Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1761
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    'மசாஜ்' உடலுக்கு எவ்வாறு நலம் பயக்கிறது?

    இயற்கை மருத்துவ முறையில் தற்போது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது "மசாஜ்!" பழங்காலத்தில் இருந்தே 'மசாஜ்'க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரிஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, "மசாஜ்", நோய் தீர்க்கும் மருத்துவமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. "மசாஜ்" செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு எவ்வாறு நலம் பயக்கிறது என்பதை விரிவாக காண்போம்.
    தோல்:
    "மசாஜ்" செய்வதால் தோலில் ஏற்படும் நன்மைகள் இணையற்றது. "மசாஜ்" செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைகிறது. இதனால் உடலில் காணப்படும் தீயகழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும்.
    தசைகள்:
    "மசாஜ்" தசைகளில் காணப்படும் இறுக்கத்தை குறைத்து, தசை வலியை நீக்குகிறது. கடினமான வேலைகளால் உடல் தசைகளில் லாக்டிக் ஆசிட் சேரும். "மசாஜ்" தசைகளில் சேரும் லாக்டிக் ஆசிட்களை நீக்கி, உடலை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருக்க உதவும்.
    ரத்த ஓட்டம்:
    "மசாஜ்" செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் அந்த உடல் உறுப்புகளுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வீக்கம் போன்றவை ஏற்படுவது குறையும். "மசாஜ்" செய்வதால் ரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.
    நரம்பு:
    நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன், மெதுவாக மற்றும் மிதமாக செய்யப்படும் "மசாஜ்," நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைப்பதுடன், அவற்றை மென்மையாக்கும். சுறுசுறுப்புடன் செய்யப்படும் "மசாஜ்" நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்கும்.
    செரிமான மண்டலம்:
    வயிற்றில் "மசாஜ்" செய்வதால் செரிமான மண்டலம் தூண்டப்படுவதுடன், வயிற்றில் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும். மேலும் கல்லீரலின் ஆற்றல் அதிகரிப்பதால், உடலின் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
    சிறுநீர் மண்டலம்:
    "மசாஜ்" செய்வது சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற தூண்டுகிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, அதன் மூலம் உடல் கழிவுகள் விரைவில் வெளியேறுகிறது.
    இதயம்:
    முறையாக செய்யப்படும், "மசாஜ்," இதயத்தில் ஏற்படும் பளுவை குறைத்து, அதன் செயல்திறனை அதிகரிக்கிறது. பொதுவாக, "மசாஜ்" செய்வதற்கு உலர்ந்த கைகளையே பயன்படுத்த வேண்டும்; ஆனால், உடல் அதிக வறட்சி தன்மை உடையதாக இருந்தால் அல்லது உடல் மிகவும் பலவீனமாக இருந்தால், ஈரத்துணிகள் அல்லது மருந்து எண்ணெய்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
    மசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மசாஜ் செய்யும் போது ஏற்படும் உராய்வை தவிர்ப்பதற்காக, டால்கம் பவுடரை பயன்படுத்துகின்றனர். இது உகந்தது அல்ல. இவ்வாறு செய்வதால் தோலில் காணப்படும் துளைகள் அடைபடும்.
    "மசாஜ்" செய்வதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:
    * காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் எவ்வித மசாஜும் செய்யக்கூடாது.
    * கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.
    * வயிற்றுப்போக்கு வாயுப் பிரச்சினை, அப்பென்டிசைட்டிஸ், சிறுகுடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்சினை உடையவர்கள் வயிற்றில் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.
    * தோல் வியாதிகள் உடையவர்களுக்கு மசாஜ் செய்வது பொருத்தமற்றது.


    Sponsored Links
    rifan likes this.

  2. #1762
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ரத்த அழுத்தம் என்றால் என்ன?

    டாக்டர் ப.உ. லெனின்
    இந்தக் காலகட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இளைஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ்க்கை முறையில் இவையெல்லாம் இயல்பாகிப் பேனது. அதனால் ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்!

    ரத்த அழுத்தம் என்றால் என்ன?
    ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்திருப்பதை 'ரத்த அழுத்த நோய்' அல்லது 'ரத்தக் கொதிப்பு' என்று கூறுகிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது. சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பின் கண்டுபிடிக்கப்படும். எனவே இதனை 'சைலன்ட கில்லர்' என்றும் கூறுவர்.

    இந்நோய் எப்போது கண்டு பிடிக்கப்பட்டது?

    1732-ல் 'ஸ்டீபன் ஹேல்ஸ்' என்பவர் ஒரு குதிரையின் ரத்த அழுத்தத்தை சாதாரண 'மானோ மீட்டர்' என்ற கருவியை வைத்து அளந்தார். 1896-ல் 'சிவரோசி' என்பவர் நாம் இப்போது பயன்படுத்தும் 'ஸ்பிக்மோ மேனோ மீட்டரை' கண்டு பிடித்தார். 1905-ல்தான் ரத்த அழுத்த நோயினுடைய முக்கியத்துவம் தெரிய வந்தது. உயர் ரத்த அழுத்தம் அதிக அளவு நோயை ஏற்படுத்துகிறது என்றும், பலர் இறந்து போகின்றனர் என்பதையும் ஒரு ஆயுள் காப்பீட்டுக் கழகம்தான் கண்டு பிடித்தது. அதன் பின் அனைவரது கவனமும் இதன் மீது திரும்பியது.

    உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?

    மருத்துவம் பயின்ற எவரும் ரத்த அழுத்தக் கருவியின் மூலம் ரத்த அழுத்தத்தைக் கண்டு பிடித்து விடலாம். மேல் அளவு 140-க்கு மேலேயோ அல்லது கீழ் அளவு 90-க்கு மேலேயோ இருந்தால் அந்த நோயாளியை மேற்கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் அதிகமாயிருந்தால் ரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. வேறு வேறு சமயங்களில் மூன்று முறை பரிசோதித்த பிறகு ரத்த அழுத்தம் இருந்தால் அவரை 'ரத்த அழுத்த நோயாளி' எனக் கூறலாம்.

    ரத்த அழுத்த நோயை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
    1. கீழ் ரத்த அழுத்த அளவு 91 முதல் 105 வரை.
    2. 106 முதல் 115 வரை.
    3. 115-க்கு மேல் இருப்பது. இவர்களுக்கு கண்களின் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

    எதனால் ரத்த அழுத்தம அதிகமாகிறது?

    1. காரணம் ஏதுமின்றி வரும் ரத்த அழுத்தம் 90 சதம் பேரை பாதிக்கிறது. இதற்கான காரணம் துல்லியமாகக் கண்டு பிடிக்கப்படவில்லை.
    2. மீதமுள்ள 10 சதவீதம் பேர் சிறுநீரகங்களில் பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகளினாலும் மற்ற காரணங்களினாலும் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.
    இரண்டாவது வகையைச் சார்ந்த 10 சதவீதம் பேரை முழுமையாகக் குணப்படுத்த வாய்ப்புள்ளது. அதன் காரணத்தை கண்டுபிடித்து அதை அகற்ற முடிந்தால் ரத்த அழுத்தம் சாதாரண நிலையை அடையும். முழுமையான உடற் பரிசோதனை மற்றும் ரத்த சோதனைகளை செய்வதம் மூலம் இந்நோய்க்கான காரணங்களை கண்டறியலாம். இதனால் இதய வீக்கம், இதய ரத்த ஓட்டம் குறைதல், மாரடைப்பு நோய், கை, கால் இயங்காமல் போவது சிறுநீரகங்கள் பழுதடைதல் போன்றவை ஏற்படும்.

    ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும்?

    முதலில் சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். இதில் சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளனவா என்பதை ஓரளவு அறியலாம். இரண்டாவதாக ரத்தத்தில் சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் சேர்ந்து இருந்தால் மாரடைப்பும், மேற்சொன்ன நோய்களும் வரும் வாய்ப்புகள் அதிகம். 'ஈ.சி.ஜி.' என்பது இதயம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய உதவும் பரிசோதனையாகும். இதயம் வீக்கமாகி உள்ளதா என அறிய 'எக்ஸ்ரே' பரிசோதனை உதவும். 'எக்கோ', 'ஆஞ்சியோகிராம்' போன்ற பரிசோதனைகளைக்கூட செய்து பார்க்கலாம்.
    contd..


    rifan likes this.

  3. #1763
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    கர்ப்பிணிகளுக்கும் மற்றவர்களுக்கும் வரும் ரத்த அழுத்தத்திற்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

    கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு வகை ரத்த அழுத்த நோய் 'பிரி-எக்லாம்சியா' என்பதாகும். இது முதன் முறையாக கர்ப்பமடைபவருக்கே 95 சதவீதம் வரும். பல குழந்தைகள் பெற்றவர்களை விட குழந்தையே பெறாமல் முதல் முறையாக கர்ப்பமடைந்த பெண்களுக்கு 6 முதல் 8 மடங்கு இந்நோய் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பல குழந்தைகளை வயிற்றில் சுமந்தவர்களுக்கும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். இந்நோயின் மற்ற அறிகுறிகளாக-கால்வீக்கம், ரத்தக்கொதிப்பு, சிறுநீரில் புரதசத்து வெளியேறுதல் ஆகியவை உண்டாகும். இதை மருந்துவத்தின் மூலம் சரி செய்யாவிடில் வலிப்பு நோய் மற்றும் உணர்விழந்து போகுதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். பெண்களின் கர்ப்ப காலம் முடிந்தவுடன் இந்நோய் உடனடியாக மறைந்து விடும். இதனை கர்ப்பகால ரத்த அழுத்தம் என்கிறார்கள்.

    ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு அறிவுரை:
    நீங்கள் ரத்த அழுத்த நோயாளி எனில், இந்நோய் பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள். இந்நோயை கட்டுப்படுத்தாவிடில் இது மாரடைப்பு, மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனைப்படி செயலாற்றுங்கள். உப்பு அதிகமுள்ள ஊறுகாய், கருவாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உப்பு, உடலில் நீரை தங்கச் செய்து இதயத்தை பலமிழக்கச் செய்யும். கால், கைகள் வீங்க வைக்கும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். வெண்ணெய், நெய், எண்ணெய் போன்ற கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை சாப்பிடாதீர்கள். கொழுப்பு சத்து ரத்தக் குழாய்களை அடைத்துக் கொண்டு மேற்சொன்ன வியாதிகளை உண்டு பண்ணக் கூடும். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது வேகமாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உடலில் கொழுப்புச் சத்து சேர்வதைத் தவிர்த்து விடுவதுடன் அழுத்தத்தையும் குறைக்கும். புகை பிடிப்பவராக இருந்தால் உடனேயே அதை நிறுத்துங்கள். புகை பிடிப்பவர்கள் ரத்த அழுத்த நோயினால் அவதிப்படுவதோடு அல்லாமல் மாரடைப்பு நோயினாலும் உயிரிழக்க நேரிடும்! மருத்துவரின் ஆலோசனையின்றி அவர் சிபாரிச் செய்யும் மருந்துகளின் அளவை நீங்களாகவே குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது. உடல் எடையை குறையுங்கள். உங்களுடைய ரத்த அழுத்தத்தின் அளவை முறையாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக ஒரு முறை எழுதிக் கொடுத்த மருந்தை வாழ்நாள் முழுவதும் உபயோகிக்கக் கூடாது. அடிக்கடி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று தேவைக்கு ஏற்ப மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.

    ஹோமியோ மருந்துகள்:

    rauwolfia q, cratae-gus q, adonisver q போன்ற சொட்டு மருந்துகளை ரத்த அழுத்த அடிப்படையில், அதாவது ரத்த அழுத்தமிகுதி அல்லது குறைவின் அடிப்படையில், நீரில் கலந்து குடிக்கலாம். Digitalis, cactus berberis vulgaris போன்ற மாத்திரைகளையும் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். பக்க -பின் விளைவுகள் ஏற்பட்டால் ஹோமியோபதி நிபுணரை நேரில் அணுகி அவரது பரிந்துரையின்படி மருந்துகளை சாப்பிட வேண்டும். பயோகெமிக் மருந்துகளும், கூட்டுக்கலவை மருந்துகளும், சில வகை தாய்திரவங்களின் (mother tinctures) கலவைகளும் இதற்க மிகவும் உதவும். இவை எல்லாம் வாழ்க்கை முறை நோய்களாகிப் போனதால் உடற்பயிற்சி, உணவு, உறக்கம் ஆகியவற்றிலும் அன்றாடம் கவனம் செலுத்த வேண்டும்.

    rifan likes this.

  4. #1764
    abiramikalai is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    gujarat
    Posts
    4

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    Quote Originally Posted by chan View Post
    மாதவிலக்குக்கு முன்பாக பெண்களுக்கு ஏற்படும் அவஸ்தைகள்!

    டாக்டர் கே.எஸ்.ஜெயராணி
    மாதந்தோறும் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு மன, உடல் அவஸ்தைகள் ஏற்படும். அதனை 'பி.எம்.எஸ்' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் சிண்ட்ரோம்) என்பார்கள். உடல் வீக்கம், மார்புகள் கனமாகி வலித்தல், தூக்கமின்மை, கோபம், எரிச்சல் போன்றவை பி.எம்.எஸ். அறிகுறிகளாகும்.
    இந்த 'பி.எம்.எஸ்.' பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் செய்து வந்த மருத்துவ விஞ்ஞானிகள், அதில் அதிகபட்ச பாதிப்பு ஏற்படுவதற்கு 'பி.எம்.டி.டி' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் டிஸ்மோர்பிக் டிசார்டர்) என்று பெயரிட்டிருக்கிறார்கள். இது கொஞ்சம் ஆபத்தும் கலந்தது. இந்த பாதிப்பு ஏற்படும் பெண்கள், வெளிநாடுகளில் கணவரை அடித்து உதைத்து விடுகிறார்கள். இங்குள்ள பெண்கள் கணவரோடு அதிகபட்ச வாக்குவாதத்தில் ஈடுபடுவது, குழந்தைகளுக்கு சூடு போடுவது, பக்கத்து வீட்டினரோடு சண்டை போடுவது போன்றவைகளில் ஈடுபடலாம். இதன் தொடர்ச்சியான பாதிப்புகள் சமூகத்திலும் எதிரொலிக்கும். இதில் அதிகபட்ச கொடூரம் என்னவென்றால், இந்த பி.எம்.டி.டி. பாதிப்பின் காலகட்டத்தில் தான் பெண்கள் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கிறார்கள், வன்முறை செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    இயல்பாகவே மாத விலக்குக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு பல்வேறு அவஸ்தைகள் ஏற்படுவதுண்டு. கூடுதலாக மனஅழுத்தம், கூச்சல் போட்டு கத்தும் மனநிலை, அடுத்து என்ன செய்வது என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது, பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறத் தயங்கி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடத்தல், அதிகமான சோர்வு போன்றவைகளும் இருந்தால் அவை பி.எம்.டி.டி. பாதிப்பிற்கு கொண்டு சென்று விடுகிறது. அப்போது கணவரோடு தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமின்மையும், எரிச்சலும் ஏற்படலாம். வேலை பார்க்கும் இடங்களில் கவனமின்மை வெளிப்படையாகத் தெரியும். குழந்தைகளிடம் அலட்சியம் தோன்றும். மாணவிகளாக இருந்தால் படிப்பில் பின்தங்குவார்கள். தனிமையை நாடுதல், தற்கொலையைப் பற்றி சிந்தித்தல் போன்றவை ஏற்படலாம். மாதவிலக்கு காலத்தில் இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. இந்த அறிகுறிகள் மாதவிலக்கு முடிந்த 14-ம் நாளில் தொடங்கி, அடுத்த மாதவிலக்குக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு மிகவும் அதிகரித்து, மாதவிலக்கு முடிந்த பிறகு ஐந்து நாட்கள் வரை நீடிக்கும்.
    - கோபம் தொடர்ந்து நீடித்தல்.
    - வேலையிலும், மற்றவர்களோடு பழகுவதிலும் கவனம் செலுத்தாமல் இருப்பது.
    - சின்னச் சின்ன விஷயங்களையும் பெரிய அளவில் விவாதங்களாக்கி விடுதல்.
    - காரணமில்லாமல் அழுதல்.
    - தன்னால் எதுவுமே முடியாது என்று தன்னம்பிக்கை குறைதல்.
    - மற்றவர்களை தன்பக்கம் ஈர்க்கத் தெரியாமல் தடுமாறுதல்.
    - கடுமையான சோர்வு.
    - உறக்கம் இல்லாமல் போதல் அல்லது மிகவும் அதிகரித்தல்.
    - பசியில்லாமல் போதல் அல்லது மிகவும் அதிகரித்தல்.
    - கட்டுப்பாடற்ற சில செயல்பாடுகள் போன்றவை பி.எம்.டி.டி.யின் இதர அறிகுறிகள்.
    சிலருக்கு மாதவிலக்கு முடிந்த பிறகும் இந்த அறிகுறிகள் தொடரும். அப்படி தொடர்ந்தால் அவர்களுக்கு ஏற்கனவே மனஅழுத்த நோய் இருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.
    பெண்களில் 30 சதவீதம் பேருக்கு பி.எம்.எஸ். பிரச்சினை இருந்தால் அவர்களில் 4 சதவீதம் பேருக்கு அதன் தாக்கம் அதிகரித்து பி.எம்.டி.டி.யாக மாறும். ஒரு பெண் அளவிற்கு அதிகமாக கோபம் கொண்டால் அதற்கு அவளது உடல் ரீதியான சில மாற்றங்களும் காரணமாக இருக்கும். அவளது உடலில் ஏற்படும் ஹார்மோன் வித்தியாசங்களால் உடலில் இருக்கும் 'சிரோட்டோத்தின்' அளவு குறையும். இந்த குறைபாட்டிற்கு கோபத்தை தூண்டிக்கொண்டே இருக்கும் ஆற்றல் உண்டு.

    பி.எம்.டி.டி. பாதிப்பை கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் என்னென்ன?

    ஏரோபிக் உடற்பயிற்சிகள், யோகா, தியானம் போன்றவை ஓரளவு பலன் தரும். பெரும்பாலானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பி.எம்.டி.டி. பாதிப்புகள் உருவாக ஹார்மோன் சமச்சீரற்றதன்மை தான் காரணம் என்பதால், அந்த ஹார்மோனை மையப்படுத்தியே சிகிச்சைகளும் கொடுக்கப்படுகின்றன. சிலருக்கு, மாதவிலக்கு தொடங்கிய 14 நாளில் இருந்து மாதவிலக்கு முடிந்த ஒன்றிரண்டு நாட்கள் வரை மருந்து சாப்பிட வேண்டியதிருக்கும். சிலருக்கு எல்லா நாட்களும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படலாம்.
    பெண்கள் தங்களுக்கு பி.எம்.டி.டி. பாதிப்பு தான் ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து விட்டால் இதற்கான சிகிச்சைகள் எளிது. அதுபோல் ஆண்களும், சமூகமும் பெண்களுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கு தக்கபடி பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.
    very very informative. but most of ladies itself dont know this. thanks chan.

    rifan likes this.

  5. #1765
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பேரீச்சம்பழங்கள் – பெண்களுக்கும், நம் கண்களுக்கும்!

    நமது நாட்டில் விளையாவிட்டாலும், பேரீச்சம் பழங்கள் அதன் அபார ருசியாலும், இனிப்புச் சுவையினாலும் நம்மை வெகுவாகக் கவர்ந்துள்ளன. ஆனால், பேரீச்சம் பழத்தை எப்போதாவது சாப்பிட்டால் போதுமா? பேரீச்சை தரும் பலன்களை இப்பதிவினைப் படித்து தெரிந்துகொண்டால், நீங்கள் தினசரி அதனை உண்ண ஆர்வம் காட்டுவீர்கள்!

    இஸ்லாமியர்களின் முக்கிய உணவு

    இஸ்லாமியரின் புராணக் கதைப்படி, ஆதாமின் முக்கிய உணவாக இறைவன் பேரீச்சம்பழத்தைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. அவர்களின் புனிதப் புத்தகமான குரானில், முகம்மது நபி அவர்களின் விருப்பமான பழம் பேரிச்சை என்றும், அவரது இல்லம் பேரீச்சை மரத்தால் கட்டப்பட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது. இஸ்லாமியர்கள் இந்தப் பழத்தைப் புனிதமாகக் கருதுவதால் ரம்ஜான் நாட்களில் நோன்பு இருந்த பிறகு, விரதத்தை ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு முடிப்பார்கள்.
    இன்று நம்மிடையே பிரபலமாக அனைவராலும் சாப்பிடப்படும் வகை ‘டெக்லெட் நூர்’ என்று அழைக்கப்படும் பேரீச்சம் பழமாகும். பேரீச்சம்பழத்தில் பல வகைகள் உள்ளன. சில மிக இனிப்பாக, சில இனிப்பு குறைவாக, சில மிருதுவாக, மற்றும் சில கெட்டியாக, சில எளிதில் வீணாகிவிடக்கூடிய என்று பல வகைகள் உள்ளன. மிகவும் உலர்ந்த வகை பேரிச்சையை மாவாக இடித்து உணவு சமைப்பது பாலைவனத்தில் வாழ்பவர்களின் பழக்கம். இன்று நம்மிடையே பிரபலமாக அனைவராலும் சாப்பிடப்படும் வகை ‘டெக்லெட் நூர்’ என்று அழைக்கப்படும் பேரீச்சம் பழமாகும்.

    பேரிச்சையில் உள்ள சத்துக்கள்

    இன்றைய விஞ்ஞான முடிவுகளின்படி பேரீச்சை மிக ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்று. இதில் சர்க்கரை, கொழுப்பு, புரதம் மற்றும் முக்கிய வைட்டமின்கள் அடங்கியுள்ளன. பரீச்சம்பழம், நார்ச்சத்து நிறைந்த ஒரு பழம். நவீன மருத்துவத்தின்படி வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை பேரீச்சம்பழம் தடுக்க வல்லது. மேற்கூறிய பொருட்களைத் தவிர, பேரீச்சையில் எண்ணெய்ச் சத்து, கால்சியம், சல்ஃபர், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், செப்பு, மேங்கனிசியம் மற்றும் இரும்புச் சத்து ஆகிய தாதுப் பொருட்கள் உள்ளன.
    அரேபிய மக்கள், பேரீச்சையில் பால், தயிர், பிரெட், வெண்ணெய் மற்றும் மீனுடன் சேர்த்து சாப்பிடுகின்றனர். இந்த கலவையினால் சுவை கிடைப்பதோடு உடலுக்கும் மனதுக்கும் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்கின்றன. விரதத்தை பேரீச்சம்பழம் சாப்பிட்டு முடிக்கச் சொல்வது ஏன்? விரதமிருக்கும்போது, வயிற்றில் பசி அதிகமாக ஏற்பட்டிருக்கும். பசி எப்போது ஏற்படுகிறது? உடலில் சர்க்கரை அளவு குறையும்போது பசி உண்டாகிறது. அந்தச் சமயத்தில் ஒரு பேரீச்சை சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களை உடல் ஏற்று, அதீதமான பசியைக் குறைக்கும். இதனால் விரதம் முடிந்தபின் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட முடியாது.
    contd..


    rifan likes this.

  6. #1766
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    மருத்துவ குணம்


    பேரீச்சம்பழத்துக்கு ஒரு சிறந்த மருத்துவ குணம் உண்டு. கருவைச் சுமந்திருக்கும் பெண்ணின் கருப்பை தசைகளை உறுதிபடச் செய்யும் சக்தி பேரீச்சைக்கு உண்டு. இதனைக் கர்ப்பிணிகள் பேறு காலத்தில் சாப்பிட்டு வந்தால், பிரசவத்தின்போது தசைகள் எளிதில் தளர்ந்து கொடுக்கும். பிள்ளை பிறந்த பிறகும் தாய்ப்பால் அளிக்கும் பெண்களுக்கு ஏற்றதாகும். குழந்தை பிறந்த பிறகு சில தாய்மார்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும். அதை நீக்கவல்லது பேரீச்சை. அதோடு இந்த பழத்தைச் சாப்பிட்டு தாய்ப்பால் அளித்தால், குழந்தைகள் நோய்களைத் தடுக்கும் எதிர்ப்புச்சக்தியைப் பெற்று வளர்வார்கள்.
    மதுப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளவர்கள், அதிலிருந்து மீண்டு வர பேரீச்சை உதவுகிறது. குழந்தைகளுக்கு எலும்பில் வலு இல்லாதபோது, ரிக்கெட்ஸ் என்ற நோய் ஏற்படும். பெரியவர்களுக்கு எலும்பில் வலு குறையும்போது, ஆஸ்டியோபொரோஸிஸ் ஏற்படும். உடலில் கால்சியம் அளவு குறைவதே இதற்குக் காரணம். பேரீச்சையில் கால்சியம் இருப்பதால், இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால், இந்த நோய்கள் வராமல் தடுக்கலாம்.
    பேரீச்சம்பழம் நம் கண்கள் பராமரிப்பிலும் உதவுகிறது. மாலைக் கண் நோய் வருவதை இதைச் சாப்பிடுவதால் தடுக்க முடியும். நம் உடலில் உள்ள தசைகள் உறுதி பெறவும் பேரீச்சை உதவுகிறது. இதனால்தான் இஸ்லாமிய போர் வீரர்கள், யுத்த காலங்களில் பைகளில் பேரீச்சம் பழம் நிரப்பிச் செல்வார்கள்.
    பேரீச்சம்பழம் உடலுக்கு ஒரு சிறந்த டானிக் ஆகும். எளிதில் ஜீரணமடைந்து உடலில் ஏற்பட்டுள்ள சோர்வை நீக்கி, உடலுக்குத் தெம்பை அளிக்கவும் உதவுகிறது. உடல்நலம் குன்றிப்போனவர்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற பாலில் பேரீச்சம்பழம் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட வேண்டும். இதனால் நோய்க் கிருமிகளை அழிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் உடலில் நிறைய ஏற்படும். இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நன்மை செய்யக் கூடியவை.
    யாருக்கெல்லாம் இது மருந்து?
    பேரீச்சம்பழம் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு கை கண்ட மருந்தாகும். முதல் நாள் இரவே சிறிதளவு நீரில் ஊறவைத்து மறுநாள் அரைத்துச் சாப்பிட வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை அறவே நீக்கும். மதுப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளவர்கள், அதிலிருந்து மீண்டு வர பேரீச்சை உதவுகிறது. அவர்கள் குடிக்கும் நீரில் பேரீச்சம் பழத்தை ஊறப்போட்டுவிட்டால் மெதுவாக அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டுவிடுவார்கள். இருதயம் வலுவிழந்திருப்போர் வாரம் இருமுறை இரவே தண்ணிரில் பேரீச்சையை ஊற வைத்து அடுத்தநாள் காலையில் அதனை கசக்கிப் பிழிந்து ஊறவைத்த நீரோடு சேர்த்துச் சாப்பிட, இருதயம் வலுவடையும்.
    பேரீச்சம்பழம் இத்தனை நற்குணங்களைப் பெற்றிருப்பதோடு மலிவாகக் கிடைக்கும் ஒரு பழமும்கூட. அதனைச் சுத்தப்படுத்தி, நல்ல முறையில் விற்பனை செய்பவர்களிடம் வாங்கிச் சாப்பிட வேண்டும். ஏனெனில், இந்தப் பழத்துக்கு இயல்பாக உள்ள பிசுபிசுப்புத் தன்மையினால் காற்றில் உள்ள மாசினையும் கிருமிகளையும் ஈர்த்துக்கொள்ளும் குணம் கொண்டது. எனவே, தரமான பேரிச்சைதானா எனப் பார்த்து வாங்குங்கள்… பயனடையுங்கள்!


    rifan likes this.

  7. #1767
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பிரச்சினைக்குரிய முதுமையில் தாய்மை

    இப்போதெல்லாம் திருமணம் ஆன தம்பதியர் பலர், குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட்டு வருகிறார்கள். இவர்களில் பலர், தங்கள் லட்சியத்தை எட்டுவதற்காகவும், குடும்பத்தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்காகவும் குழந்தை பெறுவதை சிறிது காலத்திற்கு தள்ளிப்போடுகிறார்கள்.

    இப்படி, குழந்தை பெறுவதை தள்ளிப்போட்டு, முதுமையில் தாய்மைப்பேற்றை அடையும் பெண்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவதாக சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் ஆய்வு கட்டுரை ஒன்று சமர்பிக்கப்பட்டது. அதில் மேலும் கூறப்பட்டு இருந்ததாவது:-

    "பெண்கள் வயது அதிகம் ஆன காலகட்டத்தில் தாய்மைப்பேறு அடைய விரும்புவது என்ற பிரச்சினை உலகின் பல நாடுகளிலும் காணப்படுகிறது. செயற்கை கருத்தரிப்பு முறை கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இந்த காலதாமதமான தாய்மைப்பேறு என்பது மருத்துவ அறிவியலின் உதவியுடன் அடையக் கூடியதாக ஒன்றாகவே ஆகியுள்ளது.

    ஆனால், மருத்துவ ரீதியாக இது சாத்தியமாகிவிட்டாலும் 40 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள் உடல்ரீதியாக பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். மேலும், இவ்வாறு பிறக்கும் குழந்தைகளும் மருத்துவ ரீதியான பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.இதுதவிர, சமூக, உளவியல் ரீதியான பிரச்சினைகளும் இம்மாதிரியான காலதாமதமான தாய்மைப்பேறு காரணமாக ஏற்படுகின்றன...'' என்று, பல தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

    நீங்களும் குழந்தை பெறுவதை தள்ளிப்போடும் தம்பதியர் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். குறித்த காலத்தில் விதைத்தால்தான் மகசூல் சரியாக கிடைக்கும் என்பது இதற்கும் பொருந்தும்.

    rifan likes this.

  8. #1768
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பிரசவத்தில் சிசேரியன் எதற்காக?

    எத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறைபட்டுக் கொள்வார்கள்.

    ஒரு தாயை, அவருக்கு எல்லா சோதனைகளும் செய்து, அவர் நார்மல் டெலிவரிக்கு உகந்தவர் தான் என்று தீர்மானித்து, அவரை நார்மல் டெலிவரிக்கு உட்படுத்துகிறோம். ஆனால், பிரசவ வலி வரும்போதுதான், வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின் பாதை வழியே பயணப்படுவது தடைபடுவதை உணருகிறோம். இவை அனைத்தும், அந்தக் கணம், பிரசவ வலி கண்ட பின்பு தான் கவனிக்க முடியும். கணிக்க முடியும். அன்றி முன் கூட்டியே தீர்மானிக்க இயலாது.

    எனவே, பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு, அந்த தீர்மானத்தை மாற்றி, சிசேரியன் செய்ய நேரிடுகிறது.

    பெரும்பாலோர் முதல் தடவை சிசேரியன் செய்வதால் இந்த முறையும் டாக்டர் சிசேரியன் செய்து விட்டார் என்று மேம்போக்காகப் புலம்புகிறார்கள்.
    முதல் முறை செய்யும்போது, அந்தக் கருப்பையில் தையல் போடுவதால் அது காயப்பட்டு விடுகிறது. அதை வடு என்கிறோம். அந்த வடு எந்த அளவுக்கு உறுதியானது என்று பெரிதாக யாரலும் கணிக்க முடியாது. எனவே முதல் முறை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த பிரசவத்தில் அவர்களது நார்மல் டெலிவரிக்கான சாத்தியக் கூறுகள் 50% என்று தான் சொல்ல வேண்டும். பிரசவம் நெருங்கும்போது, குழந்தையின் தலை இடுப்பு எலும்புக்கு மேலாக இருப்பது பிரசவ வாய், ஏதுவாக இல்லாமல் இருப்பது போன்ற கண்டுபிடிப்புகள் இருந்தால், அந்தத் தாய்க்கு சிசேரியன் முன் கூட்டியே செய்து விட வேண்டியாதாகிறது. ஏனெனில், அந்தத் தாயை பிரசவ வலிக்கு உட்படுத்தினால், மேற்சொன்ன கண்டுபிடிப்புகளால், குழந்தை பிறக்க நேரமாகி அந்த நேரத்தில் கருப்பையிலுள்ள அந்த வடு, வலுவுற்று கருப்பையே வெடித்து, தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
    எனவே நார்மல் டெலிவரி என்ற விஷப்பரீட்சைக்கு இடம் கொடுக்காமல் முன் கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டியதாகி விடுகிறது.

    சரி, சிசேரியன் செய்வது என்றால் வலி கண்ட பிறகு செய்யக் கூடாதா? எதற்காக 10, 15 நாள் முன்பாக செய்ய வேண்டும் என்ற முணுமுணுப்பு எழத்தான் செய்யும். பிரசவ வலி என்பது எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி வருவது அந்த நேரம்தான் தாய் சாப்பிட்டிருப்பாள். எனவே அவளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது. அல்லது அவள் இருக்கும் இடத்திலிருந்து வலி கண்ட பிறகு பயணப்பட்டு வர நீண்ட நேரமாகலாம். அந்நேரத்தில் பிரசவ வலியினால், தாய்க்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு, இதை எல்லாம் மனதில் கொண்டுதான் குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ஒரு வாரங்களுக்குப் பிறகு, அதாவது 10,15 நாட்கள் முன்பாகவே ஆபரேசன் செய்ய நேரிடுகிறது.

    சில சமயம் டாக்டர்கள், தாய்மார்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, நல்ல நாள் நேரம் பார்த்து அந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விடுகிறது.

    rifan likes this.

  9. #1769
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஈரல் நோய்களுக்கு பலன் தரும் முள்ளங்கி


    முள்ளங்கி நாம் சாதாரணமாக உணவாக பயன்படுத்துகிற ஒன்றுதான். எனினும் அதனுள் அடங்கியுள்ள மிகச்சிறந்த மருத்துவ குணங்களை நாம் அறியவில்லை.

    முள்ளங்கியில் மஞ்சள் முள்ளங்கி, சுவற்று முள்ளங்கி, சதுர முள்ளங்கி, வனமுள்ளங்கி, கெம்பு முள்ளங்கி என வேறு சில வகை முள்ளங்கிகளும் உண்டு.

    * முள்ளங்கி சாற்றோடு சர்க்கரை சேர்த்து உள்ளுக்கு கொடுப்பதால் குத்திருமல் குணமாகும். மேலும் பலவித ஈரல் நோய்களுக்கும் இது பலன் தரும்.

    * முள்ளங்கியைப் பயிர் செய்து இரண்டு மூன்று இலைகள் வந்தவுடன் அந்த இலைகளில் ஒரு பிடி அளவு எடுத்து 2 முதல் 4 கிராம் அளவு சாதாரண சோற்று உப்பு சேர்த்து காலை, மாலை என 2 வேளையும் சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை என்கிற சிறுநீக மற்றும் பால்வினை நோய்களால் உண்டாகும் நீரடைப்பு நீங்கும். மலமும் வெளியேறும்.

    * 50 முதல் 100 கிராம் வரையில் முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து குடித்து சிறுநீர் வர சிறுநீர் தாரளமாய் இறங்கும்.

    * கிழங்கைப் பச்சையாகவோ, சமைத்தோ உண்பதால் சுவையின்மை நீங்கிப் பசி உண்டாகும். உணவையும் சீரணமாக்கும்.

    * காலை, மாலை என இருவேளைகளும் முள்ளங்கி சாறு செய்து பருகுவதால் மூலநோய்கள் குணமாகும்.

    * இளம் முள்ளங்கி கீரையின் சாற்றை எடுத்து மெல்லிய துணியால் வடிகட்டி அதில் போதிய சர்க்கரை சேர்த்து அருந்திவர மஞ்சள் காமாலை குணமாகும்.

    * ஒரு தேக்கரண்டி முள்ளங்கி கிழங்குச் சாற்றோடு சம அளவு தேனும், உப்பும் சேர்த்து சாப்பிட இருமல், நெஞ்சக கோளாறுகள், இதய வலி, வயிற்று உப்பிசம், தொண்டைப்புண், தொண்டைக் கட்டு ஆகியன குணமாகும்.

    * முள்ளங்கி விதையை நன்றாக இடித்த காடி சேர்த்து குழைத்தப் பசையாக்கி வெண்புள்ளிகளின் மீது தடவி வர தோலின் நிறம் மாறி வரும்.



    rifan likes this.

  10. #1770
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தூதுவளை

    பல நோய்களுக்கு நோய் நிவாரணியாக பயன்படுகிறது தூதுவளை
    கோடி வகையைச் சேர்ந்தது இது. இலைகளின் பின்பக்கம் முள்கள் இருக்கும். தூது வளைக்கு கபநோய்களைத் தீர்க்கும் குணம் உண்டு. இருமல், பெருவயிறு, ஆண்மைக் குறைபாடு போன்றவற்றுக்கு தூதுவளை சிறந்த மருந்தாகும்.

    நாட்டு வைத்தியத்திலும், சித்த வைத்தியத்திலும் தூதுவளை நன்கு பயன்படுகிறது இதன் மருத்துவகுணம் தெரிந்தவளைத் தவிர மற்றவர்கள் இதை உணவுப் பொருளாகக் கொள்ளமாட்டார்கள். இக்கீரையை கலவைக்கீரையோடு கலந்துதான் சமைப்பார்கள்

    இதன் சுபாவம் உஷ்ணம், சூடு அதிகஉஷ்ணம் என்றும் சமைப்பதில்லை மெலும் இது சற்று கசக்கவும் செய்யும் இப்படி உஷ்ணம், கசப்பும் கொண்டதால் பெரும்பாலோர் இதைச் தொடுவதில்லை.

    இதன் இலை, பூ, காய், கொடி அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது.

    சித்தர் பாடல்:

    காதுமந்தம் காதெழுச்சி காசந் தினவுமதம்
    ஓது மந்தம் முத்தோடம் உட்கூலை – தாதுநட்டம்
    மீதுளைப் பத்திரியை மேவச்செய் வாராய்ந்தோர்
    தூதுவளைப் பத்திரியைத் தூய்த்து. – பதார்த்த குணசிந்தாமணி


    தூதுவளை உடல்நல நன்மைகள்:-
    தூதுவளைக் கீரையைப் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகும்.
    தூதுவளைக் கீரையைக் காயவைத்துப் பொடியாக்கித் தினமும் சாப்பிட்டால் காது தொடர்பான நோய்கள் அனைத்தும் சரியாகும்.
    தூதுவளைக் கீரையை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் நன்றாகப் பசி எடுக்கும்.
    தூதுவளைக் கீரைச் சாறை 30 மி.லி. அளவில் தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

    தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.
    தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.
    தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.
    contd..


    rifan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter