Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #221
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    · ஆரஞ்சு
    ஆரஞ்சில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பி மற்றும் பி-2 உள்ளன. இதில், சுண்ணாம்புச் சத்தும் அதிகம். பல நாள் வியாதியில் இருந்து எழுந்தவர்களுக்கு, இது இயற்கை அளித்த சத்து மருந்து.
    இரவில் துாக்கமில்லாமல் கஷ்டப்படுபவர், படுக்க போவதற்கு முன், அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட்டால், செமையாக துாக்கம் வரும்.


    Sponsored Links

  2. #222
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    · வாழை
    மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்
    பட்டவர், தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. தினமும் இரவு உணவிற்கு பின், ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால், ஜீரண சக்தி உண்டாகும்.
    கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன், தினசரி உணவில் செவ்வாழைப் பழம் வேளைக்கு ஒன்று வீதம், 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால், பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.


  3. #223
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    · பலா
    இதில் வைட்டமின் ஏ மற்றும் உயிர்ச்சத்து அதிகம். சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் ‘ஏ’க்கு, தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால், உடலில் நோய் தொற்றாது.


  4. #224
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    · பப்பாளி
    ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடியது. பல் தொடர்பான குறைபாட்டுக்கும், சிறுநீர்ப் பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி உதவும். நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை அதிகரிக்கவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை பெருக்கவும் பப்பாளி கை கொடுக்கும்.
    பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக் கிருமிகளை கொல்லும், ஒரு வகை சத்து உள்ளது. பப்பாளி பழம் சாப்பிடுபவர்களின் ரத்தத்தில், நோய் கிருமிகள் தங்குவதை அது தடுத்து விடும்.


  5. #225
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    · மாதுளை
    மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர், தொடர்ந்து மூன்று நாள் மாதுளம் பழம் சாப்பிட்டால், குணம் பெறலாம்.
    வறட்டு இருமல் உள்ளவர் தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்தம் சம்பந்தமான குறைபாட்டிற்கும் மாதுளம் பழம் ஏற்றது.


  6. #226
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கொய்யா
    எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கும். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் உண்பது நல்லது. விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால், வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால், அதை உடனே கொன்று விடும்


  7. #227
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    · அன்னாசி
    உடலில் போதிய ரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு, அன்னாசிப்பழம் சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை, சிறு சிறு துண்டுகளாக செய்து வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து, தினமும் இரவில் ஒரு டம்ளர் பாலில், ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து பருக வேண்டும்; 40 நாட்களில் ரத்தம் அதிகரித்திருக்கும்.


  8. #228
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    செலவே இல்லாத தண்ணீர் சிகிச்சை!
    உடல் இளைப்பது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது தெரியுமா? அது தான் தண்ணீர்.
    ஏதோ உணவு, சிற்றுண்டி சாப்பிடும் போது மட்டும் தண்ணீர் குடிப்பது போதாது. தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்த வேண்டும். தண்ணீர் தொடர்பான பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும். பல ஆயிரக்கணக்கில் பணம் கறந்து சொல்லித் தரப்படும் “வாட்டர் தெரபி’ உட்பட முலிகை தெரபிகளை நாம் ஏன் இப்போதே ஆரம்பிக்கக் கூடாது? நீங்கள் ஆரம்பியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள்.
    என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை குறையாது. ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும். உடல் எடையை அதிகப்படுத்திக் காட்ட இளைஞர்கள், இன்டர்வியூவுக்கு செல்லுமுன் கண்டபடி தண்ணீர் குடித்துச் செல்வர். இது சரியல்ல. உண்மையில், உடல் எடையை கூட்டிக் காட்ட தண்ணீர் பயன்படாது. அது உடலை பாதிக்கும். தினமும் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என்பது தான் உண்மை.
    உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கியத் தேவை. தண்ணீர் சாப்பிட்டால், வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி சென்று கடைசியில் வெளியேறி விடுகிறது. இப்படி செய்வதால்தான் சிறுநீரக பிரச்சினை, குடல் பிரச்சினை என்று எதுவும் வராமல் இருக்கிறது சிலருக்கு.
    ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவீதம் வரை தண்ணீர் சத்து தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒருவேளை மட்டும் பழங்களாக சாப்பிட்டால் மிகவும் நல்லது.


  9. #229
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    குளிர்பானங்களுக்கு ‘குட் பை’ சொல்லிட்டு வெந்நீர் குடித்து நிவாரணம் பெறுங்கள்!
    வெறும் தண்ணீர் மட்டுமல்ல; வெந்நீரிலும் மருத்துவ குணம் நிறையவே இருக்கிறது. சிறுநீரகத்தை பாதுகாக்க, தினந்தோறும் மூன்று லிட்டர் தண்ணீர் குடியுங்கள் என்று, தண்ணீரின் மகத்துவம் பற்றி, விழிப்புணர்வு பிரசாரம் நடக்காத இடமே இன்றைக்கு இல்லை.
    அதற்கு இணையாக, வெந்நீரும் உடல் நலத்திற்கு உகந்தது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர், மருத்துவர்கள்.


  10. #230
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    குளிர்பானங்களுக்கு ‘குட் பை’ சொல்லிட்டு வெந்நீர் குடித்து நிவாரணம் பெறுங்கள்!
    வெறும் தண்ணீர் மட்டுமல்ல; வெந்நீரிலும் மருத்துவ குணம் நிறையவே இருக்கிறது. சிறுநீரகத்தை பாதுகாக்க, தினந்தோறும் மூன்று லிட்டர் தண்ணீர் குடியுங்கள் என்று, தண்ணீரின் மகத்துவம் பற்றி, விழிப்புணர்வு பிரசாரம் நடக்காத இடமே இன்றைக்கு இல்லை.
    அதற்கு இணையாக, வெந்நீரும் உடல் நலத்திற்கு உகந்தது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர், மருத்துவர்கள்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter