Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1841
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சிகப்பரிசியின் மருத்துவ குணங்கள்:-

    தென்னிந்திய உணவில் முக்கிய இடம்பிடிப்பது அரிசி உணவே. அரிசி உணவில் தான் எத்தனை எத்தனை வகைகள். அரிசி உணவில் மட்டும் அல்ல அரிசியிலும் ஏராளமான வகைகள் உள்ளன. அவற்றுக்கு தனித்தனியாக நன்மைகளும் உள்ளன.
    சிகப்பரிசியில் அதிகமான பைபர் உள்ளது. இதனை சாப்பிடுவதால், ரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படுகிறது. மேலும், சிகப்பரிசியில் எண்ணெய் தன்மை இருப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது.
    உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து போதிய அளவுக்குக் கிடைக்கிறது. மேலும், சிகப்பரிசி சாதத்தை சாப்பிட்டால், உணவில் சர்க்கரையின் அளவு சேர்வது மிக தாமதமாக நடைபெறும். சிகப்பரிசியில் மேலும் ஏராளமான விட்டமின்களும், சத்துக்களும் உள்ளன. இது இயற்கையிலேயே உடலுக்கு ஏற்ற உணவாகும்.


    Sponsored Links
    jv_66 likes this.

  2. #1842
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நீண்ட காலம் வாழ மணத்தக்காளிக் கீரை

    உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த கீரைகளுள் இதுவும் ஒன்று.
    குளிர்ச்சியை சுபாவமாகக்கொண்ட இக்கீரை வறண்ட பகுதிகளிலும் விளையக்கூடியது. வீட்டிலும் விளைவிக்கலாம். எல்லாக் காலங்களிலும் ஒரளவுக்கு கிடைக்கக்கூடியது.இக்கீரையின் காய் பச்சைமணியைப் போல இருக்கின்றபடியால் மணித்தக்காளி என்ற அழைப்பார்கள். மிளகுபோல இருப்பதால் மிளகு தக்காளி என்றும் சொல்வார்கள்.

    வறண்ட இடத்திலும் விளையும் இக்கீரை, நீருள்ள இடங்களிலும் ஏராளமாய் செழித்து வளரும். வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும். இந்தக் கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன்கொண்டது. இலை, தண்டு, காய், கனி, வேர் அனைத்துமே உபயோகப்படக்கூடியது.

    கசப்புத்தன்மை கொண்டது இக்கீரை. இதனால் பெரும்பாலோர் தொடுவதில்லை நீண்ட காலம் வாழ மிகவும் உதவும் கீரை என்பதை மறவாதீர்.
    இக்கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவையே இதில் புரதம்,மாவுச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. இக்கீரையைப் பருப்ப சேர்த்து கூட்டு. பொரியல், குழம்பு வைக்கலாம்.


    மலமிளகுத் தானே மகா கபமும் போகும்
    பல மிகுந்த வாதம்போம் பார்க்குள் - மலைபோற்
    பணைத்துப்பூ ரித்தமுலைப் பாவாய்கேள்! நல்ல
    மணத்தக்கா ளிக்காயை வாழ்த்து.

    இன்னொரு பாடல்,

    காய்க்கு கபந்தீருங் காரிகையே! அவ்விலைக்கு
    வாய்கிரந்தி வேக்காடு மாறுங்கண். - (பதார்த்த குணசிந்தாமணி)

    வாய்ப்புண், அச்சரம் மற்றும் கால்சியம் குறைபாடுகளுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது. உடல் உறுப்புகளில் எங்கு புண் இருந்தாலும் ஆற்றும் வல்லமை இதற்கு உண்டு. இந்தக் கீரையைத் தொடர்ந்து 48 நாள்கள் சாப்பிட்டால் சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய் முற்றிலும் குணமாகும்.

    வாய்ப்புண் நாக்குப்புண் குணமாக:

    கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து கொதிக்கவைத்துச் சாப்பிட்டால் வாய்ப்புண், நாக்குப்புண் போன்றவை குணமாகும்.
    contd..


    jv_66 likes this.

  3. #1843
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    வாத நோய்:

    மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாத நோய்கள் தீரும்

    தொண்டைப்புண், வயிற்றுப்புண்:

    ஒரு கைப்பிடி மணத்தக்கரிளக் கீரையுடன் ஒரு மாசிக்காயை சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

    நீர்ச் சுருக்கு, நீர் எரிச்சல்:

    ஒரு கைப்பிடி அளவு மணத்தாளிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞசள் ஆகியவற்றைச் சேர்ந்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல், சிறுநீர் பிரியாமை போன்ற குறைபாடுகள் சரியாகும்.

    இளைத்த உடல் பருக:

    மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து. அதைத் தேனோடு சேர்த்து சர்பத் போல் காய்ச்சிஈ தினமும் சாப்பிட்டு வந்தால் இளைந்த உடல் பருக்கும்.

    100 கிராம் மணத்தக்காளிக் கீரையில் உள்ள சத்துக்கள்:


    நீர்ச்சத்து - 82.1 கிராம்
    புரதம் - 5.9 கிராம்
    கொழுப்பு - 1.0 கிராம்
    தாது உப்புகள் - 2.1 கிராம்
    சர்க்கரைச்சத்து - 8.9 கிராம்
    சுண்ணாம்புச்சத்து - 410 மிகி
    பாஸ்பரஸ் - 70 மி;கி
    இரும்பு - 20.5 மிகி
    ரிபோஃபிளேவின் - 0.59 மி.கி
    நியாசின் - 0.9 மி.கி
    வைட்டமின் சி - 11 மி.கி

    குளிர் ஜன்னி:

    ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையோடு மிளகு (10 எண்ணிக்கை), திப்பில் (3 எண்ணிக்கை), நான்கு சிட்டிகை மஞசள் ஆகியவற்றைச் சேர்ந்து விழுதாக அரைத்து அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால்ஈ சளி,இருமல் போன்ற கப நோய்கள் குணமாகும். குளிர் ஜன்னிக்கு அற்புதமான மருந்து இது

    contd..


    jv_66 likes this.

  4. #1844
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    உடல் சூடு:


    மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாற எடுத்து 30 மி.லி. அளவுக்குத் தினமும் மூன்னு வேளையும் சாப்பிட்டால், சிறுநீர் தாரளமாகப் பிரியும். பெருவயிறு, வாய்ப்புண், உடல் சூடு போன்றவை குணமாகும்.

    இதய நோய்:

    ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையோடு, பூண்டு (4பல்) நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

    இனிய குரல் வளம்:

    மணத்தக்கரிளக் கீரையில் இருந்து சாறு எடுத்து அதில் அதிமதுரத்தை ஊறவைத்து உலர்த்தி தூள் செய்து, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வ்நதால் தொண்மைச் சதை குணமாகும். இனிய குரல் வளமும் உண்டாகும்.

    உடல எடை, பெருவயிறு குறைய:

    மணத்தக்காளிக் கீரையைச் (100 கிராம்) சுத்தம் செய்து, கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு எடு;த்து அதில் எலுமிச்சம் பழத்தைப் (பாதி அளவு) பிழிந்து, சின்ன வெங்காயத்தை (2) அரிந்துபோட்டு அரைத்துச் சாறு எடுக்கவும் இதைக் காரைல உணவுக்குப் பிறகு சாப்பிட்டால் உடல் எடை, பெருவயிற போன்றவை குறையும்.

    காயின் குணங்கள்:



    உடல் வலி தீரும்
    களைப்பை அகற்றும்
    உடலிலுள்ள நச்சுநீரை வெளியேற்றும்
    வாந்தியைப் போக்கும்
    இக்காயை வற்றலாக்கி வறுத்து உண்ணலாம்.

    பழம் தரும் பயன்கள்:



    காது வலியைப் போக்கும்
    வயிற்றுப் பொருமலை தணிக்கும்
    காய்ச்சலைப் போக்கும்
    கருப்பப்பைக்கு வலிமை தரும்
    பிரசவத்தை எளிமையாக்க உதவுகிறது

    வேரின் பயன்கள்:
    மலச்சிக்கலைப் போக்கும்
    இக்கீரையின் வேர், மூலிகை மருந்துகள் தயாரிக்க பெரும் பங்காற்றுகிறது

    பொதுவாய் மணத்தக்காளிக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டுப் வந்தால் உடல் நலம் பெறுகிறது. எனவே இக்கீரையை அடிக்கடி பயன்படுத்துங்கள்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-download-10-.jpg  
    Last edited by chan; 26th Jan 2015 at 12:36 PM.
    jv_66 likes this.

  5. #1845
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும்
    பிரியரா?

    மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:

    சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின்
    உணவிற்கு பிறகு குளிர்ந்த
    தண்ணீரை விடுத்து சூடான தேநீர்
    அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
    இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய
    நேரம் வந்துவிட்டது.
    சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர்
    குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட
    எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக
    மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும
    ்.
    திடப்பொருளாக மாறிய கலவை நம்
    வயிற்றில் இருக்கும்
    அமிலத்தோடு (Acid) வினைபுரியும்.
    இது திட உணவை விட வேகமாக
    உடைந்து குடலால் உறிஞ்சபடும்.
    இது நம் குடலில்
    அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும்.
    மிக விரைவில், இது கொழுப்புகளாக
    மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
    ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர்
    அல்லது சூப் குடிப்பது நல்லது.
    மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:
    மாரடைப்பின் முதல்
    அறிகுறி இடது கையில் ஏற்படும்
    கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர
    வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக
    இருக்க வேண்டும்.
    மாரடைப்பு வரும்போது பொதுவாக
    நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும்
    கடுமையான
    வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான
    அறிகுறிகள் ஆகும்.
    60% சதவீத மக்கள் தூக்கத்தில்
    மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால்
    எழுந்துகொள்ள முடியாது.
    உறக்கத்திலேயே இறந்துவிடுவர்.
    தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த
    தூக்கத்திலிருந் து எழுந்து கொள்ள
    முடியும். ஆகவே எப்பொழுதும் கவனமாகவும்
    எச்சரிக்கையுடனு ம் இருக்க வேண்டும்.


  6. #1846
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சத்துப் பட்டியல் : வெண்ணெய்:-

    உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்களில் வெண்ணெயும் ஒன்று. பாலில் அடங்கி உள்ள அநேக ஊட்டச்சத்துகள் வெண்ணெயிலும் காணப்படுகிறது. அவற்றை இங்கே பட்டியலிடுவோம்...

    * பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் பெரும்பாலும் மாடுகளின் பாலில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. இளம் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும் வெண்ணெய், உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கிரீஸ் மக்கள் அதிக அளவில் வெண்ணெயை பயன்படுத்துகிறார்கள். வீடுகளில் உணவுப் பொருட்களுடன் சேர்த்தும், எண்ணெய் போல வறுத்து எடுக்கவும் வெண்ணெயை பயன்படுத்துகின்றனர்.

    * வெண்ணெயில் வைட்டமின்-ஏ சத்துக்கள் அதிகமான அளவில் காணப்படுகின்றன. இது தைராயிடு மற்றும் சிறு நீரக நோய்களுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதாகும்.

    * லாரிக், லிசிதீன் போன்ற அமிலங்கள் வெண்ணெயில் நிறைந்துள்ளன. இவை உடலில் கொழுப்புகளை சேரவிடாமல் விரைவில் செரிக்கச் செய்கின்றன. மேலும் உடலை பூஞ்சை தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

    * உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் பல்வேறு ஆன்டி-ஆக்சிடெண்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. இவை உடலில் ஏற்படும் நோய் காரணிகளை போக்கி உடலை காக்கின்றன.

    * வெண்ணெயில் 'வைட்டமின்-ஈ' மற்றும் 'வைட்ட மின்-கே' குறிப்பிட்ட அளவில் காணப்படுகின்றன. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. நோய் எதிர்ப்பாற்றலை வழங்கக்கூடியவை.

    * எளிதில் செரிமானமாகும் கொழுப்புச் சத்துகள் வெண்ணெயில் நிரம்பி உள்ளன. இவை உடலுக்கு சக்தி அளிப்பதுடன் உடலை புற்றுநோய் மற்றும் திசு சிதைவுகள் ஏற்படாமல் காக்கவல்லது.
    பயன்பாடுகள்:

    * கொழுப்பு அமிலமான லினோலிக் அமிலம் அதிகளவில் காணப்படுகின்றன. தசைகள் வளர்ச்சி பெறவும், செரிமான சக்திகளை அதிகரிக்கவும் இது உதவும். புற்றுநோய் எதிர்ப்பு சக்தியும் வழங்கும்.

    * பற்களை வலுப்படுத்தும் 'வைட்டமின்-டி' மற்றும் கால்சியம் சத்துகள் வெண்ணெயில் நிறைந்துள்ளன. பல் சிதைவுகளை தடுக்க வல்லது வைட்டமின்-டி.

    * குழந்தைகளின் உணவுப் பொருட்களுடன் வெண்ணெய் சேர்த்துக் கொள்வதால், அவர்களின் நரம்பு மண்டலங்கள் சீராக இயங்குகிறது. அதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் மூளையை தொடர்பான பல நோய்களை தடுக்கின்றன. வெண்ணெய் வயிறு உபாதைகளையும் சரிப்படுத்தும்.


  7. #1847
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மலக்குடல் புற்றுநோயும் அதற்கான சிகிச்சை முறையும்...

    மலக்குடல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது?

    நம் ஆசன வாயிக்கு சற்று உள்ளே இருக்கும் பகுதி தான் மலக்குடல் (Rectum) இது பெருங்குடலின் கடைசிப் பகுதி என்றாலும் குடல் புற்றுநோய் பெரும்பாலும் தாக்குவது மலக்குடலைத்தான். காரணங்கள் பல இருந்தாலும் நாம் முதலில் பார்க்க வேண்டியது உணவு முறைகளைத்தான். அதிக காரம் மற்றும் கொழுப்பு சத்து மிகுந்த உணவு, நாற்சத்து இல்லாத உணவு, வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் இல்லாத உணவு வகைகள் இப்படி பல உணவுப் பழக்க முறைகளால் மலக்குடல் மற்றும் பெருங்குடல் புற்று நோய் வர வாய்ப்புள்ளது. சுமார் 15 சதவிகிதம் சர்க்கரை, ரத்தகொதிப்பு போன்று குடும்பத்தில் வம்சாவழியாக வருவதற்கும் வாய்ப்புண்டு.

    இதை எப்படி கண்டுபிடிப்பது?

    ஒரு சிறு அரும்பு எப்படி பூவாகி, காயாகி, கனியாகிறதோ அதே போன்று புற்றுநோய் கட்டியும் ஒரு செல்லில் உருவாகி வளர்ந்து கட்டியாகி, புண்ணாகி மற்ற இடங்களுக்கு பரவும். ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது சற்று சிரமம் என்றாலும் சிறு சிறு தொந்தரவுகளை அலட்சியப்படுத்தக் கூடாது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மலச்சிக்கல், மலம் கழிக்கும்போது இரத்தம் போகுதல், அடிவயிறு வலித்தல், மலம் கழித்தபின் ஒருவித வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மலத்தில் இரத்தம் போவதற்கு மூலம்தான் காரணம் என நினைத்து நிறையபேர் அலட்சியப்படுத்தி விடுகின்றனர். அவ்வாறு செய்யும்போது புற்றுநோய் கட்டி வேகமாக வளர்ந்து மலக்குடலை அடைத்து மற்ற இடங்களுக்கு பரவ நாமே இடம் கொடுத்து விடுகிறோம்.
    இதை கண்டுபிடித்து எவ்வாறு குணப்படுத்துவது?
    மேலே கூறிய தொந்தரவுகள் இருந்தால் குடல் உள்நோக்கி (Endoscopy) மூலம் கட்டியை கண்டுபிடித்து சதை டெஸ்டும் எடுக்கலாம். அவ்வாறு கண்டறியப்பட்ட மலக்குடல் புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது என சிஜி ஸ்கேன் மூலம் தெரிந்து அதற்குத்தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்து கட்டியை முழுவதும் அகற்றிவிடலாம்.

    மலக்குடலில் அறுவை சிகிச்சை என்றால் குடலை வெளியே வைப்பார்களா?
    எல்லா மலக்குடல் புற்று நோய்க்கும் குடலை வெளியே வைக்க வேண்டியிருக்காது. அதுவும் லேப்ராஸ்கோபி சிகிச்சை முறையில் கட்டி இடுப்பு எலும்புக்குள் இருந்தாலும் எளிதாகச் சென்று முழுவதுமாக எடுத்து விடலாம். குடலை வெளியே கொண்டு வந்து வைப்பதற்கான வாய்ப்பும் லேப்ராஸ்கோபி சிகிச்சை முறையில் மிகவும் குறைவு. கட்டி மற்ற இடங்களுக்கு பரவியிருந்தால் கதிரியக்கம் மற்றும் கீமோதெரபி எனப்படும் ஊசி மருந்துகள் மூலம் கட்டியின் அளவை குறையச் செய்ய முடியும். இப்படி ஒவ்வொரு நிலையிலும் அதற்குத்தகுந்த சிகிச்சை முறைகள் உள்ளன.

    மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க சில அறிவுரைகள்:

    நாம் சாப்பிடும் உணவில் நாற்சத்து அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்கள், கீரைவகைகள், காய்கறிகள் இவற்றில் நார்சத்து அதிகம் இருப்பதோடு வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்களும் நிறைத்திருக்கின்றன. இவற்றை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்புச்சத்து காரம் குறைவான உணவுகளையே எடுத்துக் கொள்வது நல்லது. நாற்பது வயதிற்கு மேல் அனைவரும் குடல் நோய் பரிசோதனை செய்தால் புற்றுநோய் பூரண குணப்படுத்தும் நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறலாம். எல்லாம் நம் கையில்தான் உள்ளது.




  8. #1848
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இலந்தைப் பழம்

    இலந்தையின் பிறப்பிடம் சைனா. 4000 ஆண்டுகளுக்கு முந்தையது. இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக் கூடியது. வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறுமரம். தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் தானாகவே வளர்கிறது. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும். இதற்கு சிறிய பேரிச்சை, Red Date, Chinese Date என்றும் சொல்வர். காய்ந்த பழம் வத்தல் என்று சொல்வர். புளிப்புச் சுவையுடைய தின்னக் கூடிய பழங்களை உடையது. அமரிக்கா, நியுயார்க்கில் அதிகம் காணப்படும். விதை மிகவும் கெட்டியாக இருக்கும். அமரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நாட்டில் வியாபாரமாக வளர்க்கப்படவில்லை. இதில் A, B2, C, கல்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, மிதசர்கரை சக்தி உள்ளது.
    இலந்தையில் காட்டு இலந்தை, நாட்டு இலந்தை என இருவகையுண்டு. சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே. இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.
    பித்த மயக்கருசி பேராப் பெருவாந்தி
    மொத்தனில் மெல்லா முடிந்திடுங்காண் -மெத்த
    உலர்ந்த வெறும்வயிற்றி லுண்டால் எரிவாம்
    இலந்தை நெறுங்கனியை யெண்
    – அகத்தியர் குணபாடம்
    நல்ல சிவப்புடன் பளபளப்பாக காணப்படும். இந்தப் பழத்தின் சதைப்பகுதி குறைந்து காணப்படும். இன்றும் கிராமங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    இந்தப் பழத்தில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும்உண்டு. சிலவற்றில் சிறுசிறு புழுக்கள் இருக்கும். இந்தப் பழத்தில் வி*ட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது. அ*வ்வளவு *சி*ன்ன பழமாக இரு*ந்தாலு*ம் அ*தி*ல் அட*ங்*கி*யுள்ள *வி*ட்ட*மி*ன்க*ள் ஏராள*ம்.
    100 கி இலந்தையில் கிடைக்கும் கலோரி 74. இதில் 17 சதவீதம் மாவுப் பொருளும், 0.8 சதவீதம் புரதமும், கொண்ட இதில் விட்டமின் ஏ-வும், கல்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் இரும்பு சத்தும் கூட அடங்கியுள்ளன.

    எலும்புகள் வலுப்பெற
    உடலில் சுண்ணாம்புச் சத்து (கல்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.

    பித்தத்தைக் குறைக்க
    உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப் படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

    வாந்தி குறைய
    பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் பயணம் என்றாலே அரண்டு போவார்கள். இவர்கள் படும் அவஸ்தையை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களின் நிலை சங்கடத்திற்குள்ளதாக இருக்கும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

    உடல் வலியைப் போக்க
    சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். முன்பெல்லாம் இரவு பகல் பாராமல் வேலை செய்வேன் இப்போது அப்படி செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

    செரிமான சக்தியைத் தூண்ட
    பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

    புத்திக் கூர்மைக்கு
    மந்த புத்தியுள்ளவர்கள் இலந்தைப் பழத்தை தொடர்ந்து உண்டு வர மூளை புத்துணர்வு பெறும்.
    ஒரு கைப்பிடி இலந்தம்பழத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு அது 1/2 லிட்டராக சுண்டும் வரை கொதிக்க விட்டு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து எடுத்து வைத்து இரவில் படுக்கப் போகும் முன்பு இதை அருந்தி வர மூளை புத்துணர்ச்சி பெறும்.
    contd..


    Last edited by chan; 26th Jan 2015 at 12:56 PM.

  9. #1849
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    பெண்களுக்கு

    பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும்
    உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.

    கல்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும்.

    உடல் குளிர்ச்சியடைய
    பழுத்த காட்டு இலந்தைப் பழங்களை கையால் பிசைந்து, கொட்டையை நீக்கி, அத்துடன் 8 பங்கு நீர்விட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி, தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து, பாகு பதத்தில் மீண்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தினமும் இரவு படுக்கும்பொழுது 5 முதல் 10 மில்லியளவு சாப்பிட்டுவர உடல் எரிச்சல் தணிந்து, இரத்தஅழுத்தம் சீராகும். சுறுசுறுப்பு உண்டாகும்.
    அடிக்கடி இந்த காட்டு இலந்தை சர்பத்தை குடித்துவர ஆரோக்கியம் மேம்படும். யுனானி மருந்துக்கடைகளில் கிடைக்கும் சர்பத்-ஏ-உன்னாப் என்ற யுனானி மருந்தில் சீமை இலந்தைப்பழம் சேர்க்கப்படுகிறது. இதனை 15 முதல் 30 மில்லியளவு தினமும் 1 அல்லது 2 வேளை சாப்பிட்டுவர உணவுப்பாதை வறட்சி நீங்கி, உடல் குளிர்ச்சியடையும்.

    பற்கள் எலும்புகளுக்கு
    பற்களில் ஏற்படும் கூச்சம், பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு போன்றவைகளுக்கு இலந்தையை மென்று தின்பது நல்ல பலன் தரும்.
    இதில் கல்சியம் சத்து அதிகமாக இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு அதிக நன்மைகளை அளிக்கிறது.
    எல்லாப் பழங்களையும் உணவுக்கு முன்பு தான் சாப்பிட வேண்டும். ஆனால் இலந்தைப் பழத்தை பகல் உணவுக்குப் பின்பு உண்பதால் நன்கு ஜீரணமாவதும் பித்தமும் கட்டுப்படும்.

    இலந்தை இலையின் மகத்துவம்
    இலந்தை பழத்தில் நிறைய சக்திகள் உள்ளதுபோல இலந்தை இலையிலும் அதிக மருத்துவ சக்திகள் உள்ளன.
    * இலந்தை இலையை மை போல் அரைத்து வெட்டுக் காயத்தின் மீது வைத்து கட்டினால் விரைவில் காணம் குணமாகும்.
    * இலந்தை இலையை அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து பசு மோரில் கலந்து குடித்து வர எருவாய் கடுப்பு குணமாகும்.
    * இலந்தை இலையை அரைத்து அந்த விழுதைக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.
    இலந்தை இலையையும் சிறுகிளைகளையும் நன்கு அரைத்து கட்டிகள், கொப்புளங்களின் மீது வைத்துக் கட்ட அவை சீக்கிரம் பழுத்து உடையும்.
    * இலந்தை இலையின் சாறெடுத்து அதனை உள்ளங்கை, உள்ளங் கால்களில் பூசி வர, அங்கு அதிகமாக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.
    contd..


    Last edited by chan; 26th Jan 2015 at 12:59 PM.

  10. #1850
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    * பல இடங்களில் பல வகையான உணவுகளை உட்கொண்டு நமது வயிற்றைக் கெடுத்து வைத்திருக்கிறோம். அப்படி செய்வதால் வயிற்றுக் கடுப்புக்கு ஆளாவதும் நாம்தான். அதற்கு மருந்து இலந்தை இலை மற்றும் பட்டையில் உள்ளது.

    இலையையும், பட்டையையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நசுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்து வர கழிச்சலும், ரத்தம் கலந்து போவதும் குறையும். வயிற்றுக் கடுப்புக்கு இது ஒரு மாமருந்தாக அமையும்.

    * இலந்தை இலையை மைபோல் அரைத்து பூசி வர மயிர் புழுவெட்டு நீங்கும்.

    * தற்போது பெரும்பாலான இளைய தலைமுறைக்கு தலையாய *பிரச்சினையே தலை முடிதான். தலை முடி உதிர்வது, இள நரை, பொடுகு போன்றவைதான். இவை பெரும்பாலும், சுற்றுச்சூழல் கெட்டிருப்பது மற்றும் பணிச் சுமை காரணமாக ஏற்படுகிறது.
    இளநரையைப் போக்கும் தன்மை இலந்தை இலைக்கு உண்டு. இதை நன்கு அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலச இளநரை மாறும்.

    மேலும், இளநரை ஏற்பட்டதும் மனம் கலங்கிவிடாமல், உணவில் அதிகமான அளவு கறிவேப்பிலையை சாப்பிட்டு வர வெள்ளை முடிகள் மீண்டும் கருப்பாக மாறும்.

    * இலந்தை இலை ஒரு பிடி அளவு எடுத்து, அதனுடன் 6 மிளகு, 4 பூண்டு பல்லு சேர்த்து அரைத்து மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் உட்கொள்ள வேண்டும். இப்படி செய்து வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கி, வலியும் குறையும். கரு உருவாகும் வாய்ப்பும் ஏற்படும்.




    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg   Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-1.jpg  
    Last edited by chan; 26th Jan 2015 at 01:02 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter