Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree917Likes

Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!


Discussions on "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #331
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    தலைவலி தீர
    ஒரு கைப்பிடி துளசி இலை மூன்று மிளகு, 1 துண்டு இஞ்சி எடுத்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.


    Sponsored Links

  2. #332
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    கண்நோய்கள் தீர
    துளசி இலை ஊறிய நீரை 1 மண்டலம் அருந்தி வந்தால் முக்குற்றங்களில் ஒன்றான பித்த அதிகரிப்பு குறையும். இதனால் கண் நரம்புகளின் சூடு குறைந்து நரம்புகள் பலப்படும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது.
    சரும நோய்கள் நீங்க
    தேமல், படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சரும நோய்கள் நீங்கும்.
    துளசி இலைக்கு உள்ளத்தைத் தூய்மையாக்கும் குணமும் உண்டு


  3. #333
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வெப்பம் தணிக்கும் வெண்டை

    வெயில் காலத்தில் நீர்ச்சத்துள்ள பழங்களையும், பானங்களையும் தேடி உட்கொள்ளும் நாம் நீர்ச்சத்துள்ள, மருத்துவ குணங்களை உள்ளடக்கிய சில காய்களை சாதாரணமாக எண்ணி தவிர்த்துவிடுகிறோம். இதனால் எளிய மருத்துவ குணமுள்ள காய்களினாலேயே பல மருத்துவ பலன்களை பெறமுடியால் போய்விடுகிறது.
    கோடையில் உடல் மற்றும் சுற்றுப் புற வெப்பம் அதிகரிப்பதால் இயல்பாகவே கண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், தோல் மற்றும் உதடு வறட்சி உண்டாகிறது. மேலும் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் நீர் மற்றும் உப்புச் சத்துக்கள் குறைந்து ஒருவித சோர்வும், உடல் முழுவதும் சூடாக இருப்பதுபோன்ற உணர்வும் ஏற்படுகிறது. மியூசிலேஜ் எனப்படும் ஈரப்பதம் நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் உட் கொள்வதால் நமது உடலின் நீர்ச்சத்து விரயமாவது தடுக்கப்படுகிறது. செல்களிலுள்ள திரவமும், செல்லைச் சுற்றியுள்ள திரவமும் சமச்சீரான நிலையை அடைவதால் உடலின் வெப்பம் தணிந்து, எப்பொழுதும் குளுமையாக உணர்கிறோம்.
    உடலின் நீர்ச்சத்தை நிலைநிறுத்தி வைக்கும் பலகாய்கள் ருசியாக இல்லாததால் அவற்றை தவிர்த்துவிடுகிறோம். ஆனால், நீர்ச்சத்து நிரம்பிய காய்களில் நார்ச்சத்தும் அதிகம் காணப்படுவது அறிவியல் பூர்வமான உண்மை.
    இதனால் இருவிதமான பலன்கள் கிடைக்கின்றன. முதலாவதாக உடலின் திரவ சமநிலை நிலைப்படுத்தப் படுவதுடன் நார்ச்சத்துள்ள உணவுகளினால், குடல் மற்றும் மலவாய்ப் பகுதிகள் சுத்தமடைகின்றன. மலச்சிக்கல் மற்றும் மலக்கட்டு நீங்குகின்றன. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. அவற்றிலுள்ள நார்ச்சத்து இறுகலான மலத்தை இளக்கி மலம் கழித்தலை எளிதாக்குகிறது.
    ஏபிலோமோசஸ் எஸ்குலன்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த பிஞ்சு வெண்டைக்காயே, மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. இவற்றில் அடங்கியுள்ள குர்சிட்டின், ஹைப்பரின், புரோ ஆன்தோசயனிடின், டிகுளோக்கோரனிக், கேலக்டோரோனிக் அமிலம் ஆகியன செல்களின் திரவ இழப்பை கட்டுப்படுத்தி, குடல் மற்றும் சதைப்பகுதிகளில் ஈரப்பதத்தை பாதுகாக்கின்றன. முற்றாத பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டுவர புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிராம்பாசிடிவ் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்காய்க்கு உண்டுஎன நிரூபிக்கப்பட்டுள்ளது. முற்றிய வெண்டைக்காயை அதிகம் உட் கொண்டால் மலம் மிகவும் இளக்கமாகி, கழிச்சல் உண்டாகும். ஆகவே நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் வெண்டைக்காயில் முற்றாத பிஞ்சுக்காயே சமையலுக்கும் மருந்துக்கும் உகந்ததாகும். பிஞ்சு வெண்டைக் காயை நன்கு கழுவி, நுனி மற்றும் காம்பை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நாட்டுச்சர்க்கரை 2 பங்கு சேர்த்து, பிசைந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து தினமும் 6 முறை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியடையும். சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல், தோல் வறட்சி, மலவாய் எரிச்சல் நீங்கும்.
    கோடைக்காலத்தில் அக்குள், மலவாய்பகுதி, முதுகு, தொடை போன்றவற்றில் ஏற்படும் கட்டிகளை கரைக்க பிஞ்சு வெண்டைக்காயை நன்கு அரைத்து, லேசாக வதக்கி, கட்டி உள்ள இடங்களில் தடவிவர கட்டிகள் உடையும். பெண்களுக்கு அதிகம் உடல் உஷ்ணத்தினால் மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை, 2 முதல் 5 கிராமளவு சாப்பிட்டுவர வேண்டும். பிஞ்சு வெண்டைக்காயிலுள்ள வேதிச்சத்துக்கள் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக்கட்டிகளை தடுக்கும் தன்மை உடையதால் அடிக்கடி உணவுடன் சேர்த்து உட்கொண்டுவர மூளை செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கலாம். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, ஞாபகசக்தியை நீடிக்கச் செய்யலாம்


  4. #334
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    உடலை குளிர்விக்கும் `பசலை’

    பசலை ஒரு கொடிவகைத் தாவரம். இந்த கீரையை வீட்டில், தோட்டத்தில் வளர்க்கலாம். ஆறு அங்குல நீளமுள்ள இதன் கொடித்தண்டை நறுக்கி, வேலி ஓரத்தில் அல்லது மரங்களின் அருகில் நட்டு வைத்தால், விரைவில் துளிர்விட்டு கொடியாக வளரும். பந்தலிலும் படர விட்டு வளர்க்கலாம்.
    கொடிபசலைக் கீரையின் இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, பொடியாக அரிந்து சமைத்து சாப்பிடலாம். இலைகளை அவித்து, வெள்ளைபூண்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து கடைந்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
    இதில் புரதம், கொழுப்பு, மாவு பொருட்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரைபோபிளாவின், நியாசின், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளன.
    இக்கீரை உடல் சூட்டை தணித்து, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். கோடை காலத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால், கோடை நோய்கள் நம்மை அண்டாது.
    ஏதாவது ஒரு வழியில் இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது. நன்கு பசி உண்டாகும். இக்கீரையில் இரும்புச்சத்து இருப்பதால் ரத்த விருத்தி ஏற்படும். இதன் இலைகளை அவித்து, பூண்டு, சீரகம், பெருங்காயம், உப்பு, மிளகு சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் குடல் கோளாறுகள் சீராகும்.
    கொஞ்சம் பசலை இலையோடு மாதுளம் பிஞ்சை வைத்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம், முன்று வேளையும் சாப்பிட்டு வர சீதபேதி நன்கு குணமாகும். இதன் இலையுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து அரைத்து வேக வைத்துச் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு மாறும், குரல் வளம் பெறும்.
    மேலும் இக்கீரையில் `வைட்டமின் சி’ சத்து உள்ளதால் கண்பார்வை அதிகரிக்கும். இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர காமம் அதிகரிக்கும். ஆண், பெண் இருவருக்கும் உள்ள சாதாரண மலட்டுத் தன்மையை நீக்கும் ஆற்றலும் கொண்டது. சளித் தொல்லை உள்ளவர்கள் இக்கீரையை தவிர்க்கவும்.


  5. #335
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    அற்புதங்கள் செய்யும் ஸ்ட்ராபெர்ரி

    கோடைகாலத்தில் வெயிலை விட பழங்களின் விலை கடுமையாக உயர ஆரம்பிக்கும். ஏனெனில் தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் ஏராளமான நார்ச்சத்துகள் நிறைந்துள்ள பழங்களே நமக்கு பெரிதும் உதவுகின்றன. பழங்களில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இவை பிரி ரேடிக்கல் எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றன. ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை சில குறிப்பிட்ட பழங்களிலேயே அதிகமாக காணப்படுகின்றன. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும் பாலும் ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும்.
    நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும். உதாரணமாக பிற உணவுகளில் குறைந்தளவே காணப்படும் அல்லது அரிதாக காணப்படும் வைட்டமின்-பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற பொருட்கள் உணவுப் பாதையை சீர் செய்து, ரத்த செல்களை ஒழுங்கு செய்து, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள்சீராக இயங்கவும், நுண்ணிய ரத்தக்குழாய்களில் அடைப் பின்றி ரத்த ஓட்டம் செல்லவும் பயன்படுகின்றன. இவை குறைபாடாக நமக்கு கிடைப்பதால் பலவித பற்றாக்குறை நோய்கள் உண்டாகின்றன. ஆகவே நாம் இது போன்ற சிறப்பான சத்துகள் நிறைந்த பழங்களை அடிக்கடி உட் கொண்டால் பலவிதமான நோய்கள் நம்மை அணுகாமல் காத்துக் கொள்ளலாம்.
    ஏராளமான வைட்டமின்களையும், பலவகையான தனிக சத்துக்களையும், ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ள வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் உயர்ந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள், கோடைக்காலத்தில் பெருமளவு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் மருத்துவ குணத்திற்காக இவை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. சுகந்த மணத்தையும், கருஞ்சிவப்பு நிறத்துடன், கண்களை பறிக்கும் அழகுடன் காணப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உலகம் முழுவதும் பயிர் செய்யப்படுகின்றன. தரம் உயர்ந்த இயற்கை முறையில் பயிர் செய்யப்பட்ட ஸ்ட்ராபெர்ரி பழங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    பெரோஜிரியா அனானாசா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ளன.
    5 பழங்களில் 250மிலி அளவில் தயார் செய்து குடிக்கும் பழச்சாற்றில் 40 கலோரிகள் சத்தும், பல்வேறு வகையான பிளேவனாய்டுகளும் நமக்கு கிடைக் கின்றன. இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவு னூட்டியாகவும், நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.
    ஸ்ட்ராபெர்ரி பழங்கள் 10, உரித்த ஆரஞ்சு சுளைகள் 10, பழுத்த, உரித்த நாட்டு வாழைப்பழம் 4, சீனி அல்லது நாட்டுச்சர்க்கரை 50 கிராம் ஆகியவற்றை எடுத்து தேவையெனில் நெல்லிக்காய் சாறு 100 மிலி சேர்த்து நன்கு அரைத்து பழச்சாற்றை பிழிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவையெனில் சற்று நீர் சேர்த்து இளக்கமாக அரைக்கலாம். ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்த பழச்சாறு ஒரு சிறிய குடும்பத்திற்கு போதுமானதாகும். கோடைகாலத்தில் அடிக்கடி இந்த பழச்சாற்றை குடித்து வந்தால் தோல் வறட்சி நீங்குவதுடன், வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட குளிர்பானங்களை உட்கொண்டு பல் எனாமல் தேய்ந்து, பற்களில் கறை ஏற்படுவதையும் தவிர்க்கலாம். மேலும் ஸ்ட்ராபெர்ரியிலுள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன.


  6. #336
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    வாழ வைக்கும் வாழைத்தண்டு!

    வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
    வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது முன்று அவின்சு வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால், அடிக்கடி வரும் வறட்டு இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குள் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.


  7. #337
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மூச்சுக்காற்றே மூலதனம் ...

    காலையில்முழித்த முகம் சரியில்லை!

    எடுத்தகாரியம் எதுவும் நடக்கவில்லை! என்று அலுத்துக் கொள்வோர்களும், இன்றைக்குக்கழுதை முகத்தில் முழித்திருப்பான் போலிருக்கிறது!

    அதிர்ஷ்டக்காரன், அவனுக்குஅடித்தது, யோகம்என்று வியந்து போவோரும் இருக்கின்றார்கள்.

    ஆனால், காலையில்தூங்கி எழும்போதே அன்றைய தினம் எப்படி இருக்கும்! எப்படி இருந்தால் தனக்கு நன்மை உண்டாகும்என்பதை அறிந்து செயல்படுபவர்கள் குறைவு.

    நாம் நமது மூக்கின் வழியாக விடுகின்ற மூச்சுக்காற்றுநம்மை ஆக்குகின்றது. நம்மை ஆள்கின்றது.

    நம்மை வழி நடத்துகின்றது.

    நம்மைப் பற்றியும் நம் உடம்பைப் பற்றியும்முன்னறிவிப்பு செய்யும் மணியாக மூக்கையும் மூச்சையும் குறிப்பிடலாம்.

    படுக்கையிலிருந்து எழ வேண்டிய நேரம் அதிகாலை 4.00 மணி. 4.00 மணிஎன்பது மிகவும் முக்கியமான நேரமாகும்.

    அதிகாலை 4.00 மணிக்குஎந்த நாசிப்பக்கமாக மூச்சு வெளிவருகிறது என்பதைக் கவனித்தால், அன்றையபொழுதில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    மூக்கிலிருந்து வெளிவருகின்ற மூச்சு முறையாக இல்லாமல்தாறுமாறாக இருக்குமேயானால், மதங்கொண்ட யானையைப் போல் தாறுமாறாக நடந்து இன்பங்களைஇழந்து துன்பங்களைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டியிருக்கும்.

    ஒவ்வொரு நாளும் நாம் விடுகின்ற மூச்சு, மூக்கின்இரண்டு நாசிகளில் ஒரு பக்க நாசியில் வெளி வர வேண்டும்.

    மூக்கில் விடுகின்ற மூச்சுக்காற்று முறையாக வெளிவரமுதலில் இடது பக்கத்து நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து வலது பக்க நாசி வழியாகவெளியிட வேண்டும்.

    அடுத்து, வலதுபக்க நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து இடது பக்கத்து நாசி வழியாக வெளியிட வேண்டும்.

    இவ்வாறு, காலையிலும்மாலையிலும் 21 முறை செய்து பழக வேண்டும்.

    அவ்வாறு செய்தால், மூக்கிலும்மூச்சுக் குழாயிலும் நுரையீரலிலும் உள்ள அடைப்புகளும், சளியும்வெளியேறிவிடும்.

    அதன் பின் மூச்சுவிடுவது இயல்பாக இருக்கும்.





  8. #338
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மூச்சுக்காற்றே மூலதனம் ...
    அடுத்ததாக, அதிகாலையில்விழித்தெழுந்து மூக்கில் எந்த நாசி வழியாக மூச்சுக்காற்று வெளியே வருகிறது என்றுபார்க்க வேண்டும்.

    அதிகாலையில் எந்தப்பக்கத்து நாசி வழியாக மூச்சுக்காற்று வெளிவருகிறது என்பதைக் கொண்டு, அன்றையதினம் நமது உடம்பு எவ்வாறு இருக்கும் என்பதை முன்னரே அறிந்து கொள்ளலாம்.

    வலது நாசி என்பது சூரிய கலை.

    இடது நாசி என்பது சந்திர கலை.

    ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு அன்றையபொழுதின் உடல் நலம் தொடங்குகிறது.

    அன்றைய பொழுதின் உடல் நடத்தை அதிகாலையிலேயேகண்டறிந்து கொண்டு, அதற்கு வேண்டிய மாற்ற நடவடிக்கைகளைச் செய்து கொண்டால், தலைக்குவந்தது தலைப்பாகையோடு போனது போல, அதிகாலையிலேயே முடிந்துவிடும்.

    எப்படியென்றால், வாரநாள்களில் திங்கள், புதன், வெள்ளிஆகிய இம்மூன்று நாள்களில் அதிகாலை நான்கு மணியிலிருந்து காலை ஆறு மணி வரை இடதுபக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.

    ஞாயிறு, செவ்வாய், சனிஆகிய இம்மூன்று நாள்களில் வலது பக்க நாசி வாயாக மூச்சு வெளிவர வேண்டும்.

    வார நாள்கள் எனில் வியாழக்கிழமை மிகவும் முக்கியமானநாளாகும்.

    மற்ற ஆறு நாள்களைப்போல வியாழக்கிழமையில் மூச்சு விடமுடியாது.

    வியாழக்கிழமை அன்று பௌர்ணமியாக இருந்தால், அதிகாலைநான்கு மணிக்கு இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.

    வியாழக்கிழமை அன்று அமாவாசையாக இருந்தால் இடது நாசிவழியாக மூச்சு வெளிவர வேண்டும்.

    இவை இரண்டும் இல்லாமல் வளர்பிறையாக இருந்தால் இடதுபக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.

    தேய்பிறையாக இருந்தால் வலது பக்க நாசி வாயாக மூச்சுவெளிவர வேண்டும்.

    மேலே கூறியது கூறியவாறு மூச்சு வெளிவந்துகொண்டிருந்தால் அந்த ஏழு நாள்களும் உடல் நலமும் மன நலமும் சீறாக இருக்கும்.

    எவ்விதமான நோய்நொடிகளும் அண்டாமல் இருக்கும்.





  9. #339
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மூச்சுக்காற்றே மூலதனம் ...
    அதற்குமாறாக, நடந்தால்என்ன நடக்கும் என்பதைக் காண்பதற்கு முன் ஒரு சிறிய இடைவேளை.

    ஞாயிறு அன்று காலையில் வலது பக்க நாசியில் மூச்சுவெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், தலைவலி, சளி, இருமல், ஈளை, மூச்சடைப்புநோய்கள் உருவாகும்.

    திங்கள் அன்று காலையில் இடது பக்க நாசியில் மூச்சுவெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவந்தால், ஜலதோசம், ஆஸ்துமா, தும்மல்நோய்கள் உண்டாகும்.

    செவ்வாய் அன்று காலையில் வலது பக்க நாசியில் மூச்சுவெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூசு வெளிவந்தால், காய்ச்சல், கண்எரிச்சல், நெஞ்செரிச்சல், பித்தமயக்கம் ஆகியவை ஏற்படும்.

    புதன் அன்று காலையில் இடது பக்க நாசி வழியாக மூச்சுவெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், உடல்வலி, கைகால்குடைச்சல், மூட்டுவலி, நீரேற்றம், தலைக்குத்தல்போன்ற நோய்கள் உருவாகும்.

    வியாழக்கிழமை நாளில் பௌர்ணமி, அமாவாசை, வளர்பிறை, தேய்பிறைஆகியவை இருந்தால், முறையே இடது நாசி, வலதுநாசி, இடதுநாசி, வலதுநாசி ஆகிய நாசி வழியாக மூச்சு வெளிவரவேண்டும்.

    அதற்கு மாறாக வெளிவந்தால், அடிவயிற்றில் நோயுண்டாகும்.

    பெண்களுக்குக் கருப்பைக் கோளாறு ஏற்படும். மலட்டுத்தன்மை உருவாகும்.

    இல்லற உறவு கசந்து போகும்.

    வெள்ளி அன்று காலையில் இடது பக்க நாசி வழியாக மூச்சுவெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், கண்வலி வரும். கண் நோய் உண்டாகும். பார்வை குறையும்.

    சனி அன்று காலையில் வலது பக்க நாசி வழியாக மூச்சுவெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், குளிர்கரம், சருமநோய், குட்டம்போன்ற நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு.

    மூக்கின் வழியாக வருகின்ற மூச்சுக்காற்று தடம் மாறிநடந்தால் உடல்நலம் மட்டுந்தான் பாதிக்கும் என்றில்லை. மன நலமும் பாதிக்கும்.

    மன நலத்தில் ஏற்படுகின்ற பாதிப்பினால், உற்றார்உறவினர்களுடன் பழகும் பழக்கங்களும் பாதிக்கும். அதனால், உறவுமுறிவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.





  10. #340
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips!

    மூச்சுக்காற்றே மூலதனம் ...
    வாரநாள்களில் விடுகின்ற மூச்சுக்காற்று தடம்மாறினால் உடல் நலத்தில் குறைபாடுகளும்நோய்களும் உருவாகி, அவற்றின் ஆதிக்கத்தினால் உடல் நலம் பாதிக்கும்.

    உறவும் தொழிலும் உடன்படாமல் எதிர்மறையாகச்செயல்படும்.

    கசப்பும் இழப்பும் வாழக்கையைத் தடம் புரளச்செய்துவிடும்.

    இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணமானதுமூச்சுக்காற்று.

    அது, நாள்தோறும் விடியற்காலையில் எவ்வாறு இயங்குகிறதுஎன்பதைக் கொண்டு அன்றைய பொழுதின் ஆரோக்கியத்தை, மனவளத்தை அறிந்து கொள்ளலாம்.

    மூச்சுக்காற்று எந்த நாசியில் இயங்குகிறது என்பதைக்கண்டறிந்து அன்றைய பொழுது எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்வதுமட்டும் உடல் நலத்தைப் பேணுவது ஆகாது.

    தீங்கும் தீமையும் வரப்போகிறது என்றறிந்து கொண்டுவருவது வரட்டும்!

    ஒரு கை பார்த்துக் கொள்ளலாம்! என்றிருப்பதுஅறிவுடமையுமாகாது. எந்தச் செயலுக்கும் ஒரு மாற்று இருப்பதைப் போல, எல்லாவற்றுக்கும்தீர்வு என்பது இருக்கும் என்பதை உணர்ந்து அந்தத் தீர்வு என்ன என்று அறிய முற்படவேண்டும்.

    மூச்சுக்காற்று அதன் இயல்புக்கு மாறாகநடக்கத்தொடங்கும் போதே அதனை மாற்றுவதற்கான தீர்வைச் செய்து முறையாக இயங்கச் செய்யவேண்டும்.

    அப்படிச் செய்தால் தீங்கும் தீமையும் நீர்த்துப்போகும்.
    கிழமைக்கு ஏற்றவாறு நாசியின் வலப்புறமோ அல்லதுஇடப்புறமோ இயங்குகின்ற மூச்சானது, சுமார் ஒரு மணி நேரம் வரை இயங்கிவிட்டு அடுத்தநாசிக்கு மாறிவிடும்.

    அதிகாலை நான்கு மணி என்பது அன்றையப் பொழுதின் தொடக்கநேரம் என்று முன்னரே சொன்னோம். அந்த நேரத்தைக்குறிப்பிடவே 'வைகறைதுயில் எழுஎன்று கூறப்பட்டுள்ளது.

    சூரியகலை சூரியனின் ஆதிக்கத்தில் இயங்குகிறது.
    இது வெப்பமானது.

    சந்திரகலை சந்திரனின் ஆதிக்கத்தில் இயங்குகிறது.
    இது குளிர்ச்சியானது.

    குளிர்ச்சியும் வெப்பமும் உடலுக்குத் தேவை என்பதால்அவை இரண்டும் மாறி மாறி இயங்கி உலைப் பாதுகாக்கின்றன.

    வெப்பம் மிகுந்தாலும் நோயாகும். குளிர்ச்சிமிகுந்தாலும் நோயாகும். அவை இரண்டும் சம அளவில் இயங்கிக் கொண்டிருந்தால், அல்லதுஇயங்கச் செய்து கொண்டிருந்தால் நோய் என்னும் பேச்சுக்கே இடமில்லை.

    அதிகாலையில் எழுந்திருந்த காலைக்கடன்களை முடித்துவிட்டு, முகத்தைச்சுத்தம் செய்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறிக் கொள்ள வேண்டும்.

    அதன் பின்னர், நாசிக்குக்கீழே கையை வைத்து எந்த நாசியின் வழியாக மூச்சுக்காற்று வந்து போகிறது என்பதைச்சோதிக்க வேண்டும்.

    அதன் பிறகு, அன்றையகிழமை என்ன, அக்கிழமையன்று எந்த நாசியின் வழியாக மூச்சு இயங்கவேண்டும் என்றறிந்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter