Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1871
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கலோரி புரிந்ததும் புரியாததும்!

    திரும்பின பக்கமெல்லாம் டயட் ஆலோசனைகள்...

    அறிவுரைகள்... போதாக்குறைக்கு பிரபலங்களின் ஸ்லிம் சீக்ரெட்ஸ் வேறு... எது சரி, எது தவறு என்கிற குழப்பம் ஒரு பக்கம்...

    பி.எம்.ஐ... மெட்டபாலிக் ரேட்... பேலன்ஸ்டு டயட் என ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் உணவியல் ஆலோசகர்களின் பயமுறுத்தல் இன்னொரு பக்கம்...

    படித்தவர்களுக்கே குழப்பம் உண்டாக்கும் பி.எம்.ஐ கணக்கீடும், பேலன்ஸ்டு டயட் பட்டியலும் பாமர மக்களுக்கு எங்கிருந்து புரியும்?

    உணவு மற்றும் ஊட்டம் தொடர்பான அத்தனை சந்தேகங்களையும் இங்கே தெளிவுப்படுத்துகிறார் டாக்டர் தேசிகாச்சாரி. நீரிழிவு, ரத்த அழுத்தம், பருமன், வளர்சிதை மாற்றச் சீர்கேடுகள் போன்ற தொற்றாத நோய்களின் உயிர்குறிப்பான்களை மதிப்பீடு செய்வதிலும், வாழ்க்கைமுறை மாற்ற நடவடிக்கைகள் மூலமாக இவற்றை சரி செய்ய உதவுவதிலும் நிபுணரான இவர், உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி, யுனிசெஃப், டேனிடா போன்றவற்றில் சுகாதார ஆலோசகராக பணியாற்றிய அனுபவமும் உள்ளவர்.

    பி.எம்.ஐ. (பாடி மாஸ் இன்டக்ஸ்)

    ஒவ்வொருவரும் அவரவர் உயரத்துக்கு இவ்வளவு எடைதான் இருக்க வேண்டும் என ஒரு கணக்கீடு உண்டு. அந்தக் கணக்கீட்டை வைத்து தான் ஒருவர் சரியான எடையுடன் உள்ளாரா, கூடுதல் எடையுடன் உள்ளாரா, சராசரியைவிட குறைவான எடை கொண்டவரா அல்லது உடல் பருமன் உள்ளவரா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். உதாரணத்துக்கு...
    எப்படிக் கணக்கிடுவது?

    பி.எம்.ஐ. = எடை (கிலோ கிராம்களில்)
    உயரம் (மீட்டர் ஸ்கொயர்)
    பி.எம்.ஐ.
    * 18.5 க்கும் கீழ் என்றால் சராசரியை விட குறைவான எடை கொண்டவர்கள்.
    * 18.6 முதல் 24.9 வரை என்றால் நார்மல் எடை கொண்டவர்கள்.
    * 25 முதல் 29.9 வரை என்றால் அதிக எடை கொண்டவர்கள்.
    * 30 மற்றும் அதற்கு மேல் என்றால் உடல்
    பருமன் கொண்டவர்கள்.

    பி.எம்.ஐ.க்கு ஏற்ப ஒவ்வொருவருக்குமான கலோரி தேவை
    18.5க்கும் கீழ்... 30-35 முதல் 35-40 கிலோ கலோரிகள்.
    19 முதல் 25 வரை... 25 முதல் 30 கிலோ கலோரிகள்.
    25 முதல் 30 வரை... 20 முதல் 25 கிலோ கலோரிகள்.
    30 பிளஸ்... 15 முதல் 20 கிலோ கலோரிகள்.
    இது தவிர ஒவ்வொருவரின் மொத்த கலோரி தேவை என்பது ஓய்வு வளர்சிதை மாற்றம் (ரெஸ்டிங் மெட்டபாலிக் ரேட்) மற்றும் உடலியக்கங்களின் தன்மையைப் பொறுத்து வேறுபடும்.
    வயது, பாலினம் போன்றவையும் கணக்கில் கொள்ளப்பட்டே ஒவ்வொருவருக்குமான கலோரி தேவை கணக்கிடப்பட வேண்டும்.
    contd..



    Sponsored Links

  2. #1872
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    ஒவ்வொருவரின் உடலமைப்பையும் எக்டோமார்ஃப், மெசோமார்ஃப் மற்றும் என்டோமார்ஃப் என 3 வகைகளாகப் பிரிக்கலாம்.

    முதல் வகையைச் சேர்ந்தவர்கள், மெலிதான எலும்பு அமைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களது வளர்சிதை மாற்ற விகிதமும், கார்போஹைட்ரேட் சகிப்புத் தன்மையும் அதிகமாக இருக்கும். இவர்களது உணவில் 55 சதவிகிதம் காம்ப்ளக்ஸ் (மெதுவாக செரிக்கக்கூடிய) கார்போஹைட்ரேட்டும், 30 சதவிகிதம் புரதமும், 15 சதவிகிதம் கொழுப்பும் இருக்க வேண்டும்.

    மெசோமார்ஃப் வகையைச் சேர்ந்தவர்கள் நடுத்தர உடல்வாகு கொண்டவர்களாக, விளையாட்டு வீரர்களைப் போன்ற உடலமைப்புடன் இருப்பார்கள். இவர்களது உணவில் 40 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டும், 30 சதவிகிதம் புரதமும், 30 சதவிகிதம் கொழுப்பும் இருக்க வேண்டும். கடைசி வகையைச் சேர்ந்தவர்கள் பெரிய உடலமைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். 25 சதவிகித கார்போஹைட்ரேட், 35 சதவிகித புரதம், 40 சதவிகித கொழுப்பு நிறைந்த உணவு இவர்களுக்கு அறிவுறுத்தத்தக்கது.

    பேலன்ஸ்டு உணவு
    ‘பேலன்ஸ்டு உணவு’ அதாவது, சரிவிகித உணவு என்பது நமது உடலுக்குத் தேவையான எல்லா சத்துகளையும் தருவதாக இருக்க வேண்டும். நாம் சாப்பிடுகிற எல்லா உணவுகளிலும் எல்லா சத்துகளும் கிடைப்பதில்லை. ‘சரிவிகித உணவு’ என்பது, பல்வேறு உணவுப் பிரிவுகளைச் சேர்ந்த மாறுபட்ட பல உணவுகளிலிருந்து குறிப்பிட்ட அளவுகள் மற்றும் அளவீடுகளில் போதுமான ஊட்டச்சத்து தேவைகளோடு மன அழுத்தத்திற்கான கூடுதல் சக்தியையும் வழங்குகிற உணவு என்று பொருள் வரையறை செய்யப்படுகிறது.
    contd..



  3. #1873
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    எந்த உணவு எதற்கு?

    * ஆற்றலைக் கொடுக்கும் உணவுகள்
    (கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு).
    * முழு தானியங்கள், சிறு தானியங்கள் - புரதம், நார்ச்சத்து, தாதுச் சத்து, கால்சியம், இரும்பு மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்.
    * தாவர எண்ணெய், வெண்ணெய், நெய் - கொழுப்பில் கரையும் வைட்டமின்கள், அவசிய கொழுப்பு அமிலங்கள்.

    * நட்ஸ், எண்ணெய் வித்துகள் - புரதம், வைட்டமின் மற்றும் தாதுச் சத்து.

    * சர்க்கரை - ஒன்றுமில்லை. பாடி பில்டிங் உணவுகள் (புரதங்கள்)
    * பருப்பு, நட்ஸ் மற்றும் எண்ணெய் வித்துக்கள் - பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், கண்ணுக்குத் தெரியாத கொழுப்பு மற்றும் நார்ச்சத்து.

    * பால் மற்றும் பால் பொருள்கள் - கால்சியம், வைட்டமின் ஏ, ரிபோஃப்ளேவின், வைட்டமின் பி 12.

    * இறைச்சி, மீன் - பி காம்ப்ளக்ஸ், இரும்புச் சத்து, அயோடின் மற்றும் கொழுப்பு.பாதுகாக்கும் உணவுகள் (வைட்டமின் மற்றும் தாதுச் சத்துக்கள்)

    * பச்சைக் காய்கறிகள், கீரைகள் - ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், நார்ச்சத்து மற்றும் இதர கேரட்டீனாயிட்ஸ்.

    * பிற காய்கறிகள் மற்றும் பழங்கள் - நார்ச்சத்து, சர்க்கரை மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்.

    * முட்டை, பால், பால் பொருள்கள், அசைவ உணவுகள் - புரதம் மற்றும் கொழுப்பு.

    நன்றி குங்குமம் தோழி


  4. #1874
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அன்னமுன்னா/ சீதா பழம்

    சீதா, வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa. இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.
    பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர்தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத்தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும்
    அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் கஸ்டட் ஆப்பிள் என்றழைக்கப்படுகிறது.

    பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே நன்றாக வளரும். சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

    காய்கள் மரத்தில் பழுக்காது என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும்போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.
    சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச் சத்து மிக்கதாகவும் இருக்கும்.

    தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

    சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.
    இப்பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது.
    பழத்தில் உள்ள சத்துக்கள்
    100 கிராம் சீதாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களின் உணவு மதிப்பீடு:
    ஈரப்பதம்- 70.5%, புரதம்- 1.6%, கொழுப்பு- 0.4%, மணிச்சத்து- 0.9%, நார்ச்சத்து- 3.1%, கல்சியம்- 17 மி.கி, பாஸ்பரஸ்- 47 மி.கி, இரும்புச்சத்து- 4.31 மி.கி, விட்டமின் C-37 மி.கி, விட்டமின் B காம்ப்ளக்ஸ் சிறிதளவு, மாவுச்சத்து- 23.5%,கலோரி அளவு- 10.4% ஆகும்.
    contd..


    Last edited by chan; 28th Jan 2015 at 04:13 PM.

  5. #1875
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தொடர்ச்சி

    அன்னமுன்னா பழ உடல்நல நன்மைகள்

    சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.
    சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும்.

    சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
    சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

    சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

    சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

    அன்னமுன்னா இலைகள் மருத்துவ குணம்
    இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

    சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து.

    இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது.


    சீத்தாப்பழ விதை மருத்துவ குணம்

    விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். முடி உதிராது. பேன்கள் ஒழிந்துவிடும்.

    சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

    சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

    மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது.

    விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்.

    சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg   Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-1.jpg   Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-3.jpg   Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-5.jpg  

  6. #1876
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கீரை மருத்துவம் - முற்றிய காச நோயைக்கூட சிறு கீரையால் குணப்படுத்தலாம்

    பெயர் தான் சிறு கீரையே தவிர, மருத்துவப் பயன்கள் அதிகம் கொணட பெருங்கீரையாகும்.வாசமுள்ள சிறந்த கீரை எல்லோரும் விரும்பி உண்ணும் கீரை எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் சத்துள்ள கீரையை தினசரி சாப்பிட்டுவந்தாலும் உடலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது இரும்புச் சத்தும், புது இரத்தமும் உடம்பில் சேரும். இதில் கால்சியச்சத்து அடங்கியிருப்பதால் எலும்பை பலப்படுத்துகிற ஆற்றல் இதற்கு உண்டு. இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால்வந்தால் சிறந்த நினைவாற்றல் பெறலாம். உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றக்கூடியது. வண்டுக்கடி, பூச்சிக்கடி விஷங்கள் இறக்கக்கூடியது. சிறு கீரையால் முற்றிய காச நோயைக்கூட குணப்படுத்த முடியும்


    சித்தர் பாடல்:

    கண்புகைச்ச நேத்திரநோய் சாசம் படலம்
    புண்கிரிச்ச ரஞ்சோலை பொங்குமித்த - மண்பரவு
    தாவரவிடங்களும் போம் தாழாத் திருவுமுண்டாம்
    கூறுசிறு கீரைதனைக் கொள். - அகத்தியர் குணபாடம்

    கண் புகைச்சல் போன்ற கண் நோய்கள், காச நோய், புண்கள், சிறுநீர்க்கடுப்பு, ஆசாகை,பித்த நோய்கள் குணமாகும். உணவால் உண்டாகும் விஷத்தை முறிக்கும்.

    100 கிராம் சிறு கீரையில் உள்ள சத்துக்கள்:


    நீர்ச்சத்து - 90 சதவீதம்
    புரதம் - 2.8 சதவீதம்
    கொழுப்பு - 0.3 சதவீதம்
    தாதுப்பொருள் - 2.1 சதவீதம்
    சர்க்கரைச்சத்து - 4.8 சதவீதம்
    சுண்ணாம்புச்சத்து - 397 மி.கி
    பாஸ்பரஸ் - 50 மி.கி
    இரும்பு - 27.3 மி.கி
    கலோரித்திறன் - 30 கலோரி


    ஞாபக மறதிக்காரர்களா:

    சிறு கீரையோடு மிளகுத்தூள், உப்பு சேர்த்து சமைத்து கொஞ்சம் நெய்யையும் சாதத்தில் போட்டுச் சாப்பிட்டால் அற்புதமான நினைவாற்றல் கிடைக்கும்
    .
    பித்தநோய்:

    சிறு கீரையும் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் அனைத்துவிதமான பித்த நோய்களும் குணமாகும்

    சிறுநீராக கோளாறு:

    சிறு கீரையுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கஷாயம் தயாரித்து அதிகாரலயில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.

    தோல் நோய்:

    சிறு கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்தால் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

    உடல் பருமன்:

    சிறு கீரை (2 கை அளவு), பார்லி (ஒரு கை அளவு) ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம் நான்கு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் உடல வீக்கம், உடல் பருமன் குறையும்.

    கண் எரிச்சல்:

    சிறு கீரையுடன் மிளகு, வெங்காயம், பூண்டு, மஞ்சள், சேர்த்து சூப்பாகச் செய்து சாப்பிட்டால் கண் புகைச்சல், கண்காசம், கண் படலம் போன்றவை குணமாகும்.

    கப நோய்:

    சிறு கீரையுடன் சிறிது, சுக்கு, மிளகு, திப்பிலி, மஞ்சள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் கப நோய்கள் விலகும்.

    உடல் வனப்பு:

    சிறு கீரையை குடைமிளகாய், சிறுபருப்பு, பூண்டு ஆகியவற்றுடன் சேர்த்துச் சமைத்து தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் உடல் வனப்பு பெறும்.

    முகப்பரு:

    சிறு கீரையுடன் முந்திரிப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்தது அரைத்து முகப்பருக்கள் மீது தடவிவந்தால் குணம் பெறலாம்.

    விஷக்கடிகள்:

    சிறு கீரை வேர், குப்பைமேனி வேர், சிறுபீளை வேர் மூன்றையும் சம அளவில் எடுத்து அலசி நன்றாக அரைத்து எலுமிச்சை பழம் அளவு அதிகாலையில் சாப்பிட்டு உணவில் உப்பு சேர்க்காமல் பத்தியம் இருந்தால், வண்டுக்கடி, தேள்கடி போன்ற அனைத்துவிதமான விஷக்கடிகளும் குணதாகும்




  7. #1877
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...

    இன்றைய காலத்தில் பலருக்கு இளமையிலேயே மூட்டு வலிகள் ஏற்படுகிறது. பொதுவாக மூட்டு வலிகள் 40 வயதிற்கு மேல் தான் ஆரம்பமாகும். ஆனால் தற்போது சீக்கிரமாகவே மூட்டுகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதற்கு மூட்டுகளுக்கு அதிகப்படியான வேலைகளைக் கொடுத்துவிட்டு, மூட்டுகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் செய்வது தான் முக்கிய காரணம்.

    ஆனால் ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, தினமும் போதிய உடற்பயிற்சியை செய்து வந்தால், மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் உடற்பயிற்சி செய்யும் போது தளர்ந்த மூட்டுகள் வலிமை அடைந்து, சீராக செயல்படவும் ஆரம்பிக்கும். ஒருவேளை உங்கள் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் அதிகம் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

    ஏனெனில் மூட்டுகளில் ஏற்படும் பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரிசெய்யாவிட்டால், அது பிற்காலத்தில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும். இங்கு மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால், மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

    * உடல் எடை அதிகம் இருந்தால், அது மூட்டுகளில் அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுத்து, அதுவே மூட்டுகளில் பிரச்சனையை ஏற்படுத்தும். ஆகவே சீரான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். இதனால் மூட்டுகளில் கொடுக்கப்படும் அழுத்தத்தின் அளவு குறையும்.

    * நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், தினமும் ஏரோபிக்ஸ், ரன்னிங் போன்றவற்றை செய்து வந்தால், மூட்டுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

    * காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். மேலும் பால் பொருட்களை சேர்த்து வந்தால், எலும்புகளுக்கு வேண்டிய கால்சியம் கிடைத்து எலும்புகள் வலிமையாக இருக்கும். குறிப்பாக உடலில் யூரிக் ஆசிட்டின் அளவைக் குறைக்கவும். ஏனெனில் அது தான் மூட்டுகளில் வலியை ஏற்படுத்தி, அதன் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது.

    * எப்போதும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். நீண்ட நேரம் மூட்டுகளுக்கு தொந்தரவு தரும் வகையில் இருந்தால், அதுவே அதன் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.


  8. #1878
    chira's Avatar
    chira is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    chennai
    Posts
    16

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இ து எ ன க் கு ரொ ம்ப ந ல் லா இ ரு க் கு


  9. #1879
    Suasin is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Kuwait
    Posts
    52

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    Good informative thread... Keep going girls!!

    chan likes this.

  10. #1880
    preetlove is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    India
    Posts
    19

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    Everyone should eat fruits and green veggies to live healthy and fit life. And should go for walk daily.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter