Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சீத்தாப்பழத்தில் இத்தனை மருத்துவக் குணமா!?

    சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

    இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

    ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

    பழத்தில் உள்ள சத்துக்கள்:

    சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து,போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

    சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:

    சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

    முகப் பருக்கள் குணமடையும்:

    சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

    மேனி பளபளப்பாகும்:

    விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

    சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

    சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

    மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது.விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்

    எலும்பு பலமடையும்:

    சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

    நினைவாற்றல் அதிகரிக்கும்:

    சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

    சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:

    சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

    இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

    பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

    பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

    சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

    காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

    சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.


    Sponsored Links

  2. #12
    premabarani's Avatar
    premabarani is offline Commander's of Penmai
    Real Name
    Premalata Baranidharan
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Doha,Qatar
    Posts
    2,364

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    Hi Chan
    Very nice thread you have started.
    These info are useful for all of us.
    Thank you.

    fatima15 likes this.
    Prema Barani

  3. #13
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    20 Home Remedies Everyone Should Know

    1. Having pomegranate’s juice daily is good for heart and useful for people suffering from low Blood Pressure (Hypotension)
    2. One natural treatment for acidity is chewing a few Basil (tulsi) leaves after a meal. This not just works as an antacid as it helps the body absorb food but also prevents reflux and the formation of ulcers.
    3. Sucking a piece of Clove after meal helps in reducing acidity problem.
    4. A flake of garlic swallowed with water taken empty stomach daily in the morning can be helpful in solving many stomach & gastric problems.
    5. Headache caused by summer heat is cured by consuming watermelon juice. Just one glass a day works wonders…
    6. Eating an Apple on an empty stomach in the morning relieves one of migraine pain. This must be done for a few mornings. I have been a migraine patient for past 10 years and this one worked most for me.
    7. Open 6 dates and boil in 1/2 liter of milk for 25 minutes over low heat. Drink three cups a day. This is ultimate dry cough remedy.
    8. Mix 2 teaspoons of honey with equal quantity of ginger juice. The concoction helps to expectorate mucus, providing relief for the common cold, coughs and sore throat.
    9. Eat before breakfast half cup of cooked beets if you suffer from chronic constipation or indigestion.
    10. Ayurveda cough syrup at home. Peel and chop six medium onions. Put the pieces in a container and add four tablespoons of honey. Cover and leave them in a water bath over low heat for two hours. Strain and take one tablespoon every three hours.
    11. Grated cucumber applied over the face, eyes and neck for fifteen minutes is very much beneficial for acne and blackheads.
    12. A simple remedy for Anemia or iron deficiency - Pound 3-4 soft dates with milk and add a little ghee in it. Eating this mixture will help to prevent Anemia.
    13. Home Remedy to Cure Dark Circles- Tomato paste is one of the most effective remedies for dark circles. You can make it easily at home. Take one or two fresh tomatoes, one tablespoon of lemon juice and a pinch of gram flour and turmeric powder. Blend these ingredients nicely until they become a thick paste and apply it very gently around your eyes. Rinse it off gently with clean water after 10 or 20 minutes. Repeating this process twice or thrice every week will make your skin tone around your eyes lighter and will eventually make your dark circles go away completely.
    14. Best natural remedy for sore throat is to gargle with turmeric and salt. Mix: ½ cup of warm water ½ tsp salt ¼ tsp powdered turmeric After you gargle, don’t drink or eat anything for at least ½ hr for the salt and turmeric to do their job of killing bacteria. You can repeat this as often as you need throughout the day.
    15. A drop garlic juice into your ear helps to relieve the pain of an ear infection.
    16. A mixture of baking soda and lemon juice applied underarms will reduce body odor.
    17. Add a few fennel seeds in a pot of hot water, and then boil it for five minutes on a low temperature. Strain the solution and then drink it. You can also chew the fresh fennel leafy plants if you can bear the taste. Else you can take a mixture of fennel, cardamom and mint leaves and boil them in water to make a concoction that can help during stomach gas. This is very effective Home Remedy for Gas and Bloating:
    18. Lemon is one of the richest sources of Vitamin C on the planet and it also contains nutrients like Vitamin B, riboflavin, phosphorus, magnesium, and calcium. Lemon juice with warm water can also help eliminate waste in your system and serve as a Liver tonic. Daily intake of lemon water has several health benefits: It keeps your stomach healthy; acts as cure for nausea, heartburn, indigestion, high blood pressure, stress, and depression.
    19. When you suffer from a hangover ,a banana milkshake with honey can give you immense relief. Cold milk soothes the stomach lining and bananas with honey build up depleted blood sugar levels.
    20. Home Remedies Treatment for Cough - For severe cough, mix tulsi juice with garlic juice and honey. A teaspoon of this mixture is taken once every three hours will treat excessive coughing.


    asmi likes this.

  4. #14
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தினமும் தேவை குரோமியம்!
    ரத்தத்தில்கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதேஅர்த்தம். 1999இல் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயதுவரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் ரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில்குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.
    வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே தான் வந்துள்ளது. இதற்கு உண்மையான காரணம், நன்கு சுத்திகரிக்கப்பட்ட
    (ரீஃபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதுதான் காரணம் என்பதை கண்டுபிடித்தனர். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
    இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலை உணவில் சேருங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் இதில் ஏதேனும் இரண்டு இடம் பெறட்டும்.
    சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கேளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சீராக இருக்கும்.
    விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்வது நல்லது. இதில் குரோமியம் உப்பு உள்ளது.
    பல நோய்களுக்கு இந்தத் தாது உப்புக்குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதினரும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றையாவது அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது.


  5. #15
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்
    மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும். சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும். நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும். நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.


  6. #16
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில்ஓதுக்கினால் பல்வலி உடனே குணமாகும். பல் துலக்கி பின் தேனை ஈறு முழுவதும்தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து வாயைக்கொப்பளித்தால் பற்களில் உள்ளகிருமிகள் அழியும். தேங்காய் எண்ணெயை நாள்தோறும் பலமுறை உதட்டில் தடவினால்உதடு வெடிப்பு உதட்டு புண், தோல் உரிதல் ஆகியன குணமாகும்.

    anitprab likes this.

  7. #17
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அரிசியையும் திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாட்கள்ஊறவைத்து தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால் ஞாபக சக்திஅதிகரிக்கும். மழைக்காலத்தில் ஒரு தம்ளர் பாலில் சிறிதளவு சுக்கு பொடிகலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்துணர்வு பெறலாம். துளசி இலையைநன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்துகுடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும். அரிசிபொரியைத் தண்ணீரில்வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல்குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்துஅதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம். துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவைஇரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒருடீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம். இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பைஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும். கண்களில்நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம்பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும். தூய்மையான தாய்ப்பாலில்இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும்.மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்துரத்தம் வடிவது நிற்கும். சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப்பொடித்து, பசும்பாலில் கலந்துஉட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும். பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப்பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன்கலந்து நாள் ஒன்றுக்கு 3வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு உட்கொள்ள வேண்டும். இதனால் தொண்டை வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும். வெறும் வயிற்றில்பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியனகுணமாகும். நீர்கோவை விலகும்.

    anitprab likes this.

  8. #18
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்.!
    எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.

    * நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

    * நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

    * நல்லெண்ணைய்யை, 'இயற்கை நமக்கு அளித்த கொடை' என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம். நல்லெண்ணைய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது.

    * நல்லெண்ணைய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.

    * நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்



    anitprab likes this.

  9. #19
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

    1.
    உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

    .

    2. 1/4
    தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒருகோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்குதொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

    3.
    காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

    4.
    தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டுவரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

    5.
    அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

    6.
    கடுமையான இரும*ல் இரு*ந்தா*ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

    7.
    பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள்ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை*த்து அழு**த்*தி வரவு*ம். வ*லிகுறையு*ம்.

    8.
    சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்ககுளிக்கும் நீரில் துளசி இலைகளை போ*ட்டு குளிக்கவும். *விரை*வி*ல்தழு*ம்புக*ள் மறையு*ம்.

    9.
    குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல்மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா*ல் *விரை*வி*ல் இரும**ல்*நி*ற்கு*ம். கா*ய்*ச்ச*ல் குறையு*ம்.

    10.
    காரட் மற்றும் தக்கா*ளி*ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட*ல் வ*லிமை பெரும்.

    11.
    வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

    anitprab likes this.

  10. #20
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

    கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?

    சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவரவேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல்போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம்போலத் தோன்றும்.

    டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின்அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவதுசிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

    கண் இமைகளில் வலி.. என்ன வியாதி?

    அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
    டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில்முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?

    அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளைகுழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில்நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத்தெரிகிறது.

    டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..




    anitprab likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter