Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree913Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1891
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,215

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!




    Sponsored Links

  2. #1892
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,215

  3. #1893
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,991

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடல் நலம் காக்க தினம் ஒரு கொய்யா! (Guava to protect the health of the Day!)

    ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும், கொய்யா பழத்தை, தினமும் மதிய உணவுடன், 200 கிராம் சேர்த்துக்கொள்வதால், ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன. ஆரஞ்சுப் பழத்திலிருக்கும், வைட்டமின் சி போல, கொய்யா பழத்தில் நான்கு மடங்கு அதிகம்.
    இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன. உணவு ஜீரணமாவதற்கும் உதவுகிறது. இரவு உணவுக்குப் பின், நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங்களை சாப்பிடுவதால், மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. பல் முளைக்கும் குழந்தைகளுக்கு, கொய்யாப் பழங்களை தினமும் சிறிதளவு கொடுப்பதால், பற்கள் மற்றும் ஈறுகள் உறுதியாகிறது.
    கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டைகளிலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு, இவை பெரிதும் உதவுகிறது. கொய்யா மரத்தின் இலைகளை, அரைத்து காயத்தின் மேல் தடவினால், அவை விரைவில் ஆறி விடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யா இலைகள் மூலம், தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
    தினமும் இரண்டு முறை, குருமிளகு மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறுடன் கனிந்த கொய்யா பழத்தை ஜூஸ் செய்து குடித்தால், உடல் வலுப்பெறும். ஒரு மாதத்துக்கு தொடர்ந்து மதிய உணவுக்கு பின், 250 கிராம் கொய்யா பழத்தை எடுத்துகொண்டால் உடலில் அரிப்புகள் குணமாகும். பெண்களின் வயிற்று வலிக்கு, எட்டு முதல் பத்து கொய்யா இலைகளை நன்றாக அரைத்து தண்ணீருடன் சேர்த்து அருந்தி வந்தால், வயிற்று வலி குறையும். வயிற்றில் உள்ள புழுக்களை அழிப்பதற்கு, கொய்யா பழத்தின் விதைகளை நீக்கி, அதனுடன் நான்கு சொட்டு பூண்டு சாறு கலந்து வெறும் வயிற்றில் இரண்டு நாட்கள் சாப்பிட வேண்டும்.
    கொய்யா பழத்தில் சட்னி, சிரப், ஜாம் மற்றும் ஜூஸ் தயாரித்து சாப்பிடுவதன் மூலம் பல நோய்களை கட்டுப்படுத்த முடியும். கொய்ய பழத்தை வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது. கொய்யாவின் தோலில் அதிகசத்துக்கள் உள்ளதால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்துக்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்கி, இளமை தோற்றத்தை தக்க வைக்க உதவுகிறது. உணவருந்துவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிடாலம்.
    கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால், பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.


    chan and shrimathivenkat like this.

    KOTHAISURESH

  4. #1894
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,991

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!




    ஆவாரம் பூவின் மருத்துவ குணங்கள்




    “ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..” என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.




    இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மண்கலயத்தில் போட்டு அரைப்படி நீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவை குணமாகும். பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.




    மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும். இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.



    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-.jpg  

    KOTHAISURESH

  5. #1895
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,991

    Re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெள்ளரிக்காய் -

    வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து கடும் வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். இத்தகைய வெள்ளரியை பற்றி, நாம் அறிந்துக்கொள்வது
    அவசியம்.
    * வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை ஆனால்தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் இத்தனையும் வெள்ளரியில் உண்டு.
    * இவற்றை விட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதியாக உள்ளது. ஈரல், கல்லீரல் இவற்றின் சூட்டைத் தடுக்கும் ஆற்றல்வெள்ளரிக்கு உண்டு. செரிமானம் தீவிரமாகும்.
    * பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விஷேச ஜீரண நீர் சுரக்கிறது. இது பித்தத்தை குறைக்கும். உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களை விரட்ட வெள்ளரி மிகவும் உதவும்.
    * வெள்ளரிப்பிஞ்சை உட்கொண்டால் புகைப்பிடிப்போரின் குடலை நிக்கோடின் தாக்குவதை குறைத்து நஞ்சை நீக்குகிறது. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேளை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியையும், மூளைக்குப் புத்துணர்ச்சியையும் வெள்ளரிக்காய் கொடுக்கிறது.
    * நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.
    * கண்கள் குளிர்ச்சியடைய வெள்ளரிக்காயை குறுக்கு வசம் சிறியதாக அறுத்து இரண்டு துண்டுகள் எடுத்து கண்ணின் மேற்பகுதியில் சிறிது நேரம் வைத்திடுந்தால் கண் குளிர்ச்சியடையும். அழகிய முகமும் வனப்பும் பெற வெள்ளரிக்காய் மிகவும் உதவுகிறது





    KOTHAISURESH

  6. #1896
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,215

    Re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சம்மணமிட்டு சாப்பிட சொல்வது ஏன்?


    தமிழக கலாச்சாரங்களில்முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது.
    இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது.

    விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!

    முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?
    சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

    சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.

    ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச்
    செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.





  7. #1897
    sunita1211 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    India
    Posts
    89

    Re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    A veggie wash is a need of the day to remove the pathogens and chemicals on the food , fruits and vegetables .
    Ozone disinfection technology produces highly reactive Ozone gas that successfully oxidizes traces of pesticides, insecticides and other harmful farm chemicals thereby, making food fit for human consumption.To add more to the benefits from vegetable wash by the purifier it keeps fruits fresh & de-odorized for longer duration and has a higher shelf life.It is CE certified.


    Attached Thumbnails Attached Thumbnails Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!-kent-wall-mounted-vegetable-purifier.jpg  
    Last edited by jv_66; 28th Jul 2016 at 10:10 AM. Reason: External link is removed
    shrimathivenkat likes this.

  8. #1898
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,449

    Re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சூப்பர் தகவல்கள் லக்ஷ்மி அண்ட் கோதை அக்கா.


  9. #1899
    shikha.aae is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2016
    Location
    New Delhi
    Posts
    1

    Re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    Which would be best for healty breakfast, lunch and dinner, which is prevent from Fat.


  10. #1900
    swethasri88 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Feb 2014
    Location
    chennai
    Posts
    16

    Re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    Hi mam i read today the full things here.. very much useful.

    thank you so much. many good habits i learned related to health.

    Quote Originally Posted by chan View Post
    நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.

    இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.

    இதோ கால அட்ட வணை:

    விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

    காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

    காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

    காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

    காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

    பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

    பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

    மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

    இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

    இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

    இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.

    இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter