயதுக்கிடையில் கருத்தரிக்கும் வாய்ப்பு அதற்கு முன்னதாக கருத்தரிப்பதில் இருக்கும் வாய்ப்பை விட இருமடங்கு தள்ளிப்போகிறது. 30 வயதை தாண்டினாலே பெண்களுக்கு குழந்தை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. உடற்கூறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஹார்மோன் சார்ந்த காரணிகள், மற்றும் பிற நோய்களும் ஏற்படுகின்றன. வயது ஆக ஆக உடலின் ஆற்றல் குறைய ஆரம்பிக்கிறது.

    மேலும் உடலில் ஹார்மோன்களால் மாற்றங்கள் பல நிகழ்கின்றன. உயர் ரத்த அழுத்தம், கருப்பையில் கழலைகள், சினைப்பையின் செயல்திறன் குறைதல், நோய் எதிர்ப்புத் திறன் குறைவு, உடல் பருமன், நீரிழிவு, ரத்த சோகை போன்ற பல்வேறு பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க நேரிடுகிறது. இதில் பெரும்பங்கு வகிப்பது மாதவிலக்கு குறைபாடுகளாகும். ஹார்மோன் குறைவின் காரணமாக ஒழுங்கற்ற உதிரப்போக்கு அதாவது விட்டு விட்டு வருதல், சினைப்பையால் கருமுட்டைகளை உருவாக்க இயலாத நிலை போன்றவை ஏற்படுகின்றன.
    கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடுபவராக இருந்தால் அவற்றை நிறுத்திய மூன்று மாதங்களுக்குப் பிறகு கருத்தரிக்கும் வாய்ப்பை உண்டாக்கிக் கொள்வது நல்லது. ஏனென்றால் இந்த மூன்று மாத இடைவெளியில் உடலில் உள்ள ஹார்மோன்களின் நிலை பழைய நிலைக்குத் திரும்பிவிடும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

    முதிர் வயதுப் பெண்கள் பிரசவிக்கும்போது இடுப்புக்கூட்டுப் பகுதியிலுள்ள எலும்புகளின் விரிந்து கொடுக்கும் தன்மை வெகுவாக குறைந்துவிடுவதால் சுகப் பிரசவம் நடப்பது அரிதாகிறது. இதனால் சிசேரியன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தகுதியான வயதில் தாய்மை அடையாததால் பெண்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

    இவை அனைத்தும் அறிவியல் பூர்வமானது என்பதாலேயே மருத்துவர்கள் தகுதியான வயதில் குழந்தைப்பேறு அடைய வேண்டும் என்ற கொள்கையை ஆதரிக்கின்றனர். இதனால்தான் நம் முன்னோர்கள் “பருவத்தே பயிர் செய்” என்றார்கள். இதை கருத்தில் கொண்டு ஏற்ற வயதில் குழந்தைப் பேறை பெற்றால்தால் தானும் ஆரோக்கியமாக இருக்க முடியும். குழந்தையையும் ஆரோக்கியமாக வளர்க்க முடியும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter