Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #21
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி?

    நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள்அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்தபாதிப்புக்குள்ளாகிறது.

    டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத்தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின்இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறைசெய்யவேண்டும்.

    தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி?

    இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும்தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்றுடாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

    டிப்ஸ்:அதிகப்படியான மன அழுத்தம் ஹார்ட்_அட்டாக்வருவதற்கான வாய்ப்பைஉருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.




    Sponsored Links
    anitprab and kkmathy like this.

  2. #22
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?

    உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத்தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல்போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

    டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம்.எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்தவேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

    தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி?

    கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர்போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள்நிறத்திற்கு மாறுகிறது.

    டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால்இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாகநிறுத்தி விடுவதே நல்லது.



    anitprab and kkmathy like this.

  3. #23
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி?

    சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்தஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராகஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

    டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

    பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி?

    நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப்பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன்விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும்எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

    டிப்ஸ்: பிளாக்டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக்குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூடடயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல்பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.




    anitprab and kkmathy like this.

  4. #24
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி?

    தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம்தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பிசரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களைசரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

    டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும்உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச்சந்திப்பது அவசியம்.

    சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?

    கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம்இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால்உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலைசெய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக்கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும்மிருதுவாக இருப்பதுதான்.

    டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம்சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒருமுறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.





  5. #25
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெளுத்த நகங்கள் என்ன வியாதி?

    இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போதுசின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!

    ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

    டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையைஅதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன்சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்டநாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது.





  6. #26
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?

    ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில்வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான்காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வரவாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்தவயதுக்காரர்களுக்கும் வரலாம்.

    டிப்ஸ்: உடலுக்குத் தேவையானகால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டுவலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக்குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.



    kkmathy likes this.

  7. #27
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?

    சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும்நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையானநகங்களில் குழிகள் வரக்கூடும்.

    டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

    வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி?

    பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின்அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல்இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போதுஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

    டிப்ஸ்:தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும்அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பதுநல்லது.

    சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி?

    வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண்வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லதுவைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

    டிப்ஸ்:மல்டி_விட்டமின்மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும்தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம்.
    வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி?

    உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியானநீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாகவியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

    டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்ததுஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோஅருந்துதலும் நல்ல பலன் தரும்.

    Last edited by chan; 23rd Sep 2014 at 01:41 PM.

  8. #28
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    "மரு" (Skin Tag) உதிர...
    Natural Skin Tag Remover....

    இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும்.

    இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம்.

    அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...
    அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும்.

    இதனை மரு மீது பூசவும். மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.


  9. #29
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெங்காயம் - பாதம் வைத்தியம்...!

    Raw ONION on bottom of the feet to take away illness.
    நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து உடல் சோர்வு போக்கலாம்...

    வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை உடையது.
    இங்கிலாந்தில் பிளேக் நோய் வந்த போது, காற்றில் இருக்கும் நச்சுக்களை எடுக்கவும்...அந்த நோயிலிருந்து விடுபடவும் வெங்காயத்தை அதிகம் உபயோகின்தனர்.

    NEVER SAVE AN ONION. It will absorb all the toxins in the air of your refrigerator.
    வெங்காயத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உபயோகிக்காதிர்கள். அதில் உள்ள அனைத்து நட்சுக்களையும் வெங்காயம் உறிஞ்சிக்கொள்ளும்.
    மேலும் அதனை நீங்கள் உட்கொண்டால் நச்சுக்களை உண்பதற்கு சமம்.

    நறுக்கிய வெங்காயத்தை நீங்கள் படுக்கும் படுக்கையை சுற்றிலும் வைத்துக்கொண்டால் இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருக்கும். உடல் நலம் இல்லாதவர்கள் விரைவில் குணமடைவார்கள்.

    வெங்காயம் மற்றும் வெள்ளைபூண்டு ஒரு சிறந்த நுண்ணுயிர் கொல்லியாகவும், பாக்டீரியா எதிர்ப்பாகவும் செயல்படுகிறது.

    நறுக்கிய வெங்காயத்தை உங்கள் பாதத்தின் அடியில் மற்றும் நடுவினில் வைத்து படுத்து தூங்கும்போது அதன் செயல் நேரடியாக நமது உடம்பில் வினை புரியும். உங்கள் இரத்தத்தை நன்கு சுத்தம் செய்யும் மற்றும் உங்கள் வயற்றில் இருக்கும் நட்சுக்களையும் உறிஞ்சிவிடும்.(வெள்ளைபூண்டயும் இது போல் உபயோகிக்கலாம்).

    anitprab and kkmathy like this.

  10. #30
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் ...!

    1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.

    2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.

    3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.

    4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...!

    anitprab and kkmathy like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter