Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1771
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.
    தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.
    தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.
    பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.
    தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.
    contd..



    Sponsored Links
    rajisugu and rifan like this.

  2. #1772
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.
    தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.
    தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.
    புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.
    சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

    100 கிராம் தூதுவளைக் கீரையில் உள்ள சத்துக்கள்:

    நீர்ச்சத்து - 84.7 கிராம்
    புரதம் - 3.9 கிராம்
    கொழுப்பு - 0.7 கிராம்
    தாதுஉப்புகள் - 3.8 கிராம்
    நார்ச்சத்து - 2.3 கிராம்
    சர்க்கரைச்சத்து - 4.6 கிராம்
    சுண்ணாம்புச்சத்து - 334 மி.கி
    பhஸ்பரஸ் - 52 மி.கி
    இரும்பு - 5.0 மி.கி
    கலோரித்திறன் - 40 கலோரி


    தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.


    rifan and rsakthi1974 like this.

  3. #1773
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பருவுக்கும் மருவுக்கும் என்ன வித்தியாசம்?

    டாக்டர் டி.பாரி -
    நம் உடம்புக்குச் சவால் விடக்கூடிய வெயில் காலம் வந்துருச்சு. சருமப் பாதுகாப்பில் எச்சரிக்கையா இருங்க! என அக்கறையோடு குரல் கொடுக்கிறார் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் டி.பாரி.
    வெயில் காலத்திலே வியர்வையால் அரிப்பு, உடல்நாற்றம், படர்தாமரை, கொப்புளங்கள் போன்றவை சகஜம்! அதனால் உடல்சுத்தம் ரொம்ப அவசியம்!
    இப்படிப்பட்ட காலத்திலே உடம்பை இறுக்கற ஜீன்ஸ் மாதிரி இல்லாம, காற்றோட்டமான, வியர்வை உறிஞ்சற காட்டன் டிரஸ் போட்டுக்கறது நல்லது! அதிகமான வெப்பத்தால் சருமம் கறுத்தும், சுருங்கியும் போறதுக்கு வாய்ப்பு அதிகமா இருக்கு. சன் ஸ்கிரீன் லோஷன் போடலாம் என்றவர், தோல் சம்பந்தமான சில நோய்கள் குறித்தும் சீரியஸாகப் பேசினார்..

    ஆசோரியாசிஸ்ங்கிற தோல் உதிர்வு நோய் வந்தா கை, கால், உள்ளங்கை, முட்டி போன்ற இடங்கள்ல கட்டுப்படுத்த முடியாத அளவுக்குத் தோல் வளர்ச்சி இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த ஃபோட்டோ தெரஃபி, பயோலாஜிக்கல் போன்ற நவீன சிகிச்சைகள் இருக்கு. ஆனா ரொம்ப காஸ்ட்லி!
    வெண் புள்ளி மாதிரியான நோய்களுக்கு இப்போ அல்ட்ரா வயலட் சிகிச்சை இருக்கு. சிக்கன் பாக்ஸூக்குத் தடுப்பூசியும், மாத்திரைகளும் இருக்கு. இதன்மூலமா அம்மைத் தழும்புகளைத் தடுக்கலாம். குழந்தைகளுக்கு வர்ற சொரி, சிரங்குக்குச் சரியான சிகிச்சை எடுத்துக்கலேன்னா, அவர்கள் வளர்ந்த பின்பும் அந்தத் தழும்புகள் அசிங்கமா தெரியும்.
    அலர்ஜி பத்தியும் நாம் கொஞ்சம் அலாட்டா இருக்கணும்! என எச்சரிக்கிறார். அலர்ஜிக்கு சாப்பாடு, சருமத்தில் அழுத்தும் ஆபரணங்கள், ஒத்துவராத சில மாத்திரைகள், பூச்சிக் கடிகள்ன்னு நிறைய காரணங்கள் இருக்கு. பார்த்தீனியம்ங்கிற செடியால பல பேருக்கு அலர்ஜி வருது. சரியான சிகிச்சை எடுத்துக்கிட்டோம்னா இந்த "ஒவ்வாமை"கள் பற்றி ஒரு கவலையும் வேண்டாம். டீன் ஏஜ் பருவத்தில் வர்ற பரு, ஒரு சாதாரண விஷயம்! ஆனா, சரியான கவனிப்பு இல்லேன்னா முகத்தோட அழகைக் கெடுத்திடும். பரு 13 வயசிலேர்ந்து 26 வயசு வரைக்கும் வரலாம். வளர்பருவத்தில் வர்ற ஹார்மோன் மாற்றத்தினாலதான் பரு வருது. முகம் மட்டுமல்லாது மார்பு, முதுகுப் பகுதிகளிலும் பரு வரலாம். இதுக்கு சிம்பிளான சிகிச்சையே போதுமானது.
    பல பேருக்குப் பருவுக்கும் மருவுக்கும்-கூட வித்தியாசம் தெரியறதில்லே. மரு, வைரஸ்களால் வருது. இதுக்கு எலக்ட்ரோ மற்றும் சர்ஜரி ஆகிய ரெண்டு வழியிலே சிகிச்சை இருக்கு. மருவை நிரந்தரமா நீக்கிடலாம்! முடி கொட்டுறதும் தோல் சம்பந்தப்பட்டதுதான்! முடிகொட்டுறதுக்கு தோல் டாக்டர்கிட்டே வர்ற மக்களைவிட கண்ட கண்ட எண்ணெயைத் தேடிப் போகிற மக்கள்தான் அதிகமா இருக்கறாங்க. அறிவியல்பூர்வமான உண்மை என்னன்னா, எண்ணெயால முடி வளராது. முடி உதிர்வைத் தடுக்க டாக்டர்கிட்டே போறதுதான் சிறந்த வழி.
    தலைமுடி கொட்டுறதுக்கு பொடுகு ஒரு முக்கிய பிரச்சினை. முடி நல்லா வளரணும்னு சிலர் முட்டையை உடைச்சு தலைக்குத் தடவுவாங்க. அதுக்குப் பதிலா அந்த முட்டையைச் சாப்பிட்டாங்கன்னா, முட்டையோட முழு பலனும் கிடைக்கும். அதேபோல சிவப்பழகு கிரீம்கள், தோலுக்கு உண்டான நார்மல் கலர் என்னவோ அதைத்தான் தரமுடியும். கறுப்பா இருக்கறவங்க சிவப்பா மாறலாம்ங்கிறது சுத்தப் பொய்! மேலும் அது மாதிரியான கிரீம்களை நாலஞ்சு மாசத்துக்கு மேலே தொடர்ந்து உபயோகிக்கறது அவ்வளவு நல்லதும் இல்லே!" என்றும் உஷார்படுத்துகிறார்.
    மங்கு, தேமல் பத்தியும் நம்மூர்ல சில மூடநம்பிக்கைகள் இருக்கு. குடும்பத்துக்கு ஆகாதுன்னு சொல்வாங்க. அதெல்லாம் அறிவீனம்! நல்ல சன் ஸ்க்ரீன் உபயோகிச்சாலே தேமல், மங்கு எல்லாம் மறைஞ்சிடும்! உடம்பைச் சுத்தமா வெச்சுக்கறதும் வெயிலைத் தவிர்க்கிறதும், பேரீச்சை, கீரை, தக்காளி, கேரட் மற்றும் பழச்சாறுகள் போன்றவை சாப்பிடறதும் சருமப் பாதுகாப்புக்குச் சிறந்த வழிகள்!

    rifan likes this.

  4. #1774
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நோய்கள் வராமல் தடுக்கும் பழங்கள்

    இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பது தான். இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும்.
    காட்டில் வாழ்ந்த சித்தர்கள் நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பழங்களை உட்கொண்டது தான்.


    ஆப்பிள் : இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும்.

    திராட்சை : பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.

    ஆரஞ்சு : காய்ச்சல், எலும்பு நோய்கள், முகப்பரு வராமல் தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை அதிக அளவில் கொடுக்கலாம்.

    மாதுளை : வயிற்றில் பூச்சி, அஜீரணக்கோளாறு, பித்தப்பை, சிறுநீரகக்கல், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும்.

    வாழைப்பழம் : மூட்டுவலி, சிறுநீரகக்கோளாறு, காசநோய், அலர்ஜி

    பப்பாளி: பசியின்மை, வயிற்றுப்பூச்சி, ஈரல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும், மேனியை பளபளப்பாக்கும்.

    நெல்லிக்கனி : நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தூக்கமின்மை, உடல்கொழுப்பு குறைய, இளநரை, முடி உதிர்வு நிற்க உதவும்.


    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-2.png  
    rajisugu and rifan like this.

  5. #1775
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நல்லெண்ணை முழுக்கிற்கு விஞ்ஞானம், சோதிடம் கூறும் விளக்கம்

    நம் முன்னோர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நல்லெண்ணை உடல் முழுக்கப் பிரட்டி சிறிது நேரம் (உடம்பில் சுவறும் வரை) இருந்து தோய்வது வழக்கமாக இருந்தது எங்கள் எல்லோருக்கும் தெரியும். காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு இன்னுமொரு காரணம் இருப்பதாக விஞ்ஞான ரீதியில் கூறப்பெற்றுள்ளது.

    இந்தச் சனிக்கிரகம் உடலுக்குத் தீங்கு (தோஷத்தை) ஏற்படுத்தக் கூடிய தீய கதிர் வீச்சுக்களை வீசுகின்றது. அதனால் அதனை ஒரு பாபக் கிரகமாக ஜோதிடம் அடையாளம் காட்டுகின்றது. சனிக்கிரகம் ஒரு ஜாதருக்கு பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடிய இடங்களில் (ஜாதகத்தில் சந்திர ராசிக்கு 1, 2, 5, 8, 12 ஆகிய இடங்களில்) கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் மேலும் தீவிரம் அடைவதாக கணிக்கப் பெற்றுள்ளன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். சனிக்கிரகத்தில் இருந்து வரும் கதிர்களை எள் எண்ணையில் சுவறிய எமது உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணைமுழுக்கு.

    இத் தீய கதிர்கள் மூளை நரம்புகளை பாதிக்கின்றது. ஜாதகருடைய சிந்தனைகளை திசைமாறிச் செல்ல வைத்து பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றது. அந்தக் கிரகத்தின் கதிர் வீச்சிலிருந்து தப்பிக்க பல பரிகார சடங்குகள் இருந்தாலும் மிக முக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் உடல் முழுக்க எள் எண்ணைய் (நல்லெண்ணை வைத்து) பிரட்டி சூரிய உதயத்தில் 1/2 மணி நேரம் நின்ற பின் தோய வேண்டும், அதனால்தான் எமது முன்னோர்களும் சனிக்கிழமைகளில் எண்ணை வைத்து தோயும் வழக்கத்தினைப் பின்பற்றியுள்ளனர் என்பது வெளிப்படை. ஆனால் தற்போது நாகரீக மேலாதிக்கத்தினால் அவை பின்பற்றப் பெறுவதில்லை

    rajisugu and rifan like this.

  6. #1776
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்சினை

    டாக்டர் ஷிராஜ் கரீம்
    கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஆண்களுக்குத்தான் அதிகம் வரும் என்பார்கள். இது பெண்களுக்கும் ஏற்பட வாய்ப்புண்டா?
    நீங்க வேற... ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம் வருவதற்கு வாய்ப்புள்ளது. பெண்களுக்கு சுரக்கும் ஹார்மோன்கள்தான் இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. 30 வயதுக்கு மேல் 70 வயது வரையான பெண்களுக்குத்தான் அதிகம் வருகிறது.

    கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை என்றால் என்ன?
    கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை என்பது, கால்களில் உள்ள நரம்புகள் புடைத்துக் கொள்வதுதான். ஆரோக்கியமான கால்களில் உள்ள நரம்புகள் இருதயத்திலிருந்து செலுத்தப்படும் ரத்தத்தை ஒரே சீராகச் செல்ல அனுமதிக்கும். அதேபோல கால்களிலிருந்து இதயத்திற்கு ரத்த ஓட்டம் சீராக நடைபெற வழி வகுக்கும். இதற்கு கால் நரம்புகளில் உள்ள வால்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை பழுதடைந்தால், நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு, அவை கால்களிலேயே தங்கிவிடும். இதனால் கால்கள் பாதிக்கப்படும். அல்லது கடுமையான வலி ஏற்படுத்தும். கால் நரம்புகளில் இருந்து ரத்தம் மீண்டும் இருதயத்திற்கு செல்லாத நிலையில் கால்கள் வீக்கமடையும்.
    இவ்விதம் கால் நரம்புகளில் ரத்தம் தேங்குவதால் நரம்புகள் சுருண்டு கொள்ளும். இதைத்தான் "வெரிகோஸ் வெயின் (Varicose Veins)" என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இவர்களது கால்கள் வீக்கமடைவதுடன், நரம்புகள் சுருண்டு கொண்டிருப்பதையும் காண முடியும். ரத்தம் தேங்கி விடுவதால் நரம்புகள் கருநீல நிறத்தில் காட்சி அளிக்கும். ஆரம்ப நிலை என்றால், சிறிய அளவில் மாறுபட்ட நிறத்திலான கோடுகள் சிலந்தி வலை போன்று காட்சியளிக்கும்.
    பெரும்பாலோர் இது வெறும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை என்று நினைக்கிறார்கள். ஆனால் இது மருத்துவ ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய ஒரு நோய். நரம்புகள் சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்பட்டால் கடுமையான வலி தோன்றும். சில சமயங்களில் உடலில் மிகுந்த களைப்பு ஏற்படும். இந்நோய் மிகவும் முற்றிய நிலையில் தோலின் நிறமே மாறும். தோலின் மீது கொப்புளங்கள் தோன்றும். கால்களிலும், கணுக்கால்களிலும் கொப்புளங்கள் தோன்றும். கொப்புளங்களிலிருந்து சில சமயம் ரத்தம் வெளியேறும். சில சமயங்களில் ரத்தக் கட்டிகள் நரம்புகளில் ஏற்படக்கூட வாய்ப்புண்டு.

    எத்தகைய பெண்களுக்கு கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்படும்?
    உடல் பருமனான பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், அதிலும் குறிப்பாக அதிக குழந்தைகள் பெறும் தாய்மார்களுக்கு இப்பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
    சில பெண்களுக்கு கருவுற்ற காலத்திலேயே கால்களில் நரம்புகள் சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்படும். குழந்தை பிறந்தவுடன் இந்த நரம்புகள் மறைந்துவிடும். ஆனால் குழந்தை பெற்ற பின்னரும் தொடரும். பெற்றோர்களில் யாரேனும் ஒருவருக்கு இப்பிரச்னை இருந்தால் குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.
    contd..


    rajisugu and rifan like this.

  7. #1777
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்படாமல் தடுப்பது எப்படி?
    இதைத் தடுப்பது மிகவும் கடினமானது. காரணம், மனிதர்கள் கால்களில் தானே நடக்கிறோம்? இருப்பினும் இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ள சிலர் முன் கூட்டியே நடவடிக்கை எடுப்பதன் மூலம் அதைத் தடுக்க முடியும்.
    உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.
    நீண்ட நேரம் நின்றபடியே பணிபுரிவதைத் தவிர்ப்பது.
    நார்ச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் உண்பது.
    கால்களில் எப்போதும் காலுறை அணிவது என இப்பிரச்னை வராமல் தடுக்க முடியும்!
    கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்பட்டால் அதற்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வா? வேறு மாற்று வழிகள் ஏதேனும் உண்டா?
    இந்தப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு இல்லை. நோயின் தீவிரத் தன்மையைப் பொறுத்து பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.

    காலுறை அணிதல்: நோய் ஆரம்ப நிலையில் இருப்பின், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட காலுறைகளை அணிந்து இந்நோயைக் குணப்படுத்தலாம்.
    மருந்து மூலம் குணப்படுத்துதல்: மருந்து அளித்து குணப்படுத்தும் நிலையில் சிலருக்கு இருக்கும். அத்தகையோருக்கு மருந்துகளுடன் பிரத்யேக காலுறை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படும். இது உரிய பலனை அளிக்கும். இருப்பினும் கால்களில் முதலில் சுருண்ட நரம்புகளை முற்றிலுமாக பழைய நிலைக்குக் கொண்டு செல்லவோ, குணப்படுத்தவோ இயலாது.
    ஊசி மூலம் குணப்படுத்துதல்: இந்த சிகிச்சைக்கு ஸ்கெலரோதெரபி என்று பெயர். ஆனால் இந்த சிகிச்சை நீண்ட காலம் மேற்கொள்ள வேண்டியவை. இத்தகைய சிகிச்சை முறைகளை முழு அளவில் மேற்கொள்ளாவிடில் முழு அளவில் பயன் கிடைக்காது. மேலும் இத்தகைய சிகிச்சை முறைகளில் நரம்புகளில் ரத்தக்கட்டிகள் தோன்றும். சில சமயங்களில் இந்த ரத்தக் கட்டிகள் இருதயத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. அல்லது நுரையீரல் போன்ற பகுதி சிக்கலை ஏற்படுத்தலாம்.
    அறுவை சிகிச்சை: நோயுற்ற காலில் உள்ள பழுதடைந்த நரம்புப் பகுதிகளை வெட்டியெடுத்து நீக்கும் அறுவை சிகிச்சை முறை மிகவும் சிக்கலானது. மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கும். மருத்துவமனையில் இரண்டு வாரம் முதல் நான்கு வாரம் வரை தங்க வேண்டியிருக்கும்.
    லேசர் சிகிச்சை: பழுதடைந்த நரம்புகளில் லேசர் ஃபிளமென்ட் மூலம் அடைப்பது நவீன முறையாகும். இந்த சிகிச்சை முறையிலும் சில பாதக அம்சங்கள் உள்ளன. லேசர் சிகிச்சையின் போது வெளியாகும் அதிகபட்ச வெப்பம், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். அத்துடன் அருகிலுள்ள திசுக்களையும் இது சேதப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு.
    ரேடியோ அலை சிகிச்சை (Radio Frequency Ablation (RFA - ஆர்.எஃப்ஏ.): இப்புதிய முறை பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. காரணம், இந்த சிகிச்சை முறையில் வலி மிகக் குறைந்த அளவில் இருக்கும். தவிர, மருத்துவமனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெறாமல், புற நோயாளிகளைப் போல சிகிச்சை பெற்றாலே போதும். பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் மறத்துப் போவதற்கான ஊசி செலுத்தப்படும். இந்த சிகிச்சை முறையால் ரத்த அடைப்பு ஏற்படுவதில்லை. மேலும் அருகிலுள்ள திசுக்களும் பாதிக்கப்படாது. அதிக வெப்பமும் வெளியேறுவதில்லை. பாதிக்கப்பட்ட நரம்புகள் மூடப்பட்டவுடன், அருகிலுள்ள ஆரோக்கியமான நரம்புகளில் ரத்தம் பாயத் தொடங்கும். இதனால் கால்கள் பழைய நிலைக்குத் திரும்பும்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-varicose-veins.jpg  
    rajisugu and rifan like this.

  8. #1778
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வயிற்றுக் கடுப்பு நீங்க இலவங்கப் பட்டை

    சமையல் அறையில் நம் முன்னோர்கள் ஒரு வைத்திய சாலையையே வைத்திருந்தார்கள். அஞ்சறைப் பெட்டிஅருமருந்துகளின் பெட்டகமாகவே இருந்துள்ளது.

    சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, மிளகு, இலவங்கப்பட்டை, கசகசா என பல மருத்துவப் பொருட்களை அன்றாடஉணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர்கள்தான் நம் முன்னோர்கள்.


    தற்போது உணவே மருந்து மருந்தே உணவு என்ற கோட்பாடு தலைதூக்கி பல்வேறு வகைகளில் இதைபாடங்களாகவும், ஆலோசனைகளாகவும் செய்துவருகின்றனர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றபழமொழிக்கேற்ப இந்த குறைவற்ற செல்வத்தைப் பெற உணவில் மேற்கூறிய பொருட்களை சேர்ப்பது நல்லது.

    கருவாப் பட்டை என அழைக்கப்படும் இலவங்கப் பட்டையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

    இந்த இலவங்கப்பட்டை செடியானது இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உரிய பயிராகும். இந்தியாவில் கேரளாபகுதிகளில் அதிகம் காணப்படுகின்றது. இலவங்கப் பட்டை உற்பத்தியில் இலங்கையே முதன்மை வகிக்கிறது.இலங்கை, மேற்கு மலேசியாவின் சாபா, சரவா பகுதிகளிலும் தாய்லாந்தின் வடக்குப் பகுதியிலும் இது உற்பத்திசெய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப் படுகின்றது.

    இதன் பட்டை அரக்கு நிறத்தில் காணப்படும். காரமும் இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும்.

    Tamil - Lavangapattai

    English - Cinnamon

    Malayalam - karuvapatta

    Telugu - Lavangapatta

    Sanskrit - Twak

    Hindi - Dalchini

    BotanicalName - Cinnamomum verum
    தாதுநட்டம் பேதி சருவவிஷம் ஆகியநோய்

    பூதகிர கஞ்சிலந்திப் பூச்சிவிடஞ்-சாதிவிடம்

    ஆட்டுமிரைப் போடிருமல் ஆகியநோய்க் கூட்டமற

    ஓட்டுமில வங்கத் துரி

    சன்னலவங் கப்பட்டை தான்குளிர்ச்சி யுண்டாக்கும்

    இன்னுமிரத் தக்கடுப்பை யீர்க்குங்காண்-முன்னமுறும்

    உந்திக் கடுப்பகற்றும் உண்மூலப் புண்போக்கும்

    கந்தமிகு பூங்குழலே! காண்
    - அகத்தியர் குணபாடம்
    contd..


    rajisugu and rifan like this.

  9. #1779
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    லவங்கப்பட்டையை கறிமசாலாவில் அதிகம் சேர்ப்பார்கள். இது அதிக சுவையையும், மணத்தையும் தரக்கூடியது.

    நீரிழிவு நோய்க்கு

    நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது.

    வாய் துர்நாற்றம் நீங்க

    வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமானதுர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் லவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண்,குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.

    செரிமான சக்தியைத் தூண்ட

    எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை,குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில்லவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில்புண்கள் ஏற்படாமல் காக்கும்.

    இருமல், இரைப்பு

    சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்குஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம்அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காகவற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்புமேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

    விஷக்கடிக்கு

    சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப்போட்டு வந்தால் விஷம் முறியும்.

    வயிற்றுக் கடுப்பு நீங்க

    வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலிஉண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன்தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவைகுணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.

    பெண்களுக்கு

    குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில்சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும்இது சிறந்த மருந்து.

    தாது விருத்திக்கு

    தாது நட்டம் உள்ளவர்கள் இன்று பகட்டு விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தைத்தொலைத்துக்கொண்டிருப்பார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில்சேர்த்து வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.


    இத்தகைய அரிய பயன்களைக் கொண்ட கருவாப்பட்டையை இனியும் ஒதுக்கலாமா... முன்னோர்களின் வழியைப்பின்பற்றி நாமும் நோயின்றி நூறாண்டு வாழ்வோம்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-images-6-.jpg  
    rifan likes this.

  10. #1780
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வாழை இலையில் உணவு பரிமாறும் முறை

    வாழை இலையின் இடது மூலையில் உப்பினை வைத்தல் வேண்டும். வலது கீழ்ப்பக்க மூலையில் இனிப்பு பலகாரம், பாயாசம் வைக்க வேண்டும்.மேல்பகுதியில் வலதிலிருந்து இடது பக்கமாக பச்சடி, கூட்டுக்கறி, பொரித்த கறி, பால்கறி, வறுவல், ஊறுகாய் ஆகியவற்றையும் வைத்தல் வேண்டும்.இடது பக்கத்தின் கீழ்ப்புறமாக அப்பளம், வடை, பொறியல் பரிமாற வேண்டும். இனிப்பு பலகாரம் அருகில் சித்ரான்னமும், பருப்பு, நெய் பரிமாறவும். அடுத்து, சோறுடன் குழம்பும், அடுத்து ரசமும் பரிமாறி, பாயசம் பரிமாற வேண்டும். கடைசியாக தயிர் சோற்றுடன் பரிமாறி முடித்தல் வேண்டும்.

    இனி சாப்பிடுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
    இனிப்பில் ஆரம்பித்து, உப்பு, புளி, காரம், தாவர வகை கறிகள் சாப்பிட்டு கடைசியாக துவர்ப்பில் அதாவது ஊறுகாய், தயிரில் முடிக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அனைத்துச் சுவைகளையும் சாப்பாட்டின் போது சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் தான் சாப்பிட வேண்டும்

    rifan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter