Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #191
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சப்போட்டா
    சத்துக்கள்: மாவுச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் மிக அதிகம். ஓரளவு இரும்பு, பீட்டா கரோட்டினும் மிகக் குறைந்த அளவு கால்சியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ், யூரிக் ஆசிட் சத்துக்கள் இதில் இருக்கின்றன.
    பலன்கள்: ரத்த ஓட்டத்துக்கு மிகவும் நல்லது. சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் ஓரளவு தவிர்ப்பது நல்லது. சர்க்கரை நோயாளிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


    Sponsored Links

  2. #192
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ரத்தத்தை உற்பத்தி செய்யும் மாதுளை.
    மாதுளம் பழத்தின் மருத்துவ மகிமை...
    மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.
    உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது.
    அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது, இருமலை நிறுத்துகிறது.
    இதய நோய்கள், இதய பலகீனம் நிவர்த்தியாகும்.இரத்த விருத்தி ஏற்படும். சீதபேதிக்கு மாதுளை சிறந்த நிவாரணம் அளிக்கிறது.
    தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
    ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும்.

    அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும்.
    காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும்.
    மாதுளம் பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம். மாதுளம் பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும்.
    இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கி விடும். பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரைமணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும்.
    இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒரு கிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்துக் கொண்டு மீண்டும் பாகுபதம் வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்தநோய்கள் நீங்கும். வீரிய விருத்திக்கான டானிக் ஆகும். நினைவாற்றல் பெருகும்.

    மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும்.
    மாதுளம் பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
    மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்று விடும்.
    மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்


  3. #193
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை
    பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.
    கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.
    முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
    சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.
    இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.
    எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
    முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.
    மரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள்.


  4. #194
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இதயத்துடிப்பை சீராக்கி, ரத்த ஓட்டத்தை சமப்படுத்தும் ஏலக்காய்
    ஏலக்காய் என்பது நம் அடுக்களையில் இனிப்பு காரம் என்கிற எவ்வகை உணவுக்கும் மணம் சேர்ப்பதற்குத் தான் பயன்படுகிறது என்று நம்மில் பலர் இது நாள் வரை எண்ணி வந்தோம். இந்தக் கட்டுரையின் மூலம் அதன் மகத்தான மருத்துவ குணங்களையும் நாம் தெரிந்து கொள்வோம்.
    ஏலக்காய் ஒரு அகட்டு வாய்வு அகற்றி ஆகும். வாந்தியை மற்றும் குமட்டலைப் போக்கக் கூடியது. பசியைத் தூண்ட கூடியது. அல்லது அதிகரிக்கச் செய்வது. பிடிப்பைப் போக்கக் கூடியது. அல்லது கடுப்பைக் கண்டிக்கக் கூடியது. நுண்கிருமிகளைஅழிக்க வல்லது. மூச்சிரைப்பைத் தணிக்க கூடியது.
    வயிற்றுக் கோளாறுகளைப் போக்க கூடியது. ஏலக்காயினின்று பெறப்படும் எண்ணெய் வயிற்றுக் கடுப்பைத் தணிக்க வல்லது. மேலும் கிருமி நாசினியாக விளங்கக் கூடியது. கால் பிளாடர் என்னும் பித்தப் பையைத் தூண்டி பித்தத்தைச் சுரக்கச் செய்வது.
    ஏலக்காயில் கார்போ ஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுச்சத்து, புரோட்டீன் எனப்படும் புரதச் சத்து பைபர் எனப்படும் நார்சத்து விட்டமின் சத்துக்களான விட்டமின் சி, நியாசின், பெரிடாக்ஸின், ரிபோபிளேவின், மற்றும் தயாமின் ஆகியன உள்ளன. தாது உப்புக்களான பாஸ்பரஸ், செம்பு, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் ஆகியன மலிந்துள்ளன.
    ஏலக்காயை உணவில் சேர்ப்பதற்கான காரணம் அதன் மணந்தரும் தன்மைக்காக மட்டுமல்ல அது வாயுவை வெளியேற்றக் கூடியது. செரிமானத்தை துரிதப்படுத்தக் கூடியது. குடலின் சளிப் படலத்தை குளிர்விக்கச் செய்வது, இதனால் சீரண உறுப்புகள் செம்மையாகச் செயல்பட ஏதுவாகின்றது.

    ஆயுள் வேத நூல்களின் படி ஏலக்காய் குடலிலுள்ள வாயுச் சத்தையும் நீர்ச்சத்தையும், கட்டுக்குள் வைத்து உண்ட உணவை விரைவிலும் முற்றிலுமாகவும் சீரணிக்க உதவுகின்றது என்பது தெரிய வருகின்றது ஏலக்காயில் நுண்கிருமிகளைக் கொல்லும் சக்தியும் நறுமணம் தருவதாகவும் இருக்கிறது.
    வாய் துர்நாற்றத்துக்கு முக்கியமான காரணங்களான போதிய செரிமானமின்மை மற்றும் குடற்புண்களைச் சரி செய்யும் வல்லமை ஏலக்காய்க்கு உள்ளது. வாய் துர்நாற்றத்துக்கான வேறு எக்காரணம் ஆனாலும் அவற்றைக் கண்டிக்க கூடியதும் ஏலக்காய் மட்டும் ஆகும். குடல்புண் (அல்சர்) என்பது மிகச் சாதாரணமாக இன்று எல்லோராலும் சொல்லப்படுவதாக உள்ளது.
    இது மிகத் துன்பம் தருவது மட்டுமின்றி பல அறுவைச் சிகிச்சைக்கும் நம்மை ஆளாக்குகிறது. ஏலக்காயில் உள்ள எண்ணெய்ச் சத்துக்கள் வயிற்றின் உட்சுவர் பகுதிகளுக்கு பலத்தைத் தருகிறது. மேலும் வாயினுள் ஊறும் எச்சிலை அதிகமாக சுரக்கச் செய்வதால் அமிலத்தன்மை குறைக்கப்படுகிறது.
    ஏலக்காயில் உள்ள எண்ணெய் சத்து ஒருவகை குளிர்ந்த தன்மையை உண்டு பண்ணி வயிற்றெரிச்சலைத் தணிக்கும் தன்மை வாய்ந்தது. ஏலக்காய் நுரையீரலின் ரத்த ஓட்டத்தை தூண்டிச் செம்மைபடுத்த வல்லது. இதனால் நுரையீரலைச் சரியாக இயக்கி சுவாச நாளங்களையும் ஒழுங்குபடுத்துகிறது.
    ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு, சளி, இருமல் ஆகியவற்றினின்று நிவாரணம் தருகின்றது. நெஞ்சுச் சளியைக் கரைத்து வெளித்தள்ளவும் ஏலக்காய் உதவுகின்றது. ஏலக்காயில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகியவை நிறைந்திருப்பதால் உடலுக்கு சக்தியைத் தரும் ஒரு புதையலாகக் கருதப்படுகிறது.
    உடலிலுள்ள ரத்தம், நீர்மம் திசுக்கள் ஆகியவற்றுக்கு முக்கியமான பொட்டாசியம் ஆகும். ஏலக்காயில் மிகுந்துள்ள இச்சத்து இதயத்துடிப்பை சீராக்கி ரத்த ஓட்டத்தை (பி.பி) சமப்படுத்த உதவுகின்றது. ஏலக்காயில் உள்ள செம்புச் சத்து, இரும்புச் சத்து, ரிமோபிளேவின், விட்டமின் சி, நியாஸின் ஆகியவை சிகப்பு அணுக்கள் உற்பத்திக்கு முக்கியமானவை.
    சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையிலிருந்து விடுதலை தருகிறது. இரண்டு அல்லது மூன்று ஏலக்காய்களைப் பொடித்து எடுத்துக் கொண்டு அத்துடன் சிறுதுண்டு இஞ்சி, நான்னைகந்து இலவங்கப்பூ (கிராம்பு) சிறிது தனியா (கொத்துமல்லி விதை) ஆகியவற்றை சேர்த்து அரைத்து வெந்நீருடன் உள்ளுக்குச் சாப்பிடுவதால் செரிமான மின்மைக்கும் வயிற்றை நிரப்பிய வாயு வெளியேறுவதற்கும் உதவும்.
    ஏலக்காய் டீ தலைவலியையும் போக்கும். ஒரு கப் தேனீர் எனில் வழக்கமான தேயிலை தூளைச் சற்று குறைத்து பதிலாக இரண்டு ஏலக்காய் பொடித்து சேர்த்து தேனீர் வைத்துக் குடிக்க சீரணமின்மையால் வரும் தலைவலியோடு சாதாரணமாக வரும் மன அழுத்தம் தணியும்.
    நான்கைந்து ஏலக்காயும் சிறிது புதினா இலைகளும் சேர்த்து அரை தம்ளர் நீரில் காய்ச்சி வடிகட்டிப் போதிய சுவை சேர்த்து மிதமான சூட்டோடு குடிப்பதில் விக்கல் உடனே நிற்கும்.
    வெறும் ஏலக்காயை மட்டும் நான்கு போட்டு கொதிக்க வைத்து அத்துடன் பனைவெல்லம் சேர்த்து குடிக்க தலை கிறுகிறுப்பு, வெயிலில் அலைந்ததால் வந்த மயக்கம் போகும்.
    அடிக்கடி வாயு வெளியேறுவது எனக்கு அவமானமாக இருக்கிறது என்னால் அலுவலகத்துக்குப் போகவே வெட்கமாக இருக்கிறது என்று சொல்பவர்கள் ஏலக்காய் இருக்க ஏன் அஞ்சுவது, ஏலக்காயை நன்கு காய வைத்து பொடித்து வைத்துக் கொண்டு வேண்டும்போது அரை தேக்கரண்டி பொடியை எடுத்து 150 மி.கி நீரிலிட்டு கொதிக்க வைத்து உணவு உண்ணும் முன் இதைப் பருகி வர வாயுத்தொல்லை வேறோடு வெட்டி எடுக்கப்படும்.
    குழந்தைகளுக்கு செரிமானமின்மையாலோ வேறு காரணங்களாலோ வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களைப் பொடித்து அதைத் தேனில் குழைத்து தினம் இரண்டு அல்லது மூன்று வேளை நாவில் தடவி வர உடனே வாந்தி ஆவது நிற்கும்.

    நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பிலிட்டுப் புகைக்கச் செய்து அப்புகையை நுகரச் செய்வதால் குழந்தைகளின் ஜலதோஷம், மூக்கடைப்பு குணமாகும். ஏலரிசி, சுக்கு, லவங்கம், சீரகம் இவை நான்கையும் ஓரெடையாய்க் கொண்டு பொடித்து தூளாக்கி வேளைக்கு 17கிராம் வீதம் கொடுத்து வர வயிற்று வலி குன்மம் இவை நீங்கும்.
    இரண்டு அல்லது மூன்று ஏலக்காயைப் பொடித்து அத்துடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பாலோடு காய்ச்சி போதிய சுவை சேர்த்து இரவு படுக்குமுன் குடிப்பதால் உடல் சோர்வு நீங்கி சோகையும் நீங்கும்


  5. #195
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    இது கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது
    வெண்டைக்காய் சாப்பிட்டா வெவரமாகலாம்!
    ‘புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல... முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
    வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. பின்னர் அப்படியே தனது ‘வேர் பரப்பி, இலை பரப்பி’ அரேபியா வழியாக மெல்ல...மெல்ல இந்திய மண்ணில் நுழைந்து காய்க்கத் தொடங்கியது. இதுதான் வெண்டையின் வரலாறு.
    அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொறித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி காப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் ‘பார்ட்டிகளும்’ உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்லது.
    இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.
    வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளிவருவதை உணர்ந்திருப்பீர்கள். அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால்தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது.
    காயோடு இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றும். வாய் நாற்றம் நீங்கும்.
    பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். மேலும், இதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். வெண்டைச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்ய வாழ்க்கை தரமாக இருக்குமாம்...! ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய காய் இது.
    நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைத்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால் நினைவாற்றல் பெருகும். உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக்கும். மற்றவர்கள் வாரத்தில் 3, 4 நாள் வெண்டைக்காயை சாப்பிடலாம். கிடைப்பவர்கள் தினந்தோறும் கூட சாப்பிடலாம். அட...எங்கே பைய எடுத்து கிளம்பிட்டீங்க... வெண்டைக்காய் வாங்கவா... ம்...ம்...!..


  6. #196
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி

    உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது.
    தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.
    நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை.
    உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
    நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது.

    அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.
    ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.
    ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
    ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது.
    பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்űஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது.
    பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
    உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.

    காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
    மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
    ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
    மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி.
    1-வது நாள் 1, 1, 1, -3.
    2-வது நாள் 2, 2, 2, = 6.
    3-வது நாள் 3, 3, 3, = 9.
    4-வது நாள் 4, 4, 4, = 12.
    5-வது நாள் 4, 4, 4, = 12.
    6-வது நாள் 4, 4, 4, = 12.
    7-வது நாள் 3, 3, 3, = 9.
    8-வது நாள் 2, 2, 2, = 6.
    9-வது நாள் 1, 1, 1, = 3.
    ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள்.
    இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.
    உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.

    Last edited by chan; 29th Sep 2014 at 02:24 PM.

  7. #197
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உங்கள் நாப்கின் பாதுகாப்பானதா?
    டாக்டர்.டி.ரமணி தேவி
    ஒரு பெண் பூப்பெய்துவதில் தொடங்கி மெனோபாஸ் எனும் மாதவிலக்கு நிற்கும் வரை சுமார் 17,000 நாப்கின் பேட்களை பயன்படுத்துகின்றனர் என்கிறது ஒரு சர்வே.
    'சானிட்டரி நாப்கின்களிலும் உடலுக்கு ஊறு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும் சானிட்டரி நாப்கின்களையே வாங்குவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், சானிட்டரி நாப்கின் வந்த ஆரம்ப காலத்தில், நாப்கின் தயாரிக்கப் பயன்படும் காட்டன், க்ரீம் நிறத்தில்தான் இருக்கும். அதை வெண்மை
    யாக்க 'டயாக்சின்’ என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. டயாக்சின் மிகக்குறைந்த அளவேசேர்க்கப்பட்டாலும் அது ஆபத்தானதுதான். இந்த ரசாயனம் உடலில் ஒட்டிக்கொள்ளக்கூடியது. உடலினுள் நுழையும் இந்த ரசாயனம், ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கும். இடுப்புப் பகுதியில் வீக்கம், சினைப்பைப் புற்றுநோய், நோய் எதிர்ப்புச் சக்தியை பலவீனமாக்குவது, குழந்தையின்மைக்கான வாய்ப்பை அதிகரிப்பது போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்.
    நாப்கின்கள் தயாரிக்கும் போது, செயற்கை நறுமணப் பொருட்களையும் வாசனை பொருட்களையும் சேர்க்கிறார்கள். இவை மாதவிலக்கின்போது ரத்தத்தில் கலந்து பிறப்புறுப்புப் பகுதியில் அலர்ஜியை ஏற்படுத்திவிடும்.
    நாப்கினை அதிக நேரத்துக்கு மாற்றாமல் இருக்கும்போது அதில் பாக்டீரியா உருவாகி வயிற்றுப்போக்கு, வாந்தி, அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, குளோரின் ஃப்ரீ பேட்களை பயன்படுத்தலாம். இதில் டயாக்சின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். மேலும், நாப்கின்களின் கவர் மீது 'அன் பிளீச்டு ஒன்’ என்ற முத்திரை இல்லாத நாப்கின்கள் அனைத்தும் டயாக்சின் பிளீச்சிங் செய்யப்பட்டு வந்தவையே. எனவே, நாப்கின் வாங்கும்போது இந்த முத்திரை இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும்.

    நாப்கின்னின் மேல்பகுதி சருமத்தில் படக்கூடியது என்பதால், அது பருத்தியால் ஆனதாக இருப்பது மிகமிக அவசியம். சானிட்டரி நாப்கின்களுக்கு வாலன்டரி தரக் கட்டுப்பாடு சான்றிதழ் ஐ.எஸ்.ஐ. 5405 பெற்றிருக்க வேண்டியது அவசியம். டயாக்சின் இல்லாத நாப்கின்கள் இ்ப்போது அதிகம் வரத்தொடங்கியுள்ளன. இந்த வகை நாப்கின்கள் மருந்துக் கடைகளிலேயே கிடைக்கும். பாலிகுளோரினேட்டடு டைபென்சோடையாக்சின் (Polychlorinated dibenzodioxins), பாலிகுளோரினேட்டடு டைபென்சோ ஃபியூரான் (Polychlorinated dibenzofurans) போன்றவை சுற்றுப்புறச் சூழ்நிலைக்குக் கேடு செய்யக் கூடியவை என்பதால், தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுபற்றிய விழிப்பு உணர்வு பெண்கள் மத்தியில் மிகக் குறைவே.
    நாப்கினைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அதேபோல அதை அப்புறப்படுத்துவதிலும் கவனம் தேவை. நாப்கின்களை ஒரு சிறிய பேக்கில் போட்டு டிஸ்போஸ் செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய மென்ஸ்டுரல் கப்ஸை (Menstrual Cup) பயன்படுத்துவதன்மூலம் நாப்கின்களில் இருக்கும் டயாக்சின் எமனிடம் இருந்து விடைபெறலாம். நல்ல தரமான மென்ஸ்டுரல் கப்களின் விலை ரூபாய் 700 இருக்கும்' என்றார்.
    இனி நாப்கின் பயன்படுத்தும்போது இதெல்லாம் ஞாபகத்துல வெச்சுக்குவீங்கல்ல?
    நன்றி
    டாக்டர் விகடன்


  8. #198
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!
    வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
    வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.
    வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
    பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
    வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
    1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
    2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
    3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
    4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
    5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்


  9. #199
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!
    6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
    7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
    8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
    9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
    10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.


  10. #200
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!
    11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
    12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
    13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.
    14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
    15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
    குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter