Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1851
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஆஸ்த்மா நோய் அறிகுறி

    Dr. சரஸ்வதி

    வருடம் 1900-ல் ஆஸ்த்மா நோய் என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது ஒரு பெருவாரியாகப் பரவுகிற தொற்றுநோயாக வளர்ந்திருக்கிறது.

    அமெரிக்காவில் மட்டும் ஒன்றரைக்கோடிக்கும் மேலான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாய் இந்நோய் உலகளவில் மக்களை பாதித்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும், 5,000 அமெரிக்கர்கள், மிக முக்கியமாய் வயதானவர்கள் இந்த நோயால் உயிரிழக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி, இப்படி இறப்பவர்களின் எண்ணிக்கை, உலகளவிலே 180,000. இப்படி ஆஸ்த்மா நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்த அளவிற்கு உயர்ந்ததன் காரணத்தை முழுமையாக புரிந்து கொள்ளமுடியவில்லை. எனினும், இதுவரை உள்ள விபரங்களின் மூலம், ஆஸ்த்மாநோய் மேலைநாடுகளில் அதுவும் ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் மிக அதிகமாய் பரவியிருப்பதாயும், ஆப்பிரிக்க மூலை முடுக்குகளில் சுத்தமாய் இந்த நோய் காணப்படுவதில்லை எனவும் தெரிய வருகிறது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம், 13 - 14 வயதானவர்களிடம் இழுப்பு (Wheezing) என்று சொல்லக்கூடிய ஆஸ்த்மா நோய் இருப்பதற்கான ஒரு அறிகுறியின் கணக்கீடு. இந்த கணக்கீடு, ஆஸ்த்மா நோய் மற்றும் சிறுவர் சிறுமிகளின் அல்ர்ஜி பற்றிய சர்வதேச ஆராய்ச்சி அமைப்பின் முக்கிய ஆராய்ச்சி புள்ளிவிவரத்தை அடிப்படையாய்க் கொண்டது. இந்த 13 - 14 வயதானவர்களிடம் காணப்பட்ட இழுப்பின் குணாதிசயங்கள் இதைவிட வயது குறைந்த குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும் ஒருங்கே காணப்பட்டது.


    ஆஸ்த்மா நோய் கொண்ட தாயோ அல்லது தகப்பனோ, ஒரு குழந்தை ஆஸ்த்மா நோய் அடைவதற்கு காரணமாக இருக்கலாம் என்றிருந்தாலும், புள்ளிவிவரங்கள் மூலம், வம்சாவழி மரபை விட சுற்றுப்புற சூழலும், வளரும் வாழ்க்கை முறையும்தான் மிக அதிகமாய் ஆஸ்த்மா நோய்க்கு காரணமாய் இருப்பதாய் தெரிகிறது. முக்கியமாய் எந்தெந்த அம்சங்கள் ஆஸ்த்மாநோய்க்கு காரணமாய் இருக்கின்றன என நுண்மையாக இன்னும் தெரியவில்லை. காரணங்களாய் கருதக்கூடிய சிலவற்றில் மிக முக்கியமான ஒன்று - தற்போதைய குழந்தைகள் முந்தைய காலத்தவர்களை விட அதிகமாய் வீட்டுக்குள்ளும், வேறு கட்டிடத்துக்குள்ளும் நேரத்தை செலுத்துகிறார்கள் என்பது. இப்படி நான்கு சுவற்றுக்குள் அடைந்து கிடப்பதால், இவர்கள் மிக அதிகமாய் வீட்டில் இருக்கக்கூடிய அலர்ஜி சம்பத்தப்பட்டவைகளினால் (தூசிகளில் வளரும் பூச்சிகள், எலி, கரப்பான் போன்றவைகள் உட்பட) பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு முக்கியமான கருத்தின் படி, மேலை நாடுகளின் குழந்தைகளின் நுரையீரல் சம்பத்தப்பட்ட வியாதிகளின் தடுப்புச்சக்தி, வளரும் நாடுகளின் குழந்தைகளின் தடுப்புச்சக்தியை விட குறைந்ததாய் இருக்கிறது. மேலை நாடுகளிளுள்ள குழந்தைகள், பூச்சிகளின் அருகே வளர்ந்து பழக்கப்படாதவர்கள். எனவே, இவர்கள் மிக எளிதாக ஆஸ்த்மா நோய்க்கும், வேறு சில அலர்ஜி சம்பத்தப்பட்ட வியாதிகளுக்கும் (hay fever and eczema) ஆளாகி விடுகிறார்கள்.


    அநேகமாக, பாதி ஆஸ்த்மா நோய்க்காரர்கள் அலர்ஜி (குடும்ப வம்சாவழி சம்பத்தப்பட்டதாக இருக்கக்கூடியது) மூலமாக ஆஸ்த்மா நோய் அடைந்திருக்கிறார்கள். மீதப்பாதி, அலர்ஜி மூலம் இல்லாமல், குடும்பத்தில் வேறு யாருக்கும் இல்லாமல், வயதான பிறகு நோயடைந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு, முதலில் சாதாரண ஜலதோஷமாய் இருந்து, படிப்படியாய், இழுப்பு வந்து, நாட்கணக்காய், மாதக்கணக்காய் சுவாசிக்க கஷ்டப்பட்டு ஆஸ்த்மா நோய் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த இரு விதமாய் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், மூச்சிழுக்கும் வழி சுருங்கிவிடுகிறது. ஆஸ்த்மா நோய் குழந்தைகளிடம் அதிகமாய்ப் பரவி இருந்தாலும் - தற்சமயம் அமெரிக்காவில் இது ஒரு சாதாரண (ஏராளமானவர்களுக்கு வரக்கூடியதாய்) குழந்தை வியாதி - ஏகப்பட்ட வயதானவர்களும் ஆஸ்த்மா நோய்வாய்ப் பட்டிருக்கின்றனர். மேலும், இரசாயணத் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்களிடம், அந்த இரசாயணப் பொருட்களின் மூலமாகக் கூட ஆஸ்த்மா ஏற்பட்டிருக்கிறது. வீட்டிலுள்ள தொற்றுநோய் கிருமிகளிலுருந்து, உடற்பயிற்சி, குளிற்காற்று, உணர்ச்சி கொந்தளிப்பின் மற்றும் ஒசோன் போன்ற இராசாயனப் பொருட்கள் ஆஸ்த்மா நோயைத் துரிதப் படுத்துவையாக இருக்கின்றன.


    இருந்த போதிலும், வெளிக்காற்றின் கிருமிகள் ஆஸ்த்மா நோய் உருவாக காரணம் என இதுவரை உறுதிப்படுத்தப் படவில்லை. வாழும் ஊரின் ஏழ்மை சிறிது காரணமாக இருக்கிறது. அமெரிக்காவில் போர்டோ ரிக்கோவைச் சேர்ந்தவர்களிடமும், ஆப்பிரிக்க வழி மக்களிடமும், ஆஸ்த்மா நோய் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. புகை பிடிப்பது ஆஸ்த்மா நோயை அதிகரிக்கச் செய்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது, புகை பிடிப்பது, பிறக்கும் குழந்தைக்கு ஆஸ்த்மா நோய் வருவதற்கு வாய்ப்பினை அதிகப் படுத்துகிறது. உடல் குண்டாக இருப்பது கூட ஆஸ்த்மா நோயுடன் சம்பத்தப் பட்டதுதான்.


    இப்படி மிக ஏராளமான காரணங்களும், விவரங்களுடனும் ஆஸ்த்மா நோய் சம்பத்தப் பட்டிருப்பதால், விஞ்ஞானிகளால் இதுவரை இதன் முழுத்தன்மையை புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்த போதிலும், இவர்கள் மிகச் சிறப்பாய் வேலை செய்து, Inhaled steroids போன்ற ஒருசில மருந்துகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுவும், வேறு சில புதிய மருத்துவ முறைகளும் சரியாகவும், தொடர்ந்தும் உபயோகப்படுத்தினால், ஆஸ்த்மா நோய் மூலமான சில இறப்புகளை தவிர்க்கலாம்.




    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-wheezing_spl.jpg  

  2. #1852
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கருப்பை இறக்கம் – காரணங்களும்! தீர்வுகளும்!

    Prolapsed Uterus - கருப்பை இறக்கம்

    Endometriosis - Details & Treatments

    Endometriosis - Details & Treatments


  3. #1853
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கர்ப்பப்பை பலமாக.... சில உணவுகள்

    அக்காலத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உழுத்தங்களி கொடுப்பது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி வயது வந்த உடனேயே முட்டையையும், நல்லெண்ணெயையும் தினமும் வெறும் வயிற்றில் குடிக்கச் செய்வர். இந்தக் களியில் வெல்லம், உளுந்து, நல்லெண்ணெய் சேருவதால் இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து தாதுக்கள் என்று எல்லாம் கிடைத்து கர்ப்பப் பை பலமாக அமையும்.

    இதை எப்படி செய்வது? (உழுத்தங்களி)

    அரை கப் உழுந்தை வாணலியில் வறுத்து அதோடு அரை கப் அரிசி சேர்த்து மாவாகத் திரித்து சலித்துக்கொள்ளவும். 2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கவும், வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அழுக்கு, மண்நீக்கி, வாணலியைக் கழுவி மறுபடியும் அதிலேயே வெல்லக் கரைசலை ஊற்றவும். அதோடு 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும். கரைசல் கொதிக்கும்போது மாவை மத்தியில் கொட்டிக் கிளறி, ஒரு கரண்டியை அதில் குத்தி மூடி வைக்கவும். குறைந்த தணலில் 7_லிருந்து 10_நிமிடங்கள் வரை வேக விடவும்.

    பிறகு அடுப்பிலிருந்து இறக்கி நன்றாகக் கிளறிவிடவும் சிறிது ஆறியதும் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்கவும்.

    சூப் குடியுங்கள்

    கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு கப் சூப் பகலிலும், இரவிலும் குடித்தால் மலச்சிக்கல் இல்லாமல், அஜீரணம் இல்லாமல் உண்ட உணவு நன்கு செரித்து ஆரோக்கியமாக இருக்க இயலும்.

    பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு சாலட் அல்லது தயிர்ப் பச்சடி சேர்த்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் 11 மணிக்கு உண்ணலாம்.

    காய்கறிகள், பழங்கள் விதவிதமாக உண்ணவும். உதாரணத்திற்கு காலை டிபனுடன் 2 துண்டு கொய்யா, ஓர் ஆரஞ்சு சாத்துக்குடி உண்ணலாம். மதிய உணவுடன் வாழைப்பழம், மாலையில் ஆப்பிள்... காய்கறிகளைப் பொரியலாகச் செய்யும்போது ஒரே வகை காய்க்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று வகை காய்களைச் சேர்த்துச் செய்யலாம். முடிந்தவரை 3 வகை பழங்கள், 4 வகை காய்கறிகள், தினமொரு கீரை என்று கிடைக்குமாறு உணவில் மாற்றங்கள் செய்யவும்.

    பால், தயிர் குறிப்பிட்டபடி அளவு தவறாமல் உண்ணவும்.
    பாதாம், கிஸ்மிஸ், பேரீச்சை போன்றவை உங்கள் பட்ஜெட்டில் முடியுமானால் சேர்க்கலாம். ஆனால் கீரை சேர்த்துக் கொண்டாலே இரும்புச்சத்து கிடைத்துவிடும்.

    அடை சாப்பிடுங்கள்

    முழு தானியங்கள், பயறு, பருப்பு வகைகள் கலந்த டிபனாகத் தயாரிக்கலாம். அடை, தோசை, விதவிதமான இட்லியுடன் பலவகை சட்னி, சாம்பார் போன்றவை.

    சோயாவில் முழுப் புரதம் உள்ளதால் தங்களுக்குப் பிடித்தமானபடி சிறிதளவு ஏதாவது ஒரு உணவுடன் சேர்க்கவும். (சைவமாக உள்ளவர்கள் முக்கியமாக இதைக் கடைப்பிடிக்கவும்)

    உப்பு, ஊறுகாய், காரத்தைக் குறைக்கவும். ஃப்ரஷ் பழங்கள், காய்கறி ஜுஸ் சாப்பிடலாம்.

    ஓரளவு நன்றாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யவும். நன்றாக நடக்கவும். இதனால் பலவித பிரச்னைகளைத் தவிர்க்க இயலும்.

    வீண் வாக்குவாதங்கள், விவாதங்கள் தவிர்த்து நேரம் கிடக்கும்போது நல்ல பாட்டுக்கள், ஸ்லோகங்கள் கேட்கலாம். மனது நிம்மதியுடன் இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

    இனி கர்ப்பிணிகளுக்கான ஒரு சில சத்தான, ருசியான உணவு வகைகள்:

    தோடம்பழ சர்பத்

    கமலாப்பழம் என்னும் தோடம்பழத்தின் சாறு அரை லிட்டருக்கு சீனி ஒரு கிலோ போட்டு பாகுபதத்தில் காய்ச்சி, இறக்கும்போது சிறிது குங்குமப் பூ சேர்த்து கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு சாப்பிடலாம். உஷ்ணத்தினால் உண்டான பேதி, அதிகமான பித்தம், கிறுகிறுப்பு, சுவையின்மை இவை நீங்கும். அதிலும் கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்கு இது மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்று.

    பூசணிக்காய் சர்பத்

    வெள்ளைப் பூசணிக்காயைத் தோல், விதை நீக்கி பிசைந்து மெல்லிய துணி அல்லது மாவுச் சல்லடையில் வடிகட்டி எடுத்து ஒரு லிட்டர். 50 கிராம் இஞ்சியைத் தோல் சீவி இடித்துப் பிழிந்து சாறெடுத்துச் சிறிது நேரம் வைத்திருந்து, அடியில் தங்கியுள்ள வெண்மை நிறமான சத்தை நீக்கிவிட்டு மேலாக எடுத்து பூசணி சாறுடன் கலந்து அதை அரை லிட்டராகக் காய்ச்சி மேலாக ஒரு கிலோ சீனி சேர்த்துத் தேன் போல வரும்போது இறக்கி தினமும் இருவேளை 2 டீஸ்பூன், அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, கர்ப்பிணிப் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கருப்பைக் கோளாறுகள், கைகால் எரிச்சல், நீர்ச்சுருக்கு குணமாகும்.
    contd..



  4. #1854
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    முருங்கைக்காய் சூப்

    தேவையான பொருட்கள்: முருங்கைக்காய்_3, வெங்காயம்_1, தக்காளி_1, பயத்தம் பருப்பு_லு டேபிள் ஸ்பூன், பூண்டு_1 பல், மிளகு, சீரகப் பொடி_சிறிதளவு, பால்_அரை கப், மக்காச் சோளமாவு _1 டேபிள் ஸ்பூன், உப்பு_தேவையான அளவு, சர்க்கரை சிறிதளவு.

    செய்முறை: முருங்கைக்காய்களைப் பெரிய துண்டங்களாக அரிந்து பிரஷர்குக்கரில் ஆவியில் வேக வைக்கவும். வெந்தபின் அதில் உள்ள சதைப் பற்றை வழித்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இரண்டையும் மிகப் பொடியாக அரியவும், பயத்தம் பருப்பில் தண்ணீர் ஊற்றி, பூண்டு, அரிந்த வெங்காயம், தக்காளி சேர்க்கவும். கரகரப்பாகப் பொடித்த மிளகு, சீரகப் பொடியை ஒரு சிறு துணியில் மூட்டை போல கட்டி பருப்பினுள் போட்டு குக்கரில் வேகவைக்கவும்.

    வெந்தபின் துணிமூட்டையை எடுத்து எறிந்துவிட்டு, பருப்பு ஆறியபின் முருங்கைக்காய் விழுதுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்தபின் வடிகட்டி தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும். அரை கப் பாலுடன் 1 டேபிள் ஸ்பூன் மக்காச் சோள மாவைக் கரைத்து அதையும் சூப்புடன் சேர்த்து ருசிக்கேற்ப உப்பு, சிறிது சர்க்கரை சேர்த்து சூடாக்கவும். (கொதிக்கவிடக்கூடாது) கலந்துவிட்டுக் கொண்டே சூப் நன்கு சூடானதும் சூப் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறலாம்)

    பாலக் சூப்

    (டெல்லி பாலக் கிடைத்தால் அதிக ருசி. இதன் நுனி கூர்மையாக இல்லாமல் அரை வட்ட வடிவில் அமைந்திருக்கும்)

    இரண்டு கட்டு பாலக் கீரையை ஆய்ந்து, கழுவிக் கொள்ளவும். ஒரு வெங்காயத்தைப் பொடியாக அரியவும். பிரஷர் பானில் _ ஒரு டீஸ்பூன் வெண்ணெய் விட்டுச் சூடாக்கி, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதங்கியதும் கீரையைச் சேர்க்கவும். (அரிய வேண்டாம்) கீரை சுருங்கியதும் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு முழு பச்சை மிளகாய், கால் அங்குலத் துண்டு இஞ்சி சேர்த்து மூடி, வெயிட் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    ஆறிய பின் மூடியைத் திறந்து மிளகாய், இஞ்சித் துண்டு இரண்டையும் எடுத்து விடவும். (நெடி அதிகமாக இருந்தால் சூப் நன்றாக இருக்காது) கீரையை வேகவைத்த தண்ணீரோடு அப்படியே மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி தகுந்த உப்பு சேர்க்கவும். ஒருதம்ளர் பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் மக்காச்சோள மாவைக் கரைத்து சூப்பில் ஊற்றி நன்றாகச் சூடாக்கவும். கொதிக்க விடக்கூடாது. சுடச்சுட கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மேலே சிறிது கடைந்த பாலேடு (ஃப்ரெஷ் க்ரீம்) மற்றும் துருவிய சீஸ் சேர்க்கலாம்.


  5. #1855
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நோய் எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது ?

    எல்லையிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் ராணுவம் போல், ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் ஒரு எதிர்ப்பு சக்தி செயல்பட்டு நம் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய் எதிர்ப்பு சக்தி பற்றி தொற்றுநோய் சிறப்பு மருத்துவரான ராமசுப்பிரமணியன் விளக்குகிறார்...

    வெள்ளை அணுக்கள் எனும் போர்வீரர்கள்

    நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத்தட்டுகள் ஆகியவை இருக்கின்றன. இதில் வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருபவை. அதனால், வெள்ளை அணுக்களுக்குப் ‘போர்வீரர்கள்’ என்று இன்னொரு பெயரும் உண்டு. இன்று சுற்றுப்புறச் சூழல் மாசடைந்து இருக்கும் நிலையில் தண்ணீர், காற்று, உணவு, சக மனிதர்களுடன் பழகுவது என்று எந்த வடிவிலும் நோயை உண்டாக்கும் கிருமிகள் நம் உடலுக்குள் ஊடுருவலாம். அந்த கிருமிகளை எதிர்த்துப் போராடி நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேலையையே வெள்ளை அணுக்கள் செய்கின்றன.

    இரண்டு வகை சக்தி

    நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகையில் நமக்குக் கிடைக்கிறது. ஒன்று பிறவியிலேயே அமையும் சக்தி. மாசடைந்த காற்றை சுவாசிக்கும் போது, இயல்பாகவே உடல் அதை ஏற்றுக் கொள்ளாமல் நமக்கு மூச்சுத் திணறு கிறது. அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று உடல் நம்மை நிர்ப்பந்திக்கிறது. இதுபோல், தோல் பகுதி, வயிற்றுக்குள் இருக்கும் அமிலம் என இயற்கையான எதிர்ப்பு சக்திகள் பல இருக்கின்றன. இன்னொன்று அனுபவத்தின் அடிப்படையில் உடல் கற்றுக் கொள்ளும் எதிர்ப்பு சக்தி. அதாவது, புதிதாக ஒரு நோய் ஏற்படும்போது அந்த நோயை எதிர்க்கும் சக்தி உடலுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட பிறகு, அந்த நோய் பற்றி உடலில் இருக்கும் செல்கள் தெரிந்துகொள்ளும். இந்த காரணங்களால் நோய் ஏற்படுகிறது என்பதை நினைவு வைத்துக் கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் உடல் எச்சரிக்கையாகிவிடும். இதற்கு ‘மெமரி செல்கள்’ என்று பெயர். இதனால்தான், ஒருவருக்கு சின்னம்மை ஏற்பட்டால் அதன்பிறகு அவரது வாழ்நாளில் சின்னம்மை மீண்டும் வருவதில்லை.

    குறைய காரணம் என்ன..?
    ஒரு சில பிறவிக் குறைபாடுகள் தவிர்த்து, பிறக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி எல்லோருக்கும் ஒரே அளவில்தான் இருக்கும். ஆனால், இந்த சக்தி நாளடைவில் பல காரணங்களால் குறையும். சரிவிகித உணவு சாப்பிடாததால் ஏற்படும் சத்துக்குறைபாடு, பரம்பரைக் குறைபாடுகளால் ஏற்படும் நோய், உடல்நலக் குறைவின் காரணமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றால் குறையும். உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போதும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறையும். என்னதான் உடலின் ரத்த வகையை எல்லாம் பார்த்து உறுப்புகளை மாற்றினாலும், ‘இது என்னுடைய சிறுநீரகம் இல்லை’, ‘இது என்னுடைய இதயம் இல்லை’ என்பது அந்த உடலுக்குத் தெரிந்துவிடும். அதன்பிறகு, அந்த உறுப்பு மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் சண்டையிட ஆரம்பிக்கும். இதற்காக சில மருந்துகளைக் கொடுப்பார்கள். இந்த காரணங்களாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். ஹெச்.ஐ.வி. போன்ற பாலியல் நோய்களாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

    செய்... செய்யாதே...

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நம் அன்றாட வாழ்க்கை முறையை ஒழுங்குக்குள் கொண்டு வந்தாலே போதும். பெரிதாக ஒன்றும் தேவையில்லை. சைவமா, அசைவமா என்பதெல்லாம் பிரச்னையில்லை. என்ன உணவு சாப்பிட்டாலும் உடலுக்குத் தேவையான வைட்டமின், புரதம், கார்போஹைட்ரேட், தாதுக்கள் ஆகிய சத்துகள் சரிவிகிதத்தில் கிடைக்குமாறு உணவுமுறையைப் பின்பற்றினாலே போதும். இன்று உடல் உழைப்பு குறைந்த வேலைகளையே பலரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் எளிமையான உடற்பயிற்சி, அரைமணி நேரம் நடைப்பயிற்சி, விளையாட்டுகள் என்று ஏதாவது உடல் செயல்பாடுகள் அவசியம். 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் முக்கியம். இதனுடன் புகை, மது போன்ற தீய பழக்கங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிவேகத்தில் குறைப்பவை என்பதை சொல்லத் தேவையில்லை.

    வைட்டமின் மாத்திரைகள் தேவையில்லை
    நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும் என்பதற்காக வைட்டமின் மாத்திரை களை சிலர் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இது எல்லோருக்கும் கை கொடுக்காது. சில உணவுகள் சாப்பிட முடியாத பட்சத்தில் வேண்டுமானால் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். அதேபோல், நம் ஊரில் பழங்கள் சாப்பிட்டால் போதும் என்றும் நினைப்பார்கள். சரிவிகித உணவு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

    தடுப்பூசி நல்லது

    தடுப்பூசி என்பதே குழந்தைகளுக்குத்தான் என்று பலரும் நினைக்க வேண்டாம். ஆனால், தடுப்பூசி என்பது எல்லா தரப்பினருக்கும் தேவை. உதாரணத்துக்கு, குழந்தையாக இருக்கும்போது 5 டெட்டனஸ் ஊசி போட்டிருப்பார்கள். ஆனால், டெட்டனஸ் தடுப்பூசி 10 வருடத்துக்கு ஒருமுறை போட்டுக் கொள்ள வேண்டும். இந்த ஊசி போட்டிருந்தால், இடையில் விபத்தில் அடிபட்டால் கூட தடுப்பூசி தேவையில்லாமலே நம்மைக் காப்பாற்றிவிடும். கக்குவான், ஹெபடைட்டிஸ் என்று பல தடுப்பூசிகள் இருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!

    வைட்டமின் சி உதவுமா?

    வைட்டமின் சி மாத்திரைகள் ஜலதோஷத்தை தடுப்பதற்கும் குணப்படுத்து வதற்கும் நல்ல நிவாரணி என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்கு, சராசரியாக 500 மில்லி கிராம் அளவு வைட்டமின் சி மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இந்த அளவு எடுத்துக் கொள்வது சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது. வழக்கமாக நமக்குக் கிடைக்கும் மாத்திரைகளிலும் 8 கிராம் அல்லது 10 கிராம் அளவுதான் இருக்கும். சரி... பழங்களிலிருந்தே இந்த 500 மில்லி கிராம் எடுத்துக் கொள்ள முடியுமா என்று கேட்டால், அதற்கு கிட்டத்தட்ட 8 ஆரஞ்சு பழங்களுக்கு மேல் ஒரேநாளில் சாப்பிட வேண்டியிருக்கும். இவை எல்லாவற்றையும் விட மிகவும் எளிதான வழி, சரிவிகித உணவை அன்றாட நம் உணவுப்பழக்கத்தில் பின்பற்றுவதுதான். அதனால், சரிவிகித உணவைத் தவிர நோய் எதிர்ப்பு சக்திக்கு வேறு எந்த குறுக்கு வழியும் இல்லை!


  6. #1856
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மறைந்திருந்து தாக்கும் அக்கி

    அக்கி நோயை ஆங்கிலத்தில் (Shingles) என்றும் (Herpes zoster) என்றும் அழைப்பார்கள். இது மிகவும் வலியைத் தருகிற, தோலில் கொப்பளங்களை உண்டாக்குகிற நோயாகும். இது Varicella zoster எனும் வைரஸால் உண்டாகிறது. சின்ன அம்மை (Chicken pox) உருவாக்கும் வைரஸ் கிருமியும் இதுதான்.

    சின்னம்மை உருவான பிறகு இந்த வைரஸ், செயல்பாடற்ற நிலையில் நரம்பு மண்டலத்தில் தங்கியிருக்கும். மீண்டும் சில சந்தர்ப்பங்களில் தூண்டிவிடப்பட்டு இது அக்கி நோயாக மாறும். மேலும், சில நிலைகளில் இது ஏன் உருவாகிறது என்பதற்கான காரணங்கள் தெரியவில்லை.

    அறிகுறிகள்
    ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்தவர்களுக்கும் இது வரும். முதலில் வலி, துடிப்பு, எரிச்சல் ஆகியவை ஒரு பக்கத்தில் காணப்படும். வலியும் எரிச்சலும் பின்னர் அதிகரிக்கும். பின்பு சிவந்த நிறத்தில் தோலில் கொப்பளங்கள் உருவாகும். அதன்பின் இந்தக் கொப்பளங்கள் உடைந்து புண்ணாக மாறும்.

    பிறகு இது உலரத் தொடங்கும். மூன்று வாரங்களில் இந்த உலர்ந்த பகுதி கீழே விழும். பொதுவாக வயிற்றின் மேற்பகுதியிலோ அல்லது மார்பின் அருகேயோ இது வரலாம். முகத்திலும், கண்ணிலும், வாயிலும்கூட வரலாம். இதனுடன் காய்ச்சல், குளிர் காய்ச்சல், உடல் அலுப்பு, தலைவலி, மூட்டுவலி, கழலைகள், கைகால் வலி, தசை பலவீனம் போன்றவை வரலாம்.
    தசைகளை அசைப்பதில் பிரச்சினைகள் வரலாம். முக நரம்பு பாதிக்கப்பட்டிருந்தால் கண்களை மூடி திறப்பதிலும், செவித் திறனிலும், சுவைகளை உணர்வதிலும், பார்வையிலும் பிரச்சினைகள் உருவாகலாம். இந்த நோயைப் பார்த்த உடனேயே கண்டுபிடிக்க முடியும்.

    தற்காப்பு
    நவீன மருத்துவத்தில் வைரஸுக்கு எதிரான மருந்துகள் வந்துள்ளன. சிகிச்சையை 72 மணி நேரத்துக்கு முன்பாக, அதாவது கொப்பளங்கள் தோன்றுவதற்கு முன்பு தொடங்கினால் சிறந்தது. அரிப்பைக் குறைக்கும் மருந்துகள், வலி நிவாரணிகள், மேல்பகுதியில் பூசுவதற்குச் சில களிம்புகளையும் நவீன மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள். குளிர்ந்த நீரில் பஞ்சை முக்கி மெதுவாக அமுக்கிவிடச் சொல்வார்கள். காய்ச்சல் குணமாகிறவரை ஓய்வெடுக்கவும் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவும் அறிவுறுத்தப்படும்.

    இந்தப் புண்ணானது கசிவுடன் காணப்படும் வேளைகளில் சின்னம்மை வராதவர்களையும் இது தாக்கலாம். பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்கள் இவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பது நல்லது. மூன்று வாரங்களுக்கு இத்தகைய தற்காப்பு நடவடிக்கைகளைத் தொடரவேண்டியது அவசியம். பொதுவாக, இது ஒருமுறை ஒருவருக்கு வந்தால் மறுமுறை வருவதில்லை. இதனால் சிலருக்கு நரம்பு பாதிப்பு வருவதுண்டு.

    பாதிப்புகள்
    அக்கி வந்த இடத்தில் நரம்பு வலி (Post hepatic neuralgia) பெரும் தொந்தரவு அளிக்கும். மூளை பாதிப்பு, காது கேளாமை, கண் பாதிப்பு போன்றவை அபூர்வமாக ஏற்படலாம். அதனால், ஒழுங்காகச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். நோயாளிகளின் கொப்பளங்களை நேரடியாக நாம் தொடக் கூடாது. இதற்கு இப்போது தடுப்பூசிகள் வந்துள்ளன. இது சின்னம்மை தடுப்பூசியிலிருந்து மாறுபட்டது.

    இதைத் தவிர, (Herpes simplex) என்று ஒன்று உண்டு. முறைகேடான உடல் உறவால் பிறப்புறுப்புகளில் Genital herpes போன்றவை வரலாம். இது பிறப்புறுப்பில் காண்கிற தோலில் வரும். பாதுகாப்பற்ற உடலுறவின்போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இது பரவும். வாய், உதடு போன்றவற்றில் புண்களை ஏற்படுத்திக் காய்ச்சலுடன் வரும்.

    இரண்டாவது வகை, பிறப்புறுப்பின் தோல், பிறப்புறுப்பு, ஆகிய இடங்களில் வரலாம். பல நேரங்களில் இது கண்டுபிடிக்கப்படாமல் போய்விடும் அல்லது பூச்சி கடி என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படவும் வாய்ப்புள்ளது. இது இரண்டு நாட்களிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் உருவாகும்.

    இந்த நோய் தாக்கியிருந்தால் காய்ச்சல் ஏற்படும், பசி குறையும், உடல் அசதி காணப்படும், தசை வலி ஏற்படும், நிண நாளங்கள் வீங்கும். சிறிதான கொப்பளங்கள் உருவாகும். அதிலிருந்து திரவம் வெளிப்படும்.
    contd..



  7. #1857
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    அந்தத் திரவத்தை ஆராய்ந்து செய்யும் பரிசோதனைகள் வந்துள்ளன. இதனை PCR test என்று சொல்வார்கள். புண்களைக் குணமாக்குவதிலும் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிப்பதிலும், மீண்டும் வராமல் தடுப்பதிலும் அரிப்பு, எரிச்சல், வலி போன்றவற்றை மாற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
    பெண்களுக்குப் பிறப்புறுப்பில் கொப்புளங்கள் உருவாகும். ஆண்களுக்கு ஆண்குறி, தொடை, மலத்துவாரம் போன்றவற்றிலும் கொப்புளம் உருவாகும். மரத்துப் போதல், அரிப்பு, எரிச்சல், வலி போன்றவை காணப்படும். இந்தக் கட்டிகள் உடையும்போது புண்ணாக மாறும், அந்த நேரத்தில் வலி அதிகமாக இருக்கும். 14 நாட்களில் இவை மாறும். ஒரு சிலருக்குச் சிறுநீர் கழிக்கும்பொழுது எரிச்சல் ஏற்படலாம். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். சில மாதங்கள் கழிந்து மீண்டும் இவை தோன்றலாம், அப்பொழுது கடுமை சற்றுக் குறைவாக இருக்கலாம்.

    இதில் கர்ப்பிணி பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுப்பார்கள். குழந்தைக்குப் பரவாமல் தடுக்க இதைச் செய்வார்கள். பொதுவாக இந்த நோய் பாதித்தவர்கள் மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இந்நோயின் தீவிரத்தால் கர்ப்பிணி பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு இந்நோய் பரவும். பாதுகாப்பான உடலுறவு இன்றியமையாததாகிறது. குறிப்பாக லேட்டக்ஸ் காண்டம் பயன்படுத்துவது சிறந்தது. விலங்குகள், மாட்டின் தோலினால் செய்த ஆணுறைகள் வழியாக வைரஸ் பரவும் வாய்ப்புகள் இருக்கிறது.

    ஆயுர்வேத அணுகுமுறை

    ஆயுர்வேதக் கண்ணோட்டப்படி பித்தமும் ரத்தமும் அதிகரித்து எரிநிலையை அடைந்து ரசம், ரத்தம் போன்ற தாதுகளைப் பாதித்துப் பின்பு சிகிச்சை செய்யாவிட்டால், ஆழமான திசுக்களையும் பாதித்து வருகிற நோயாகக் கருதப்படுகிறது. இதை விஸர்ப்ப நோய் அல்லது அக்கி என்பார்கள். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பொதுவாகச் செய்யப்படுகிற பஞ்சகர்ம சிகிச்சைகளைச் செய்யக்கூடாது.

    இந்த நோய்க்கு ரத்தத்தைச் சுத்தி செய்கிற மருந்துகளைக் கொடுக்க வேண்டும். பேய்ப்புடல், வேப்பங்கொழுந்து, திராட்சை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், கோரைக்கிழங்கு, நன்னாரி, விலாமிச்சை ஆகியவற்றைக் கஷாயம் செய்து கொடுக்கலாம்.

    கஷாயம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். ஆயுர்வேதத்தில் இந்த நோய்க்கு ரத்தத்தை வெளியேற்றும் சிகிச்சை செய்வார்கள். முதல் நிலை நீங்கிய பிறகு 14 நாட்களுக்குப் பின் கசப்பு மருந்துகளால் காய்ச்சப்பட்ட திக்தகம், மஹாதிக்தகம் போன்ற நெய்களைக் கொடுக்கலாம். தாமரை, கருங்குவளை, விலாமிச்சை, பால், நெய் சேர்த்து அரைத்துப் பூச்சு போடலாம்.

    புண்ணின் மீது ஆலம் விழுது, வாழைத்தண்டு ஆகியவற்றை அரைத்துப் பூசலாம். காவிக்கல்லை நெய் சேர்த்து அரைத்துப் பூசலாம். சில நேரம் மெல்லிய துணியைப் பரப்பி அதன் மேல் மருந்தைப் பூச வேண்டும்.

    அதிமதுரக் கஷாயம், கோரைக்கிழங்கு கஷாயம், கருப்பஞ்சாறு ஆகியவை குடிப்பதற்கும் நனைப்பதற்கும் சிறந்தவை. மரமஞ்சள் கஷாயம், அருகம்புல் கஷாயம் போன்றவை குடிப்பதற்கு எளிமையான கஷாயங்கள்.

    கைமருந்துகள்
    இந்த நோய்க்கு மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் கிடைக்கும் காவி மண்ணால் அக்கி நோய் கண்டவரின் உடலில் பூச்சு போடுவார்கள். வலியும் வேதனையும் நீங்கும்.
    பூங்காவியை பன்னீருடன் சேர்த்துக் குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச்சல், வலி, வேதனை குறையும்.
    ஊமத்தை இலையை அரைத்து அதனுடன் வெண்ணெய் கலந்து அக்கியின் மேல் பூசவும். கொப்பளங்கள் அடங்கும். எரிச்சல், வலி குறையும்.

    உணவில் காரம், உப்பைக் குறைக்கவும். குளிர்ச்சியான உணவு வகைகளை உண்ணவும். வெயிலில் அலையக் கூடாது. குங்கிலியப் பற்பம் 10 கிராம் வாங்கி அதில் ஒரு மொச்சை அளவு எடுத்து வெண்ணெயில் [எலுமிச்சை அளவு] கலந்து காலை, மாலை உண்ணவும். ஏழு நாட்கள் தொடர்ந்து மருந்தை உண்ணவும்.
    ஆலம் விழுதைச் சாம்பலாக்கித் தேங்காய் எண்ணெயில் குழைத்துத் தடவிவர அக்கி குணமாகும். செம்மரப் பட்டையைத் தண்ணீர்விட்டு நன்கு அரைத்துப் பூசிவந்தால் அக்கி குறையும்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-1513743_383228208521712_4182238552971846775_n.jpg  

  8. #1858
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    காலையில் ஓட்ஸை உணவாக உட்கொண்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

    இன்றைய பரபரப்பான உலகத்தில் நாம் செய்யும் பல்வேறு வேலைகளுக்கு நேரம் என்பதே போதுமானதாக இருப்பதில்லை. இந்த களேபரத்தில் நாம் சரியான உணவை, சரியான நேரத்தில் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. எதிலும் வேகத்தை எதிர்ப்பார்க்கும் நாம் உணவையும் வேகமாக எதிர்ப்பார்க்க ஆரம்பித்து விட்டோம்.

    அப்படி தலைத்தூக்கியது தான் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம். ஆனால் அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றி நம்மில் பல பேர் இன்று உணர்ந்து கொண்டோம். அதற்கான மாற்றாக நமக்கு கிடைத்தது தான் ஓட்ஸ். துரிதமாக உண்ண வேண்டுமானால் இதனை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். நொடிப்பொழுதில் தயார் செய்து சாப்பிட்டு விடவும் செய்யலாம். ஓட்ஸ் என்பது உங்கள் உடல் நலத்தை மேம்படுத்தும் மிகச்சிறந்த முழு தானிய காலை உணவாக விளங்குகிறது.

    இந்த தானியத்தில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. மேலும் உங்கள் உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது.

    ஓட்ஸ் உணவால் கிடைக்கும் உடல்நல பயன்களை ஊக்குவிக்க நட்ஸ், பழங்கள் அல்லது மசாலாக்களை அதில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்த்துக் கொள்ளாதீர்கள். மாறாக, பழங்கள் மற்றும் மசாலாக்களின் இயற்கையான நறுமண சுவைகள் அதன் சுவையை மேம்படுத்தும். ஓட்ஸ் உணவால் அப்படி என்ன தான் பயன் கிடைக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? தொடர்ந்து படியுங்கள்!
    contd..



  9. #1859
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
    ஓட்ஸில் உள்ள நார்ச்சத்தில் லிப்பிட் கொழுப்பை குறைக்கும் நன்மைகள் உள்ளது. இதிலுள்ள கரையத்தக்க நார்ச்சத்து, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, கொலஸ்ட்ராலை உங்கள் குடல் உறிஞ்சுவதையும் குறைக்கும்.

    கூடுதலாக, ஓட்ஸில் அவெனாந்த்ரமைட் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது LDL விஷத்தன்மைக்கு எதிராக பாதுகாக்கும். அதனால் கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமானால், ஓட்ஸ் உணவுடன் ஆரஞ்சு பழம் போன்ற வைட்டமின் சி வளமையாக உள்ள உணவுகளையும் சேர்த்து உண்ணுங்கள்.

    உடல் எடை குறைப்பிற்கு
    உதவிடும் உடல் எடையை குறைக்க படாத பாடுபடுபவர்களுக்கு ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவாக விளங்குகிறது. ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் இது உதவிடும். வளமையான புரதம் மற்றும் நார்ச்சத்தை இது கொண்டுள்ளதால், இது உங்கள் வயிறை நிறையச் செய்து உங்களை திருப்தியாக்கும்.

    மற்ற தானியங்களை விட ஓட்ஸ் உங்கள் வயிற்றை அதிகமாக நிறையச்செய்யும் என 2013 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. சுவைமணம் இல்லாத ஓட்ஸை, ஓட்ஸ் கலந்த குளிர்ந்த தானியங்களுடன் ஒப்பிட்டு பார்த்த போது, சுவைமணம் இல்லாத ஓட்ஸே வயிற்றை அதிகமாக நிறையச் செய்து, ஆற்றலை அதிகரிக்க மற்ற உணவை நாடுவது குறைந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

    இரத்தத்தில் உள்ள சர்க்கரையை சீராக்கும்
    ஓட்ஸில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகமாக உள்ளது. காலையில் உண்ணக்கூடிய மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில், இது நிலையான ஆற்றலை அளிக்கும் மூலமாக விளங்குகிறது.

    நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், உங்கள் உடல் அதை மெதுவாக செரிக்க செய்யும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையில் திடீர் உயர்வு இருக்காது. ஓட்ஸ் போன்ற முழு தானியங்களை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால், டைப் 2 சர்க்கரை நோய் உண்டாவது குறையும் எனவும் அறிவியல் சார்ந்த ஆய்வுகள் கூறுகிறது.

    மார்பக புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும்
    ஓட்ஸில் லிக்னன்கள் மற்றும் என்ட்ரொலாக்டோன் போன்ற பைட்டோ-ரசாயனங்கள் வளமையாக உள்ளது. இது புற்றுநோய்களுக்கு எதிராக உங்களை பாதுகாக்கும். குறிப்பாக, மார்பக புற்றுநோய் மற்றும் இதர ஹார்மோன் சம்பந்தப்பட்ட புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்க என்ட்ரொலாக்டோன் உதவுகிறது.

    கூடுதலாக, ஓட்ஸ், கம்பு மற்றும் அதே போன்ற இதர உணவுகளில் உள்ள கரையத்தக்க நார்ச்சத்துக்கள் மார்பக புற்று அணுக்களின் மீது நேரடியான தாக்கத்தை கொண்டுள்ளது.

    மன அழுத்தத்தை அண்ட விடாது
    வெதுவெதுப்புடன் இதமளிக்ககூடிய இந்த காலை உணவு உங்களிடம் இருந்து பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் நீக்க உதவும். செரோடோனின் என்ற நரம்பியகடத்துகையின் உற்பத்தியை அதிகரிக்க மூளையை இது தூண்டி விடும். செரோடோனின் தான் உங்கள் மனநிலை, தூக்கம் மற்றும் பசியை கட்டுப்படுத்துவதாகும்.

    கூடுதலாக, இதில் மெக்னீசியம் உள்ளதால் உங்கள் தூக்கத்தின் தரம் மேம்பட இது உதவும். இதனால் அமைதி ஏற்படும். இந்த காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் உணவை கொஞ்சம் சாப்பிட்டாலும் போதும், உங்கள் மன அழுத்தம் நீங்கும்.

    உடல் ஆரோக்கியம் மற்றும் மனநிலை பயன்களை அளிக்கும் இந்த உணவின் சுவையை மேம்படுத்த அதனுடன் ப்ளூபெர்ரி பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். ப்ளூபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி வளமையாக உள்ளதால், மன அழுத்தத்தை போக்க சிறந்த உணவாக அது கருதப்படுகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும்
    முழு தானிய ஓட்ஸில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் வளமையாக உள்ளது. டையட்டரி ஃபைபர் இதில் வளமையாக உள்ளது. நோய் எதிர்ப்பு அணுக்கள் செயல்பாடுகளின் மாற்றங்களுடன் இது சம்பந்தப்பட்டுள்ளது. மேலும் ஓட்ஸில் உள்ள பீட்டா-க்ளுக்கான்களில் நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்களும் உள்ளது.

    நுண்ணுயிர் தொற்றுகளுக்கு எதிராக உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்பட, அதனை மேம்படுத்த பீட்டா-க்ளுக்கான்கள் உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் பயன்களை பெற வேண்டுமானால், சர்க்கரை அதிகமாக கொண்டுள்ள தற்போதைய உடனடி ஓட்ஸ் உணவை தேர்ந்தெடுக்காமல் பழமையான ரோல்ட் ஓட்ஸ் அல்லது ஸ்டீல்-கட் ஓட்ஸை தேர்ந்தெடுங்கள்.

    சருமத்தை இதப்படுத்தும்
    உண்ணுவதற்கு மட்டுமல்ல ஓட்ஸ். உங்கள் சருமத்தை மென்மையாக வைத்து, அதற்கு நீர்ச்சத்து அளிக்கவும் கூட ஓட்ஸ் உதவுகிறது. ஓட்ஸ் குளியல் மேற்கொண்டால் அரிப்பு, சருமம் சிவத்தல், சரும எரிச்சல் போன்றவைகள் நீங்கும். அனைத்து வகையான சருமங்களுக்கும் இது ஒத்துப்போகும்.

    இதில் அழற்சி எதிர்ப்பி மற்றும் இறந்த தோல்களை நீக்கும் குணங்களும் அடங்கியுள்ளது. இயற்கையான சுத்தப்படுத்தும் பொருளாக விளங்கும் ஓட்ஸ், சருமத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் எண்ணெய், அழுக்கு மற்றும் மாசுக்களை நீக்கவும் உதவும். மேலும் சூரிய ஒளி பாதிப்பில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க புற ஊதா உறிஞ்சியாகவும் இது செயல்படும்.




    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-22-1421933459-oats.jpg  

  10. #1860
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நமது உடலையும் பொன்னாக மாற்றும் சக்தி பொன்னாங்கண்ணிக் கீரைக்கு உண்டு

    பொன்னைக் கொடுத்து பொன்னாங்கண்ணி வாங்கு என்பது கிராமத்துப் பழமொழி, பகலில் விண்மீன்களை பார்க்கமுடியுமா? என்றால் முடியும் என்கிறது இக்கீரை. இக்கீரையை ஒரு மண்டலம் (48நாட்கள்) சமையல் செய்தோ, பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் பகலில்கூட நட்சத்திரங்கள் பார்க்கலாம்.

    கிராமத்தில் 90 வயதில்கூட கண்ணாடி அணியாமல் உலாவுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இக்கீரையே. கண்ணுக்கு ஒளியை தெளிவான பார்வையை இதற்கு இணையாகத் தரக்கூடிய கீரை வேறொன்றும் இல்லை.


    இது கண்ணை மட்டும் தெளிவாக்குவதில்லை நமது உடலையும் பொன்னாக மாற்றும் சக்தி இதற்குண்டு.

    விலையுயர்ந்த லோஷன்களைப் போட்டு உடலை கெடுத்துக்கொள்பவர்கள் இக்கீரையை சாப்பிட்டு வந்தாலே போதும் பொன்னிறமாக மாறுவார்கள்.

    இக்கீரை தரையில் படர்ந்து வளரும் தன்மைகொண்டது வாய்க்கால், வயல் வரப்புகள், ஈரமுள்ள இடங்கள் என எங்கும் பரவி வளர்ந்துகிடக்கும்.

    இதன் இலைகள் முருங்கை இலைகளைவிட சிறியதாக இருக்கும். கரும்பச்சை நிறம்கொண்டது. இதன்பூக்கள் கொத்துக்கொத்தாய் இருக்கும். மஞ்சள் பொன்னாங்கண்ணி என்றொரு வகை உண்டு. இதன் பூக்கள் மஞ்சள் நிறமாக இருக்கும் இலைகள் பெரியதாக சற்றே மஞ்சள் கலந்த நிறமாக இருக்கும்.

    ஆனால் இரண்டு பொன்னாங்கண்ணிக்கும் அடிப்படை குணத்தில் வேறுபாடு இல்லை. இதன் வுபாசம் - குளிர்ச்சி

    காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்
    கூசும் பிலீகம் குதாங்குர நோய் - பேசிவையால்
    என்னாங்கா ணிப்படிவம் எமமம் செப்பலென்னைப்
    பொன்னாங்கா ணிக்கொடியைப் போற்று - அகத்தியர் குணபாடம்

    மருத்துவப் பயன்:

    1. பொன்னாங்கண்ணிக் குரையை நெய்யில் வதக்கி. அத்துடன் சிறிது மிளகு, உப்பு சேர்த்துக் கடைந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டால் உடலுக்கு அழகும், பொன்னிறமும் ஒரு சேர உண்டாகும். நீடித்த ஆயுளும், நோயில்லா வாழ்க்கையும் பெறலாம்.

    2. பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறிது மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து ஒரு மண்டலம் வரை சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும். கண் தொடர்பான நோய்கள் அனைத்து தீரும்.

    3. பொன்னாங்கண்ணிக் கீரையின் சாற்றை, அரை அவுன்ஸ் வீதம் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், கண்சிவப்பு மாறும், தலைச்சூடும் போகும்.

    4. பொன்னாங்கண்ணிக் கீரையை நெய்விட்டு வதக்கி கண்கள் மீது வைத்துக் கட்டினால் கண் நோய்கள் குணமாகும்.

    5. பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மூலச்சூடு, மூலக்கடுப்பு ஆகியவை தீரும்.

    6. பொன்னாங்கண்ணி கீரையைத் தைலமாகத் தயாரித்து தலையில் தடவிக் குளித்தால் கண் புகைச்சல், கருவிழி நோய், கண் அழுத்தம், உடல் சூடு, வெட்டைச்சூடு போன்ற அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகும்.

    7. பொன்னாங்கண்ணி கீரைச் சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பசு நெய், பசும்பால் என ஒவ்வொன்றிலும் தலா 60 மி.லி அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலக்கிக் காய்ச்சி மெழுகு பதத்தில் இறக்கு, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் (5 கிராம்) அளவுக்குச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல், கை கால் எரிச்சல், பித்த மயக்கம் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

    8. பொன்னாங்கண்ணி கீரைச் சாறு (100 மி.லி.) கரிசலாங்கண்ணிச் சாறு (100 மிலி.) இரண்டையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். அதில் 50 கிராம் அதிமதுரத்தை பால் சேர்த்து கலந்துகொள்ளவும். அடுத்து அதை மெழுகு பதமாகக் காய்ச்சி இறக்கி தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவை குணமாகும்.

    9. பொன்னாங்கண்ணிக் கீரையைக் கடைந்தோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் கல்லீரல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.

    10. பொன்னாங்கண்ணிக் கீரைச் சாற்றில் 5 திராம் சீரகத்தைச் சேர்தது அரைத்துச் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

    100 கிராம் பொன்னாங்கண்ணிக் கீரையில் உள்ள சத்துக்கள்:

    நீர்ச்சத்து - 77.4 கிராம்
    புரதம் - 5.0 கிராம்
    கொழுப்பு - 0.7 கிராம்
    தாது உப்புகள் - 2.5 கிராம்
    நார்ச்சத்து - 2.8 கிராம்
    சர்க்கரைச்சத்து - 11.6 கிராம்
    சுண்ணாம்புச்சத்து - 510 மி.கி
    பாஸ்பரஸ் - 60 மி.கி
    இரும்பு - 16.7 மி.கி
    மாவுப்பொருள் - 1926 யு.ஜி
    ரிபோஃபிளேவின் - 0.14 மி.கி
    நியாசின் - 1.2 மி.கி
    வைட்டமின -சி - 17 மி.கி
    கலோரித்திறன் - 73கலோரி


    உடலில் இருக்கும் அனைத்துவிதமான நோய்களும் தீரும். குறிப்பாக கண் நோய்கள் முற்றிலும் குணமாகும். நரம்புக் கோளாறுகள், பித்தக் கோளாறுகள், குடல் சார்ந்த நோய்கள் போன்ற அனைத்தும் நீங்கி உடல் மினுமினுப்பு (தேஜஸ்) பெறும்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-pppppp.jpg  

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter