Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1751
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கருத்தடை அறுவை சிகிச்சைக்குப் பிறகும் கருத்தரிக்கலாம்.

    பத்து மாதம்சுமந்து பெற்றெடுத்த குழந்தையைப் பறி கொடுத்து நிற்கிற சோகம், எந்தத் தாய்க்கும் நகர வேதனையே. அதிலும் அது ஒரே குழந்தையாக இருந்து, ஓரு குழந்தை போதும் என்கிற முடிவில் குடும்பக் கட்டுப்பாடும் செய்துவிட்ட பெண்களின் நிலை சோகத்தின் உச்சம். இருந்த குழந்தையும் போயாச்சு இன்னொரு குழந்தைக்கும் வழியில்லை என்கிற நிலையில் அவர்களது நிலை?

    குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகும் குழந்தை பிறக்க வழி செய்யும் வசதி மருத்துவத்தில் உண்டு என்கிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். டியூபோபிளாஸ்டி எனப்படுகிற அந்த அறுவை சிகிச்சையைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர்.

    கர்ப்பப்பைக்கும் பக்கத்துல உள்ள குழாய்லதான் கருமுட்டையும், உயிரணுக்களும் சந்திக்கும். குழந்தை வேண்டாம்னு முடிவு பண்றவங்களுக்கு, இந்த பாதையை வெட்டிட்டா, அந்த சந்திப்பு நிகழாது. கருமுட்டை உற்பத்தி இருக்கும். ஆனா அது உயிரணுக்களை சந்திக்க வாய்ப்பில்லாம, கர்ப்பம் தரிக்காது. இதைத்தான் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைனு சொல்றோம்.

    இதை பண்ணின பிறகு சில பெண்களுக்கு துரதிர்ஷ்டவசமா, முதல் குழந்தை இறந்து போகலாம். இன்னொரு குழந்தை வேணும்னு நினைக்கிறவங்களுக்கு வெட்டப்பட்ட குழாய்களை மறுபடி சேர்த்து தைக்கிறதுத்தான் டியூபோபிளாஸ்டினு பேர் குடும்பக் கட்டுப்பாடு அறுவைக்குப் பிறகு அந்தக் குழாய்களோட நீளம் ஒரளவு குறையும். போதுமான நீளம் இருக்கிற பட்சத்துல டியூபோபிளாஸ்டி சிகிச்சை சாத்தியம்.

    முன்னலாம் வயிற்றை கிழிச்சி பெரிய ஆபரேஷனா பண்ணிட்டிருந்த இந்த சிகிச்சையை இன்னிக்கு வயிற்ற கிழிக்காம லேப்ராஸ்கோப் முறைலயே பண்ணிடலாம். மறுபடி இணைச்சு தைக்கப்பட்ட குழாய்கள் சரியா இயங்குதானு சரி பார்க்க, அதுக்குள்ள ஒரு விதமான 'டை' மாதிரியான திரவத்தைச் செலுத்திப் பார்ப்போம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு மாசம் பொறுத்திருந்து அடுத்தடுத்த மாசங்கள்ல அவங்க கருத்தரிக்க முயற்சிக்கலாம்.

    கருமுட்டை உற்பத்தி நல்லா இருக்கிற வயசு வரை இந்த சிகிச்சை பலன் தரும். அதே சமயம் இது 100 சதவீதம் பலனளிக்கக் கூடியதுனு சொல்ல முடியாது. குழாய்களோட செயல்திறன்ல கோளாறு இருந்தாலோ, அதுக்குள்ள தொற்று ஏற்பட்டிருந்தாலோ இந்த சிகிச்சை பலன் தராமப் போகலாம். டியூபோபிளாஸ்டி முறைல குழந்தை பெற முடியாதவங்க டெஸ்ட் டியூப் முறை பலன் தரும் என்கிறார் மருத்துவர் மாலா ராஜ்.


    Sponsored Links

  2. #1752
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கர்ப்பப்பை இறக்கம்

    குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிந்து விடுவதில்லை பெண்ணின் போராட்டங்கள். பிரசவத்துக்குப் பிறகும் அவள் சந்திக்கிற உடல், மன உபாதைகள் ஏராளம். அதிலும் சுகப்பிரசவமான பெண்களுக்கு ஏற்படும் ‘அடி இறக்கம்’ என்கிற பிரச்னை, அவர்களைத் தூங்கவிடாமல் செய்யும். கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

    ‘‘சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுகிற பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் பாதிக்கிறது. நீண்ட நேரம் வலியுடன் அவதி, கஷ்டப்பட்டு, முக்கி, குழந்தையை வெளித்தள்ளுவது, பிரசவத்துக்குப் பிறகு ஓய்வெடுக்காதது என இதற்குப் பல காரணங்கள். பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும். போதுமான அளவு ஓய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள்களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும்.

    பெரும்பாலும் மெனோபாஸ் வயதில்தான் இது தன் வேலையைக் காட்டத் தொடங்கும். அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும். கசிவும் அடிக்கடி இன்ஃபெக்ஷனும் முதுகு வலியும் இருக்கும். கர்ப்பப்பை இறக்கத்தில் 3 நிலைகள் உள்ளன. முதல் மற்றும் இரண்டாவது நிலைகளில், இறங்கிய கர்ப்பப்பை பகுதியை லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் இழுத்து வைத்து, டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம். அது அதே நிலையிலேயே அடுத்த சில வருடங்களுக்கு இருக்கும்.

    3வது நிலை இறக்கம் சற்றே சிக்கலானது. இந்நிலையில் கர்ப்பப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும். சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு, சிறுநீர் கழித்த பிறகும் மிச்சமிருக்கிற உணர்வு, தேங்கிப் போகிற சிறுநீரின் மூலம் இன்ஃபெக்ஷன் உண்டாகி, சிறுநீரகங்களே பழுதடைவது போன்றவையும், மலச்சிக்கலும், மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும்.

    இது தவிர சிலருக்கு பிறவியிலேயே திசுக்கள் பலவீனமாக இருந்து, குழந்தை பிறப்பதற்கு முன்பே கர்ப்பப்பை இறக்கம் ஏற்படலாம். இது பரம்பரையாகத் தொடர்ந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது, முதல் நிலை பாதிப்பாக இருப்பின், ‘ஸ்லிங்’ எனப்படுகிற அறுவைசிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது... இவையெல்லாம் பிரச்னை தீவிரமாகாமல் தடுக்கும் வழிகள்...


  3. #1753
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கர்ப்பப்பை இறக்கம் ஏன்

    பெண்மையின் வரப்பிரசாதமே கர்ப்பப்பைதான். பூப்பெய்துவதில் தொடங்கி, குழந்தை பெறுவது வரை பெண்மையின் அடையாளமாகவும் கவசமாகவும் இருப்பது அதுவே. அப்படிப்பட்ட கர்ப்பப் பை, அதன் இடத்தில் இருக்கும் வரைதான் ஆரோக்கியம்.

    இருப்பிடத்திலிருந்து இறங்கினாலோ ஆபத்துதான்! குழந்தை பெற்ற பெண்கள் பலரையும் பாதிக்கிற பிரச்னைகளில் ஒன்று கர்ப்பப்பை இறக்கம். அதற்கான காரணங்கள், தீர்வுகள், தவிர்க்கும் முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

    ‘சாதாரணமாக 2 செ.மீ. அளவுள்ள கர்ப்பப்பை, வயதுக்கு வரும் போது, 5 முதல் 6 செ.மீ. வரை வளர்கிறது. பிரசவத்தின் போது 5 கிலோ எடையுடன், 30 செ.மீ. நீளத்துக்கு விரிகிறது. குழந்தைப்பேற்றைத் தவிர, கர்ப்பப்பைக்கு வேறு வேலைகள் கிடையாது. பிரசவத்துக்குப் பிறகு அது சுருங்கி, மீண்டும் பழைய அளவுக்கு வரும்.

    கர்ப்பப்பை இறங்க, அதிக பருமன், வயிற்றிலுள்ள கொழுப்பின் பளு போன்றவை முக்கியமான காரணங்களாக இருக்கும். ஆஸ்துமா, தொடர் இருமல் காரணமாக, உள் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி, கர்ப்பப்பை வெளியே தள்ளப்படலாம். பிரசவத்தின் போது எடை அதிகமாகி, அதிகம் முக்கி, குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பதும் கர்ப்பப்பை இறக்கத்துக்குக் காரணமாகலாம்.

    பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்குவதற்கு முன்பே, அடுத்த கர்ப்பம் தரிப்பது, மலச்சிக்கல், இயற்கையாக கர்ப்பப் பையைச் சுற்றியுள்ள தசை நரம்புகள் பலவீனமாக இருப்பது போன்ற பிற காரணங்களாலும், ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை இறக்கம் வரலாம். கர்ப்பப்பை இறக்கத்தால் நடப்பது சிரமமாகும். கர்ப்பப்பை உரசி, புண் உண்டாகும்.

    கர்ப்பப்பை இறங்கும் போது, முன் பாகத்திலுள்ள சிறுநீர் பையும், பின் பக்கத்திலுள்ள மலக்குடலும் சேர்ந்து இழுக்கப் படலாம். இறங்கிய கர்ப்பப்பையைத் தற்காலிகமாக மேலே தூக்கி வைக்க, பிளாஸ்டிக் வளையம் உண்டு. ‘ஸ்லிங் ஆபரேஷன்’ மூலம் வயிற்றின் வழியே, கர்ப்பப் பையை மேலே தூக்கிப் பொருத்தலாம்.

    குழந்தை பெற்று அதிக வயதான பெண்களுக்கு மட்டுமே இப்பிரச்னையின் போது, கர்ப்பப்பையை அகற்ற வேண்டி வரும். பிரசவத்துக்குப் பிறகு இடுப்பெலும்புத் தசைகள் உறுதிபெற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

    பிரசவத்தின் போது, ஆயுதம் போட்டுக் குழந்தையை எடுப்பது, அதிக சிரமப்பட்டுக் குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நலம். பருமன் இந்தப் பிரச்னைக்கான மிக முக்கிய காரணம் என்பதால், எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.’’


  4. #1754
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று

    பொதுவாக கர்ப்ப காலத்தில் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று வரக்கூடிய நோயாகும். ஒரு பெண் கர்ப்பம் அடையும் போது, அவரது உடலுக்குள் கர்ப்ப ஹார்மோன் உருவாகிறது, இது அந்த பெண்ணின் சிறுநீர் பாதையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

    பெண்ணின் கருப்பை வளரும் போது, இது சிறுநீர்ப்பையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. சிறுநீர்ப்பையில் இருந்து முழுமையாக சிறுநீர் வெளியேற்றுவதைத் இது தடுக்கிறது. இதனால், சிறுநீர்ப்பையில் தேங்கி நிற்கும் சிறுநீர், நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஒரு நல்ல காரணியாகும்.

    ஆரம்பத்திலே நீங்கள் இதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால், இது சிறுநீரகத்தில் கூட நோய்த்தொற்றை ஏற்படுத்தும். எனவே கர்ப்ப காலத்தில் இந்நோய் பற்றி பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியமாகும். கர்ப்ப காலத்தின் போது, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்படுவற்கான காரணங்களை பார்க்கலாம்.

    * மலம் கழித்தவுடன், யோனிக் குழாயினுள் மலம் கழுவப்படுதல்/துடைக்கப்படுதல்
    * உடலுறவு
    * கர்ப்பம் காரணமாக கருப்பை விரிவடைவதால், இது சிறுநீர்ப்பையில் பாதி அடைப்பை ஏற்படுத்துகிறது.

    இதன் சில அறிகுறிகள் பின்வருமாறு:

    * சிறுநீர் கழிக்கும் போது, எரிச்சல் உணர்வு
    * சிறுநீர் கழிக்கும் போது அசெளகரியம் மற்றும் கஷ்டம்
    * தெளிவற்ற சிறுநீர்/மங்கலான சிறுநீர்
    * துர்நாற்றத்துடன் கூடிய சிறுநீர்
    * அடிக்கடி சிறுநீர் கழித்தல்
    * சிறுநீர் கழிக்கும் போது அவசர உணர்வு
    * கீழ் முதுகுப்பக்க அடிவயிற்றில் தசைப்பிடிப்பு

    சிறுநீர்ப்பைத் நோய்தொற்றுக்கான அறிகுறிகள்:

    சிறுநீர்ப்பை நோய்த்தொற்று காரணமாக, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்பட்டால், பின்வரும் அறிகுறிகள் தோன்றும்.

    சிறுநீர் நிறமாற்றம்
    அடிக்கடி சிறுநீர்க் கழித்தல்
    சிறுநீர் கழிக்கும் போது வலி
    துர்நாற்றம்

    சிறுநீர்ப்பை நோய்தொற்றுக்கான வீட்டு வைத்தியங்கள்:

    • அன்னாசிப்பழத்தில் பாக்டீரியாவை எதிர்க்கும் சிறந்த பண்பு உள்ளதால், உண்மையில் இது சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுக்கான சிகிச்சைக்கு மிகவும் சிறந்தது. அன்னாசிப்பழத்தில் புரோமலைன் உள்ளது, இது சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுக்கான சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளது. காலை உணவுடன் அல்லது மதிய உணவிற்குப் பின்னர் நீங்கள் அன்னாசியை பழமாகவே சாப்பிடலாம். அதேப்போல் மிக்ஸியில் அடித்து ஜூஸ் வடிவிலும் ஒரு முழு டம்ளர் குடிக்கலாம்.

    • மீண்டும் மீண்டும், அடிக்கடி, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்படும் நோயாளிக்கு, டாக்டர்கள் 5000 மிகி வைட்டமின் சி சாப்பிடுமாறு பரிந்துரைப்பார்கள். சிறுநீரை அமிலப்படுத்தும் வைட்டாமின் சி-யின் பயன் காரணமாக உங்கள், சிறுநீர்ப்பை ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் சிறுநீர்ப்பையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு போதுமான அளவு வைட்டமின் சி எடுத்துக் கொள்ள வேண்டும்.


  5. #1755
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்தக்கசிவு

    கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக அளவில் கஷ்டத்தையும் அனுபவிப்பார்கள். அதில் ஒன்று தான் இரத்தக்கசிவு ஏற்படுவது. பொதுவாக கர்ப்பிணிகளுக்கு இரத்தக்கசிவு ஏற்படக்கூடாது.

    இருப்பினும் சிலருக்கு சில காரணங்களால் கர்ப்ப காலத்தில் இரத்தக்கசிவு ஏற்படும். அதற்காக பயப்பட வேண்டாம். ஏனெனில் இரத்தக்கசிவானது கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஒருசில காரணங்களால் ஏற்படக்கூடும். அதேப்போல் கர்ப்பத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், இரத்தக்கசிவு ஏற்படும். இங்கு கர்ப்பிணிகளுக்கு எப்போதெல்லாம் இரத்தக்கசிவு ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

    • கர்ப்பிணிகளின் கருப்பை வாயானது மிகவும் சென்சிடிவ்வாக இருந்தால், அப்போது லேசாக இரத்தக்கசிவு ஏற்படும். அதுவும் கர்ப்பமாக இருக்கும் போது உறவில் ஈடுபட்டால் இத்தகைய இரத்தக்கசிவு ஏற்படும்

    • கருமுட்டையானது வளர்ந்து, கருப்பையில் பதியும் போது, கருப்பையில் நிறைந்துள்ள இரத்தமானது கசிய ஆரம்பிக்கும். இதன் காரணமாகத் தான் சிலருக்கு கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் லேசாக இரத்தக்கசிவு ஏற்படுகிறது.

    • நஞ்சுக்கொடியானது கருப்பை சுவரில் இருந்து முழுமையாகவோ அல்லது பாதியாகவோ தகர்ந்து காணப்பட்டால், அப்போதும் இரத்தக்கசிவு ஏற்படும். பொதுவாக இந்த நஞ்சுக்கொடி தகர்வானது பிரசவத்திற்கு சிறிது நாட்களுக்கு முன் அல்லது பிரசவம் நடைபெறும் போது ஏற்படும்.

    • கருமுட்டையானது கருப்பையில் வளராமல், வேறு இடங்களில் அதாவது கருமுட்டை குழாயில் வளர ஆரம்பித்தால், அப்போதும் இரத்தக்கசிவு ஏற்படும். அதுமட்டுமின்றி இந்த காரணத்தினால் இரத்தக்கசிவு வந்தால், அத்துடன் கடுமையான வலி மற்றும் பிடிப்புக்கள் அடிவயிற்றில் ஏற்படக்கூடும்.

    • நஞ்சுக்கொடியானது கருப்பை வாயை முழுமையாவோ அல்லது பாதியாகவோ உள்ளடக்கியிருந்தால், அளவுக்கு அதிகமாக இரத்தக்கசிவு ஏற்படும். இந்த நிலையில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், பெண்கள் தரையில் நேராக படுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த மாதிரியான சூழ்நிலையில் தாய் மற்றும் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க சிசேரியன் செய்யக்கூடும்.


  6. #1756
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    PREGNANT - சுகப்பிரசவம் சுலபமே! கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய பத்து யோசனைகள்!

    பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய நெகிழ்வையும் ஒருசேர உணர இன்றைய காலகட்டத்தில் எத்தனை
    தாய்களால் முடிகிறது?

    இயற்கையான சுகப்பிரசவம் நிகழ வாய்ப்பு இருக்கும் நிலையிலும்கூட அறுவைச் சிகிச்சை செய்யச் சொல்லும் வற்புறுத்தல்கள் மருத்துவர்கள், கர்ப்பிணிகள் என இரு தரப்பிலுமே மிகுதியாகிவிட்டன. சுகப்பிரசவம் நடப்பதில் பிரச்னை என்று வந்தால் மட்டுமே அறுவைச் சிகிச்சைக்குப் போக வேண்டும் என்கிற புரிதல் அனைத்து தாய்மார்களுக்கும் உருவாக வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் இங்கே விளக்குகிறார்கள் பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணர்களான சென்னை ஷமீக் அக்தார், ஸ்ரீ கலா பிரசாத், திருச்சி பி. கமலம், பிரசவ கால உடற்பயிற்சி ஆசிரியர் ரேகா சுதர்சன்...

    1 கருத்தரிப்பதற்கு முன் கலந்தாய்வு...

    திருமணமாகி கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன் - மனைவி இருவரும் மருத்துவரிடம் ஒரு கலந்தாய்வுக்குச் செல்வது நல்லது. இந்தக் கலந்தாய்வில் பெண் மற்றும் அவரது கணவரின் குடும்பச் சூழல், குடும்ப வரலாறு ஆகியவற்றை மருத்துவர் தெரிந்துகொள்வதோடு, தம்பதியில் யாருக்கேனும் ஏதேனும் பரம்பரை நோயோ, பெண்ணுக்கு தைராய்டு, சர்க்கரை நோய், இதய நோய், ஹெபடைடிஸ் பி, ரத்த அழுத்தம், வலிப்பு நோய், ஹெச்.ஐ.வி. போன்ற நோய்களோ இருக்கின்றனவா என்பதையும் கண்டறிவார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரசவத்துக்கு ஒரு தம்பதி தயாராக இது உதவும்.

    2 உணவை விரும்பு!

    கருவுற்ற நாளில் இருந்து தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கலாம். சிலருக்கு உடலில் நீர்ச் சத்து குறைந்து எடை குறையலாம். சுகப்பிரசவத்துக்கு தாயின் உடல்நிலை இன்றியமையாதது. அதேபோல், குழந்தையின் எடை 3 முதல் 3.5 கி.கி. வரை இருந்தால்தான் குழந்தையின் தலை வெளியே வர ஏதுவாக இருக்கும். இதனால், உணவு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம்.

    3 எதைச் சாப்பிடலாம்?

    முதல் மூன்று மாதங்களில் மசக்கை காரணமாக உணவை மனம் வெறுக்கும். இந்த நாட்களில்தான் உணவில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். திட உணவு எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் பழச்சாறு போன்ற திரவ உணவுகளையேனும் எடுத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய சமயங்களில் பெண்கள் உணவை வெறுத்தால், அதுவே ஊட்டச் சத்துக் குறைவை உருவாக்கி ரத்த சோகைக்கு வழிவகுத்து, குழந்தையின் ஆரோக்கியத்தையும் தாயின் உடல் - மன வலிமையையும் குறைத்துவிடும். ஆகவே, தொடக்கத்தில் இருந்தே நல்ல ஊட்டச் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியம். நீர்ச் சத்துக்கு இளநீர், வாந்தியை எதிர்கொள்ள மாதுளை, இரும்புச் சத்துக்குப் பேரீச்சை ஆகியவை இந்த நாட்களில் பேருதவி செய்யும். 4-வது மாதத்தில் இருந்து இரும்புச் சத்து மிக்க கீரை, காய்கள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், உடலில் இரும்புச் சத்தின் அளவு குறைந்தால் ஹீமோகுளோபினின் அளவும் குறையும். இந்த ஹீமோகுளோபின்தான் உடலின் பிற பாகங்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்ல உதவுகிறது. இதன் அளவு குறையும்போது குழந்தைக்கும் தேவையான பிராண வாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படும். இதனால் போதிய இரும்புச் சத்து உள்ள உணவுகளையோ, மாத்திரைகளையோ எடுத்துக்கொள்வது தேவையாகிறது. நார்ச் சத்துக்கள் நிரம்பியுள்ள காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், மலச்சிக்கல் பிரச்னையை முறியடிக்க முடியும். கீரை, ஓட்ஸ், புதினா, உலர் திராட்சை, கொத்தமல்லி, பேரீச்சை போன்ற உணவுப் பொருட்களில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது. கொண்டைக்கடலை, ராஜ்மா, பயறு வகைகளில் கால்சியம், புரதச் சத்து அதிகம் இருக்கிறது. உருளை, கேரட், வேர்க்கடலை, பாதாம் பருப்பு வகைகளில் புரதம் இருக்கிறது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நூக்கோல் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது. அன்றாட உணவில் இவற்றைச் சமச்சீரான விகிதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தது தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடித்தால், தாய்க்கு நல்லது. குறிப்பாக பனிக்குடத்துக்கு நல்லது!
    contd..



  7. #1757
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    4 குனி, வளை, நிமிர்!


    சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். சிறிய அளவுள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ள கையில் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக்கொள்ளும். பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுவது நல்லது. அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்ஃபின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இதனால், உடல் தசைகள் வலுப்பெற்று, குழந்தை சரியான நிலையில் இருக்கும். பெண்களின் பிறப்புறுப்பு நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும். பிரசவமும் சுலபமாகும். தினமும் காலையில், முக்கால் மணி நேரம் மூச்சு இரைக்காதவாறு மெதுவாக நடக்கலாம்.

    5 சபாஷ் சரியான எடை!

    கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம். ஆனால், சில பெண்களுக்கு 15 கிலோவுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக் குழந்தையாக இருக்கலாம் அல்லது குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம். இவை இரண்டுமே இல்லை என்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோத்திருக்கிறது என அர்த்தம். இதனால், கர்ப்பிணிகளின் கால் வீங்கிக் காணப்படும். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல்புதான். ஆனால், இந்த வீக்கம் கணுக்காலுக்குக் கீழே மட்டும் இருக்கும். அதுவும் நன்றாகத் தூங்கி எழுந்ததும் சரியாகிவிடும். அப்படி இல்லாமல் கணுக்காலைத் தாண்டியும் வீக்கம் இருந்தால் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உப்பின் அளவைக் கண்டறிந்து, அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இத்துடன் ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் பேறுகாலத்தின்போது வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்த வேண்டியது அவசியம்.

    6 படுக்கையும் உறக்கமும்!

    கர்ப்பிணிகள் முதல் நான்கு மாதங்கள் மல்லாந்த நிலையில் படுக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு இடதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்-சேய் இருவருக்கும் சாலச்சிறந்தது. இரவில் எட்டு மணி நேரத் தூக்கமும், பகலில் ஒரு மணி நேரத் தூக்கமும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியம். முதல் மூன்று மாதமும் கடைசி ஒரு மாதமும் தாம்பத்யத்தைத் தவிர்ப்பது நலம்.
    contd..



  8. #1758
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    7 ஒரே மருத்துவர்!

    பொதுவாக முதல் 28 வாரங்களுக்கு மாதம் ஒரு முறையும் அதற்குப் பிறகு 28 முதல் 36 வாரங்கள் வரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும் 36-வது வாரம் முதல் பிரசவம் வரை வாரம் ஒரு முறையும் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே ஒரே மருத்துவரை அணுகுவது நல்லது. நம் உடல்நிலையைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற சிகிச்சையை அளிக்க மருத்துவருக்கு எளிதாக இருக்கும்.

    8 தவறாத மருந்துகள்!

    தாய், சேய் இருவருக்கும் டெட்டனஸ் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க நான்கு வார இடைவெளியில் இரண்டு தடவையாக ரண ஜன்னி ஊசி போடவேண்டும். ஃபோலிக் அமில மாத்திரைகளை திருமணமான முதலே பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில், இது கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு ஏற்படக் கூடிய சில பிறவிக் குறைபாடுகளைத் தடுக்கும். ரத்தசோகை பாதிப்பு உடையவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை அல்லது ஊசி தேவைப்படலாம். தவிர, அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப தேவைப்படும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வது முக்கியம்.

    9 கூடாது... கூடாது... கூடவே கூடாது!

    வயிறு பெரிதாக பெரிதாக அதிக எடையைத் தூக்குவது, ஓடுவது, குடத்தை இடுப்பில் வைப்பது, நாற்காலியின் மீது ஏறுவது போன்ற கடுமையான செயல்களில் ஈடுபடவே கூடாது. தரையில் கால்களை நன்றாக ஊன்றி நடக்க வேண்டும். கால்களைத் தொங்கப் போட்டபடி உட்காரக் கூடாது. அடிக்கடி கால்களை நீட்டி, மடக்க வேண்டும். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காரக் கூடாது. ஒரே மாதிரியான வேலைகளைத் தவிர்க்க வேண்டும். உடல் முழுவதுக்கும் அசைவு கொடுக்கக் கூடிய பல்வேறு வேலைகளில் ஈடுபட வேண்டும். இதனால் உடலில் தசைப்பிடிப்பு, கால்கள் மரத்துப்போதல் போன்றவை ஏற்படாமல் இருக்கும். ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இப்போதைய பெண்கள் பிரசவத்தின்போது காலை மடக்கவே மிகவும் கஷ்டப்படுகின்றனர். இந்திய டாய்லெட்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் கால்களை எளிதாக நீட்டி, மடக்க முடியும். நொறுக்குத் தீனிகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நலம். இது மனச் சங்கடங்களைத் தவிர்க்க உதவும்.

    10 அகமே சுகம்!

    தாயின் உடல்நலன் எவ்வளவு முக்கியமோ மனநலனும் அவ்வளவு முக்கியம் சுகப்பிரசவத்துக்கு. இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்துக்கு மிகப் பெரிய எதிரி பெண்களுக்குப் பிரசவ வலி மீது உருவாகி இருக்கும் பயம். இந்தப் பயத்தை எதிர்கொள்வதற்கு தாயும் தன்னளவில் தயாராக வேண்டும்; குடும்ப உறுப்பினர்களும் தாயைத் தயாராக்க வேண்டும். 'இது ஒரு பிரச்னையே இல்லை; உனக்கு எதுவென்றாலும் உதவ நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்’ என்று ஒவ்வொரு கட்டத்திலும் தாய்க்கு நம்பிக்கை அளிக்க குடும்பத்தினர் தவறக் கூடாது. தாயின் மனநிலையை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். தாயும் நல்ல உணவைப் போலவே நல்ல இசை, நல்ல புத்தகங்கள் என மனதை இதமாக வைத்துக்கொள்ளும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். கூடுமானவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல் நலம். தியானம் மனதை ஒருமுகப்படுத்த உதவுவதோடு தேவையில்லாத பயம் - கவலைகளை நீக்கி பிரசவத்தைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-10447044_653172654793055_4919842325386506012_n.jpg  

  9. #1759
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    விந்தணு’ உற்பத்தியை இயற்கையான எளிய* வழிகளில் அதிகரிக்க

    விந்தணு’ உற்பத்தியை இயற்கையான எளிய* வழிகளில் அதிகரிக்க
    பொதுவாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுக ளை தவிர்க்க வேண்டும். அதிக கொழுப்புச்சத்துள்ள
    உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந் தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற் படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
    எனவே இளம் தலைமுறை ஆண்கள் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்கவேண்டு ம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இன் றைய இளம் தலைமுறையினரின் முன்புள்ள முக்கிய பிரச்சனை குழந்தையின்மைதா ன். இதற்கு உணவுப் பழக்கமும் முக்கிய காரணமாக இருக்கிறது.
    உடல் ஆரோக்கியம், உணவு பழ க்கம் குறித்து ஆய்வு மேற் கொ ண்டதில் துரித உணவகங்களில் கிடைக்கும் உணவுகளும், ருசிக்காக அதிக கொழுப்புச சத்துள்ள உணவுகளை உண்ப தன் மூலமும் இளைஞர்களின் விந்தணு உற்பத்தியில் குறை பாடு ஏற்படுவதாக ஆய்வாளர் கள் தெரிவித்துள்ளனர். 35% ஆண்கள் இது போன்ற குறை பாடினால் பாதிக்கப்பட்டுள்ளதா க ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதேபோல் அதிக புகைப்பழக்க ம் மதுப்பழக்கம், மன அழுத்தம், போன்றவையும் ஆண்களின் விந்தணு குறைபாட்டில் முக்கி ய பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரிய வந் துள்ளது.
    அதேசமயம் ஒமேகா 3 கொழுப்புச்சத்துள்ள உணவுக ளை உட்கொள்ளும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி யில் குறைபாடு எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆய் வில்தெரியவந்துள்ளது. ஆண் களின் குறைபாட்டினை போ க்க சித்த மருத்துவத்தின் மூல ம் நம் முன்னோர்கள் ஆலோச னை கூறியுள்ளனர். அவற்றை பின்பற்றினால் விந்தணு குறைபாடுநீங்கி நல்ல பலன்கிடைக்கும் என்றுதெரிய வந்துள்ளது.

    உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க:

    ஜாதிக்காய்
    ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெரு க்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறு த்து இடித்து பொடியாக்கி வைத் துக்கொள்ளவும். 5கிராம் சூரணத் தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண் மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணு க்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
    பாதாம், கல்கண்டு
    தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும். இர வு படுக்கைக்கு செல்ல மூன்று மணி நேரத்திற்கு முன்பே முழு மாதுளம் பழம் சாப்பிட வேண்டும்.
    வால் முளகு, பாதம்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும்சேர்த்து அடுப்பி ல் வைத்து பதமாக வேகவைத்து தின மும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.
    அரசம்பழம், அமுக்கராங்
    அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடி க்கவும். அரசம் பழத்தை இடித்து தூளாக் கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட வேண் டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.
    அமுக்கராங் கிழங்கு பொடி யுடன் தேனும்நெய்யும் கலந் து சாப்பிட்டுவரவும். கருவே லமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டுவர பழைய நிலை மைக்கு வரலாம் .
    முருங்கைப் பூ கசாயம், முருங் கைகாய்
    முருங்ககாயை நன்கு வேக வை த்து சாப்பிட்டுவந்தால் காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய் ச்சி அந்த நீரை ஒருடம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.
    நெய், மிளகு,உப்பு, பொன்னாங் கண்ணிக்கீரை, அரைக் கீரை, பச லை கீரை, நறுந்தாலி, நலமுருங் கை இவைகளை சேர்த்து துவைய லாக்கி சாப்பிட நல்ல பலன் கிடை க்கும்




  10. #1760
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மாதவிலக்குக்கு முன்பாக பெண்களுக்கு ஏற்படும் அவஸ்தைகள்!

    டாக்டர் கே.எஸ்.ஜெயராணி
    மாதந்தோறும் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு மன, உடல் அவஸ்தைகள் ஏற்படும். அதனை 'பி.எம்.எஸ்' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் சிண்ட்ரோம்) என்பார்கள். உடல் வீக்கம், மார்புகள் கனமாகி வலித்தல், தூக்கமின்மை, கோபம், எரிச்சல் போன்றவை பி.எம்.எஸ். அறிகுறிகளாகும்.
    இந்த 'பி.எம்.எஸ்.' பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் செய்து வந்த மருத்துவ விஞ்ஞானிகள், அதில் அதிகபட்ச பாதிப்பு ஏற்படுவதற்கு 'பி.எம்.டி.டி' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் டிஸ்மோர்பிக் டிசார்டர்) என்று பெயரிட்டிருக்கிறார்கள். இது கொஞ்சம் ஆபத்தும் கலந்தது. இந்த பாதிப்பு ஏற்படும் பெண்கள், வெளிநாடுகளில் கணவரை அடித்து உதைத்து விடுகிறார்கள். இங்குள்ள பெண்கள் கணவரோடு அதிகபட்ச வாக்குவாதத்தில் ஈடுபடுவது, குழந்தைகளுக்கு சூடு போடுவது, பக்கத்து வீட்டினரோடு சண்டை போடுவது போன்றவைகளில் ஈடுபடலாம். இதன் தொடர்ச்சியான பாதிப்புகள் சமூகத்திலும் எதிரொலிக்கும். இதில் அதிகபட்ச கொடூரம் என்னவென்றால், இந்த பி.எம்.டி.டி. பாதிப்பின் காலகட்டத்தில் தான் பெண்கள் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கிறார்கள், வன்முறை செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    இயல்பாகவே மாத விலக்குக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு பல்வேறு அவஸ்தைகள் ஏற்படுவதுண்டு. கூடுதலாக மனஅழுத்தம், கூச்சல் போட்டு கத்தும் மனநிலை, அடுத்து என்ன செய்வது என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது, பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறத் தயங்கி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடத்தல், அதிகமான சோர்வு போன்றவைகளும் இருந்தால் அவை பி.எம்.டி.டி. பாதிப்பிற்கு கொண்டு சென்று விடுகிறது. அப்போது கணவரோடு தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமின்மையும், எரிச்சலும் ஏற்படலாம். வேலை பார்க்கும் இடங்களில் கவனமின்மை வெளிப்படையாகத் தெரியும். குழந்தைகளிடம் அலட்சியம் தோன்றும். மாணவிகளாக இருந்தால் படிப்பில் பின்தங்குவார்கள். தனிமையை நாடுதல், தற்கொலையைப் பற்றி சிந்தித்தல் போன்றவை ஏற்படலாம். மாதவிலக்கு காலத்தில் இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. இந்த அறிகுறிகள் மாதவிலக்கு முடிந்த 14-ம் நாளில் தொடங்கி, அடுத்த மாதவிலக்குக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு மிகவும் அதிகரித்து, மாதவிலக்கு முடிந்த பிறகு ஐந்து நாட்கள் வரை நீடிக்கும்.
    - கோபம் தொடர்ந்து நீடித்தல்.
    - வேலையிலும், மற்றவர்களோடு பழகுவதிலும் கவனம் செலுத்தாமல் இருப்பது.
    - சின்னச் சின்ன விஷயங்களையும் பெரிய அளவில் விவாதங்களாக்கி விடுதல்.
    - காரணமில்லாமல் அழுதல்.
    - தன்னால் எதுவுமே முடியாது என்று தன்னம்பிக்கை குறைதல்.
    - மற்றவர்களை தன்பக்கம் ஈர்க்கத் தெரியாமல் தடுமாறுதல்.
    - கடுமையான சோர்வு.
    - உறக்கம் இல்லாமல் போதல் அல்லது மிகவும் அதிகரித்தல்.
    - பசியில்லாமல் போதல் அல்லது மிகவும் அதிகரித்தல்.
    - கட்டுப்பாடற்ற சில செயல்பாடுகள் போன்றவை பி.எம்.டி.டி.யின் இதர அறிகுறிகள்.
    சிலருக்கு மாதவிலக்கு முடிந்த பிறகும் இந்த அறிகுறிகள் தொடரும். அப்படி தொடர்ந்தால் அவர்களுக்கு ஏற்கனவே மனஅழுத்த நோய் இருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.
    பெண்களில் 30 சதவீதம் பேருக்கு பி.எம்.எஸ். பிரச்சினை இருந்தால் அவர்களில் 4 சதவீதம் பேருக்கு அதன் தாக்கம் அதிகரித்து பி.எம்.டி.டி.யாக மாறும். ஒரு பெண் அளவிற்கு அதிகமாக கோபம் கொண்டால் அதற்கு அவளது உடல் ரீதியான சில மாற்றங்களும் காரணமாக இருக்கும். அவளது உடலில் ஏற்படும் ஹார்மோன் வித்தியாசங்களால் உடலில் இருக்கும் 'சிரோட்டோத்தின்' அளவு குறையும். இந்த குறைபாட்டிற்கு கோபத்தை தூண்டிக்கொண்டே இருக்கும் ஆற்றல் உண்டு.

    பி.எம்.டி.டி. பாதிப்பை கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் என்னென்ன?

    ஏரோபிக் உடற்பயிற்சிகள், யோகா, தியானம் போன்றவை ஓரளவு பலன் தரும். பெரும்பாலானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பி.எம்.டி.டி. பாதிப்புகள் உருவாக ஹார்மோன் சமச்சீரற்றதன்மை தான் காரணம் என்பதால், அந்த ஹார்மோனை மையப்படுத்தியே சிகிச்சைகளும் கொடுக்கப்படுகின்றன. சிலருக்கு, மாதவிலக்கு தொடங்கிய 14 நாளில் இருந்து மாதவிலக்கு முடிந்த ஒன்றிரண்டு நாட்கள் வரை மருந்து சாப்பிட வேண்டியதிருக்கும். சிலருக்கு எல்லா நாட்களும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படலாம்.
    பெண்கள் தங்களுக்கு பி.எம்.டி.டி. பாதிப்பு தான் ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து விட்டால் இதற்கான சிகிச்சைகள் எளிது. அதுபோல் ஆண்களும், சமூகமும் பெண்களுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கு தக்கபடி பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.

    abiramikalai likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter