Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #241
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பெர்ரி பழங்கள் இல்லாமல் சத்தான உணவு என்பது முழுமையடையாது.ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச் செய்கிறது. ப்ளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால், இவை ஆரோக்கியமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள க்ளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது.


    Sponsored Links

  2. #242
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துக்களும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது. பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள்,வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன. எனவே மேற்கூறப்பட்ட உணவுகளை தவறாமல் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டு நோய் வந்தபின் அவதியுறுவதை விட வருமுன் காப்பவர்களாக, புத்திசாலிகளாக இருங்கள்.


  3. #243
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மெட்டபாலிசத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க சில எளிய டிப்ஸ்…
    உங்கள் உடல் எவ்வளவு கலோரிகளை பயன்படுத்துகிறது என்பதையும் உண்ணும் போதும் உடற்பயிற்சி செய்யும் போது எவ்வளவு கலோரிகளை நீங்கள் எரிக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள போகிறீர்கள். மெட்டபாலிசம் என்பது கார்போஹைட்ரேட்ஸ், புரதம் மற்றும் கொழுப்புகளை உடைத்து, உங்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் செயல்முறையாகும். பானை போன்று வயிறு வர ஆரம்பிக்கிறதா? அப்ப இந்த
    உணவுகளை அதிகம் சாப்பிடுங்க… நீங்கள் இளமையாக இருக்கும் போது, தசை திணிவு ஆற்றல் திறனை சேமிக்கும். இதனால் உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும். நீங்கள் 30-40 வயதை அடையும் போது, மெட்டபாலிசம் குறைய தொடங்கி விடும். அதனால் தான் கொழுப்புகள் சேர்ந்து உடல் எடை அதிகரிக்கிறது. ஒல்லியாக விடாமல் தடுக்கும் உணவுகள்!!! இங்கு உணவு/ஊட்டச்சத்து வல்லுனராக விளங்கும் தீபாலி மைரல், மெட்டபாலிசத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க சில எளிய டிப்ஸ்களை அளித்துள்ளார். அதைப் படித்து பின்பற்றி, உடல் எடையை ஆரோக்கியமாக குறையுங்கள். கலோரிகள் உட்கொள்ளும் அளவை திடீரென ஒரே அடியாக குறைத்து விடாதீர்கள். அப்படி செய்தால் உங்கள் உடல் பட்டினி முறைக்கு செல்லும். இது மெட்டபாலிசத்தை குறைக்க தான் செய்யும். கலோரிகளை அளவை சிறிது சிறிதாக குறைத்து கொள்வதே சிறந்த டயட் வகையாகும். உங்கள் உணவில் அதிக புரதத்தை (உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை இல்லாத பட்சத்தில் மட்டுமே) சேர்த்துக் கொள்ளுங்கள். புரத செரிமானம் தான் நீண்ட நேரம் எடுக்கும். அது உடைபட்டு, தன்னியலாகி, கலோரிகள் எரிக்கப்படுவதற்கு மட்டும் கிட்டத்தட்ட 3 மணிநேரம் ஆகும். காலை எழுந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் உணவருந்தி விட வேண்டும். இதனால் அதிக பசி மற்றும் பட்டினி ஏற்படாமல் தடுக்கலாம். இப்படி உண்ணுவதால் உங்கள் மனநிலையும் ஒருமுகப்படுத்துதலும் மேம்படுத்தும். தினமும் 3 வேளை உணவும், 2 வேளை ஆரோக்கியமான நொறுக்கு தீனிகளையும் உட்கொள்ள முயற்சி செய்யுங்கள். இதனால் நாள் முழுவதும் வயிறும் நிறைந்திருக்கும்; அதே சமயம் அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். உடல் எடையை குறைக்க காபி அல்லது ப்ளாக் டீயை பருகலாம். அதற்கு காரணம் அதிலுள்ள காப்ஃபைன் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும். இருப்பினும் கூடுதல் பால் அல்லது சர்க்கரை சேர்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அப்படி செய்வதால் கூடுதல் கலோரிகளை உட்கொள்ளுதலை தவிர்க்கலாம். உங்கள் உணவில் கிரீன் டீயை சேர்த்துக் கொள்ளுங்கள். அமைதியாகும் மெட்டபாலிசத்தை 5% அளவிற்கு எழுந்திருக்க கிரீன் டி உதவும். மேலும் அதில் அதிகமாக காப்ஃபைனும் கிடையாது. மேலும் இதில் கேட்டசின்ஸ் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் ஆரோக்கியமான எடையை பராமரிக்க இது உதவும். டார்க் சாக்லெட்களிலும் கேட்டசின்ஸ் மற்றும் காப்ஃபைன் இருப்பதால் உங்கள் உடல் எடையை குறைக்க அது உதவும். ஆனால் அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். கொழுப்பையும் கலோரிகளையும் கட்டுப்பாட்டில் வைத்திட ஒரு நாளைக்கு 28 கிராம் மட்டுமே சாப்பிட வேண்டும். திருப்தியளிக்கிற உணர்வை தரும் ஹார்மோனான லெப்டின் அளவை அதிகரிக்க ஜிங்க் உதவுவதால் பசி எடுப்பது குறையும். கோதுமை, பூசணி விதை, முந்திரி பருப்பு, கீரை, மீன், காளான், சாக்லெட், மாதுளைப்பழம், பேரிச்சம் பழம், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு மற்றும் ப்ராக்கோலி ஆகிய உணவுகளில் ஜிங்க் வளமையாக உள்ளது. குடைமிளகாயில் உள்ள ரசாயனமான கேப்சைசின் காரத்தை அள்ளித் தரும். உணவு உட்கொண்ட பல மணி நேரத்திற்கு பின்னும் இந்த ரசாயனம் அதிக ஆற்றல் திறனை பயன்படுத்தும். இதனால் கொழுப்பு குறைய இது உதவும். எந்த வகையான உடற்பயிற்சியாக இருந்தாலும் செய்யுங்கள். உடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் தசைகள் விழித்துக் கொண்டு அதிக கலோரிகளை கேட்கும். இதனால் கலோரிகள் வேகமாக எரிக்கப்படும். நல்ல மனநிலையுடன் இருந்தால் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். இது உங்களை ஆக்க வளத்துடன் மாற்றும். மேலும் உங்கள் தன்னம்பிக்கையும் தனித்துவமும் கூட அதிகரிக்கும். காலை எழுந்தவுடன் ஒரு மணி நேரத்திற்குள் ஏதாவது பழத்தை சாப்பிடுங்கள். ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் நிறைந்ததாகும் பழங்கள். மேலும் உங்கள் வயிறும் நீண்ட நேரத்திற்கு நிறைந்திருக்கும். நாள் முழுவதும் கொஞ்சமான உணவுகளை மட்டுமே உண்ணுங்கள். பசிக்கும் போது சாலட், நட்ஸ் போன்றவைகளையும் ஒரு சின்ன உணவு வேளையாக மாற்றுங்கள். உங்கள் உணவில் நல்ல தரமுள்ள புரதத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். முட்டைகளையும் இறைச்சிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் சைவ உணவை உண்ணுபவர் என்றால் தானியங்கள் மற்றும் பயறுகளை ஒன்றாக சேர்த்து கிச்சடி போன்றவைகளை உண்ணலாம். சோயா, நட்ஸ், முழு தானியங்கள் மற்றும் முளைத்த பயிறு போன்ற உணவுகளில் கூட புரதச் சத்து நிறைந்துள்ளது. எப்போதுமே நீர்ச்சத்துடன் இருங்கள். அதற்கு சீரான இடைவேளையில் தொடர்ச்சியாக தண்ணீர் குடித்து வாருங்கள். தாகத்தை பசியோடு சேர்த்து குழப்பி கொள்ளாதீர்கள். உடற்பயிற்சி செய்வதற்கு முன் எதையாவது உண்ணுங்கள். வெறும் வயிற்றோடு உடற்பயிற்சி செய்தால், உடற்பயிற்சியின் போது, உங்கள் உடல் சிறிதளவிலான கலோரிகளை மட்டுமே பயன்படுத்தும். அதற்கு காரணம் உங்கள் தசைகளுக்கு நீங்கள் போதிய உணவை வழங்காததே. இதனால் சிறிது நேரத்தில் பசிக்க தொடங்கி விடும். அதனால் அதிகமாக சாப்பிடுவீர்கள். குறைவாக உண்ணுங்கள்; ஆனால் அதற்காக பட்டினி இருக்காதீர்கள். பட்டினி இருந்தால் உடல் எடை குறைப்பிற்கு நீங்கள் எடுக்கும் முயற்சி எல்லாம் வீணாகி போகும். சீரான இடைவேளையில் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். இதனால் ஒவ்வொரு முறையும் உங்கள் உடற்பயிற்சியின் தீவிரத்தில் மாறுதல் இருக்கும். உதாரணத்திற்கு, கட்டுகோப்பான உடலுக்கு நடை பயிற்சி செய்கிறீர்கள் என்றால், ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும், ஒரு நிமிடம் ஜாகிங் செய்யுங்கள். ஆரோக்கியமான உணவை உண்ணுவதாலும், உடற்பயிற்சி செய்வதாலும் மட்டும் நல்ல மெட்டபாலிசத்தை அடைந்து விட முடியாது. கூடுதலாக இரவு நன்றாக தூங்கிட வேண்டும். அதனால் தினமும் போதிய தூக்கம் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வரம்பு தான் இங்கே முக்கியமானது. எதிலும் வரம்பு மீறாதீர்கள். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதித்து விடும். அதனால் அனைத்திலும் அளவாக இருப்பது தான் நல்ல ஆரோக்கியத்திற்கும் உடல் எடை குறைப்பை வெற்றிகரமாக முடிப்பதற்குமான வாசலாகும்.


  4. #244
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வீட்டு வைத்தியம்

    அஜீரணசக்திக்கு
    அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.


  5. #245
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அம்மைநோய் தடுக்க!
    அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.


  6. #246
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அறுகம் புல்
    இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது.


  7. #247
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அம்மைநோய் வேகத்தை தணிக்க!
    பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்


  8. #248
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அகத்திக்கீரை
    உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.


  9. #249
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஆறு சுவையின் செயல்!
    காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
    கசப்பு – உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.
    இனிப்பு – உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
    புளிப்பு – இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.
    துவர்ப்பு – இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
    உப்பு – ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்


  10. #250
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அன்னாசிப்பழம்
    இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter