Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #291
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    7. குளித்த பின்பு 45 நிமிடம் உணவு உண்ணக் கூடாது. உண்ட பின்பு குளிப்பதானால் 2.30 மணி நேரத்திற்குப் பிறகு குளிக்கவும். உணவு செரிமானமாகக் குறைந்தது 2.30 மணி நேரம் தேவையாகும். அதற்கு முன்பாக குளித்தால் உடல் வெப்பம் தணிந்து செரிமானம் பாதிக்கும். உடம்பில் எந்தச் கூழலிலும் 37 டிகிரி செல்சியஸ் அல்லது 98.4 டிகிரி பாரங்கீட் என்ற அளவில் சூடு இருக்கும். இதை டிரிபிள் வாமா் என்ற உறுப்பு செய்கிறது. குளிப்பதால் இந்த சமநிலையைப் பாதிக்கிறது. அதை சரி செய்ய மேலே சொன்ன கால அளவு தேவைப்படுகிறது


    Sponsored Links

  2. #292
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    8. ஒவ்வொரு முறை உண்ணும் முன் கை, கால், முகம் கழுவ வேண்டும். இவற்றில் உள்ள அக்கு முனைப் புள்ளிகள் தூண்டப் பெற்று அதனால் செரிமானம் நன்றாக நடைபெற உதவும்


  3. #293
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    9. உண்ண உட்காரும்போது இரு கால்களையும் மடக்கி, சம்மணமிட்டு தரையில் அமா்ந்து உண்ண வேண்டும். நாம் உண்ணும்போது இடுப்புக்கு மேல்தான் கூடுதல் இரத்த ஓட்டம் தேவைப்படும். நடக்கும்போது மட்டும்தான் கால்களுக்கு கூடுதல் இரத்த ஓட்டம் வேண்டும். சோபா, சோ், கட்டிலில் உட்காரும் போதும் கால்களை மடக்கியே உட்கார வேண்டும்.


  4. #294
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    10. ஒவ்வொரு உணவின்போதும் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும். முதல் ஏப்பம் வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்தவும்.


  5. #295
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    11. காலையில் வெறும் வயிற்றிலும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பும் இரண்டுகப் இளஞ்சூடு வெந்நீா் குடிக்கவும். சிறிது தூரம் நடக்கவும். ( இது மலச்சிக்கல், வயிறு உப்புசம் இருப்பவா்களுக்கு மலம் எளிதாக வெளியேற உதவும் ) காலையில் வெந்நீா் குடித்த அரை மணி நேரம் கழித்து காப்பி, டீ குடிக்கவும். பொதுவாக மினரல் வாட்டா் குடிப்பதை முற்றிலும் தவிற்கவும்.


  6. #296
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கல்லீரல் பற்றிய தகவல்

    ஹலோ.. நான் கல்லீரல் பேசுகிறேன்!


    நீங்கள் உங்கள் கல்லீரலை(LIVER) எவ்வளவு நேசிக்கிறீர்கள்? என்றொரு கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு நாம் அளிக்கும் பதில் என்னவாக இருக்கும்?



    கல்லீரலை நேசிக்க வேண்டுமா? எதற்காக? முழுமையாக அறியாத ஒன்றை எவ்வாறு நேசிக்க இயலும்? என்பது போன்ற பதிலே பெரும்பாலும் பெறப்படும்.



    ஒரு நபர் ஒன்றை நேசிக்க வேண்டும் எனில் அதனால் ஏதாவது உபயோகம் அவருக்கு இருக்க வேண்டும் அல்லது அதனால் இவர் நேசிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலே மனப்பூர்வமான நேசம் அதன் மீது அவருக்கு வைக்க இயலும். அந்த வகையில் நோக்கினால் ஒரு மனிதனைப் பொறுத்தவரை அவன் அவனது கல்லீரலை வாழ்நாள் முழுவதும் மிகுந்த அக்கறையுடன் நேசிக்க வேண்டும்.

    எதற்காகக் கல்லீரலை நேசிக்க வேண்டும்?. இதற்கான பதிலைக் கல்லீரலே நம்மிடம் பட்டியல் இட்டால்...? இதோ கல்லீரல் பேசுகிறது:



    ஹலோ, நான் தான் உங்கள் கல்லீரல்.... நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை ஒன்பது விதத்தில் விவரிக்கப்போகிறேன். கவனமாகக் கேளுங்கள். அதன் பின் நீங்களும் என்னை நேசிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யுங்கள்.

    1) நான் உங்களுக்குத் தேவையான இரும்பு சத்துக்களையும் இதர வைட்டமின்களையும் சேமித்து வைக்கிறேன்.

    நானின்றி நீங்கள் தொடர்ந்து செயல்படக்கூடிய சக்தியை பெற மாட்டீர்கள்.

    மனிதன் ஆரோக்கியமாக வாழத்தேவையான சக்திகள் இரும்பு சத்துக்களிலும் வைட்டமின்களிலும் நிறைந்துக் காணப்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே?. எனவே நானின்றி நீங்கள் தொடர்ந்து செயல்படக்கூடிய சக்தியைப் பெற மாட்டீர்கள்.

    2) நீங்கள் உட்கொள்ளும் உணவை ஜீரணிக்கச் செய்யும் பித்தநீரை (Bile) நானே உற்பத்தி செய்கிறேன்.

    இது இல்லையேல் நீங்கள் உட்கொள்ளும் உணவு ஜீரணிக்காமல் (அதிலிருந்து சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல்) வீணாகிவிடும். இப்பொழுது நான் இல்லையெனில் உங்கள் நிலைமையை யோசித்துப் பாருங்கள். உணவு சாப்பிட இயலாமல், வாழ்நாள் முழுவதும் குளுக்கோஸை உடலினுள் செலுத்திக் கொண்டு வாழ்வதை எந்த மனிதனாவது விரும்புவானா?

    3) நீங்கள் உட்கொள்ளும் உணவிலுள்ள விஷத்தன்மை கொண்ட ஆல்கஹால் போன்ற இதர தீமையான இரசாயன திரவங்களின் அமிலங்களை நானே சுத்தப்படுத்துகின்றேன்.

    இது போன்ற ஆபத்தான விஷ அமிலங்கள் சில நேரம் மது போன்ற போதைப் பொருட்கள் மூலமும் அல்லது சாதாரண மருந்துகள் அதிக அளவில் உபயோகிப்பதன் மூலமும் உடலில் தேங்குகின்றன.

    நான் இவற்றை முறையாக அகற்றவில்லையெனில் இவற்றால் உங்கள் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

    4) நான் உங்கள் உடல் இயங்கத் தேவையான சக்திகளை (சர்க்கரை - Sugar குளுகோஸ், கார்போஹைட்ரேட் - Carbohydrates, கொழுப்பு சத்து - Fat போன்றவைகளை..) ஒரு மின்கலன் (Battery) போல் உங்கள் தேவைக்கேற்ப சேமித்து வைக்கிறேன்.

    நான் இவ்வாறு செய்யாவிடில் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்து அளவில் குறைந்து அதனால் நினைவிழந்து கோமா (Coma) வரை கூட செல்ல நேரிடும் என்பதை நீங்கள் நினைவில் நிறுத்த வேண்டும்.

    நான் என் பணியை முறையாகச் செய்திருக்காவிட்டால் ஒருவேளை இன்று நீங்கள் உங்கள் படுக்கையிலிருந்தே எழுந்திருக்க இயலாது.

    5) நீங்கள் பிறக்கும் முன்பே உங்கள் முறையான இயக்கத்திற்குத் தேவையான இரத்தத்தை நானே உருவாக்குகிறேன்.

    நானில்லையேல் நீங்கள் இவ்வுலகில் உயிருடன் இருந்திருக்கவே மாட்டீர்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

    6) உங்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புதிய புரோட்டீன்களை (Proteins-புரதச் சத்துகள்) நானே தயாரிக்கின்றேன்.

    நானின்றி உங்கள் உடல் வளர்ச்சி பெற்றிருக்க முடியாது.

    7) நான் நீங்கள் சுவாசிக்கும் காற்றிலிருந்து வெளியேற்றப்படும் புகைகள் போன்ற நச்சுப்பொருட்களையும் அகற்றுகின்றேன்.

    நானில்லையேல், இது போன்ற கலப்பான தூய்மையற்ற காற்றின் விஷத் தன்மையினாலேயே உங்களுக்கு கேடு ஏற்பட்டிருக்கும்.

    8) நான் இரத்த உறைவுக் காரணிகளை (Clotting Factors) உருவாக்குகின்றேன். இதன் மூலமே உங்களுக்கு ஏதும் காயம் ஏற்படும் போது அந்த இடத்தில் இரத்தம் உறைந்து ஒரு தடுப்பை அது ஏற்படுத்தி தொடர்ந்து இரத்தம் வெளியேறாமல் நின்று விடுகிறது.

    உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டு தொடர்ந்து இரத்தம் நிற்காமல் ஓடினால் அதனால் நீங்கள் மரணித்து விடுவீர்கள் என்பதை நான் தனியாகக் கூற வேண்டிய அவசியமில்லை தானே?



    9) நான் உங்களைத் தாக்கும் ஃப்ளூ என்ற ஜலதோஷம் ஏற்படுத்தும் நோய்க் கிருமிகளைத் தாக்கி அழிக்க அல்லது அதனை வலுவிழக்கச் செய்கிறேன்.

    இவ்வாறு நான் செய்யாமல் இருந்தால் மனிதர்கள் அறிந்த மற்றும் அறியாத அனைத்து அற்பக் கிருமிகளின் தாக்குதலும் உங்களை நோயாளியாக்கி முடக்கி வைத்து இருக்கும்.

    இதுவெல்லாம் நான் உங்கள் மீதுள்ள நேசத்தினால் செய்கின்றேன். ஆனால், நீங்கள் என்னை அதே போல் நேசிக்கின்றீர்களா?

    நான் உங்களை நேசிக்காமல் இருந்து விட்டால் எத்தனை பாரிய ஆபத்திற்கு நீங்கள் உள்ளாவீர்களோ அதே அளவிற்கான ஆபத்தை நீங்கள் என்னை நேசிக்காமல் இருப்பதனாலும் அடைவதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளும் உள்ளன.

    என்னை நீங்களும் நேசிக்க வேண்டும் என்றதும், வெறுமனே எப்பொழுதாவது என்னை மனதில் நினைத்துக் கொண்டு "நானும் என் கல்லீரலை நேசிக்கிறேன்" என்று கூறினால் என்னை நேசித்து விட்டதாக ஆக முடியாது. உங்களை நேசிக்கும் முகமாக எந்நேரமும் மேலே பட்டியலிட்டது போன்ற முக்கியமான சில வேலைகளை நான் செய்வது போன்று நீங்களும் சில காரியங்களைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் நீங்களும் என்னை நேசிக்கின்றீர்கள் என்று பொருள். இல்லையேல் அது உங்களுக்குத் தான் ஆபத்தாக முடியும்.

    என்னை நீங்கள் நேசிக்கும் விதமாக நடக்க சில எளிமையான வழிகளை உங்களுக்கு நான் கற்றுத் தருகிறேன். கவனமாகக் கேளுங்கள் :

    1) ஆபத்தில்லை எனக் கருதிக்கொண்டு பீர் (Beer) போன்ற ஆல்கஹால் கலந்த மது பானங்களில் என்னை மூழ்கடிக்காதீர்கள்.

    சில நேரங்களில் ஒரே ஒரு முறை சிறிதளவு இவற்றை அருந்துவதும் கூட உங்களுக்கு அபாயமானதாக முடியும்.

    2) எல்லா அலோபதி மருந்துகளும் வேதி (chemicals) அமிலங்கள் கலந்தனவையே. ஆகையால் மருத்துவர் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள். நீங்களாவே எந்த ஆலோசனையுமின்றிக் கலந்து உட்கொள்ளும் சில மருந்துகள் கலவையினால், ஏதேனும் தீய நச்சுத்தன்மை உருவாகி, அது என்னை பாதிக்கச் செய்து விடலாம்.

    3) நான் மிகவும் எளிதாக காயம் ஏற்படுத்தப் படுகிறேன். இந்த காயத்தின் வடுக்கள் (Cirhossis) நிரந்தரமானவை.

    மருந்துகள் சில நேரங்களில் தவிர்க்கமுடியாதவையே. ஆயினும் பல நேரங்களில் அது தேவையற்றவை என்பதை கவனத்தில் கொண்டு மருந்துக்களை உபயோகிக்க வேண்டும்.

    4) ஏரோசால் (Aerosol) போன்ற நச்சுத்தன்மை கலந்த தூவி (Spray)களை உபயோகித்து நீங்கள் சுத்தப்படுத்தும் போது அதைச் சுவாசிக்கவும் செய்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொண்டு வீட்டை எப்பொழுதும் போதிய காற்றோடமுடையதாக வையுங்கள், அல்லது முகத்தில் திரை (mask) அணிவது அவசியம்.

    இதே போல் மூட்டைப் பூச்சிக் கொல்லி மருந்துகள், பெயின்ட் போன்ற ஏனைய இரசாயன ஸ்ப்ரேக்களையும் உபயோகிக்கும் போது அவற்றை சுவாசிக்காமல் இருக்க கவனம் செலுத்துங்கள்.

    5) தாவரங்களுக்கு உபயோகிக்கப் படும் இதர பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகிக்கும் போதும் கையுறை மற்றும் காலுறைகள் அணிந்திருப்பது அவசியம். ஏனெனில், இவை தோல்கள் மூலமும் உடலில் நுழைந்துப் பலச் செல்களை(உயிரணுக்களை)யும் தாக்கி அழித்து விடுகின்றன.

    அதே போன்று இவை அனைத்தும் காற்றில் கலந்துவிடும் விஷம் கலந்த இரசாயனப்பொருட்கள் என்பதை நினைவில் நிறுத்தி இவற்றை உபயோகிக்கும் போது முகம், தலை போன்ற ஏனைய பாகங்களையும் மாஸ்க், தொப்பிகள் போன்றவை அணிந்து மறைத்திருப்பது நினைவில் வைக்கப் படவேண்டிய ஒன்றாகும்.

    6) அதிக அளவில் அதிகமான கொழுப்புச் சத்து கலந்த உணவுகளை உட்கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான கொலெஸ்ட்ரோலைச் சரியான அளவில் நான் உருவாக்கிக் கொள்கிறேன். இதனைக் குறித்து விரிவாக சத்தியமார்க்கம்.காம் தளத்தினர் வெளியிட்டுள்ள கொல்லுமோ கொலெஸ்ட்ரோல் என்றப் பதிவினைக் கவனமாகப் படித்துப் பாருங்கள்.

    எனக்குச் சிறிது ஓய்வு கொடுங்கள். சரியான அளவில் சத்தான உணவுகளை மட்டும் உட்கொள்ளுங்கள். நீங்கள் சரியான அளவில் உணவை உட்கொண்டீர்களானால் மட்டுமே நானும் சரியாக உங்களுக்குச் சேவை செய்ய இயலும்.

    முதலாகவும் இறுதியாகவும் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை… :

    சாதாரணமாக நான் எனது கஷ்டங்களை உங்களுக்கு எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. அவ்வாறு சொல்லவும் மாட்டேன். எனக்கு ஏதாவது பிரச்சனை எனில், என்னால் இயன்றவரை அதைத் தாங்கிக் கொள்வேன். இவ்வாறு இருப்பதால் நீங்கள் நான் ஆரோக்கியமாகத் தான் இருப்பதாக நினைத்துக் கொள்வீர்கள். ஆனால் அது எனது மற்றும் உங்களது இறுதி நேரமாகவும் ஆகிவிடும் வாய்ப்புகள் உண்டு.

    நினைவில் வைக்கவும் : நான் ஒருபோதும் குறைப்பட்டுக் கொள்வதில்லை. அதனாலேயே நான் திருப்தியாளனாக உள்ளேன் எனத் தவறாக எடை போடாதீர்கள். என்னை அதிகமாக இரசாயன திரவங்கள் மூலமும் அமிலங்கள் மூலமும் பாதிக்கச் செய்தால் நான் செயலாற்ற இயலாதவாறு பாதிப்புக்குள்ளாவேன். அதனை நான் உங்களுக்கு உடனே தெரிவிக்காமல் இருப்பதனால் அதன் மூலம் உங்கள் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து விளையலாம். இதுவே நீங்கள் பெறும் எனது ஒரே எச்சரிக்கை அறிவிப்பாகவும் இருக்கலாம்.

    எனவே இத்தகைய சூழலிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள எனது கீழ்கண்ட ஆலோசனையைச் செவிமடுங்கள் :

    1. மருத்துவ ஆலோசகரிடம் என்னை முறையாக குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

    2. விசேஷ இரத்தப் பரிசோதனைகள் (blood screen test) மூலம் எனது ஆரோக்கிய நிலையை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

    3. நான் எப்பொழுதும் மிருதுவாக மென்மையாக இருப்பின் அது நல்லது. கடினமாகவோ அல்லது வீக்கமாக இருப்பது ஏதோ கோளாறு அல்லது அபாயம் என்னில் நிகழ்ந்துள்ளது என்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

    4. உங்கள் மருத்துவர் ஏதேனும் இது போன்று சந்தேகத்தைப் பரிசோதனையின் போது உணர்ந்தால் மீயொலி (Ultrasound) அல்லது கணினி உடற்கூறாய்வு (CT Scan) எனும் இதர பரிசோதனை மூலம் மேலதிக உதவி பெறலாம்.

    5. உங்கள் உயிர் நீங்கள் என்னை நடத்தும் விதத்தில் தான் நிலைத்து இருக்கிறது.


    அன்பர்களே.. இப்பொழுது உங்கள் மீதான நேசத்தில் நான் உங்களுக்குச் செய்யும் உதவிகளின் முக்கியத்துவத்தினைக் குறித்து உணர்ந்திருப்பீர்கள். தயவு செய்து நீங்களும் என்னை நல்ல முறையில் நேசத்துடனும் அக்கறையோடு பேணி நடத்துங்கள்.

    உங்கள் வாழ்க்கை எனது ஆரோக்கியத்தில் தான் உள்ளது.


  7. #297
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மிளகு
    வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.

    மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.

    மிளகில் உள்ள சத்துக்கள்:

    தாது உப்புகள்
    1. கால்சியம்
    2. பாஸ்பரஸ்
    3. இரும்பு

    வைட்டமின்கள்
    1. தயாமின்
    2. ரிபோபிலவின்
    3. ரியாசின்

    சளித் தொல்லைக்கு:
    மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

    கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.

    பற்களுக்கு:
    மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

    தலைவலி:
    மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.

    இரத்தசோகைக்கு:
    கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .

    பசியின்மைக்கு:
    ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.

    மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது


  8. #298
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    ஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிகள்
    உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.
    இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில குறிப்புகள்:
    * தினமும் ஏதாவது ஒரு பழ யூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ யூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் இனிப்பு மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். இனிப்பு சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.
    * எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
    * வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.
    * இட்லி, இடியாப்பம், அப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.
    * உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.
    * மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.
    * அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.
    * புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.
    பழங்கள் சாப்பிடும் முறை:
    * காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.
    * இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தென்பும் கிடைக்கும்.
    * சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.
    * உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
    * பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து யூசாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.
    * பழங்களை யூசாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.


  9. #299
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    · படுவேகமா உங்க எடையை குறைக்கிறீர்களா? இதோ உங்களுக்கான 10 ரிஸ்க்குகள்
    · வருடக் கணக்கில் கண்ட கண்ட ஜங்க் உணவுகளை சாப்பிட்டு தங்கள் உடம்பை ஏற்றி வைத்திருக்கும் சிலர், ஒரே வாரத்தில் எடையைக் குறைக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.
    · ஆனால் இதனால் ஏற்படும் ரிஸ்க்குகளையும் பக்க விளைவுகளையும் அவர்கள் அறியாமல் போய்விடுவார்கள். உடல் எடையைக் குறைப்பதற்காகக் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதால் பல்வேறு பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
    · மேலும் திடீரென்று எடை குறைவதால் அவர்களுக்கு மோசமான மன அழுத்தங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பொறுமையாகக் கையாள வேண்டிய எடை குறைப்பு விஷயத்தில், நீங்கள் அவசரப்படுவதால் சந்திக்க நேரிடும் 10 ரிஸ்க்குகள் குறித்த விவரங்கள் இதோ...
    · வேகம் விவேகமல்ல விரைவான எடை குறைப்பு நிரந்தரத் தீர்வைத் தராது. எடை குறைப்பு என்ற அந்தத் திடீர் மாற்றத்தை உங்கள் உடம்பால் தாங்க முடியாது. எனவே, அதே வேகத்தில் உடம்பில் மீண்டும் எடை அதிகமாவதற்குத் தான் வாய்ப்புள்ளது.
    · நீர்ச்சத்து குறையும் நீங்கள் வேகமாக உடல் எடையைக் குறைக்கும்போது, உங்கள் உடம்பில் உள்ள நீர்ச்சத்தும் படுவேகமாகக் குறைய ஆரம்பிக்கும். இப்படிச் செய்வதால் மயக்கம், கிறுகிறுப்பு, இதய வியாதிகள் ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது.
    ·
    · தசைகளும் பாதிப்படையலாம். மேலும் நீர்ச்சத்து குறைந்தாலே எடையும் நன்றாகக் குறைந்து விடுமே என்ற டெக்னிக்கையும் சிலர் உபயோகிக்க நினைப்பார்கள்.
    · ஆனால் அது கெடுதல்தான்! குறைந்த நீரை உங்கள் உடம்பு இயற்கையாகவே மீண்டும் விரைவாக சுரந்து மீட்டுக் கொண்டு விடும். இதனால் உடல் எடை மீண்டும் அதிகரிக்கத் தான் செய்யும்.
    · தூக்கம் குறையும் வேகமாக எடை குறைப்பதற்கான கடும் உடற்பயிற்சி காரணமாக உங்களுக்கு வேகமாகக் களைப்பு ஏற்பட்டு விடும். உடம்பில் கலோரிகளும் மளமளவென்று குறைந்துவிடும். இதனால் சரியான நேரத்தில் உங்களால் தூங்க முடியாது. களைப்பு இருப்பதால் சரியாகத் தூங்கவும் முடியாது.
    · பித்தக் கற்கள் உருவாகும் உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்புக்கள் பித்தப் பையில்தான் சென்று சேரும். இந்நிலையில் வேகமாகவும் கடுமையாகவும் உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யும்போது, பித்தக் கற்கள் நிறைய உருவாகி விடும். இது வயிற்றின் உள் பகுதியைப் படிப்படியாக சேதமாக்கும் ஆபத்து உள்ளது.
    · உடலில் சத்து குறையும் வேகமாக எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, கடுமையாக டயட்டில் இருக்க முயற்சிப்பீர்கள். இதனால், உங்கள் உடம்புக்குத் தேவையான எல்லாப் பொதுச் சத்துக்களும் மளமளவென்று குறைந்துவிடும்.
    · மன அழுத்தம் அதிகரிக்கும் கண்ட உணவுகளையும் விதவிதமாகச் சாப்பிட்டு வந்த நீங்கள், உடல் எடையைக் குறைப்பதற்காக அவற்றையெல்லாம் திடீரென்று நிறுத்தி விடுவீர்கள்.
    · இந்தத் திடீர் உணவுக் குறைப்பால் கார்ட்டிசோல் எனப்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். இது உங்களைக் கடுமையான மன அழுத்தத்தில் கொண்டு போய் விடும்.
    · முடி உதிரும் விரைவான உடல் எடைக் குறைப்பின்போது சத்துக்கள் குறைவதால், அவற்றில் ஒன்றான புரதச் சத்தும் குறைந்து விடும். இதனால் முடி வளர்ச்சியும் நின்று போவதோடு மட்டுமல்லாமல், அவை கடுமையாக உலரவும் உதிரவும் தொடங்கும்.
    · கொழுப்பு அதிகரிக்கும் எடை குறைவதற்காக நீங்கள் உணவுகளையும் குறைக்க ஆரம்பிப்பீர்கள். இதனால் உணவுப் பொருள்களை உங்கள் உடம்பு தானாகவே சேகரிக்க ஆரம்பித்து விடும்.
    · அவ்வாறு தேங்கும் உணவுப் பொருள்கள், கொஞ்சம் கொஞ்சமாகக் கொழுப்பாக மாறி அதிகரிக்கும். கொழுப்பு அதிகரிக்க, உடல் எடையும் தானே அதிகரிக்கும்!
    · மெட்டபாலிசம் பாதிப்படையும் உணவுகளைக் குறைப்பதால், உங்கள் உடம்பு மெட்டபாலிக் ரேட்டுகளையும் குறைத்து விடும். ஒரு வழியாக டயட் முடிந்து இயல்பாகச் சாப்பிட நீங்கள் முயலும் போது, குறைவான் மெட்டபாலிக் ரேட் காரணமாக மீண்டும் எடை கூடத்தான் செய்யும். இதனால் மீண்டும் டயட்டுக்கு முயற்சிப்பீர்கள். இது மெட்டபாலிக் ரேட்டை இன்னும் அதிகம் பாதிக்கும்!
    பலவித உபாதைகள் ஏற்படும் வேகமான எடைக் குறைப்பிற்காக தேவையான சத்துக்களைக் குறைப்பதால், பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படக் கூடும். தசைகள் வீக்காகும்; அனீமியா ஏற்படும்; மலச்சிக்கல் உருவாகும். இவற்றைச் சரி செய்யவில்லை என்றால், உங்கள் உடல் நலத்திற்கு மேலும் பல பாதிப்புகள் ஏற்படும்


  10. #300
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    · கலப்படம், கலப்படம், எங்கும் எதிலும் கலப்படம்..
    · "கலப்படம், கலப்படம்,
    எங்கும் எதிலும் கலப்படம்,
    அதை எடுத்துச் சொன்னாலே புலப்படும்"
    மேற்சொன்ன வரிகள் கலைவாணர் என்.எஸ்.கே. ஒரு படத்தில் பாடிய வரிகளாகும்.
    அவரது வார்த்தைகள் இன்று நூற்றுக்கு நூறு பொருந்துவதாகும். அதன்படி நாம் ஒவ்வொரு பொருளிலும் உள்ள கலப்படத்தைப் பற்றி சொன்னால் எழுதிக் கொண்டே இருக்கலாம். எத்தனை இதழ் போட்டாலும் காணாது. ஆகவே அதில் சிலவற்றை மட்டும் காண்போம்.

    கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் காணபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
    E 322 – எருது
    E 422 – ஆல்கஹால்
    E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
    E 471 – எருது & ஆல்கஹால்
    E 476 – ஆல்கஹால்
    E 481 – எருது & கோழி
    E 627 – ஆபத்தான கெமிக்கல்
    E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
    E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.

    Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter