Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #231
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அப்படியென்ன பலன்களை வெந்நீர் தந்து விடப் போகிறது என, சிந்திப்போருக்காக, சில விஷயங்கள் இதோ:

    வடை, பக்கோடா, பூரி என, எண்ணெயில் பொரித்த அயிட்டங்களையோ அல்லது இனிப்புகளையோ சாப்பிட்ட பின் நெஞ்சுக்குள் சிலருக்கு எரிச்சல் தோன்றும். உடனே நாம் எடுப்பது, ‘ஜெலுசில் அல்லது டைஜின்’ மாத்திரைகளை தான். ஆனால், அதெல்லாம் தேவையில்லை. ஒரு டம்ளர் வெந்நீரை எடுத்து, மெதுவாக பருகுங்கள் போதும். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போன இடம் தெரியாது.
    * உண்ட பின், சுடச்சுட வெந்நீர் குடித்தால், உடலில் அதிகப்படி சதை போடுவதை தடுக்க முடியும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வெந்நீர் கைகண்ட மருந்து. உடனடி நிவாரணம் நிச்சயம்.
    * உடம்பு வலியா? வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடித்தால் போதும். பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு நீங்கி விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்து, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்து விடும்.
    * கால் கடுக்க நின்றாலோ, அலைந்து திரிந்தாலோ, கால் பாதங்கள் வலி எடுக்கும். அதற்கும் வெந்நீர் தான் உடனடி மருத்துவம். பெரிய வாளியில், சூடு தாங்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி, அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். காலில் அழுக்கு இருக்குமானால், வெந்நீரில் கொஞ்சம், ‘டெட்டால்’ ஊற்றுங்கள்; காலில் இருந்த வலியும் போகும்; அழுக்கும் நீங்கும்.
    * வெந்நீரில், ‘விக்ஸ்’ அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு, அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பில் இருந்து விடுதலை பெறலாம். திடீரென்று தலை வலிக்கிறது என்றால், உடனே, டீ, காபியை தேடாதீர்கள். ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள். அஜீரணக் கோளாறு, குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலைவலி ஏற்படலாம்.
    * கிராமங்களில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிப்பர். உணவு கட்டுப்பாடு இல்லாமல், அஜீரணக் கோளாறுக்கு ஆளாவோர், சுக்கு வெந்நீரை வாரந்தோறும் அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
    * வீட்டில் பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
    * வெயிலில் திரிந்து விட்டு, வீடு திரும்பியதும் தாகத்தை போக்க, ஐஸ் வாட்டர் குடிக்காதீர்கள். சற்று வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்க நல்ல வழி. ஈஸ்னோபோலியா, ஆஸ்துமா போன்ற நோய்கள் இருப்போர், தாகம் எடுக்கும்போதெல்லாம் கண்டிப்பாக, வெந்நீர் தான் அருந்த வேண்டும். விருந்துகளில், செமையாக கட்டி முடித்ததும், கூல் டிரிங்க்ஸ், ஐஸ் கிரீம்ஸ் பக்கம் போகாமல், ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள்; உடம்புக்கு நல்லது.
    * ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; வீட்டு உபயோகத்திற்கும் வெந்நீரின் உதவி பெரிது. நெய், எண்ணெய் இருந்த பாத்திரங்களை கழுவும்போது, வெந்நீரில் ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இருக்காது என்பது, பெண்மணிகளுக்கு தெரியாத விஷயமல்ல.
    அதுபோலவே தரையை துடைக்கும்போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருந்தால், வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடைத்தால் கிருமிகள் மடியும்.


    Sponsored Links

  2. #232
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 சக்தி வாய்ந்த உணவுகள்!!!
    உடலின் ஆரோக்கிய சமநிலையை பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்று. அதை செய்ய சில முக்கிய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று உடலின் நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையான முறைகளில் மட்டுமே அதிகரிக்க முடியும் என்பது. இயற்கையான முறை என்றால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இரு வழிகள் மட்டுமே உள்ளது. ஒன்று உடற்பயிற்சி மற்றொன்று நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்கும் உணவுகளை உண்ணுவது. இந்தக் கட்டுரையில், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களைக் குறித்து கவனம் செலுத்தலாம் வாங்க. பாடி பில்டர் போன்று அழகான உடல் கட்டமைப்பைப் பெற உதவும் உணவுகள்!!!
    நம் உடம்பின் நோயெதிர்ப்பு சக்தி உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளை எதிர்த்துப் போராடும் வகையில் இருந்தால் பெரும்பாலான நோய்களைத் தவிர்த்துவிடலாம். உடம்பின் நோயெதிர்ப்பு சக்தி வலுவுடன் இருக்கும் போது, ஹார்மோன் மற்றும் எதிர்மறை அணுக்களை கட்டுப்படுத்தும் திறன் அதிமாக இருக்கும். இந்த குறிப்பிட்ட உணவுகளை உண்ணுவது ஆரோக்கியமாகவும், நோய்களின்றியும் வாழ சிறந்த வழியாகும். ஆரோக்கியமான தலைமுடியும், ஸ்கால்ப்பும் வேண்டுமா? அப்ப இதெல்லாம் சாப்பிடுங்க! சரி வாங்க இந்த நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் 15 விதமான உணவுகளைப் பார்க்கலாம். இவை நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்கக்கூடியவை.


  3. #233
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.


  4. #234
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது


  5. #235
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும்.


  6. #236
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா-க்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்


  7. #237
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்தக் கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்


  8. #238
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான இரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன. காளான்கள் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து மற்றும் பிற ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளையும் கொண்டுள்ளன.


  9. #239
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் உணவுகளில் அடுத்ததாக வருவதுமுட்டை. இவற்றில் பல வைட்டமின்கள், குறிப்பாக நோய்களுடன் போராடும் வைட்டமின் டி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்புகள் கொண்டது.

    Last edited by chan; 4th Oct 2014 at 03:32 PM.

  10. #240
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தேங்காய் எண்ணெயும் தேங்காயும் பெருமளவு ஆரோக்கியமான பண்புகளைக் கொண்டவை. இதிலுள்ள லாரிக் அமிலம் உடலில் சென்று மோனோலாரினாக மாற்றமடைந்து விடும். நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கவில்லை என்றால், மோனோலாரின் என்ற பொருள்தாய்ப்பாலில் அதிகம் உள்ளதுடன் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் வலுப்படுத்த உதவுகிறது.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter