Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1811
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத் முக்கியமான 7 செயல்கள்...’

    நாம் அனைவரும் சாப்பிடும் சாப்பாடு ருசியாக இருக்கவேண்டும் என்பதிலே கவனம் செலுத்துகின்றோம்.
    நாம் சாப்பிட்ட பிறகு நம் வயிற்றுக்குள் என்ன நடக்கிறது, சாப்பாடு சரியாக செரிமானம் அடைகிறதா அல்லது எத்தனை மணிநேரத்தில் செரிமானம் அடைகிறது, ஒரு வேளை உணவு செரித்த பின்புதான் சாப்பிடுகிறோமா என்பதையெல்லாம் யாரும் கவனிப்பதில்லை.
    உணவு கட்டுப்பாடு உள்ளவர்கள் கூட சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்துவார்கள் தவிர சாபிட்ட பிறகு ஏடாகூடமாக எதையாவது செய்வார்கள்.
    சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவற்றை பார்ப்போம்.
    1) காலை உணவை சீக்கிரம் சாப்பிடுவது நல்லது, சாப்பிட்டு குறைந்தது இரண்டு மணிநேரம் முதல் நான்கு மணிநேர இடைவெளிக்கு பின்தான் மறுபடி சாப்பிடவேண்டும். நன்கு பசித்த பின் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.
    2) வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானது. ஆனால் சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிட்டால் முதலில் பழங்கள் தான் செரிமானம் அடையும், சாப்பாடு செரிமானம் அடைய அதிகநேரமாகும் அதனால் வயிறுவலி ஏற்படலாம்.
    3) சாப்பிட்ட உடனே நடப்பது, மூச்சுப் பயிற்சி, யோகா போன்ற எந்தவித உடல்பயிற்ச்சியும் செய்யக்கூடாது. சாப்பிடும் முன் செய்யலாம். சாப்பிட்ட பின் நடக்கலாம் என்று விபரம் உள்ளவர்களே செய்வார்கள் ஆனால் அது தவறு அப்படி செய்தால் இரத்த ஓட்டம் செரிமான மண்டலத்திற்கு செல்லாது அதனால் செரிமானம் தடைபடும்.
    4) சாப்பிட்ட பின்பு சிகரெட் பிடிக்ககூடாது அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும். கார்பன்-டை-ஆக்ஸைடு முழுமையாக வெளியேறாமல் நுரையீரலில் தங்கிக்கொள்ளும்.
    5) சாப்பிட்ட உடனேயே குளிக்கக்கூடாது ஏனெனில் குளிக்கும் போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும். சாப்பிட்டு இரண்டு மணிநேர இடைவெளிக்கு பின்னரே குளிக்கவேண்டும்.
    6) சாப்பிட்டவுடன் டீயோ, க்ரீன்டீயோ குடிக்கக்கூடாது.
    ஏனெனில்தேயிலையில் உள்ள ஆசிட் உணவில் உள்ள புரதச் சத்தினை கடினமாக்கி செரிமானத்தைக் தடைபடுத்தும். சாப்பிட்டு அரைமணிநேரம் கழித்து டீ குடிக்கலாம்.
    7) பகலிலையோ, இரவிலையோ சாப்பிட உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை கழித்தே உறங்க வேண்டும்.
    இது போன்ற தவறான பழக்கங்கள் இருந்தால் அவற்றை திருத்திகொள்ளுங்கள். நம் பிள்ளைகளுக்கும் அவற்றை பழக்குங்கள். உணவே மருந்து என்பதை உணர்ந்து நோயற்ற வாழ்வை வாழுங்கள்.


    Sponsored Links

  2. #1812
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    nice sharing friend,aanal neengal mele sonna keerai epadi irukum,muttu valiki sonningale?

    chan likes this.

  3. #1813
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மலச்சிக்கலுக்கு மாமருந்து... குல்கந்து

    மலச்சிக்கலுக்கு மாமருந்து... குல்கந்து... (ரோஜா + தேன்)
    நம் நாட்டில் வளரும் பல தாவரங்கள் மருததுவ குணங்களைக் கொண்டுள்ளன. அதில் இலைகள் மட்டுமல்லாமல் மலர்களையும் பழங்களையும் பயன்படுத்திப் பல மருந்துகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
    ரோஜாப் பூ, உடலுக்கு குளிர்ச்சியை ஊட்டவல்லது. இதமான மலமிளக்கியாகவும் உள்ளது. கண்களுக்கு ரோஜா இதழ்களால் தயாரிக்கப்படும் பன்னீர் நல்லது.
    ஜீரண சக்தியை தூண்ட, உடலுக்கு வலிமை அளிக்க, புத்தி கூர்மையை கூட்ட, உடலில் துர்வாசனையை போக்கவும் ரோஜா பயன்படுகிறது.
    யுனானி மருத்தவத்தில் குல்கந்து என்று சொல்லப்படும் மருந்து ரோஜா, பேரீச்சம் பழம் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
    மலச்சிக்கலுக்குக் குல்கந்து ஒரு சிறந்த மருந்து. குடல் சம்பந்தமான வியாதிகளை இது குணப்படுத்துகிறது.
    ரோஜாப்பூ குல்கந்து
    ரோஜாவின் மருத்துவகுணம்ரோஜாப்பூவால் சரும நோய்கள்
    நீங்கும். ரத்த விருத்தி உண்டாகும்.. சீதபேதி குணமாகும். ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும
    உஷ்ணத்தால் வரும் வயிற்று வலிக்கு:
    ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை (தமிழ் மருந்து கடைகளில் கிடைக்கும்)ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும். குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும் பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி போகும். குன்ம வயிற்று வலிக்கு இது சிறந்ததாகும்.
    ரத்த விருத்திக்கு குல்கந்து
    களிம்பு ஏறாத பாத்திரத்தில் ரோஜா இதழ்களை பாத்திரத்திலிட்டு கொதிக்கும் நீரை அதில் விட்டு நன்றாக கிளறி விட்டு (இதழ் கால் அல்லது முக்கால் இருக்கலாம்) அப்படியே மூடி வைத்திருக்க வேண்டும். இப்படி 12 மணி நேரம் மூடி வைத்திருக்க வேண்டும். பிறகு மூடியை திறந்து கைகளை சுத்தம் செய்து கொண்டு இதழ்களை கசக்கி பிழிந்து குழம்பு போல் ஆக்க வேண்டும். பிறகு இந்த நீரை வேறொரு பாத்திரத்திலிட்டு 500 கிராம் சர்க்கரை மற்றும் 200 மில்லி நீரும் சேர்த்து காய்ச்ச வேண்டும். சர்க்கரை பாகு வந்ததும் ஏற்கனவே செய்து வைத்த ரோஜாப் பூ நீரை இதில்விட்டு மறுபடியும் காய்ச்ச வேண்டும். இப்போது பாகு தேன் பதத்திற்கு வந்ததும் மூன்று அவுன்ஸ் அளவுக்குப் பன்னீரை கலந்து கிளறி இறக்கி ஆற வைத்துக் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொள்ள வேண்டும். இரண்டு கரண்டி டம்ளரில் விட்டு தேவையான அளவு தண்ணீர்விட்டு சாப்பிட்டு வரலாம். இதனால் ரத்த விருத்தி உண்டாகும்.
    சரும நோய்களுக்கு:
    ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.


    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg  
    Last edited by chan; 24th Jan 2015 at 04:32 PM.

  4. #1814
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அந்த காலங்களில் நம் முன்னோர்கள், செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள்

    அந்த காலங்களில் நம் முன்னோர்கள், செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள்.
    ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.
    ஆனால், வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்.
    தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா?
    செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் அறிவித்தது.
    இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்றத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்.
    செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும்.
    மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்.
    தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில்தான் தண்ணிர் குடிக்கிறார்கள்.
    தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம்.
    தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா?
    வாங்க பார்க்கலாம்! வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான கப்ஹா, பிட்டா மற்றும் வடா போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும். இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரில் நிறைந்துள்ள நன்மைகள்!!! அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும்.
    இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:
    contd..



  5. #1815
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி
    1) பாக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.
    2) தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.
    3) கீல்வாத வலியை குணப்படுத்தும் தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.
    4) புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.
    5) மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.
    6) செரிமானத்தை மேம்படுத்தும் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.
    7) இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.
    8) கர்ப்ப காலத்தின் போது: கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.
    9) புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.
    10) வயதாகும் செயல்முறை குறையும் தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-30.jpg  

  6. #1816
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அறு சுவைகளும்... அதன் பயன்களும்..

    அனைத்து சுவைகளும் அள்வாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்... சில நேரங்களில் அதிகமாகும்பொழுது சில பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. கவனமாக உட்கொள்ளவும்.
    பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நாம் அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.
    தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.
    துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
    இனிப்பு - தசையை வளர்க்கின்றது
    புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
    கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
    கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
    உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

    அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.
    contd..


    Last edited by chan; 24th Jan 2015 at 04:35 PM.

  7. #1817
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    துவர்ப்புச் சுவை (Astringent)
    இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது.
    இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.
    கிடைக்கும் உணவுப் பொருட்கள்
    வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

    இனிப்புச் சுவை (Sweet)
    மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.
    இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.
    கிடைக்கும் உணவுப் பொருட்கள்
    பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

    புளிப்புச் சுவை (Sour)

    உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.
    இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.
    எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

    காரச் சுவை (Pungent)
    பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.
    அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.
    வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

    கசப்புச் சுவை (Bitter)
    அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.
    இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும்.
    பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.

    உவர்ப்புச் சுவை (Salty)
    தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.
    இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது.
    உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.
    கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.


    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg  

  8. #1818
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அல்சர்

    மருத்துவ செய்திஅல்சரால் அவதியா? கவலைய விடுங்க இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் வாட்டி வதைக்கிறது “அல்சர்”.
    ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மக்கள் ஈர்க்கப்படுகின்றனர்.

    அல்சர் என்பது என்ன?
    தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம்.
    இரைப்பையில் புண் ஏற்பட்டால் ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் ‘டியோடினல் அல்சர்’ (Duodenal ulcer) என்றும் அழைக்கிறோம்.
    இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவடையும்.
    காரணங்கள்
    காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது.
    மது அருந்துதல், புகைபிடித்தல், மென் குளிர்பானம், காபி, தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பது.

    ஸ்டீராய்டு மாத்திரைகள், ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது.

    உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது, அதிகச் சூடாகச் சாப்பிடுவது, பட்டினி கிடப்பது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண்ணுக்கு வரவேற்பாக அமைகின்றன.
    தினமும் வேளை தவறிச் சாப்பிடுபவர்களுக்கும் காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கும் இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    இதற்குக் காரணம், நமக்குப் பசி உணர்வு தோன்றியதுமே ஹைட்ரோகுளோரிக் அமிலமும், பெப்சின் என்சைமும் சுரக்கத் தொடங்கிவிடும்.

    அப்போது நாம் உணவைச் சாப்பிடாவிட்டால் இந்த அமிலம் இரைப்பையின் மியூகஸ் படலத்தைத் தின்னத் தொடங்கும். இது நாளடைவில் இரைப்பைப் புண்ணுக்கு வழிவகுக்கும்.
    அறிகுறிகள்

    இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். இதைத் தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும்.

    குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு வயிற்றில் வலி தோன்றும்.
    குறிப்பாக இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும், புண் உள்ள இடத்தில் அமிலம்படுவதால், இந்த வலி ஏற்படுகிறது.
    அதுபோல் உணவைச் சாப்பிட்ட பின்பும் இதே வலி உண்டாகும். காரணம் புண்ணின் மீது உணவு படுவதால் இப்படி வலி ஏற்படுகிறது.
    contd..



  9. #1819
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    சிகிச்சை என்ன?

    இரைப்பை புண்ணைக் குணப்படுத்த அமில எதிர்ப்பு மருந்துகள் (Antacids), ‘பிபிஐ’ (Proton pump inhibitor) மாத்திரைகள்/ஊசி மருந்துகள் உள்ளன.
    இவற்றைச் சரியாக எடுத்துக்கொள்வதன் மூலமும் உணவுப் பழக்கத்தைச் சரிபடுத்தி கொள்வதன் மூலமும் 90 சதவிகித இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்திவிடலாம்.
    ஒரு சிலருக்கு மட்டுமே மாத்திரை, மருந்துகள் பலன் தராது. அவர்களுக்கு மட்டும் அறுவைச் சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
    1. குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்றெரிச்சலை போக்கும்.

    2. உங்கள் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளவும். நோயாளிக்கு நெய் ஜீரணமாகவிட்டால் வெந்நீருடன் சேர்த்து கொடுக்கவும்.

    3. இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும். மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது.

    4. நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடிக்க பலனளிக்கும்.

    5. வில்வ இலைகள் / பழங்கள் – இவற்றை சேர்த்து கொண்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும்.

    6. 250 கிராம் முட்டைக்கோசை 500 மி.லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியளவு ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி குளிர வைக்கவும். இதை கேரட் சாறுடன் சேர்த்து பருகினால் அல்சர் குணமடையும்.

    7. பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது) அல்சருக்கு நல்லது.

    8. உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம்.

    9. மாதுளம் பழச்சாறு அல்சருக்கும் நல்லது.

    10. திரிபாலா சூரணம் (ஒரு தேக்கரண்டி) நெய் ஒரு தேக்கரண்டி மற்றும் தேன் 1/2 தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொண்டால் அல்சர் குணமாகும். 11. கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
    ஒரு பாகத்திற்கு 6 பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும். இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.

    12. உங்களுக்கு அல்சர் இருந்தால் உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா கலந்த காரசாரமான உணவு இவற்றை தவிர்க்கவும்.

    13. உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்கவும்.

    14. ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும்


  10. #1820
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சில்லென்ற உடலுக்கு செம்பருத்தி பூ....

    சில்லென்ற உடலுக்கு செம்பருத்தி
    அனைத்து வயதினரையும் பாதித்து வரும் ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், இதயநோய் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றிற்கு
    கோபமே காரணமாக உள்ளது. கோபத்தினால் உடலின் வெப்பம் அதிகப்பட்டு, ரத்த அழுத்தம் கூடி, நாளமில்லா சுரப்பிகளில்
    ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி, ஹார்மோன்களை சீர்குலைத்து பல நோய்களை உண்டாக்கிவிடுகின்றன. மேலும், அடிக்கடி
    கோபம் ஏற்படுவதால் உடல் எப்பொழுதும் சூடாக இருப்பது போன்ற ஒருவித உணர்ச்சி, முகத்தில் ஒருவித வெறி, மனம் அமைதியின்மை
    ஆகியன ஏற்பட்டு சமூகத்தில் இருந்து ஒதுங்க ஆரம்பிக்கின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர்.
    உடலில் பித்தத்தின் அதிகரிப்பால் தோன்றும் இந்த கோபத்தை பித்தபிரமேகம் என்று மனம் சார்ந்த நோயாக சித்த மருத்துவம்
    குறிப்பிடுகின்றது. உடல் மற்றும் மனதில் தோன்றும் ஒருவித உஷ்ணம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்தி, உடலுக்கு குளிர்ச்சியையும்,
    மனதிற்கு அமைதியையும் தரும் அற்புத மூலிகை செம்பருத்தி.
    சிவப்புநிற பூக்களையுடைய பருத்திச் செடியே செம்பருத்தி என்று அழைக்கப்படுகிறது. காசிபியம் ஆர்போரியம் என்ற தாவரவியல்
    பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் பூக்களே மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகின்றன.
    இதே குடும்பத்தைச் சார்ந்த செம்பரத்தை செடிகளை நாம் வீட்டில் அழகுக்காக வளர்க்கும் செடிகளாகும்.
    செம்பரத்தை செடிகளும், செம்பருத்திச் செடிகளும் வேறு, வேறு செடிகளாகும். செம்பருத்தி செடிகளின் பூக்களிலுள்ள காசிபால்
    என்னும் சத்து நமது கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துடன், அதிக சூடு மற்றும்
    வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் வராமல் நம்மை காக்கின்றன.
    செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்து, அம்மியில் வைத்து மைய அரைத்து, அரைநெல்லிக் காயளவு உருண்டையாக உருட்டி,
    பாலுடன் கலந்து காலை மற்றும் மாலை தொடர்ந்து 5 நாட்கள் உட்கொண்டு வர தேவையற்ற கோபம் மற்றும் பதட்டத்தினால் உண்டான
    உடல் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியுண்டாகும்.
    செம்பருத்திப் பூக்களின் பூவிதழ்கள் அரை கைப்பிடி, சீரகம்-1 கிராம், நெல்லிவற்றல் - 1 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரில்
    இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை அருந்தி வர அதிக உடல் உஷ்ணம் தணியும், செம்பருத்தி பூவிதழ்களை தேங்காய்
    எண்ணெயில் போட்டு காய்ச்சியோ அல்லது தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தோ தலையில் தேய்த்து வரலாம். இதனால் தலைசூடு தணியும்.
    மேலும்...
    contd..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter